திரித்துவம்: அன்பின் குழுமம். (213) Trinity: Community of love.தொடக்க நூல் 18: 1-15, திரூப்பாடல் 97, 2 கொரிந்தியர் 13: 5-14, மாற்கு 1:1-11.திரித்துவ ஞாயிறு. Trinity Sunday.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த் துக்கள். திரித்துவ ஞாயிற்றின்
தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்
டிருக்கும் தலைப்பு, திரித்துவம்: அன்பின் குழுமம். (Trinity: Comm unity of love) , "திரித்துவம் என்றால் என்ன? திரித்துவம் என்பது,  கிறிஸ்துவ இறையியலின்படி இறைத்தன்மையில் ஒருவராக வும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி என மூவரா கவும் இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity)
எனப்படும்.இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பினும் தந்தை, மகனிடமிருந்தும் தூய ஆவியி டமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தையிடமிருந்தும் தூய ஆவியி டமிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமிருந்தும், மகனி டமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள்; மூவரும் மூன்று கடவுள் கள் அல்லர். (These are three persons of one God and the three are not three gods.) இவ்வுலக அனைத் தையும் படைத்த ஒரே கடவுள் தமது இறைத்தன்மையில் ஒருவ ராகவும், ஆள்தன்மையில் மூவரா கவும் விளங்குகிறார். தம்மையே மோசேக்கு கடவுள் வெளிப்படுத் தியது போது,  "இருக்கின்றவ ராக இருக்கின்றவர் நானே" என்றார். மேலும் அவர், "நீ இஸ்ர யேல் மக்களிடம், "இருக்கின்ற வர் நானே" I am that I am என்பவர் என்னை உங்களிடம் அனுப்பி னார் என்று சொல்" என்றார். 
(விடுதலைப் பயணம் 3:14) இதன் மூலம் இவர் தம்மிலேதாமாய் இருக்கிறார் He is himself in himself.
1.The Father: 
இறைத்தந்தையாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத் தின் முதல் ஆளாவார். இறை வெளிப்பாட்டில் இவர் படைப்பா ளராக காணப்படுகிறார்.
நம் திருவிவலியத்தில், தொடக் கநூல் 1:26ன் முற்பகுதியில் "அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம்.  (இங்கு "உண்டாக்குவோம்" என்பது தமிழில் "நாம் ஒரு செயலைத் தொடங்குவோம்" அல்லது "நாம் ஒன்றைத் உருவாக்குவோம்" எனப் பொருள்படும். ஒரு கூட்டு வினைச் சொல்ஆகும்.) வோம்  (We)  நாம்" என்ற காலப் பயனடையின் 
சுருக்கமாகும். ஆக கடவுள் படைப் பில் நான்( I ) என்று கூறவில்லை நாம்(we) என்றுதான் கூறுகிறார்.
நம் (we)உருவில்  உருவாக்கு வோம் என்றார்.அங்கு மூவொரு கடவுளின் ஒரே ஆள் தத்துவம் படைப்பில் இருந்ததை நமக்கு உணர்த்துகிறது.
கடவுள் தம் வார்த்தையால் (தொடக்க நூல் 1 ல்,) அனைத் தையும் படைத்து, தம் ஆவியால் அவற்றுக்கு இயக்கம் அளித்தார் என்று இதற்கு நாம் பொருள் கொள்ளலாம். இங்கு வார்த்தை என்பது இயேசுவைக் குறிக்கி றது. தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது; வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். (யோவான் நற்செய்தி 1:1,2)
2. The Son: இறைமகன் அல்லது மகனாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளாவார். இறை வெளிப்பாட்டில் இவர் மீட்பவராக காணப்படுகிறார்
3.The Holy Spirit: தூய ஆவி என்பவர் அதிபுனித திரித்து வத்தின் மூன்றாம் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவர் புனிதப்படுத்துபவராக காணப்படுகிறார்
அன்பின் குழுமம் என்றால்
 திருத்தூதர் யோவான் கூறுவது போல, 1யோவான் 5:7.ல், விண்ணகத்திலே சாட்சியிடுகிற வர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கி றார்கள்; இந்த ஒன்றாய் இருத்த லையே அன்பின் குழுமமாகும்.
