அருட்பணி : எங்கிருந்தும் எவ்விடத்தும் (217.) Mission: From Everywhere to Every where. 1அரசர்கள் 17: 1-16, திருப்பாடல் 107: 1-15, கலாத்தியர் 2: 1-10, மத்தேயு 13: 47-52. அருட்பணி ஞாயிறு :Mission Sunday.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும், மெசியா வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ் த்துக்கள். இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
"அருட்பணி : எங்கிருந்தும் எவ் விடத்தும்" Mission: From Every where to Every where.
அருட்பணி (Mission) என்ற வார் த்தைக்கு அனுப்பு (to send)என்று பொருள்படும். இது லத்தின் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது. (missionem (missio), meaning 'act of sending' or mittere,)கிரேக்க வார்த் தையானஅப்போஸ்டெல்லோவுடன் (apostello) ஒத்திருக்கிறது. நமக்கு ஆங்கிலத்தில் "அப்போஸ்தலர்" (திருத்தூதர்கள்) 12 அப்போ ஸ்தலர்களும் திருச்சபையின் அஸ்திவாரக் கற்களாக (Foundati on Stone) தனித்துவமான அதிகா ரத்தைக் கொண்டுள்ளனர், அருட்ப பணியை முதன் முதலில் பயன் படுத்தியவர்கள் இயேசு சபை யினர் (Jesuit missionaries) இவர் கள் வெளிநாடுகளுக்கு சென்று திருச்சபைகள், பள்ளிகள், மருத்து வமனைகளை நிறுவி அருட்பணி யாற்ற அனுப்பப்பட்டனர்.
இன்று கிறிஸ்தவம் ஆல் போல் தழைத்து நிற்பதற்கு பெரும்பங் காற்றிய அருட்பணியாளர்களை எப்போதும் நன்றியுடன் நினைவு கூரவேண்டியது நம் கடமையாகும் "கிறிஸ்துவை மாதிரியாய்க் கொண்டு அருட்பணியாற்று வது தான் மிகச் சிறந்த அருட் பணி" என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஒரு குறிப்பிட்ட பணிக் காக அனுப்பப்பட்ட ஒருவரை ஒரு மிஷனரியாக இருப்பது என்பது ஒரு அப்போஸ்தலராக இருப்ப தாகும், அதாவது "அனுப்பப்பட் டவர்".
புதிய ஏற்பாட்டில் அருட்படியா ளர்கள். The Missionaries in the New
Testament.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிக ளார் இயேசுவின் முதல் சீடர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் தன்னை ஒரு அப்போஸ்தலன் என்று அழைத்துக் கொள்கிறார். பர்னபாஸ் ( திருத்தூதர் Acts14:14 )
இயேசுவின் சகோதரர் யாக்கோபு ( கலா. 1:19 ), அப்பொல்லோஸ் ( 1 கொரி. 4:6–10 ), ஒருவேளை ஆண் ட்ரோனிகஸ் மற்றும் ஜூனியா ( ரோமர் 16:7 ,) உட்பட பலர் இந்தப் பெயரைப் பெறுகிறார்கள்.
எருசலேமில் துன்பப்படும் விசுவா சிகளுக்கு நிவாரணம் அனுப்பும் போது, அவர்கள் சார்பாகச் சென் று விசுவாசிகளை ஊக்குவிக்க "தூதர்களை" ( அப்போஸ்டலோய் ) நியமிக்கிறார்கள் ( 2 கொரி. 8:19–23 ).இந்தக் குறிப்புகளிலிருந்து, கிறிஸ்துவின் பணியை நிறை வேற்றுவதில் ஒரு குறிப்பிட்டபொறுப்புடன் திருச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப் பட்டவர்களைக் குறிக்க "அப்போ ஸ்தலன்" என்ற சொல் புதிய ஏற் பாட்டில் பயன்படுத்தப்பட்டதாக காண்கிறோம்.
எல்லோரும் அருட்பணியாளர் களா? Are all Missionaries?
அன்பானவர்களே மத்தேயு நற்செய்தி 28:18–20 ன்படி, அனை த்து விசுவாசிகளுக்கும் பெரிய ஆணையம் (கட்டளை) வழங்கப்ப ட்டது என்ற அனுமானத்தின் அடிப்படையில், "ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரு மிஷனரி, ஒவ்வொரு மிஷனரியும் கடவு ளின் சீடர்கள் " என்ற கோட்பா ட்டின் படி , அருட்பணியாளர்க ளாய் இவ்வுலகில் அனுப்பப்ப ட்டிருக்கிறோம். அருட்பணியா ளர்கள் ஒரே இடத்தில் அருட்ப பணியாற்ற அழைக்கப்படவில் லை. அவர்கள் ஊர்கள் தோறும், நாடுகள் தோறும் அருட்ப பணி யாற்ற அழைக்கப்பட்டவர்கள்.
