கிறிஸ்துகொண்ட இளைஞரின் செயல் வீரியம் (214) Youth with Christ in Action. தானியேல் 1:1-17, திருப்பாடல் 98, திருத்தூதர் பணிகள் 6:1-7, யோவான் 1:35-42. (இளையோர் ஞாயிறு ) Youth Sunday

முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.
 இவ்வாரம் திருச்சபைகள் இளை யோர் ஞாயிற்றை கொண்டாடுகி றார்கள். இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது 
"கிறிஸ்துகொண்ட இளைஞ ரின் செயல் வீரியம்" நமது திருவிவலியம் இளமைப் பருவத் தை ஆபத்து மற்றும் சவால்கள் நிறைந்த காலமாகக் குறிப்பிடு கிறது. "ஏனெனில் மனிதரின் இதயச்சிந்தனைஇளமையிலிரு  ந்தேதீமையைஉருவாக்குகின்றது.( தொடக்கநூல் 8:21)என்கிறது.  மேலும் திருத்தூதர்  பவுல் அடிக ளார் இளைஞ்சர் தீமோத்தேயுவை “இளமையின் இச்சைகளை விட்டு விலகி ஓடுங்கள்” (2 தீமோ. 2:22) என்று அறிவுறுத்தினார். அப்பொழுது திமொத்தேயுவுக்கு வயது 20 முதல் 30க்குள் இருக்கும். குறிப்பாக, 1 தீமோத்தேயு 4:12, தீமோத்தேயுவை யாரும் தனது இளமையை இழிவாகக் கருத அனுமதிக்கக் கூடாது என்று ஊக்குவிகிறது, அதாவது அவர் ஒரு இளைஞராகக் கருதப்படும் அளவுக்கு இளமையாக இருந்தார், ஆனால் வழிநடத்தும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தார்.   
 யார் இளைஞர்? Who is the youth?
இளைஞர்கள் என்பவர்கள் 
 ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரத்தின்படி  15 முதல் 24 வயது க்குட்பட்ட நபர்களாவர், ஆனால் இந்தியாவில் இளைஞர்கள் என்றால் 15-29 வயதுடையவர்கள் என்று வரையறுக்கிறது.   
 ஞானியாகிய சாலமன் அரசர்,
"இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இள மையின் நாள்களில் உள்ளக்களிப் புடனிருங்கள். மனம் விரும்புவ தைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ் வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள். 
(சபை உரையாளர் (சங்கத் திருவு ரை ஆகமம். பிரசங்கி) 11:9.
"இளைஞர் தம் நடத்தையை மாசற்றதாய்க் காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால் அன்றோ? 
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 119:9) இது இளைஞர்களுக்கான எச்சரிப்பின் வார்த்தை. இளைஞர் கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கை நடத்தப்படு ம்போது அது அர்த்தமுள்ளதாகி றது.
 இளைஞர்களுக்கு திருச்சபை யின் பங்கு என்ன? What is the Role of the church with regard to the youth?
 திருச்சபைகள் ஆன்மீக வளர்ச்சி, சமூகக் கட்டமைப்பு மற்றும் தலை மைத்துவ (Christian leadership) மேம்பாட்டிற்கான இடத்தை வழங்குவதன் மூலம் இளைஞர்க ளின் வளர்ச்சியில் தேவாலயங் கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
திருச்சபைகள் இளைஞர் ஊழியத் திட்டங்கள் ஜெபம், வழிபாடு மற்றும் வேதத்தைப் படிப்பதன் மூலம் இயேசு கிறிஸ்துவுடன் தனிப்பட்ட தொடர்பை வளர்ப் பதை நோக்கமாகக் கொண்டுள் ளன.   இதனால் தான் வாலிபர் ஞாயிற்றை திருச்சபைகள் கொண்டாடுகின்றன. வழிபாட்டுக் குழுக்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் வெளிநடவடிக்கை திட்ட ங்கள் (Outreach Programnes) போன்ற பல்வேறு பொறுப்ப களில் பணியாற்ற இளைஞர் களுக்கு தேவாலயங்கள் வாய்ப் புகளை வழங்க வேண்டும், வழங்குகின்றன.   இந்தப் பொறுப்புகள்மூலம்,இளைஞர்கள் மதிப்புமிக்க தலைமைத்துவ திறன்கள், தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் குழுப்பணி திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.   செய்தித்தாள்களில் வரும் குற்ற செய்திகளில் 5 பேரி ல் இரண்டு பேராவது கிறிஸ்துவ குற்றவாளிகள் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது  இதைக் குறித்து திருச்சபைகள் மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். Every church should have
a councelling cell to rehabilitate the youth. 
