அருட்பொழிவு திருப்பணி: கிறிஸ்துவின் நறுமணம் (219). Ordained Ministry: Fragrance of Christ. விடுதலைப் பயணம் : Exodus 29:1-9 திருப்பாடல்கள்: Psalms 99, எபேசியர் Ephesians 5: 1-14, Luke லூக்கா : 10: 1-11.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." 
 இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "அருட். பொழிவு திருப்பணி: கிறிஸ்து வின் நறுமணம். Ordained Ministry: Fragrance of Christ.
 அருட்பொழிவு திருப்பணி என்றால் என்ன? What is the Ordained Ministry? 
 ஒருவரை கிறித்துவ முறைப்படி அதிகாரப்பூர்வமாக பாதிரியார் களாகவோ பேராரயராகவோ, பிரதம பேராயராகவோ உருவாக் குவதே அருட்பணியாகும். 
 இவர்களின் பிரதான நோக்கமாக இருப்பது,கிறிஸ்துவின் ஆட்சியை உலகெங்கும் நிறுவ, அவர்கள் ஆற்றும் நற்செய்திப் பணியைக் குறிக்கிறது. "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்று ங்கள்.". என்பது கடவுளின் ஆணை.ஒரு அருட்பணியாளர் இறைவனின் அன்பார்ந்த ஊழி யர் என்று சொல்லப்படுகிறார். 
அருட்பணியாளர்  என்ற முறை யில் இறை வார்த்தையில் வளர்ந்து, பிறரையும் ஆன்மிக வாழ்வில் வளர உதவுவது அருட் பணியாளரின் முதல்கடமை.  
அவர்கள் கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது’(2 கொரிந்தியர் 5:14) என்ற இறை வார்த்தையின்படி பணியாற்ற வேண்டும். 
 அருட்பணியாளர்களின் அடையாளம் சாது சுந்தர் சிங் :
 கிறிஸ்துவின் நண்பர்களே! அருட்பணியாளர் என்றால் நமக்கு வழிகாட்டியாய் இருப்பவர் நமது சாது சுந்தர் சிங் ஐயா அவர்கள்.
பனிபடிந்த பிரதேசத்தில் வெறுங் கால்களுடன் நடந்து செல்வதால் கற்களும் முட்களும் அவரது பாத ங்களைக் கிழித்தது. இரத்தம் கசிந்த அவருடைய பாதங்கள் வெண்மையான பனியின்மீது சிவந்த அடிச்சுவட்டை இட்டுச் சென்றன.
இவர்,சீக்கிய குடும்பத்தில் பிறந் து, இந்துசமய நூல்களில் தீராத பற்றுள்ளவராய், வேதாகமத்தைத் தீயிட்டுக் கொலுத்தியவர் இரட்சிக் கப்பட்டபின் பெற்றோரால் விரட்ட ப்பட்டார். ஆனால்,நற்செய்தியை திபெத் நாட்டிற்கும், இன்னும் ஆண்டவரைப் பற்றி கேள்விப்ப ட்டிராத இடங்களுக்கும் எடுத்துச் செல்வதற்காகப் பாரமடைந்தவரா கப் புறப்பட்டுச் சென்றார் சாது சுந்தர்சிங்.ஓரிடத்தில் அவர் உட்கா ர்ந்து தன் புண்களைக் கட்ட ஆரம் பித்தார். அவ்வழியே வந்த ஒரு வர், “ ஐயா எப்படி இருக்கிறீர்கள்  எனக் கேட்டார். அதற்கு அவர் “எனதருமை இரட்சகராம் இயே சுகிறிஸ்துவில் நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கின்றேன்” என்றார். ‘இரத்தம் கசியும் வெறுங் கால்களால் மலையின்மீது இவ் வாறு பயணம் செய்வது ஏன்’ என்று அவர் கேட்டதற்கு,“கல்வாரி சிலுவையிலே தமது கால்களி ல் இரத்தம் சிந்தின இயேசுவை மக்களுக்குக் காண்பிப்பதற் காக இவ்விதமாகச் செய்கி றேன்” என்று பதிலுரைத்தார் சாது சுந்தர்சிங் அவர்கள். இறை வாக்கினர் ஏசாயா கூறுவதுக் கேற்ற சாது சுந்தர்சிங்கின் பாதங்கள், "நற்செய்தியை அறிவி க்கவும், நல்வாழ்வைப் பலப்படுத் தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக் கி, "உன் கடவுள் அரசாளுகின் றார்" என்று கூறவும் வருவோனி ன் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின் றன! (எசாயா 52:7)
 இவ்வார்த்தை சாது சுந்தர்சிங் கிற்கு  மிகவும் பொருத்தமானது.
