பற்றுறுதியாளரை உருவாக்குதல் (220) The Making of the Faithful. யோசுவா 4: 1-9, திரூப்பாடல் 1, 1 திமோத்தேயு 6: 11-16, மத்தேயு 13: 1-9. இறையியல் கல்வி ஞாயிறு.ட

முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வா ர தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "பற்றுறுதியாளரை உருவாக்குதல். The Making of the Faithful. இவ்வாரம் இறையியல் கல்வி ஞாயிராக கொண்டாடப் படுகிறது.
 இறையியல் கல்வி என்றால் என்ன? 
இறையியல் கல்வி என்பது மத நம்பிக்கையை ஒரு மதக் கண் ணோட்டத்தில் படிப்பதாகும் , இதில் கடவுளின் தன்மை மற்றும் மதத்தின் பின்னணியில் உள்ள வரலாறு ஆகியவை அடங்கும் . இது ஒரு கல்வித் துறையாக , பொதுவாக பல்கலைக்கழகங்கள் மற்றும் செமினரிகளில் கற்பிக்கப் படுகிறது . இறையியல் கல்வி என்பது, ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோட்பாடுகள், நம்பிக்கைகள், மற்றும் நடைமுறைகளைப் பற்றி ய படிப்பாகும். இதை ஆங்கிலத் தில் theology என்னும் சொல் கிரேக்க மொழியில் theologia என்னும் கூட்டுச்சொல்லிலிருந்து பிறந்தது. இலத்தீனிலும் theologia என்னும் சொல்லே பயன்படுத்த ப்படுகிறது.  (theologia) என்னும் கிரேக்கச் சொல்  = theos என்றால் கடவுள்,  logos என்றால் (= சொல், உரை, விளக்கம், இயல்) என்னும் இரு மூலச் சொற்களால் ஆனது. முதன் முதலில் கிரேக்க தத்துவ அறிஞர் பிளேட்டோ (பிறப்பு கி.மு. 428/427 - இறப்பு கி.மு. 348/347) கிறிஸ்து பிறப்பதற்கு முற்பட்ட நான்காம் நூற்றாண்டிலேயே இச்சொல்லைக் கையாண்டார்.
 கிறித்துவ இறையியல் என்றால் என்ன? What is Christian
Theology?
கிறித்தவ இறையியல் (Christian Theology) என்பது கடவுள் தம்மை இயேசு கிறிஸ்து வழியாக வெளி ப்படுத்தியுள்ளார் என்னும் உண் மையை மையப் பொருளாகக் கொண்டு, அதன் உட்பொருளை அறிவியல் முறைப்படி ஆய்ந்து விளக்குதல் ஆகும். 
யார் பற்றுறுதியாளர்?
Who is faithful?.
அன்பர்களே! பற்றுறுதியாளர் என்பவர்கள் இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவை உண்மை யான கடவுள் என்று ஏற்றுக் கொண்டவர்கள் அவருடைய கொள்கையின்படி வாழ்கின்ற விசுவாச கூட்டத்தினர்கள் பற்றுறு தியாளர்கள் என்பவர்கள். இவர் கள் தங்கள் கருத்துக்களை மாற் றிக்கொள்ளாமல், தங்கள் நிலைப் பாட்டில் உறுதியாக இருப்பார்கள்.
யார் பற்றுறுதியாளர்களை உருவாக்குவார்கள்? Who will make the Faithful?
 நண்பர்களே பற்றுதியாளர்களை உருவாக்குவது யார்?  பெரும் பாலான மனிதர்கள் ஒவ்வொரு வரும் தங்கள் சொந்த நன்மை யைப் பிரகடனப்படுத்துவார்கள், ஆனால் உண்மையுள்ள ஒருவரை யார் கண்டுபிடிப்பார்கள்? "நீதிமான் தன் உத்தமத்தில் நடக்கிறான், அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகள் பாக்கியவான் கள்".என நீதி அரசர் சாலமோன் (நீதி மொழிகள் 20:6,7)கூறுகிறார். அவ்வாறே, திருத்தூதர் பவுல் அடிகளார், " உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக் குரியவர்.அவர் இதைச் செய்வார். (1 தெசலோனி க்கர் 5:24) நாம் உண்மையுள்ளவர் கள் என்று எண்ணி நம்மை அழை த்த கடவுள், நாம் மற்றவர்களை அழைக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த பொல்லாங்கு நிறைந்த உலகில் கடவுளின் பற்றுறுதிரை யாளர்களை உருவாக்குவது நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கிறது அதற்காகவே நாம் அழைக்கப்பட்டும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய் இருக் கிறோம்.
