Skip to main content

முதியோரைப் பேணுதலும் ஏற்றுக்கொள்ளலும்.(228). Caring and Accepting the Elderly. தொடக்க நூல்: 46: 28-34, திருப்பாடல் : 21, 1.தீமொத்தேயு 5: 1-10, :லூக்கா 2: 25-35 முதியோர் ஞாயிறு Elderly Sunday

 முன்னுரை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, முதியோரைப் பேணுதலும் ஏற்றுக்கொள்ளலும். Caring and Accepting the Elderly. 
 அன்பானவர்களே யார் முதி யோர்? Who are the elderly?
முதியவர்" என்ற சொல் "முதிய + அவர்" என்று பிரிக்கப்பட்டு, வயதில் மிகவும் முதிர்ந்தவரை அல்லது மூத்தவரைக் குறிக்கும். 
வயது அடிப்படையில் 60 அல் லது 65 வயதுக்கு மேல் முதியோ ர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்காக சர்வதேச முதி யோர் தினம் அக்டோபர் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது. 
.முதியோர் என்பவர் வயதில் மூத்த, அனுபவம் வாய்ந்த மற்றும் பொதுவாக சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாகக் கருதப்படும் நபர்களாவர். முதி யோரின் அனுபவங்களையும், அறிவையும் மதித்து, அவர்களு க்கு ஆதரவளிப்பது சமூகத்தின் கடமையாகும். இது அவர்களு க்கு மகிழ்ச்சியையும், மன நிம்ம தியையும் அளித்து, சமூகத்தில் அவர்களது பங்களிப்பை உறுதி செய்கிறது. "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்"என்பது ஔவையார் எழுதிய கொன்றை வேந்தன் நூலில் உள்ள 75வது பாடல் ஆகும், இது பெரியோர்க ள் சொல்லும் அறிவுரைகள் அமுதம் போன்றது என்று விளக் குகிறது. அதாவது, கல்வி மற் றும் அனுபவத்தால் உயர்ந்த பெரியவர்களின் வார்த்தைகள் தேவாமிர்தத்தைப் போல இன்ப ம் தருவதோடு, ஆபத்துக்களிலி ருந்தும் நம்மைக் காப்பாற்றும். 
 நண்பர்களே! உலகிலேயே முதியோர்கள் அதிகமாய் இருக்கும் நாடு எனும் பெயரை சீனா தக்க வைத்திருக்கிறது.
உலக முதியோர்களில் பாதி பேர் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கிறார்கள். இது ஒரு பெருமைக்குரிய விஷயம். இந்தியாவில் முதியோர்களை பாதுகாக்க, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற் றும் பராமரிப்பு சட்டம்- 2007" நம் நாட்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவை யான பராமரிப்பை உறுதி செய் கிறது. பெற்றோரைப் புறக்கணி த்தால், மூன்று மாதம் சிறைத் தண்டனை என அரசு சட்டம் சொல்கிறது. 14567. இந்தியா முழுவதும் மூத்த குடிமக்கள் உதவி எண். இந்த எண் மூலம் முதியோர்கள் தங்கள் பாதுகாப் பை உறுதிசெய்து கொள்ளலாம். யோபு கூறுகிறார்,"நான் நினைத் தேன்; 'முதுமை பேசட்டும்; வயதா னோர் ஞானத்தை உணர்த்தட் டும்.' (யோபு 32:7) என்கிறார்.
நீதிமொழிகளில்,(பழமொழி ஆகமம்) "பிள்ளைகளின் பிள் ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்; பிள்ளைகளின்மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்க ளே" என்று திரு விவிலியம் கூறு கிறது, பேரப்பிள்ளைகள் முதிய வர்களை மகிழ்விக்கிறார்கள் என்பதோடு, பெற்றோர்கள் தங்க ள் பிள்ளைகளைப் பற்றி பெரு மைப்படுகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இதுமுதியோ ரின் பெருமைக்கும், பேரப்பிள் ளைகளின் மகிழ்ச்சிக்கும் ஒரு அழகான எடுத்துக்காட்டு. முதி யோர்கள் ஆயிரம் நூலகத்தி ற்கு சமம் என்பதை நாம் புரிந்து உதவுவோம், முதியோர்களை காப்போம் அரவணைத்து செல் வோம். நாமும் வரும் காலத்தில் முதியவர்கள் தான்.