ஒரு அருட்பணியாளரின் மிகச் சிறப்பான பணி என்ன வெனில் இயேசு கிறிஸ்துவை மக்களு க்கு காட்டுவது. அறிவிப்பது,
அருட்பணியாளர் ஒருவர் கிறிஸ் துவின் மீதான தனது நம்பிக்கை யையும், அவர் வாழ்நாள் முழுவ தும் அவருக்கு சேவை செய்வதற் கான தனது உறுதிப்பாட்டை மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்து வதும், செயலாற்றுவதுமாகும்.
 பழைய ஏற்பாட்டில் அருட் பணி. Ordained Ministry in the Old
Testanent.
 நண்பர்களே, பழைய ஏற்பாட்டில், "அருட்பணி ஊழியம்" என்பது முதன்மையாக கூடாரத்திலும் ஆலயத்திலும் சேவை செய்வதற் காக ஆசாரியர்களையும், லேவி யர்களையும், அரசர்களையும் இறை ஒப்படைப்பு செய்வதைக் குறிக்கிறது. இஸ்ரவேலில்  முதல் அரசராக ஆசாரிய ஊழியம் செய்தவர் மெல்கிசேடக்.  இதற் கு நீதியின் அரசர் என்று பெயர். இவர் சாலேமின் அரசர், உன்னத மான தேவனுடைய ஆசாரியருமா ய் இருந்தார். ஆபிரகாம் கெதோர் லாயோம ரோடு போர் செய்து வென்றபின், மெல்கிசேதேக்கு ஆபிரகாமை சந்தித்து அப்பமும், திராட்சைரசமும் கொடுத்து ஆசீர் வதித்தார். மெல்கிசேதேக்கு இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு முன்வடிவமாகக் கருதப்படுகி றார்.மெல்கிசேதேக்கு "சமாதான த்தின் ராஜா" என்றும் அறியப்படு கிறார். 
 அருட்ப பணியாளர்களுக்கு எண்ணெய் அபிஷேகம், பலிகள் மற்றும் கைகளை வைத்தல் போன்ற குறிப்பிட்ட சடங்குகளை செய்யப்படுகின்றன , இது பரிசுத் த சேவைக்காக தனிநபர்களை ஒதுக்கிவைப்பதைக் குறிக்கிறது, இது வெறும் மனித முடிவாக இல்லாமல் ஒரு தெய்வீக நியம னம்.   (Divine annointment.)
ஆரோனும் அவருடைய மகன்க ளும் முதலில் ஆசாரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். . (விடுதலைப் பயணம் : 29:9) இவர்கள் லேவி கோத்திரத்தினர்.  ஆரோனையும் அவருடைய மகன் களையும் நியமித்ததை விவரிக் கிறது.
புதிய ஏற்பாட்டில் அருட் பணி. Ordained Ministry in the New
Testanent.