 ஆண்டவராகிய நம் இயேசு கிறிஸ்து கூட, நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று  சொன்னார். என்னை கண்டவன் பிதாவே கண்டான் என்றும் சொன்னார்.மூவரும் அன்பின்
குழுமமாக ஒன்றினைந்து ஒன் றாக ஒரே கடவுளாய் செயலாற்று கின்றனர். இதன் நோக்கமே அன்புடைய சமுதாயத்தை இவ்வு லகில் உருவாக்குவதாகும்.
1.மூவொரு கடவுளின் வெளிப் பாடு.The Revelation of the Triune God". தொடக்க நூல். 18:1-15.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே விசுவாசகளின் தகப்பனா கிய ஆபிரகாம், மம்ரே (Mamre)
என்ற இடத்தில் தேவதாரு மரங் கள் நெருங்கி இருந்த அந்த ஊரில் வசித்து வருகிறார். இந்த மம்ரே மேற்குக் கரையில் (West Bank) உள்ள ஹெப்ரான் என்ற  நகரத்தில் அமைந்துள்ள பாலஸ் தீன நகராகும். எருசலேமிலிருந்து 19 மைல் தூரத்தில் உள்ளது.
இங்கு ஆண்டவர் தனிமனித னாக ஆபிரகாமிற்கு தோன்றுகி றார். (வசனம் 1), ஆபிரகாம் கண்
ணோக்கிப் பார்க்கின்றபோது,
மூன்று மனிதர் தன் அருகில் நிற்
க கண்டார். இவர்களை சந்திக்க ஓடி சென்று வணங்கி வரவேற் கின்றார். ஒருவராக தோன்றிய கடவுள் தன்னை மூவராக வெளிப் படுத்துவதை திரித்துவமாக கருதலாம். ஆனாலும் ஆபிரகாம் அவர்களை அழைக்கின்ற பொழுது என் தலைவரே! என ஒருமையில் அழைப்பதே பார்க்கிறோம்.  மூவரில் ஒன்றாக வெளிப்படுத்துவதை அவர் கண்களில் பார்த்த காட்சியை வைத்து நாம்  அனுமானிக்கலாம்.  (வசனங்கள் 1-3) அவ்வாறே விருந்துண்டு போகின்ற பொழுது தான் மீண்டும் வருவதாக ஆசி வழங்கி செல்கின்றார். கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கு த்தத்தை இன்னும் நிறைவேற்ற வில்லை. இஸ்ரவேல் சமூகம் அடையாளங்களை எதிர்பார்த்த சமூகம். ஆனால் ஆபிரகாம் ஆண்டவரிடம் எந்த அடையாளத் தையும் கேட்கவில்லை. ஆனால்,
ஆண்டவர், தன் திரித்துவ தோன் றலாக, ஆபிரகாமிற்கு கொடுக் கப்பட்ட வாக்குத்தத்தை உறுதிப் படுத்துகிறார். அவர் பொய் சொல் ல மனுஷர் அல்ல.
கிறித்துவின் அன்பர்களே!
