இழப்பை என்ணாது ஈதல் (216) Giving Without Counting The Cost. தொடக்க நூல்: 13:8-16, திருப் பாடல்கள்:15, 2.கொரிந்தியர் 8:1-15, மாற்கு 14: 3-11.
முன்னுரை : கிறிஸ்துவுக்கு பிரியமான அன்பர்களே! உங்க அனைவரு க்கும் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, இழப்பை என்ணாது ஈதல். (Giving Without Counting The Cost.) கடவுளுக்கு "இழப்பை எண்ணா மல் கொடுப்பது" என்பது நம் நேரம், வளங்கள் அல்லது அன்பை இலவசமாக வழங்குவதாகும், அதற்கு ஈடாக நமக்கு என்ன கிடை க்கும் என்பதைக் கருத்தில் கொள் ளாமல் . தாராள மனப்பான்மை மற்றும் தன்னலமற்ற கொடுப்பை வலியுறுத்துகிறது , இது கிறிஸ் துவின் தியாக அன்பைப் பிரதி பலிக்கிறது. இக்கருத்தை இறை வேண்டலாக வலியுறுத்தியவர் முதன் முதலாக இயேசு சபையி னை ஆரம்பித்த புனித இக்னே ஷியஸு லயோலாவின் கருத் தாகும். (To Give and Not to Count the Cost - Ignatian Spirituality) தனிப்பட்ட ஆதாயம் அல்லது கணக்கீட்டால் தூண்டப்படாத கொடுக்கும் மனப்பான்மையை வலியுறுத்துகிறது. இழப்பை கணக்கிடாமல் கொடுப்பது என் பது உண்மையான, தன்னலமற்ற தாராள மனப்பான்மை பற்றியது. இது தியாகத்தை அடிப்படையாக கொண்டது. கடவுளால் அறிவுறுத்...