உயிர்த்த ஆண்டவருடன் விவலிய மறுவாசிப்பு. (207) Re-reading the scriptures with the risen Lord.2(நாளா.( குறிப்பேடு 34:29-33 திருப்பாடல் .19:7-14 திருத்தூதர் பணிகள் 8: 26- 40 லூக். 24:13-27. The Second Sunday after Resurrection Lord.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உயிர்த்தெழு ந்த கிறிஸ்துவின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது" உயிர்த்த ஆண்டவருடன் விவலிய மறு வாசிப்பு "
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை திருவிவிலியத்தின் அடிப்படை யில் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் உயிர்த்த கிறித்து வின் கண்ணோட்டத்தில் நாம் படிக்க வேண்டும் அதை இயேசு கிறிஸ்துவின் உயிர் தெழுதலை முதன்மைப்படுத்தி வேதத்தை முழுமையாக புரிந்து கொள்ளும் தன்மையை நம் வாழ்வோடு இனைந்து என்ன மாற்றத்தை நமக்கு உருவாக்கி இருக்கிறது என்பதை நினைப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் மீண்டும் மீண்டுமாக வேதத்தை புரிந்து கொள்ள நமக்கு பெரும் உதவி யாக இருக்கிறது.மறு வாசிப்பு
என்பது உயிர்த்த கிறிஸ்துவின் தன்மையை மனதில் வைத்து தான் திரு விவிலியத்தை நாம் மீண்டும் மீண்டும் படித்து தெளிவு பெற வேண்டும் உயிர்த்த கிறிஸ் துவை நினைவில் வைக்காமல் வேதத்தை படிக்க முடியாது
ஆண்டவரின் உயிர்த்தெழுதலை ஒன்றிணைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருத்தூதவர்கள் ஆண்டவரின் மரணத்தையும் உயிர்த்தெழுதலை யும் கண்ட பிறகுதான் உலக மெங்கும் நற்செய்தி எடுத்துச் சென்றார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எம்மாவு சீடருடன் உயிர்த்த கிறிஸ் துவின் உரையாடலில், மோசே முதலான சகல இறைவாக்கினர் எழுதின வேதவாக்கியங்களிலெ
ல்லாம் தம்மைக்குறித்துச் சொல் லப்பட்டவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்” (லூக். 24:27). அவ்வாறே திரு விவிலியத் தை நாம் மறு வாசிப்பு செய்யும் போது மோசே முதல் திருவெளி
ப்பாடு வரை உயிர்த்த கிறிஸ்து வின் தன்மையை நினைவில் வைத்து நாம் படிக்க வேண்டும் அப்பொழுதுதான் உயிர்த்த கிறிஸ்துவின் வல்லமை நம்மில் செயல்படும்.
1 யோசியா அரசரின் ஆன்மீக மறுமலர்ச்சி.The spiritual revival of King Josiah. 2.குறிப்பேடு 34:29-33
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு; அவர் எருசலேமில் முப்பத்தோர் ஆண்டு கள் ஆட்சி செய்தார்.யோசியா என்ற பெயருக்கு "எஹோவா ஆதரிக்கிறார் or சுகமாக்குகிறார்"
