திருமணம்: நீடித்த காதல் (அன்பின்) வாழ்க்கை.(226) Marriage: Lasting life of Love. தொடக்க நூல் 2: 18-24, திருப்பாடல் 128, எபிரேயர் 13: 1-6, மத்தேயு 19: 3-9.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த் துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, திருமணம்: நீடித்த காதல் (அன்பின்) வாழ்க்கை. Marriage: Lasting life of Love.
திருமணம் கடவுள் அமைத்து வைத்த மேடை என்பர்.ஆனால்,
திருவிவலியம், திருமணம் என் பது கடவுளின் சொந்தக் கையால் நெய்யப்பட்ட ஒரு புனித உடன் படிக்கை என்கிறது.இரண்டு உயிர்கள் ஒரே மாம்சமாக மாறும் ஒரு வாழ்நாள் ஒன்றியம் (Lifelong union), இது கிறிஸ்துவுக்கும் அவ ரது திருச் சபைக்கும் இடையிலா ன நித்திய அன்பைப் பிரதிபலிக் கிறது. மனித இதயங்கள் தடு மாறினாலும், இந்த தெய்வீக பிணைப்பு நம்மை தியாகத்துடன் நேசிக்க வும், ஆழமாக மன்னி க்கவும், நம்பிக்கயை நிலைநிறு த்தவும், நீடித்த அன்பிற்கான கடவுளின் பார்வையைத் தழுவ வும் அழைக்கிறது.
திருமணத்தை ஒரு சமூக ஒப்பந்த மாக (social contract) மட்டுமல்லா மல், தெய்வீக விருப்பம் மற்றும் கடவுளின் பிரதிபலிப்பாகும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
சங்க காலத்தில், ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ் வாங்கு வாழ்வதே சிறந்த தாகக் கருதப்பட்டது. புறநானூறு போன்ற இலக்கியங்களில், போர் புரிந்து ஒரு பெண்ணை மணந்து கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட ஒழுக்க முறைதான் திருமணம்.
பண்டைத் தமிழர் தம் வாழ்க்கை யில் களவொழுக்கம், கற்பொழு க்கம் ஆகிய இருவகை ஒழுக்கங் களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல் காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள்திருமண ம் என்ற சடங்கு இல்லாமலே யே இல்வாழ்க்கையில் ஈடுபட்டி ருந்தனர். இப்போது அது live together என சிலர் வாழ்கிறார்கள்.. இது தமிழர்களின் பண்பை வெளி ப்படுத்துகிறது . ஒரு மனிதனுக்கு திருமணமே தலைசிறந்தமங்கல நிகழ்ச்சியாகும்.
திருவள்ளுவர் திருமணம் என்ற தலைப்பில் எந்த திருக்குறளும் எழுதவில்லை என்றாலும் அறத்து ப்பாலில் இல்லற வாழ்க்கையை சிறப்பாக எடுத்துரைக்கிறார் "இல்வாழ்வான் என்பான் இயல் புடைய மூவர்க்கும், நல்லாற் றின் நின்ற துணை.
