கடவுளும் பல் சமய மக்களும் (227) God and People of all faith. ஆமோஸ் 9:1-12 திருப்பாடல் 66, உரோமையர் 2: 17-29 யோவான் 10: 14-18.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை:கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத் தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "கடவுளும் பல் சமய மக்களும் God and People of all faith. 'இறையியலில், ஒரு கடவுட் கொள்கை (Monotheism) என்பது, இறைவன் ஒருவனே என்னும் நம்பிக்கை ஆகும். அவனே உலகைப் படைத்தவன். அவன் அனைத்து வகையான சக்திகளும் உடையவன். உலகி ன் அனைத்து செயல்களிலும் தன் சக்தியைச் செலுத்துபவன்
கடவுள் இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மை யில் தந்தை, மகன், தூய ஆவி என மூவராகவும் இருப்பதை திரித்துவம் (Trinity) என்று அழைக்கப்படுகிறது. நாம் கடவு ளை மூவொரு இறைவன் என்று அழைக்கின்றோம்.
"என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. (விடுதலைப் பயணம் 20:3)இது கடவுளின் கட்டளை ஒரே கடவுளை உறுதிப்படுத்துகி றது.
சமயம் என்பது கடவுள் நம்பிக் கையை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடாகும், மேலும் இந்த நம்பிக்கையும் அதன் சடங் குகளும் தனிமனிதர்களின் வாழ் க்கையில் முக்கிய பங்கை வகிக் கின்றன. பல்வேறு சமய மக்கள் வெவ்வேறு கடவுள்களை அல் லது ஒரே கடவுளை பல வடிவங் களில் வழிபடுகிறார்கள்.
திருப்பாடல் 24 :1ல் , "பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்த ருடையது" என்று கூறுகிறது.
பூமியும் அதில் உள்ள அனைத்து வளங்களும், அதில் வாழும் உயிர்களும் கர்த்தருக்கு சொந்த மானது என்பதை இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது.
இந்த வசனம் கர்த்தருக்கே அனைத்தும் சொந்தம் என்பதை வலியுறுத்துகிறது, இது அவரு டைய படைப்பு மற்றும் உடைமை யின் உண்மையான நிலையை எடுத்துரைக்கிறது. எனவே நாம் இவ்வுலகில் உள்ளஅனைத்து சமய மக்களையும் நேசிக்க வேண்டும் அன்பு கூற வேண் டும் அவர்களின் மத கோட்பாடு களையும் நாம் மதிக்க வேண்டும் ஆனால் அவைகளை பின்பற்றக் கூடாது என்பதை இங்கு நமக்கு அறிவுறுத்துகிறார் ஏனென்றால் அனைத்தும் அவருடைய படைப் பின் கருவிகள். கடவுளா மனித நேயமா என்றால் மனித நேய மே முதலிடம் பெறும்.
1. ஒன்றே குலம் ஒருவனே தேவன்". One family, one God. ஆமோஸ் 9: 1-12.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது 11 ஆம் நூற் றாண்டு தமிழ் சித்தர் திருமூலர் எழுதிய திருமந்திரம் நூலில் இடம்பெறும் புகழ் பெற்ற கூற்று ஆகும், இது உலகில் உள்ள அனைத்துமனிதர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அனைவரும் வணங்கும் ஒரே ஒரு கடவுள் மட்டுமே உள்ளார் என்றும் கூறுகிறது. இந்த தத்துவம் ஜாதி, மத, இன வேறுபாடுகளின்றி அனைத்து மனிதர்களையும் ஒன்றிணைப் பதையும், ஒரே இனத்தவர் எல்லோரும் ஒரே கடவுளையே வணங்க வேண்டும் என்பதை யும் வலியுறுத்துகிறது. இவ்வாறே, இறைவாக்கினர் ஆமோஸ், அவர் தெக்கோவா என்னும் ஊரில் வாழ்ந்த ஒரு இடையரும் (Herdman) விவசாயி யும் ஆவார். .ஆமோஸ் என்றால், " சுமை சுமப்பவர்" என்பதாகும். கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் அவர் இஸ்ர வேலின் பாவங்களை சுட்டிக் காட்டி, அதன் மோசமான விளைவுக ளைக் குறித்து எச்சரித்தார்
ஆண்டவர் இஸ்ரேலை தண்டிக் கப்போகிறார் என்பதையும், பின்னர் அதை மீண்டும் மீட்டு, ஆசீர்வதிப்பார் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறார். இஸ்ர வேலில் இரண்டாம் யெரொபெ யாம் மற்றும் யூதாவில் உசியா வின் ஆட்சியின் போது இவர் தீர்க்கதரிசனப் பணியை செய்தார்.
