இழப்பை என்ணாது ஈதல் (216) Giving Without Counting The Cost. தொடக்க நூல்: 13:8-16, திருப் பாடல்கள்:15, 2.கொரிந்தியர் 8:1-15, மாற்கு 14: 3-11.

முன்னுரை
 கிறிஸ்துவுக்கு பிரியமான அன்பர்களே! உங்க அனைவரு க்கும் இறைமைந்தன்  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது,இழப்பை என்ணாது ஈதல். (Giving Without Counting The Cost.)
 கடவுளுக்கு "இழப்பை எண்ணா மல் கொடுப்பது" என்பது நம் நேரம், வளங்கள் அல்லது அன்பை இலவசமாக வழங்குவதாகும், அதற்கு ஈடாக நமக்கு என்ன கிடை க்கும் என்பதைக் கருத்தில் கொள் ளாமல் . தாராள மனப்பான்மை மற்றும் தன்னலமற்ற கொடுப்பை வலியுறுத்துகிறது , இது கிறிஸ் துவின் தியாக அன்பைப் பிரதி பலிக்கிறது. இக்கருத்தை இறை வேண்டலாக வலியுறுத்தியவர்  முதன் முதலாக இயேசு சபையி னை ஆரம்பித்த  புனித இக்னே ஷியஸு லயோலாவின்   கருத் தாகும்.  (To Give and Not to Count the Cost - Ignatian Spirituality)
 தனிப்பட்ட ஆதாயம் அல்லது கணக்கீட்டால் தூண்டப்படாத கொடுக்கும் மனப்பான்மையை வலியுறுத்துகிறது.  இழப்பை கணக்கிடாமல் கொடுப்பது என் பது உண்மையான, தன்னலமற்ற தாராள மனப்பான்மை பற்றியது. இது தியாகத்தை அடிப்படையாக கொண்டது. 
கடவுளால் அறிவுறுத்தப்பட்டபடி, விசுவாசகளின் தந்தை  ஆபிர காம் தனது மகன் ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது, செலவைக் கணக்கிடாமல் கொடுக்கும் ஒரு இறுதிச் செயலைக் காட்டுகிறது.
ஆபிரகாமின் ஆரம்பச் செயல் கீழ்ப்படிதலும், தனக்கு மிகவும் விலைமதிப்பற்றதைக் கைவிடத் தயாராக இருப்பதும், தன்னலம ற்ற நன்கொடையின் மனப்பான் மையை வெளிப்படுத்துகிறது.   
நற்செய்தியாளர் யோவானின் கூற்றுப்படி கடவுள் நம்மீதும், இந்த உலகத்தின் மீதும்  அன்பு கூர்ந் தது தான் முதல் ஈகை.
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொரு ட்டு அந்த மகனையே அளிக் கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். 
(யோவான் நற்செய்தி 3:16)
வாழ்க்கையில் நம்மிடம் உள்ள அனைத்தும் கடவுளின் பரிசு. 
 இஸ்ரேல் நாட்டில் இரண்டு பிரபலமான கடல்கள் உள்ளன, கலிலெயா கடல் (The Sea of Galilea)மற்றும் சவக்கடல்.(Dead Sea) இந்த கடல்கள் உண்மையில் ஏரிகள், இதில் யோர்தான் நதியிலிருந்து பாயும். கலிலெயா கடல் என்பது மீன்கள் மற்றும் பிற வகையான கடல்வாழ் உயிரினங் களால் நிறைந்த ஒரு நன்னீர் ஏரியாகும், அதே நேரத்தில் சவக் கடல் என்பது எந்த உயிரினங்க ளையும் தாங்க முடியாத அதிக செறிவுள்ள உப்பு நீர் ஏரியா கும்.கலிலீயா கடல் தண்ணீரைப் பெறுகிறது மற்றும் தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றுவதற் கான ஒரு வடிகால் உள்ளது, அதேசமயம் சவக்கடல் தண்ணீ ரை மட்டுமே பெறுகிறது மற்றும் ஆவியாதல் மூலம் தவிர வேறு எந்த வடிகாலும் இல்லை. கொடுப் பதும் பெறுவதும் நம்மை உயிர்ப் புடன் வைத்திருக்கிறது, ஆனால்,
சவக்கடல் போலகொடுக்காமல் பெறுவது நம்மை தேக்கநிலையி லும் மரணத்திலும் ஆழ்த்துகிறது.
