ஆணஂடவரைப் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம். (211) Fear of the Lord as the beginning of wisdom. 1 அரசர்கள் 3:3-14, திருப்பாடல் 14. 1 யோவான் 5: 13-21. லூக்கா 10: 21-24. மாணவர் ஞாயிறு.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இந்த வாரம் திருச்சபைகள் மாணவர் ஞாயிறை கொண் டாடுகிறது. இதன் தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது "ஆணஂடவ ரைப் பற்றிய அச்சமே ஞானத் தின் தொடக்கம்".
மாணவர் ஞாயிறு, சர்வதேச அள வில் மாணவர்களுக்கான பிரார்த் தனை நாள் என்று அழைக்கப்படு கிறது, இது பழமையான உலகளா விய எக்குமெனிகல் ( கிறித்துவ ஐக்கியம்) பிரார்த்தனை நாட்களி ல் ஒன்றாகும் ,
ஆண்டவரைப் பற்றிய அச்சம் என்பது, கடவுள் மீதான மரியாதை, நம்பிக்கை, மற்றும் கீழ்ப்படிதல் ஆகும்.ஆண்டவரைப் பற்றிய அச்சம், வெறுமனே பயம் அல்ல, மாறாக கடவுள் மீதான மதிப்பும், அன்பும், மரியாதை ஆகும்.
திருப்பாடல் 19ல் கூறப்பட்டுள்ள வாறு, "ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது" என்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது.ஆண்டவர் மீது அச்சம் கொள்வது தூய்மை வழிகளில் ஒன்றாகும். கடவுளுக்குப் பயந்து நடப்பதும் அவருடைய அதிகாரத்தை அங்கீ கரிப்பதும் ஞானத்தைப் பெறுவ தாகும்.கர்த்தரை அவரது வார்த் தையின் மூலம் அறிந்துகொள் வதே ஞானத்தைப் பெறுவதற் கான ஒரே வழி.
அன்பானவர்களே!. 1அரசர்கள் கள் 4:29ல், கடவுள் நீதி அரசர் சாலொமோனுக்கு கடற்கரை மணலைப் போல பரந்த ஞானத் தையும் புரிதலையும் கொடுத்தார் என்று நமக்குச் சொல்கிறது. அதே அதிகாரத்தில், 32வது வசனத்தில், சாலொமோன் 3,000 நீதிமொழிக ளையும் 1,005 பாடல்களையும் எழுதியதாக அறிகிறோம். நீதி மொழிகளின் முதல் ஒன்பது அதி காரங்கள் ஞானத்தை மையமாகக் கொண்டுள்ளன.
நீ யாருக்கு பயப்படுகிறாய்?
Who are you afraid of?
அன்பார்ந்தவர்களே! திருவிவலி யத்தில் (விடுதலை பயணம் 1:15-20)இரண்டு மருத்துவச்சிகள் ஷிப்ராவையும் பூவாவையும் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது
அவர்கள் எகிப்திய மன்னன் பார்வோனின் வார்த்தையை கேட்காமல் எபிரேய ஆண் குழந் தைகளை காப்பாற்றினார்கள்
அதற்குக் காரணம் அந்த மருத்து வப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியி ருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர் கள் வாழ விட்டார்கள். ஆனாலும், இவர்கள் செய்ததில் ஒரு தவறு இருக்கிறது, மன்னருக்கு எதிராக பொய் சொன்னதுதான். பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே. என்ற ஒன்பதாவது கட்டளை அப்போது இல்லை.(விடுதலைப் பயணம் 20:16)
ராகாப் எரிகோ நகரில் வசிக்கும் கானானியப்பெண்.இஸ்ரவேலைச் சேர்ந்த உளவாளிகள், இவள் வீட்டில்தங்கினார்கள்.எரிகோவின் அரசருக்கு இந்த விஷயம் தெரிந் துவிட்டது. அதனால், ராகாபின் வீட்டுக்கு வீரர்களை அனுப்பி னான். உடனே, ராகாப் அந்த இரண்டு உளவாளிகளையும் வீட்டில் ஒளித்து வைத்து அவர்கள் எந்த தேசத்திலிருந்து வந்தவர்க ளென்று தனக்குத் தெரியாது என்று பொய் சொன்னாள். இவள் கடவுளின் ஒன்பதாவது கட்டளை யை மீறினார். ஆனாலும் கூட இஸ்ரவேலின் கடவுள்மீது நம்பி க்கைகொண்டு,இவள் அஞ்சி நடந்து கொண்டதால் விசுவாசி களின் பட்டியலில் இவள் பேரும் சேர்க்கப்பட்டது ஒரு நன்மைக்காக ஒரு பொய்யை சொன்னார். அதில் தவறு இல்லை என்பதை
திருவள்ளுவர்,
பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
பொய்யான சொற்கள் கூட பிறரு க்கு நன்மையை விளைவிக்குமா னால், அவை வாய்மை போல கருதப்படலாம்.என்கிறார்,ஆனால் உள்ளதை உள்ளது என்றும் கூறுங்கள் என்ற வார்த்தை மாறாதது.
