கிறிஸ்துவின் வழியில் அருட்பணி (210) Mission with Christ's Spirit. 2.அரசர்கள் 2: 9-16, திருப்பாடல் 105: 1-11, திருத்தூதர்பணிகள் 7:54-60, மத்தேயு 28:16-20.The fifth Sunday after Resurrection.


முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்க அனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமை யின் தலைப்பாக நமக்கு கொடு க்கப்பட்டிருப்பது கிறிஸ்துவின் வழியில் அருட்பணிி.
 கிருஸ்துவின் வழி என்றால் என்ன? What is the way of Christ?
கிறிஸ்துவின் வழி என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களையும், அவர் தந்த மார்க்க த்தையும் பின்பற்றுவதாகும். இயேசுவின் வாழ்க்கை, போத னைகள், மற்றும் தியாகம் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் விண்ணரசிற்கு செல்லும் வழியை அவர் காட்டுகிறார். 
இயேசுவே—வழி, சத்தியம், வாழ்வு, இதைப் பின்பற்றுவோர் நித்திய வாழ்வில் இடம் பெறுவர். 
அவர் தம்மைப் பின்பற்றுவோருக் கு வழிகாட்டுபவராகக் கருதப்படு கிறார். கிறிஸ்தவ வழி, இயேசு வின் போதனைகளை பின்பற் றுதல், அவருடைய வாழ்வை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளுதல் மற்றும் பிறருக்கு நன்மையை செய்து நல்ல செயல்களைச் செய்தல் ஆகியன அடங்கியது. 
தீர்க்கர் தானியேல் ஞானம்நிறை ந்தவனாய், உண்மையுள்ளவ னாய், கர்த்தரின் வழியில் நடந்து, நலமானதைச் செய்த படியால் அவனுடன் இருந்த அதிகாரிகள் அவனைக் குற்றப்படுத்த முகாந்தி ரம் தேடியும் ஒரு முகாந்திரத்தை யும் கன்டுபிடிக்க அவர்களால் கூடாமற் போயிற்று. அவனுக்கு விரோதமாய் எழுந்தவர்கள் அழிந் தும் ஒழிந்து போனார்கள்.
 சங்கீதக்காரன் "உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்; என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்". 
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 139:24) கடவுள் காட்டும் வழி நித்திய வழி.
 கிறிஸ்துவின் வழியில் அருட் பணி என்பது தூய ஆவியின் செயலாற்றும் தன்மையின் மூலம் மீட்பின் வழியில் செயலாற்றுவ தாகும்.
 அன்பானவர்களே! "இரத்தம் கசியும் கால்களை உடைய அப்போஸ்தலன்" (The Apostle with bleeding feet).என்று அழைக் கப்படும் சாது சுந்தர் சிங் அவர்கள் மிகச் சிறந்த இந்திய அருட்பணியாளர்.அவர் எழுதிய கிறிஸ்துவுடன் மற்றும் இல்லாமல் ( With and Without Christ) என்ற புத்தகம்  கிறிஸ்து வுடனும் மற்றும் கிறிஸ்து இல்லாதவர்களூடன்  ஏற்படும் மாற்றத்தையும், அதை மாற்றும் சக்தியைக் கண்டறியவும் இப்புத்தகத்தில் விளக்குகிறார். தனிநபர்களின் வாழ்க்கையில் கிறிஸ்து ஏற்படுத்தும் ஆழமான மாற்றத்தை அனுபவியுங்கள்.என
வேண்டுகிறார்.  கிறிஸ்துவின் அன்பைத் தழுவுபவர்களின் மற்றும் அவர் இல்லாமல் ஒரு பாதையில் நடப்பவர்களின் மாறுபட்ட பாதைகளை விளக்குகி றார்.
