உண்மையின் உருவான கிறிஸ்துவில் நம்பிக்கை. (209) Believing in Christ the Truth. விடுதலைப்பயணம் 34: 1-9, திருப்பாடல் 119: 89-96. எபேசியர் 4:7-16, யோவான் 17: 6-19.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். உயிர்த்த கிறித்துவின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது, " உண் மையின் உருவான கிறிஸ் துவில் நம்பிக்கை" உலகில், சத்தியங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் கிறிஸ்து வைப் பொறுத்தவரை, சத்தியம் மாறாது. ஏனெனில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவரின் சத்தியம் மாறாது. ஆனால் மாற்றத்தை கொடுக்க கூடியது.
நற்செய்தி என்பது நம்பிக்கை. நற்செய்தி என்பது அமைதி. நற்செய்தி ஒரு வாக்குறுதி.
ஆனால், ஆண்டவரே உண்மை யான கடவுள்! அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்! என இறைவாக்கினர் எரேமியா
கூறுகிறார்,(எரேமியா 10:10)
உண்மை (சத்தியம்) என்றால் என்ன?
கிறிஸ்துவை அறிவதே உண்மை அவரை நம்புவதே உண்மை அவர் மீது பற்று உறுதி கொள்வதே உண்மை. நற்செய்தியாளர் யோவான், "இயேசுவே இறைமக னாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும் (believing), நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே (Eternal life) இந்நூலில் உள்ளவை எழுதப்பெற் றுள்ளன. (யோவான் நற்செய்தி 20:31) என உண்மையான நம்பிக்
கை என்பது கிறிஸ்துவை இறை மகன் என எல்லா நிலைகளிலும் உண்மையான நம்பிக்கை கொண் டு பின்பற்றுவதே உண்மையான நம்பிக்கையாகும். நற்செய்திகள் எழுதப்பட்ட நோக்கமே கிறிஸ்து வின் மீது நம்பிக்கை கொள்வதற் காக தான்.
இறையியளாளர் பில்லிகிரகாம்
அவர்கள், திருவிவிலியத்தின் அடிப்படையில் "நம்பு" (believe) என்ற வார்த்தை, நம்பிக்கையை
குறிக்கிறது.நாம் கடவுளை மிகவும் உறுதியாக நம்புகிறோம், அவர் நம்மை வாழ விரும்பும் வழியில் வாழத் தயாராக இருக்கி றோம்.எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவை நம்புங்கள். என்பதே இதன் பொருள் என கூறுகிறார்.(BillyGraham.org) அதேபோல் இயே சுவின் வார்த்தையும் சத்தியம் எனப்படும் (யோவான் 17:17). கடவுளின் வழியில் நடப்பது என்றால் சத்தியத்தில் நடப்பது என்று பொருள்.
சங்கீதக்காரன், என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 86:2)
ஆண்டவரே, உமது உண்மைக் கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 86:11) என கூறுகிறார்.
உண்மையின் பாதையை நான் தேர்ந்துகோண்டேன்; உம் நீதி நெறிகளை என் கண்முன் நிறுத் தியுள்ளேன்.(திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:30)
வாய்மை என்பது, திருக்குறளில் யாதொன்றும் தீமை இலாத சொலல்" என்று குறிப்பிடப்படு கிறது. அதாவது, யாருக்கும் எந்த வித தீங்கும் இல்லாத சொற்க ளைச் சொல்வதே வாய்மை எனப் படுகிறது.
சத்தியம் (உண்மை) என்பது மகாத்மா காந்தியின் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும், அதை அவர் தனது அனைத்து செயல் களிலும் கடைபிடித்தார். அதன்
அடிப்படை, விவலியத்தில் உள்ள
மலைப்பிரசங்கம் அவரை மிகவும்
கவர்ந்தது.