1. முதிர் வயதில் தன் மகனை த் தேடிச் செல்லும் யாக்கோபு: Jacob, seeking shelter at his old age.தொடக்க நூல் 46: 28-34.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஒரு முதிர் வயது தந்தை தன் கடைசி காலத்தில் யாரிடம் சொல்வார் தன் பிள்ளைகளிடத் தில் தான் செல்ல வேண்டும். அவ்வாறே, யாக்கோபு தன் இளைய மகன் யோசேப்பை பார்க்க எகிப்து செல்கிறார். வந்தாரை வாழவைக்கும் எகிப்து, விசுவாசிகளின் தந்தை யான ஆபிரகாம் எகிப்து சென் றார், நம்முடைய ஆண்டவர் குழந் தையாய் எகிப்துசென்றார்..  
யாக்கோபு எகிப்தை அடைந்த தும், யோசேப்பைச் சந்திக்கி றார். நீண்ட காலம் பிரிந்திருந்த தன் மகனைக் கண்டு யாக்கோபு உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார். 
யோசேப்பு தனது சகோதரர் களைப்  பார்த்து, "பார்வோனிடம் சொல்ல வேண்டியதை நான் அறிவிக்கிறேன்" என்று கூறுகி றார். அவர்களுடைய மேய்ச்சல் தொழிலை பார்வோன் புரிந்து கொள்வார் என்றும், பார்வோன் எகிப்துக்கு வரவழைக்கும் இந்த குடும்பத்தை கோசேன் தேசத் தில் குடியேற்றுவார் என்றும் கூறுகிறார். 
(எகிப்திய கோசேன்: Goshen
இது எகிப்தின் வடகிழக்கில் (NE) உள்ள டெல்டாவின் கிழக்கே அமைந்துள்ளது.ஆடுமாடுகள் மேய்வதற்கும், குறிப்பிட்ட வகை பயிர்ச்செய்கைக்கும் ஏற்ற வள மான நிலமாகும்.திருவிவலியத் தின்படி, யாக்கோபும் அவரது குடும்பமும் (இஸ்ரவேலர்கள்) இங்கு வசித்தனர்.எகிப்தியர்கள் இந்த பகுதி இஸ்ரவேலர்களுக் கு ஒதுக்கியபோது, அவர்கள் கால்நடைகளுக்கு பொறுப்பாளி களாக்கப்பட்டார்கள்.)
 அன்பர்களே! எகிப்தியர்கள் மேய்ப்பர்களை அருவருப்பாகக் கருதுகிறார்கள், எனவே யோசேப்பின் குடும்பம் கோசேன் தேசத்தில் குடியேற ஏற்பாடு செய்கிறார். இதனால் அவர்கள் எகிப்தியர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்வதைத்தவிர்க் கிறார்கள். 
 இணைச்சட்டம்  10:22 ல் - "உங் கள் மூதாதையர் எழுபது ஆள்க ளாய் எகிப்துக்குப் போனார்கள். இப்பொழுதோ உங்கள் கடவுளா கிய ஆண்டவர் உங்களை வான த்து விண்மீன்கள் போல்பெருகச் செய்துள்ளார். ஆனால் இஸ்ரவே லர்கள் எகிப்தில் இருந்து புறப்ப டும் போது ஆறு லட்சமாக கடவு ள் பெருகச் செய்தார். வேறு ஒன் றையும் நாம் நினைவில் வைத் துக் கொள்ள வேண்டும் பாலும் தேனும் ஓடும் கானான் தேசம் பஞ்சத்தில் சிக்கிய போது கொசேன் என்ற எகிப்தின் பகுதி தான் இஸ்ரவேலர்களையும் ஒரு நாடாக பெருகும்படி உயர்த்தி யது, ஏனென்றால் பாவம் பெருகு ம்போது பஞ்சமும் பெருகும்.
 தன் மகனைக் கண்ட யாக்கோபு,
, "இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடு தான் இருக் கிறாய்! உன் முகத்தைக் கண் ணாரக்கண்டுவிட்டேன்!"என்றார். (தொடக்கநூல் 46:30) இது ஒரு தந்தை தன் மகன் மீது வைத்து ள்ள பாசத்தை வெளிப்படுத்து கிறது தன் சகோதரர்கள் பதி னோரு பேரையும் அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்கிறா ர். இதற்கு ஈடாக, இஸ்ரேல் என்ற யாக்கோபு தன் மகன் யோசேப்பு க்கு பரிசாக எமோரி யரிடமிருந் து கைப்பற்றிய செக்கேம் பகுதியை, உன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில், உனக்கே தருகிறேன்" என்று பரிசளித்தார். இறுதியில் தன் தந்தையின் வேண்டுகோள் படி, விருப்பத்தின்படி யோசேப்பு தலைமையில் கானான் நாட்டி ற்கு எடுத்துச் சென்று அவர் கேட்ட படியே ஆபிரகாம் தமக் கென்று கல்லறை நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக எப்ரோ ன் என்ற இத்தியனிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்த மம்ரேக்கு எதிரில் மக்பேலா என்ற நிலத்தில் இருந்த குகை யில்  எகிப்து அரசின் மரியா தையுடன் அடக்கம் செய்தனர். 
