உடல்/மனநிலை// இறுதி: நோயாளிகள் கரிசனை ஞாயிறு, இயலாமை : மாண்புடன் பேணுதல். (230) Disability: Care and Honour. 2 சாமுவேல்: 9: 1-13, திருப்பாடல்: 146. திருத்தூதர் பணிகள் : 9:32-35. மாற்கு 3:1-6
முன்னுரை:கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
"இயலாமை : மாண்புடன் பேணுதல். Disability: Care and Honour..
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி WHO ‘இயலாமை என்பது ‘ஒரு மனிதனுக்கு இயல்பானதாகக் கருதப்படும் விதத்தில் ஒரு செயலைச் செய்யும் திறனில் ஏதேனும் கட்டுப்பாடு அல்லது குறைபாடு’ ஏற்படுவதாகும்.
இயலாமை என்பது ஒரு முடிவ ல்ல; அது ஒரு புதிய தொடக் கம். தற்கால மருத்துவ முன்னே ற்றங்கள், புதிய தொழில்நுட்ப ங்கள் மற்றும் சமூக ஏற்பு ஆகிய வை இயலாமை உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத் துவதில் முக்கியப் பங்கு வகிக்கி ன்றன, இயலாமைகள் பிறப்பிலி ருந்தே இருக்கலாம் அல்லது ஒரு நபரின் வாழ்நாளில் பெறப்பட லாம்.
யார் இயலாமை உள்ளவர் கள்? Who are the disables?
*பார்வையற்றவர்கள் அல்லது பகுதியளவு பார்வையுடையவர் கள்,
* கற்றல் அல்லது அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள்
* மாற்றுத் திறனாளி மக்கள்
*நீண்டகால நோய்கள் உள்ள வர்கள்
* மனநலம் அல்லது உளவியல் சிக்கல்கள் உள்ளவர்கள்
* மூப்பின் காரணமாக ஏற்படும்
இயலாமை.
* இயற்கையில் அனைவரும் ஒரு நாள் இந்த இயலாமை அனுபவத்தை பெறுகின்ற நிலையில் இருக்கிறோம்.
* ஒவ்வொருவருக்கும் ஒரு இயலாமை உண்டு. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே நமது ஆண்டவர், மனரீதி யாகவும், உடல் ரீதியாகவும் பலவீனமான மற்றும் சவாலான மக்களுடன் அதிக நேரம் செல விட்டார். அவரது ஊழியத்தில் அவரது நிலைப்பாடு 'நோயாளி களுக்குத்தான் மருத்துவர் தேவை' என்றார்.
ஒருவரின் சொந்த பாவங்களா லோ அல்லது அவர்களின் தீமை யாலோ இயலாமை (disable) ஏற்பட்டதாகக் கருதப்பட்ட காலத் தில், கிறிஸ்து தனது ஊழியத் தைத் தொடங்கினார். குருடர் கள், முடவர்கள், காது கேளாதவர் கள் மற்றும் தொழுநோயாளிகள் அனைவரும் சமூகத்தில் புறக்க ணிக்கப்பட்டனர். அதாவது அவர் கள் தூய்மையற்றவர்கள். என்று கருதிய காலம்.
ஆனால் நமது திருவிவலியம் யாரையும் அசுத்தமானவர்கள் என்று அழைக்க வேண்டாம் என்று நமக்குக் கற்பிக்கிறது (திருத்தூதர் பணிகள் 10:28). இத்தகைய நோய்களால் பாதிக் கப்பட்டவர்களுக்கும் சமூகத்தில் வெளிப்படையாக வாழ உரிமை உண்டு.
கிறிஸ்து அத்தகைய ஒதுக்கப்ப ட்ட மற்றும் குறைவாக மதிப்பிடப் பட்ட மக்களை முழுமையான மற்றும் முழுமையான ஆளுமை களாக மாற்றி சமூகத்தின் முன் னணிக்குக் கொண்டு வந்தார்.