தன் பள்ளி பருவத்தில் கிபி 1881-ல், காந்தி தனது 12 வயதில், . ஆல்பிரட் உயர்நிலைப் பள்ளி யில் பயின்றார், அங்கு எழுத்துப் பயிற்சியின் போது, காந்தி "கெட்டில்" (kettle)என்ற வார்த்தை யை தவறாக எழுதினார், அப்போது கல்வி ஆய்வாளர் கில்ஸின் ஆய்வு நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் எழுத்துப் பயிற்சியாக ஐந்து வார்த்தைகளை எழுதச் சொன்னார்கள். அதில் ஒன்று 'கெட்டில்'. காந்திக்கு 'கெட்டில்' என்ற வார்த்தையை பிழையில் லாமல் எழுத தெரியவில்லை தவறாக எழுதினார். இதை கண்ட வகுப்பு ஆசிரியர், முன்னால் இருக்கும் மாணவரை பார்த்து காப்பி அடித்து (நகல்) எழுத சொன்னார்
ஆனால் காந்தி அந்த தவறை செய்யவில்லை. ஆசிரியர் அவர் கள், ஏன் நீ மற்ற மாணவரை பார்த்து எழுதவில்லை என்று கேட்டார்.அவர் "நான் ஏமாற்று வதை விட தவறாக இருப்பேன்" என்றார். "நான் ஒருபோதும் காப்பி ('நகலெடுக்கும்)' கலையைக் கற்றுக்கொள்ள மாட்டேன்." என உண்மை, நேர்மைக்காக உறுதி யோடு இருந்தார். வாய்மையே வெல்லும் என்ற கொள்கைக்கு உடன்பட்டு இருந்தார். இதில், மேலும் மத்தேயு நற்செய்தியில் 5,6,7, அதிகாரங்கள் அவரை மாற்றியது இதனுடைய வழித் தோன்றல் தான் அகிம்சை (வருத்தாமை) வாய்மை அவரின் கொள்கையாகும். உள்ளதை உள்ளது (மத்தேயு 5:37) என்று சொல்வோம் என்று சொன்ன ஆண்டவரின் வார்த்தை நம் உள்ளத்தை உடைக்க வில்லை யா? உண்மையை பேசுவோம் உண்மையாக இருப்போம்.
அன்பர்களே! சத்தியத்திற்கான எபிரேய வார்த்தை 'எமெட்'. 'எமெட்" என்பது "உண்மை" என்று பொருள்படும் ஒரு எபிரேய வார்த்தை. யூத மதத்தில், இந்த வார்த்தை "அலெஃப்" (எபிரேய எழுத்தின் முதல் எழுத்து), "மேம்" (எபிரேய எழுத்தின் 14வது எழுத்து) மற்றும் "டாவ்" (எபிரேய எழுத்தின் கடைசி எழுத்து) ஆகிய மூன்று எழுத்துக்களால் ஆனது என்று சொல்லப்படுகிறது. உண்மை என்பது எப்போதும் நிலைத்து நிற்கும், அது நிலையா னது என்று அர்த்தம் அளிக்கிறது.
சத்தியமும் அன்பும் கடவுளிடமி ருந்து வருகிறது, அவருடைய குழந்தைகளாகிய நாம் இவற் றைப் பிரதிபலிக்க வேண்டும், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்:
'சத்யம்' என்ற வார்த்தையை அதன் கூறுகளாகப் பிரித்து அதன் ஒவ்வொரு பகுதிக்கும் அர்த்தம் கொடுத்துள்ளது. 'சத்யம்' என்பது 'ச', 'தி' மற்றும் 'யம்' என்ற மூன்று எழுத்துக்களைக் கொண் டுள்ளது. 'ச' என்பது அழியாமை, 'தி' என்பது மரணம் மற்றும் 'யம்' என்பது இரண்டின் கலவையா கும். எனவே 'யம்' என்பதை அறிந்தவர் நித்திய சொர்க்கத்தை அடைகிறார். சுருக்கமாகச் சொன் னால், உண்மை என்பது கடவுளின் இரட்சிப்பை அடையும் ஒரு வழியா கும் என்பதை நாம் புரிந்து கொள் கிறோம்.
1. கடவுளின் வாக்குறுதி.God's
Promise. விடுதலைப் பயணம் 39: 1- 9..