தேவனுடைய நாமம் யாவே( YHWH) யாவே --- என்றால்  இருக்கிறவராகவே இருக்கி றேன். வி. ப 3:14
(YAHWEH--- He who is )யாவே என்பது ஒரு பொதுப்பெயர் அல்ல, தனிப்பட்ட பெயர். யாவே பெயர், விவிலியத்தில் 7000 தடவைகள் எழுதப்பட்டுள்ளது.திருவிவலியம்
 ஒரே தேவனை/கடவுளைப் (யாவே) பற்றியும் அந்த தேவனின் பரிசுத்தத்தைப் பற்றியும் கூறுகி றது. " பழைய ஏற்பாட்டில் திரித்துவம் என்ற சொல் நேரடி யாக கிடையாது. இந்தியாவி லேயே ஒரு இந்தியரால் எழுதப் பட்ட முதல்  இந்திய கிறிஸ்தவ இறையியல் முதல் நூலாக கருதப்படும் Precepts of Jesus - The Guide to Peace and Happiness புத்தகத்தை எழுதிய ராஜாராம் மோகன்ராய், (சமூக சீர்திருத்த வாதியும், சதி என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க பாடுப ட்டவர்) இவர் ஓர் இறை கோட் பாட்டாளர் (Unitarianism) அதாவது கடவுள் ஒருவரே. மேற்கத்திய தியலாஜியின் தந்தை என்று கருதப்படும் தெர்தூலியன் (Tertullian) ஒரு முக்கியமான ஆரம்பகால கிறித்துவ தியலாஜி, இவர் லத்தீன் மொழியில் "trinitas" (Trinity) என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர். காலம் கிபி155-160. ஜீவனுள்ள தேவனின் ஒன்றிணைந்த செய லாக்கத்தை திரித்துவத்தில் வெளிப்படுத்தியவர்கள். உலகில் இன்னும் திரித்துவ கொள்கையை ஏற்றுக் கொள்ளாத கிறித்துவ மத பிரிவினர்கள் உண்டு. ஆனாலும் தந்தை மகன் தூய ஆவியின் செயல்பாடு திருச்சபையின்ஆணி வேராய் அடிச்சுவடாய் உயிருள்ள தாய் செயலாற்றி கொண்டே வரு கிறது நம்மையும் செயல்படுத்து கிறது என்பதுதான் உண்மை.
2. திரித்துவ கடவுள் உங்களில் செயலாற்றுகிறாரா? Is the Triune God react in you? 2. கொரிந் தியர் 13:5-13.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிகளார் கொரிந்து பட்டினத்திற்கு மூன்று முறை பயணம் செய்கிறார் இத்திருமுகம் பவுல் அடிகளார் கிபி 55 ஆம் ஆண்டுகளில் மாசி டோனியாவிலிருந்து எழுதுகிறார் 
கொரிந்திய திருச்சபைக்குள் இருந்த பல்வேறு பிரச்சினைக ளைப் பற்றி பவுல் விளக்கினார், அவற்றில் பிரிவினைகள், ஒழுக் கக்கேடு மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் கோட்பாடு பற்றிய தவறான கருத்துக்கள் ஆகியவை அடங்கும் .  கொரிந் தியர்கள் பல பிரிவுகளாகப் பிரிக் கப்பட்டிருந்தனர், உறுப்பினர்கள் வெவ்வேறு தலைவர்களுடன் தங்களை இணைத்துக் கொண் டனர் என்ற உண்மையை பவுல் குறிப்பிட்டார். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு ஒற்றுமையாய் இருக்க வலியுறு த்தினார் நீங்கள் விசுவாசத்தில் இருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே சோதித்துப் பாருங் கள் . . என்று கேட்டார்.
 இந்த சிந்தனை ஏதேன்சில் தோன்றிய கிரேக்க தத்து வஞானி சாக்ரடீஸ் கிமு 470 -399 வாழ்ந் தவர்,  அவர்கள் "உன்னையே நீ அறிவாய்" என்பதுதான் உண் மையான அறிவு. அது தான் தன்னை அறியும் அறிவு என் பது! எந்த ஒரு மனிதரும் தன்னை த்தான் அறிந்தால் மட்டுமே சுற்றி உள்ள உண்மைகளை உள்ளது உள்ளபடி அறிய முடியும். வாழ்க் கையையும் வெல்ல முடியும்!! என்று கூறினார். தமிழகத்தில் கவிஞர் கண்ணதாசன் இதை உன்னையறிந்தால் உன்னை அறிந்தால் என்ற பாடல் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சங்கீதக்காரன், "இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்; என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும். 
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 139:23) என தன்னை அறிய உணர்த்துகிறார்.
 இதையே திருத்தூதர் பவுல் அடி களார், " உங்களை நீங்கள் சோதி த்துப் பாருங்கள்' என கொரிந்து திருச்சபை விசுவாசிகளை பார்த் து கேட்கிறார் நாமும் அந்த கேள் வியை நமக்குள் கேட்டுப் பார்ப் போம் நாம் யார் என்பதை சுய ஆராய்ச்சி செய்வோம்.
