பெண்களின் திருப்பணியை நினைத்தலும்,கொண்டாடுதலும் (221) 𝚁𝚎𝚖𝚎𝚖𝚋𝚎𝚛𝚒𝚗𝚐 𝙰𝚗𝚍 𝙲𝚎𝚕𝚎𝚋𝚛𝚊 𝚝𝚒𝚗𝚐 𝚆𝚘𝚖𝚎𝚗'𝚜 𝙼𝚒𝚗𝚒𝚜𝚝𝚛𝚢.நீதித் தலைவர்கள் 𝙹𝚞𝚍𝚐𝚎𝚜: 𝟺: 𝟷𝟺-𝟷𝟼 , திருப்பாடல்: 𝟷𝟹𝟸:பிலிப்பியர் 4:1-7, லூக்கா : 8:1-3.பெண்கள் ஞாயிறு.

முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன்நாமத்தில்வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " "பெண்களின் திருப்பணியை நினைத்தலும்,கொண்டாடுதலும்"  𝚁𝚎𝚖𝚎𝚖𝚋𝚎𝚛𝚒𝚗𝚐 𝙰𝚗𝚍 𝙲𝚎𝚕𝚎𝚋𝚛𝚊 𝚝𝚒𝚗𝚐 𝚆𝚘𝚖𝚎𝚗'𝚜 𝙼𝚒𝚗𝚒𝚜𝚝𝚛𝚢.
 ஏன் பெண்களின் திருப்பணி யை நினைவு கூற வேண்டும்?
Why should we remember the women's Ministry?
 அன்பானவர்களே, ஆரம்பகால திருச்சபையின் போது பெண்கள் பல்வேறு பதவிகளில் டீக்கன்களா கவும், மிஷனரிகளாகவும், தலை வர்களாகவும் பணியாற்றினர்.  இயேசு பிறக்கின்ற காலத்தில்   ஆசேர் (Asher)  (என்பவர் தொடக் க நூல், குறிப்பிடுவதன்படி, யாக் கோபுவின் எட்டாவது மகனும் சில்பாவின் இரண்டாவது மகனும் ஆவார். இவர் இசுரயேலிய ஆசேர் குலத்தின் தந்தையாவார்) இக்
குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் 84 வயது முதிர்ந் தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம் பெண் ஆனவர். ஆனால், அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல் லும் பகலும் திருப்பணி செய்து வந்தார்.(லூக்கா 2:36,37)
 மற்றும் புதிய ஏற்பாட்டில் இயேசுவுடனும் திருத்தூதர்களு டனும் ஊழியத்தில் ஈடுபட்ட ஏராள மான பெண்களை எடுத்துக்காட்டு கிறது, அவர்களில், ஏழு பேய்கள் நீங்கிய மகதலேனா மரியாள், ஏரோதின் வீட்டு விசாரணைக் காரனான கூசாவின் மனைவி யோவன்னா, சூசன்னா,  திருத் தூதர் பவுலுடன் சேர்ந்து பணியா ற்றிய பிரிஸ்கில்லா,ஃபோபே, ஜூனியா, மேரி போன்றவர்கள். தீமோத்தேயுவின் தாய் மற்றும் பாட்டி லோயிசாள் மற்றும் ஐனிக்கேயாள் ஆகியோர் இன்னும் பலர் இருந்தார்கள். இந்தப் பெண் கள் தங்கள் செல்வத்திலிருந்து அவர்களுக்கு உதவி செய்துவந் தார்கள். பண்டைய இஸ்ரேலில், பெண்கள் ஆலய ஆசாரியத்து வத்தைத் தவிர சமூக வாழ்க்கை யின் ஒவ்வொரு அம்சத்திலும் பங்கேற்றனர். பெண்கள் வர்த்த கம் மற்றும் ரியல் எஸ்டேட் ( நீதிமொழிகள் 31:10-31 ), போன்ற பணிகளில் சிறப்பாக செயல் பட்டனர். "அவளுடைய செயல்க ளின் நற்பயனை எண்ணி அவ ளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட் டுவதாக(நீதிமொழிகள்(பழமொழி ஆகமம் 31:31).