கடவுளின் உன்னத பரிசு மன்னி ப்பு, அதற்கு ஈடாக நாம் என்ன தருகிறோம். ஆண்டவர் தம் சீடர் களை இவ்வுலகிற்கு அனுப்பும் போது,"கட்டணம் இல்லாமல் பெற்றீர்கள், கட்டணமின்றி கொடுங்கள்" (மத்தேயு 10:8) என்றார். நாம் இதையே பின் பற்றுவோம் 
1.இழப்பை எண்ணாது பகிர் தல். Sharing Without Counting The Cost. தொடக்கநூல். 13:8-16
 கிறிஸ்துவுக்குள் பிரியமான நண் பர்களே! லோத்து ஆபிரகாமின் சகோதரன் ஆரானின் மகன். ஆரான் இறந்தபோது, ​​ஆபிரகாம் லோத்தை தன் பொறுப்பில் ஏற்று க்கொண்டார், அவர்கள் ஒன்றாகப் பயணம் செய்தனர். ஒரு கால கட்டத்தில் அவர்களுடைய ஆட்டு மந்தை மிகவும் பெருகியதால் இவர்களின் மேய்ப்பர்கள் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டன. இதனால்,ஆபிராமும், லோத்தும் தங்களிடமிருந்த மந் தைகளையும், உடைமைகளையும் பிரித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.லோத்துக்கு தனக்குப் பிடித்தமான நிலத் தைத் தேர்ந்தெடுக்க ஆபிராம் தாராளமாக அனுமதி அளிக் கிறார். அதன்படி, ஆபிராம் லோத்திடம், "நாம் இருவரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது, ஏனெனில் நம்முடைய ஆட்களுக் குள் சண்டை வருகிறது. எனவே, நீ எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக் கிறாயோ, அது உனக்கு; நான் மறுபக்கம் போகிறேன்" என்றார். இது அவர்களின் உறவின் வலிமையையும் ஆபிரகாமின் குணத்தையும் நிரூபிக்கிறது. அதுமட்டுமன்றி,
 அழகாக தோன்றுவதெல்லாம் ஆபத்துதான்.
 நண்பர்களே! லோத்து யோர் தான் சமவெளியைப் பார்த்தான், அது மிகவும் கண்ணிற்கு பசுமை யானதாகவும், நீர்ப்பாசன வசதியு ள்ளதாகவும், அழகாகவும் இருந் தது. எனவே, அவன் அந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தான் அது  சோதோமை நோக்கிச் செல்கிறது..   ஆபிராம் சாத்திய மான மோதல்களுக்குப் பதிலாக அமைதியைத் தேர்வு செய்கி றார். அதில் ஆபிரகாம் வாக்குப்ப ண்ணப்பட்ட தேசத்தின் ஒரு பகுதியை லோத்துக்கு கொடு க்க ஒப்புக்கொள்கிறார், அது மோதலை அமைதியாகத் தீர்க்கிறது. ( இரண்டு தரப்பினரி டையே தொடர்பான வளத்தை நியாயமான முறையில் பிரித்துத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை) 
தன் சகோதரனுக்காக விட்டுக் கொடுக்கிறார். விட்டுக் கொடு த்தவர்கள் கெட்டுப் போனதில் லை.
 அன்பர்களே நம் குடும்பத்தில் இப்படி சொத்து, பாகப்பிரிவினை களுக்கு நாம் எப்படி நடந்து கொள் கிறோம்? ஆபிரகாமை போலவா லோத்தை போலவா? ஆபிராம், தனது சொந்தத் தேவைகளை விட தனது சகோதரனின் தேவைக ளையே முன்னிறுத்துகின்றார்..   
அவர், தன் சகோதரனுக்காக விட்டுக் கொடுத்ததினால், ஆண்ட வர் லோத்து பிரிந்து சென்றபின், ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, "நீ பார்க்கிற இந்த தேசம் முழுவதும் உனக்கும் உன் சந்ததிக்கும் நான் கொடு ப்பேன். உன் சந்ததி வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகும்" என்று வாக்குறுதி கொடுத்தார்.ஆபிராம் கானா னில் தொடர்ந்து பயணம் செய்து, எபிரோனில் குடியேறினான்.
கானான் நாட்டின் வாக்குறுதி:
ஆண்டவர் ஆபிராமுக்குக் கொடுத்த வாக்குறுதி, அவனு டைய சந்ததியார் இந்த தேசத்தில் பெருகி, அதை சொந்தமாக்கிக் கொள்வார்கள் இது ஆபிராமின் விசுவாசத்தையும், தேவன் அவனு க்கு அளித்த வாக்குறுதியையும்,  காட்டுகிறது. சகோதர அன்பில் நிலைத்திருங்கள். (எபிரேயர் 13:1) என்ற வேத வாக்கின்படி நாம் வாழ பழகிக் கொள்வோம்.