எல்லா கிறிஸ்தவர்களும் சேவை செய்ய அழைக்கப்படுகிறார்கள் ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் அருட்பணையாளர்கள் அல்ல.
ஒரு திருச்சபை ஒருவரை அனுப்பாவிட்டால் அருட்பணி யாளராக முடியாது.
பிரியமானவர்களே! அனுப்புதல்
என்பது கடவுளின் கோரிக்கை, இறைவாக்கினர் ஏசாயாவைப் பாரத்து கேட்டது,"யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக் காக யார் போவார்?" என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, "இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்" என்றேன்.(எசாயா 6:8)
இதன் அடிப்படையில்தான் அருட் பணி நடைபெருகிறது. அருட்பணி
யாளர்கள் அனுப்பபடுகின்றனர்.
எங்கிருந்தும் எவ்விடத்தும்
Everywhere to Every where:
அன்பர்களே! எங்கிருந்தும் எவ்விடத்தும் அருட்பணியானது செயல்படுத்த வேண்டும். அதற்கா கத்தான் அருட்பனையாளர்கள் அனுப்பப்படுகிறார்கள்
ஜான் ஆலன் சாவ் (John Allen Chau )நவம்பர் 17, 2018 ஆண்டில் வடக்கு சென்டினல் தீவுக்குச் (அந்தமான் )சென்ற ஒரு அமெரிக் க நற்செய்தி மற்றும் அருட்பணி யாளர்.அவருக்கு 26 வயது. இறை யியலில்முதுகலை பட்டம் பெற்றவர். அவர் சென்டினல் பழங்குடியிருக்கு கிறிஸ்துவை அறிவிக்கும் முயற்சியில் ஈடுபடு ம்போது அவர் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். எங்கிருந்தும் எவ்விடத்தும்அதாவது அமெரிக்காவில் இருந்துஅந்தமான் வரை அருட்பபணியாற்ற அனுப்பப்பட்ட ஜான் ஆலன் சாவ்.
ஒரு கோதுமை மணியாக மண் ணில் விழுந்து மடிவது, ஒரு மனி தன் தனது சுயநலத்தை விட்டு, பிறருக்கு சேவை செய்ய முன்வர வேண்டும் என்று அருட்பணியாற் றியவர்.
1. இறைவாக்கினர் எலியா வின் அருட்பணி : The Mission of the Prophet Elijah. 1 Kings 17:1-16.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!:இறைவாக்கினர் எலியா ("யாவே என் கடவுள்") என பொருள்படும். அவர்கள் இஸ்ர வேலரின் அரசர்கள் காலத்தில் (கி.மு 9 நூற்றாண்டு) இறைவாக் குறித்தவர்.இவர் கிலயாதில் (Gilead)(ஒரு வரலாற்றுப் பிரதே சம். இது யோர்தான் நதிக்கு கிழக்கே உள்ள பகுதி ஆகும். இது தற்சமயம் யோர்தானில் (Jordon) உள்ளது. யோசுவா புத்தகத்தில் மனாசேயின் புதல்வர்களுக்கு வழங்கப் பட்ட நிலங்களில் ஒன் றாகும்)
இங்கு குடியிருந்த திஸ்பே ஊரைச் சார்ந்த எலியா ஆகாபு அரசனிடம், "நான் பணியும் இஸ்ரயேலின் கடவுளான வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் வாக்கினாலன்றி, வரும் ஆண்டுகளில் பனியோ மழையோ பெய்யாது" என்றார்.
