திருவிருந்து எனும் சாக்கிரமந்து The Sacrament of the Holy Communion (224) விடுதலைப் பயணம் 12 :1-14, 1 கொரிந்தியர் 10:: 14-22, திருப்பாடல் 42, லூக்கா 22: 7:20.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, திருவிருந்து எனும் சாக்கிரமந்து. இது ஒரு கிறிஸ் தவ புனித சடங்காகும்.
அன்பானவர்களே! புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் போது ஜெனீவா வில் ஒரு பிரெஞ்சு இறையியலா ளர் , போதகர் மற்றும் சீர்திருத்த வாதி ஜான் கால்வினின் கூற்றுப்படி, ஒரு புனிதச் சடங்கு என்பது கடவுளிடமிருந்து வந்த வாக்குறுதியுடன் தொடர் புடைய பூமிக்குரிய அடையா ளம் என்று வரையறுத்தார். புதிய உடன்படிக்கையின் கீழ் இரண்டு புனிதச் சடங்குகளை மட்டுமே அவர் ஏற்றுக்கொண்டார் : திருமுழுக்கு என்ற ஞானஸ்நா னம் மற்றும் நற்கருணை என்ற கர்த்தருடைய இராப்போஜனம்.
இவை இரண்டுமே மிக முக்கிய புனித சடங்காகும் இதையே நம் திருச்சபைகள் பின்பற்றி வருகி ன்றன.புதிய உடன்படிக்கையின் கீழ் இரண்டு சடங்கை மட்டுமே செல்லுபடியாகும் என்று அவர் ஏற்றுக்கொண்டார். நாமும் இவற்றில் உறுதியாய் இருப்போம் பின்பற்றுவோம்.
அன்பானவர்களே, கிறிஸ்தவ ஞானஸ்நான நடைமுறை, யோவா ன் ஸ்நானகன் இயேசுவுக்குக் கொடுத்த ஞானஸ்நானத்தின் வேர்களைக் கொண்டுள்ளது.
திருமுழுக்கு இயேசுவைப் பின்பற்றுவதற்கான ஒரு நபரின் உறுதிப்பாட்டின் பொது அறிவிப் பாகும்.
திருமுழுக்கு என்பது, ஒரு நபர் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்ப ட்டு, கிறிஸ்துவுடனும் கிறிஸ்தவ திருச்சபையின் சமூகத்துடனும் ஒரு புதிய வாழ்க்கையில் மறுபிற வி எடுப்பதைக் குறிக்கிறது.
திருமுழுக்கு "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்" செய்யப்படுகிறது. எனவே இதில் திரித்துவம் அடங்கியுள்ளது.
தண்ணீரைப் பயன்படுத்துவது விழாவின் மையமாகும், தெளித்தல், ஊற்றுதல் அல்லது மூழ்குதல் உள்ளிட்ட பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின் றன
ஆரம்பகால திருச்சபையில் முழு நீரில்மூழ்குதல் நடைமுறையில் இருந்தபோதிலும், தொல்பொருள் மற்றும் வரலாற்று சான்றுகள் ஊற்றுதல் போன்ற பிற வடிவங்க ளும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றன,
திருமுழுக்கின் மிக முக்கிய இரண்டு வகைகள்.
1.குழந்தை ஞானஸ்நானம்: Infant Baptism:
நம்முடைய திருச்சபைகள் , குழந்தை ஞானஸ்நானத்தைப் பின்பற்றுகின்றன, இது பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனம் செய்வதைப் போலவே, கடவுள் தம் மக்களுடனான உடன்படிக்கை யில் புலப்படும் அடையாளமாகக் கருதுகிறது.
2 வயதுவந்தோர் ஞானஸ் நானம்:Adult Baptism:
சில திருச்சபைகள் இயேசுவின் முன்மாதிரியையும் புதிய ஏற்பா ட்டு விவரங்களையும் பின்பற்றி, மூழ்குதல் மூலம் வயது வந்தோரு க்கான ஞானஸ்நானத்தை வலியுறுத்துகின்றன.
திருமுழுக்கு மூலமே ஒருவர் திருச் சபையின் உறுப்பினராகிறார்.