என்று பொருள். இவருக்கு முன் ஆட்சி செய்த இரண்டு பொல்லாத அரசர்களான மனாசே மற்றும் ஆமோன், முழு தேசத்தையும் அவர்கள் இதுவரை கடைப்பிடித்த திலேயே மிகவும் மோசமான விக்கிரகாராதனைக்குள் கொண் டு வந்தனர்.ஆனால், யோசியா மன்னர் ஒரு நல்ல அரசனாக இருந்ததார், அவர் கடவுளின் கற்பனைகளைப் பின் பற்றி, மக்கள் விக்கிரகங்களை வணங் குவதை நிறுத்தி, ஆலயத்தை மீண்டும் புனரமைத்ததார். இவரைக் குறித்து, 2 அரசர் 22:2ல்,"அவர் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்தார். தம் தந்தை தாவீது நடந்த எல்லாவழிக ளிலும் வடப்புறமோ இடப்புறமோ பிறழாது அவரும் நடந்தார். என இவரின் நேர்மைத் தன்மையை விளக்கப்படுகிறது. இவர் தெய் வீக அரசர். இவர் ஆட்ச்சியின் பதினெட்டாம் வருடத்தில் ஆலய த்தை சுத்திகரித்தபோது, ஆசாரி யனாகிய இல்க்கியா நியாயப் பிரமாணப் புத்தகத்தைக் கண்டெ டுத்தான். இது இணைச் சட்ட புத்த கமாயிருக்கலாம். அதை வாசித் தவுடனே அரசனுக்கும், மக்களுக் கும் குற்றவுணர்ச்சி உண்டானதி னிமித்தம், எல்லாரும் அதில் சொல்லப்பட்டவைகளைக் கைக் கொள்ளும்படி உடன்படிக்கை செய்தார்கள். பின்பு யோசியா கர்த்தருக்கு பஸ்காவை ஆசரி க்கும்படி சகல மக்களுக்கும் கட்ட ளையிட்டான். அதற்கு முன்னும், பின்னும் நடவாதவிதமாய், எருச லேமில் யோசியாவின் காலத்தில் இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.
முதலில் யோசியா தேசத்தின் பலவீனத்திற்கான காரணத்தை - விக்கிரக வழிபாட்டை - நீக்கி னார்! பாகால் வழிபாட்டின் ஒவ் வொரு சிலை மற்றும் பலிபீடமும் ராஜ்யத்திலிருந்து முறையாக அகற்றப்பட்டன.யோசியா மன்னர் மக்களுக்கு நியாயப்பிரமாண த்தை வாசிக்க செய்து, போதித் து, கடவுளின் கற்பனைகளுக்குத் திரும்பும்படி செய்தார்.
2. நியாயப்பிரமாணத்தை மறுவாசிப்பு செய்ததினால் ஏற்பட்ட நன்மைகள்:
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! யோசியா அரசர் காலத்தில், நியாபிரமான புத்தகத்தகம் ஆலயத்தில் கண்டேடுகப்பட்டது. அதை மறுவாசிப்பு செய்தார். அதன் மூலம் அந்த நாட்டிற்கு கிடைத்த நன்மைகளை நாம் காண்போம்.
1 ஆலயம் பழுதுபார்த்து அழகுபடுத்தப்படுகிறது
2.விக்கிரக வழிபாடு நீக்கப்படு கிறது.
3.நியாயப்பிரமானமான இணை சட்டநூல் மறு வாசிப்பு செய்யப் பட்டது.
4 பஸ்கா பண்டிகை மிகப் பிரமாத மாக கொண்டாடப்பட்டது.
5.யூதாவின் எல்லைக்கு அப்பாலு ம் திருத்தங்கள் செய்தான்.
6 மறு வாசிப்பால் ஒரு ஆச்சரியமா ன மாற்றம் யோசியாவிடதிலும், அவனுடைய மக்கலிடத்திலும் ஏற்பட்டது.
7.யோசியாவிற்கு சீர்திருத்த சிந்தனை ஏற்பட்டது
8 ஆண்டவருடைய நியாயப்பிர மாணம் யோசியாவுக்கு வாசிக்க ப்பட்டபோது அவன் அதிர்ச்சியடை ந்தான், பயந்தான் பின் தாழ்மைய டைந்தான்.
3.நீ வாசிப்பது என்னவென்று உனக்குப் புரிகிறதா? Do you understand what you are reading ?