இஸ்ரேலின் மீதான கடவுளின் நியாயத்தீர்ப்பை விவரித்து, அவ ர்களின் பாவங்களுக்கு தண்ட னையாக அவர்களை அழிப்பதா கக் கூறி, ஆனால் இறுதியில் மீட்கப்பட்டு, மேசியாவின் அரசு மீண்டும் ஸ்தாபிக்கப்படும் என்ற நம்பிக்கையை தருகிறார்.
கடவுள் இஸ்ரேலை அவருடைய நியாயத்தீர்ப்பின் கோபத்திலிரு ந்து தப்பிக்க முடியாது என்று கூறுகிறார். அவருடைய கைகள் அழிவை ஏற்படுத்தும்.பகலிலோ இரவிலோ தேவன் அவர்களைத் தண்டிப்பார்.இஸ்ரேலின் குற்ற ங்களுக்கு தண்டனை கிடைக் கும், ஆனால் தேவன்அவர்களை முற்றிலுமாக அழிக்கமாட்டார், ஆனால் அவர்களை தண்டிப் பார். கடவுளின் சக்தி கடவுள் இயற்கையின் மீது அவருக்கிரு ந்த அதிகாரத்தையும், அவருடை ய படைப்புகளின் மீது அவருக் கிருந்த அதிகாரம் பற்றியும் கூறுகிறார்.
தேவன் இஸ்ரேலரைத் தேர்ந் தெடுத்ததைக் கண்டுகொண்டு, அவர்களுக்குப் பொறுப்பு கொடு க்கிறார். இஸ்ரவேல் மக்களின் மீது தேவன் கருணையோடு இருக்கிறார்.அவர்கள் தங்கள் பாவங்களுக்காக தண்டிக்கப்படு வார்கள், ஆனால் தேவன் அவர்க ளுக்குஒருபுதியதொடக்கத்தைக் கொடுப்பார்.
இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர் கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்". இதன் பொருள் என்னவென்றால், இஸ்ரவேலர் கள் தேவனுக்கு மற்ற எல்லா மக்களையும் போல, அவர் உரு வாக்கியவர்கள் என்பதால், அவர்களை அவர் மிகவும் நேசிக் கிறார் என்பதாகும். எத்தியோப்பியர் (கூழியர்) தேவனுடைய மக்கள் பட்டிய லில் குறிப்பிடப்படுவதால், இஸ்ரவேலர்கள் வேறுபடும் மக்கள் அல்ல, மாறாக, அவர்கள் அனைவரும் ஒரே தேவனின் படைப்புகள் என்பதை இது வலியுறுத்துகிற து. நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்த ரைக் (Palestines) கப்தோரிலிருந் தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ என்கிறார் இதன் மூலம் கடவுள் இஸ்ரவேலுக்கு மட்டும் கடவுள் அல்ல எத்தோப்பியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும், அசிரி யர்களுக்கும் (சிரியா) ஏன் உலக மக்கள் அனைவருக்கும் கடவுள் என்பதை தன்னை உலக மக்களி ன் கடவுளாக வெளிப்படுத்துகி றார். எனவே நாமும் மற்ற மதத் தினரிடம் அன்பு காட்ட வேண் டும்.