ஏன் நாம் திருமுழுக்குப் பெற வேண்டும்? Why should we babtizice?
கிறிஸ்துவுக்கு அன்பானவர்களே நாம் ஏன் திருமுழுக்குப் பெற வேண்டும் என்றால் :
1. இது ஆண்டவரின் கட்டளை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ் துவே நமக்கு முன்மாதிரியாக யோர்தான் நதிக்கரை சென்று திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற்றார்.
2 இயேசுவின் திருமுழுக்கின் போது தூய ஆவியானவர் இறங் குவது போல நம் மீதும் இறங்கு கிறார்.
3 இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசிப்பதை பகிரங்கமாக அறிவிக்கும் ஒரு காணக்கூடிய வழியாகும்.
4.திருமுழுக்கு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுத லுடன் விசுவாசியின் ஐக்கியத் தைக் குறிக்கிறது
4.திருமுழுக்கு,ஒரு நபர் தனது பழைய வாழ்க்கையிலிருந்து விலகி கிறிஸ்துவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தழுவிவிட்டார் என்பதை இது உலகிற்கு அறிய செய்கிறது.
5. திருமுழுக்கு பாவங்களைகழுவி ஒரு புதிய வாழ்விற்கான கிறிஸ் துவின் உறவில் வளர செய்கி றது.
திருமுழுக்கு கிறிஸ்துவோடு இணைந்திருக்க செய்கிறது.
நற்கருணையோ நம்மை பாவத்திலிருந்து விடுதலையா க்கி புதிதாக படைக்கப்பட்டவராய் இருக்க செய்கிறது எனவே திருமுழுக்கும் திரு விருந்தும் நமக்கு இரண்டு கண்கள் போன்றது.
1.கடவுள் பஸ்காவை நிறுவு கிறார்.God Institutes Passover. வி. பயணம்12:1-14.(Exodus)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கடவுள் நியமித்த பஸ்கா (பஸ்கா) பண்டிகை , இஸ்ரவேலர் களின் முதல் பண்டிகையாகும்.
எகிப்திலிருந்து வரவிருக்கும் விடுதலை மிகவும் குறிப்பிடத்த க்க செயலாக இருந்ததால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நாட்காட்டியை மீண்டும் உருவாக்கும்படி கடவுள் கூறினார். இஸ்ரவேலரின் புத்தாண்டு இப்போது எகிப்திலிருந்து அவர்கள் மீட்கப்பட்ட மாதத்துடன் தொடங்கும். பாஸ்கா பண்டிகை அவர்களின் முதல் மாதமாகும்.
இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுத லை பெறுவதற்கான பயணத்தின் அடித்தளமாகும்.
எபிரேய நாட்காட்டியில் "கர்த்தரு டைய பண்டிகைகளில்" முதலாவ தாக பஸ்கா பண்டிகை கொண்டா டப்படுகிறது, இது முதல் மாதமான நிசானில் அனுசரிக்கப்படுகிறது.
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந் து புறப்படும்போது முதல் மாதத் தின் 10 ஆம் நாள், ஒவ்வொரு வீட்டாரும் ஒரு ஆட்டுக்குட்டியை எடுத்து, அதை பஸ்கா பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அந்தப் பலி இரத்தம் தமக்காக உயர்த்தப்பட்ட வீடுகளின் வாசல் களில் குறியீடாக தங்களை பாது காத்துக் கொள்வதற்காக கடவுள் கொடுத்த கட்டளையாகும்
ஒவ்வொரு குடும்பமும் பஸ்கா பண்டிகையின் 10-ஆம் நாளில் ஒரு பழுதற்ற ஆண் ஆட்டுக்குட்டி யை (ஆண் ஆடு) தேர்ந்தெடுக்க வேண்டும். பஸ்கா பண்டிகை வரை அந்த ஆட்டை நான்கு நாட்களுக்கு வீட்டில் வைத்திருக்க வேண்டும். அந்தப் பண்டிகையின் 14-ஆம் நாளில், வீட்டுத் தலைவர் ஆட்டுக்குட்டியைப் பலியிட வேண்டும். அந்த ஆட்டின் இரத்தத் தை வாசல்களின் வலது பக்கத் திலுள்ள தூண்களிலும், இடது பக்கத்திலுள்ள தூண்களிலும் தடவ வேண்டும்.இதனால், இரத்தம் பாதுகாப்புச் சின்னமாக, கடவுளின் இரக்கம் மற்றும் அழிவி லிருந்து பாதுகாப்பு குறிக்கின் றது. அவ்வாறே நமது பாஸ்காவாக ஆண்டவர் தன் ரத்தத்தை சிந்தி நமக்கு மீட்பை கொடுத்தார் ஆட்டுக்குட்டியின் ரத்தம் இஸ்ரவேலரை மீட்டது. இயேசு கிறிஸ்துவின் ரத்தம் உலகத்தின் பாவத்தை மீட்டது.