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மோசே சீனாய் மலையிலிரு ந்து இறங்கி வந்த பிறகு, கடவுள் அவரிடம் பேசினார். கடவுள், மோசேக்கு ஒரு கற்பலகையைத் தயாரித்து, அதில் தன் பேரருளை எழுதப் போவதாகச் சொன்னார்.
கடவுள் மோசேக்குத் தன் பேரருளை வெளிப்படுத்தினார். மோசே கடவுளின் திருச்சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற பாடத்தை எடுத்துரைத்தார்.கடவுள் மோசேக் குத் தன் வாக்குறுதிகளைத் தெரி வித்தார். மோசே கடவுளின் வாக் குறுதிகளை மதிக்க வேண்டும் என்ற பாடத்தை எடுத்துரைத்தார்.
கடவுள் தன் உடன்படிக்கையை புதுப்பிக்க விரும்புகிறார்
மோசே உடைத்த அசல் பலகை களைப் பிரதிபலிக்கும் இரண்டு புதிய கல் பலகைகளைத் தயாரி க்க கடவுள் மோசேக்கு அறிவுறு த்துகிறார், இது கடவுளுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையிலான உடன்படிக்கையின் புதுப்பிப்பைக் குறிக்கிறது. கடவுள் மோசே யைக் கடந்து செல்கிறார், அவருடைய பெயரை அறிவித்து, இரக்கமுள்ளவர்,கிருபையுள்ளவர், கோபப்படுவதற்கு பொறுமையாக இருப்பவர், உறுதியான அன்பில் நிறைந்தவர், அக்கிரமம், மீறுதல் மற்றும் பாவத்தை மன்னிப்பவர் என்ற அவரது குணத்தை வெளிப் படுத்துகிறார். கடவுளின் கரு ணையும் மன்னிப்பும் சிறப்பிக் கப்படும் அதே வேளையில், அவர் குற்றவாளிகளை விடுவிக்க மாட் டார் என்றும், தந்தையர் செய்த அக்கிரமத்தை பிள்ளைகள் மீதும் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும் சுமத்தி, பாவத்தின் விளைவுகளை வலியுறுத்துவார் என்றும் இந்தப் பகுதி கூறுகிறது. கடவுள் இரக்க முள்ளவராக இருந்தாலும், பாவத் திற்கு விளைவுகள் உண்டு, நீதி நிலைநாட்டப்படும் என்பதை நினைவூட்டுவதாகவும் இது செய ல்படுகிறது. கடவுள் தம்முடைய வார்த்தையை மோசேக்குக் கொடுத்தார் (வி. ப 34: 1-9). மோசே அதை கடவுளின் மக்களுக்குக் கொடுத்தார். கடவுளின் வார்த்தை யின் மூலம்தான் நாம் வளர வேண்டும்.
2.சத்தியமாகிய கிறிஸ்துவில் வளருங்கள் Grow in Christ, the truth. (எபேசியர் 4:7-16)
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிகளார் எபேசு திருச்சபைக்கு இந்நூலை கி.பி 80 ல் எழுதுகிறார்.மூன்று ஆண்டுகளுக்கு மேல் எபேசில் தங்கிப் பணிபுரிந்தார்.எபேசு திருச்சபைக்கு பல சிறப்பம்சங் கள் உண்டு. இயேசு தன் அன்னை யை யோவானிடம் ஒப்படைத்த பின், யோவான் எபேசுவில் தான் அன்னை மரியாளுடன் தங்கியி ருந்தார். யோவான் நற்செய்தியை யும் அவர் அங்கிருந்து தான் எழுதினார்.