2.இழப்பை எண்ணாத மாசிடோ னியர். Macedonian who does not count the Cost. 2.கொரிந்தியர் 8:1-15
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!மாசிடோனியா பண்டைய கிரேக்கத்தின் வடக்குப் பகுதியில் ஒரு ரோமானிய மாகாணமாக இருந்தது.   கிரேக்கத்தின் வடக் குப் பகுதி மாசிடோனியா என்று அழைக்கப்பட்டது . தெற்குப் பகுதி அகாயா என்றும், கொரிந்து நகரம் அகாயா பகுதியில் இருந் தது என்றும் பவுல் எழுதுகிறார்.மாசிமாசிடோனிய திருச்சபை ஏழையாக இருந்த போதிலும், அவர்கள் திருதூதர் களின் தேவைகளுக்கு ஏற்பவும் அதற்கு அப்பாலும் கொடுத்தார் கள். பவுல் அதைப் பாராட்டுகி றார்.இழப்பைக் கருத்தில் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் கொடுங்கள் என திருதூதர் பவுல் அடிகளார் கொரிந்து திருச்
சபையை வேண்டுகிறார். அதற்கு மாசிடோனிய திருச்சபையை உதாரணம் காட்டுகிறார். அவர்கள் துன்பத்தையும் வறுமையையும் அனுபவித்த போதிலும், தங்கள் சக்திக்கு அப்பால் கொடுக்கத் தயாராக இருப்பதற்காக புனித பவுல் அவர்களைப் பாராட்டுகி றார். அவர்கள் "தங்கள் சக்திக்கு மீறி"கொடுத்தார்கள்.எருசலேமில் உள்ள தேவாலயத்தை ஆதரிப்பதற்காக மக்கெதோனியா தேவாலயங்கள் அளித்த நன்கொ டைகளை குறிப்பாகப் பாராட்டுகி ன்றன. 
மாசிடோனிய தேவாலயங்கள் மற்ற ஆரம்பகால கிறிஸ்தவ சமூகங்களுக்கு நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தாராள மனப்பான்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக செயல்பட்டன.
மாசிடோனியர்கள் இரண்டு வழிகளில் கொடுத்தார்கள்.
முதலாவதாக, அவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்ப கொடுத்தார்கள் ,
இரண்டாவது, தங்கள் திறனுக்கு அப்பாற்பட்டதைக் கொடுத்தார் கள்.
 தூய பவுல் அடிகளார் ஏன் காணிக்கை பணத்தை எருச
லேமிற்கு அனுப்பினார்?
 அன்பர்களே! திருத்தூதர் 
பவுல் அடிகளார் எருசலேம் தேவாலயத்திற்கு  சேகரிப்பாக பணத்தை (Jerusalem Collection} அனுப்பினார், முதன்மையாக அங்குள்ள ஏழை விசுவாசிகளு க்கு உதவுவதற்காக .  இந்த காணி க்கை, பவுலின் புற இனத்து திருச்சபைகள் எருசலேமில் உள்ள யூத தேவாலயத்துடன்  ஒற்று மையை வெளிப்படுத்த ஒரு வழியாகும். இது ஒரு நடைமுறை தர்மச் செயலாகும், The act of Charity.மேலும் யூத மற்றும் புற இனத்து விசுவாசிகளுக்கு இடையே நல்லிணக்கத்தை (Goodwill )வளர்க்கவும் உதவியது.   குறிப்பாக பஞ்ச காலங்களில் ஜெருசலேம் தேவாலயம் குறிப் பிடத்தக்க வறுமையை எதிர் கொண்டது. இந்த விசுவாசிகளு க்கு நடைமுறை உதவியை வழங் குவதே பவுலின் சேகரிப்பின் நோக்கமாகும்.கிபி. 57 ஆம் ஆண்டு வாக்கில் இறுதி செய்யப்பட்ட இந்தப் 'பங்களிப்பு', ஒரு தசாப்தத்திற்கு முன்னர் எருசலேமில் பவுலும் பர்னபாவும் எருசலேம் தேவாலயத்தின் ' தூண்களாக இருந்தனர்.