திருவிவிலியத்தில்  பெயரிடப் பட்ட மற்றும் பெயரிடப்படாத சுமார் 1254 நபர்கள் (𝙲𝚑𝚊𝚛𝚊𝚌𝚝𝚎𝚛𝚜) உள்ளன.அவர்களில் தோராயமாக 185 பேர் மட்டுமே பெண்கள்.
யூத கலாச்சாரத்தில் ஆண் ஆதிக் கம் செலுத்திய காலத்தில் கூட பெண்களுக்கு ஒரு முக்கிய பங்கு வழங்கப்படுகிறது. 
சாரா, மிரியாம்,ராகாப்,ரூத்,எஸ்தர், தெபோராள், யாகேல், அபிகாயில், சூனாமைட் பெண் ஆகியோர் பழைய ஏற்பாட்டிலிருந்து ஊழிய த்தில் மிகவும் முக்கிய பங்குவகிக் கும் பெண்கள்.
ஆண்டவரின் ஊழியத்தில்ஆணெ ன்றும் பெண் என்றும் இல்லை, ஏனென்றால் நீங்கள் அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றா யிருக்கிறீர்கள்" (கலாத்தியர் 3:28). என ஆண்டவர் கூறுகிறார். ஊழியம் அனைவருக்கும் ஆனது. அது கடவுளுடையது.
 பெண்கள் பற்றிய தவறான எண்ணங்கள்.
அன்பர்களே,பொதுவாக,பெண்கள் கடவுளால் சபிக்கப்பட்டவள் என்றும், அந்த சாபம் பெண் மூல மாக உலகிற்கு வந்தது என்றும், இதற்கெல்லாம் காரணம் பெண் ணின் கீழ்ப்படியாமை (பாவம்) என்றும் எண்ணங்கள் உள்ளன. இன்றளவும் பெண்கள் இரண்டாம் நிலையில் தான். வைக்கப்படுகி றார்கள்.அதே நேரத்தில், ஒரு பெண்ணின் மூலம் கடவுள் மீண் டும் இந்த உலகத்திற்கு வருகை தந்து, ஆசீர்வதித்து, தனது ஒரே பேரான மகனை அனுப்பி, உலகத் தை நேசித்து காப்பாற்றினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடா து (லூக்கா 1: 28, 30). ஆதித்தாய் ஏவாளின் மூலம் உலகத்திற்கு சாபம் வந்தது என்று நாம் கூறும் போது, ஒரு பெண் மரியாள்  மற் றும் அவளுடைய கருப்பையின் கனியாகிய இயேசு மூலம் கடவுள் முழு உலகத்தையும் ஆசீர்வதிக்க ஒரு வழியையும் உருவாக்கினார் என்பதை நாம் நினைவில் கொள் ள வேண்டும். ஒரு பெண்ணின் மூலம் ஏற்பட்ட சாபத்தை இன் னொரு பெண்ணின் மூலம் ஈடு செய்தார் நம் ஆண்டவர்  இயேசு வின் மூலம், கடவுள் அனைத்து பெண்களின் கருப்பையையும் ஆசீர்வதித்தார். மகன் மூலம், அனைவருக்கும் அருள் வந்து ள்ளது. இரட்சிப்பின் கிருபை உதயமாகிவிட்டது (யோவான் 11:15, 16; தீத்து 2:11). உலகம் முழுவதற்கும் விடுதலை அளித்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற் குப் பெண் ஒரு பங்காளியா னாள்.,என்பது எவ்வளவு உண்மை.
 நான் அவர்களை மன்னித்து விட்டேன். 𝙸 𝚑𝚊𝚟𝚎 𝚏𝚘𝚛𝚐𝚒𝚟𝚎𝚗 𝚝𝚑𝚎𝚖.
கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ்.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இந்தியாவில் அன்று நடந்த உலகத்தையே அதிர்வளையில் அழைத்துச் சென்ற நிகழ்வு இன் றும் நம் கண்களில் கண்ணீர் வடிய செய்கிறது.  1999 ஜனவரி 22அன்றுஇந்தியாவின் ஒடிசாவில் பஜ்ரங்தள் ஆர்வலர் தாராசிங் தலைமையிலான ஒரு கும்பலால் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவர்களது இரண்டு மகன்களான பிலிப் (வயது 10) மற்றும் திமோதி (வயது 7)ஆகியோருடன்உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள் . 