விவலியம் வழிகாட்டும் இளைஞர்கள்:The Biblical Role model Youths :
கிறித்துவுக்குள் பிரியமான வாலிபர்களே! விவலியம் நமக்கு மிக சிறப்பான வாலிபர்களை முன் மாதிரியாக வழிகாட்டுகிறது.
அவர்களின் வழி இறை வழி. கிறித்துவின் வழியில் செல்ல ஒரே வழி அது சத்திய வழி.
யோசேப்:
இளம் வயதிலேயே யோசேப்பு காட்டிய அசைக்க முடியாத விசுவா சத்தையும் உத்தமத்தையும் வேதம் எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக போத்திபாரின் மனைவியுடனான அவரது தொடர்புகளிலும், "இந்த வீட்டில் என்னைவிட அதிகாரம் பெற்றவர் ஒருவருமில்லை. நீங்கள் அவருடைய மனைவியா யிருப்பதால், உங்களைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இருக்கவில்லை. இந்த மாபெரும் தீச்செயலைச் செய்து, கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?" என்றார். (தொடக்கநூல் 39:9)
 கனவுகளுக்கு அவர் அளித்த விளக்கத்திலும்.இவை அனைத் தும் அவருக்கு 17 வயதாக இருந்த போது நடந்தது ( தொட. நூல் 37:2,)
தாவிது:
தாவிது ​​பெத்லகேமைச் சேர்ந்த ஒரு மேய்ப்பனாக இருந்தார், இளம் மேய்ப்பனாக கோலியாத் தை எதிர்கொண்டதில் அவரது துணிச்சலுக்குப் பெயர் பெற்ற தாவீது, இளைஞ்சராக இருக்கு ம்போதே அரசராக அபிஷேகம் செய்யப்பட்டார். இசைத்திறன் 
அவர் வீணை வாசிப்பதில் திறமையானவராக இருந்தார், இந்த இசையே அவரை சவுல் ராஜாவின் அரசவைக்குக் கொண்டு வந்தது மற்றும் கடவுள் பக்தி ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர் . 
சாமுவேல்:
அவன் ஒரு சிறுவனாக இருந்த போது, சாமுவேலை ஷிலோவில் உள்ள கோவிலில் கடவுளின் சேவைக்காக அவரது தாயார் அன்னாள் அர்ப்பணித்தார், ​​தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, தீர்க்கதரிசியாகத் தன் ஊழியத் தைத் தொடங்கினான்.   சாமுவேலைப் போலவே, நம்மில் பலருக்கும் கடவுளின் குரலைப் பற்றிப் பரிச்சயமில்லை. கர்த்தரின் குரலைக் கேட்க நம் செவியை தூய்மைப்படுத்துவோம் சாமுவேல் கடவுளின் செய்திக ளை மக்களுக்கு வழங்கும் ஒரு தீர்க்கதரிசியாக மாறினார். கடவுள் உயர்த்தினார்.
எஸ்தர்:
எஸ்தர் பாரசீக புலம்பெயர்ந்தோர் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் யூதப் பெண், ராஜாவின் ஆதரவை ப் பெறுகிறாள், ராணியாகிறாள், அரசவை அதிகாரி ஆமான் பேர ரசின் அனைத்து யூதர்களுக்கும் எதிராக ஒரு படுகொலையை அங்கீகரிக்க ராஜாவை வற்புறுத் தும்போது யூத மக்களை அழிவிலி ருந்து காப்பாற்ற தனது உயிரைப் பணயம் வைக்கிறாள்.
தானியல்:
பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட தானியைல்,  அரசன் சைரஸ்சின் சிறப்புணவினாலும், அவன் பருகி வந்த திராட்சை இரசத்தினாலும் தம்மைத் தீட்டுப்படுத்திக் கொள் ளலாகாது என்று தானியேல் தம் உள்ளத்தில் உறுதி செய்துகொண் டார்; அவ்வாறே தாம் தீட்டுப்படாதி ருக்க அலுவலர் தலைவனிடம் அனுமதி கேட்டார். (தானியல் 1:8)
அவரும் அவருடைய தோழர்களும் (சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ) மரணத்தை எதிர்ப்பட்ட போதும் கூட தங்கள் விசுவாசத் தை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டனர்.   