 திருத்தூதர்பவுல் அடிகளார் தீத்துவை( Titus). கொரிந்து சபைக்கு அனுப்பி, கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில், அவர் கொடுப்பதில் இருக்கும் கிருபையை வலியுறு த்துகிறார், மேலும்  கொடுப்பது கிருபையின் பரிசு என  குறிப் பிடுகிறார்.கொடுப்பது என்பது ஒரு கட்டளை அல்ல, ஆனால் கிருபையின் செயல் என்பதை பவுல் வலியுறுத்துகிறார். அவ்வா றே நாம் செய்ய அழைக்கப்படு கின்றோம் 
3 அன்பு இழப்பை என்ணாது.
Love Without Counting The Cost. 
மாற்கு 14: 3-11.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக, 
பெத்தானியா கிராமத்தில், தொழுநோயாளியான சீமோன் என்பவரின் வீட்டில் இருந்தார்.
மேலும். பெத்தானியா மற்றும் பெத்பகே யாத்ரீகர்கள் தங்கும் இரண்டு வெளிப்புற கிராமங்கள்.
பொதுவாக,எருசலேமிலிருந்து 15 மைல்களுக்குள் வாழ்ந்த ஒவ் வொரு வயது வந்த ஆண் யூத ரும் பஸ்கா பண்டிகை வருவது
கட்டாயமாகும்..
ஒரு பெண் ஒரு அலபாஸ்டர் தைலக் கோப்பையுடன் இயேசு விடம் வந்தாள்.(இயேசுவுக்கு விலையுயர்ந்த வாசனை திரவி யத்தால் அபிஷேகம் செய்த பெண் மார்த்தாள் மற்றும் லாசரு வின் சகோதரி மரியாள்.The Mary of Bethany) ஒரு விருந்தினர் வீட்டிற்கு வரும்போது அல்லது அவர் சாப்பிட அமர்ந்தபோது, ​​சில துளிகள் வாசனை திரவியத்தை ஊற்றுவது வழக்கம்.
"இது தொலைதூர இந்தியாவிலி ருந்து வந்த ஒரு அரிய தாவரத் திலிருந்து தயாரிக்கப்பட்ட மிக வும் விலையுயர்ந்த தைலமாகும்
( William Barclay, Study light org)
அவளுடைய செயல், அருகில் இருந்த சிலரிடமிருந்து வெறுப்பூ ட்டும் விமர்சனங்களைத் தூண் 
டியது. அந்தக் குடுவையின் மதிப்பு 300 டெனாரிக்கு மேல். ஒரு டெனாரியஸ் என்பது ஒரு ரோமானிய நாணயம், இது ஒரு தொழிலாளியின் தினசரி கூலி யாகும்.சிலருக்கு இது ஒரு அவமா னகரமான வீண் விரயமாகத் தோன்றியது; அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்க லாம். ஆனால் இயேசு அதைப் புரிந்துகொண்டார். அவர்களுடை ய சொந்த வேதவசனங்களை அவர் அவர்களுக்கு மேற்கோள் காட்டினார். "ஏழைகள் ஒருபோதும் தேசத்திலிருந்து வெளியேறமாட் டார்கள்." ( இணை சட்டம்15:14 .) "நீங்கள் எந்த நேரத்திலும் ஏழைகளுக்கு உதவலாம்," என்று இயேசு கூறினார், "ஆனால் இப்போது எனக்காக எதையும் செய்ய உங்களுக்கு விருப்பமில் லை." "இது," அவர் கூறினார், "என் உடலை அடக்கம் செய்வதற்காக முன்கூட்டியே   திருவருட்பொழிவு செய்வதுபோன்றது." இது என் மேல் வைத்த அன்பை குறிக் கிறது. "அன்பு நல்ல காரியங் களை மட்டும் செய்வதில்லை. அன்பு அழகான காரியங்க ளைச் செய்கிறது." அன்பு என்பது ஒரு சில விசயங்களைக் காண முடியும், அதைச் செய்வ தற்கான வாய்ப்பு ஒரு முறை மட்டுமே வருகிறது.
இயேசுவின் வெல்ல முடியாத நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை நாம் காண்கிறோம். சிலுவை இப்போது நெருங்கி வந்தது, ஆனால் அது முடிவு என்று அவர் ஒருபோதும் நம்பவில்லை. நற்செய்தி உலகம் முழுவதும் பரவும் என்று இயேசு நம்பினார். மேலும் நற்செய்தியுடன் இந்த மேரியின் அழகான காரியத்தின் நிகழ்வு நினைக்கும்படியாக,
"உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல் கிறேன்" என்று கூறினார். 
(மாற்கு நற்செய்தி 14:9) இது உண்மையல்லவா?