"கோதுமை மணியானது நிலத்தி ல் விழுந்து சாகாவிட்டால் தனித்தி ருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." (யோவான் 12:24) என்ற ஆண்டவரின் வார்த் தை கேற்ப இவர்கள் கிறித்துவுக் காக மரித்தார்கள். இந்த கொலை யாளிகளுக்கு தண்டனை விதிக்க ப்பட்ட சிறிது நேரத்திலேயே, கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார், அதில் கொலையாளிகளை மன்னித்து விட்டதாகவும், அவர்கள் மீது தனக்கு எந்த கசப்பும் இல்லை என்றும் கூறினார்.   இவர், ஆஸ்திரேலிய மிஷனரி கிரஹாம் ஸ்டெய்ன் ஸின் விதவை கிளாடிஸ் ஸ்டெ ய்ன்ஸ் ஆவார் . தன் கணவர், தன்
அன்பான இரண்டு பிள்ளைகளை
இழந்த தாயின் மன்னிக்கும் உள்ளம் எவ்வளவு உயர்ந்தது. 
கிறிஸ்துவின் ஆவியும் அருளும் இல்லாமல் இந்த மன்னிப்பு வரவே வராது. மன்னிப்பு கடவுளி ன் பரிசு, நமக்கோ அது வரம். இந்தத் துன்ப நிகழ்வுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பு வதற்குப் பதிலாக, ஸ்டெய்ன்ஸ் "அவரும் அவரது கணவரும் 15 ஆண்டுகளாக தொழுநோயாளிக ளுக்கு சேவை செய்ய இந்தியாவி ல் தங்க முடிவு செய்தார் கிளா டிஸ் ஸ்டைன்ஸ் ", மேலும் தனது மகள் எஸ்தரை தன்னுடன் வைத் துக் கொண்டு, "எங்களை நேசிக் கும் மற்றும் நம்பும் மக்களை நான் விட்டுச் செல்ல முடியாது. இந்திய மக்கள் மீதும் அவர்களின் சகிப்பு த்தன்மை மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு" என்று கூறினார். காரணம் கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள் கிறது. (2 கொரிந்தியர் 5:14)
2004 ஆம் ஆண்டில், கிறிஸ்டியா னிட்டி டுடே (சர்வதேச கிறிஸ்தவ இதழ் இந்தப் பெண்ணை"  
அன்னை தெரசாவுக்குப் பிறகு இந்தியாவில் மிகவும் பிரபல மான கிறிஸ்தவர்" என்று விவரித்தார்.  2005 ஆம் ஆண்டில், அவருக்கு இந்திய அரசாங்கத் தின் ஒரு சிவில் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது . அந்த விருதைப் பெற்றதன் மூலம் பெற்ற பங்களிப்புகளின் விளை வாக, ஸ்டெய்ன்ஸ் தான் பணியா ற்றிய தொழுநோயாளிகள் இல்ல த்தை ஒரு முழுமையான மருத்து வமனையாக மாற்றினார் .  இந்த மருத்துவமனைக்கு கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் நினைவு மருத்து வமனை என்று பெயரிடப்பட்டது, இது 2004 இல் நிறுவப்பட்டது. நவம்பர் 2015 இல், ஸ்டெய்ன்ஸு க்கு சமூக நீதிக்கான மதர் தெரசா நினைவு விருதும் வழங் கப்பட்டது , மேலும் விருதைப் பெற்ற பிறகு, "என் கணவர் கொல் லப்பட்ட பிறகும், தொழுநோயாளி களைப் பராமரிப்பதில் எனக்கு உதவியதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்" என்று அவர் கூறினார். இதனால் தான் இவரி ன் திருப்பணியை நினைத்து கொண்டாடுகிறோம் இவரே, "மனிதருள் மாணிக்கம்" எனவே இவர்களின் தியாகத்தை கொண் டாடுகிறோம் இவர்களை நினைவு கூறுகிறோம். 