 நண்பர்களே புதிய ஏற்பாட்டில், இயேசுவே பன்னிரண்டு சீடர்க ளை தேர்ந்தெடுத்து நியமித்தார், இது திருச்சபைத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முன்னு தாரணத்தை அமைத்தது. திருத்தூதர் பணிகள்  6:6 இல் , திருதூதுவர்கள் சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேர் மீது கைகளை வைத்தார்கள், இது அவர்களின் நியமனத்தைக் குறிக் கிறது: "அவர்கள் இந்த மனிதர் களை அப்போஸ்தலர்களிடம் ஒப்படைத்தார்கள், அவர்கள் ஜெபித்து அவர்கள் மீது கைகளை வைத்தார்கள்." அப்போஸ்தலர் கள் இயேசுவால் தேர்ந்தெடுக் கப்பட்டு, பிரசங்கிக்கவும், கற்பிக் கவும், குணப்படுத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டனர் . அவர்கள், மூப்பர்கள் மற்றும் டீக்கன்கள் போன்ற தலைமைப் பாத்திரங் களில் பணியாற்ற மற்றவர்களை நியமித்து, பரிசுத்த ஆவியைப் பெற்று, அவர்களின் ஊழியத்தை அங்கீகரிக்க தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்தனர்.
 அருட்பணி என்பது கைகளை வைத்து திருச்சபை மக்களை ஆசீர்வதிப்பது.கைகளை வைப் பது அதிகாரம் பரிமாற்றத்தையும், வரவிருக்கும் பணிகளுக்கு பரிசுத்த ஆவியின் வல்லமையை யும் குறிக்கிறது. 2 தீமோத்தேயு 1:6-ல் , கைகளை வைப்பதன் மூலம் வழங்கப்பட்ட கடவுளின் வரத்தைப் பற்றி திருத்தூதர்பவுல் அடிகளார் தீமோத்தேயுவுக்கு நினைவூட்டுகிறார்: "இதனால்தான், என் கைகளை வைப்பதன் மூலம் உன்னில் இருக்கும் கடவுளின் வரத்தை அனல்மூட்டி எழுப்பும்படி நான் உனக்கு நினைவூட்டுகிறேன்."
 எனக் கூறுகிறார்.
 திருச்சபை  அருட்பணியாளர் களின் முதல் மற்றும் நேரிடை   பணித்தளம். இவர்களே திருச்சபையின் தலைவர்கள். திருச்சபை என்பது ஒரு மனித நியமனம் மட்டுமல்ல, ஊழியத்திற்கான தெய்வீக அழைப்பு மற்றும் அதிகாரமளிப் பதாகக்கருதப்படுகிறது.  திருச்சபையின் அருட்பணி 3வித பணிகளை முன்வைக்கிறது பேராயர், ஆயர்,  டீக்கென்ஸ்.
 இவர்களே, திருச்சபையின் நறுமணமாக, நல் மெய்ப்பராக  செயல்பட அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடன் கிராம சபை ஊழியர்களின் பணி மிக மகத்தானது இவர்களே அடி மட்ட மக்களை நேரடியாக தொடர் புகொள்ளும் திருப்பணியாளர்கள் இவர்களும் மேய்ப்பர்களே. உள் ளூர் ஆயர்களால் அருட் பொழிவு பெற்றவர்கள்.நாம் என்றுமே அவர் களின் மந்தையாக இருக்கிறோம்.
1.ஆரோன் முதல் பிரதான ஆசாரியன்., Aron- the Most High
Priest விடுதலைப் பயணம் : Exodus 29:1-9.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆரோன் தான் இஸ்ரவே லர்களின் முதல் பிரதான ஆசாரி யர். அவர் மோசேயின் மூத்த சகோதரர் மற்றும் லேவி கோத்திர த்தைச் சேர்ந்தவர். கடவுளால் நியமிக்கப்பட்ட இவர்,.  இஸ்ர வேல் மக்களுக்கு ஆசாரியத்துவப் பணிகளைச் செய்ய நியமிக்கப் பட்டார். அருட்பொழிவு திருப் பணி என்பது மனித கண்டு பிடிப்பு அல்ல, தெய்வீக நியம னம்.
