வாரும் தூய ஆவியாரே, எங்களை விடுவியும் (212) Come Holy Spirit, Set us free. ஏசாயா 61:1-11 திருப்பாடல்கள் 107:31-43, திருத் தூதர் பணிகள் 2: 1-13, லூக்கா 4:16-21.(பெந்தெகொஸ்தே ஞாயிறு ) Pentecostal Sunday.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்க அனை வருக்கும் மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள். இந்த வாரம் பெந்தகோஸ் தே ஞாயிறு இயேசு உயிர்த்தெழு ந்த 50-வது நாளை குறிக்கிறது.
இது கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான நாளாகும் தூய ஆவி யை ஆண்டவர் நமக்கு அருளாக கொடுத்து ஆவியின் வரங்களைக் கொடுக்கப்பட்டநாளாகும்.பெந்தெ கொஸ்தே" என்ற சொல், யூதர் களின் அறுவடை திருவிழாவைக் குறிக்கிறது. இது பாஸ்கா திருவிழாவிற்கு பின் ஐம்பதாவது நாளில் கொண்டாடப்பட்டது. இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா.
பின்னாட்களில் கிறித்தவர்களின் திருவழிபாட்டு ஆண்டில், திருத் தூதர்களின் மீதும், கிறித்துவின் சீடர்கள் மீதும் (மொத்தம் 120 நபர்கள்) தூய ஆவியின் வருகை யினை நினைவு கூறும் விதமாக தூய ஆவி பெருவிழா என்னும் பெயரில் அமைந்தது. இவ்விழா வே திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகின்றது. விண்ணேற்ற விழாவுக்குப் Ascension பின் 10ஆம் நாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது..
சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியால்ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது. எனத் திருத்தூதர் பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதின முதலாம் திருமுகத்தில் இவ்வாறு கூறுகிறார் Unless, we have the holy spirit, we can't call Jesus is our Lord. எனவே, அன்பானவர் களே இயேசுவே நமது ஆண்டவர் என உரிமை கொண்டாடுவதற்கு தூய ஆவியை நாம் பெறுவது அவசியமல்லவா?
தூய ஆவியை தன் சீடர்களுக்கும் விசுவாகளுக்கும் அளித்த ஆண் டவர் அவர்களுக்கு கொடுத்த முதல் கட்டளை பிறருடைய பாவங் களை மன்னிக்க அதிகாரம் கொடுத்தார். யோவான் நற்செய் தியில் இயேசு தம் சீடருக்கு ‘தூய ஆவியைப் பெற்று க்கொள்ளு ங்கள்” என்று கூறி சமாதானம், பாவ மன்னிப்பு ஆகிய இரண்டு கொடைகளையும் கொடுக்கின் றார். எனக்கு அன்பானவர்களே பிறர் செய்த தவறுகளை மன்னி யாதிருக்கிறவர்கள், கிறிஸ்து வின் பிள்ளைகளாக இருக்க முடியாது. மன்னிப்பு என்பது தூய ஆவியானவரின் அருள் கொடை. இறைவன் உலகைப் படைத்த போது, ஒன்று மில்லாமையிலிரு ந்து, வெறுமையிலிருந்து (தொடக்க நூல் 1:1) அசைந்தாடிய ஆவியின் ஆற்றலால் அனைத் தையும் படைத்தார். திருட்சபை வழங்கும் ஒவ்வொரு திருவருட் சாதனத்திலும் தூய ஆவி நம் மீது பொழியப்படுவதால், நம் பாவங் கள் மன்னிக்கப்படுகின்றன; நாம் புதுப்படைப்பாகிறோம்.தூய ஆவி யின் செயல்பாட்டால்தான் படைப் புகள் உண்டாகின.