கர்த்தருக்கு பயந்து நடந்தவர்கள்” என்ற சாட்சியைப் பெற்றவர்கள்
ஆபிரகாம் ஈசாக்கை பலியிட ஒப்புக்கொடுத்தபோது, நீ தேவனு க்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்(தொடக்கநூல்Genesis.22:12). யோபுவைக் குறித்து “தேவனுக்கு பயந்தவன்” என்று தேவனே சாத்தானுக்கு முன்பாக சாட்சி கொடுத்தார் (யோபு 2:3). எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த கொர்நேலியு தேவனுக்கு பயந்தி ருந்தவன் என்ற சாட்சியைப் பெற்றவனான்(திருத்தூதர்பணிகள்.Acts 10:2). எனவே ஆண்டவரி டம் அஞ்சு நடப்போர் ஞானம் பெறு வர்.ஞானம் என்பது அனுபவம், அறிவு, நுண்ணறிவு, நல்ல தீர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த மற்றும் ஆழமான புரிதல் ஆகும். ஞானம், சிறந்த முடிவுக ளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், மேலும் வாழ்க்கையில் அர்த்தத்தை உணரவும் உதவுகிற து. அறிவு என்பது வெறும் தகவ ல்களைக் கொண்டிருப்பது, அது ஏட்டு சுரக்காய்.(calabash)
1.ஆண்டவருக்கு அஞ்சு நடப் போருக்கு ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தருவார்.God gives the heart of wisdom to those who fear the Lord.1 அரசர் Kings 3:3-14.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஞானம் நிறைந்த உள்ளம் ஆண்டவருக்குஅஞ்சுநடப்போற்கே உண்டு என்பதை சாலமோன் அரசரின் வாழ்வில்காண்கிறோம்.
சாலொமோன் ஒரு ஆசீர்வதிக்க ப்பட்ட ராஜா, தாவீதுக்கு பொருத் தமான வாரிசு, எருசலேமில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா. அவர் சுமார் 20 ஆம் வயதில் அரசராக முடிசூட்டப்பட்டார். ஆண்டு கி.மு 970. சாலமன் ஆண்டவர் மீது அன்பு கொண்டார். அதனால் ஆண்டவரின் நியமங்கள் (கட்ட ளைகள்) படி பயந்து நடந்து கொண்டார். சாலமோனின் ஆயிரம் எரிபலிகள், அவர் தனது ஆட்சிக் காலத்தில் கடவுளுக்குச் செய்த ஒரு பெரிய ஆராதனை.
இந்த ஆராதனை நடந்த இடம்
கிபியோன். இது இஸ்ரேலின் பண்டைய தலைநகரமான எருச லேமிலிருந்து வடக்கு திசையில் சுமார் 12 கிமீ தொலைவில் உள்ள ஒரு பண்டைய நகரமாகும். அன்றி ரவு கிபியோனில் ஆண்டவர் சால மோனுக்குக் கனவில் தோன்றி "உனக்கு என்ன வரம்வேண்டும் கேள்!" என்று கடவுள் கேட்டார்.
இது அரசர் சாலமோனுக்கு கிடை த்த ஆராதனை பரிசாகும். நாம் ஆண்டவருக்கு செய்யும் ஒவ்வொ ரு ஆராதனைக்கும் நிச்சயமாக அவர் ஒரு பலனை கொடுப்பார் என்பது இதனுடைய வெளிப்பாடா கும்.சாலொமோன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினா ர் கர்த்தர் சாலொமோனிடம் தான் விரும்பியதைக் கேட்கச் சொன் னார் . சாலொமோன் கேட்டதைக் கொடுப்பதாக கர்த்தர் வாக்குத்த த்தம் செய்தார். ஞானத்தின் வெளிப்பாடாக, சாலொமோன் தேவனுடைய ஜனங்களை ஆளுவ தற்கு ஞானத்தைக் கேட்டார். கர்த்தாவே, " உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத் தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனு க்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?" என்று கேட்டார். ஞானம் நிறைந்த உள்ளம், வெறும் அறிவு த் திறனை விட மேலானது.