பண்டைய இஸ்ரேலில் ஜீவனுள்ள கடவுள் மீதான விசுவாசத்தின் மையப் பகுதியாகவும், ஆண்ட வரை வணங்கும் இடமாகவும்  இருந்த வடிவமைப்பு, ஆசரிப்பு 
கூடாரம்  (Tabernacle ) என்று அழைக்கப்பட்டது.அதில் ஒரு பேழை, (an ark உடன்படிக்கைப் பெட்டி ) ஒரு பலிபீடம், (an altar), மேசைகள்(Tables),விளக்குத்தண்டுகள், (Golden Lamp stand or menorah) திரைச்சீலைகள் (Curtains) மற்றும் பல இருந்தன. இந்த கூடாரம் எடுத்துச் செல்லக் கூடியவை. நீதி  அரசர் சாலமன்  (கி.மு 970 to 931) நிரந்தர கட்டமை ப்பான ஆலயத்தைக் கட்டும் வரை, அடுத்த 400-500 ஆண்டுகளுக்கு, இந்த எடுத்துச் செல்லக்கூடிய கூடாரம், இஸ்ரவேலர்களுக்கு பலிபீடமாகவும் கடவுளை வணங் குமிடமாக இருந்தது. இந்த கூடார த்தில் பணி செய்வதற்காகத்தான் கடவுள் முதன் முதலாக ஆசாரி யர்களை தேர்வு செய்கிறார் . இந்த ஆசாரியர்களுக்குள்தான் ஒரு பிரதான ஆசாரியன்  தேர்வு செய்யப்படுவார். இஸ்ரவேலில் முதல் பிரதான ஆசாரியன் ஆரோ ன். இத்தகைய ஆசாரியப் பணி செய்கிறவர்களை தான் நாம் இப்பொழுது அருட்பணியாளர் கள், ஆயர்கள் என்று அழைக்கி றோம். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஆசாரியர்கள் இஸ்ரவேலில் லேவி வம்சத்தை சேர்ந்தஆரோன் குடும்பத்தினர்  மட்டுமே ஆசாரிய பணி செய்ய கடவுளால் தேர்வு செய்யப்பட்ட வர்கள். இந்த ஆசாரியர்களை புனிதப்படுத்தும் பணியை (Consecration)ஒரு சடங்காக செய்ய ஏழு நாட்கள் ஆகும். இது ஒரு விழா ஆகும்.
அன்பர்களே! ஆரோனும் அவரு டைய நேரடி சந்ததியினர் மட்டுமே இஸ்ரவேலுக்கு ஆசாரியர்களாக இருக்க முடியும் என்று கடவுள் அதை அமைத்தார்.பிரதான ஆசா ரியன் கடவுளுக்கும் மனிதனுக் கும் இடையில் ஒரு மத்தியஸ்த ராக இருக்கிறார்.ஆசாரியர்
குழுவிற்குள், அவர்களில் ஒருவர் கடவுளால் "பிரதான ஆசாரிய ராக" அபிஷேகம் செய்யப்பட்டார். அவரது பணி சிறப்பு மற்றும் புனிதமானது, ஏனென்றால் அவர் மட்டுமே கூடாரத்தின் உட்புற இடத்திற்குள் செல்ல அனுமதிக் கப்பட்டார். இப்பகுதி மகா பரிசு த்த ஸ்தலம் (The Most Holy Place)என்று அழைக்கப்பட்டது இவ்விடத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் தான் பாவ நிவாரண நாளில்  பிரதான ஆச்சாரியார் உள்ளே செல்வார்.  மேலும் அவர் பாவங்களுக்கு  பரிகாரம் செய்ய இரத்த பலிகளை செலுத்த வேண்டியிருந்தது. இந்த பிரதான ஆசாரியன் முதலில், தனது சொந்த பாவங்களுக்கு பரிகாரம். அதன் பிறகு, மீதமுள்ள மக்களின் பாவங்களுக்கு பரிகா ரம் செய்யவேண்டியிருந்தது நித்திய பிரதான ஆசிரியரான (The Eternal High Priest)நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்க ளின் பாவங்களுக்காக மட்டும் தான், தன்னையே பரிகாரம் செய் தார்.பிரதான ஆசாரியன் கடவுளு க்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக இருக்கிறார்.