ஏனெனில்,ஆகாபின் அரசாங்கம் பாகால் மற்றும் பிற கடவுள்களி ன் வழிபாட்டை அதிகாரப்பூர்வ மாக ஆதரித்தது. பாகாலின் பூசாரிகளாலும், தோப்புகளின் பூசாரிகளாலும் தேசம் நிரம்பி வழிந்தது -கடவுளின் இதயத்தை ஆகாப் அரசன் மிகவும் புண்படுத் தியிருந்தான். சீதோன் நாட்டு இளவரசியான யேசபேலை அவன் மணம் செய்திருந்தான். இவள் ஃபீனீசியாவின் டயர் மற்றும் சிதோனின் ( இயேசு மக்கள் கூட்டத்திலிருந்து தப்பி த்து, ஓய்வெடுக்கவும், தன்னை யாரும் கவனிக்கப்படாமல் இருக் கவும் ஒரு இடத்தைக் கண்டுபிடிக் க தீரு மற்றும் சீதோனுக்குச் சென்றார். மத்தேயு 15:21-28) ஆட்சியாளரான எத்பாலின் மகள். யேசபேல் இஸ்ரவேலில் பாகால் வழிபாடு ஓங்க வேண் டும்... கர்த்தரின் வழிபாடு ஒழிய வேண்டும்... என்பதில் அவனு டைய மனைவி குறியாக இருந் தாள். சீக்கிரத்திலேயே ஆகாப் அவளுடைய கைப்பாவை ஆகியிருந்தான். பாகாலுக்கு ஒரு கோயிலையும் பலிபீடத்தையும் கட்டியிருந்தான், இந்தப் பொய் மத வழிபாட்டுக்கு மக்களை வழிநடத் தியிருந்தான்.இஸ்ரவேலர் கர்த் தரை மறந்தார்கள்.
ஆனாலும்,ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்களில், பாகாலுக்கு முழங்காற்படியிடாமலும், கையை முத்தமிடாமலும் இருந்த ஏழாயி ரம் பேர் மட்டுமேஎஞ்சியிருந்தனர்.
கடவுளுடைய வார்த்தையின்படி எலியா, இஸ்ரேலில் கடுமையான வறட்சியை இறைவாக்குரைத்
தார் மழை பெய்யக்கூடாது என்று அவர் ஊக்கமாக விண்ணப்பித் தார். மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியில் மழை பெய்யவில்லை.
இது, இயற்கையின் மீதும், கடவு ளின் கட்டுப்பாட்டையும், ஆகாபின் விக்கிரகாராதனைக்கு எதிரான தீர்ப்பையும் நிரூபிக்கிறார்.
கடவுள் எலியாவை ஒரு பாதுகா ப்பான இடத்திற்கு அனுப்புகி றார்.
The first Mission to Kerith.
கடவுள் எலியாவை கெரீத் (கெரீத் என்பதற்கு "வெட்டப்பட்டது" அல்லது "துண்டிக்கப்பட்டது" என்றும் பொருள்) இந்தக் காலகட் டத்தில் எலியாவின் வாழ்க்கையி ல் கடவுள் சில வெட்டுக்களைச் செய்ய வேண்டியிருந்தது என்ப தைக் காட்டுகிறது.ஓடையின் அருகே ஒளிந்து கொள்ளச் சொல் லி, காகங்கள் (Ravens)இவை, எலியாவின் தேவைகளை கவனி த்துக்கொள்ள கடவுளால் அனுப் பப்பட்டவை.இவைகள் மூலம் அவருக்கு உணவளிக்கிறார், இது கடவுளின் எதிர்பாராத ஏற்பாட்டை க் காட்டுகிறது. கடவுள் தன் இறை மக்களுக்கான திட்டங்களை ஏற்ற காலத்தில் நிறைவேற்றுகிறார்.
என்றும் கைவிடுவதில்லை.
தொர்ந்து நாட்டில் மழை பெய்யாத காரணத்தால் சில நாள்களில் அந்த ஓடையும் வற்றிப் போனது.
ஆண்டவர் அவரை மீண்டும் வேறு ஒரு இடத்துக்கு அனுப்புகிறார்.
The Second Mission to Sidon:
அன்பானவர்களே ஆண்டவரு டைய பணியில் ஒரே இடத்தில் பணி செய்ய அருட்பணியாளர்கள் அனுப்பப்படவில்லை. அப்படி இருந்தால் அது தேங்கிய குட்டை நீர், எனவே, ஆண்டவரின் சீடர்க ளும் ஒரு ஊராக அனுப்பப்பட்டார் கள் உலகம் முழுவதும் அனுப்பப் பட்டார்கள், அவ்வாறே இறைவாக் கினர் எலியாவையும் ஆண்டவர் வேரோரு இடத்திற்கு அனுப்பு கிறார். அது சீதோன் பகுதி. நண்பர்களே இந்த சீதோன் பகுதி யை மீண்டும் நினைவுபடு த்துகிறேன். முதலாவதாக இந்த பகுதியானது பாகால் கடவுளை வணங்கும் பொல்லாத ராணி யேசபேல் பிறந்த பொதுவான பகுதி, இவளின் சொந்த ஊரா கும். இரண்டவதாக, ஓய்வு எடுக்க நம் ஆண்டவர் சென்ற பகுதியா கும்.(மத்தேயு15:11). ஆனால் அங்கு காணானிய பெண்ணின் மகளுக்கு பேயை விரட்டி விடுத லை கொடுத்தார்.