1.தெபோராள் இஸ்ரவேலர்க ளின் தாய். Deborah, the mother of Israel. நீதித் தலைவர்கள் 𝙹𝚞𝚍𝚐𝚎𝚜: 𝟺: 𝟷𝟺-𝟷𝟼.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இஸ்ரவேலருக்குள் அரச ர்கள் இல்லாத அந்த நாட்களில் நீதிதலைவர்களைக் கொண்டு கர்த்தர் வழி நடத்தி வந்தார். ஒத்னியேல், சம்கார், ஏகூத் போன் ற மூன்று நீதி அரசர்களுக்குப்பின் எபிரேய பெண்கள் ஓரங்கட்டப் பட்டிருந்த நேரத்தில் தெபோரா  நான்காவது நீதிதலைவியாக நியமிக்கப்பட்டாள்.'தெபோரா' என்றால் 'தேனீ' என்பது பொருள். இவர் ஒரு பெண்இறைவாக்கினர். இவள் இலப்பிதோத்தின் மனைவி யாவாள்.  இவள் எப்ராயிம் மலை நாட்டில் இராமாவுக்கும் பெத்தேலு க்கும் இடையில் "தெபோராப் பேரீச்சை" என்ற மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். தீர்ப்புப் பெறு வதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர். இஸ்ரவேலர் களிடையே தலைமையேற்கத் தகுதியான ஆண்கள் இல்லாமல் போனபோது, கடவுள் தெபோரா என்ற ஒரு பெண்மணியை தலை வியாக அமர்த்துகிறார். இவள் ஒரு நீதித் தலைவரும், இறைவாக் கினர் ஆவார். இவரே முதல் பெண் நீதித்தலைவர் ஆவார்.
நீதித்தலைவர்கள் யார்? Who are the Judges?
நீதித்தலைவர்கள் என்றவுடன் அவர்களின் சட்டங்களின் படிவழக் குகளை ஆய்ந்து நீதி வழங்கும் அதிகாரம் படைத்த நீதிபதிகள் என்று கணிக்கக் கூடாது. ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த தந்தையர்கள் அக்குடும்பத்தின் நீதிபதிகள் ஆவர் (நீ.த. 21 : 22, 27 ) என்று விவிலியம் கூறுகிறது.  
நீதித்தலைவர்கள் மொத்தம் 12 பேர், இருந்தனர். இவர்களில்
சிம்சோனை சேர்க்கவில்லை. இவர், இஸ்ரவேலருக்கு எதிராக செயல்பட்டார்.நீதித்தலைவர்கள் காலம் கி.மு. 1200-1040க்கு இடைப் பட்டகாலமாகும்.நீதித்தலைவர்கள்  நாட்டின் காவலர்களாகச் செயல் படுகின்றனர்.நாட்டைப்பாதுகாத்து அன்னிய படையெடுப்புகள், ஆதிக்கங்களிலிருந்துவிடுதலையைத் தேடித் தந்தனர்.முன்னின்று போரிட்டு உற்சாகமூட்டி 'வெற்றி யைப்' பெற்றுத் தந்து மக்கள் அமைதியாகவும், பாதுகாப்புடன் வாழ வழி செய்தனர். ஒரு அரசன் போலவே செயல்பட்டார்கள்.
அநீதி தலை விரித்தாடுகின்ற
போது, அறம் நீங்கி மறம் மானிட உலகை வதைக்கின்றபோது, ஆண்டவன் உலகில்வந்துநீதியை, அறத்தை நிலை நாட்டுகிறார். என்பது நம்முடைய நம்பிக்கை.
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை மீண்டும் மீண்டும் செய்தனர். எனவே, ஆட்சோரை ஆண்ட கானானிய மன்னன் யாபினிடம் ஆண்டவர் இஸ்ரவேலரை ஒப்ப டைத்தார். அவனுடைய படைத் தலைவன் சீசரா, இவன் அரோசத்கோயிமில் வாழ்ந்து வந்தான். இஸ்ரயேலர் ஆண்டவரை நோக் கிக் கூக்குரலிட்டனர். ஏனெனில், அவனிடம் தொள்ளாயிரம் இரும் புத் தேர்கள் இருந்தன. அவன் இருபது ஆண்டுகள் இஸ்ரயேல ரைக் கடுமையாக ஒடுக்கினான்.
 இஸ்ரவேலர்கள் பொல்லாங்கு செய்கின்றபோது கடவுள் அவர் களை தண்டிப்பதற்காக அந்நிய மக்களிடம் அடிமைப்படுத்தினார்.