அதாவது,பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற் கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும் என்கி றார். கிறித்துவ முறையில், திரு மணமும் குடும்பமும் கடவுளால் நிறுவப்பட்டு வழிநடத்தப்படுகின் றன. “கர்த்தராகிய ஆண்டவர், “மனிதன் தனிமையாக இருப் பது நல்லதல்ல. அவனுக்கு ஏற்ற துணையை உருவாக் குவேன்” என்றார்” (தொடக்க நூல் 2:18). திருமணத்தின் மூலம் அன்பில் நிறுவப்பட்ட குடும்ப வாழ்க்கை பெறப்பட வேண்டும். தொடக்க நூலில், முதல் ஆதாமின் திருமணத்துடன் தொடங்கிய இந்த. செயல்முறை திருவெளிப்ப டுத்தலில் இரண்டாவது ஆதாமின் திருமணத்துடன் முடிவடையும். திருமணம் என்பது கடவுள் மற்றும் மனிதனின் உறவின் பிரதிபலிப் பாகும் (எரே. 3; எசேக்கியேல் 16; ஓசியா 1-3) மற்றும் கிறிஸ்துவுக் கும் திருச்சபைக்கும் இடையி லான உறவு (எபேசியர் 5:22, 23). திருமணத்தை அனைவரும் மதி க்க வேண்டும் என்று திருத்தூதர் கற்பித்தார். இந்த உறவில் தூய் மை மற்றும் மரியாதையுடன் நுழைய வேண்டும். ஒருவருக்கொ ருவர் மரியாதை செலுத்துவதோ டு, கடவுள் பயமும் மிகவும் முக்கி யமானது. படைப்பில், ஆண்டவர் ஆண் பெண் என தனித்தனியாக படைத்திருந்தாலும் வாழ்க்கையி ல் இருவரையும் ஒன்றாக இணை த்தார் என்பது கடவுளின் திட்டம்.
1.திருமணத்திற்கு அடிப்படை: அன்பு (Agape)(தொ. நூல். 2:18-24).Agape is the fundamental basis for marriage.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கடவுள் இவ்வுலகை படைக் கின்ற போது தொடக்க நூல் ஒன் றில் நல்லதுநல்லது என்று அனைத்தையும் கண்டார். ஆனால் மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்பதை தொடக்க நூல் இரண்டில் வெளிப்படுத்து கிறார். தனிமை ஒரு மனிதனை கொன்று விடும். கடவுள் தனிமை யை விரும்பவில்லை சமூகத்தோ டு இணைந்து வாழதான் விரும்பு கிறார். தனிமரம் தோப்பாகாது. இல்லறம் என்ற நல்லறத்தில் ஆண் பெண் இருவரும் இணை ந்து வாழ்வதே வாழ்க்கை. எவ்வா று திராட்சை செடியில் அதன் கிளைகள்இணைந்து இருப்பது போல கணவனும் மனைவியும் ஒருவர் ஒருவர் இணைந்து இருக் க வேண்டும் அவ்வாறு இருக்கின் ற பொழுது தான் அதிக கனிகளை கொடுப்பார்கள் என்று நற்செய்தி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
திருமணத்தில் அகபே ஏன் முக்கியமானது? Why is Agape Important in Marriage?
அன்பர்களே திருமண அன்பு என்றால் அது அகபே அன்பை குறிக்கும். அகபே அன்பை ஒரு வலுவான, நீடித்த திருமணத்திற் கு சிறந்த அடித்தளமாகக் கருதுகி ன்றனர். ஏனெனில் இது தனிப் பட்ட ஆசை அல்லது விரைவான உணர்வுகளை விட துணையின் நல்வாழ்வை மையமாகக் கொண் ட நிபந்தனையற்ற, தன்னல மற்ற மற்றும் தியாக அன்பை உள்ளடக்கியது.இந்த வகையான அன்பு மன்னிப்பு, மரியாதை மற்றும் ஆதரவை வளர்க்கிறது, நீண்ட காலத்திற்கு ஆரோக்கிய மான, செழிப்பான உறவுக்கு அவசியமான நிலையான மற்றும் வளர்க்கும் சூழலை உருவாக்குகி றது.நிபந்தனையற்ற அன்பு என்பது ஒரு வலுவான குடும்ப உறவுக்கு அடித்தளம். யாக்கோபுராகேலை நேசித்தார். அவர் அவளை நேசித்ததால், அவளை மணக்கக் காத்திருந்த ஏழு ஆண் டுகள் குறுகிய காலமாகக் கருதப் பட்டன (தொ. நூ. 29:20). இந்த அன்பு குடும்ப உறவுகளுக்குத் தேவையான மிக முக்கியமான காரணியாகும். மொத்தத்தில் உணர்ச்சிமிக்க காதல் என்பது (ஈரோஸ்) என்றும் நட்பு காதலுக்கு (ஃபிலியா) என்ற பிற காதல் வடிவங்கள் அவற்றின் பாத்திரங் களை வகிக்கும் அதே வேளை யில், அகபேதன்னலமற்ற, உறு தியான அடித்தளத்தை வழங் குகிறது, இது இவற்றை நீடித்த மற்றும் வளர்க்கும் கூட்டாக மாற் றுகிறது. ஆதாம், ஏவாளைப் பார்த்து, "இவள் என் எலும்பில் என் மாமிசத்தில் தோன்றிய வள்" என்று மகிழ்ச்சியுடன் கூறுவது, அவர்கள் இருவரும் ஒருவரே என்பதைக் காட்டுகிறது.