எலியா இப்பகுதிக்கு அனுப்பப்படுகிறார் "நீ புறப்பட்டுச் சீதோன் பகுதியிலிருக்கும் சாரிபாத்து க்குப் (Zarephath) போய் அங்கே தங்கியிரு. அங்கு உனக்கு உணவு அளிக்குமாறு ஒரு கைம்பெண் ணுக்குக் கட்டளையிட்டிருக்கி றேன் ". இங்கு மீண்டும் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்
இயேசு தம்முடைய சொந்த மக்களால் நிராகரிக்கப்பட்டபோது, தமக்கென ஒரு ஜனத்தைத் தேர்ந்தெடுக்கும் கடவுளின் உரிமையின் எடுத்துக்காட்டாக, எலியா சாறிபாத் விதவையிடம் வந்த இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினார்: பின்னர் அவர் கூறினார், “உறுதியாக உங்களு க்குச் சொல்லுகிறேன், எந்தத் தீர்க்கதரிசியும் தன் சொந்த நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படுவ தில்லை. ஆனால், எலியாவின் நாட்களில், மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் வானம் அடைக்கப்பட்டு, தேசமெங்கும் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது, இஸ்ரவேலில் பல விதவைகள் இருந்தார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆனால் எலியா சீதோன் பகுதி யிலுள்ள சாறிபாத் நகரத்திற் குத் (இந்த சாறிபாத் தற்பொழுது லெபனான் பகுதியில் உள்ளது) தவிர வேறு எவருக்கும் அனுப்பப் படவில்லை” ( லூக்கா 4:24-26 ).
கடவுள், இறைவாக்கினர் எலியா வை ஒரு ஏழைபுறஇனத்து விதவையிடம் அழைத்துச் சென் றார்.அங்கே ஒரு கைம் பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்.அவளிடம் விறகு கூட இல்லை, சேர்த்து வைக்கவி ல்லை. இறைவாக்கினர் எலியா அவர்கள், அவரை அழைத்து, "ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக் கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா" என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கை யில், அவரைக் கூப்பிட்டு, "எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவா யா?" என்றார். அவள் அதிர்ந்து போனால், ஏனெனில் அவளிடம் அதிகமாக ஒன்றுமில்லை மற்றவ ர்களுக்கு கொடுக்க கூட இல்லை இது தெரியாதா தீர்க்கர் எலியாவு க்கு? இது கடவுளின் கட்டளை
இது ஒரு தீர்க்கதரிசிக்கு ஒரு விதவை உணவளிக்கக் கட்டளை யிட்டதாகக் கூறினார் .
இந்தப் பெண் அந்தக்கட்டளையை அறியாதவள், இவர் தீர்க்கர் என்றும் தெரியாது.அன்று காலை யில் அவள் ஒரு விருந்தினரைச் சந்திக்க அல்ல, விறகு சேகரிக்கச் சென்றாள்.ஒரு கடவுளின் மனித னைத் தாங்குவது பற்றி அவளு க்கு எந்த யோசனையும் இல்லை.
இது கடவுளின் கண்ணுக்குத் தெரியாத கை, பெரும்பாலும் எவ்வாறு செயல்படுகிறது என்ப தைக் காட்டுகிறது
அந்த ஏழை விதவை இறைவாக் கினர் எலியாவை பார்த்து:
"வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெ யுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிக ளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடு வோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்" என்றார்.
இந்த பணிவான உரை அவள் கடவுளை மதித்ததைக் காட்டி யது, ஆனால் இஸ்ரவேலின் கடவுள் தன்னுடைய கடவுள் அல்ல, எலியாவின் கடவுள் என்பதை அங்கீகரித்தாள்.
இது அவளுக்கும், அவள் மகனுக் கும் கடைசி உணவு இதில் தீர்க் கர் எலியா முதலில் பங்கு கேட்க வேண்டும்?
ஏனெனில், விதவைக்கும், அவளு டைய மகனுக்கும், எலியாவுக்கும் முடிவில்லா உணவு வழங்குவ தாக கடவுள் அவனிடம் கூறினார். கடவுளின் இந்த மகத்தான வாக்கு றுதியில் நம்பிக்கை வைக்கும் படி விதவையிடம் அவர் கேட்டார் அவள் போய் எலியாவின் வார்த் தையின்படி செய்தாள்.அவளும் அவனும் அவளுடைய வீட்டாரும் பல நாட்கள் சாப்பிட்டார்கள்.