இயேசு அளித்த குணப்படுத்து தல் வெறும் உடல் ரீதியானது மட்டுமல்ல, சமூக மற்றும் ஆன் மீக ரீதியானது. எனவே இப்போ தும் கூட மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சவால் விடும் நபர்க ளுடன் ஒற்றுமையாக இருப்பது திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினரின் பொறுப்பாகும்.
அவர்கள் மீது மரியாதையும் அக்கறையும் இருக்க வேண் டும்.
1.இயலாமையில் உயர்த்தப் பட்டார் Uplifted in disability (2 சாமுவேல் 9: 1-13.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஓடம் (படகு)ஒரு நாள் வண்டியில் ஏறும்" என்பது ஒரு பழமொழி, இதன் பொருள் எல் லோருக்கும் ஒரு நல்ல காலம் வரும், அதேபோல் ஒரு கெட்ட காலமும் வரும் என்பதாகும்
மேவிபோசேத், சவுல் ராஜா வின் மகன் யோனாத்தானின் மகன் ஆவார். மேவிபோசேத் ஐந்து வயதாயிருந்தபோது, அவனுடைய தகப்பன் யோனத் தானும் தாத்தா சவுலும் கில் போவா மலையில் பெலிஸ்தியர்களால் (Phalistine) இறந்து போனார்கள்.ஆனால்சவுல்தனது சொந்த வாளில் விழுந்து தற் கொலை செய்து கொண்டார். சவுலின் முழுக்குடும்பத்துக்கும் அழிவு நேரிட்டபோது, இப்பிள் ளையின் தாதி இவனை எடுத்து க்கொண்டு ஓடிப்போனாள். அந்த அவசரத்தில் அவன் விழுந் து முடவனானான்.இந்த விபத்து க்குப்பிறகுஅவர்லோதேபாரில், அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டில் தங்கினார்.இப்போது, எந்த ராஜாவுக்குப் பயந்து ஒளிந் திருந்தானோ அந்த ராஜாவிடமி ருந்தே அழைப்பு வருமானால் இதை என்ன வென்று நினை ப்பது?
யோனத்தானின் பொருட்டு தயவைக் காட்ட சவுலின் வீட்டில் உயிருடன் இருக்கும் ஒருவரைத் தேடி, கடவுளின் கருணையை நான் சவுலின் வீட்டாருக்குக் காட்டுவதற்கு இன்னும் யாரா வது இருக்கின்றனரா? என்று அரசர் கேட்டார். இதன் மூலம் தாவீது அரசரின் அன்பின் இதயத்தன்மையை காட்டுகிறது. "யோனத்தானின் இருகால் ஊன முற்ற மகன் ஒருவன் இருக்கி றான் "என்று அரசனிடம் சீபா பதிலளித்தான். சீபா, இவன் சவுலின் வீட்டு பணியாளன்.
"எங்கே அவன்?" என்று தாவிது அரசர் அவனிடம் கேட்க, "லோதாபாரில் (லோதேபார் என்றால் மேய்ச்சல் அற்ற நிலம்,)
அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான்" என்றுஅரசனிடம்சீபாகூறினான்.
லோதாபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச்செய்தார்.
இரண்டு கால்களும் முடமான மேவிபோசேத்தை தாவீது சந்தித்தார். அவர் முடமாக இருந் தபோதிலும், தாவீது தனது நிலத் தைத் திருப்பிக் கொடுத்தார். அவர் ஒவ்வொரு நாளும் தனது மேஜையில் சாப்பிடும் உரிமை யையும் அவருக்கு வழங்கினார்.
பலவீனமானவர்களுக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதை மற்றும் அக்கறைக்கு இது ஒரு
எடுத்துக்காட்டு.