2. கிறிஸ்துவ வாழ்க்கை என்றால் என்ன? What is the Christian life? எபிரேயர்ஸ13:1-6.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே எபிரேயர் நிருபம் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றி இப்பகுதியில் விவரிக்கிறது. கிறிஸ்தவ வாழ்க் கையின் மிக முக்கிய நடைமுறை அம்சங்கள்: சகோதர அன்பு,விருந்தோம்பல், துன்பப்படுப வர்களுக்கு அனுதாபம்,திரும ணத்தை மதிக்க வேண்டும், பண ஆசையை நிராகரித்தல்ஆகி ய வற்றில்கவனம் செலுத்துகிற து. திருமணம் என்பது அனை வராலும் மதிக்கப்பட வேண்டிய ஒரு சிறந்த உறவு. கிறிஸ்து திருச்சபையை நேசித்தது போல, ஆண் தன் மனைவியை நேசிக்க வேண்டும். திருச்சபை கிறிஸ்து வுக்குக் கீழ்ப்படிவது போல, மனை வியும் தன் கணவனை மதிக்க வேண்டும். ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கைக்கு ஒருவரு க்கொருவர் கீழ்ப்படிதல் என்ற மனநிலை தேவை.
எபேசியர் 5:31-32- ல் திருத்தூதர் பவுல் அடிகளார் திருமணத்தின் புனிதத்தன்மையை மேலும் தெளிவுபடுத்துகிறார், இது கிறிஸ் துவுக்கும் திருச்சபைக்கும் இடை யிலான உறவைப் பிரதிபலிக்கும் ஒரு மர்மம் என்று விவரிக்கிறார். இங்கே, "மிஸ்டீரியன்" (μυστήριον) என்ற கிரேக்க வார்த்தை திரும ணம் என்பது "பூமிக்குரிய நிறுவ னம் மட்டுமல்ல, கிறிஸ்துவுக் கும் அவரது மணமகள் திருச் சபைக்கும் இடையிலான இறு தி ஐக்கியத்தின் தெய்வீக சின் னமாகும்" என்பதைக் குறிக்கி றது. எனவே, திருமணம் என்பது தியாக அன்பு, ஒற்றுமை மற்றும் கடவுளின் நித்திய உடன்படிக்கை யை பிரதிபலிக்கும் நோக்கம் கொண்டது என்பதே நாம் மறக் கக்கூடாது. கிறிஸ்து திருச்சபை யை நேசித்தது போல, கணவர்க ள் தங்கள் மனைவிகளை தியாக த்துடன் நேசிக்க வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார் - எதை யும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் அன்புடன். கிறிஸ்தவ திருமணங்
களுக்கு இதுவே சிறந்த வழி, கடவுளின் அன்பின் அடிப்படை யில் கட்டமைக்கப்பட்ட உறவு, கிறிஸ்து தம் மக்கள் மீது கொண்ட அன்பின் பிரதிபலிப்பாகும்..
3.ஆகையால், தேவன் இணைத் ததை மனுஷன் பிரிக்காதிருக் கக்கடவன்” therefore God hath joined together, let not man put asunder. மத்தேயு 19: 3-9.