எலியா மறுபடியும் விண்ணப்பம் செய்தான், வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது. எங்கிருந்தும் -கிலயாத் to எவ்விடத்தும் - சாரிபாத் அருட் பணி ஆற்றுவதே ஆண்டவரின் கட்டளை.
2. புற இனத்தாருக்கும் அருட் பணி.Mission to Gentiles. Galathians
2:1-10.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிக ளார் புற இனத்து மக்களோடு பதினான்கு ஆண்டுகள் பணியா ற்றிய பிறகு, அவர் எருசலேமுக் குச் மீண்டும் சென்றார், ஒருஇளம் நண்பரும் உதவியாளருமான புற இனத்து தீத்துவையும்(Titus)யூதரான பர்னபாவையும் (Barnaba) அழைத்துச் சென்றார், தீத்து ஒரு கிரேக்கர். விருத்த சேதனம் செய்யாதவர்.அந்த வருகை எந்த வகையிலும் எளிதானது அல்ல. உயிர்த்தெழுந்தகடவுளிடமிருந்து வந்த நேரடி செய்தியின் விளை வாக நான் சென்றேன்; நான் புற இனத்தாரிடையே (Gentiles)பிரசங்கித்த நற்செய்தியை அவர்க ளுக்கு முன்பாகவைத்தேன்.அங்கு இரண்டு உலகங்கள் இருந்தன ஒன்று யூதர்களின் உலகம் மற்றொன்று யூதர் அல்லாதவர் களின் உலகம். யூத உலகில். திருச்சபையின் தூண்களாகக் கருதும் ,பேதுரு.யாக்கோபு, யோவான் இருந்தார்கள்.ஒரு மனிதன் கிறிஸ்தவனாக மாறுவ தற்கு முன்பு, அவர் விருத்தசேத னம் செய்யப்பட்டு முழு சட்டத்தை யும் அவர் மீது எடுத்துக்கொள்ள வேண்டும். இது யூதவாதிகளின்
கருத்து. இவர்கள் யூதரல்லாத ஒரு மனிதனுக்கு கடவுள் ஒரு போதும் எந்த சலுகையையும் வழங்கவில்லை என்று நம்பினர்.
யூத உலகத்திற்கு பேதுருவை அப்போஸ்தலராக்குவதற்காக, பணி செய்தவர், என்னையும் யூதரல்லாத உலகத்திற்கு அப்போஸ்தலராக்குவதற்காக,
யூதரல்லாத உலகில் நற்செய்தி யைப் பிரசங்கிக்கும் பொறுப்பு எனக்கு கடவுள் ஒப்படைத்தார் என திருத்தூதர் பவுலடிகளார் எடுத்துரைத்தார். பவுல் அங்கு ள்ள அப்போஸ்தலர்களுடன் விவாதித்து, கிருபையால்மட்டுமேஇரட்சிப்பு என்பதை உறுதிப்படுத்துகிறார். பவுலின் நற்செய்திக்கு எதிராக யூதர்களு க்கு எதிரான ஒரு வாதம் எழுகி றது, ஆனால் பவுல் அதை எதிர்த் துப் போராடுகிறார்.யூதரல்லாத உலகத்திற்கும், எங்களையும், அவர்கள் யூத உலகத்திற்கும் செல்ல வேண்டும் என்பதில் முழுமையான உடன்பாட்டில். அவர்கள் எங்களுக்குச் செய்யக் கட்டளையிட்ட ஒரே விஷயம் ஏழைகளை நினைவில்
கொள்க என்பதே!.
ஆரம்பத்திலிருந்தே திருச்சபை யின் உண்மையான தலைவர்கள் பவுலின் நிலைப்பாட்டை ஏற்று க்கொண்டனர்;ஒரே நற்செய்தி இரண்டு வெவ்வேறு துறைகளுக் குக் கொண்டு வரப்படுவதற்கு விசேஷ தகுதியுள்ள வெவ்வேறு மக்களால் கொண்டு வரப்படுவது என்பது கடவுளின் திட்டமாகும்.