ஆசாரியப் பணி என்பது மகா மேன்மையானது. ஆசரிப்புக் கூடா ரத்தின் காரியங்களைக் கவனித் து பலிகளை நிறைவேற்றுவது மாத்திரமல்ல, தேவனுடைய வழி யில் மக்களை வழிநடத்துகின்ற மிகப் பெரிய பொறுப்பும் ஆசாரி யருக்குரியது (எபி.5:1). 
 இதை தான் நம் அருட்பணியாள ர்கள் செய்கிறார்கள்.அத்துடன்,  “ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய ஒருவ னும் இந்தக்கனமான ஊழியத்துக் குத் தானாய் ஏற்படுகிறதில்லை” (எபி.5:4). என்பதை நாம் மனதில் புரிந்து கொள்ள வேண்டும்.
தேவ பணிக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் பிரித்தெடுக்கப் பட்டவர்களாய் முன்மாதிரியாக வாழ வேண்டியது எத்தனை அவசியம்.
2. கிறிஸ்துவை பிரிதிபலிப் பதே அருட்பொழிவு திருப்பணி.
The Ordained ministry is a reflection of Christ. எபேசியர் 5:1-14.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!திருத்தூதர் பவுல் அடிகளார் எபேசியர் திருச்சபைக்கு எழுதுகி ன்ற பொழுது, கிறிஸ்தவர்கள் கடவுளைப் பின்பற்றவும் அன்பில் நடக்கவும் அழைக்கிறார், தூய்மை மற்றும் சத்தியத்தின் முக்கியத்து வத்தை வலியுறுத்துகிறார் . ஒரு காலத்தில் இருளில் இருந்த கிறிஸ்தவர்கள் இப்போது ஒளியி ன் பிள்ளைகளாக இருக்க அழைக் கப்படுகிறார்கள், நல்ல செயல்க ள், நீதி மற்றும் சத்தியத்தின் மூலம் கனிகளைத் தருகிறார்கள். . பாலியல் ஒழுக்கக்கேட்டின் ஆபத் துகள் மற்றும் கடவுளுக்குப் பிரிய மான வாழ்க்கையை வாழ வேண் டியதன் அவசியத்தையும், அறிவி ளிதனமான பேச்சைத் தவிர்த்து ஞானத்தைத் தழுவுவதையும் இந்தப் பகுதி குறிப்பிடுகிறது.   கடவுளின் அன்பான பிள்ளைக ளைப் போல, அவருடைய அன்பை யும் மன்னிப்பையும் பிரதிபலிக் கும் விதமாக, விசுவாசிகளை பவுல் ஊக்குவிக்கிறார்.
எபேசியர் நிருபம்"நிருபங்களின் ராணி",( the Queen of the Epistles,” )என அழைக்கப்படுகிறது. காரணம் சிறந்த கருத்துக்களை கொண்டுள்ளது. திருச்சபை பற் றிய அதிக உருவகங்களை கொண்டுள்ளது.
அருப்பொழிவு திருப்பணி இது கடவுளுக்குப் பிரியமான வாழ்க் கையை வாழ்வதை உள்ளடக்கி யது, அன்பு, தூய்மை மற்றும் உண்மை ஆகியவற்றால் வகைப் படுத்தப்படுகிறது.   
கிறிஸ்து அவர்களை நேசித்து, அவர்களுக்காகத் தம்மையே தேவனுக்கு நறுமணப் காணிக் கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தது போல, கிறிஸ் தவர்களும் அன்பில் நடக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த அன்பு உண்மையானதாகவும், சுய தியாகம் நிறைந்ததாகவும், மாற் றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.   
பவுல் முந்தைய வாழ்க்கையின் இருளை கிறிஸ்தவ வாழ்க்கை யின் ஒளியுடன் வேறுபடுத்திக் காட்டுகிறார். பாலியல் ஒழுக்கக் கேடு மற்றும் ஒழுக்கக்கேடு உள்ளிட்ட ஒழுக்கக்கேடான அல் லது முட்டாள்தனமான நடத்தை களில் ஈடுபடுவதற்கு எதிராக அவர் எச்சரிக்கிறார்.   