எரேமியா:
இளம் வயதிலேயே தீர்க்கதரிசி யாக அழைக்கப்பட்ட அவர், யூதா மக்களுக்கு கடவுளின் செய்தி களை அறிவித்தார் யூதா மக்க ளின் இருதயங்கள் கடினப்பட்டிரு ந்தாலும், அவர் தேவனுடைய சத்தியங்களை இடைவிடாமல் பேசினார்
 உலக திருச்சபையின் தாய் மேரி: St. மேரி, the Mother of the
World Churches.
ஒரு இளம் பெண்ணாக,(13/ 14வயது) அவர் இயேசுவின் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஒரு பக்தியுள்ள மற்றும் உண் மையுள்ள நபராக சித்தரிக்கப் படுகிறார் விசுவாசத்தையும் பணிவையும் வெளிப்படுத் தினார்.   பெந்தகோஸ்தே நாளிலே தூய ஆவி அருளும் வேளையில், திருத்தூதர்களுடன்  "சில பெண்களோடும், இயேசு வின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோ டும் இணைந்து ஒரே மனத் தோடு இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். 
(திருத்தூதர் பணிகள் 1:14)
 தூய ஆவியை பெற்ற அன்னை மரியாள் திருச்சபையின் தாயாக இருப்பதில் நமக்கு மகிழ்ச்சி அல்லவா.
அன்பு வாலிபர்களே!  இவர்கள் தான் நமக்கு உண்மையான முன்மாதிரிகள் (Role Model) இவர்களைப் பின்பற்றுவர்களே 
கிறிஸ்துகொண்ட இளைஞர்கள்.
நீங்களில் பரிசுத்த ஆவியினாலும் ஞானத்தினாலும் நிறைந்தவர் களாக அறியப்பட வேண்டும்.
1.செயல் வீரியம் கொண்ட தானியேல். Daniel, the Active one. (தானியேல் 1:1-17)
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! பாபிலோனுக்கு சிறைபிடிக் கப்பட்ட இளம் யூத ஆண்கள் தானியேல், அனனியா (சாத்ராக்), மிஷேல் (மேஷாக்) மற்றும் அசரியா (ஆபேத்நேகோ) ஆகியோ ர் பாபிலோனிலும் தங்கள் தூய வாழ்க்கையில் நிலைத்திருக்கத் தீர்மானித்தனர். தானியேல் என்னும் பெயருக்கு "கடவுள் என் நடுவர்" என்ற பெயருக்கு ஏற்றவாறு கடவுளை முழுமையாக நம்பிய ஒரு இளைஞன்.புதிய சூழ்நிலைகள், மதம், கலாச்சாரம் அல்லது உணவுப் பழக்கவழக் கங்கள் அவர்களைச் சோதிக்கத் தவறி விட்டன. உணவு மற்றும் திராட்சை பானங்களில் கூட அவர்கள் வித்தியாசமாக இருந் தனர். இன்றைய இளைஞர்கள் வேறு நாடு, கலாச்சாரம் மற்றும் மொழியில் தங்க வேண்டிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது, ​​இந்த யூத இளைஞர்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும் என்பதை தன் கரைபடாத வாழ்வின் மூலம் நிரூபித்தனர். தானியேலும் அவருடைய தோழர் களும் கடவுள்மீது அசையாத நம்பிக்கை (Unwavering faith) கொண்டு அவர்தம் கட்டளைக ளுக்குப் பணிந்து நடந்ததால் தங்கள் எதிரிகளை மேற்கொண் டனர். கடவுளே உண்மையான தெய்வம். என்பதை அவர்கள் தங்கள் சூழ்நிலையில் நிரூபித் தது போல, தற்போதைய இளை ஞர்களும் அதையே செய்யத் தயாராக இருக்க வேண்டும்.
2. செயல் வீரியம் கொண்ட திருத்தூதர்கள். The Apostles, the active one.  திருத்தூதர் பணிகள் 6:1-7 
 கிறிஸ்துவுக்குள் பிரியமான திருச்சபையின் பொறுப்பாள ர்களே! முதலாம் நூற்றாண்டு திருச்சபையில் எருசலேமில் உள்ள திருச்சபையில், கிரேக்க மொழி பேசும் யூத விதவைகளு க்கு, எபிரேய மொழி பேசும் யூத விதவைகளைப் போல உணவு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. திருச்சபைகள் விசுவா சிகளின் கூடாரம் இங்கு பிரிவி னைகளோ, சாதிகளோ, உயர்ந்த வரோ, தாழ்ந்தவரோ என்ற பாகு பாடுகள் கூடாது. இந்த பிரச்சனை யை தீர்க்க, திருத்தூதர்கள் ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்த னர்.அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கோலா, தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து (திருத்தூதர் பணிகள் 6:5)பின்னர் அவர்கள் ஊழியர்கள்- டீக்கன் என்று அழைக்கப்பட்டனர். 
