இறைமக்கள்: கிறிஸ்துவின் மந்தை. (218)People of God: Flock of Christ.தொடக்கநூல்.Genesis35:1-15, :திருப்பாடல் Psalms:95, திருத்தூதர் பணிகள் Acts:16: 11-15. யோவான் John:10:1-6.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,"இறைமக்கள்: கிறிஸ்துவின் மந்தை." People of God: Flock of Christ.
 யார் இறைமக்கள்? Who are the God's People? இயேசு கிறிஸ்து வின் மீது உண்மையான பற்று றுதியுடன் (Faith), அவரது போத னைகளைப் பின்பற்றும் மக்கள் "இறைமக்கள் or கிறிஸ்துவின் மந்தை" என்று அழைக்கப்படு கிறார்கள். 
 இவர்கள், திருமுழுக்கின்(Baptism) வழியாக, கிறிஸ்துவில் ஒரே உடலாக இணைக்கப்பட்டவர்கள் என்பதால், இறைமக்களாக உரு வாக்கப்பட்டுள்ளவர்கள் கிறிஸ் துவின் மக்களாவர். 
பழைய ஏற்பாட்டில் கடவுளின் மக்கள் : The People of God in the old Testament.
 அன்புக்குரியவர்களே நம் திருவி விலியத்தில் முக்கியமாக பழைய ஏற்பாட்டில், கடவுள் ஆபிரகாமுடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத் தினார், அவருடைய சந்ததியின ரை ஒரு பெரிய தேசமாக்குவதாக வாக்குறுதி அளித்தார் (தொடக் கநூல் 12:2). கடவுளால் தேர்ந்தெடு க்கப்பட்ட இஸ்ரவேலர்களைக் குறிக்கிறது.இந்த உடன் படிக்கை பின்னர் சீனாய் மலையில் மோசே யுடனும் இஸ்ரவேலருடனும் மீண் டும் உறுதிப்படுத்தப்பட்டது (வி. பயணம் 19:5-6).   பழைய ஏற்பாடு கடவுளின் மக்களை"தேவனுடைய ஜனங்கள்," "கர்த்தருடைய ஜனங் கள்," மற்றும் "என் ஜனங்கள்" போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.
புதிய ஏற்பாட்டில் கடவுளின் மக்கள் : The People of God in the New Testament.
 நண்பர்களே புதிய ஏற்பாட்டடில் இந்த வரையறையை விரிவு படுத் துகிறது, (Globalisation of Christ) இயேசு கிறிஸ்துவில் உள்ள அனைத்து விசுவாசிகளையும், யூதர்கள் மற்றும் புற இனத்தவர் இருவரும், விசுவாசத்தின் மூலம் திருச்சபையில் ஒன்றுபட்டுள்ள இறைமக்கள். "இறைமக்கள் இல்லாமல் திருச்சபைகள் இல்லை, திருச்சபைகள் இல் லாமல் இறைமக்கள் இல்லை."
 இயேசுவை விசுவாசிக்கும்அனை வரையும் உள்ளடக்கியதிருச்சபை, கிறிஸ்துவின் உடலாகவும், உல கில் கடவுளின் மக்களின் இறை மக்களாக பார்க்கப்படுகிறது. 
 இறை மக்களை புதிய ஏற்பாடு,
உறுப்பினர்கள்," "சீடர்கள்," "விசு வாசிகள்," "புனிதர்கள்," "சகோத ரர்கள்," மற்றும் "தேவனுடைய பிள்ளைகள்" போன்ற சொற்க ளைப் பயன்படுத்துகிறது.   
கிறிஸ்துவின் மந்தை" Flock of Christ.