2.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம். To say is easy for everyone உரோமையர் 2:17-29.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிக ளார் ரோம திருச்சபையாளர்க ளுக்கு எழுதுகின்ற பொழுது
திருச்சட்டத்தை மதிக்காத யூதர்களை கடுமையாக எச்சரிக் கிறார்.பிறரின் தவறுகளைக் கண்டு தீர்ப்பளிக்கும் யூதர்க ளைக் கண்டிக்கிறார்.. இவர்கள் தங்களது சொந்தச் செயல்களா ல் கடவுளின் நியாயத்தீர்ப்பில் நிற்க முடியாமல் போகிறார்கள். , திருச்சட்டம் பேசுவது மட்டும் பயனில்லை என்றும், செய லே முக்கியம் என்றும், உண் மை யான யூதர் என்பவர் வெளித் தோற்றத்தால் அல்ல, உள்ளத்தால் திருச்சட்டத்தி ன்படி செயல்படுபவரே என் றும் பவுல் வலியுறுத்துகிறார். புற இனத்தாரை, குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கும் யூதர்கள், தாங்களும் அதே தவறைச் செய் வதால் கடவுளின் நியாயத்தீர்ப் பில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை பவுல் விளக்குகிறார். யூதர்கள் திருச்சட்டத்தைப் பற்றி பெருமை கொள்கிறார்கள், ஆனால் திருச்சட்டம் பேசுவது மட்டும் பயனில்லை என்று பவுல் கூறுகிறார்.
யூதர்கள் தங்கள் உடல் ரீதியான விருத்தசேதனத்தைப் பற்றிப் பெருமை கொள்கிறார்கள், ஆனால் உண்மையான விருத்த சேதனம் என்பது உள்ளத்தின் விருத்தசேதனம் என்றும், அது பரிசுத்த ஆவியால் நடைபெறுவ தே என்றும் பவுல் வலியுறுத்து கிறார். ஆனால் பிறருக்குக் கற்றுக்கொடுக்கும் நீங்களே கற்றுக் கொள்ளவில்லையே! திருடாதேஎனப்பறைசாற்றுகிறீர்கள்; நீங்களே திருடுவதில்லை யா? சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம், சொல்லிய வண்ணம் செயல்.யூதர்கள்
வெளித்தோற்றத்தைக் கொண் டு மக்களைத் தீர்ப்பிப்பது சரியா னதல்ல என்பதையும், உள்ளத்தி ன் தூய்மையும் செயல்களுமே கடவுளின் பார்வையில் முக்கி யம் என்பதையும் பவுல் தெளி வாக எடுத்துரைக்கிறார்.
3.மந்தையில் சேரா ஆடுகளே!
O, sheep who are not in the Flock.
யோவான் 10:14-18.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவர் காணாமல் போன ஆட்டை தான் தேடி திரிகி றார், அலைந்து கண்டுபிடிக்கி றார் ஏனேனில், மற்ற ஆடுகளை யும் நான் கொண்டுவர வேண் டும்; அவைகள் என் சத்தத்தைக் கேட்கும்; அப்பொழுது ஒரே மந் தையாய், ஒரே மேய்ப்பனாய் இருக்கும் இயேசு அனைத்து விசுவாசிகளையும் (யூதர்கள் மற்றும் புற இனத்தினர் உட்பட) ஒன்றிணைக்க விரும்புகிறார்.
அனைத்து விசுவாசிகளும் அவருடைய குரலை அடையா ளம் கண்டு அவரைப் பின்பற்று வார்கள், இதனால் அனைவரும் ஒரே மந்தையாக, ஒரே மேய்ப் பனின் கீழ் இருப்பார்கள்.
இயேசு தன்னை "நல்ல மேய்ப் பன்" என்று கூறி, தன்னுடைய ஆடுகளின் மீதுள்ள ஆழமான அன்பையும் அவர்களுக்கு ஜீவ னைத் தியாகம் செய்யத் தயாரா க இருப்பதையும் காட்டுகிறார்.
இயேசு தனது ஆடுகளைப் பாதுகாப்பதற்காக தன்னையே தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார். இது உலகத்தின் இரட்சிப்புக்காக அவர் செய்ய விருக்கும் மகத்தான தியாக த்தை முன்மொழிகிறது. பிதா வானவர் என்னை அறிந்திருக் கிறார், நான் பிதாவை அறிந்தி ருக்கிறேன்.அவரது ஆடுகள் அவரை அறிந்துகொள்வது போல, அவர் தனது ஆடுகளை நன்கு அறிவார். இந்த உறவு தனிப்பட்ட மற்றும் ஆழமானது.