கடவுளின் மகா கட்டளையான
(Great Commission)உலகமெங்கும் நற்செய்தியை கொண்டு செல்லு ங்கள் என்பதை யூதர்களுக்கு மட்டும் கொண்டு சென்றாள் அது நிறைவேறுமா? ஆனால், திருத் தூதர் பவுல் அடிகளோ உலகெங் கும் அந்தநற்செய்தியைகொண்டு செல்ல வித்திட்டார். திருச்சபையின் தலைவர்கள் அறியாத புறஜாதியான தீத்து. அந்த கூட்டத்தில் மிக முக்கிய மான நபராக இருக்கலாம். அவர் நற்செய்தியைக் கேட்டு இயேசு கிறிஸ்துவை நம்பினார். அவர் ஒரு கிறிஸ்தவர், ஆனால் அவர் ஒருபோதும் யூதராக இருந்ததில் லை.
பவுல் ஏன் தீத்துவை அழைத் துச் சென்றார்? Why should Paul
take Titus to Jerusalem?
அன்பானவர்களே! திருத்தூதர்
பவுல் அடிகளார் புற இனத்தா ருக்குப் பிரசங்கித்த நற்செய்தி யின் ஒரு எடுத்துக்காட்டாக தீத்து எருசலேமுக்கு எடுத்துச் செல்லப் பட்டார்.பவுல் "புறஜாதியாருக்குள் தான் அறிவிக்கும் நற்செய்தியை அவர்களுக்கு முன்பாக வைத்தார்"
தீத்து கிறிஸ்துவின் நற்செய்தி யைதைப் பிரசங்கிக்கிற பிரசங் கியாராகஊழியம் செய்கிறார். என்பதை காட்டுகிறார்.எருசலேம் தலைவர்கள் யூதரல்லாத கிறிஸ் தவர்களை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றால், திருச்ச பையை ஒன்றிணைப்பது எப்படி?
பவுல் புறஜாதிகளிடத்தில் பிரசங் கிக்கிற சுவிசேஷத்தை எருசலே மிலுள்ள அப்போஸ்தலர்கள் அங்கீகரிக்கவேண்டும். மற்ற இடங்களிலுள்ளவர்கள் பவுலின் பிரசங்கத்தை அங்கீகரிக்கிறார்க ளா, அங்கீகரிக்கவில்லையா என்பது முக்கியமல்ல. எருசலேமி லுள்ளவர்கள் அங்கீகரிக்கவேண் டும். ஏனெனில், ஆதித்திருச்சபை யின் அதிகாரம் எருசலேமிலுள்ள அப்போஸ்தலரிடம் ஒப்புக்கொடுக் கப்பட்டிருக்கிறது.இதற்காகவே,
தன்னுடைய ஊழியத்தைப்பற்றி எருசலேமிலுள்ள அப்போஸ்த லரிடம் பவுல் சொல்லும்போது மிகுந்த ஞானத்தோடும், மிகுந்த எச்சரிப்போடும் பேசுகிறார். புறஜாதிகளுக்கு பவுல் பிரசங்கி க்கிற சுவிசேஷத்தை, எல்லோரு க்கும் முன்பாக, வெளிப்படையாக விவரித்துக் காண்பிக்காமல், அவர்களுக்கு தனிமையாய் விவரித்துக் காண்பிக்கிறார். பவுலின் நாட்களில் சுவிசேஷத் திற்கு, "விருத்தசேதனமில்லாத வர்களுக்குச் சுவிசேஷம்'' என்னும் ஒரு பெயர் கொடுக்கப் பட்டிருந்தது.
பவுலின் அப்போஸ்தல ஊழியத் தை எருசலேமிலுள்ள அப்போஸ்த லர்கள் அங்கீகரிக்கிறார்கள். விருத்தசேதனம் செய்யாத பிற இனத்து தீத்துவையம் ஏற்றுக் கொள்கிறார்கள் அவரை விருத்த சேதனம் செய்ய கட்டாயப்படுத் தவில்லை அவருடைய அப்போஸ் தல அதிகாரத்தை அவர்களும் உறுதிபண்ணுகிறார்கள். தங்க ளைப்போல பவுலும் ஒரு அப்போ ஸ்தலர் என்று சொல்லி, அவரை அப்போஸ்தலராக அங்கீகாரம் செய்கிறார்கள்.எங்கிருந்தும் கலாத்தியா எவ்விடத்தும் எருசலேம் அருட்பணி ஆற்றுவதே ஆண்டவரின் கட்டளை.