சாது சுந்தர் சிங், கிறிஸ்துவைத் தங்கள் இதயங்களுக்குள் அழைப் பவர்களுக்குக் காத்திருக்கும் அன்பின் பெருங்கடலை வெளிப் படுத்தும்போது, ​​கிறிஸ்துவின் அன்பின் மாற்றத்தை ஆராயுங் கள் என்கிறார்.தெய்வீகத்துடன் ஒற்றுமையாக வாழும் வாழ்க்கை யின் மூலம் பரவும் பரலோக பேரின்பத்தை அனுபவிக்கவும்.
இந்த புத்தகத்தில் அவர் கிறிஸ் துவைக் கண்டுபிடித்த தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர் ந்து கொள்கிறார், மேலும் அவர் சாட்சியமளிப்பது இதுதான்: "கிறிஸ்து இல்லாமல் நான் தண்ணீரிலிருந்து வெளியே வந்த மீனைப் போலவோ அல்லது தண்ணீரில் ஒரு பறவையைப் போலவோ இருந்தேன். கிறிஸ்துவுடன் நான் அன்பின் கடலில் இருக்கிறேன், உலகில்
இருக்கும்போது, ​​பரலோகத்தில் இருக்கிறேன். இவை அனைத் திற்கும், அவருக்கு என்றென்றும் துதியும் மகிமையும் நன்றியும் உண்டாகட்டும்." -என்கிறார்.சாது சுந்தர் சிங்கின்,   இந்த வார்த் தைகள் உங்களுக்குள் எதிரொலி க்கட்டும், உங்கள் சொந்த வாழ்க் கையில் கிறிஸ்துவின் மாற்றும் பிரசன்னத்திற்கு ஆழ்ந்த நன்றி யைத் தூண்டட்டும்.
 அவர் தன் இளமை வயதில் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் படித்திருந் தாலும் இந்து மதத்தின் தாக்கத் தினால் புதிய ஏற்பாட்டை கிழித்து எறிந்தவர் அதனால் அவர் நிம்மதியை இழந்தார் தூக்கத்தை துறந்தார்.ரயில் பாதையில் குதித் து தற்கொலை செய்து கொள்ள அவர் தீர்மானித்தார். "உண்மையான கடவுள்" யார் என்று தெரிந்தால் அவர் தன் முன் தோன்ற வேண்டும், இல்லையெ னில் தன்னைத்தானே கொன்று விட வேண்டும் என்று அவர் கேட் டார்; அன்றிரவே அவருக்கு இயே சுவின் தரிசனம் கிடைத்தது.   ஆனாலும் அவரை வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை அவருடைய மனதை மாற்ற  அவருடைய செல் வந்தரான மாமா ஒருவர் தன்னு டைய பெரிய மாளிகைக்கு அழை த்துச் சென்று அங்கே குவியல் குவியலாக வைக்கப்பட்ட பணத் தையும், வைரத்தையும், பலவித மான விலையுயர்ந்த கற்களையும் அவருக்குக் காட்டினார். சுந்தர் புதிதாக ஏற்றிருக்கிற இந்த விசு வாசத்தைக் கைவிடுவாரானால்   இவை எல்லாம் கொடுப்பதாக கூறினார். ஆனால் இயேசு கிறிஸ் துவின் அன்பு மிகவும் வலிமை யுடன் ஆழமாக இருந்தது. சுந்தரி ன் இருதயம் இயேசுவை மறுதலி க்கவில்லை. சுந்தர் வீட்டை விட்டு த் துரத்தப்பட்டார். இவரைப் பின் னாலில் இரத்தம் கசியும் கால் களை உடைய அப்போஸ்தலன் என்று அழைக்கப்பட்டார். கிறிஸ்துவின் வழியில் அருட்ப ணியாற்றிய மற்றும் ஒப்பற்ற
 இந்திய அருட்பனையாளர் சாது சுந்தர் சிங்தான்.