கடவுள்தான் மக்களை கிறிஸ்து வில் உண்மையுள்ளவர்களாக ஆக்குகிறார் . இயற்கையாகவே கிறிஸ்துவிடம் திரும்புவது மனி தர்கள் அல்ல; கடவுளின் கிருபை விசுவாசத்தின் செயல்முறையை த் தொடங்குகிறது.கடவுள் விசுவா சிகளை உண்மையுள்ளவர்களாக மாற்றுவதற்காக வேலை செய்கி றார், மதமாற்றத்தின்மூலம் மட்டு மல்ல, தொடர்ச்சியான பரிசுத்தப் படுத்தலின் மூலமும் கூட. அதனால், நற்செய்தியைஅறிவி ப்பதின் மூலமாக, நாம்விசுவாசி களை கடவுளுக்கென்று உருவா க்க முடியும். நற்செய்தியை அறிவி ப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாவும், கடவுளின் கட்டளை யாகவும் இருக்கிறது.
1.பற்றுறுதியாளர்களை உருவாக்கும் கடவுளின் சக்தி. The power of God that makes faithful. யோசுவா. 4:1-9.
 கிறிஸ்துவுக்கள் பிரியமானவர் களே! யோசுவா என்றால் "யெகோவா இரட்சிக்கிறார்", கடவுளின் கட்டளையின் கீழ், இஸ்ரவேலை வாக்குப்பண்ணப் பட்ட கானான் தேசத்தை வெற்றி கரமாகக் கைப்பற்ற வழிநடத்திய மனிதனுக்குப் பொருத்தமான பெயர்தான் யோசுவா. இஸ்ரவேல் மக்கள் இந்த தருணத்திற்காக சுமார் 40 ஆண்டுகள் வனாந்திரத் தில் காத்திருந்தனர். 40 ஆண்டுக ளுக்கு முன்பு எகிப்திலிருந்து வெளியே வந்த அவர்கள், இப் போது கானான் தேசத்திற்கான இறுதி புவியியல் தடையான யோர்தானை தாண்டி விட்டனர் .
இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்ததை நினைவில் வைத்திருப்பதற்காக பன்னிரண்டு கற்கள் வைக்கப்பட்டு ள்ளன. "இஸ்ரவேலின் 12  குலத்திற்கு (Twelve Tribes of Israel) ஒருவராகப் பன்னிருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். "குருக்களின் பாதங்கள் இருக்கும் இடத்திலிருந்து பன்னிருகற்களை எடுத்து உங்களுடன் கொண்டு வாருங்கள். அவற்றை நீங்கள் இவ்விரவு தங்குமிடத்தில் வையுங் கள்" என்றார். 
 நண்பர்களே! இஸ்ரேல் மக்கள் உடன்படிக்கைப் பெட்டியை சுமந் து கொண்டு வருகின்றபொழுது தடையாய் நின்ற  யோர்தான் நதி இவர்களுக்காக பிரிந்து நின்றது.
 இதை என்றும் இஸ்ரேல் மக்கள் நினைவுபடுத்திக் கொள்ள 12 கற் கள்சாட்சியாக வைக்கப்பட்டன.