விடுவிக்கும் தூய ஆவி" என்ற சொற்றொடர், தூய ஆவி கடவு ளின் மூன்றாம் ஆளாக, பாவத்தி னின்று விடுதலை அளிப்பதாக வும், நம்மை புனிதப்படுத்துபவ ராகவும் பார்க்கப்படுகிறது. திரித் துவக் கொள்கையுடைய கிறிஸ் தவ பிரிவுகளின் படி, தூய ஆவி என்பது கடவுளின் மூன்றாம் ஆள் (நபர்) ஆகும். தூய ஆவி பாவத் தின் பிடியிலிருந்து மனிதர்களை விடுவித்து, கடவுளின் பிள்ளை களாக்குகிறார்.இயேசுவின் மூலம் பாவத்தை மன்னித்து, நித்திய வாழ்வை பெற்றுக்கொள்ள தூய ஆவியின் பங்கு முக்கியமானது. இதைத்தான் திருச்சபைகள் செயலாற்றி வருகின்றன.தூய ஆவி, இறை மக்களை இயேசு விடம் கொண்டு சென்று வழிநடத் துகிறார். தூய ஆவி, மனிதர்களை பரிசுத்தப்படுத்துகிறார். தூய ஆவி மூலம் பல அருள்கொடைகள் வழங்கப்படுகின்றன, அவை திருச்சபையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தூய ஆவி என்ப வர் அதிபுனித திரித்துவத்தின் மூன்றாம் ஆளாவார். இறை வெளிப்பாட்டில் இவர் புனிதப்ப டுத்துபவராக காணப்படுகிறார். தந்தையாகிய கடவுளிடம் இருந்தும், மகனாகிய கடவுளிடம் இருந்தும் புறப்படும் நித்திய (முடிவில்லாத) அன்பாக இவர் இருக்கிறார். இந்தத் தூய சிந்தனையோடு தூய ஆவியை நம்மை விடுவிக்க வரவேற்போம்.
1. அருள்பொழிவு பெற்றவர்க ளின் பரிசு - தூய ஆவி.The gift of the anointed is the Holy Spirit. எசாயா 61:1-11.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து (லூக்கா 4:16-22-ல்), தம்முடைய சொந்த ஊரான நாசரேத்தின் ஜெப ஆலயத்தில் முதல் பிரசங்கமாக பேசினார். அவர் ஏசாயா 61-ஐத் திறந்து - அத்தியாயத்தின் தொடக் கத்திலிருந்து 2-வது வசனத்தின் முதல் வரி வரை வாசித்தார். "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற் றோர் பார்வைபெறுவர் என முழக் கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
ஆண்டவர் அருள்தரும் ஆண்டி னை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார். "
(லூக்கா நற்செய்தி 4:18,19)
அவர் அமர்ந்தபோது, இன்று இந்த வேதவாக்கியம் உங்கள் காது களில் நிறைவேறியது என்று வெறுமனே கூறினார் . அன்பர் களே ஏசாயாவின் தீர்க்கதரிசனத் தை முதன்முதலில் பெற்றவர்கள் பாபிலோனில் நாடுகடத்தப் பட்டவர்களின் தலைமுறையின ருக்கு, இந்த வார்த்தை அளிக்கப்
பட்டது. ஏசாயா கிமு எட்டாம் நூற்றாண்டு இறைவாக்கினார். ஏசாயா என்ற பெயருக்கு "கர்த்தர் இரட்சிக்கிறார்" என்று பொருள், ஏசாயா ஆமோத்ஸின் மகன். இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு இறைவாக்குறைத்தார். இந்த வாக்குறுதி இயேசு கிறிஸ்து மூலம் நிறை வேறியது. இஸ்ரவேலர் அவர்கள் நாடு கடத்தலிருந்து ஏற்கனவே விடுதலை பெற்றுஇருந்தனர்.
கர்த்தராகிய தேவனுடைய ஆவி என்மேல் இருக்கிறது" என்று எழுதப்பட்ட இடத்தைக் கண்டார்.கடவுளுடைய ஆவி சமாதானமுள்ள ஒரு புதிய உலகத் தைப் படைக்கும்.இயேசு கண்ணு க்குத் தெரியாத கடவுளின் காண க்கூடிய பிரதிநிதியாக இருந்தார், பரலோகத்திலுள்ள தம்முடைய பிதாவிடமிருந்து கேட்டவற்றை மட்டுமே அவர் சொன்னார், செய்தார். துன்பப்பட்டவர்களுக்கு
நற்செய்தியைக் கொண்டுவருவத ற்கும், உடைந்த இருதயத்தைக் கட்டுவதற்கும், பாவத்திற்கு அடி மைப்பட்டவர்களுக்கு விடுதலை யையும், சாத்தானால் அடிமைப்ப டுத்தப்பட்டவர்களுக்கு விடுதலை யையும் அறிவிப்பதற்கும் அவர் உண்மையில் கடவுளால் அபிஷே கம் செய்யப்பட்டதால், இந்த மகிமையான தீர்க்கதரிசனத்தை தமக்குப் பயன்படுத்த கிறிஸ்து தனித்துவமான தகுதிபெற்றி ருந்தார்.