1. அருட்பணியாளர்களுக்கு தேவை இரட்டிப்பான ஆவியின் பங்கு. Priests need a double share of the Spirit.2 அரசர்கள் 2:9-16.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஒரு அருட்பனையாளர்க்கு மிக முக்கியமான தேவை இரட்டிப்பான ஆவியின் பங்கு (Double portion of spirit) இதுதான் இறைவாக்கினர் எலிசா தன்னு டைய குருவான எலியாவிடும் கேட்டார் அவர் பொன், கேட்க வில்லை, பொருளைக் கேட்க வில்லை,அவர் செல்வத்தையோ, பதவியையோ, உலக அதிகாரத் தையோ தேடவில்லை இரட்டிப் பான ஆவி தன் ஊழியத்திற்கு தேவை என்பதை தேடி வேண்டி பெற்றுக் கொண்டார். எலியாவின் வல்லமைமிக்க ஆவியின் இரட் டிப்புப் பங்கு . எலியாவின் மூலம் தேவனுடைய ஆவி எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டது என்ப தை எலிசா கண்டார், அதையே தனக்கும் விரும்பினார்.
எலியாவைப் போல இரண்டு மடங்கு அதிகமாகக் கேட்பது அல்ல , மாறாக (இணைச்சட்டம்,) (உபாகமம் 21:17) இல் உள்ளதைப் போல, முதற்பேறான மகனுக்குச் செல்லும் பங்கைக் கேட்பதாகும் . ஊழியத்தைப் பொறுத்தவரை, எலியாவின் வாரிசாக, தனது முதற்பேறான மகனாகக் கருதப்படும் உரிமையை எலிசா கேட்டார்.ஆனாலும், எலிசா ஏற்க னவே எலியாவின் வாரிசாக நியமிக்கப்பட்டிருந்தார் ( 1 அரசர் கள் 19:19 )இது ஆன்மீக சக்திக் கான வேண்டுகோள் . 
இது பொதுவாக நல்லதா கெட்டதா என்பதைக் கருத்தில் கொள்வது மதிப்புக்குரியது . பொதுவாக ஒருவர் இன்னொருவரின் ஊழியத்தைச் சுதந்தரித்துக் கொள்வதாக நாம் நினைப்பதில்லை. எலியாவுக்கும் எலிசாவுக்கும் இடையிலான உறவும் - அவர்களுடைய ஊழியங்களின் மீது கடவுளின் வெளிப்படையான ஆசீர்வாதமும் - குறைந்தபட்சம் சில சமயங்களில் ஒருவர் இன்னொருவரின் ஊழிய த்தைச் சுதந்தரிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பதைக் காட்டுகிறது. கடவு லின் ஊழியத்திற்காக நாம் எதையும் செய்யலாம் ஆனால் அது கடவுளுக்கு பிரியமாக இருக்க வேண்டும்.எலியா தனது சீடனின் பக்தியை சோதித்தார், இந்த கடைசி குறிப்பிடத்தக்க மணிநேரங்களில் அவர் தன்னுடன் விடாமுயற்சியுடன் இருப்பாரா என்று பார்த்தார். எலிசாவின் பக்தி சோதனையின் மூலம் வலுவாக இருந்தால், முதல் தீர்க்கதரிசியின் வாரிசாக வேண் டும் என்ற அவரது கோரிக்கை நிறைவேறியது.திடீரென்று ஒரு அக்கினி ரதம் தோன்றி, அக்கி னிக் குதிரைகளுடன் அவர்கள் இருவரையும் பிரித்தது; எலியா ஒரு சூறாவளியில் பரலோகத் திற்குச் சென்றார்.
அவரிடமிருந்து விழுந்த எலியா வின் சால்வையையும் அவர் எடுத்துக்கொண்டார் : அந்த சால்வை ஒரு தீர்க்கதரிசியின் சிறப்பு அடையாளமாக இருந்ததால், எலிசா உண்மை யிலேயே எலியாவின் ஆவியை யுபம், ஊழியத்தையும் பெற்றார் என்பதற்கான உண்மையின் நிரூபணமாக இது இருந்தது.