திருச்சபையை கடவுளின் திட்டத் தின் ஒரு அங்கமாக எடுத்துரைக் கிறது. திருச்சபை என்பது கிறிஸ் துவின் உடலில் ஒரு அங்கமாக உள்ளது, மேலும் அது கடவுளின் வல்லமையால் நிலைநிறுத்தப் படுகிறது.எபேசியர் நிருபத்தில்
சபையானது கிறிஸ்துவின் உடலாக உள்ளது, அதில் ஒவ்வொ ருவரும் ஒரு அங்கமாக இருக்கி றார்கள், தலைவனாகிய இயேசு மூலம் உடல் நன்றாக வளர உதவுகிறது. சபையானது தலை வனாகிய இயேசு மூலம் வளர் கிறது, அனைவரும் ஒருவருக் கொருவர் அன்புடன், பொறுமை யுடன், சமாதானத்துடன் இருந்து, ஒற்றுமையாக செயல்பட வேண் டும். திருச்சபையினர் ஒருவருக் கொருவர் அன்பாகவும், ஒற்றுமை யாகவும் வாழும் ஒரு வழிகாட்டு தலாக உள்ளது. இயேசுவின் பரிசாக நாம் பெற்ற கிருபையை பயன்படுத்தி, ஒருவருக்கொருவர் தாங்கி, ஒற்றுமையாக வாழ்ந்து, சபையை வளர்க்க வேண்டும் என்பதே இதன் முக்கிய செய்தி யாகும்..உண்மையான கிறிஸ் துவில் வளர தேவன் திருச்சபை க்கு பல்வேறு ஊழியங்களை வழங்கியுள்ளார் திருத்தூதுவர்கள், தீர்க்கதரிசிகள், நற்செய்தியாளர்கள், போதகர்கள் மற்றும் ஆசிரியர்கள் (எபேசியர் 4:11). இவ்வாறு திருச்சபையில் உள்ள கூட்டுறவு மூலம் நாம் தொடர்ந்து கிறிஸ்துவின் அன்பில் வளரவிடுங்கள்.
3. கிறிஸ்துவை நம்புவதே சத்தியம். The truth is to believe in Christ.யோவான் 17: 6-19.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! பஸ்காவிள் சீடர்களின் கால்களைக் கழுவிய பிறகு (13:1-20), இயேசு தம்முடைய புறப்பாட் டிற்கு சீடர்களைத் தயார்படுத்தத் தொடங்குகிறார்: உலகத்தின் வெறுப்பைப் பற்றி அவர் எச்சரி க்கிறார் (15:18 – 16:4a), மேலும் அவர் போகாவிட்டால் தூய ஆவியானவர் வர முடியாது என்ற காரணத்தைக் கூறுகிறார். அவர் அவர்களுக்கு மகிழ்ச்சியை யும் சமாதானத்தையும் உறுதிய ளிக்கிறார்.ஆண்டவர் தனக்காக ஜெபித்தபிறகு, அடுத்து தம்முடை யவர்களுக்காக ஜெபிக்க வருகி றார், மேலும் அவர் அவர்களைப் பெயரால் அறிந்திருந்தார், இப்போது இங்கே கவனியுங்கள், நான் உலகத் திற்காக ஜெபிக்க வில்லை . இயேசு கிறிஸ்து ஜெபிக்காத ஒரு மக்கள் உலகத் தில் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது மனிதகுலத்தின் பொது உலகத் தைப் பற்றியது அல்ல ( யோவான் 17:21 இல் அவர் அதற்காக ஜெபிக் கிறார் ; நீர் என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்படி ); யூதர்க ளிடமிருந்து வேறுபட்ட புறயினத் தாரைப் பற்றியது அல்ல; ஆனால் உலகம் இங்கே தேர்ந்தெடுக்க ப்பட்டவர்களுக் எதிரானது, அவர்கள் உலகத்திலிருந்து கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்படு கிறார்கள். உலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், கடவுள் அதை நேசிக்கிறார், கிறிஸ்து அதற்காக ஜெபிக்கிறார்,இயேசு பிலாத்து விடம் சத்தியத்திற்கு சாட்சியம ளிக்க வந்தார் என்று கூறினார் (யோவான் 18: 37).