திருத்தூதர் பணிகள் 8: 26-40.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கர்த்தருடைய தூதன் திருத் தூதர் பிலிப்பிடம் பேசி, "எழுந்து, எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் பாதை வழியாகத் தெற் கே போ; என்றார். அது எருசலேமி லிருந்து பெத்லகேம் மற்றும் ஹெப்ரான் வழியாகச் சென்று காசாவிற்கு தெற்கே எகிப்துக்குச் செல்லும் பிரதான சாலையுடன் இணைந்த ஒரு சாலை இருந்தது. இரண்டு காசாக்கள் இருந்தன. கிமு 93 இல் காசா போரில் அழிக் கப்பட்டது,
காசாவால் வழிநடத்தப்பட்ட இந்த சாலை, உலகின் பாதி மக்களின் போக்குவரத்து செல்லும் இடமாக இருக்கும். மந்திரி அவரது தேரில் எத்தியோப்பிய வந்தார். அவர் கருப்பு எத்தியோப்பியன் அவர் காண்டேஸின் கருவூலத்தின் அதிபராக இருந்தார். காண்டேஸ் என்பது ஒரு பட்டமாகும். எத்தியோப்பியாவின் அனைத்து ராணிகளும் வைத்திருந்த பட்ட மாகும். இந்த மந்திரி வழிபட ஜெருசலேமுக்கு வந்திருந்தார். இவர் ஒரு அண்ணகன். திருமுழு க்கு அந்த நாட்களில் உலகம் பல கடவுள்களாலும், தேசங்களின் தளர்வான ஒழுக்கங்களாலும் சோர்வடைந்த மக்களால் நிறைந்திருந்தது. அவர்கள் யூத மதத்திற்கு வந்தார்கள், அங்கு ஒரே கடவுளையும், வாழ்க்கைக்கு அர்த்தமுள்ள கடுமையான ஒழுக் கத் தரங்களையும் கண்டார்கள். அவர்கள் யூத மதத்தை ஏற்றுக் கொண்டு விருத்தசேதனம் செய்ய ப்பட்டால் அவர்கள் மதம் மாறிய வர்கள் என்று அழைக்கப்படுவா ர்கள்; அவர்கள் அவ்வளவு தூரம் செல்லாமல், யூத ஜெப ஆலயங்க ளுக்குச் சென்று யூத வேதங்க ளைப் படித்தால், அவர்கள் கடவுள் பயமுள்ளவர்கள் என்று அழைக் கப்படுவார்கள். இந்த எத்தியோப் பியன் யூத மதத்திற்கு மாறிய வராகவோ அல்லது கடவுள் பயமுள்ளவராகவோ யூத மதத்தில் நிலைத்திருந்த இந்த தேடுபவர் களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும். அவர் ஏசாயா 53:1-12-ஐ வாசித்துக்கொண்டிருந்தார் ;
இந்தப்பகுதி , படுகொலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு உருவக(இயேசு)ஆட்டுக்குட்டியைப் பற்றியது, அமைதியாக தனது மரணத்தைத் தாங்கிக் கொண்டது .இந்த ஏசாயா புத்தகம் எத்தியோ பிக் மற்றும் அரபு பதிப்புகள் இங்கேயும் அங்கேயும் வாசிக்கப் பட்டன: எனவே, அந்த மந்திரி வாசித்தது எத்தோப்பிய மொழி ஏசாயா தீர்க்க தரிசி புத்தகமாகும் அவர் படித்துக்கொண்டிருந்தது எபிரேய மொழியில் உள்ள ஏசாயாவின் புத்தகமாக கூட இருக்கலாம், மேலும் அவர் எந்த மொழியில் புரிந்துகொள்ளக் கூடும், இருப்பினும் தீர்க்கதரிசி யின் அர்த்தத்தைப் பற்றி அவர் குழப்பமடைந்திருக்கலாம்.தீர்க்கதரிசனங்கள் மிகவும் சுருக்கமான வை, மேலும் வரவிருக்கும் விசய ங்களைக் கருத்தில் கொண்டன.