அப்பொழுது நீங்கள் அவர்களுக் கு இவ்வாறு சொல்லுங்கள்; "யோர்தான் நீர் ஆண்டவரது உடன் படிக்கைப் பேழையின் முன் பிரிந் து நின்றது. அப்பேழை யோர்தா னைக் கடக்கும்பொழுது யோர்தா னின் தண்ணீர் பிரிந்து நின்றது. இக்கற்கள் இஸ்ரயேல் மக்களுக் கு என்றும் இந்நிகழ்ச்சியை நினைவூட்டுவதற்காக உள்ளன" என்று சொல்லுங்கள்" என்றார். 
யோசுவா பன்னிரு கற்களையும் யோர்தான் நடுவில் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்களின் பாதங்கள் நின்ற இடத்தில் வைத் தார். இந்த 12 கோத்திரங்களின் அடிப்படையில் தான் ஆண்ட வராகிய இயேசு கிறிஸ்துவும் 12 சீடர்களை தேர்ந்தெடுத்தார். 
ஆற்றின் அடிப்பகுதியில் இருந்து பன்னிரண்டு கற்கள் எடுக்கப் பட்டு, அந்த அற்புதமான நிகழ் வின் நினைவுச்சின்னமாக கில்காலில் (கில்கால் எரிகோவி ன் கிழக்கு எல்லையில் அமைந்தி ருந்தது. இது எரிகோவிற்கு வடக் கே சுமார் 8 மைல் (12 கி.மீ.) தொலைவில் நெடுஞ்சாலை 90 இல் அமைந்துள்ளது.) அமைக்கப்பட்டன . இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு ம் ஒவ்வொன்றாக அமைக்கப்பட்ட இந்தக் கற்கள்,கடவுளின்உண்மை த் தன்மையை நினைவூட்டுவதா கவும், எதிர்கால சந்ததியினருக்கு அறிவுரை வழங்குவதற்கான ஆதாரமாகவும் இருந்தன.   இது கடவுளின் அற்புதமான தலையீட் டிற்கு ஒரு சக்திவாய்ந்த நினைவு ச்சின்னமாகும்.
இந்தக் கற்கள், யோர்தான் நதி நின்று, இஸ்ரவேலர்கள் வறண்ட நிலத்தில் கடந்து செல்ல அனுமதி த்ததை அடையாளப்படுத்தின.
இவை கடவுளின் உண்மைத்தன் மையும்,நம்பக தன்மையும்,மற்றும் வல்லமையின் உறுதியானநினை வூட்டலாக இருந்தன, 
இது எதிர்கால சந்ததியினருக்கு அறிவுறுத்தல், பற்றுறுதி மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாகவும், பாடமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்தன.
 இது கடவுளின் வல்லமையான சாட்சியாகும்.
 இந்தக் கற்கள் ஒரு கற்பித்தல் கருவியாக (Teaching tool )இருக்க வேண்டும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் யோர்தானை கடக்கும் கதையையும் கடவுளின் அற்புதமான ஏற்பாட்டையும் விளக் கத் தூண்டும். இது கடவுளின் உண்மைத்தன்மையின் கதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுவதை உறுதி செய்தது.
இந்த பன்னிரண்டு கற்கள் இஸ்ர வேலின் பன்னிரண்டு கோத்திரங் களின் ஒற்றுமையையும் அடையா ளப்படுத்தின. அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற தங்கள் கூட்டு அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.   
இந்த 12 கற்களும் கடவுளின் மீட்பின் நினைவுச்சின்னமாக அமைக்கப்பட்டன.
 இஸ்ரவேலர்கள் எப்பொழுதும் அடையாளத்தை தேடுவார்கள் அந்த அடையாளமாக இந்த பனிரெண்டு கற்களும் அவர்களு க்கு நினைவூட்டாக கொடுக்கப் பட்டது.வரலாற்றையும் கடவுள் செய்தவற்றையும் மக்களுக்கு நினைவூட்டுவதே தேவாலயத்தின் முதன்மையான பணியாகும்.
இது மனிதகுலத்தின் கதை அல்ல, கடவுளின் சக்தியின் கதை. இந்த சக்தியே பற்றுறுதியாளர்களை 
உருவாக்குகிறது.