ஞானம் நிறைந்த உள்ளம், சூழ்நி லைகளை தெளிவாகப் புரிந்து கொண்டு, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
ஞானம் நிறைந்த உள்ளம், பொறு மையுடன் செயல்படவும், சூழ்நி லைகளை எதிர்கொள்ளவும் உதவு கிறது.எனவே, கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தை யோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்ப வில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய் கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகி றேன். இன்னும் நீ கேளாத செல் வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால், உன் வாழ் நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.மேலும், உன் தந்தை தாவீ தைப் போல் நீயும் என் வழிகளில் நடந்து, என் நியமங்களையும் விதிமுறைகளையும் கடைப் பிடித்து வந்தால் உனக்கு நீண்ட ஆயுளையும் வழங்குவேன்" என்றார். கடவுளின் வழியில் நடப்பவர்களுக்கு நீண்ட ஆயுளை கடவுள் தருகிறார்.
2 ஆண்டவரிடம் அஞ்சு நடப் போருக்கு நிலை வாழ்வு உண்டு.Those who fear the Lord have eternal life.1யோவான் 5:13-21.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே திருத்தூதர் யோவான் அவர் கள் நம்பிக்கை என்பது இறைமக னிடம் நாம் கொண்டுள்ள நம்பிக் கையில் நிலை வாழ்வு உண்டு என நாம் அறிந்து கொள்ள உறுதி அளிக்கிறார்.
மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் வாழ் வை இழந்தால் என்ன நன்மை உண்டு. நாம் ஆண்டவரிடம் வேண் டும் போது அவருடைய திரு உளத் திற்கு ஏற்ப அமைந்திருந்தாள் அவர் நமக்கு நிச்சயம் பதில் அளிப்பார் என்பது உறுதியான நம்பிக்கையாகும்
இயேசுவை நம்புவது வெறும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்வது அல்ல, மாறாக அவரிடம் ஒரு நெருக்கமான உறவை வளர்ப்ப தாகும். கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற ஆண்ட வரிடம் நாம் எதைக் கேட்டாலும் நம்பிக்கையுடன் பெற்றுக் கொள் வோம் என்பது உறுதி.
பாவம் இரண்டு வகை உண்டு. ஒன்று மரணத்துக்கு ஏதுவான பாவம் மற்றொன்று மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்.
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத் தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண் டுதல்செய்யக்கடவன், அப்பொழு து அவனுக்கு வாழ்வை கொடுப் பார்; யாருக்கென்றால், மரணத் துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக் குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.". என்கிறார்
மரணத்துக்கு ஏதுவான பாவம்:
இது பாவங்கள் அனைத்திலும் மிகவும் கொடுமையானது, அது தேவனிடமிருந்து நிரந்தரமாக பிரித்து, ஒருவரின் மரணத்திற்கு வழிவகுக்கும். அவ்வாறே,
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம்:
இது ஒரு சாதாரண பாவம், அது ஒருவரை தேவனிடமிருந்து பிரித் து விடாது, ஆனால் தேவனுக்கு விரோதமாக செய்யும் ஒரு செயல்.
தீச் செயல்கள் அனைத்தும் பாவ மே ஆனால் எல்லா பாவமும் மரணத்திற்குரியவை அல்ல. பாவங்களை மன்னிக்கும் அதிகா ரம் இயேசு கிறிஸ்துவை தவிர இவ்வுலகில் யாருக்குமே தந்தை கொடுக்கவில்லை. பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகில் வந்தார் என்பது மிக முக்கிய உண்மையாகும். ஆண்டவரின் பெயர் இயேசு அதாவது இரட்சகர் என்ற பொருள் படும். கடவுளுடைய பிள்ளைகள் பாவம் செய்வதில்லை. அவர்களை பாவம் செய்யாமலும் கடவுள் காப்பாற்றுகிறார். இவ்வுல கம் தீயவர்களின் கைகளில் இருக் கிறது. ஆனாலும் கடவுளைச் சார்ந்தவர்களை கடவுள் என்றும் காக்கின்றார். அவருக்கு பயந்து நடக்கிறவர்களுக்கு மிக அருகில் இருக்கிறார். நம்மை தாங்குவார், சுமப்பார், ஏந்துவார்.ஆண்டவரு க்கு அஞ்சு நடப் போருக்கே நிலை வாழ்வு உண்டு.