இஸ்ரயேலர் ஆண்டவரை நோக் கிக் கூக்குரலிட்டதால்,தெபோரா
மூலம் அவர்களுக்கு விடுதலை கிடைக்க செய்தார். எப்படியெனில், நப்தலியில் இருந் த கெதேசில் வாழ்ந்த அபினொவா மின்மகன் பாராக்கை, தெபோராள் ஆளனுப்பிக் கூப்பிட்டார். அவர் அவரிடம்,   "இஸ்ரயேலின் கடவு ளாகிய ஆண்டவர் உமக்குக் கட்டளையிடுகிறார்; நீர் போய் நப்தலி, செபுலோன் மக்களைத் தாபோர் மலையில் ஒன்று கூட்டி அவர்களிலிருந்து பத்தாயிரம் பேரைச் சேர்த்துக்கொள்ளும்.“ யாபினின் படைத்தலைவன் சீசராவையம் அவன் தேர்களை யும் படையையும் கீசோன் ஆற் றின் அருகே இழுத்து வந்து உம் கையில் கொடுப்பேன்” என்றார். பாராக்கு அவரிடம், “நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன். நீர் என்னுடன் வராவிடில் நான் செல் லமாட்டேன்” என்றார். தெபோராள் அவரிடம், “நான் உம்முடன் உறுதியாக வருவேன். ஆயினு ம், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார்” என்றார். பின்பு, தெபோரா எழுந்து பாராக்குடன் கெதேசு நோக்கிச் சென்றார். 
சீசரா தன்னிடமிருந்த மொத்தம் தொள்ளாயிரம் இரும்புத்தேர் களையும், தன்னுடன் இருந்த மக் கள் எல்லாரையும் அரோசத்கோயி மிலிருந்து கீசோன் ஆற்றின் (கிஷோன் நதி இஸ்ரேலில் 70 கிலோமீட்டர் நீளமுள்ள (43 மைல்) வற்றாத நீரோடையாகும் .வடக்கு இஸ்ரேலில் அமைந்துள்ளது .) அருகே ஒன்று திரட்டினான். தெபோரா பாராக்கிடம், “எழுந்தி ரும்; இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப் பார். ஆண்டவர் உம் முன் செல்லவில்லையா?” என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந் து இறங்கினார். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர். ஆண்டவர் சீசராவையும் அவனு டைய தேர்கள் அனைத்தையும் படை முழுவதையும் வாள் முனை யில் பாராக்கின் முன்னால் சிதற டித்தார். சீசரா தன் தேரிலிருந்து இறங்கித் தப்பி ஓடினான். பாராக் கு தேர்களையும், படையையும் அரோசத்கோயிம் வரை துரத்தி னார். சிசெராவின் முழுப் படையும் சுற்றி வளைக்கப்பட்டது. யாகே லின் கூடாரத்திற்கு ஓடிப்போன சிசெரா அவளால்கொல்லப்பட் டான். ஒரு பெண்ணால் கொலை செய்யப்படுவான் என்ற கடவுளின் வார்த்தை நிறைவேறப்பட்டது சீசராவின் படை முழுவதும் வாள்முனைக்கு இரையாயிற்று. ஒருவர் கூட தப்பவில்லை.
கடவுள், எவ்வாறு இஸ்ரவேலரைக் காப்பாற்றினார் என்பதை அவர் கள் நினைவில் கொள்ள தெபோ ராள் ஒரு நன்றி பாடலைப் பாடி னாள். இஸ்ரவேலர்கட்டளைகளை கடைப்பிடித்து 40 ஆண்டுகள் சமாதானமாக வாழ்ந்தனர்.
2.அமைதியை ஏற்படுத்துவதே
திருச்சபையின் பணி.
The 𝙼ission 𝚘𝚏 𝚝𝚑𝚎 𝙲𝚑𝚞𝚛𝚌𝚑 is to establish peace. பிலிப்பியர் 4:1-7..
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே திருச்சபையின் மிக முக்கிய பணி அமைதியை (𝙿𝚎𝚊𝚌𝚎) ஏற்படு த்துவது.
