திருமுழுக்கு: மறுபடியும் பிறத்தல் (222)𝙱𝚊𝚙𝚝𝚒𝚜𝚖: 𝙱𝚘𝚛𝚗 𝚏𝚛𝚘𝚖 𝙰𝚋𝚘𝚟𝚎. தொடக்க நூல்: 8:1-14, திருப்பாடல் 25. கொலேசியர் 3: 1-11, யோவான் 3: 1-8.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த் துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "
"திருமுழுக்கு: மறுபடியும் பிறத் தல் 𝙱𝚊𝚙𝚝𝚒𝚜𝚖: 𝙱𝚘𝚛𝚗 𝚏𝚛𝚘𝚖 𝙰𝚋𝚘𝚟𝚎. "
 திருமுழுக்கு என்றால் என்ன?
What is Babtism?
 திருமுழுக்கு என்பது "இயேசு கிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசிக்கும் ஒரு பொது அறிக்கையாகும்."
இது ஒரு கிறிஸ்தவ சடங்கு.  ஞானஸ்நானம்" or திருமுழுக்கு என்ற சொல், சொற்பிறப்பியல் ரீதியாக, கிரேக்க மொழியிலிரு ந்து "baptõ" என்பதிலிருந்து உருவானது, இது தலையில் தண் ணீரைத் தெளிப்பதன் மூலமோ அல்லது ஊற்றுவதன் மூலமோ அல்லது ஓரளவு அல்லது முழுமை யாக தண்ணீரில் மூழ்குவதன் மூலமோ , பாரம்பரியமாக மூன்று முறை, திரித்துவத்தின்( தந்தை, மகன், தூய ஆவியின் பேரால்) ஒவ்வொரு நபருக்கும் ஒரு முறை செய்யப்படும் கட்டாய சடங்கா கும்..புராட்டஸ்டன்ட்திருச்சபைகள்  இரண்டு முக்கிய சடங்குகளை  
அடிப்படையாக கொண்டது.  
திருமுழுக்கு முதலாவதாகக் கருதப்படுகிறது,  இரண்டாவது கர்த்தருடைய திருவிருந்து.
அன்பர்களே, திருமுழுக்கு இது உண்மையில் கி.பி. முதல் நூற்றா ண்டில் இயேசுவின் காலத்தில் பெரும்பாலும் நடைமுறையில் இருந்தது. ஆண்டவரின் கட்டளை ப்படி,"  நீங்கள் போய் எல்லா மக்க ளினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங் கள்.  (மத்தேயு நற்செய்தி 28:19) இக்கட்டளப்படியே நம் திருச்சபை கள் திருமுழுக்கை செய்து வருகி ன்றன. " 𝙱𝚊𝚋𝚝𝚒𝚜𝚖 𝚒𝚜 𝚝𝚑𝚎 𝚐𝚊𝚝𝚎𝚠𝚊𝚢 𝚝𝚘 𝚝𝚑𝚎 𝙲𝚑𝚛𝚒𝚜𝚝𝚒𝚊𝚗𝚒𝚝𝚢" திருமுழுக்கு கிறிஸ்துவத்தின் நுழைவு வாயல்.
திருமுழுக்கு மூலமே ஒருவர் திருச் சபையின் உறுப்பினராகிறார்.
 ஏன் நாம் திருமுழுக்குப் பெற வேண்டும்? Why should we babtizice?
 கிறிஸ்துவுக்கு அன்பானவர்களே நாம் ஏன் திருமுழுக்குப் பெற வேண்டும் என்றால் :
1. இது ஆண்டவரின் கட்டளை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு முன்மாதிரி யாக யோர்தான் நதிக்கரை சென்று திருமுழுக்கு யோவானி டம் திருமுழுக்கு பெற்றார்.
2 இயேசுவின் திருமுழுக்கின் போது தூய ஆவியானவர் இறங்குவது போல நம் மீதும் இறங்குகிறார்.
3 இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசிப்பதை பகிரங்கமாக அறிவிக்கும் ஒரு காணக்கூடிய வழியாகும்.
4.திருமுழுக்கு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுத லுடன் விசுவாசியின் ஐக்கியத் தைக் குறிக்கிறது
4.திருமுழுக்கு,ஒரு நபர் தனது பழைய வாழ்க்கையிலிருந்து விலகி கிறிஸ்துவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தழுவிவிட்டார் என்பதை இது உலகிற்கு அறிய செய்கிறது.  