இஸ்ரயேலர்கள் அந்தப் பண்டிகை இரவில் ஆட்டுக்கறியையும், புளிப்பில்லாத அப்பத்தையும், கசப்புக்கீரையையும் சாப்பிட வேண்டும். இந்த உணவு "பஸ்கா உணவு" என்று அழைக்கப்படு கிறது. பத்தாவது வாதையின் போது வீட்டு வாசலில் இரத்தம் பூசப்பட்டு வீட்டைப் பாதுகாத்த ஆட்டுக்குட்டியை பலியிடுவது ஒரு முக்கிய சடங்காக இருந்தது .
இயேசுவும் பஸ்காவும்:
Jesus and Pasca:
கிறிஸ்துவுக்குள் அன்பானவர் களே! நற்செய்திகளில் விவரிக்க ப்பட்டுள்ளபடி, இயேசுவும் அவரு டைய சீடர்களும் ஒன்றாக பஸ்கா வைக் கொண்டாடினர். (The Last Supper) இந்த உணவின் போது, இயேசு தனது உடலையும் இரத்த த்தையும் அடையாளப்படுத்த அப்பம் மற்றும் திராட்சை ரசத்தை பயன்படுத்தினார்., இது நமக்கு ஒரு மைய புனித சடங்காக மாறி யது இதுவே நற்கருணை எனும் முக்கிய சடங்காகும்.
இயேசுவே இறுதி "தேவ ஆட்டுக்குட்டி". பஸ்கா ஆட்டுக்குட்டியின் பலி இஸ்ரவேலர்களைக் காப்பாற் றியது போல, இயேசுவின் பலி மனிதகுலத்தை பாவத்திலிருந் தும் மரணத்திலிருந்தும் காப்பாற் றுவதாகக் கருதப்படுகிறது. அவ்வாறே, இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான நிசான் 14 ஆம் தேதி, பஸ்கா ஆட்டுக்குட்டி பலியிடப்பட்ட நாளன்று, இந்த நிகழ்வோடு அவரை மேலும் இணைக்கிறது.பஸ்கா பலி இயேசு கிறிஸ்துவில் நிறைவேறி யது என்பதை திருத்தூதர் பவுல் அடிகளார் விளக்குகிறார்( 1 கொரிந்தியர் 5:7 ),
2.கர்த்தருடைய பந்தியே திருச்சபையின் ஐக்கியம்.
The Eucharist is the unity of the church" 1.கொரிந்தியர் 10:: 14-22,
கிறித்துவின் அன்பர்களே!
நற்கருணை இயேசு கிறிஸ்து வின் மரணத்தை நினைவுகூரும் ஒரு புனித சடங்காகும். இதன் வழியாக கிறிஸ்தவர்கள் ஒன்றுபடுவதைக் குறிக்கிறது.
கர்த்தருடைய பந்தியில் பங்கேற்பதன் மூலம் கிறிஸ்தவர் கள் அனைவரும் ஒரே உடலாகிய திருச்சபையில் இணைகிறார்கள்.
திருத்தூதர் பவுல் அடிகளார் கொரிந்து திருச்சபைக்கு அறிவுறு த்தியது என்னவெனில், எனக்கு அன்பானவர்களே, விக்கிரக ஆராதனையை விட்டு ஓடுங்கள்" என்று பவுல் கூறுகிறார். இது உருவ வழிபாட்டு க்கு எதிரான ஒரு நேரடி அறிவுரை யாகும். கிறிஸ்தவர்கள் பகுத்த றிவுடன் சிந்திக்கவும், விக்கிரக ஆராதனையின் ஆபத்துக்களை உணரவும் அறிவுறுத்துகிறார்.