கிறிஸ்தவர்கள் யார்?
Who are the Christians?
 கிறிஸ்துவுக்குள் பிரியமான வர்களே! கிறிஸ்தவர்கள் என்றா லே கொடுப்பவர்கள் என்று அர்த்தமாகும். நம் ஆண்டவர் இவ்வுலகிற்கு, நமக்கு வாழ்வு தரும் பரிசாக கொடுக்கப்பட்டார். எனவே கிறிஸ்தவர்களாக நாம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
 கொடுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் என்றார். ஆண்டவர் கூறுகின்ற போது, "இவ்வாறே மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். 
(மத்தேயு நற்செய்தி 20:28) எனவே நாம் கொடுக்கின்ற இனமாக அறியப்படுகின்றோம். பிறருக்கு கொடுக்காமல் ஒருவன் கிறிஸ்து வனாக இருக்கவே முடியாது. கொடுப்பது தான் கிறிஸ்துவ வாழ்க்கை. உண்மையான அன்பு பெறுவதல்ல, கொடுப்பதன் மூலம் அறியப்படும். திருத்தூதர் பவுல் அடிகளார் திருத்தூதர் பணி 
 20:35-ல், இயேசு இவ்வாறு கற்பித் தார் என்பதை, இவ்வாறு பாடு பட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்று க் கொள்வதைவிட கொடுத்தாலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்." 
(திருத்தூதர் பணிகள் 20:35)
 இறைவழக்கினர் ஏசாயா அவர்கள் "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்" (ஏசாயா 9:6)
என்கிறார்.கடவுள் நமக்காக கொடுக்கப்பட்டவர் எனவே நாமும் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம். 
2.கொரி. 9: 7 இல் கடவுள் மகிழ்ச்சி யுடன் கொடுப்பவரை நேசிக்கிறா ர் என்று கற்பிக்கிறார்.Do you want
to be loved? If so, give or donate, the
Best you have நாம் பிறருக்கு கொடுக்கும் பொழுது நம்மில் உள்ள சிறந்ததியை கொடுக்க வேண்டும் இஸ்ரேல் மக்கள் தங்களுடைய முதல் பேரான வற்றை கடவுளுக்காக கொடுத் தார்கள் இது அவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளை, திருச் சட்டமாகும் நமக்கு சட்டங்கள் வழங்கவில்லை, ஆனால் ஆண்டவரின் கிருபை கொடுக் கப்பட்டு இருக்கிறது கொடுங்கள் அப்போது உங்க ளுக்கு கொடுக்கப்படும் என்ற வார்த்தை நம்முடைய வாழ்வில் நிலையாக இருக்க வேண்டும் நம்மில் எது மிக சிறந்ததோ அதையே கொடுக்க வேண்டும் 
கொடுப்பது, ஒரு கட்டாயத்தின் பேரிலோ அல்லது ஒருவருடைய அழுத்தத்தின் பேரிலோ இருக்கக் கூடாது.உள்ளதைக்கொண்டு கொடுப்பது: ஒருவர் தன்னிட முள்ளதைக்கொண்டு கொடுக்க வேண்டும், இல்லாததை எண்ணி கவலைப்படக்கூடாது.ஒருவருக் கொருவர் சமமாக கொடுப்பது. தானாக முன்வந்து கொடுப்பது. கொடுப்பதன் மூலம், ஏற்றத்தாழ் வுகள் சமப்படுத்தப்பட வேண்டும்.
 திருத்தூதர் பவுல் அடிகளார் 
இவ்வாறு பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக் கொள்வதை விட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறிய தை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்." (திருத்தூதர் பணிகள் 20:35) பெறுவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம்' என்று கூறுகிறார். எனவே பிரியமான வர்களே! நாம் கடவுளுக்காக முழுமையாக நம்மை கொடுக்க முடிவு எடுப்போம் செயல்படு வோம். அவ்வாறு இருக்க கடவுள் கிருபை செய்வாராக ஆமென் 



Prof. Dr. David. Arul Paramanandam.
Sermon writer 

www.davidarulsermoncentre,
www.davidarulblogspot.com.

  
























ஆபிரகாமும் லோத்தும் நிலத்தைப் பிரித்தனர் ( சார்லஸ் ஃபாஸ்டரின் 1897 பைபிள் படங்கள் மற்றும் அவர்கள் நமக்கு என்ன கற்பிக்கிறார்கள் என்பதிலிருந்து விளக்கம்) Source: Wiki.


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.