இயேசு கிறிஸ்து உங்களில் இருக்கிறாரென்று உங்களுக்குத் தெரியாதா? - நீங்கள் தகுதியற்ற வர்கள் இல்லையென்றால். நாங்கள் தகுதியற்றவர்கள் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இப்போது நீங்கள் எந்தத் தீமையும் செய் யாதபடிக்கு நான் கடவுளிடம் ஜெபிக்கிறேன், நாம் பெரும் பாலும் மற்றவர்களை ஆராயவும் சோதிக்கவும் மிகவும் தயாராக இருக்கிறோம், ஆனால் முதலில் - எப்போதும்  - நாம் நம்மை ஆராய் ந்து சோதிக்க வேண்டும். "அது தான் கொரிந்துவில் பிரச்சனை.
அவர்கள் பவுலை விமர்சித்தார் கள், தங்களைத் தாங்களே ஆரா யத் தவறிவிட்டார்கள்.
ஒரு கிறிஸ்தவரின் மிக முக்கிய மான பண்பாக அன்பின் முக்கிய த்துவத்தை பவுல் மீண்டும் மீண் டும் வலியுறுத்தினார்.   கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ இலட் சியங்களின்படி வாழ்வதன் முக்கி யத்துவத்தை பவுல் வலியுறுத்தி னார், இயேசுவின் உயிர்த்தெழு தல் நித்திய ஜீவனுக்கான நம்பி க்கையையும் மரணத்தின் மீதான வெற்றியையும் அளிக்கிறது என்பதை அவர் கொரிந்தியர்க ளுக்கு நினைவூட்டினார்.   மேலும்,
இந்த கடைசி அத்தியாயத்தில் அவர் மிக உறுதியாக விசுவாசிக ளிடம் கேட்பது:,"நீங்கள் விசுவாச த்தில் உறுதியாக இருக்கிறீர் களா?  என்று உங்களை நீங்களே சோதித்துக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்! என கேட்கிறார்.. நீங்கள் இயேசுவில் இருக்கிறீர் களா? என்று நீங்கள் அறியாவிட் டால், நீங்கள் சோதனையில்தோல் வியடையும்வரை உங்களைஅறிய மாட்டீர்கள்" என்று கூறுகிறார். பரிசுத்தவான்கள் அனைவரும் உங்களை வாழ்த்துகிறார்கள்" இந்தசொற்றொடர் திருச்சபையில் உள்ள அனைத்து விசுவாசிகளின் கூட்டு வாழ்த்துக்களை வெளிப் படுத்துகிறது.   திருத்தூதர் பவுல் அடிகளார் இந்த நிருபத்தை முடிக் கும் போது,' .ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளி ன் அன்பும் தூய ஆவியாரின் நட் புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! என திரித்துவ கடவு ளின் அருளும், அன்பும், நட்புறவும் செயலாற்றம் தன்மையை அவர் ஒவ்வொரு திருமுகத்தை முடிக் கும் போதும் வலியுறுத்துகிறார்.
3 மீட்பே திரித்துவத்தின் அடை யாளம்.  Redemption is the symbol of the Trinity.Mark மாற்கு1:1-11.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மாற்கு நற்செய்தியாளர் இயேசுவை கடவுளின் குமாரன், மேசியா மற்றும் உண்மையான ராஜா என்று நிறுவுகிறார், ஜோர்டான் நதியில் ஒரு சக்தி வாய்ந்த அறிவிப்பு மற்றும் ஞான ஸ்நானத்துடன் அவரது பொது ஊழியத்தைத் தொடங்குகிறார் . இது இயேசுவின் அதிகாரத்தை யும் தெய்வீக குமாரத்துவத்தை யும் நிறுவுகிறது, மேசியாவாக அவரது பங்கையும் அவரது பொது ஊழியத்தின் தொடக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.   இயேசுவை கடவுளின் குமார னாக அடையாளம் காட்டும் நற் செய்தியின் தொடக்க அறிவிப்பு வெறும் வரலாற்று உண்மை மட்டுமல்ல, முழு நற்செய்திக்கும் தொகுத்து அமைக்கும் நம்பிக் கையின் அறிக்கையாகும் 
கடவுளின் மகன்" என்ற பட்டம் மிகப்பெரிய மதிப்பை கொண்டு ள்ளது , இது கடவுளுடனான ஒரு சிறப்பு உறவை மட்டுமல்ல, இயேசுவின் தெய்வீகத்தன்மை மற்றும் அதிகாரத்தையும் குறிக் கிறது. மேசியாவின் வருகைக் கான தயாரிப்பாக மனந்திரும் புதல் மற்றும் ஞானஸ்நானம் பற்றி யோவான்ஸ்நானகன் பிரச ங்கித்ததன் விளைவாக இயேசு வின் ஊழியத்திற்கு ஒரு பாலமாக யோவானின் ஊழியம் முன்வைக் கப்படுகிறது.   