2.நற்பண்புகளே பற்றுறுதியா ளரின் அடையாளம். Virtues are the mark of the faith. 1 திமோத் தேயு 6: 11-16.
 கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிகளார் திமோத்தேயுவுக்கு கூறும் அறிவு ரை, பொல்லாதவைகளை விட்டு விலகி, நற்பண்புகளை கைக் கொள்வதே பற்றுறுதியாளர்களி ன்  அடையாளம் என்று கூறுகி
றார்.
பொல்லாதவைகள் எவை?
What are the evils?
 நண்பர்களே! பவுல் அடிகளார் காட்டும் பொல்லாதவைகள்:  "துன் மார்க்கம், பேராசை, பெருமை, பொறாமை, பழிதூற்றுதல், துன் மார்க்கமான பேச்சு, அக்கிரமம், வஞ்சகம்" போன்றவைகள் ஆகும்.
 இத்தீங்குகளை விட்டு விலகு வதே பற்றுறுதியாளர்களாகிய கிறிஸ்தவர்களுக்கு அடையாள மாக இருக்கிறது.
 பற்றுறுதியாளரின் நற்பண்பு கள் எவை?What are the virtues of the faith?
அன்பர்களே! கடவுள் விரும்பும் நற்பண்புகள் ஒவ்வொரு கிறிஸ் தவர்களுக்கும் இருக்க வேண்டும், அன்று திரு தூதர் பவுல் அடிகளார் திமமோத்தேயுவுக்கு கூறிய அதே அறிவுரைகளை நாம் நிச்சயம் கை கொள்ள வேண்டும்.
நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், சாந்த குணத் தையும் பின்தொடரவும், விசுவாசத்தின் நல்ல போராட்டத் தைப் போராடவும், நித்திய வாழ் வினையைப் பற்றிக்கொள்ளவும் கட்டளையிடப்பட்டுள்ளது. 
கிறிஸ்து இயேசுவின் போதனைக ளின்படி, எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் வாழ்வது,இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை க்காகக் காத்திருந்து, அவரது கட்டளைகளைப் பின்பற்றுவதே. 
பற்றுறுதியாளரின் அடையாளம். 
 ஏனெனில், "அவர் ஒருவரே  வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென். 
3. நல்ல நிலத்தில் விழுந்த விதையே பற்றுறுதியாளர். The
Faithful one is who fell on the good soil.மத்தேயு 13: 1-9.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவர்  ஒரு ஜெப ஆலயத்திற்குள் நுழைந்தால், ஆர்வமுள்ள கேட்போர் கூட்டத்தை க் காண முடியாது; மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் மற்றும் மூப்பர்கள் அடங்கிய இருண்ட கண்கள் கொண்ட ஒரு கூட்ட மும் அவருக்கு எதிராக ஒரு குற்ற ச்சாட்டைக் கண்டுபிடிக்க ஒவ் வொரு வார்த்தையையும் எடை போட்டு, சல்லடை போட்டு, அதை ஒரு குற்றச்சாட்டாக மாற்ற ஒவ்வொரு செயலையும் கவனி த்துக் கொண்டிருப்பதைக் காண வேண்டும். ஆண்டவரின் காலத் தில் அவருக்கு திருச்சபைகள் அடைக்கப்பட்டன, அவர் தெருக்க ளிலும், சிலர் வீடுகளிலும், மலை அடிவாரங்களிலும், வனாந்தர மான இடங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் தன்னுடைய பிரச் சார மேடையை அமைத்துக் கொண்டார்.
இயேசு ஒரு படகில் அமர்ந்து கலிலேயா கடலோரத்தில் நின்றிருந்த மக்களுக்கு உவமை களால் பேசினார். உவமையின் முதல் சிறந்த குணம் என்னவென் றால், அது உண்மையை அனை த்து மனிதர்களும் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் கூடிய ஒரு படமாக மாற்றுகிறது.இயேசு பயன்படுத்திய உவமை பேசப் பட்டது;அதுபடிக்கப்படவில்லை. அதன் தாக்கம் உடனடியாக இருந்தது. 
