முதியோரைப் பேணுதலும் ஏற்றுக்கொள்ளலும்.(228). Caring and Accepting the Elderly. தொடக்க நூல்: 46: 28-34, திருப்பாடல் : 21, 1.தீமொத்தேயு 5: 1-10, :லூக்கா 2: 25-35 முதியோர் ஞாயிறு Elderly Sunday
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, முதியோரைப் பேணுதலும் ஏற்றுக்கொள்ளலும். Caring and Accepting the Elderly. அன்பானவர்களே யார் முதி யோர்? Who are the elderly? முதியவர்" என்ற சொல் "முதிய + அவர்" என்று பிரிக்கப்பட்டு, வயதில் மிகவும் முதிர்ந்தவரை அல்லது மூத்தவரைக் குறிக்கும். வயது அடிப்படையில் 60 அல் லது 65 வயதுக்கு மேல் முதியோ ர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்காக சர்வதேச முதி யோர் தினம் அக்டோபர் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது. .முதியோர் என்பவர் வயதில் மூத்த, அனுபவம் வாய்ந்த மற்றும் பொதுவாக சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படும் நபர்களாவர். முதி யோரின் அனுபவங்களையும், அறிவையும் மதித்து, அவர்களு க்கு ஆதரவளிப்பது சமூகத்தின் கடமையாகும். இது அவர்களு க்கு மகிழ்ச்சியையும், மன நிம்ம தியையும் அளித்து, சமூகத்தில் அவர்களது பங்களிப்பை உறுதி செய்கிறது. " மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்" என்பது ஔவையார் எழுதிய கொன்றை வேந்த...