இயேசுவின் ஞானஸ்நானத்தின் கதை முக்கியமானது. பரிசுத்த ஆவியின்  வெளிப்பாட்டையும், பரலோகத்திலிருந்து இயேசுவை "அன்பான மகன்" என்று அறிவி க்கும் குரலையும்  முன்னிலைப் படுத்துகிறது, இது தெய்வீக உறுதிப்படுத்தல் மற்றும் ஆணை யிடுதலின் ஒரு முக்கிய தருண மாகும்.   இயேசுவை "அன்பான குமாரன்" என்று அறிவித்து, ஆவியானவரின் வம்சாவளியை அடையாளம் காட்டும் பரலோகத்தி லிருந்து வரும் குரல், கடவுளால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளரா கவும் இரட்சகராகவும் இயேசுவின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டு கிறது.   பிதாவாகிய தேவன் இயேசுவிடம் நேரடியாகப் பேசிய தாகக் கூறுகின்றன, "நீர் என் அன்பு மகன், உம்மில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" (லூக்கா 3:22b).என்ற வார்த்தை அவர் தேவகுமாரன் என்பதை உறுதிப்படுத்துகிறது.
அன்பானவர்களே! இறைவாக் கினர் மல்கியா தீர்க்கர்,  "இதோ! நான் என் தூதரை உங்களுக்கு முன்பாக அனுப்புகிறேன், அவர் உங்களுக்காக உங்கள் பாதையை ஆயத்தப்படுத்துவார். அவர் வனாந்தரத்தில் கூப்பிடும் ஒரு சத்தத்தைப் போல இருப்பார், 'கர்த்தருடைய பாதையை ஆயத் தப்படுத்துங்கள், அவர் வரும் பாதையைச் செவ்வைப்படுத்து ங்கள்'என திருமுழுக்கு ." யோவான் ஸ்நானகன் வனாந் தரத்தில் தோன்றி, ஒரு மனிதன் தனது பாவங்களுக்கு மன்னிப்பு பெறக்கூடிய மனந்திரும்புதலின் அடையாளமான ஞானஸ்நானத் தை அறிவித்தபோது இது நிறைவேறியது.
இயேசுவின் கதையை மாற்கு வெகு காலத்திற்கு முன்பே தொட ங்குகிறார். அது இயேசுவின் பிறப்புடன் தொடங்கவில்லை; வனாந்தரத்தில் யோவான் ஸ்நானகனுடன் கூட தொடங் கவில்லை; அது நீண்ட காலத்தி ற்கு முன்பே தீர்க்கதரிசிகளின் கனவுகளுடன் தொடங்கியது; அதாவது, அது நீண்ட காலத்திற்கு முன்பே கடவுளின் மனதில் தொடங்கியது.
நான் என் தூதரை உங்களுக்கு முன்பாக அனுப்புகிறேன், அவர் உங்களுக்காக வழியை ஆயத்தம் செய்வார். இது மல்கியா 3:1-ல் இருந்து எடுக்கப்பட்டது. 