அவன் எலியாவின் மேலிருந்து விழுந்த சால்வையை எடுத்து, தண்ணீரை அடித்து, "எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?" என்றான்; அவன் தண்ணீரை அடித்தபோது, ​​அது இருபுறமும் பிரிந்தது; எலிசா கடந்து போனான். எரிகோவிலிருந்து வந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டபோது, ​​"எலியா வின் ஆவி எலிசாவின்மேல் தங்கியிருக்கிறது" என்று சொல்லி, அவனைச் சந்திக்க வந்து, அவன் முன்பாகத் தரைமட்டும் குனிந்தார்கள். எலி சார் தண்ணீரை பிரித்த போது 
இது எலிசாவுக்கு உடனடியாக ஊழியத்தில் எலியாவுக்கு இருந்த அதே வல்லமை இருந்தது என்பதைக் காட்டுகிறது. 
எலியாவின் ஆவி எலிசாவின் மீது தங்கியுள்ளது : எலியாவின் அதிகாரத்திற்கும் பதவிக்கும் எலிசாவின் வாரிசுரிமை மற்றவர் களுக்குத் தெளிவாகத் தெரிந்தது 
 எலி சாவுக்கு இருந்த எலியாவின்  இரட்டிப்பான ஆவி இறைவாக் கினர் எலியா எட்டு அற்புதங்கள் செய்தார் என்றால்,  அவருடைய வாரிசான எலிசா பதினாறு அற்புதங்களை செய்து, இரட்டிப்பான பங்கு பெற்றார் என்பதை தெளிவுபடுத்துகிறார்.
.                  ( or)
1. குற்றம் செய்தவர்கள் தண்டி க்கப்பட வேண்டும்.Those who have done Crime must be punished.
 1 அரசர்கள் 2:9-16.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! தாவிது அரசர் தன் முதிர் வயதில் தன் மகனாகிய சாலமோ னுக்கு கூறும் அறிவுரை: தவறு செய்தவர்கள், மற்றும் துரோகி களை தண்டிக்காமல் விடக்கூடாது நீதி எப்பொழுதும் நிலை நாட்டப் பட வேண்டுமென்று என்று அறிவு றுத்துகிறார். அவ்வாறே நல்லவர் களை காப்பாற்றும்படியும் கூறுகி றார்.பர்சில்லாயின் மைந்தர்க ளுக்கோ இரக்கம் காட்டு. உன் பந்தியில் உண்பவர்களோடு அவர்களும் இருக்கட்டும். 
செரூயாவின் மகன் யோவாபு (Joab) நேரின் மகன் அப்னேர் (Ner's son Abner) மற்றும் நேரின் மகன் அமாசா (Ner's son Amasa) ஆகியோர் இஸ்ரேலின் இரு படை த்தலைவர்கள் ஆவர். அப்னேர் சவுலின் படைத்தலைவராக இருந்தபோது, அமாசா தாவீதின் படைத்தலைவராக இருந்தார். அப்னேர் (Abner) சவுலின் படைத் தலைவர்,இவறை தாவீது தன் படையில் சேர்க்கப்பட விரும்பி னார், ஆனால்,  இவரை யோவாப் (Joab)  கொன்றுவிட்டார். அவ்வாறே, பகுரிம் ஊரைச் சார்ந் த பென்யமினாகிய கேராவின் மகன் சிமயி (Shimei): உன்னோடு இருக்கிறான் அல்லவா? அவன், மகனயிமுக்கு நான் சென்றபோது, மிகவும் இழி வான முறையில் பேசி என்னைச் சபித்தான். என் னை கல்லால் அடித்தான். அவன் யோர்தானுக்கு அருகில் என்னைச் சந்திக்க வந்தபோது, 'உன்னை வாளால் கொல்லமாட்டேன்' என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டு அவனுக்கு நான் சொன்னேன். 