இயேசு தனது சொந்த ஆடுக ளையும், பிற விசுவாசிகளையும் ஒன்று சேர்த்து ஒரே மந்தையாவ தையே தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
சபை என்ற மந்தையிலிருந்து வெளியேறி, இயேசுவின் அன்பு க்கும் விசுவாசத்திற்கும் ஏங்கும் பிற விசுவாசிகளை இயேசு குறிப்பிடுகிறார். இவர்களை தன் மந்தையில் சேர்ப்பது தான் ஆண்டவருடைய விருப்பமாய் இருக்கிறது. வெவ்வேறு மதங் களைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து மத நல்லி ணக்கத்தை உருவாக்குவதை இது குறிக் கிறது. ஒரு சமூகத்தில் பல்வேறு மதங்கள் இருந்தாலும், அனை வரும் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதை இது காட்டுகிறது.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற பல்வேறு சமய மக்கள் ஒன்றாக இணை ந்து வாழ்வது பல்சமய மக்களின் ஒரு எடுத்துக்காட்டு.இதுவே, ஒரே மந்தை என்பதை இங்கு
ஆண்டவர் வலியுருத்துகிறார்.
பேரறிஞ்சர் அண்ணா அவர்கள்,
" மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்".... என்பது மற்ற சமய மக்களையும் நாம் மதிக்கவும், நேசிக்கவும் வேண்டும்என்பதே ஆண்டவரின் விருப்பம்
உலக அமைதி, புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை ஊக்கு விக்க மத ஒற்றுமை அவசியம்.
மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை சமூகத்தில் நல்லிணக் கத்தையும், அமைதியான சூழலையும் மேம்படுத்துகிறது.
பல் சமய மக்களும் ஒன்றி ணைந்து, அமைதியுடன் வாழ ஆண்டவர் அருள் புரிவாராக ஆமென்
Prof. Dr. David Arul Paramanandam
Sermon writer,
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.
Note: The sermon is to be delivered
at CSI Luke Church, Vadapathi,
Chengalpet. on 21/09/2925.
"Religion is the opium of the people" Karl Marx
.
Ten Protestant Martyrs, including Richard Woodman, were burnt to death in 1557 for not espousing the official state religion
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
அறிமுகம்: கிறித்துவின் அன்பர் களே! இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, கிறித்துவை அர்ப்பணித்தல் (The Presentation of Christ ) அர்ப்பணிப்பு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Dedication, Devotion என்று பொருள். " ஒருவருக்காக அல்லது ஒரு பணிக்காக தன்னை க் கொடுப்பது, முழுமையாக ஈடு படுவது."அர்ப்பணிப்பு என்பதா கும். அர்பணிப்பின் அடிப்படை, வேதத்தின் படி,"உன் முழு இதயத் தோடும், உன் முழுஉள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!"(இணைச் சட்டம் 6:5) ஒருவரின் ஆன்மாவை கடவுளு க்கு அர்ப்பணிப்பது அல்லது கடவுளின் சேவைக்கு அர்ப்பணி ப்பது அர்பணிப்பாகும். கிறித்தவர்களாகிய நாம், நம்மை நாமே கடவுளின் இறையரசை இவ்வுலகில் கொண்டுவர நம் வாழ்வின் மூலம் செயல்படுத்தி காட்டுவதே கிறித்துவின் அர்ப் பணிப்பாகும். 1. சாமுவேலை அர்பணித்தல். Presentation of Samuel to God. 1 சாமுவேல் 1:19-28. கிறித்துவுக்கு பிரியமானவர்களே! எப்பிராயீம் என்ற மலை தேசத்தி ல் ராமதாயீம் என்ற ஊரில் எல்க்கானாவின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். எல்க்கானா என்றால், " தேவன் உன்னை படைத்தி...
Comments
Post a Comment