ஒளியில் இருப்பது என்பது தூய் மை, நீதி மற்றும் உண்மையின் வாழ்க்கையை வாழ்வதும், ஆவியி ன் கனிகளைப் பிறப்பிப்பதும் ஆகும். 
கிறித்தவர்கள் கிறிஸ்துவை பின்
பற்றவேண்டும், உலகை அல்ல.
(Imitate God, Not the World )
 உலக மக்களோடு அன்பு கொண் டு வாழ்வது கிறிஸ்துவின் நறும ணமாக நாம் அவருக்குள் இருக்கி றோம்.
கிறித்தவனே விழித்தெழு:
அன்பர்களே! நாம் ஆன்மீக தூக்க த்திலிருந்து விழித்தெழுந்து, கிறிஸ்துவின் ஒளி நம்மீது பிரகா சிக்க அனுமதித்து, புரிதலையும் ஞானத்தையும் வெளிப்படுத் தும்படி இந்த பகுதி ஒரு அறிவுரை யுடன் முடிகிறது.  "கிறிஸ்தவனே விழித்தெழு" என்ற சொற்றொ டர், கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் பிரசங்கங்களில் அடிக்கடி பயன் படுத்தப்படுகிறது. இது விசுவாசி களை ஊக்குவிக்கவும், அவர்களி ன் ஆன்மீக வாழ்க்கையில் விழிப் புடன் இருக்கவும் உதவுகிறது. இந்த சொற்றொடர், கிறிஸ்தவ சமூகத்தில் ஒரு பொதுவான விழி ப்புணர்வு அழைப்பாக கருதப்படு கிறது. 
3. அருட்பொழிவு திருப்பணி ஆண்டவரின் அழைப்பு.Ordained Ministry is the divine call.Luke லூக்கா : 10: 1-11.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெகு விரைவில் எருச லேம் செல்ல இருப்பதினால் 
 அதற்கு முன்பாக நற்செய்தியா னது பல இடங்களுக்கு பரவ வேண்டும் என்ற உள்ளான நோக் கத்தோடு இந்த 70 பேரை கடவுள் அவசர கால நிகழ்வு (Energency ) போல தேர்வு செய்து அனுப்பு கிறார்.
இந்தக் நிகழ்வு  இது ஒரு வகை யான பயிற்சி ("Internship, ) இயேசு அவர்களுடன் இருந்தபோது அது ஒரு பயிற்சி நேரம். இந்தப் பணி இயேசுவின் சொந்த ஊழியத் தைப் போன்றது, தானே நேரடி யாக செல்வது போன்ற ஒரு அனு பவத்தை இங்கு செயல்படுத்து கிறார்  "நோயாளிகளைக் குணப்படுத்துங்கள்" மற்றும் "கடவுளின் அரசு உங்களுக்கு அருகில் வந்துவிட்டது" என்று அவர்களிடம் சொல்லுங்கள்."
 என்று அனுப்புகிறார்.
இது பன்னிருவரின் முதல் பணி யை விட பரந்த பணியை விவரி க்கிறது.
 ஏன் எழுபது பேரை தெரிந்து கொள்ள வேண்டும்?
 நண்பர்களே! ஆண்டவருக்கு இருந்த 12 பேர் எல்லா இடங்க ளையும் இவர்களால் நற்செய் தியை வெகு விரைவில் கொண் டு செல்ல முடியாது என்ற காரண த்தினாலும், தான் இன்னும் ஆறு மாதங்களில் சிலுவையில்  ஒப்புக் கொடுக்கப்படுகின்ற நிலையில்,
 போர்க்கால நடவடிக்கைப் போல
 இந்த 70 பேரை தெரிந்து கொண் டார். இவர்களில் பல பெயர்கள் நமக்கு தெரியாது. ஆனாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்தார் பெரிய காரியங்களை எதிர்பார்த்தார் அவர்கள் வெற்றி யோடு திரும்பி வந்தனர்.