5. திருமுழுக்கு பாவங்களைகழுவி ஒரு புதிய வாழ்விற்கான கிறிஸ் துவின் உறவில் வளர செய்கி றது.
 மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன ? What is meant by Born Again? Or Born from Above?
கிறிஸ்துவிற்கு பிரியமானவர் களே! மறுபடியும் பிறத்தல் என்ற வார்த்தையை ஆண்டவர் யூத தலைவர்களில் ஒருவரான நிக்கதேம் என்ற பரிசேயரிடம் கூறிய வார்த்தை. (யோவான் 3:1)
இயேசு அவரைப் பார்த்து, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றா ர். (யோவான் நற்செய்தி 3:3)
(சில ஆங்கில மொழிபெயர்ப்புக ளில், "மீண்டும் பிறந்தவர்" என்ற சொற்றொடர் "மேலிருந்து பிறந் தவர்"  (Born from Above) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
இதனால் " இரட்சிக்கப்படுபவர் " என்றும் கூறுகின்றன. மறுபடியும் பிறத்தல் என்ற வார்த்தை யோவான் நற்செய்தியில் மட்டுமே இரண்டு முறை மட்டும் கூறப்பட் டுள்ளன.
 அன்பானவர்களே யோவான் நற்செய்தி கோய்னே கிரேக்க மொழியில் எழுதப்பட்டது , மேலும் அசல் உரை தெளிவற்றதாக உள்ளது, இதன் விளைவாக நிக்கோதேம் மறுபடியும் பிறத்தல் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொள்கிறார். 'மீண்டும்' என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல் சரியாக சொல்ல வேண்டு மானால்,  'மேலிருந்து' என்று பொருள்படும்.
 இறையியலாளர் வில்லியம் 
பார்க்லேவின் கூற்றுப்படி: யூத மதம் மாறியவர்களின் திருமுழுக் கின் சூழலில், தண்ணீர் என்பது கடந்த கால பாவங்களிலிருந்து சுத்திகரிப்பு மற்றும் ஒரு புதிய வாழ்க்கைக்கான தண்ணீராலும் ஆவியாலும் பிறப்பது" இது பரிசு த்த ஆவியின் மூலம் ஆன்மீக மறுபிறப்பைக் குறிக்கிறது, இது தண்ணீரால் அடையாளப்படு த்தப்படுகிறது, இது கிறிஸ்துவில் ஒரு புதிய வாழ்க்கைக்கு ஒரு நபரைச் சுத்திகரித்து அதிகாரம் அளிக்கிறது . தேவனுடைய அரசி ல் பிரவேசிப்பதற்கும் , தேவனு டைய பிள்ளையாக மாறுவதற்கும், நிலை வாழ்வை அனுபவிப்பதற் கும்இந்தப்புதியபிறப்புஅவசியம்.  
மறுபிறப்பை எடுத்த கிறிஸ்தவர் என்பவர், தங்கள் பாவங்களுக் காக மனந்திரும்பி, தங்கள் இரட் சிப்புக்காக கிறிஸ்துவிடம் திரும் பியவர், அதன் விளைவாக என்றென்றும் கடவுளின் குடும்பத் தில் ஒருவராக மாறுகிறார். கடவு ளின் ஆவி நம் வாழ்வில் செயல் படும்போது இவை அனைத்தும் நிகழ்கின்றன. என்பது கண்ணுக் குத் தெரியாத கிருபையின் புலப் படும் அடையாளமாகும். புராட்டஸ்டன்ட் தேவாலயங்கள் முதன்மையாக இரண்டு வகை யான ஞானஸ்நானத்தைப் பின்பற்றுகின்றன: குழந்தை ஞானஸ்நானம் மற்றும் விசுவா சியின் ஞானஸ்நானம் .