எயோதியா மற்றும் சிந்திகேயா என்பவர்கள் பிலிப்பியர் நிருபத் தில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பெண்கள் ஆவர். இவர்கள் திரு தூதர் பவுலுடன் சேர்ந்து, நற்செய் தியை பரப்புவதில் ஒன்றாகப் பணியாற்றினார்கள், ஆனால் அவர்களிடையே கருத்து வேறு பாடுகள் இருந்தன, அதை பவுல் சரிசெய்ய விரும்பினார். அவர்கள் இருவரையும் சமாதானமாக இருக் குமாறும், நற்செய்தி பணியில் தொடர்ந்து ஒத்துழைக்குமாறு ஊக்குவிக்கிறார்.ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி எயோதியாவைக் கேட்டுக்கொள்கிறேன்; சிந்திக்கா வை கெஞ்சிக் கேட்கிறேன். திருச்சபையில் ஏற்படும் பிரிவி னைகள் மனத்தாங்கல்கள், போட் டிகள், சண்டைகள் எவ்வளவு அபத் தமானவை என்பதை திருத்தூதர் பவுல் அடிகளார் இரண்டு பெண் நற்செய்தியாளர்களை வைத்து நமக்கு அறிவுறுத்துகிறார். இந்த இரண்டு சகோதரிகளும் திருச்ச பையில் மிக சாதாரணமான ஆட் களாக இல்லை மிக முக்கியமான வர்கள். இவர்கள் திருத்தூதர் பவுல் அடிகளோடு மிக நேர்த்தி யாகவும், சிறமத்தோடும், ஊக்கத் துடனும் நற்செய்திக்காக அவருட ன் சேர்ந்து உழைத்தவர்கள்.
பெண்கள் திருச்சபையில் போதி க்க நான் அனுமதிக்கவில்லை என்று சொன்ன திருத்தூதர் பவுல் அடிகளார், இந்த பெண்களின் நற் செய்தியை பார்த்து, திருச்சபைக் காக உழைத்ததையும், விருந்தோ ம்பலையும், நற்பணி ஆற்றிய இந்த இரண்டு சகோதரிகளையும் மிகவும்நேசிக்கிறார்,.பாராட்டுகிறார்.
பவுல் அடிகளார் இவர்களை குறித் து சாட்சியாக கூறுகின்ற பொழுது இவர்களுடைய பெயர்கள் வாழ் வோரின் நூலில் (𝚃𝚑𝚎 𝙱𝚘𝚘𝚔 𝚘𝚏 𝙻𝚒𝚏𝚎) எழுதப்பட்டிருக்கும் என்று உறுதியாக கூறுகிறார்.
யூதியாளும் சிந்திகேயாவும் இயேசு கிறிஸ்துவில் தங்களுக்கு ஒரு பெரிய பொருப்பு இருப்பதை மறந்துவிட்டார்கள்.உலகிலேயே மிகப்பெரிய மரியாதை அவர்களு க்குக் கிடைத்தது: ஜீவ புத்தகத் தில் தங்கள் பெயர்களைப் பெற்றிருப்பது ( திருவெளிப்பாடு 20:15 ). இத்தகைய நற்செய்தியா ளர்களுக்கு உள்ள கருத்து வேறு பாடுகள் முதலில் கலைய வேண் டும்.இதுபோன்ற பிரிவுகள் ஒரு திருச்சபையின் நல்வாழ்வுக்கு மிகவும் ஆபத்தானவை, எனவே, பிரச்சினை பெரிதாகும் முன் அதைத் தீர்க்குமாறு பவுல் அறிவு றுத்தினார். திருச்சபை தலைவர் கள் இதை செய்ய வேண்டுகிறார்.
 பிரச்சனைகளை சரியான நேரத் தில் தீர்வு காணவில்லை எனில் இவைகள் நீதிமன்றங்கள் வரை செல்கின்றன.
சபைக்குள் மோதல்களைத் தீர்ப்ப து மற்றும் ஒற்றுமையைப் பேணு வது குறித்து மதிப்புமிக்க பாடங் களை இங்கு வழங்குகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபத்தை, கருத்து வேறுபாட்டை சரிசெய்ய, சபையை பவுல் கேட்டுக்கொண்டார். ஏனெ னில், இது சபையின் ஒற்றுமை க்கு பங்கம் விளைவிக்கும் என்று அவர் நினைத்தார். கருத்து வேறு பாடுகளை சமாதானமாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் அறியலாம்.