 இறையியளாளர் வில்லியம் பார்க்லையின் கூற்றுப்படி:
எழுபது என்ற எண் யூதர்களு க்கு அடையாளமாக இருந்தது.
1.வனாந்தரத்தில் மக்களை வழிநடத்தி, வழிநடத்தும் பணி யில் மோசேக்கு உதவ தேர்ந் தெடுக்கப்பட்ட மூப்பர்களின் எண்ணிக்கை இதுவாகும் ( எண்ணிக்கை 11:16-17 ; Numbers 11:24-25 ).
2 இது யூதர்களின் உச்ச சபையா ன சன்ஹெட்ரின் எண்ணிக்கை. எழுபது.
3 கிறிஸ்துவின் காலத்தில் உலகி ல் உள்ள நாடுகளின் எண்ணிக் கை 70ஆக கருதப்பட்டது. லூக்காதான் உலகளாவிய பார்வையைக் கொண்ட மனி தர், எனவேதான் லூக்கா நற்செ ய்தி உலகளாவிய நற்செய்தி என Universal Gospel  அழைக்கப் படுகிறது. மேலும் உலகில் உள்ள ஒவ்வொரு தேசமும் தனது இறை வனை அறிந்து நேசிக்கும் நாளை ப் பற்றி அவர்யோசித்திருக்கலாம்.
4.ஒருவேளை எழுபது பேர் மோசே யுடன் சீனாய் மலைக்குச் சென் று தேவனுடைய மகிமையைக் கண்ட எழுபது மூப்பர்களுடன் தொடர்பைக் குறிக்கலாம் (விடுதலை பயணம் 24:1, 9).
5  ஒருவேளை எழுபது பேர் எபி ரேய வேதத்தை கிரேக்க மொழி யில் மொழிபெயர்த்த எழுபது பேர்களுடன், அதாவது செப்டு வஜின்ட்டுடன் , தொடர்பைக் குறிப்பிட்டிருக்கலாம் 
(செப்டுவஜின்ட் என்பது கிரேக்க மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்கப் பதிப்பாகும். இது எழுபது அறிஞ ர்களால் மொழிபெயர்க்கப்பட்டதா கக் கூறப்படுகிறது, அதனால் "செப்டுவஜின்ட்" (Septuagint) என்ற பெயர் வந்தது, )
  இயேசு தம்முடைய சீடர்களின் இந்தப் பெரிய குழுவை நோக்கி, தம்முடைய தூதர்களாக இருக்க வும், இந்த இடங்களை ( அவர் தாமே செல்லவிருந்த இடத்திற்கு ) தயார் செய்யவும் திரும்பினார்.
அன்பர்களே! இந்த பெயரிடப் படாத எழுபது பேரில் ஒருவராக நாம் இருப்பது எவ்வளவு நல்லது, அவர்கள் தங்கள் வேலையைச் செய்து அதில் மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தார்கள், மேலும் அவர்களின் பெயர்கள் கடவுளுக் கு மட்டுமே தெரியும்.
 ஏன் இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்?
நண்பர்களே! கடவுளின் ஊழியர் களிடையே ஒற்றுமையின் அவசியத்தை அவர்களுக்குக் கற்பிக்க .
 2. இரண்டு சாட்சிகளின் வாயா ல் எல்லாம் நிலைநாட்டப்படும்படி. 3. அவர்கள் தங்கள் கடினமான உழைப்பில் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி ஆதரிக்க வேண்டு ம் என்பதற்காக.” இரண்டு இரண்டு பேராக தனக்கு வழியை ஆயத்தப்படுத்த அனுப்பினார்.
வேலையாட்கள் இல்லையெ ன்றால் அறுவடையின் பலன் வீணாகிவிடும் . வேலையாட்கள் பற்றாக்குறையால் மனித தேவை களைப் பூர்த்தி செய்து மக்களைத் தம்முடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்கான வாய்ப் புகள் வீணாகிவிடும் என்று இயேசு நம்மை எச்சரிக்கிறார் .