பாபிலோனில் யூதர்களுக்கு விடுதலையை அறிவிக்க இறை வாக்கினர் ஏசாயாவுக்கு அதிகா ரம் அளிக்கப்பட்டு வழிநடத்தப் பட்டது போலவே, கடவுளின் தூத ரான கிறிஸ்துவும் தொலைந்து போன உலகத்திற்கு மிகவும் மகிழ்ச்சியான யூபிலியை (யூபிலி என்பது விவிலியத்தில் யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் கடைபிடிக்கும் ஒரு சிறப்பு ஆண் டாகும். இது ஐம்பது ஆண்டுகளுக் கு ஒருமுறை கொண்டாடப்படும் ஒரு ஓய்வுஆண்டாகும்). வெளியிட அதிகாரம் பெற்றார்.
இந்தப் பணிக்கு அவர் எவ்வாறு பொருத்தமாகவும் தகுதியுடனும் இருந்தார் என்றால்: கர்த்தராகிய தேவனுடைய ஆவி அவர்மேல் இருக்கிறது, கிறிஸ்துவின் ஆவி எப்போதும் அவர் மீது அளவில் லாமல் தங்கியிருந்தது; அவர் தனது தீர்க்கதரிசனப் பணியை நிறைவேற்றும்போது, ஒரு புறாவைப் போல ஆவி அவர் மீது இறங்கியது, (மத். 3:16) . அவர் மீது இருந்த இந்த ஆவி, அதே நற்செய் தியை அறிவிக்க அனுப்பியவர்க ளுக்கும் தூய ஆவிய அனுப்புகி றார். அவர்களுக்கு அவர்களின் பணியைக் கொடுத்தபோது, " பரிசுத்த ஆவியைப் பெறுங் கள், அதன் மூலம் அதை உறுதிப் படுத்துங்கள் என்று கூறினார்.. தூய ஆவி பெறாமல் திருப்பணி ஆற்ற முடியாது. அருள் பொழிவு பெற்றவர்களின் பரிசு - தூய ஆவி. இது கடவுள் அருளும் ஈவு.
2 தூய ஆவியின் இருப்பிடமே திருச்சபை.The Church is the dwelling place of the Holy Spirit.
திருதூதர் பணிகள் Acts 2:1-13.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! பெந்தெகொஸ்தே நாள்:
சீனாய் மலையில் நியாயப்பிரமா ணம் வழங்கப்பட்டதைக் கொண் டாடும் இந்த யூத பண்டிகை,இது கோதுமை அறுவடையின் முதல் பலன்களைக் கொண்டாடியது. முதல் பலன்கள் கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுக்கப்ப ட்டன.பெந்தெகொஸ்தே முதற்ப லன்களின் நாள் என்று அழைக் கப்படுகிறது ( எண்கள் 28:26 ). இது ஒரு புனித யாத்திரை பண்டிகையாகும். இந்த நேரத்தில், ரோமானியப் பேரரசு முழுவதும் வாழ்ந்த யூதர்கள் பண்டிகைக்கு பயணம் செய்திருப்பார்கள். யூத பாரம்பரியத்தில், இந்த பண்டிகை ஷாவவுட் என்றும் அழைக்கப்படு கிறது .ஷாவோத் என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம் "வாரங்கள்" அல்லது "ஏழுகள்", என்பதாகும். பரிசுத்த ஆவியின் வருகை க்கான வரலாற்று சூழலைவழங்குகிறது. இது அனைத்து தேசங்களுக்கும் நற்செய்தியை பரப்புவதற்கான திருச்சபையின் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது .பரிசுத்த ஆவியானவர் திருத் தூதர்களை வெவ்வேறு மொழி களில் பேச அதிகாரம் அளித்தார், பல்வேறு கலாச்சாரங்களையும் மொழிகளையும் சென்றடைய கடவுளின் திறனை நிரூபித்தார்.
எருசலேமில் கூடியிருந்த சீடர்கள், 120 பேருக்கும் பலத்த காற்று மற்றும் நெருப்பு நாக்குகளுடன் சேர்ந்து ஒரு வியத்தகு காட்சியில் பரிசுத்த ஆவியைப் பெற்றனர்.