பெண்கள் பல வழிகளில் கடவு ளுடைய அரசிற்காக உழைக்கிறா ர்கள் - கடவுளுடைய வேலைக்காக ஜெபிப்பதன் மூலமும், நிதி உதவி வழங்குவதன் மூலமும், கடவுளு டைய வார்த்தையைப் பிரசங்கிப் பவர்களை ஆதரிப்பதன் மூலமும், பிரசங்கிப்பதன் மூலமும், ஊழியத் தில் ஈடுபட்டுள்ள கணவர்களுக்கு உதவுவதன் மூலமும்.பெண்கள் சிறப்பான பணியை செய்கிறார் கள்.சமாதானப்படுத்தும்படி சபையை கேட்டுக் கொண்டதன் மூலம், சபையின் முக்கிய நோக்க ம் சமாதானமாக இருப்பதே என்று
 பவுல் அடிகளார் வலியுறுத்து கிறார் திருச்சபை அமைதியை ஏற்படுத்தும் இடம் அன்பு, மகிழ்ச்சி மனமாற்றும், மன்னிப்பு இவைக ளே அதனுடைய பொறுப்பாகும்.
 எவ்வாறு திருத்தூதர் பவுல் அடிகளார் அந்த இரண்டு சகோத ரிகளின் நற்காரியங்களை நினை வு படுத்தினாரோ அவ்வாறு நம் திருச்சபையும் பெண் விசுவாசி களின் நற்பணிகளை நினைக்க வும்,பாராட்டவும், கொண்டாடவும் கடமைப்பட்டுள்ளது.
3.திருச்சபையின் சிறப்பு, பெண் களின் திருப்பணி.லூக்கா : 8:1-3
 கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! இயேசுவும் அவருடைய சீடர்களும் ஊர் ஊராகச் சென்று தேவனுடை ய அரசைப் பற்றிய நற்செய்தியைப்பிரசங்கித்தார்கள்.இயேசுவுடன் பன்னிரு சீடர்களும், சில பெண்களும் இருந்தனர். அவர்களில்குறிப்பிடத்தக்கவர்கள்:  மரியா மகதலேனா, இவர்
இயேசு உயிர் துறக்கும்போது, சிலுவை அருகில் நின்ற சீடர்களு ள் இவரும் ஒருவர். (யோவா 19:25, மாற் 15:40)  இயேசுஇவரிடமிருந்து 7 பேய்களை ஓட்டியிருந்தார். உயிர்த்த கிறிஸ்துவை முதலில் சந்தித்தவர் .
பெத்தானியா மரியா 
இவர் பெத்தானியா என்னும் ஊரி ல் தன் சகோதரி மார்த்தாவுடன் வாழ்ந்து வாழ்ந்தவர் (யோவா 11:1)இவர் இலாசர் மற்றும் மார்த் தாவின் சகோதரி (யோவா 11:21)
இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத் தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர் (யோவா 11:1,2) மற்றும் மார்த்தா, இவர் பெத்தா னியாவில் வாழ்ந்தவர். (யோவா 11:1) இவர் இலாசர் மற்றும் மரியா வின் சகோதரி (யோவா 11:21)
இயேசு இவரிடம் தனி அன்பு கொண்டிருந்தார் (யோவா 11:5).
இயேசு தன் வீட்டிற்கு வந்தபோது பற்பல பணிவிடைகள் புரிந்து பரபரப்பாக இருந்தவர். (லூக் 11:40)மற்றும் இயேசுவின் தாயார் மரியா.  கடவுளின் தாய். ஆண்டவ ரின் பிறப்பு முதல் இறப்பு வரை யும் உயிர்த்தெழுந்த பிறகு அவரி ன் திருப்பணியிலும்பங்கேற்றவர். இயேசு சிலுவையில் அறையப் படும்போது, தம் சீடனாகிய யோவானிடம், "இதோ உன் தாய்" என்று மரியாளை ஒப்படைத் தார். இதன் மூலம், மரியாள் திருச்சபையின் ஆன்மீக தாயாக கருதப்படுகிறார்.