அன்பின் இறை மக்களே! திருமண உறவில் இனணந்தவர்
கள். கடவுளின் அநாதி தீர்மானத்
தின்படி இனணக்கப்பட்டவர்கள்.
திருச்சபையில் கடவுளின் பெய ரால் உறுதி மொழி எடுத்தவர்கள்.
இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் உண்மையுள் ளவராயிருந்து, வாழ்நாளெல் லாம் நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறனர். தங்கள் வாக்குறுதி மூலம் இத்திருவருள் சாதனதை நடத்துவது திருமணத் தம்பதியரே. ஆயரும் மற்ற இரு நபர்களும் சாட்சிகளளே. இவ்வாக் குறுதியானது தம்பதியரில் ஒருவர் இறக்கும் வரை ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துகிறது.
திருமணத்தின் மூலம் இரண்டு நபர்கள் 'ஒரே மாம்சமாக' மாறு கிறார்கள். தொ. நூல் புத்தகத் தின் காலத்திலிருந்தே அவர்கள் பிரிக்கக்கூடாது. ஆதாம் இருவ ரால் ஒன்றாக இணைக்கப்பட்டவர் (ஆணும் பெண்ணும், தெ. நூ. 5:1, 2). இறுதியாக, கடவுள் அவர்களை இரண்டாகப் பிரித்தாலும், கடவுள் அவர்களை ஒன்றாக இணைத் தார். இது நம் வாழ்வில் காணப்பட வேண்டிய குடும்ப ஒற்றுமையைக் குறிக்கிறது.திருமணம் என்பது ஒரு சமூக ஏற்பாடாக மட்டும் பார்க் கப்படுவதில்லை, மாறாக மனித உறவுகளுக்கான கடவுளின் நோக் கத்தின் நிறைவேற்றமாகக் கருத ப்படுகிறது. இந்த யோசனை தொ. நூ 2:24 இல் மேலும் உறுதிப்படுத் தப்பட்டுள்ளது , அங்கு ஒரு ஆண் தனது பெற்றோரை விட்டு தனது மனைவியுடன் ஐக்கியமாக இருப் பது ஒரு பிரிக்க முடியாத பிணைப் பைக் குறிக்கிறது - அது உடல் மற்றும் ஆன்மீகம் இரண்டையும் உள்ளடக்கியது.
ஆண்டவர் விவாகரத்தை குறித்து என்ன சொல்கிறார்?
அன்புக்குரியவர்களே நமது ஆண்டவர் விவாகரத்தை ஆதரிக் கவில்லை.பரிசேயர்கள் அவரை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், "ஒருவர் தம் மனைவி யை எக்காரணத்தையாவது முன் னிட்டு விலக்கிவிடுவது முறை யா?" என்று கேட்டனர். சீடர்கள் கூட இந்த கேள்வியை கேட்டனர். அவர் பதிலளித்தார், 'தன் மனை வியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணக்கும் எவனும் அவளுக்கு எதிராக விபச் சாரம் செய்கிறான். அவள் தன் கணவனை விவாகரத்து செய்து வேறொருவனை மணந்தால், அவள் விபச்சாரம் செய்கிறாள்.
ஆரம்பத்தில் படைப்பாளர் 'அவர் களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்' என்று நீங்கள் படிக்க வில்லையா, 'இதனால்தான் ஒரு மனிதன் தன் தந்தையையும் தாயையும் விட்டுவிட்டு தன் மனை வியுடன் இணைவான், இருவரும் ஒரே மாம்சமாகிவிடுவார்கள்' என்று கூறினார்?"(மத்தேயு 19:4-5).