3. அருட்பணியில் மகிழும் ஆண்டவர்.The Lord delights in Ministry. Luke லூக்கா 10: 21-24.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவர் தனக்காக தேர்வு செய்த 12 சீடர்களை, தவிர 72 பேரை தம்முடைய பணிக்காக, தான் போவதற்கு முன்பாக, பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்தார், அவர்கள் திரும்பி வந்து மகிழ்ச்சியுடன், இறைவார்த் தைகளை விதைக்கின்ற போதும், ஆண்டவரின் பெயரைச் சொன் னால் நடந்த அற்புதத்தை ஆண்ட வரிடம் எடுத்துக் கூறுகின்ற போது: ஆண்டவர் மகிழ்ச்சியடை ந்தார். இது ஒரு சாதாரண மகிழ் ச்சி அல்ல, ஆண்டவர், ஆவியில் மகிழ்ந்தார்.அந்த நேரத்தில் இயேசு உண்மையிலேயே உற்சா கமடைந்தார்.இதை, பண்டைய கிரேக்க மொழியில் அவர் மகிழ்ச் சியால் சிலிர்த்துப் போனார் என்று கூறுகிறது . இயேசுவின் மகிழ்ச்சியின் இந்த தனித்துவமா ன உதாரணம் அவரது ஊழியர்க ளின் பணியில் இருந்தது. ஞானி களை குழப்ப இந்த உலகத்தின் பலவீனமான மற்றும் எளிதான விசயங்களைப் பயன்படுத்து வதில் கடவுள் மகிழ் ச்சியடைகி றார். இறையியலாளர் ஸ்பர்ஜனி ன் கூற்றுப்படி,
"நற்செய்திகளில், இயேசு மகிழ்ந்தார் என்று குறிப்பாகக் கூறப்படும் ஒரே சந்தர்ப்பம் இதுதான்." அது தனித்து நிற்கிற து; ஆனால் இயேசு மற்ற நேரங்க ளில்ஒருபோதும்மகிழ்ந்ததில்லை என்று நாம் நினைக்கக்கூடாது. "அவர் சிரித்ததாக நாம் கேள்விப்ப டுவதில்லை, இருப்பினும் அவர் அழுததாக மூன்று முறை பதிவு செய்யப்பட்டுள்ளது; இங்கே ஒரு முறை, மிகவும் தனித்துவமானது, அவர் மகிழ்ந்தார் என்ற ஏவப்பட்ட உறுதிப்பாட்டைக் காண்கிறோம்.
இந்த துயர மனிதன் பெரும்பா லும் மிகவும் மகிழ்ச்சியாக இருந் தாரா?, பசியோடு இருந்தார் , களைப்பில் இருந்தார், தனிமை யில். இருந்தார், ஆனால் இயேசு தன் பெயர் தெரியாத தன் நண்ப ர்களின் (72பேர்) வெற்றியைக் காட்டிலும் அதிகமாக இருந்ததி ல்லை...
இயேசுவின் மகிழ்ச்சி அவரை ஜெபத்தில் ஆழ்த்தியது. அவர் பிதாவாகிய கடவுளை அவரது ஞானத்திற்காகவும், அவரது திட்டத்திற்காகவும், பிதாவாகிய கடவுளுடனான அவரது தனித் துவமான உறவுக்காகவும் துதித் தார்.இயேசு பிதாவுக்கு நன்றி செலுத்தினார், சாத்தியமில்லாத மக்கள் கடவுளால் கற்பிக்கப்பட்டு அவரால் பயன்படுத்தப்பட்டதில் இயேசு மகிழ்ச்சியடைந்தார். குழந்தைகள் எழுபது பேர்; கடவு ளின் வெளிப்பாட்டிலிருந்து உண்மையான ஞானத்தைப் பெற்ற எளிய விசுவாசிகள். அவர்களை ஓநாய்களுக்கு மத்தி யில் ஆட்டுக்குட்டிகளைப் போல அனுப்பினார் அவர்கள் வெற்றியு ம் பெற்றார்கள். கிறிஸ்துவுக்குபிரியமானவர்களே அந்த 72 பேருடன் நம்மையும் இணைத்துக் கொள்வோம் அவர்
கள் போல் பணியாற்றி ஆண்ட வரை , ஆவியில் மகிழச் செய் வோம். : நாம் இயேசுவின் அருட் பணியை செய்யும் போது அவரு க்கு மிகுந்த மகிழ்ச்சி இருக்கிறது என்பதை அறிந்துதான் நாம் வேலையைச் செய்கிறோம்.. ஆண்டவரை மகிழ் விக்க செய்கி ன்ற ஒரு வாய்ப்பு இவ்வுலகில் உயிருள்ளவரை அவரின் பணி யாற்றிடவேண்டும். இது அவருக் கு மகிழ்ச்சி தருகிறது, நமக்காக உயிர் நீத்த, நம் பாவங்களுக்காக சிலுவை சுமந்த ஆண்டவரை மகிழ்விக்க ஒரு வாய்ப்பு உங்களு க்கு இருக்கிறது, அவர் பணியை ஆற்றிடுவோம் அவர் அகமகிழ் வார்.