சத்தியமாகிய கிறிஸ்துவை நம்புவதன் மூலம் தான் நித்திய வழி அடையப்படுகிறது (யோவான் 20:31). கிறிஸ்துவை நம்புவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு கிறிஸ்துவின் வார்த் தைகளை நம்புவதும் முக்கியம்
இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, "என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்;
உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களு க்கு விடுதலை அளிக்கும்" என்றா ர். (யோவான் நற்செய்தி 8:31,32)
கடவுளின் வார்த்தையே சத்தியம் (யோவான் 17:17). இந்த வார்த் தையின் மூலம்தான் நாம் பரிசு த்தப்படுத்தப்படுகிறோம். வார்த்தையினால் கடவுள் இவ்வுலகை படைத்தார் . ஒருவன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய வார்த்தைகளிலும் பிழைப்பான் என்று வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் வார்த்தையே சத்தியம் உண்மை என்பதாகும்.கிறிஸ்தவத்திற்கு முதல் படி கிறிஸ்துவை நம்பு வது.தேவன் உலகத்தில் ( காஸ் மோஸ் ) மிகவும் அன்புகூர்ந்தார்; தம்முடைய ஒரேபேறான குமார னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளினார். உலகத்தை நியாயந்தீர்க்க தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பவில்லை, ( காஸ்மோஸ் ) அவர் மூலமாய் உலகம் இரட்சிக்க ப்படும்படிக்கு அனுப்பினார்”
ஏனெனில் அவர் இரட்சகர்.
ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசிக்காவிட்டால், அவனை நான் நியாயந்தீர்ப்ப தில்லை. நான் உலகத்தை நியாய ந்தீர்க்க வரவில்லை, உலகைக் காப்பாற்றவே வந்தேன்”
இயேசுவின் இரட்சிப்பின் நோக்கம் சமாரியர்களுக்குக் கூட தெளிவாகத் தெரிந்தது, அவர்கள் கிணற்றருகே இருந்த பெண்ணி டம், “இவர் உண்மையிலேயே உலக இரட்சகராகிய கிறிஸ்து என்று எங்களுக்குத் தெரியும்”.
கடவுள் பரிசுத்தர் மற்றும் நீதியுள்ளவர். கடவுளின் இந்த நீதியான அம்சம் பழைய ஏற்பாட்டில் வலியுறுத்தப்பட்டது, யூத மக்கள் கடவுளை பெயரால் அழைக்க தகுதியற்றவர்களாக உணரவில்லை. இப்போது இயேசு கடவுளின் பெயரை அறிவிக்கி றார் - அந்த பெயர் பிதா. அந்த பெயர் கடவுளை ஒரு புதிய வெளிச்சத்தில் பார்க்க நமக்கு உதவுகிறது, வெறுமனே பரிசுத்தர் மற்றும் நீதியுள்ளவராக மட்டும ல்ல, அதில் வளர்ப்பவராகவும்.
பரிசுத்தமானவர்.நாம் பரிசுத் தமாக இல்லாவிட்டால், இந்த உலகில் பரிசுத்த தந்தையின் அன்பிற்கு சாட்சியாக இருக்கும் நமது பணியை நாம் செய்ய முடியாது.பரிசுத்தமற்ற அண்ட வெளியில் ( உலகம்) பரிசுத்தமாக இருப்பது இயேசுவுக்கு ஆபத்தா னது, அது நமக்கும் ஆபத்தான தாக இருக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து கிறிஸ்தவர்களும் கடவுளின் கிருபையால் பரிசுத் தமாக்கப்படுகிறார்கள் - உண்மையில் ஒரு தெய்வீக நோக்கத்திற்காக பிரிக்கப்பட்டவ ர்கள் - "இயேசு கிறிஸ்துவின் சரீர பலியினால் பரிசுத்தப்படுத்தப் படுகிறார்கள்" (எபிரெயர் 10:10).
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! உண்மை எவ்வளவு முக்கியமோ தூய்மையான வாழ்வு முக்கியம் என்பதை ஆண்டவர் நமக்கு உணர்த்துகிறார் அவர் வழியில் உண்மையாய் இருப் போம். கடவுள் நம்மை உண்மையின் வழியில் நடத்த அருள் புரிவாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com

. Source: wiki
Comments
Post a Comment