3. விண்ணரசை கொண்டுவரு வதே அருட்பணி. The Mission is to bring The Kingdom of God. மத்தேயு 13: 47-52
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் தன் அருட் பணியை ஆற்றும் பொழுது அவரு டைய ஊழியத்தின் தொடக்கத்தி ல் அவர் ஜெப ஆலயங்களில் கற்பிப்பதைக் காண்கிறோம்; ஆனால் இப்போது அவர் கடற் கரையில் கற்பிப்பதைக் காண்கி றோம். இந்த மாற்றம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஜெப ஆலயத் தின் கதவு இன்னும் இறுதியாக அவருக்குமூடப்பட்டிருக்கவில்லை, ஆனால் அது மூடப்பட்டிருந்தது. ஜெப ஆலயத்தில் கூட அவர் சாதாரண மக்களிடமிருந்து வரவேற்பைப்பெறுவார்; ஆனால் யூத மரபுவழியின் அதிகாரப்பூர்வ தலைவர்கள் இப்போது அவருக்கு எதிராக வெளிப்படையாக இருந்தனர். அவர் இப்போது ஒரு ஜெப ஆலயத்திற்குள் நுழைந்த போது, ஆர்வமுள்ள கேட்போர் கூட்டத்தைக் காண முடியாது; அங்கு இருப்பவர்கள், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் மற்றும் மூப்பர்கள் அடங்கிய இருண்ட கண்கள் கொண்ட ஒரு கூட்டமும் அவருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கண்டு பிடிக்க ஒவ்வொரு வார்த்தையை யும் எடைபோட்டு, சல்லடை போட் டு, அதை ஒரு குற்றச்சாட்டாக மாற்ற ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண் டிருப்பதைக் காணவேண்டும் .இயேசு தனது காலத்தின் திருச்சபையிலி ருந்து வெளியேற்றப்பட் டது மிகவும் துயரமான ஒன்றாகும்; ஆனால் அது அவரை மக்களுக்கு அழைப்பை கொண்டு வருவதைத் தடுக்க முடியவில்லை; ஏனென் றால், ஜெப ஆலயத்தின் கதவுகள் அவருக்கு எதிராகமூடப்பட்டபோது, அவர் திறந்தவெளி கோவிலுக் குச் சென்று, கிராமத் தெருக்களி லும், சாலைகளிலும், ஏரிக்கரையி லும், அவர்களின் சொந்த வீடுகளி லும் மக்களுக்குக் கற்பித்தார்.
ஏன் இயேசு கிறிஸ்து உவமைகளை பயன்படுத்தி னார்? Why did Jesus teach in Parables?
அன்பர்களே கடவுளுடைய அரசைப் பற்றிய சிக்கலான ஆன்மீக உண்மைகளை, மறக்க முடியாத வகையிலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையி லும் திறம்படத் தெரிவிக்க , இயேசு உவமைகளைப் பயன்படு த்தினார், அவை கதைகள். கேட் போரை ஈடுபடுத்தவும், அவர்க ளின் இதயங்களுக்கு சவால் விடவும், ஆழமான ஆன்மீக நுண் ணறிவுகளை வெளிப்படுத்தவும் உவமைகள் உதவின. கதை வடிவில் உண்மைகளை வழங்கு வதன் மூலம், இயேசு தம்மைக் கேட்பவர்களை தங்கள் சொந்த வாழ்க்கையையும் நம்பிக்கைக ளையும் சிந்திக்கத் தூண்டினார், அவர்களின் இதயங்களையும் மனப்பான்மைகளையும் ஆராயும்படி சவால் விடுத்தார்.
கதைகள், சுருக்கமான கருத்துக்களை விட, நினைவில் வைத்துக் கொள்வதும் மீண்டும் சொல்வதும் இயல்பாகவே எளிதானது. உவமைகள் செய்தியை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகக்
கடத்தலாம். தீர்க்கதரிசனங்கள் நிறைவேறவும் ஆண்டவர் உவமையை பயன்படுத்தினார்.
இயேசு உவமைகளில் பேசுவதன் மூலம், தன்னை விமர்சிக்க அல்லது குற்றம் சாட்ட காரணங் களைத் தேடிக்கொண்டிருந்த மதத் தலைவர்களுடன் நேரடி மோத லைத் தவிர்க்க முடிந்தது.
உவமைகள் உண்மைகளைக் கற்பிக்கவும், சவால் செய்யவும், வெளிப்படுத்தவும் உவமைகள் ஒரு சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள கருவியாக இருந்தன.
இயேசு பயன்படுத்திய உவமை பேசப்பட்டது; அது படிக்கப்படவில்லை. அதன் தாக்கம் உடனடி யாக இருக்க வேண்டும், விளக்க வுரைகள் மற்றும் அகராதிகளுடன் நீண்ட ஆய்வு செய்ததன் விளை வாக இருக்கக்கூடாது. மின்னல் திடீரென ஒரு இருண்ட இரவை ஒளிரச் செய்வது போல, அது ஒரு மனிதனின் மீது உண்மையைப் பிரகாசிக்கச் செய்தது.