தன்னைக் கொல்ல வகைதேடின சவுலின் வம்சத்தில் எஞ்சியிருப் பவனையும் கொன்றுபோட தாவீது நினைக்கவில்லை. தன் நண்பன் யோனத்தானின் நிமி த்தம் இவனுக்குத் தயை செய்ய த்தக்க மனதைக் கர்த்தர் தாவீ துக்குக் கொடுத்திருந்தார். ராஜ வம்சத்திலிருந்து வந்த அவனை தாவீது கனப்படுத்தினான். ‘நீ பயப்படாதே. நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய்’ என்று சொல்லி, சவுலின் சகல நிலங்களையும் அவனுக்குக் கொடுப்பதாகவும் வாக்களித்தா ன் தாவீது.அதற்கு மேவிபோசேத் வணங்கி செத்த நாயை போல இருக்கிற என்னை நீர் நோக்கி பார்கிறதிற்கு உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அவன் தன்னைத் தாழ்த்தும் நிலையை எடுத்துக் காட்டுகிறது தன்னை தாழ்த்துகிறவர்கள் உயர்த்தப்ப டுவார்கள்.நம் இயலாமை நிலை மையில் கூட நம் கை மீறி போன சூழ் நிலைகளில் சிக்கி தவிக்க லாம் , தனித்து விடப்பட்டு இருக் கலாம் மனம் முடமாகிப்போன நிலைமையில் இருக்கலாம். துன்பமா அல்லது துயரமா எந்த வித துக்கமாக இருந்தாலும் கண்ணீரை துடைக்க கர்த்தர் உண்டு, கலங்காதே .
2.இயலாமையில் அற்புதம். Miracle in disability.திருத்தூதர் பணிகள் : 9:32-35.
கிறித்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பணிகள் : 9ம் அதிகாரம் .இது சவுலின் மனம், மற்றும் மதமாற்றத்தையும் புனித பேதுருவின் படைப்புக ளையும் பதிவு செய்கிறது .
ஐனேயா என்பவர் இவர் லித் தாவில் வாழ்ந்து வந்தார்.( லித் தா பட்டணம்" இது யோப்பா பட்ட ணம் (Joppa), இது எருசலேமிலி ருந்து 10 கி. மி தூரம் உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரு க்கு அருகில் அமைந்துள்ள ஒரு பண்டைய துறைமுக நகரம் ஆகும், இது யோனா, சாலமன், மற்றும் தூய பேதுரு ஆகியோ ருடன்தொடர்புடையது,திருத்தூதர் பேதுரு, லித்தா ஊரில் இருந்த பரிசுத்தவான்களைச்சந்திக்கச்சென்றார். அங்கு திருதூதர் பேதுரு அற்புதங்களைச் செய் தார், குறிப்பாக தொர்காள் (Tobias) (தொர்காள் என்றாள் "கிருபை பொருந்திய" மற்றும் "அழகுவாய்ந்த" என்ற அர்த்தம் கொண்ட பெயரின் அடையாள மாக பார்க்கப்படுகிறது. உயிர்ப்பித்த நிகழ்வும், நடந்தன) ஐனையா (Aeneas) என்ற வாத நோயாளியை சுகப்படுத்திய நிகழ்வும் இந்த ஊரிலேயே நடந் தது. இவர் எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்தார். புனித பேதுரு இவரிட ம் வந்து"ஐனெயா, இயேசு கிறிஸ்து உம் பிணியைப் போக்குகிறார்: எழுந்து உம் படுக்கையை நீரே சரிப்ப டுத்தும்" என்று கூறிய போது இவர் குணமைடைந்தார். இந்த அற்புதத்தைப் பார்த்த லித்தா மற்றும் சாரோன் ஊர் மக்கள் அனைவரும் கர்த்தரிடத்தில் திரும்பினார்கள், அதாவது இயேசு கிறிஸ்து மீது விசுவாசம் வைத்தார்கள்.
பேதுருவின் மூலம் இயேசுகிறி ஸ்து அற்புதங்களைச் செய்கிறா ர் என்பதை இது காட்டுகிறது.
திருத்தூதர் பவுல் அடிகளார் " கடவுள் ஞானிகளை வெட்கப் படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலி யோரை வெட்கப்படுத்த, வலு வற்றவை என உலகம் கருது பவற்றைத் தேர்ந்து கொண்டார்.
(1 கொரிந்தியர் 1:27) என்றார்.