1. தீமை பெருகினால் தண்ட னை நிச்சயம். 𝙸𝚏 evil increases, punishment is certain.தொடக்க நூல் 6: 1-14.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!ஆதாம் மற்றும் ஏவாளின் ஒன்பதாம் தலைமுறையின் சந்ததியினரான நோவா ஒரு நீதியுள்ள, நேர்மையான மனிதர் என்று வேதம் நமக்குச் சொல்கி றது. நோவா என்றால் "ஓய்வு' அல்லது 'ஆறுதல்', என்ற அர்த்தம். .நோவாவுக்கு ஒரு மனைவியும் மூன்று மகன்களும் இருந்தனர், அவர்கள் அனைவரும் பேழையில் காப்பாற்றப்பட்டனர். நோவாவின் மகன்களுக்கும் மனைவிகள் இருந்தனர், ஆனால் இந்தப் பெண்களைப் பற்றி வேதத்தில் அதிகம் கூறப்பட வில்லை. நோவாவின் மகன்களு க்கு சேம், காம், யாப்பேத் என்ற பெயர்கள் உள்ளன. அவர்கள் ஜலப்பிரளயத்திற்கு முன்பே திருமணம் செய்து கொண்டு தங்கள் மனைவிகளை அழைத்து வந்தனர்.மொத்தம் எட்டு பேர்.
பெருவெள்ளத்திற்கு முன்பு மனித குலத்தின் அதிகரித்து வரும் துன் மார்க்கத்தை விவரிக்கிறது, "தேவனுடைய குமாரர்" "மனுச குமாரத்திகளுடன்" கலப்புத் திருமணத்தையும் அதைத் தொடர் ந்து பூமியின் சீர்கேட்டையும் எடுத்துக்காட்டுகிறது . கடவுள்,
பரவலான தீமையைக் கவனித்து, நோவாவையும் அவரது குடும்பத் தினரையும் தவிர, அனைத்து மாம்சங்களையும் அழிக்க ஒரு வெள்ளத்தை அனுப்ப முடிவு செய்கிறார்.  
பூமியில் எங்கும் பரவியுள்ள துன் மார்க்கத்தையும் பாவத்தை கடவு ள் கவனிக்கிறார், இதனால் மனித குலத்தைப் படைத்ததற்காக அவர்  முதன்முதலில் வருத்தப்படு கிறார். அவருடைய இருதயம் மிக வும் கலங்கியது"
ஏன் கடவுள் மனுகுலத்தை அழித்தார்? 𝚆𝚑𝚢 𝚍𝚒𝚍 𝙶𝚘𝚍 𝚍𝚎𝚜𝚝𝚛𝚘𝚢
𝚝𝚑𝚎 𝚖𝚊𝚗𝚔𝚒𝚗𝚍?
 அன்பானவர்களே கடவுள் அழிக் கும் நோக்கத்தில் மனிதனைப் படைக்கவில்லை. ஆனால் அவனு டைய பாவங்களே  அவனை அழிக்க தூண்டியது. பாவம் செய்யும் ஆன்மா அழியும் என்று வேதம் கூறுகிறது. மனித செயல் ழகளுக்கு, குறிப்பாக பாவம் மற்றும் கீழ்ப்படியாமைக்கு பதிலளிக்கும் விதமாக கடவுள் சோகத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கிறார் என்று இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது .
 கடவுள் மனிதர்களின் செயலுக் காக மூன்று இடங்களில் வருத் தப்படுகிறார்.முதலாவதாக
நோவா காலத்து மக்களுக்காக 
{தொ. நூல் 6:6)இரண்டாவதாக
சவுல் கடவுளைப் பின்பற்றுவதை விட்டு விலகிச் சென்றதால், சவுலை ராஜாவாக்கியதற்காக கடவுள் வருத்தப்படுகிறார்.  (1.சாமுவேல் 15:11:)
மூன்றாவதாக, வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களின் செயல்கள் கடவுளை வருத்தப்படுத்தியதாக விவரிக்கப்பட்டுள்ளன.  (திருப்
பாடல் 78:40-42)
1.மனிதகுலத்தின் தீமை:
"மனுஷனுடைய அக்கிரமம் பூமி யிலே பெருகி, அவன் இருதயத் தின் நினைவுகளின் கற்பனை யெல்லாம் தொடர்ந்து பொல்லா ததாகவே இருந்தன" 
2 இந்தப் பரவலான தீமை கடவு ளுக்கு வருத்தத்தையும் துக்கத் தையும் ஏற்படுத்தியது.
3.வருத்தத்தின் விளைவாக, கடவுள் கிட்டத்தட்ட அனைத்து மனிதகுலத்தையும் விலங்குக ளையும், உலகத்தையும் அழிக்க  முடிவு செய்கிறார்.
4.பூமி வன்முறையால் நிறைந்திரு ந்தது.
5. இது மனித சீரழிவின் ஆழத்தை யும் அதற்கு கடவுளின் பதிலையும் காட்டுகிறது.