உருவ வழிபாட்டில் பங்கேற்பது, கிறிஸ்தவர்களின் விசுவாசத்தி ற்கு எதிரானது என்றும், அவர்கள் கடவுளின் சமூகத்தை இழந்து விடுவார்கள் என்றும் பவுல் விளக்குகிறார்.
கிறிஸ்தவர்கள் கடவுளுடனான தங்கள் உறவை கெடுக்கும் விக்கிரக ஆராதனையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை பவுல் உறுதியாக வலியுறுத்துகிறார்.சிலைகளுக்குப் பலியிடப்பட்ட இறைச்சியை உண்ணும் "உரிமையை" விட்டுக்கொடுக்க வேண்டும்.
இஸ்ரவேலர் அனைவரும் கடல் வழியாகச் சென்றனர், அனை வரும் மோசேக்குள் திருமுழுக்கு பெற்றனர் :
தண்ணீரைக் கடந்து செல்வதன்" மூலம், இஸ்ரவேல் அனைவரும் மோசேயுடன் அடையாளம் காணப்பட்டனர், "தண்ணீரைக் கடந்து செல்வதன்" மூலம், ஒரு கிறிஸ்தவர் இயேசு கிறிஸ்துவு டன் அடையாளம் காணப்படு கிறார் ( ரோமர் 6:3-4 ).
பவுல் அடிகளார் கொரிந்திய திருச்சபையை, எகிப்திலிருந்து வெளியேறி, வனாந்தரத்தில் அலைந்து திரிந்த இஸ்ரவேலர் களுடன் ஒப்பிடுகிறார். காரணம் அவர்களின் விக்கிரக வழிபாடு.
பவுல் அடிகளார் கொரிந்து திருச் சபையினர் கடவுளுக்கு எரிச்சல் மூட்டுவதை கண்டிக்கிறார் அவர் கள் ஆண்டவருடைய கிண்ணத்தி லும் பருகிறார்கள் பேய்களுடைய கிண்ணத்திலும் பருகிறார்கள் இது எப்படி?. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியி லும் பங்கு கொள்ள முடியாது. இதன் மூலம் நாம் ஆண்டவருக்கு எரிச்சலூட் டலாமா? என கேட்கிறார்
அன்பானவர்களே சிலை வழிபாடு என்பது சிலையை வணங்குதல் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் நேரம் பார்ப்பது ஜாதகம் பார்ப்பது குறி கேட்பது, திருஸ்டி சுற்றுவது இவைகள் எல்லாம் சிலை வழிபாடு தான். இவைகளை விட்டு விலகுவதே கடவுளுக்கு பிரியமானது.
3.திருச்சபையின் புனித சடங்கு நற்கருணை. (Eucharist/Holy Communion): லுக்கா 22: 7: 20
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நற்கருணை என்பது கிறிஸ் துவத்தின் முக்கிய அடித்தளம் ஆகும் நற்கருணை இல்லாமல் கிறித்துவம் இல்லை.
இயேசு தனது சீடர்களுடன் பஸ்கா உணவை உண்ணத்தயாராகிறார், இது அவரது மரணத்திற்கு முன் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது கடவுள் நமக்கு கொடுக்கப் பட்ட புதிய கட்டளை பழைய கட்டளையான பாஸ்கா விலங் கினத்தின் ரத்தத்தினால் உருவாக் கப்பட்டது ஆனால் புதிய கட்டளை யான பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்துவே இரத்தம் சிந்துகின்ற செம்மறி ஆடாய் தன் உடலையும் சரீரத்தையும் கொடுத்து இந்த உலகத்திற்கு மீட்பு என்ற பரிசை கொடுத்திருக்கிறார். இந்த புதிய உடன்படுக்கையில் பங்கு கொள் ளாமல் கிறிஸ்துவுக்கு நாம் பிரிய மாகவே இருக்க முடியாது.