இந்தியர்களும் கிரேக்கர்க ளும்.
கிறிஸ்துக்கு பிரியமானவர்களே இந்தியர்கள் கடவுளை படைத்து பெயர் வைத்து வணங்கினார்கள். ஆனால் கிரேக்கர்கள் அறியப்ப டாத கடவுள் என்று வணங்கினா ர்கள். கிரேக்கர்கள் பொருளுக்கும் ஆவிக்கும், மனிதனுக்கும் கடவுளு க்கும் இடையே ஒரு பெரிய இடை வெளி இருந்தது.கிரேக்கர்களுக்கு கடவுள் அறியப்படாதவர். "கடவு ளை அறிவது மிகவும் கடினம், நீங்கள் அவரை அறிந்திருக்கும் போது அவரைப் பற்றி வேறு யாரி டமும் சொல்வது சாத்தியமில்லை" என்று அவர்கள் கூறினர். ஆனால் நம் ஆண்டவர்இயேசு வந்தபோது, "கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறியவிரும்பினால், என்னைப் பாருங்கள்" என்று கூறினார். இயேசு மக்களுக்கு கடவுளைப் பற்றிச் சொல்லவில் லை, ஏனென்றால் கடவுளை காட்டினார், ஏனென்றால் அவரில் கடவுளின் மனமும் இதயமும் இருந்தது. என்னைக் கண்டவன் என் தந்தையை கண்டவன் என்றார்.கிறிஸ்தவம் என்பது கிறிஸ்துவைப் பற்றி அறிவது என்று அர்த்தமல்ல, அது கிறிஸ் துவை அறிவது என்று பொருள்; அதற்கு பூமிக்குரிய ஞானம் அல்ல, பரலோக கிருபை தேவை.
நண்பர்களே,"நாம் கர்த்தருடைய தூதர்கள் , இந்த உலகில் அவ ரைப் பிரதிநிதித்துவப்படுத்த அனுப்பப்பட்டவர்கள்.(The Messengers of God). இதை மனதில் வைத்து செயல்படுவோம்.
பயப்படாதே சிறு மந்தையே, Fear not little flock லூக்கா 12:32.
பிரியமானவர்களே நம் ஆண்டவர் பயப்படாதே என்ற மாபெரும் வார் த்தையை இங்கு நமக்கு பயன் படுத்துகிறார் அஞ்சி நடப்பது என்ற சிந்தனையில் இருந்து அஞ்சாதே என நம்மை அழைக்கி ன்றார்.இந்த வார்த்தைகள் குறிப் பாக கிறிஸ்துவின் சீடர்களுக்குச் சொல்லப்பட்டவை; அவர்கள் "ஆடுகளின் மந்தையுடன்" ஒப்பிட ப்படுகிறார்கள், இயேசு இக்கூற் றின் மூலம், தம்மைப் பின்பற்றும் மக்களைக் கவலை கொள்ளாமல், விண்ணரசை அவர்கள் பெறுவா ர்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவிக்கிறார். அஞ்சாதே என்ற கடவுளின் வார்த்தை அவரின் இயற்கையான தன்மையை, குணத்தை காட்டுகிறது அவர் அன்பு நிறைந்தவர் கடவுளின் அரசை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்புகிறார் எனவே அஞ்சாதீர்கள் என்கிறார். இந்த உலகில் அவர்கள் ஒரு சிறு மந்தை. அவரின் விண்ணரசி கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.
ஆண்டவரிடம் அன்பு கொள்வதே ஞானத்தின் ஆரம்பம் கடவுள் நம் அனைவரையும் ஆசிர்வத்து காப்பாராக, ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
· சாலொமோனின் ராஜ்யம்
Comments
Post a Comment