 அன்பர்களே! கிறிஸ்துவின் மந்தை" என்றால் கிறிஸ்தவ நம்பிக்கையில் இயேசு கிறிஸ்து வைப் பின்பற்றுபவர்கள் மற்றும் அவருடைய சீடர்களைக் குறிக்கும் ஒரு உருவகச் சொல். இது ஒரு மந்தையைப் போல இயேசுவை தங்கள் ஒரே மேய்ப்பராகக் கொண்டு அவருடன் இணைக் கப்பட்ட ஒரு குழுவாக அவர்க ளைக் குறிக்கிறது. கிறிஸ்துவத் தில், இந்த மந்தை உருவகம், இயேசு கிறிஸ்துவை மேய்ப்பராக வும், அவருடைய சீடர்களையும், நம்மையும் ஆடுகளாகவும் உருவக ப்படுத்துகிறது.இயேசுகிறிஸ்துவே இந்த மந்தையின் ஒரே மேய்ப் பன் . அவர் தன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுப்பார், அவ் வாறே கொடுத்தார் என்று திரு விவிலியம் கூறுகிறது.
எனவேதான், கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி முதலாவது மேய்ப்ப ர்களுக்கே அறிவிக்கப்பட்டது.
1. கடவுளின் மக்களே பெத்தே ளுக்கு வாருங்கள்.Come  to Bethel, the people of God. தொடக்க நூல்: Genesis 35:1-25.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! பெத்தேல் என்ற கடவுளி ன் வீடு. ஒரு பண்டைய இஸ்ரே லிய நகரம், குறிப்பாக ஆபிரகாம் மற்றும் யாக்கோபுடன் தொடர்பு டையது.   இது பண்டைய கானா னில் எருசலேமுக்கு வடக்கே 12 மைல் தூரம் அமைந்திருந்தது, மேலும் இது நவீனகால பாலஸ் தீன கிராமமான பேட்டினுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.   
பெஞ்சமின் குலத்தாரும் எப்ராயிம் குலத்தாரும் வசித்து வந்த இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்ததாகக் கூறப்படு கிறது. இதன் பழைய பெயர்
லூஸ்" அதாவது( "பாதாம் மரம்",)
 என்று அழைக்கப்பட்டது
தொடக்க நூல் 28:19-ன்படி
 யாக்கோபு  தனது வாழ்க்கையில் ஒரை முறை மட்டுமே அங்கு சென்றுள்ளார், அதுவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது  இந்தக் காலகட்டம் முழுவதும் கானானியர்கள் அந்த நகரத்தை " லூஸ். என்று அழைத்தனர். யாக்கோபு செக்கேம் (சிகேம்) நகரில் வசித்து வந்தார்.
அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி, "நீ எழுந்து பெத்தேலுக் குப் போய் அங்கே குடியிரு. உன் சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பி யோடியபோது உனக்குத் தோன்றி ன இறைவனுக்கு அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தை எழுப்பு" என்றார். இது கடவுளின் கட்டளை அதற்கு அவர் கீழ்படிகிறார். நம்மையும் அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படி ய அழைக்கிறார்.
ஏன் யாக்கோபு சீகேமை விட்டு வெளியேறினார். Why did Jacob
leave Shechem?
 அன்பானவர்களே! சீகேமின் பிரபுவாகிய ஏமோரின் மகனான சீகேம், யாக்கோபின் மகளாகிய தீனாளைத் தீட்டுப்படுத்தினான்.
யாக்கோபின் மகன்கள், குறிப்பாக சிமியோன் மற்றும் லேவி, கோபம டைந்து பழிவாங்க முயன்றனர். அவர்கள் சீகேமின் ஆண்களை விருத்தசேதனம் செய்ய ஏமாற்றி, பின்னர் அவர்கள் குணமடையும் போது அவர்களைத் தாக்கி கொன்றனர்.
 யாக்கோபு நடந்த வன்முறையால் மிகவும் கவலைப்பட்டார், மேலும் அவரது குடும்பம் இன்னும்  சிறிய தாகவும்பாதிக்கப்படக்கூடியதாகவும் இருந்ததால், மற்ற கானானிய பழங்குடியினரிடமிருந்து பழிவாங் கல் ஏற்படுமோ என்று அஞ்சினார்.
 முதலில் தன் சகோதரன் ஏசாவுக்கு பயந்து வாழ்ந்தார் இப்பொழுது, சீகேமியர்களுக்கு பயப்பட வேண்டியதாய் இருந்தது.