இவர்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றவர்களாகவும், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவர்களாகவும், ஞானமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.The Church needs these types of youths. Are you the one? இந்த ஏழு பேர் உணவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையை கவனித்துக் கொண்டார்கள், இதனால் திருத்தூதர்களால் தேவனு டைய வார்த்தையை பிரசங் கிப்பதில் கவனம் செலுத்த முடிந்தது. அன்பானவர்களே திருச்சபையில் எழும் சில சட்ட பிரச்சனைகளுக்கு நாம் நீதிமன்ற ங்களை நாடி, திருத்தூதர்கள் செய்ய வேண்டிய பணிகளை நாம் கெடுக்கின்றோம்.  இதை நாம் ஏன் இந்த ஏழுபேர்களை போல,  பேசி தீர்க்க கூடாது. இது நமக்கு இக்காலத்தில் மிகவும் பொருத் தம். திருச்சபைகள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது. இதனால், ஆதி திருச்சபையின் வளர்ச்சி, திருச்சபையில் தேவனு டைய வார்த்தை மேன்மேலும் பரவியது, சீடர்களின் எண்ணிக் கை பெருகியது.திருச்சபையில் எழும் பிரச்சனைகளை தீர்க்க, திருத் தூதர்கள் எவ்வாறு ஞானத் துடன் செயல்பட்டார்கள் என்ப தையும், ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதன் Union is strength முக்கியத்துவத்தையும் காட்டு கிறது. திருச்சபையின் வளர்ச்சி க்கு, பிரச்சனைகளை தீர்ப்பதும், தேவனுடைய வார்த்தையை பிரசங்கிப்பதும் அவசியமாகும். இன்றைய இளைஞர்கள் கிறிஸ் துவுடன் இணைந்து செயல்படுவ தற்கு அவர்கள் முன்மாதிரிகள். அவர்களில் ஒருவரான ஸ்தேவான், (the first martyr for Christ) நற்செய்திக்காக ஒரு தியாகியானார். அதே போல், பிலிப்பு ஒரு மிஷனரியாக சமாரியாவில் ஆவியால் நிரப் பப்பட்ட ஊழியத்தைச் செய்தார். சமாரியா முழுவதும் கிறிஸ்துவை நம்பி ஞானஸ்நானம் பெற்றார் (திரு தூதர் 8:8-17). பிலிப்பு மூலம், எத்தியோப்பியா ராணியின் முக்கியமான அதிகாரியாக இருந்த ஒரு மந்திரி நற்செய்தி யை கேட்டார், ஆப்பிரிக்காவில் முதல் திருச்சபை நிறுவப்பட்டது (திருதூதர் பணிகள்8:26-40).
எனவே, ஒரு மனிதனின் இளமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த து. உங்கள் இளமை பருவத்தில் படைப்பாளரை நினைவில் கொள்ளுமாறு பிரசங்கி நமக்கு நினைவூட்டுகிறார் (பிரசங்கி 11: 9; 12: 1). இளமைப் பருவத்தில் தூய வாழ்க்கையை நடத்த பவுல் அடிகளார் அறிவுறுத்துகிறார். 
இப்பருவத்தை வெறுக்கக்கூடாது. கடவுளை மையமாகக் (God centred)  கொண்ட மற்றும் சமகால த்தில் இளம் தலைமுறையினர் நிறைய சவால்களை எதிர் கொள் கின்றனர். பல சோதனைகள் அவர்களின் ஆன்மீகத்திற்கு சவால்களை எழுப்புகின்றன. இதை திருச்சபைகள் மறந்து விடக்கூடாது  அவர்களுக்கான பணியை நாம் முன்னிறுத்திச் செல்ல வேண்டும் இது நம்முடைய தலையாய கடமையாகும். காணாமல் போன ஆடுகளைப் போல அலைந்து திரியும் இளைஞர்களை தேடி கண்டுபி டித்து ஆலோசனை கூறுவது திருச்சபையின் கடமை அல்லவா?
 ஒரு சமூகம் அல்லது தனிநபரின் வாழ்க்கையில் சரியான வழி காட்டுதல் மற்றும் அறிவுரை இல்லாதபோது, அவர்கள் தவறா ன வழிகளில் செல்ல வாய்ப்பு ள்ளது. இது அவர்களின் நடத்தை யில் எதிர்மறையான விளைவுக ளை ஏற்படுத்தலாம், மேலும் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய முடியாமல் போகலாம். 