 என தாவீது அந்த இரு படைத்த லைவர்களுக்கு நீதியை நிலை நாட்ட, தான் சாவும் தருவாயில் இருக்கும்போது கூட தன் மகனா கிய சாலமோனிடம் வேண்டுகி றார். சாலமோன் தன் தந்தையா கிய தாவீதின் வார்த்தையின் படி அவர்களை கொன்று போடுகி றார், யுத்த தர்மத்தை அவர்கள் மீறினார்கள். சமாதான காலத்தில் சண்டையிட்டனர் எனவே இந்த தண்டனையை அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. 
தாவீதின் இறுதி நாள் நெருங்கின போது அவர் தம் மகன் சாலமோ னுக்குப் பணித்துக் கூறியது இதுவே; “அனைத்துலகும் போகும் வழியே நானும் போகிறேன். நீ நெஞ்சுறுதியும் வீரமும் கொண் டவனாயிரு. உன் கடவுளாகிய ஆண்டவரின் ஆணைகளைக் கடைப்படி. அவர் காட்டும் வழியில் நட. மோசேயின் சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய நியமங்கள், விதிமுறைகள், நீதிச் சட்டங்கள், ஒழுங்கு முறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடி.
இப்படிச் செய்தால், நீ செய்யும் காரியங்களிலும் செல்லும் இடங்களிலும் வெற்றி காண்பாய். ஏனெனில், ஆண்டவர் என்னை நோக்கி, ‘உன் மைந்தர்கள் தங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத் தோடும் என் முன்னிலையில் உண்மையுடன் நடப்பார்களா னால், இஸ்ரயேலின் அரியணை யில் அமர்வதற்கேற்ற ஒருவன் அவர்களுள் இல்லாமல் போவதி ல்லை’ என்று எனக்குக் கொடுத்த வாக்கு அப்போதுதான் நிலைத்தி ருக்கும். என்றார். இதன் வெளிப் பாடு நீதி நிலைநாட்டப்பட வேண் டும் துரோகிகள் அழிக்கப்பட வேண்டும் என்பதே.
2.புனித ஸ்தேவான் கிறித்தவத் தின் முதல் இரத்தசாட்சி .Saint Stephen was the first martyr in Chris tianity. திருதூதர் பணிகள் 7:54-60.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திரு விவிலியத்தில்  பதிவு செய்யப்பட்ட முதல் கிறிஸ்தவ மனிதர் இவர்தான், அவர் பரிசுத்த ஆவியால் நிறைந்தவர், விசுவாச த்தால் நிறைந்தவர், திருத்தொண் டர், அருட்ப பணியாளர், கிருபை யால் நிறைந்தவர், வல்லமையால் நிறைந்தவர் ஸ்தேவான் என்றால் கிரேக்கத்தில் மகுடம் என்ற பெயர் இவருக்கு முடியப்பர் என்ற பெயரும் உண்டு. எருசலேமில் பிறந்தவர், கமாலியேல் என்பவரி டம் கல்வி கற்றவர்; கிரேக்கமொழி பேசும் புறவினத்துக் கிறிஸ்தவர்.