எனவே, அமைதியை விரும்பும் கடவுள் அவரை  சீகேமை விட்டு வெளியேறி வேறு இடத்திற்குச் செல்ல கட்டளையிட்டார். இதுவும் நமக்கு ஒரு பாடம் எங்கு நமக்கு அமைதி இல்லையோ அங்கே நம்மால் அமைதியாய் வாழ முடியாது நாம் அமைதியை நிலை நிறுத்த வேண்டும் அமைதிக்கு ஏற்றவாறு நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனேனில், "அமைதி ஏற்படுத்து வோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் என்கிறார் நம் ஆண்டவர்.
கடவுளின் பிள்ளைகளே தூய் மையாக்குங்கள்.  People of God,
Cleansing yourself.
 அன்புக்குரியவர்களே கடவுள் நம்மை முழுமையாக தூய்மை யாக இருக்க விரும்புகிறார். 
உங்களிடையே உள்ள அந்நிய தெய்வங்களை அகற்றிவிடுங் கள்" என தன் குடும்பத்தின் மக்களை முதலில் யாக்கோபு கேட்டுக்கொள்கிறார் ஏனெனில் அவர்கள் சிலைகளை வணங்கி னார்கள் கானானிய கடவுளையும் வணங்கினார்கள்.அதனால், அவர்களை தூய்மைப்படுத்திக் கொள்ள செய்கிறார்" இது பாவத் திலிருந்தும் அசுத்தத்திலிருந்தும் சுத்திகரிப்பைக் குறிக்கும். கிறிஸ்தவர்கள் தூய்மையானவர் கள். ஏனெனில் தூய்மையான கடவுளை வணங்குகிறார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ரத்தம் நம்மை சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது, தூய்மைப்படுத்துகிறது. நம் உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்க வேண்டும்,தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். (மத்தேயு நற்செய்தி 5:8) என ஆண்டவர் கூறுகிறார். இது
யாக்கோபையும் அவரது குடும்பத் தினரையும் பெத்தேலுக்குத் திரும் பிச் சென்று, முன்பு கடவுளுக்குச் செய்த சபதத்தை நிறைவேற்றத் தயார்படுத்துகிறது ( தொடக்க நூல்  28:20-22).   
உடல் ரீதியான சுத்திகரிப்பு மற்று ம் ஆடை மாற்றுதல் ஆகியவை ஆழமான ஆன்மீக மாற்றத்தையு ம், புனித வாழ்க்கைக்கான அர்ப்ப ணிப்பையும் குறிக்கின்றன.
 இந்தத் தூய வாழ்வு அவர்களை பெத்தேலுக்கு செல்ல வழி காட்டுகிறது  ஏனெனில் பெத்தேல் கடவுளின் இல்லம்.யாக்கோபு தம்மோடு  கடவுள் பேசிய அந்த இடத்திற்குப் "பெத்தேல்" என்று பெயரிட்டார். 
லூசு" என்னும் பழைய கனானேய ப் பெயரை "பெத்தேல்" என்று மாற்றம் பெற்றதுபோல, அங்கே யே யாக்கோபுவின் பெயரைக் கடவுள் "இஸ்ரயேல்" என்று மாற்றினார்.
 எது நம்முடைய பெத்தேல்?
Which is our Bethel? 
 அன்புக்குரியவர்களே எது நம்முடைய பெத்தேல்? நம்முடைய பெத்தேல் என்பது  கல்வாரி, நமது ஆண்டவர் நமக்காக சிலுவையை சுமந்து, பாடுகளை அனுபவித்த இடம், நம்முடைய பாவங்களை சுமந்து தீர்த்து நமக்காக இரத்தம் சிந்திய இடம் கல்வாரி. அது மீட்பின் இடம் நம்மை மீட்பதற்கான தன்னையே பலியாக ஒப்பு கொடுக்கப்பட்ட இடம்தான் கல்வாரி. அந்த கல்வாரியை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும் ஆண்டவரின் பாடுகள் எனக்காக தான் என்னை மீட்கவே அவர் தன் இன்னுயிரை கொடுத்தார் என்ற சிந்தனை இருக்க வேண்டும் என்பதே நம்முடைய இலக்கு, அது கல்வாரியை நோக்கயே இருக்க வேண்டும். அதை நினைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நாம் துதிக்க வேண்டும் மகிமைப் படுத்த வேண்டும் அவருக்காக நாம் வாழ வேண்டும். பெத்தேல் யாக்கோபையும் அவன் குடும்ப த்தையும் மாற்றியது, கல்வாரி உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவாட்டு குட்டி பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட இடம். அது நம்மை சுத்திகரித்து நம்மை மீட்டது.
2. ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவர்களே இறை மக்கள். People of God are those who trust in the Lord.திருதூதர் Acts:16:11-15.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! யார் இறை மக்கள் என்பத ற்கு, ஆண்டவரிடம் நம்பிக்கை உள்ளவர்களே இறைமக்கள் என இப்பகுதி நமக்கு விளக்குகிறது.
 திருத்தூதர் பவுல் அடிகளாரும் அவரின் சீடர் திமொத்தேயும்  
நேராக நியோப்போலிக்குச் சென்று,( இது கிரேக்க வார்த்தை, "நியோஸ்" (neos - புதிய) மற்றும் "போலிஸ்" (polis - நகரம்) ஆகிய வற்றின் சேர்க்கையால் உருவா னது. இதன் பொருள் "புதிய நகரம்". )இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரம் பண்டைய கிரேக்கத்தில் நியோபோலிஸ் என்று அழைக்கப்பட்டது. வரலாற் று ரீதியாக இது ஒரு முக்கியமான நகரமாக இருந்துள்ளது. 
அங்கிருந்து மாசிதோனியாவுக் குப் கப்பல் மூலம் புறப்பட்டார்கள். (மாசிதோனியா என்பது கிரேக்கத் தின் ஒரு பகுதியாகும். இது இன் றைய வடக்கு கிரேக்க ஐரோப்ப பகுதியாகும். இது ஒரு முக்கியத் துவம் வாய்ந்த ரோமானிய கால னியாக இருந்தது.  பேரரசர் அலெக்சாண்டர் மாவீரனின் தாயகமாகவும் இருந்தது. )
இங்கிருந்து பிலிப்பிக்கு இருவரும் வந்தார்கள். இதை மாசிடோ னியாவின் இரண்டாம் பிலிப் மன்னரின் பெயரில் கிமு 356 இல் நிறுவப்பட்டது. பிலிப்பி என்றால்
கிரைனைட்ஸ் என்ற பொருளா கும்.
இது அவர் இப்பகுதியில் உள்ள தங்கச் சுரங்கங்களைக் கட்டுப் படுத்த உதவியது.
 இந்தப் பிலிப்பு நகரில் திருத் தூதர் பவுல் அடிகளாரும், திமோத்தேயும் ஒரு ஓய்வு நாளில் இறை வேண்டல் செய்வதற்காக  ஆற்றோரமாக இடங்களை தேடி செல்கிறார்கள். அக்காலத்தில் யூதர்கள் ஆற்றங்கரை அல்லது நீர் நிலைகளின் அருகே இறை வேண்டல் செய்ய  கூடுவதும், பெண்களுடன் பேசுவதும் வழக் கமாக இருந்தது. பிலிப்பியில் ஒன்று கூடி ஜெபிக்க  ஒரு ஜெப ஆலயம் இல்லை. ஆனால் யூதர்களால் ஜெபஆலயம் அமைக்க முடியாத இடங்களில் அவர்களுக்கு ஜெப செய்ய இடம் இருந்தது, மேலும் இந்த ஜெப இடங்கள் பொதுவாக நதிக்கரை யில் இருந்தன.
அப்பொழுது லீதியாள் என்னும் ஒரு பெண் அவர்களின் பிரசங்கத் தை கவனித்துக் கொண்டிருந் தாள்.இவள் தியத்திரா நகரைச்
 சேர்ந்தவள்.செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழி பட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். அவள் தேவனுக்குப் பயந்து நடக் கும் பெண்ணாயிருந்தாள்.