2. முதியோர்களை நடத்துவது எப்படி? How to treat the elders?   1.தீமொத்தேயு 5: 1-10, 
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே,! திருத்தூதர் பவுல் அடிக ளார் கிறிஸ்தவர்கள் எவ்வாறு முதியோர்களை நடத்த வேண் டும் என்பதை தீமொத்தேயுவுக்கு அறிவுறையாக இங்கு வலியுருத் துகிறார். மற்றும் இந்த பகுதியா னது கிறிஸ்தவ சமூகத்திலும், குடும்பத்திலும் எவ்வாறு உறவு களை கையாள வேண்டும் என்ப தையும், விதவைகளின் பங்கை யும், பொறுப்புகளையும் விவரிக் கிறார்.
மூத்தோரிடம்  கடுமையாக நடந் து கொள்ளாமல், ஒரு தந்தை யை போல மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று திருத்தூதர்  பவுல் அடிகளார்  தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்து கிறார். வயதில் மூத்தவர்களை, பதவியில் மூத்தவர்களைக் கண் டிப்பதில் மிகவும் மென்மையா க இருக்க வேண்டும். அவர்களி ன் வயது மற்றும் இடத்தின் கண்ணியத்திற்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும்,இளைய ஆண்களிடம் சகோதரர்களைப் போல அன்புடனும், மரியாதையு டனும் பழக வேண்டும் என்கி றார்.அதாவது, இளைஞர்கள் நற்செய்தியின் வேலையில் கூட்டாளிகளாகவும் நண்பர்களா கவும் நடத்தப்பட வேண்டும், 
 திருச்சபைகள் உண்மையான விதவைகளை கவனித்து, அவர் களுக்குத் தேவையானஆதரவை அளிக்க வேண்டும்.
யார் விதவை?
Who are the widows in Christianity?
 அன்பானவர்களே! திருத்தூதர் பவுல் அடிகளார் ஒரு பெண் விதவையாக இருந்தால், அவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், ஒரே கணவ னை மணந்தவராக இருக்க வேண்டும்.குழந்தைகளை வளர் த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால் களைக் கழுவி, உபத்திரவப்படு கிறவர்களுக்கு உதவி செய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இப்படி நற் கிரியைகளுக்குப் பெயர் பெற்ற வளாக இருந்தால் விதவைக ளுக்கே சபையின் ஆதரவு கிடை க்கும். முதிர்வயதுள்ள பெண் கள் தவறு செய்யும்போதும் பாவத்தில் விழுகின்ற போது , சந்தர்ப்பம் கிடைக்கும்போது, ​​தாய்மார்களைப் போலக் கண்டி க்கப்பட வேண்டும். கிறிஸ்து வின் நோக்கம், நாம் அனைவ ரும் மோசேயின் சட்டத்தை, குறிப்பாக ஐந்தாவது கட்டளை யின் சட்டத்தை, அதாவது " உன் தந்தையையும் தாயையும் கனம்பண்ணு" என்பதை உறுதிப்படுத்துவதாகும்; இந்த சமுதாயத்தில் நாம் உலக மக்க ளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
3. உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. 
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்ட சிமியோன் என்ற முதியவர், இயேசு பிறந்த போது அவரைத் தன் கைகளில் ஏந்தி, "கடவுளின் இரட்சிப்பை நான் இப்போது கண்டேன்" என்று கூறி, கிறிஸ்துவின் எதிர் காலப் பாடுகளையும் தீர்க்கதரி சனமாக வெளிப்படுத்தினார். இவர் எருசலேமில் வாழ்ந்த ஒரு நேர்மையான, இறைப்பற்று ள்ள மனிதர். 
சிமியோன் என்ற பெயரின் அர்த்தம் “கடவுள் கேட்டார்”. மேலும், கடவுள் சிமியோனின் விண்ணப்பத்தைக் கேட்டார்ஃ அவர் பண்பு நிறைந்தவர்.
முதல் ஆன்மீகப் பண்பு என்ன வென்றால், அவர் நீதியுள்ள வராகவும் பக்தியுள்ளவரா கவும் இருந்தார்  அவர் கடவு ளின் வார்த்தைக்குக் கீழ்ப்படித லைக் காட்டுகிறது. 
இயேசுவைப் பார்க்கும் வரை தான் இறக்கமாட்டேன் என்று பரிசுத்த ஆவியானவர் சிமியோனுக்கு வெளிப்படுத்தி னார். அதற்காக காத்திருந்தார்.