ஆண்டவர் இயேசுவின் விண்ணே ற்றத்திற்குப் பிறகு கிறிஸ்தவர் களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வந்தது. எனவே, அவர்களுக்கு இறைவாக்கை எடுத்துரைக்கவும் ஏழைகளுக்கு அதிலும் குறிப்பாக கிரேக்க மொழிபேசும் கைம்பெண் களுக்கு உணவு பரிமாற முடியாத ஒரு சூழ்நிலை திருத்தூதர் களுக்கு ஏற்பட்டது. இத்தகைய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க திருத்தூதர்கள் தூய ஆவி யால் நிரப்பப்பட்ட ஏழு திருத் தொண்டர்களைத் தேர்ந்தெடுத்தா ர்கள். அவர்களில் முதன்மையான வர்தான் ஸ்தேவான். ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்த வராய் நிறைய வல்ல செயல்க ளைச் செய்பவராய் இருந்தார். அதோடுகூட கிரேக்க மொழி பேசும் கைம்பெண்களுக்குஉணவு பரிமாறும் பணியினைச் சிறப்பா கச் செய்தார்.அவர் இயேசுவைப் போலவே வாழ்ந்தார், இயேசுவை ப் போலவே பேசினார், தலைமை சங்கத்திடம் (சன்ஹெட்ரின்) சாட்சி கொடுத்தார், இந்த சன்ஹ
ட்ரின் யூதர்களின் உயர் சங்கம், இஸ்ரேலில் மிக உயர்ந்த சட்ட நீதித்துறை அதிகாரத்தை உருவா க்கும் 71 ஆண்கள். இப்போது, ​​கவனியுங்கள்,  இவர்கள் உயர் வாக மதிக்கப்படுபவர்கள். இவர்கள் நீதிபதிகள், வழக்கறி ஞர்கள், ஆசிரியர்கள் போன்றவர் கள்; இஸ்ரேலில்  அனைவரும் அவர்களை "ரபி" என்று அழைத்து "ஆசிரியர்" என்று அழைக்கும் ஆண்கள் இவர்கள். இவர்கள் இயேசுவை நிராகரித்தார்கள், மேசியாவை நிராகரித்தார்கள் என்றயதார்த்தத்துடன். மேலும், அவர்கள் எப்போதும், ஏழாம் அத்தி யாயத்தில், பரிசுத்த ஆவியை எதிர்ப்பதாக ஸ்தேவான் அவர்க ளைக் குற்றம் சாட்டியுள்ளார்கள். இவர்கள் வயதானவர்கள், மரியா தைக்குரிய ஆண்கள், புத்திசாலி ஆண்கள், சக்திவாய்ந்த ஆண்கள், ஆனாலும் அவர்கள் தங்கள் இதயங்களை கடுமைபடுத்தி னார்கள், அவர்கள்  ஸ்தேவானை பார்த்து பற்களை கடிக்கத் தொட ங்கினர்". அவர்கள் தங்கள் வேலையைத் தொடங்கத் தயாரா கிக் கொண்டிருந்தபோது, ​​சாட்சி கள் தங்கள் வஸ்திரங்களைக் கீழே போட்டார்கள். அது கடின மான வேலையாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந் தார்கள். 
3. ஏன் சாட்சிகள் தன் ஆடைக ளைகீழே போட்டனர்.Why did the witnesses take off their clothes?
 கிறித்துவின் அன்பு சகோதரர் களே!சாட்சிகள் தங்கள் மேலங்கி களை சவுலின் காலடியில் வைத் ததாக வசனம் நமக்குச் சொல் கிறது. அவர்கள் கல்லெறிதலைச் செய்தவர்கள் அல்ல, மாறாக மரணதண்டனையின் சாட்சிகள்.  வேதக்காலங்களில், சாட்சிகள் மேலங்கியை ஒருவரின் காலடி யில் வைப்பது வழக்கம்.இது ரோம, கிரேக்கர்களின் காலத்தி லும் இருந்தது. இவர்கள் அந்த நிகழ்வின் சாட்சிகள் என்பதைக் குறிக்கிறது, மேலும் அவர்கள் ஒரு உண்மையான மற்றும் உண்மையு ள்ள சாட்சியாக இருப்பீர்கள் என்று தங்கள் ஆடைகளை கீழே வைப்பதன் மூலம் சபதம் செய்கி றார்கள்; அந்த விசயத்தில் அவர் கள் முழு உண்மையையும் சொல் வார்கள்.சாட்சிகள் தங்கள் ஆடை களைக் கீழே போடுவது என்பது. —தங்களின் புனிதமானபொறுப்பை வலியுறுத்துவதாகும் அவ்வாறே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட் டால், அவர்கள் முதலில் அவரது மரணதண்டனையில் பங்கேற்க வேண்டும் என்று சட்டம் கோரியது ( இணைச்சட்டம் 17:7 )
விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணி ன் விசயத்தில் ஆண்டவரே இந்த விதியைப் பயன்படுத்தியிருந்தார் என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும் ( யோவான் 8:7 ).