 நாம் இறை வார்த்தையை கேட்கி ன்ற போது அது நம் உள்ளத்தை திறக்கிறது. எனவேதான் நாம் ஒவ்வொரு வாரமும்  ஆலயத்தி ற்கு செல்கின்றோம். 
பவுலின் வார்த்தைகளைக் கவனி த்துக் கொண்டிருந்த லீதியாள், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக இருந்தாள்.அவளும் அவள் வீட்டாரும் திருமுழுக்கு பெற்றார்கள். அவள் பவுலையும்
திமோத்தேயுவியேயும் நோக்கி: நீங்கள் என்னை கர்த்தருக்கு உண்மையுள்ளவளாக எண்ணி னால், என் வீட்டுக்கு வந்து தங்கியிருங்கள் என்று சொல்லி, அவர்களை வற்புறுத்தினாள்.
இது லீதியாளின் விசுவாசத்தை யும், பவுலின் மீதும் அவருடைய ஊழியத்தின் மீதும் கொண்ட பற்றையும் காட்டுகிறது. பவுலுக் கும் அவருடைய நண்பர்களுக்கும் தன் வீட்டின் விருந்தோம்பலை வழங்குவதே அவளுடைய உடனடி எதிர்வினையாக இருந்தது. பவுல்
கிறிஸ்தவ குணத்தை விவரிக்கும் போது, கிறிஸ்தவர்கள் வறுமை யுற்ற இறைமக்களோடு உங்களி டமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங் கள்; விருந்தோம்பலில் கருத் தாய் இருங்கள்.(உரோமையர் 12:13)பேதுரு மதம் மாறியவர்கள் மீது கிறிஸ்தவ கடமையை வலியு றுத்தும்போது,"ஒருவருக்கொருவர் தயக்கமின்றி உபசரிக்கவும்" ( 1 பேதுரு 4:9 ) என்று அவர்களிடம் கூறுகிறார்.ஒரு கிறிஸ்தவ வீடு என்பது எப்போதும் திறந்திருக் கும் கதவு கொண்ட வீடு.
 லீதியாள் போன்று கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களே கடவுளின் இறை மக்கள்.இவளே ஐரோப்பாவில் கிறிஸ்தவத் திற்கு மனந்திரும்பிய முதல் பெண்.
 3. யார் நல்ல மேய்ப்பன். Who is the good shephered? யோவான் 10:1-6.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! யார் நல்ல மேய்ப்பன்.
பழைய ஏற்பாட்டில் கடவுள் பெரும்பாலும் மேய்ப்பராகவும், ஜனங்கள் அவருடைய மந்தையா கவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இங்கு மேய்ப்பர்கள் பாதுகாவல ராக கருதப்படுகிறார்கள் ஆனால் புதிய ஏற்பாட்டில் நல்ல மேய்ப்பர் தன் ஆடுகளுக்காக தன் ஜீவனை கொடுக்கிறவர்.
 திருப்பாடல்களில் அநேக இடங்க ளில் கடவுள் மேய்ப்பராக உருவக ப்படுத்தபடுகிறார். "கர்த்தர் என் மேய்ப்பர்: எனக்குக் குறைவு ஏற்படாது" ( சங்கீதம் 23:1 ). "மோசே ஆரோனின் கையால் உம்முடைய ஜனங்களை மந்தை யைப் போல வழிநடத்தினீர்" ( சங்கீதம் 77:20 ). "உமது ஜனங்க ளாகிய நாங்கள் உம்முடைய மேய்ச்சலின் மந்தையே, என்றென் றைக்கும் உம்மைத் துதிப்போம்" ( சங்கீதம் 79:13 ).என்கிறார்.