 எனவே, திருச்சபையே கவனம் கொள். Prevention is better than cure.
 3. செயல் வீரியம் கொண்ட அந்திரேயர். Andrew, the active one.  (யோவான் 1:35-42)
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருமுழுக்கு யோவானின்  சீடரான அந்திரேயா.   கலிலேயா வின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர், இவர் புனித பேதுரு வின் சகோதரர் மீன் பிடித்து வந்தார். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! கடவுளின் ஆட்டுக் குட்டி!" என்றார் . இது அவர் உள்ளத்தில் மாற்றியது கிறிஸ்து வைக் கண்டபோது, ​​யோவானை விட்டு இயேசுவைப் பின்தொடர்ந் தார். இயேசுவின் அழைப்புக்கி ணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார்.மறுநாள் நான் மெசியாவை கண்டேன் என்று தன் சகோதரர் பேதுருவிடம் கூறியவர். கிறிஸ்துவைச் சந்தித் தவர்கள், அந்திரேயாவைப் போல வே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், மற்றவர் களையும் இயேசுவிடம் கொண்டு வர வேண்டும். இளைஞர்கள் கிறிஸ்துவுடன் செயலில் இருக்க முடியும். கிறிஸ்துவை கண்ட முதல் சீடர் அந்திரேயா.கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்க ளை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே. இவரால் 5000 பேருக்கு ஆண்டவர் உணவளிக்க முடிந்தது.எருசலேம் திருகோவிலின் அழிவை முன்ன றிவித்த போது 'அழிவு எப்போது வரும்?' என கேட்டவர் இவரே.
எருசலேமில் பண்டிகையில் இருந்த சில கிரேக்கர்கள் இயேசுவின் சீடரான பிலிப்பை அணுகி, இயேசுவைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். பின்னர் பிலிப்பு, அந்திரேயாவுடன்  சேர்ந்து , இந்த வேண்டுகோளை இயேசுவிடம் தெரிவித்தார்.   அவர்
 கிரேக்கர்களை ஆண்டவருடன் கொண்டு சென்றவர் இந்த அந்திரேயா தான். இவர் எவ்வாறு மக்களை ஆண்டவரோடு கொண் டு சென்றாரோ, அவ்வாறே நாம் இவ்வுலக மக்களை ஆண்டவ ரோடு கொண்டு சேர்க்க கடமைப் பட்டுள்ளோம். Andrew was
a bridge between God and the people. சீடர் பிலிப்புக்கு ஆண்டவரிடம் நேரடியாக செல்ல தயக்கம் இருந்தது ஆனால் அந்திரேயா நேரடியாக ஆண்டவரிடம் சென்றார். முதலில் பேதுருவை ஆண்டவருடன் கொண்டு சென்றார். அடுத்து கிரேக்கர்களை ஆண்டவரிடம் கொண்டு சென்றார். ஐந்து அப்பம் இரண்டு மீனை கொண்டு ஆண்டவர் அற்பு தம் செய்ய அந்த சிறு பையனை யும் ஆண்டவரிடம் கொண்டு சென்றவர்.vஅந்திரேயா, இயேசுவின் போதனைகளைப் பரப்ப, பல இடங்களுக்குச் சென்று மறைப்பணி செய்தார். அவர் மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா போன்ற இடங்க ளில் நற்செய்தியை அறிவித்தார். பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, அந்திரேயா எக்ஸ் வடிவ சிலுவை யில் அறையப்பட்டு கொல்லப்பட் டார். திருச்சபைகள் இவர் தியாகத் தை மறக்காமல் நவம்பர் 30 ஆம் தேதி புனித அந்திரேயாவின் திருநாளை  கொண்டாடுகிறார் கள். அந்திரேயா நமக்கு ஒரு முன்மாதிரி. மக்களை  கடவுளிடம் கொண்டு செல்லும் ஒரு வழியாக (Channel )நாம் உலகில் செயல்படு வோம். 
கிறிஸ்துகொண்ட இளைஞர் களாய், செயல் வீரியத்துடன் செயல்படுவோம் என இந்த இளையோர் ஞாயிற்றில் உறுதி மொழி எடுப்போம். ஆண்டவர் அருள் நம் அனைவருக்கும் கூட இருப்பதாக ஆமென்.


Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer.

www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.













புனித அந்திரேயா சிலுவையில் அறையப்படல்.நன்றி.wiki

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.