 திருமுழுக்கு யோவான் இயேசு வை "கடவுளின் மகன்" என்று நிறுவுகிறார், மேலும் யோவான் ஸ்நானகரின் செய்தியில் மனந்தி ரும்புதல் மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத் துகிறார்.   திருமுழுக்கு யோவா னின் நற்செய்தி"   - மக்களின் வாழ்க்கையை மாற்றும் மகிழ்ச்சி மற்றும் மீட்பின் செய்தியாகும்.  இவற்றில், இயேசுவை சக்தி வாய்ந்த மேசியாவாகவும் கடவுளின் மகனாகவும் சித்தரிக் கும் அதன் நோக்கத்தை எடுத்துக் காட்டுகிறது, அவருடைய ஊழியம் தெய்வீக உறுதிப்படுத்தல் மற்றும் மனந்திரும்புதல் மற்றும் விசுவாச த்திற்கான அழைப்பால் தொடங்க ப்படுகிறது.   தந்தை மகன் தூய ஆவியின் கூட்டுறவு அன்பினா லான  ஆன சமுதாயத்தை உருவா க்க துணை புரிகிறது. திரித்துவத்தின்  சக்தியால்தான் மக்களை மனமாற்றம் செய்ய முடியும் என்பதை உலகப் புகழ் பெற்ற பிரசங்கியார் பில்லி கிரகாம் செய்தி நமக்கு முன் உதாரணமாக அமைகிறது. லூசியானாவின் ஷ்ரெவ் போர்ட்டில் பில்லி கிரஹாம் பிரசங்கம் செய்தபோது, ​​மதுபான விற்பனை 40 சதவீதம் குறைந்தது, திருவிவலியம் விற்பனை 300 சதவீதம் அதிகரித்தது. சியாட்டிலில் நடந்த ஒரு பொது கூட்டத்தின் போது, ​​அதன் முடிவி ல், "பலர் வரவிருக்கும் விவாக ரத்து நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன" என்று மிகவும் எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. 
 இதுதான் திருத்துவத்தின் மீட்பின் மகத்தான அன்பின் செயலாகும்.
 எந்த ஒரு பிரசங்கமும் மக்களின் மனதை மாற்றக் கூடியதாய் இரட் சிப்புக்கு ஏற்றவாறு கடவுளின் அன்பின் கூட்டுறவில் நெருங்கி வாழ உதவ வேண்டும் அதற்கு திரித்துவ கடவுள் நம்மை வழி நடத்துவாராக இருக்கிறார்.
கிறிஸ்தவத்தின் ஒரு முக்கிய கருத்தான திரித்துவம், கடவுள் மூன்று தனித்துவமான நபர்களில் ஒருவராக இருக்கிறார் என்ற நம்பிக்கையைக் குறிக்கிறது: தந்தை, மகன் (இயேசு கிறிஸ்து) மற்றும் பரிசுத்த ஆவி . இது ஒரு உடல் நிறுவனம் அல்ல, ஆனால் கடவுளின் இயல்பைப் பற்றிய இறையியல் புரிதல்.   ஒரே ஒரு கடவுள் மட்டுமே இருக்கிறார் என்பதை திரித்துவம் உறுதிப்படு த்துகிறது.ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்களாக இருந்தாலும், அவர்கள் தனித்தனி நிறுவனங்கள் அல்ல. அவர்கள் ஒரு இணக்கமான அன்பின் உறவில் இருக்கிறார்கள், அவர்களின் செயலே மீட்பாகும்.  கடவுளின் விருப்பத்தை நிறை வேற்ற ஒன்றாக வேலை செய்கி றார்கள்.  திரித்துவத்தின் இயல்பு மனிதகுலத்துடனான அவரது உறவு மற்றும் இரட்சிப்பின்செயல் முறையைப் புரிந்துகொள்ள கிறிஸ்தவர்களுக்கு திரித்துவம் அன்பின் சமுகம் அமைய உதவு கிறது.   திரித்துவத்தைக் கோட் பாட்டை பரப்புவதின் முக்கியl நோக்கமே, "கடவுளை மகிமைப் படுத்துவதே இதன் நோக்கம் என்பதையும், மூன்று நபர்களும் அவ்வாறு செய்ய ஒன்றிணைந்து அன்பினால் ஆன சமுதாயத்தை கட்டமைப்பதே அதன் ஒருமைப் பாட்டின் அடையாளமாகும். திரித்துவ கடவுளின் அருள் நம் மோடு இருக்க அருள் புரிவாராக ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.






Note: The Message is to be delivered
at CSI St. Peter's Church Chengalpet on 15th June 2025  















                         Trinity 
Trinity - Father, Son (Suffering Jesus), Holy Spirit (Dove)


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.