சூசன்னா மற்றும் யோவன்னா
இவர்கள் ஏரோது மாளிகை மேற் பார்வையாளர் கூசாவின் மனை வியர். இயேசு நகர் நகராய், ஊர் ஊராய் சென்று இறையாட்சிப் பற்றிய நற்செய்தியைப் பறை சாற்றி வந்தபோது இவர்கள் தங்க ள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள் (லூக் 8:1-3). இயேசு உயிர்பெற்றெழுந்த செய்தியை முதலில் மற்ற 11 சீடர்களுக்கு அறிவித்த பெண்களில் யோவன் னாவும் உடன் இருந்தார் (லூக் 24:10)
சலோமி: இவர் செபதெயுவின் மனைவி (மத் 27:56) இவர்பிள்ளை கள்தான் இயேசுவின் சீடர்களான யோவானும் , யாக்கோபும் (மத் 20:20, மத் 27:56)சிலுவை அடியில் மற்ற பெண்களோடு தொலையில் நின்றுகொண்டிருந்தவர் (மாற்கு 15:40)அடக்கம் செய்த இயேசுவின் உடலில் மற்ற பெண்களோடு நறு மணத்தைலம் பூசச் சென்றவர் (மாற்கு 16:1)
குளோப்பாவின் மரியா:
இவர் சிலுவை அடியில் மற்ற பெண்களோடு நின்று கொண்டி ருந்தவர் (யோவா 19:25)
பெண்கள் பாடகர்களாக, இசைக் கலைஞர்களாக, வாசிப்பாளர் களாக வழிபாடுகளில் பங்கெடு க்கின்றனர்.பெண்கள் போதகர்க ளாக, ஆசிரியர்களாக திருச்சபை போதனைகளை கற்பிக்கின்றனர்.
பெண்கள் சமூக சேவை, உதவி செய்தல், ஆலோசனை வழங்குத ல் போன்ற ஊழியம் செய்கின்ற னர்.
இயேசுவின் சீடர்களை வல்லமை யால் தரிப்பிக்கும் படி பெந்தெ கொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங் கிய போது அங்கே கூடியிருந்தவர் களில் ஆண்களும் பெண்களும் இருந்தனர் என்பதை திருத்தூதர் பணிகள் 1,2 அதிகாரங்கள் தெளி வாக்குகின்றன. எனவே, ஊழியத் திற்கு என்று கடவுள் இருபாலரு க்கும் தூய ஆவி அருளினார். அவர் வேறுபாடு காட்டவில்லை எனவே திருச்சபையில் ஆண் பெண் என்ற சம உறவை, அதிகா ரத்தை பெற்றிருக்கின்றனர். உலகம் முழுவதற்கும் விடுதலை அளித்த இயேசு கிறிஸ்துவின் அவதாரத்திற்குப் பெண் ஒரு பங்காளியானாள். பெண்கள் மூலம் செய்யப்படும் ஊழியத்தை நினைவு கூர்ந்து அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றுவோம். அவ்வாறு நாம் செயல்பட கடவுள் அருள் புரிவாராக, ஆமென்.


𝙿𝚛𝚘𝚏. 𝙳𝚛. 𝙳𝚊𝚟𝚒𝚍 𝙰𝚛𝚞𝚕 𝙿𝚊𝚛𝚊𝚖𝚊𝚗𝚊𝚗𝚍𝚊𝚖. 𝚂𝚎𝚛𝚖𝚘𝚗 𝚆𝚛𝚒𝚝𝚎𝚛.

𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚜𝚎𝚛𝚖𝚘𝚗𝚌𝚎𝚗𝚝𝚛𝚎. 𝚌𝚘𝚖

𝚠𝚠𝚠. 𝚍𝚊𝚟𝚒𝚍𝚊𝚛𝚞𝚕𝚋𝚕𝚘𝚐𝚜𝚙𝚘𝚝. 𝚌𝚘𝚖







 


"நேருவின் பார்வையில், ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது "






தெபோரா இஸ்ரவேலர்க ளின் தாய் 

'தெபோரா' என்றால் 'தேனீ'        என்பது பொருள்.  

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.