இயேசுவைப் பற்றி மந்திரி படிப் பது:அவன் கேள்வி கேட்கிறான். அந்த கேள்விக்கு திருத்தூதரின் மூலம் பதில் கிடைக்கிறது. இது இயேசுவின் நற்செய்தி மக்களுக் குத் தெரியப்படுத்தப் படுவது எவ்வாறுஎன்பதைகாட்டுகிறது. அவர் என்ன படிக்கிறார் என்பது புரிகிறதா என்று கேட்கி றார். வழிகாட்ட யாராவது இல்லா மல் தன்னால் புரிந்துகொள்ள முடியாது என்று அந்த மனிதன் பதிலளித்து, பிலிப்பை மேலே வந்து தன்னுடன் உட்கார அழைக் கிறான் .
அதிலிருந்து பிலிப்பு இயேசு யார் என்பதைக் காட்டினார்.மந்திரி
விசுவாசியானபோது ஞானஸ் நானம் பெற்றார். ஞானஸ்நானம் மற்றும் விருத்தசேதனம் மூலம் புறஜாதியினர் யூத நம்பிக்கை யில் நுழைந்தனர்.
புதிய ஏற்பாட்டு காலங்களில் ஞானஸ்நானம் பெரும்பாலும் வயதுவந்தோர் ஞானஸ்நானமாக இருந்தது.மூழ்குதல் மற்றும் ஓடும் நீரில் ஞானஸ்நானம் செய்யப்ப ட்டது.ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவுடன் ஒரு உண்மை யான ஐக்கியம். இது யூத மத கோட்பாடுகளை மீறி, பிற இனத் தவர்கள் கிறிஸ்தவத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதை முன்னறிவிக் கிறது.திருமுழுக்கு கொடுத்த பின், ஆவியானவர் அண்ணக னிடம் இறங்கி, அவன் கடவுளின் வல்லமையைப் பெறுகிறான்.
இயேசுவைப் பற்றிய நற்செய்தி, குறிப்பாக விளிம்புகளில் வசிப்ப வர்களிடையே மகிழ்ச்சியைத் தூண்ட வேண்டும்,
எத்தியோப்பிய அண்ணகனின் யூத மத சட்டப்படி அவர் ஒதுக்கப் பட்டவர். ஆனால், திருமுழுக்கின் மூலம் அவர் கிறிஸ்துவுக்குள் சேர்க்கப்பட்டு, கடவுளின் பிள்ளை யாகிறார்.அவர்கள் இந்த உரை அவர்களுக்கு என்ன அர்த்தம் என்பதை அறிய வேண்டும் .
இந்த மந்திரி வீட்டிற்குச் சென்று எத்தியோப்பியாவிற்கு சுவிசே ஷம் அறிவித்தார் என்பது பாரம்பரியம்.
4.எம்மாவு- அனுபவும் இயேசு வை அடையாளம் காணுதல்.
The experience of Emma's is to
Identify Jesus. லூக். 24:13-27
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!
இயேசு உயிர்த்தெழுந்த பின் இரண்டு சீடர்கள், இந்த இருவரில் ஒருவர் பெயரை மட்டும் கிளயோப்பா என பதிவு செய்கி றார் லூக்கா. இருவர்தாம் சென் றார்களா அல்லது இருவர் சாட்சி க்குத் தேவை என்பதால் இருவரை லூக்கா தேர்ந்தெடுக்கிறாரா என்பது பற்றிய தெளிவு இல்லை.
தங்கள் சொந்த ஊரான எருசலே மை விட்டு எம்மாவுற்குப், போகிறார்கள். (எம்மாவு என்பது புதிய ஏற்பாட்டில் இயேசு கிறித்து வின் உயிர்த்தெழுதலோடு தொட ர்புடைய ஒரு பழங்கால நகரம் ஆகும். இது எருசலேம் நகரிலிரு ந்து ஏறத்தாழ 7 மைல் (11 கிலோ மீட்டர்) தொலையில் உள்ளது.)
ஏன் எம்மாவுக்கு செல்ல வேண்டும்?