 அன்பானவர்களே கடவுள் எப்பொ ழுதும் மனிதர்களை நேசிக்கின்ற வர். மனம் திரும்ப அவர் காத்துக் கொண்டிருக்கிறவர்.நாம் மனம் திருந்த மாட்டோமா என்று எதிர் பார்க்கின்றவர். எனவேதான், எடுத்தேன் கவித்தேன் என்றில்லா மல் மனிதர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ள கடவுள் 120 ஆண்டுகள் அவகாசம் கொடுத் தார். இந்தக் காலகட்டம் (தொ. நூல் 6:3- ல்) குறிப்பிடப்பட்டுள் ளது. ஏன் 120 ஆண்டு அவகாசம் கொடுத்தார் என்றால் மனுசனு டைய வாழ்நாள் 120 என்பதை குறிப்பதற்காக தான். அங்கு கடவுள், "என் ஆவி என்றென்றும் மனுஷனில் நிலைத்திருக்காது, ஏனென்றால் அவன் மாம்சம்தான்: அவன் நாட்கள் 120 ஆண்டுகள்" என்று அறிவிக்கிறார்.
 ஆண்டவரின் ஆவியானது ஏன் மனுஷனின் நிலைத்திருக்காது என்றால் அவன் சிந்தனைகள் அனைத்தும் பொல்லாதவை கள். எனவே மனுகுளத்தை அழிக்கின்றார். கடவுளின் பார் வைக்கு நோவா நீதிமானாகக் காணப்பட்டான். நோவாவைத் தவிர, மற்ற எல்லா உயிர்களை யும் அழிக்க ஒரு வெள்ளத்தை அனுப்ப அவர் தீர்மானிக்கிறார்.  தன் தலைமுறையில் குற்றமற்ற வராகவும், கடவுளோடு நடப்பவரா கவும் காட்டப்படுகிறார். இது நோவாவுடன் கடவுள் செய்த உடன்படிக்கைக்கும், பேழையைக் கட்டுவதற்கான வழிமுறைகளுக் கும் களம் அமைக்கிறது.  
அதன் கட்டுமானத்திற்கான விரி வான விவரக்குறிப்புகளை வழங் குகிறார். பூமியில் வெள்ளத்தைக் கொண்டுவரும் தனது திட்டத்தை யும் அவர் வெளிப்படுத்துகிறார், மேலும் பாதுகாப்பிற்காக அனைத் து உயிரினங்களின் ஜோடிகளை யும் சேகரிக்க நோவாவிடம் கட்ட ளையிடுகிறார்.  
 நோவாவின் வெள்ளத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள்.
𝚆𝚑𝚊𝚝 𝚊𝚛𝚎 𝚝𝚑𝚎 𝙸𝚖𝚙𝚊𝚌𝚝 𝚘𝚗 𝙽𝚘𝚊𝚑"s 𝚏𝚕𝚘𝚘𝚍?
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நோவாவின் காலத்திய வெள்ளத்தின் அழிவு நமக்கு எத்த கைய பாடத்தை கொடுக்கிறது என்றால் :
1 நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பூமியையும் அதன் சுற்றுச்சூழலையும் வியத் தகு முறையில் மாற்றியமைத்த ஒரு உலகளாவிய பேரழிவு.
2, மனிதகுலத்தின் துன்மார்க்க த்தின் மீதான தெய்வீக தீர்ப்பின் விளைவாக ஏற்பட்ட வெள்ளம், 
3.சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டன
4 வெள்ளப்பெருக்கு, மிக உயர மான மலைகள் உட்பட, முழு பூமியையும் மூடியதால், உலகளா விய பேரழிவு ஏற்பட்டது.  
5 பெரும் ஆழத்தின் நீரூற்றுகள் உடைந்து பெய்த மழையுடன் கூடிய பாரிய வெள்ள நீர், வண்டல் படிந்து பில்லியன் கணக்கான உயிரினங்களை புதைத்து, புதை படிவ பதிவை உருவாக்கியது.
6.எரிமலை வெடிப்புகள் மற்றும் மலைத்தொடர்கள் உருவாகக் காரணமாக அமைந்ததாக நம்பப் படுகிறது.  
7.கண்டங்கள் இடம் பெயர்ந்தன.
8.வெள்ளம் வாழக்கூடிய பரந்த நிலங்களை அழித்து ஒரு வடு நிலப்பரப்பை விட்டுச் சென்றது.