குருத்தோலை ஞாயிறு ஆண்டவ ரின் பயணத்தில் மக்கள் தங்கள்
ஆடைகளை தரையில் விரித்தது
இயேசுவே மெசியா என்பதற்கு
அவர்களே சாட்சியாகினர்.
ஸ்தேவானின் சாட்சிகள்,தங்கள் வஸ்திரங்களைக் கீழே போட்ட போது, ​​"சவுல் என்ற இளைஞனின் காலடியில்" (திருத்தூதர் 7:58b)
வைத்தார்கள்.
4. கிறிஸ்துவின் வழியில் ஸ்தேவான். Stephen was in Christ's
Spirit.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஸ்தேவான் தான் மரணிக் கப் போகும் நேரத்திலும் அவரிடம்  நாம் காணும் கிறிஸ்துவின் குண நலன்கள்.
1. அவர் தூய ஆவியின் வல்லமை பெற்றார் 
2. அவர் இயேசு கிறிஸ்துவை கடவுளின் வலது பக்கத்தில் நிற்பதை காண்கிறார்
3. அவருக்காக வானம் திறந்தது 
4 தன் ஆவியை ஆண்டவரிடத்தில் கொடுக்கிறார்.
5. ஆண்டவரே இந்த பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதீரும் என்று வேண்டுகிறார்.
6. ஸ்தேவான் கண்ட காட்சி அவரின் மரணத்தை தைரியமாக ஏற்றுக் கொள்ள முடிந்தது.
ஸ்தேவான் தன்னை துன்புறுத் தியவர்களுக்காக மன்றாடினார், அவர்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு தந்தைக் கடவு ளிடம் மன்றாடினார். இவ்வாறு அவர் இயேசு சொன்னதை (மத் 5:44) நிறைவேற்றினார். அவ்வா றே நாமும் பிறர் பாவங்களை தவறுகளை மன்னிப்போமாக.
5.'உலகிற்கு போ' என்பது திருச் சபையின் அருட்பணி.
The Mission of the Church is to go out into the world.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவராக இயேசு கிறிஸ் துவின் மிகப்பெரிய கட்டளை (The great Commission) என்ன வென்றால்,  "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங் கள். (மாற்கு நற்செய்தி 16:15)
 என வலியுறுத்திய ஆண்டவர் 
" நீங்கள் போய் எல்லா மக்களி னத் தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடு ங்கள். (மத்தேயு நற்செய்தி 28:19)
 இதுவே கிறிஸ்தவ திருச்சபை யின் பணி மகா ஆணையத்தில் காணப்படுகிறது. மத்தேயு 28:18–20-ல், விசுவாசிகள் அல்லாதவர் களை சீடர்களாக்கவும், அவர்களு க்கு திருமுழுக்கு  கொடுக்கவும், கடவுளின் வழிகளைக் கற்பிக்க வும் இயேசு பெருநிறுவன அமைப் பான திருச்சபையை அறிவுறுத்து கிறார். அப்போதுதான் நாம் அதிக மான மக்களை ஐக்கியத்தில் காண்போம்.பிதாவால் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டதாக கிறிஸ்து முன்னர் அறிவித்திருந் தார் (மத். 11:27), ஆனால் மகா ஆணையில் கற்பிக்கும் அதிகாரம் முதன்முறையாக கிறிஸ்துவிட மிருந்து அவரது சீடர்களுக்கு அனுப்பப்படுகிறது. எனவே அது திருச்சபைக்கான ஆணையாக கருதப்படுகிறது. திருச்சபை இயேசுவை ஏற்றுக் கொண்ட வர்களின் அமைப்பாகும். இயேசு கிறிஸ்துவால் அவர்களு க்கு வழங்கப்பட்ட பெரும் அதிகார த்தைப் பெற்றுள்ளனர். இது திருச் சபைக்கும், சீடர்களுக்கும் மிகுந்த தைரியத்தையும் நம்பிக் கையை யும் அளிக்கிறது, கடவுளின் திட்டம் அவர்களின் செயல்கள் மூலம் நிறைவேறும் என்பதை அவர்கள் அறிவார்கள்.