பாஸ்கா என்னும் பழைய உடன் படிக்கை இஸ்ரவேல் மக்களுக்கு விடுதலை கொடுத்தது. பஸ்கா ஒரு தேசத்தை உருவாக்கியது; ஒரு அடிமை கும்பல் எகிப்திலிரு ந்து விடுவிக்கப்பட்டு ஒரு தேசமாக மாறியது கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கை பாவ மன்னி ப்பு என்ற மீட்பகொடுத்தது.இந்தப் புதிய பஸ்கா உலகில் ஆண்டவ ருக்காக பெரு மக்களையும், பல நாடுகளையும் உருவாக்குகிறது கிறித்துவின் நற்கருணை அப்ப மும் இரசமும் இயேசுவின் உண் மையான சரீரம் மற்றும் இரத்த மாக மாறுகின்றன, வெறும் அடையாளங்களாக அல்ல.
நற்கருணை, சிலுவையில் இயேசு செய்த தியாகத்தின் நினைவாக வும், பழைய உடன்படிக்கைக்குப் பதிலாக கடவுளுக்கும் மனித குலத்திற்கும் இடையேயான ஒரு புதிய உடன்படிக்கையை உறுதிப் படுத்துவதாகவும் அமைகிறது.
இது என் சரீரம்...
": இயேசு அப்பத்தைப் பிட்டு, "இது என் சரீரம், உங்களுக்காக வழங் கப்படும்" என்று கூறினார். இதை கிறித்தவர்கள் தனக்காக என்ப தை நினைவு கூற வேண்டும்.
இது என் இரத்தத்தில் உள்ள புதிய உடன்படிக்கை...": இயேசு ஒரு கோப்பையில் திராட்சை இரசத்தை எடுத்துக் கொண்டு, "இந்தக் கோப்பை என் இரத்தத் தில் உள்ள புதிய உடன்படிக் கை, அது உங்களுக்காக சிந்தப் படுகிறது" என்றார். இந்த வார்த் தைகள் வெறும் அடையாளங் கள்அல்ல, மாறாக, இயேசுவின் தியாகத்தின் உண்மையான இருப்பை நினைவூட்டுகின்றன
இது கடவுளின் அன்பு மற்றும் கருணையின் ஒரு நினைவாக வும் செயல்படுகிறது.
4 யூதாஸ் ஏன் இயேசு கிறிஸ்து வை காட்டிக் கொடுத்தார்?
Why did Judas Iscariat betray
Jesus Christ?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவரோடு பயணித்த சீடர்களில் ஒருவனாக எண்ணப் பட்ட யூதாஸ் ஏன் ஆண்டவரை காட்டிக் கொடுக்க வேண்டும்?
1.சாத்தான் யூதாஸுக்குள் நுழைந்தான்.இது இயேசுவின் உண்மையான எதிரி சாத்தான் என்பதைக் காட்டுகிறது, சாத்தான் நமக்கு என்றும் எப்பொழுதும் எதிரிதான்
2.யூதாஸ், கொரியத் (Kerioth)
என்ற தெற்கு யூதேயா பகுதியை ( Judean)சேர்ந்தவர் மற்ற சீடர்கள் கலிலேயாவை சேர்ந்தவர்கள். இயேசு ஒரு கலிலேயர். யூதாஸி டம் நாட்டுப்பற்றும் மனிதப்பற்றும் இல்லை.
3.இயேசு தன்னை மேசியாவாகக் காட்ட வேண்டிய ஒரு வாய்ப்பு வந்திருப்பதாக யூதாஸ் நினைத் திருக்கலாம்.
4. யூதாசிடம் பண ஆசை, பதவி ஆசை, சுயநலம் நிறைந்தவராய் இருந்தார்
5. யூதாஸ் காட்டிக் கொடுத்த,ப் பிறகு மன வருத்தினார் ஆனால் ஆண்டவரிடம்வராமல் யூத தலைவர்களிடம் சென்றார் இது தவறான வழிமுறை. அதுவே அவருக்கு மரணத்தை அளித்தது.
5 திருச்சபை நற்கருணை மூலம் நமக்கு போதிப்பது என்ன?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நற்கருளை என்னும் தூய சடங்கு நம் திருச்சபைகள் ஒழுங்கு முறையுடன் செயல்படு த்தி வருகின்றன.