9.கீழ்ப்படியாமையின் விளைவு களை நினைவூட்டுவதாக வெள் ளம் செயல்படுகிறது.  
10.வெள்ளம் மனிதகுலத்தின் பாவத்தின் மீதான தீர்ப்பாக முன் வைக்கப்படுகிறது.
வெள்ளம் என்பது தண்ணீரை
குறிக்கிறது, இதன் மூலம் பாவ
மனிதர்கள், விலங்கினங்கள்
மற்றும் அனைத்து உயிரினங்க ளும் தண்ணீரில் மூழ்கி அழிக்கப் படுகின்றனர்.புதிய உயிரினங்க
ளின் தோற்றம் திருமுழுக்கு பெற்று வருவதை குறிக்கிறது. நோவாவின் குடும்பம் தண்ணீ
ரினால் மீட்பு பெறுவதை திருமுழு க்கு என்கிறோம்.இவர்கள் அழியா
மல் காக்கப்பட்டது மறுபடியும்
பிறத்தலை உறுதி செய்கிறது.
2. திருமுழுக்கு புது வாழ்வை தருகிறது. Babtism gives the New Life. கொலேசியர் 3: 1-11
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர்  பவுலின் காலத் தில், கொலோசேயில் இருந்த திருச்சபை, உண்மையான நற் செய்திக்கு எதிராக   பொய்யான போதனைகளுடன் போராடும் ஒரு சமூகமாக இருந்தது . இந்தப் போதனைகள், யூத சட்டவாதம், கிரேக்க தத்துவம் மற்றும் உள்ளூ ர் மாய நடைமுறைகள் ஆகியவற் றின் கலவையாக இருந்தது, அவை இயேசுவின் தெய்வீகத்தை குறைத்து மதிப்பிட்டன, திருதூதர் பவுல் அடிகளார் அந்த நகரத்தி ற்குச் செல்லவில்லை என்றாலும், கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் இந்தப் பிரச்சினை களைக் குறிப்பிட்டு, கிறிஸ்துவின் மேன்மை, மற்றும் மேலாதிக்க த்தை வலியுறுத்தி, அவர் படைப் பாளராகவும், மீட்பராகவும், மனித உருவில் கடவுளின் முழுமையை யும் அவர் எடுத்துக்காட்டினார். 
கிறிஸ்துவுக்குள் இருக்கும் விசு வாசிகள் தங்கள் பழைய வாழ்க் கையை விட்டு, கிறிஸ்துவைப் போல புதிய வாழ்க்கையை வாழ ஊக்குவிக்கிறது. பழைய பாவ இயல்புகளை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் குணாதிசயங்களை அணிந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கிறார் கிறிஸ்துவு டன் உயிர்த்தெழுந்தவர்கள், கிறிஸ்துவின் மேல் தங்கள் மனதை வைக்க வேண்டும், பூமியில் உள்ளவைகளை அல்ல.
விண்ணகத்தில் உள்ளவைகளு க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, நம்முடைய பழைய வாழ்க்கை கிறிஸ்துவுடன் மறைக்கப்படு கிறது. கிறிஸ்து வெளிப்படும் போது, நாமும் அவருடன் வெளிப் படுவோம்.
 புதிய மனிதனை தரித்துக் கொள் ள நாம் பாவ இயல்புகளை விட்டு விட வேண்டும். விபச்சாரம், அசுத் தம், இச்சை, துர்மோகம், பொருளா சை போன்ற பாவங்களை விட்டு விட வேண்டும்.மாறாக நாம் கிறிஸ்துவின் குணாதிசயங்களை அணிந்து கொள்ள வேண்டும். அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சை அடக்கம் போன்ற குணங்களை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பாலின, இன, சமூக வேறுபாடுகள் இல்லை. அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றுதான். நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடலில் உறுப்புகள் , எனவே, ஒருவருக்கொருவர் அன்பாகவும், ஆதரவாகவும்
இருக்க வேண்டும் என நம்மை
வலியுருத்துகிறார்.இப்படி இருப்
பது, கிறித்துவில் திருமுழுக்குப்
பெற்று புது வாழ்வு வாழும் மக்களாவர்.
3. மறுபடியும் பிறத்தல் ஒரு அனுபவம்.Being born again is an experience.யோவான் 3: 1-8.