பணப்பை, செருப்பு ஆகியவற்றை எடுத்துச் செல்லாதீர்கள் : முதலில் இயேசு அவர்களை ஜெபிக்கச் சொன்னார்; பின்னர் அவர்களைப் போகச் சொன்னார்; பின்னர் எப்படிப் போக வேண்டும் என்று சொன்னார். காரணம்,அவர்கள் பொருள் சார்ந்த கவலைக ளால் திசைதிருப்பப்படக்கூடாது
ஒவ்வொரு வீட்டிற்கும் அமைதியி ன் ஆசீர்வாதத்தைக் கொண்டு வர அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. அவ்விடத்தில் சமாதானத் தின் மகன் இருந்தால் அருட்பணி யாளர் அங்கு தங்கலாம். அவர் கள் கொடுப்பதைப் புசித்து, குடித்து, ஒரே வீட்டில் தங்கியிருக்க வேண்டும் : மற்றவர்களின் தாராள மனப்பான்மையின் மூலம் கடவுள் தங்களுக்கு வழங்குவார் என்று அவர்கள் நம்ப வேண்டும், 
 நண்பர்களே!:இயேசு பேசிய அறுவடை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்னும் ஏராளமாக உள்ளது. நாம் கால் வைக்கும் எல்லா இடங் களிலும் இயேசுவின் தேவை உள்ளவர்கள் உள்ளனர். ஆட்க ளை   நித்திய ஜீவனுக்குக் கூட்டிச் சேர்ப்பதை இயேசு கிறிஸ்து அறுவடைக்கு ஒப்பிட்டார்.இன்று பூமியில் உள்ள 7.88 பில்லியன் மக்களில் 2.2 பில்லியன் பேர் மட்டுமே தங்களை கிறிஸ்தவர் கள் என்று கூறிக் கொள்கிறார் கள். இதன் விளைவாக, இன்று 5.68 பில்லியன் மக்கள் இயேசு வை அறியாமலோ அல்லது பின்பற்றாமலோ உள்ளனர். இவர்களுக்கான நம்முடைய செயல் திட்டங்கள் என்ன? இவர்களை அப்படியே விட்டு விட லாமா? கடவுள் நம்மை ஒரு அருட் பணியாளராக அழைத்திருக்கி றார். அதில் சிலரை அதற்காகவே அபிஷேகம் செய்துஇருக்கிறார். எனவே, திருத்தூதர் பேதுருவின் அழைப்பின்படி,  "நீங்கள் தேர்ந்தெ டுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத் தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத் துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்க ள் பணி. (1 பேதுரு 2:9)இன்று நமக்கும் உத்தரவாதம் உண்டு. கிறிஸ்துவின் பிள்ளைகள் ஒவ்வொருவரும், ஆசாரியக் கூட்ட மாக புறவினத்தாருக்கு சாட்சி யாக, அவர்களைக் கிறிஸ்துவிடம் நடத்துகிற ஆசாரியராக பணிபுரி ய அழைக்கப்பட்டிருக்கிறோம். உலகத்தோடு சேர்ந்து வேசம் தரிக்காதவர்களாக, உலகத்தைத் திருப்திப்படுத்தாது உலக பதவிக ளை நாடிச் செல்லாமல் நாம் அருட் பொழிவு திருப்பணியாளராய் வாழ வேண்டியது அவசியம். கிறிஸ்துவின் உள்ளார்ந்த நறுமணமாய் ஒளி வீச கடவுள் அருள் புரிவாராக ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam,. Sermon Writer.
www.davidarulsermonwriter.com
www.davidarulblogspot.com.



Quote:

,,,"நாங்கள் உங்களை ஊழியத்திற் கு நியமிக்கவில்லை; அது உங்கள் ஞானஸ்நானத்தின் போது நடந்தது."



"ஊழியப் பயணம் என்பது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் கூடியது."









ஒரு கத்தோலிக்க டீக்கனின் நியமனம் , கி.பி. 1520. Thanks wiki.


Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.