 "அவர் நம்முடைய தேவன், நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்கள், அவர் கையின் ஆடுகள்" ( சங்கீதம் 95:7 ). "நாங்கள் அவர் ஜனங்கள், அவர் மேய்ச்சலின் ஆடுகள்" ( சங்கீதம் 100:3 ). கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட மேசியா, ஆடுகளின் மேய்ப்பராகவும் சித்தரிக்கப்படுகிறார். "அவர் தம் முடைய மந்தையை ஒரு மேய்ப்ப னைப் போல மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தம்முடைய கைகளில் சேர்த்து, தம்முடைய மடியில் சுமந்து, கன்றுகளை மெது வாக நடத்துவார்" ( ஏசாயா 40:11 ). "அவர் கர்த்தருடைய மந்தையை உண்மையாகவும் நீதியாகவும் மேய்ப்பார், அவர்களில் ஒருவரை யும் தங்கள் மேய்ச்சலில் தடுமாற விடமாட்டார். அவர் அனைவரையு ம் சரியாக வழிநடத்துவார்" (சங் 17:45). மக்களின் தலைவர்கள் கடவுளின் மக்கள் மற்றும் தேசத் தின் மேய்ப்பர்கள் என்று விவரிக் கப்படுகிறார்கள். "என் மேய்ச்சலி ன் ஆடுகளை அழித்து சிதறடிக்கு ம் மேய்ப்பர்களுக்கு ஐயோ!" ( எரே மியா 23:1-4 ). மந்தையின் நன்மை யை விட தங்கள் சொந்த நன்மை யைத் தேடும் போலித் தலைவர்க ள் மீது எசேக்கியேல் ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். "இஸ்ரவேலின் மேய்ப்பர்களுக்கு ஐயோ! மேய்ப்பர்கள் ஆடுகளை மேய்க்க வேண்டாமா?"என்கிறார்.
அன்பர்களே!யூதேயாவின் முக்கிய பகுதி ஒரு மைய பீடபூமியாக இருந்தது, பெத்தேலில் இருந்து ஹெப்ரான் வரை சுமார் 35 மைல்கள் தூரம் வரை நீண்டு, 14 முதல் 17 மைல்கள் வரை குறுக்கே இருந்தது. பெரும்பாலான நிலம் கரடுமுரடானதாகவும், பாறை நிறைந்ததாகவும் இருந்தது. யூதேயா ஒரு விவசாய நாடாக இல்லாமல் மேய்ச்சல் நிலமாக இருந்தது, எனவே, யூதேயா மலை ப்பகுதிகளில் மிகவும் பிரபலமான நபர் மேய்ப்பர்கள் என்பது தவிர்க் க முடியாதது.அவர்களது வாழ்க் கை மிகவும் கடினமாக இருந்தது. மேய்ப்பன் இல்லாமல் எந்த மந் தையும் மேய்ந்ததில்லை, அவர் ஒரு போதும் வேலையிலிருந்து விலகியதில்லை. புல் குறைவாக இருந்ததால், ஆடுகள் அலைந்து திரிய வேண்டியிருந்தது, மேலும் பாதுகாப்பு சுவர்கள் இல்லாததா ல், ஆடுகளை தொடர்ந்து கண்கா ணிக்க வேண்டியிருந்தது. குறுகி ய பீடபூமியின் இருபுறமும் தரை கூர்மையாக சரிந்து, பள்ளத்தாக் குபாலைவனங்களுக்குச் சென்ற து, ஆடுகள் எப்போதும் வழிதவறி தொலைந்து போகும் அபாயம் இருந்தது. மேய்ப்பனின் பணி நிலையானது மட்டுமல்ல, ஆபத்தானது, ஏனெனில், கூடுத லாக, அவர் மந்தையை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியிருந்தது, குறிப்பாக ஓநாய்களிடமிருந்து, மேலும் ஆடுகளைத் திருட எப்போதும் திருடர்களும் கொள்ளையர்களும் தயாராக இருந்தனர். 
  யார் நல்ல மேய்ப்பர்?
Who is a good Shephered?
 அன்பானவர்களே ஒரு நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளை அறிந் திருக்கிறது போல ஒரு திருச்சபை யின் போதகர் தன் மக்களை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டங்கள் என்ன? பிரச்சனைகள் என்ன? கவலைகள் என்ன? என்பதை தேடி, பேசி, கண்டு ஆலோசனை வழங்க வேண்டும்.