 காத்திருப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்:
 நண்பர்களே சிமியோன் கடவு ளை காண்பதற்காக காத்திருந் தார் ஆலயத்தில் விண்ணப்பத் தோடு எதிர்பார்த்து காத்ததிருந் தார் அவர் விண்ணப்பம் வீணாக போனதில்லைஃ
காத்திருப்பவர்களுக்கு நல்லது நடக்கும்" மற்றும் "சில விஷயங் களளுக்காத்திருப்பது மதிப்புக் குரியது." காத்திருப்பவர்களுக்கு நல்லது நடக்கும் என்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க நீங்கள் தயாராக இருப்பீர்களா? அது உண்மையி லேயே நல்ல ஒன்றாக இருக்க வேண்டும், இல்லையா? 
 முதியோர்கள் காத்திருப்பின் காலத்தில் ஜெபத்திலும், உபவாசத்திலும் ஈடுபடுவது ஒரு பகுதியாகும். ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவ ர்களோ( முதி யோர்களே) புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படை யார்; நடந்து செல்வர்; சோர்வடை யார். (எசாயா 40:31)
 சிமியோன் காத்திருந்தார் இரட்சிப்பின் கண்களை கடவுள் திறந்தார் ஆண்டவரை கண் ணாரே கண்டார்.
4.முதியோரைப் பேணுதல். Caring the Elderly.
 கிறிஸ்துவுக்குள் அன்பானவர் களே! கடவுள், தம்முடைய சபைக்கு மூப்பர்களை பரிசாக அளித்துள்ளார். கடவுள் தனது திருச்சபையின் ஆன்மீக நல் வாழ்வில் அக்கறை கொண்டிருப் பது போல, அவர் தனது திருச் சபையை நிர்வகிக்கும் தலைவர் களின் குணாதிசயத்திலும் அக்கறை கொண்டுள்ளார்
ஒரு மூப்பர் தனது சொந்த குடும்பத்தை நன்றாக நிர்வ கிக்க வேண்டும்
மூப்பர்கள் திருச்சபையின் விவகாரங்களை மேற்பார்வை யிடவும் வழிநடத்தவும் அழைக் கப்படுகிறார்கள், அதனால்தான் அவர்கள் சில சமயங்களில் 'கண்காணிப்பாளர்கள்' என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
 எது தூய்மையான சமயம்?
What is the true religion?
 நண்பர்களே! தந்தையாம் கடவு ளின் பார்வையில் தூய்மையா னதும் மாசற்றதுமான சமயவாழ் வு எதுவெனில், துன்புறும் அனா தைகளையும், கைம்பெண்களை யும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும் ஆகும். (யாக்கோபு 1:27)
 அன்பு நண்பர்களே நம் ஆண்டவரை நோக்கி பாருங்கள் சிலுவைப் பாட்டின் போது கூட தன் தாயை கவனிக்கும் பொறுப் பை அவர் தன் சீடரிடம் ஒப்படை த்தார். தனக்கான பொறுப்பை அவர் மறந்து விடவில்லை. முதி யோரை காப்பதில் ஆண்டவர் முன் மாதிரியாக இருக்கிறார்.
பல தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் முதி யோர் பராமரிப்பு மையங்களை நடத்துகின்றன, அதே நேரத்தில் தனிப்பட்ட கிறிஸ்தவ குடும்ப ங்களும் தங்கள் பெற்றோரை அல்லது தாத்தா பாட்டியை வீட்டி லேயே கவனித்துக்கொள்கின் றன. முதியோர்களுக்கான மருத்துவ பராமரிப்பு, சிறப்பு சிகிச்சை, மற்றும் ஆன்மீக ஆதர வு ஆகியவை இந்த பராமரிப் பின் முக்கிய அம்சங்களாகும். 
 எல்லாவற்றிலும் மிக முக்கியமா னது அன்பு, பொறுமை சகிப்புத் தன்மை, தியாகம் இவைகள் இருந்தால் தான் முதியோரை நம் உள்ளத்தில், மற்றும் நம் இல்லத் தில் வைத்து பராமரிக்கும் பண் பான பணியாகும்.
 திருச்சபையே!
உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டா யத்தினால் அல்ல, கடவுளுக் கேற்ப மன உவப்புடன் மேற்பா ர்வை செய்யுங்கள்; ஊதியத்தி ற்காகச் செய்யாமல், விருப்போ டு பணி செய்யுங்கள். 
(1 பேதுரு 5:2) என்ற இறை வார்த்தையோடு நிறைவு செய்கிறேன் கடவுள் நம் அனைவரையும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com






10 Interesting Facts About Goshen in the Bible


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.