அன்பர்களே! சீடர்கள் தங்கள் சொந்த ஊரான எருசலேமை, விட்டு ஏன் எம்மாவுக்குச் செல்ல வேண்டும்? இவர்களுக்கு ஏன் எருசலேம் பிடிக்கவில்லை? தங்கள் தலைவரை அது சிலுவை யில் அறைந்து கொன்றதாலா? அல்லது தங்களையும் தேடி அது வருவதாலா? அல்லது உயிர்ப்பு பற்றிய செய்தியை ஏற்றுக்கொள் வதில் தயக்கமா? இயேசு எருசலேமை பார்த்து கண்ணீர் விட்டார். அதன் அழிவை முன் குறித்து சொன்னார். தீர்க்கதரிசி களை கொள்கின்ற நகரம் எருசலேம். (லூக்கா 19:41-43)
கண்கள் மறைக்கப்பட்டன:
சீடர்கள் போகும் போது அவரைச் சந்திக்கிறார்கள், ஆனால்அவரை அடையாளம் காணவில்லை. இயேசு அவர்களுடன் நடந்து சென்று உரையாடுகிறார். அவர்கள் இயேசுவை அடையா ளம் காணாததால், அவர் தமது இறப்புக்கு முன்னரும் பின்னும் நடந்த நிகழ்வுகள் மற்றும் தம்மை ப் பற்றிய தீர்க்கதரிசிகளைப் பற்றி சுருக்கமாக விளக்குகிறார். இதுதான் விவலிய மறுவாசி ப்பு ஆகும். வேதத்தின் அதிசயங்க ளை காண என் கண்களைத் திறந்தருளும் என்பது சங்கீதக் காரனின் கூற்றாகும்(119:18)
விவலியத்தை புரிந்து கொள்ள உயிர்த்த கிறிஸ்துவை மறுவா சிப்பு மூலமாகத்தான் காணமுடி யும்.
எங்களோடு தங்கும் Abide in us.
நண்பர்களே சீடர்கள் இறுதியாக, இயேசுவை உணவுக்காக அழைக் கிறார்கள்.(May be a lunch, as they were walking 11kms, they didn't take lunch, and it became evening) அப்போது அவர் உணவை எடுத்து ஆசீர்வதித்து, உடைத்து கொடுக் கும்போது அவரை அடையாளம் காண்கிறார்கள், பின்னர் அவர் மறைந்துவிடுகிறார். நற்கருணை யில் பங்கு பெறுவது ஆண்டவ ரோடு கொள்ளும் உறவை புதுப்பி த்துக் கொள்கிறது நம் கண்கள் திறக்கின்றது. சீடர்கள் உடனே எருசலேம் திரும்பினர்
விவிலிய மறு வாசிப்பு :
நண்பர்களே விவிலிய மறு வாசிப்பு மட்டுமே நம் உள்ளம் இயேசுவின் உறவில் கொழுந்து விட்டு எரியும்."அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றிஎரியவில்லையா?" என்று பேசிக் கொண்டார்கள்.
(லூக்கா நற்செய்தி 24:32) இது உள்ளத்தில் ஏற்றப்படும் தீபம் ஆகும்
மறு வாசிப்பு மூலம், விவிலியத் தை நீங்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.ஒரு வசனத்தை மீண்டும் வாசிப்பது அல்லது வேறு சில வழிகளில் வாசிப்பதன் மூலம் அதன் பொருள் மற்றும் ஆழத்தை மேலும் புரிந்துகொள்வதாகும். இவற்றில் மிக முக்கியமானது விவிலிய மறு வாசிப்பு உயிர்த்த கிறிஸ்துவின் சிந்தனையோடு
வாசிக்க வேண்டும் அப்போது ஆண்டவர் நம்மோடு பேசுவார் உள்ளத்தை ஆட்கொள்வார் உயிர் த்த கிறிஸ்து நம்மை விவலிய மறு வாசிப்பு மூலம் இணைத்துக் கொள்வாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
ரெம்ப்ராண்ட் , யூனச்சின் ஞானஸ்நானம். சௌர்ஸ் Wiki
Comments
Post a Comment