பரிசுத்த ஆவியின் வருகை கடவு ளின் வல்லமையை நிரூபித்தது, மேலும் தேசங்களிடையே கடவுள் மகிமைப்படுத்தப்படும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் காட்டியது. பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளுக்கு வரங்களை அளித்து, திருச்சபையைக் கட்டி யெழுப்பவும், இழந்தவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும் உதவு கிறார்.பெந்தெகொஸ்தே அனுபவ ம் அப்போஸ்தலர்களை மாற்றி யது, அவர்கள் இப்போது அதிகார த்துடனும் தைரியத்துடனும் நற் செய்தியை பிரசங்கிக்க அதிகா ரம் பெற்றிருந்தனர். திருச்சபை விசுவாசிகளின்கூடாரம்.ஒருமித்து வாசம் செய்யும் புனித இடம். அது தூய ஆவியின் இருப்பிடம்.
பழைய ஏற்பாட்டு பெந்தெகொஸ் தே நாளில் இஸ்ரவேல் நியாயப் பிரமாணத்தைப் பெற்றார்கள்; புதிய ஏற்பாட்டு பெந்தெகொஸ்தே நாளில் திருச்சபை தூய ஆவியை முழுமையாகப் பெற்றார்கள்.
அவர்கள் அனைவரும் ஒரே இடத் தில் ஒருமனதாக இருந்தனர் : அவர்கள் ஒரே இதயத்தையும், கடவுள் மீது ஒரே அன்பையும், அவருடைய வாக்குறுதியில் அதே நம்பிக்கையையும், ஒரே புவியி யல் அமைப்பையும் பகிர்ந்து கொண்டு ஒன்றுகூடினர்.
திடீரென்று வானத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது :நெருப்பு போன்ற பிளவுபட்ட நாக்குகள் அவர்களுக் குத் தோன்றின,இயேசு பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினா லும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்ற யோவான் ஸ்நானகனின் தீர்க்கதரிசனத் துடன் இது தொடர்புடையதாக இருக்கலாம் ( மத்தேயு 3:11 ).
நெருப்பு எரியும் புதரிலும் (விடுதலை பயணம் 3:1-12 ) பாலைவனத்தில் உள்ள நெருப்புத் தூணிலும் ( வி. ப 13.21 ) கடவுளி ன் இருப்பை பிரதிபலிக்கிறது.
பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அமர்ந்தார் .
ஆவியானவர் அவர்களுக்கு அருளியபடியே, அவர்கள் வெவ் வேறு மொழிகளில் பேசத் தொடங் கினார்கள். . இவை அவர்களுக்கு ஒருபோதும் கற்பிக்கப்படாத மொழிகள், மேலும் அவர்கள் இந்த மொழிகளைப் பேசினார்கள்,
திருதூதர் பணிகள் 2 வசனம் 9-11 இல் பதினைந்து குறிப்பிட்ட தேசங்களைக் குறிப்பிடுகிறது , ஆனால் "வானத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தேசத்திலிருந்தும்" இன்னும் பலர் இருந்தனர் என்ப தையும் குறிக்கிறது.இவர்கள் ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்த வார்த்தையின்படி பேசினார்கள் .
அன்றைய காலத்தில் 120 பேர் தங்கக்கூடிய வீடுகள் அதிகம் இல்லை. இந்த மேல் அறை கோயில் முற்றத்தின் ஒரு பகுதி யாக இருந்திருக்க அதிக வாய்ப் புள்ளது. எனவே அன்பானவர் களே! ஆவியினால் நிரப்பப்படு வதற்கு, நாம் அறிந்த அனைத்து பாவங்களையும் அறிக்கையிட்டு, சுயத்திற்கு மரிப்பதன் மூலம் நம்மை வெறுமையாக்க வேண் டும். நாம் நம்மை முழுமையாகக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, படிப்படியாக அவரைச் சார்ந்து இருக்க வேண்டும் ஆவியினால் நிரப்பப்படுவது கிறிஸ்துவின் வார்த்தை நம்மில் வளமாக வாசமாயிருக்க அனுமதிப்பது என்றும் அழைக்கப்படுகிறது.
3.விடுதலைத் தரும் தூய ஆவி.The Holy Spirit that grants freedom".லூக்கா 4:16-21
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!