ஆயர் ஆலோசனை (Pastoral Counselling) என்பது உளவியல் மற்றும் இறையியல் கண்ணோட்ட ங்களை ஒருங்கிணைத்து தனி நபர்கள் தனிப்பட்ட சவால்கள், ஆன்மீகப் போராட்டங்கள் மற்றும் வாழ்க்கை மாற்றங்களை எதிர் கொள்ள உதவும் ஒரு வகை ஆலோசனையாகும்.
 ஆலயம் வராத திருச்சபை மக்க ளை தேடி அறிந்து, ஏன் வரவில் லை என்ற காரணத்தையும் தெரிந் து, அவர்கள் ஆலயம் வந்துஆண்ட வரின் வார்த்தையை கேட்கஊக்கு விக்க வேண்டும். அவர்களின் பிரச்சனைக்கு ஆண்டவரின்வார்த் தை தீர்வாக அமையும், மன அமை தியை தரும், மகிழ்ச்சியை தரும்.
 ஒரு ஆயர் இயேசு போல ஒரு நல்ல மேய்ப்பராக இல்லாவிட்டா லும் தன் பணியானது ஆடுகளை நல்வழிப்படுத்துவது தான் என்ற சிந்தனையுடன் செயல் பட்டாளே போதும்.
இயேசு ஒரு மேய்ப்பனைப் போல, தம்மைப் பின்பற்றுபவர்களை மிகவும் கவனித்துக்கொள்கிறார், அவர்களை வழிநடத்தி பாதுகாக் கிறார்.   இயேசு தம்மைப் பின்பற் றுபவர்களை சரியான பாதையில் வழிநடத்துகிறார், வழிநடத்துத லையும் ஆதரவையும் வழங்குகி றார்.
 ஆயர்கள் வீடு வீடாக செல்வது கடினம் தான். ஆனால் தன் கையில் கைபேசி இருக்கிறதல் லவா? அதன் மூலம் கூட தொடர்பு கொண்டு பேசலாம், வாழ்த்தலாம், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம், இறைவேண்டல் செய்யலாம். 30 ஆண்டுகள் முன் பாக செங்கல்பட்டு சிஎஸ்ஐ அந்திரேயர் தேவாலயத்தில் அருட்திரு ஜான் விக்டர் என்ற ஆயர் பணி செய்தார். அவர் ஒவ்வொரு நல்ல நாட்களிலும்  எதிர்பாராத விதமாக குடும்பத்தில் உள்ள மக்களை சென்று  வாழ்த் துவார், ஜெபிப்பார், நேரடி தொட ர்பு கொள்வார் எப்படி இருக்கிறீ ர்கள் என்று கேட்பார். உதவியும் செய்வார். அவர் மறைந்து விட்டா லும் அவர் பணியை இன்றும் நினைவுபடுத்த முடிகிறது.
 இது ஒரு நல்ல மேய்ப்பருக்கு உள்ள ஒரு அடையாளமாகும். 
  ஆண்டவர் தன்னையே நல்ல மேய்ப்பராக வெளிப்படுத்திய தால்  ஆடுகளும் (திருச்சபை மக்கள்)அவரது குரலுக்கே செவி சாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். திருச்சபையில் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் பல பிரச்சினைகள் இக்காலங்க ளில் உண்டு. நம் திருச்சபைகள் இவைகளை கண்ணோக்கிப் பார்க்க வேண்டும். தங்களால் ஆன உதவியை மக்களுக்கு செயலாற்றுவதே ஒரு திருச்சபை யின் மனிதநேய அருட்பணியா கும். ஏனெனில் திருச்சபை ஆண்டவரின் இறைமக்கள்:  
கிறித்துவின் மந்தை. 
 அவ்வாறே ஆடுகளும் அவரை பின்தொடரும்.  ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதித்து காப்பாராக.
ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.









The Good Shepherd, made AD. 300–350 and discovered in the 18th century at the Catacomb of Callixtus, Rome. Source: Wiki


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.