கிறிஸ்துவின் அன்பர்களே!
பரிசேயர்களில் ஒருவனும், யூதர் களின் தலைவனுமான நிக்கொ தேமு, இயேசுவிடம் இரவில் வந்தான். இது இயேசுவின் போதனைகளின் மீது அவனுக்கு இருந்த ஆர்வத்தையும், மரியாதையையும் காட்டுகிறது. மேலும், இயேசுவின் செயல்கள் கடவுளால் ஆனது என்று அவன் நம்பினான்.நிக்கொதேமு, இயேசு வை, நீர் "ரபி" நீர் தேவனிடத்திலி ருந்து வந்த போபோதகர் என்றும், கடவுளால் அனுப்பப்பட்டவரா கவும் அங்கீகரித்தான்.இயேசு நிக்கொதேமுவிடம், ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் கடவுளின் அரசை காண முடியாது என்று கூறினார்.
 உண்மையில்நிக்கொதேமுவுக்கு இது புரியவில்லை. அவன், ஒரு மனிதன் எப்படி மறுபடியும் பிறக்க முடியும் என்று கேட்டான். ஆண்டவர் அவனுக்கு விளக்கமாக
காற்று எங்கிருந்து வீசுகிறது என்று நமக்குத்தெரியாது,ஆனால் அதன் சத்தத்தை கேட்கிறோம். அதுபோலத்தான், ஆவியினால் பிறக்கிறவர்களும் இருப்பார் கள் என்று கூறினார்.ஆவியி னாள் பிறப்பது என்பது, ஒரு நபர் பாவத்திலிருந்து விடுவிக்கப் பட்டு, கிறிஸ்துவை தன் வாழ்க் கையின் ஆண்டவராக ஏற்றுக் கொள்வதன் மூலம் உண்டாகும் மாற்றம் ஆகும்.
ஏன் நிக்கொதேம் இரவில் இயேசுவிடம் வர வேண்டும்?
Why should Nicodemus come to Jesus in the night?  
அன்பானவர்களே! நிக்கெதேம்
ஒரு பரிசேயன்.  பரிசேயர்கள் நியாயப்பிரமாணத்தைப் படிப் பதில் அதிக நேரம் செலவிட்டனர். அவர் அந்தக் காலத்தில் சுமார் 6,000 பரிசேயர்களில் ஒருவராக இவர் இருந்தார், அவர் இஸ்ரவே லின் போதகராக மதிக்கப்பட்டார், அவர் யூத ஆளும் குழுவின் சன்ஹெட்ரின் சங்க உறுப்பினர். இந்த சங்கத்தினர் இயேசுவை விரோதியாக பார்த்தார்கள். எனவே இவர்களுக்கு தெரியாமல் இரவில் இயேசுவை பார்க்க வந்தார்.
மற்றும், பகல்நேரக் கூட்ட நெரிசல் கள் மற்றும் அழுத்தங்களிலிருந்து விலகி, இயேசுவுடன் மிகவும் தனிப்பட்ட மற்றும் இடையூறற்ற உரையாடலை அவர் விரும்பியிரு க்கலாம்.  இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நிக்கோதேமு உணர்ந்தார். எனவே இரவில் ஆண்டவரை சந்திக்க வந்தார்.
இயேசுவின் மரணத்திற்குப் பின், அரிமத்தியா யோசேப்புடன் சேர்ந்து, இயேசுவின் உடலை அடக்கம் செய்ய உதவினார். நிக்கதேமுவின் இந்த செயல், இயேசுவின் மீது அவர் கொண்டி ருந்த நம்பிக்கையை வெளிப்படு த்துகிறது. 
 அன்புக்குரியவர்களே ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் மறுபடியும் பிறத்தில் அனுபவத்தை பெற்றிரு க்க வேண்டும் அவர்கள் கிறிஸ் துவால் இரட்சிக்கப்படுகிறார்கள் அந்த இரட்சிப்பை உறுதி செய்ய கிறிஸ்து நமக்கு அருள்புரிவாராக ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.david arulsermon centre. com
www.davidarulblogspot.com.


 . 
There are two kinds of beauty; there is a beauty which God gives at birth, and which withers as a flower. And there is a beauty which God grants when by His grace men are born again. That kind of beauty never vanishes but blooms eternally.
.              Abraham Kuyper












Baptism by immersion in the Jordan River.






Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.