நற்கருணை இயேசுவின் தியாகத்தை நினைவுகூரும் ஒரு பொது வழிபாட்டுச் செயலாகும்.
விசுவாசிகளிடையே ஒற்றுமை மற்றும் கூட்டுறவு வெளிப்பாடாக வும் செயல்படுகிறது.
இது நியமிக்கப்பட்ட ஆயர்கள் அல்லது தலைவர்களால் ஒற்று மை சேவையை வழிநடத்துவதற் குப் பொறுப்பாவார்கள்.
கிறிஸ்துவுடனான திருச்சபை மக்களின் தனிப்பட்ட ஐக்கியத் தை ஆழப்படுத்துகிறது என்பதை ப் புரிந்துகொள்ள தேவாலயம் விசுவாசிகளுக்கு உதவுகிறது.
புனித நற்கருணை என்பது இயேசு தம்மைப் பின்பற்றுபவர்க ளுக்கு சிலுவையில் தம் தியாகத் தை நினைவுகூரும்படி நேரடியா கக் கட்டளையிடுவதாகும்.
நற்கருணை பாவ மன்னிப்பு, மற்றும் குணப்படுத்துதல் உள்ளி ட்ட கடவுளின் வாக்குறுதிகளைப் பெறுவதற்கான ஒரு வழியாக ஒற்றுமையில் பங்கேற்பதைக் காணலாம்.தங்கள் நம்பிக்கையை பகிரங்கமாக மீண்டும், மீண்டும் உறுதிப்படுத்த ஒற்றுமை ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
ஒற்றுமையில் பங்கேற்பதன் மூலம், விசுவாசிகள் "கிறிஸ்து வின் சரீரத்தின்" உறுப்பினர்க ளாக தங்கள் பங்கையும், சமூகத் திற்குள் ஒருவருக்கொருவர் தங்கள் பரஸ்பர பொறுப்பையும் நினைவூட்டுகிறார்கள். திருச்சபைகள் எப்பொழுதும் தன் விசுவாசிகளுக்கு கற்று க்கொடுக் கின்ற திருச்சபையாக இருக்க வேண்டும் அவ்வாறே திருச்சபை மக்களும் கற்றுக் கொள்பவர் களாக இருக்க வேண்டும்.
திருச்சபை மக்கள் நற்கருணை க்கு முன்பாக தன்னிலை உறுதி மொழியாக நிசையா பற்றுறுதி அறிக்கையை நாம் கொடுப்பது கட்டாயமாகிறது ஏனெனில்
பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்ற ஒரே கடவுள் மீதான நம்பிக்கையை தெளிவாக வெளிப்படுத்தி பாவ மன்னிப்புக் கான ஒரே ஞானஸ்நானத்தை இந்த விசுவாசப்பிரமாணம் மூலம் ஒப்புக்கொள்கிறோம்.
எனவே திருவிருந்து எனும் நற்கருணை கடவுளின் புதிய உடன்படிக்கை அது நமக்காக கடவுள் கொடுத்த பரிசாகும் எனவே ஆண்டவரின் அன்பிலும் அருளிலும் பற்றுறுதியிலும் நிலைத்து நிற்க கடவுள் அருள் புரிவாராக. ஆமேன்.
திருவிருந்தில் பங்கு பெறும் போது நாம் மனதில் நிருத்த வேண்டியது:
1. பாவ மன்னிப்பு நிச்சயம் என்ற நம்பிக்கையில் வழிபாட்டு மேடையில்(Altar) மண்டியிடுங்கள்
2 ஆண்டவரின் கடைசி நற்கருணயை (The Last supper) நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்
3. நம் மனதில் ஆண்டவரின் சிலுவை காட்சிகள் ஒரு படமாக (visualize) நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
4 ஆண்டவரின் திரு உடலிலும் ரத்தத்திலும் நாம் பங்கு பெறுகி றோம் என்று நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon writer.
www.davidarulparamanandam.com
www.davidarulblogspot.com
"For anyone to arrive at God the Creator he needs Scripture as his Guide and Teacher""
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
Comments
Post a Comment