திருச்சபை உலகிற்குச் செல்ல வேண்டும். தொலைந்து போனவர் கள் வசிக்கும் இடத்திற்கு திருச்ச பை பயணிக்க வேண்டும். 
 இயேசு காணாமல் போன ஆட்டை தான் தேடி திரிந்து அலைந்து போனார் கண்டுபிடித்தார் மகிழ் ச்சி அடைந்தார். இதுவே திருச்ச பையின் பணியாகும். ஒரு திருச்சபை இயேசுவை அறியாத மக்களை தேடி கண்டு தனது ஐக்கியத்தில் சேர்க்காமல் இருக்க முடியாது. அது அப்படி செய்யாமல் இருந்தால் ஆண்டவரின் கட்டளை யை மதிப்பது அல்ல என்பதாகும்.
6 சீடர்களை உருவாக்குவது எப்படி? How to make disciples?
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவளே சீடர்களை உருவாக்குவது என்பது ஆண்டவரின் கட்டளை. இதை திருச்சபை தான் செய்ய வேண் டும். திருச்சபையின் தலையாயப் பணி சீடர்களை உருவாக்குவது, அவர்களை உலகத்திற்குள் அனுப் புவது, அவர்கள் மற்றவர்களையு ம் இயேசுவின் சீடராக்குவது அடிப் படை அழைப்பும், பணியாகும். யாராவது வெளியே போகாவிட் டால், சீடர்களை உருவாக்க முடி யாது. சீடர்களை உருவாக்குவது திருச்சபையின் அருட்பணிமட்டு மல்ல அடிப்படை பணியாகும். தொலைந்து போனவர்களை அடைய திருச்சபை தெருக்களு க்கும் காடுகளுக்கும் சீடர்களை அனுப்ப வேண்டும். ஒன்றை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்,"சீடர்கள் பிறக்கவி ல்லை,உருவாக்கப்படுகிறார் கள்." Disciples are not born but Created.
ஒவ்வொரு தேவாலயமும் தனிமனிதரையும், தேசங்களைச் சீடராக்குவதில் ஒரு பங்கை வகிக்க வேண்டும். யார் நமது காரியமாக போவான்?" என்று கேட்கும் கேள்வி, தேவன் ஒருவ ரைத் தேடுவதைக் குறிக்கிறது. (ஏசாயா 6:8-9) வசனங்களில், தேவன் ஒருவரைத் தேடி, "யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாகப் போவான்?" என்று கேட்டார். இந்த கேள்விக்கு திருச்சபைகள் பதில் சொல்ல வேண்டும்.  விசுவாசிகள் பதில் சொல்ல வேண்டும். இவர்கள் அனுப்பாவிட்டால், போகாவிட்டால் சீடர்களாக்குவது எப்படி? 
 ஆண்டவர் ஒருவரைத் தேடி, அவரிடம் ஒரு பணி கொடுக்க விரும்புகிறார். அது நானாக இருக்கட்டும் or அது நீங்களாக இருக்கட்டும். சீடராகுவோம், சீடர்க ளை உருவாக்குவோம், இதுவே கிறிஸ்துவின் அருட்பணி, திருச்சபையின் முக்கிய பணி  
 இவ்வாறு கடவுள் நம்மை செயலில் ஈடுபட அருள் புரிவாராக ஆமென்.



Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com







புனித ஸ்தேவான்
மாட்சிமையில் புனித ஸ்தேவான்
ஓவியர்: கியாகோமோ கேவ்டன்

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.