உவமையில் ஒரே ஒரு புள்ளி மட்டுமே இருக்கும் என்று அர்த்தம். ஒரு உவமை ஒரு உருவகம் அல்ல; ஒரு உருவகம் என்பது ஒவ்வொரு சாத்தியமான விவரத்திற்கும் ஒரு உள் அர்த்தம் இருக்கும் ஒரு கதை; ஆனால் ஒரு உருவகத்தைப் படிக்க வேண்டும்; ஒரு உவமை கேட்கப்படுகிறது. நாம் கடவுளு டைய வார்த்தையைக் கேட்க ஒன்று கூடும்போது, மிகுந்த எதிர்பார்ப்புடன் வர வேண்டும், பேசுபவரைப் பற்றி அல்ல, அவர் மூலமாகப் பேசும் ஆவியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
பாலஸ்தீன மீனவர்கள்.The fishermen of Palestine.
அன்பர்களே பாலஸ்தீனத்தில் மீன்பிடிக்க இரண்டு முக்கிய வழிகள் இருந்தன. ஒன்று வார்ப்பு வலையை (Cast Net) பயன்படு த்துவதாகும் . அது கரையிலிருந்து வீசப்பட்ட ஒரு கை வலை.
இரண்டாவது மீன்பிடி முறை, இழுவை வலையைப் (Trawl Net) பயன்படுத்தி மீன்பிடிக்கப்பட்டது ,
இந்த உவமை விண்ணரசை குறித்தது. வலைகள் கடலில் போடப்பட்டு எல்லா வகையான மீன்களையும் பிடிக்கிறது. நல்ல மீன்கள் கூடைகளில் போடப்படு கின்றன, ஆனால் நல்லதல்லாத மீன்கள் தூக்கி எறியப்படுகி ன்றன. இவ்வுலகத்தின் இறுதித் தீர்ப்பை அடையாளப்படுத்துகி றது. எல்லா மக்களும் ராஜ்யத்தில் சேர்க்கப்படுவார்கள், ஆனால் நல்லதல்லாதவர்கள் தீர்ப்பிடப் பட்டு வெளியேற்றப்படுவார்கள்.
வலை எல்லா இடங்களிலும் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் பிடிக்கிறது, அதாவது ராஜ்யத்தின் அழைப்பு எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல்.எங்கிருந்தும் எவ்விடத்தும் எல்லா மக்களுக்கும் கிடைக்கிறது, அது பொதுவானது.
நல்லதும் கெட்டதும் வலையில் சேர்ந்துள்ளது, ஆனால் நல்லவை கூடைகளில் சேகரிக்கப்பட்டு கெட்டவை தூக்கி எறியப்படு கின்றன. இது, ராஜ்யத்தின் இறுதித் தீர்ப்பை குறிக்கிறது, அங்கு நன்மை தீமையிலிருந்து பிரிக்கப்படும்.இந்த உவமை, ராஜ்யத்தின் அழைப்பையும், ராஜ்யத்தில் நுழைவதற்கான நிபந்தனைகளையும் காட்டுகிறது:
வலையின் இயல்பில் அது பாகுபாடு காட்டாது, பாகுபாடு காட்டவும் முடியாது. அது தண்ணீரின் வழியாக அனைத்து வகையான பொருட்களையும் உள்ளே இழுக்கும். அதன் உள்ளடக்கங்கள் ஒரு கலவையாக இருக்க வேண்டும். பூமியில் கடவுளின் ராஜ்யத்தின் கருவி யாக இருக்கும் திருச்சபைக்கு நாம் அதைப் பயன்படுத்தினால், திருச்சபை பாகுபாடு காட்ட முடியாது, ஆனால் நல்லவர்கள், கெட்டவர்கள், பயனற்றவர்கள் மற்றும் பயனுள்ளவர்கள் என அனைத்து வகையான மக்களின் கலவையாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
திருச்சபை அனைவருக்கும் திறந்திருக்க வேண்டும் என்றும், அது ஒரு வலையைப் போல, அது ஒரு மனித நிறுவன மாக இருக்கும் வரை அது ஒரு கலவையாக இருக்க வேண்டும்
எங்கிருந்தும் எவ்விடத்தும்.The final destination of the Mission is
to establish the Kingdom of God on this Earth. அருட்பணி- இவ்வுலகில் ஆண்டவரின் அரசை கொண்டு வருவதே அதன் இலக்காகும். ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
Comments
Post a Comment