திருமணம் பற்றிய இயேசுவின் போதனை திருமண பந்தத்தின் பிரிக்க முடியாத தன்மையை வலியுறுத்துகிறது . விவாகரத்து என்பது கடவுளின் அசல் திட்டத் தின் ஒரு பகுதி அல்ல, மாறாக மனித இதயங்களின் கடினத்தன் மை காரணமாக மோசேயால் அனு மதிக்கப்பட்ட ஒரு சலுகை என்று அவர் விளக்குகிறார் (மத்தேயு 19:8)
விவாகரத்துக்கான விதிவிலக்கு விதியை இயேசு வழங்குகிறார்: "பாலியல் ஒழுக்கக்கேடு தவிர, தன் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணக்கும் எவரும் விபச்சாரம் செய்கிறார் என்று நான் உங்களு க்குச் சொல்கிறேன்."என்கிறார்.
அன்பானவர்களே! திருமணத் தின் தெய்வீக தரிசனத்தைத் தழுவுதல் வேதாகமத்தில் கோடிட் டுக் காட்டப்பட்டுள்ளபடி, திரும ணம் என்பது கடவுள் தம்முடைய மக்கள் மீது கொண்ட நித்திய அன்பையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் ஒரு தெய்வீக உடன்படிக்கையாகும் . இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு புனிதமான பிணைப்பாகும் , இது அன்பு, தியாகம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றில் அடித்தளமாக உள்ளது. பாலியல் ஒழுக்கக்கேடு வழக்குகளில் விவாகரத்து அனுமதிக்கப்படலாம் என்றாலும், அதை ஒருபோதும் சிறந்ததாகக் கருதக்கூடாது, மேலு ம் மறுமணத்தை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும், விவாகரத்து வேதத்தின் ரீதியாக நியாயப்ப டுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டு மே அனுமதிக்கலாம்.
ஒவ்வொரு திருமணமும் கிறிஸ்து வுக்கும் அவருடைய திருச்சபைக் கும் இடையிலான தெய்வீக அன் பைப் பிரதிபலிக்கட்டும், மேலும் நாம் அனைவரும் இந்தப் புனித அழைப்பைப் பணிவு, நம்பிக்கை மற்றும் கிருபையுடன் வாழ முயல்வோமாக. ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com.
www.davidarulblogspot.com.
Love" can be defined in many ways. Christ's love for us is an unconditional love, and this is the love we are to seek in marriage.
Couple doing dishes together showing Agape love in marriage
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
அறிமுகம்: கிறித்துவின் அன்பர் களே! இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, கிறித்துவை அர்ப்பணித்தல் (The Presentation of Christ ) அர்ப்பணிப்பு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Dedication, Devotion என்று பொருள். " ஒருவருக்காக அல்லது ஒரு பணிக்காக தன்னை க் கொடுப்பது, முழுமையாக ஈடு படுவது."அர்ப்பணிப்பு என்பதா கும். அர்பணிப்பின் அடிப்படை, வேதத்தின் படி,"உன் முழு இதயத் தோடும், உன் முழுஉள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!"(இணைச் சட்டம் 6:5) ஒருவரின் ஆன்மாவை கடவுளு க்கு அர்ப்பணிப்பது அல்லது கடவுளின் சேவைக்கு அர்ப்பணி ப்பது அர்பணிப்பாகும். கிறித்தவர்களாகிய நாம், நம்மை நாமே கடவுளின் இறையரசை இவ்வுலகில் கொண்டுவர நம் வாழ்வின் மூலம் செயல்படுத்தி காட்டுவதே கிறித்துவின் அர்ப் பணிப்பாகும். 1. சாமுவேலை அர்பணித்தல். Presentation of Samuel to God. 1 சாமுவேல் 1:19-28. கிறித்துவுக்கு பிரியமானவர்களே! எப்பிராயீம் என்ற மலை தேசத்தி ல் ராமதாயீம் என்ற ஊரில் எல்க்கானாவின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். எல்க்கானா என்றால், " தேவன் உன்னை படைத்தி...
Comments
Post a Comment