இயேசு, தன் சொந்த ஊராகிய நாசரேத் சபைக்குச் சென்று, தம்முடைய பணியைத் தொடங் கினார்.இயேசு வந்ததால் நாசரேத்தில் ஒரே பரபரப்பு! அவர் யோவானிடம் ஞானஸ்நானம் எடுப்பதற்காக நாசரேத்திலிருந்து போய் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகிறது. அதுவரை, அவர் ஒரு தச்சர் என்றுதான் அந்த ஊர் மக்களுக்குத் தெரியும். ஆனால் இப்போதோ, அவர் அற்புதங்கள் செய்கிறவர் என்று எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். அதனால், நாசரேத்தில் இருக்கும் மக்கள் இயேசு தங்கள் ஊரிலும் அற்புத ங்களைச் செய்வார் என்று எதிர் பார்க்கிறார்கள்.அங்கிருக்கிற எல்லாரும் “அவர் பேசிய கனிவா ன வார்த்தைகளை” கேட்டு ஆச்சரி யப்படுகிறார்கள். பிறகு, “இவன் யோசேப்பின் மகன்களில் ஒருவ ன்தானே?” என்று ஒருவருக்கொ ருவர் பேசிக்கொள்கிறார்கள். ஆண்டவர் மற்ற ஊர்களில் செய்த அற்புதங்களை தன் சொந்த ஊரி ல் செய்யவில்லை ஆண்டவருக்கு தெரியும் இம் மக்கள் இவரை ஏற்றுக் கொள்ளாத மக்கள். இவரைக் கொல்லத் துடிக்கும் மக்கள்.மருத்துவனே, நீயே உன்னைக் குணமாக்கிக்கொள்" என்பது ஒரு பழமொழி, இது, இயேசு நாசரேத்தில் உள்ள ஒரு யூதக் கூட்டத்தில் பேசும்போது, அவர் தனது சொந்த ஊரில் அவமானப்படுத்தப்பட்ட ஒரு மனிதர், ஒரு மருத்துவர், தன்னை குணமாக்கிக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக கூறிய போது, அவர் சொன்ன ஒரு வார்த்தை.இந்த பழமொழியின் பொருள் என்னவென்றால், ஒரு மருத்துவர் கூட தனது சொந்த நோயை குணமாக்கிக் கொள்ள முடியாவிட்டால், அவர் மற்றவர்க ளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க முடியும்?இந்த பழமொழி ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக் கிறது: ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை சரிசெய்ய முடியா விட்டால், மற்றவர்களையும் அவர் சரிசெய்ய முடியாது.
இயேசு ஆலயத்தில் வாசிக்க ஆரம்பித்தபோது, அவர் "கர்த்தரு டைய ஆவி என் மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை அனுப்பி னார்" என்று வாசிக்கிறார். அவர் கைதிகளுக்கு விடுதலை, குருடர்க ளுக்கு பார்வை, ஒடுக்கப்பட்டவர் களுக்கு விடுதலை, கர்த்தருடைய தயவு ஆண்டை அறிவிப்பதாகவும் கூறுகிறார். ஆண்டவர் ஓய்வு நாளில் தவறாமல் ஆலயம் செல் லும் பழக்கத்தை கொண்டிருந் தார்.கடவுளின் நாளில் கடவுளை வணங்கும் மக்களுடன் சேர இயேசு ஒருபோதும்தவறவில்லை.
பின்னர் ஆண்டவர், சாரபாத்தில் இருந்த விதவையைப் பற்றியும், சிரியரான நாமான் பற்றியும் பேசுகிறார்.பழைய ஏற்பாட்டின் நீதிமான்களான புற இனத்தாரை ஆண்டவர் இங்கு பேசியது நாசரே த் மக்களுக்கு பிடிக்கவில்லை. புற இனத்தைப் பற்றிய இந்த சாதகமான குறிப்பு, சொந்த ஊரில் உள்ள கூட்டத்தை புண்படு த்துகிறது மற்றும் இயேசுவின் உயிரைப் பறிக்கும் முயற்சிக்கு வழிவகுக்கிறது - ஆனால் ஆண்டவர் கர்த்தரின் ஆவியால் செயல்படுகிறார் கர்த்தரின் ஆவி எங்கேயோ அங்கு விடுதலை உண்டு. தூய ஆவியின் அருள் இல்லாமல் இறைப்பணி உலகில் ஆற்ற முடியாது. தூய ஆவியினா
ல் என்றும் வழிநடத்தப்பட ஆண்டவர் அருள் பொழிவாராக,
ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
Comments
Post a Comment