இயேசு விதைப்பவரின் உவமை யைச் சொல்லி, விண்ணரசு  எவ்வாறு வளர்கிறது என்பதை விளக்குகிறார்.இங்கு நான்கு வித நிலங்களைக் குறிக்கி றது.
1.வழியோரம் விழுந்த விதைகள்:
சில விதைகள் வழியோரம் விழுந் தன, பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. இது, வார்த்தை யைக் கேட்பவர்கள், அதை உண ராமல், பிசாசு வந்து அதை எடுத் துச் செல்வதைப்போல உள்ளது.
2 பாறைப் பகுதிகளில் விழுந்த விதைகள்:
சில விதைகள் பாறைப் பகுதிக ளில் விழுந்தன, மண் ஆழமாக இல்லாததால், அவை விரைவில் முளைத்து, வெயிலில் காய்ந்து கருகிப்போயின. இது, வார்த்தை யைக் கேட்பவர்கள், சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் வேர் விடாததால், சோதனைகள் வரும்போது விலகிச் செல்வதைப் போல உள்ளது.
3.முட்செடிகளில் விழுந்த விதைகள்:
சில விதைகள் முட்செடிகளில் விழுந்தன, அவை முட்செடிகளுட ன் சேர்ந்து வளர்ந்து, முட் செடிகள் அவற்றை நெருக்கிப் போட்டு விட்டன. இது, வார்த்தையைக் கேட்பவர்கள், உலகக் கவலைக ளாலும், செல்வத்தாலும் வார்த் தையை உணராமல் போகி றார்கள்.
4.நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்:
சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும், முப்பது மடங்காகவும் பலன் கொடுத்தன. இவர்கள், வார்த்தையைக் கேட்ப வர்கள், வார்த்தையைக் கேட்டு, புரிந்துகொண்டு,ஏற்றுக்கொண்டு, பலன் தருவதைப் போல உள்ளது. இவர்கள் ஆலயத்திற்கு தவறாமல் வருபவர்கள் வார்த்தையை கவனத்தோடு கேட்பவர்கள் அதன்படி நடப்பவர்கள்.
இந்த உவமை, வார்த்தையைக் கேட்பதற்கும், புரிந்துகொள்வதற் கும், ஏற்றுக் கொள்வதற்கும், பலன் தருவதற்கும் வெவ்வேறு மனிதர்களின் இதயங்களை அடையாளப்படுத்துகிறது
விதைப்பவர் யார்?
விதைப்பவர் நம் ஆண்டவர் இயேசு. 
விதை:
விதை கடவுளின் வார்த்தையைக் குறிக்கிறது.
நிலம்:
நிலம் மனிதர்களின் இதயங் களைக் குறிக்கிறது. கடவுளின் வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது,அதைப்புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு, பலன் தர வேண்டும்
அறுவடை:
அறுவடை என்பது வேதத்தின் படி, அன்பு, மகிழ்ச்சி, சமாதானம், பொறுமை, தயவு, நன்மை, விசு வாசம், சாந்தம் மற்றும் சுயக்கட் டுப்பாடு போன்ற விசுவாசத்தின் கனிகளைக் குறிக்கிறது.  இவை களே பற்றுறுதியாளர்களின் அடையாளமாகவும், உருவாக்கு வர்களின் குணமாகவும் இருக்க வேண்டும்.மிக முக்கியமாக நாமே பற்றுறுதிஉருவாக்குகின்றவர்கள். நமக்கு இந்த குணாதிசயங்கள் மிக அவசியமாக இருக்கிறது. இக் குணங்களில் நாம் நிலைத்திரு க்க கடவுள் நமக்கு அருள் புரிவா ராக,ஆமென்.


Prof. Dr. David Arul Paramanandam,
Sermon Writer,
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com









.  முகாமிட்ட இடமாக (யோசுவா       4:19 – 5:12). 

இஸ்ரேலிய குடியேற்றமான யாஃபித்துக்கு அருகிலுள்ள கில்கால். நன்றி. விக்கி.


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.