கடவுள் வலுவற்றவரை கைவிடு வதில்லை ஏற்ற காலத்தில் அவர் களை உயர்த்துகிறார் அவர்கள் மீதும் அவர் தனது அன்பையும் அரவணைப்பையும் காட்டுகி றார்.நாமும் அவ்வாறே அவர் களின் மாண்பைக் காக்க முற் படுவோம்.
3.இயலாமை : மாண்புடன் பேணுதல்.Disability: Care and Honour. மாற்கு 3:1-6.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இயேசு ஓய்வுநாளில் தொழுகை கூடத்திற்கு சென் றார். அங்கு ஒரு கை சூம்பிய மனிதனை (withered hand) குணப்படுத்தியதைக் இப்பகுதி குறிக்கின்றன.
ஓய்வுநாள் சட்டம் குறித்த இயேசுவின் பார்வை:
பரிசேயர்கள் ஓய்வுநாளின் விதிகளை கடுமையாகப் பின்ப ற்றுபவர்கள். அவர்கள் எந்தச் செயலையும் விதிமுறைகளின் படி செய்ய முயன்றனர். ஆனால் இயேசு மனிதர்களை அன்புடன் நேசிப்பதில் கவனம் செலுத்தி னார். பரிசேயர்களின் சட்டத்திற் கு மாறாக, இயேசு ஓய்வுநாளில் உதவி செய்வது சரியான செயல் என்று கருதினார். அவர் மனிதர் கள் நலமடைவதை ஓய்வுநாள் சட்டத்தை விட முக்கியமாக கருதினார்.
ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எதுமுறை?" என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார் கள். அவர் அந்த மனிதனின் கையை குணப்படுத்தினார்.
4. பரிசேயர்கள் யார்? Who are the Pharisees?
அன்பானவர்களே! பரிசேயர்கள் என்பவர்கள், பண்டைய இஸ்ரே லில், குறிப்பாக இரண்டாம் கோவில் காலத்தில் (Second Temple ) .(கி.பி 70 இல் இரண்டா வது டெம்பிள் (கோயில்) ரோமானியப் படைகளால் அழிக்கப்பட்டது, மேலும் இந்த முற்றுகைக்குத் தலைமை தாங்கியவர் ரோமானிய தளபதியான டைட்டஸ். யூதர்கள் ரோமானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததன் விளைவாக இந்த முற்றுகை நடைபெற்றது) கி.பி 70களில் நடந்த இரண்டாம் கோவிலின் அழிவுக்குப்பின்பு இவர்களின் கொள்கைகளும் கோட்பாடுக ளுமே தற்கால யூத சமயத்துக்கு அடிப்படையாயிற்று. வரலாற்று ஆசிரியர் பரிசேயரான ஜொசிஃபஸ் (37 – c. 100 CE), இரண்டாம் கோவிலின் அழிவு க்கு முன்பு சுமார் 6,000 பரிசேயர் கள் வாழ்ந்ததாக குறிப்பிடுகின் றார்.பரிசேயர்கள் ஒரு யூத மத அறிஞர் குழுவினர் ஆவர். இவர்கள் மக்கபேயர் புரட்சியால் விளைந்த மக்கபேயர் அரசு கால த்தில் தொடங்கிய குழுவாவர். இவர்கள் யூத சட்டங்களை மிக வும் கண்டிப்பாக கடைபிடித்தவர் கள்,யூத மத சட்ட ங்கள் மற்றும் மரபுகளுக்கு அதிக முக்கியத்து வம் கொடுத்தனர். இவர்கள் கடவுளுக்கென்று தங்களைப் பிரித்தெடுத்தவர்கள். பரிசுத்த மானவர்கள் என்று அழைத்துக் கொண்டனர் . கி. பி. 65ல் ஆன்டியோக்கஸ் எப்பிபேன்ஸ் ( Antiochus Epiphanes)"க்கு (அந்தியோகஸ் IV எபிபேனஸ் ' எலானியத்தில் மேற்காசியாவை ஆண்ட கிரேக்க செலுக்கியப் பேரரசர் ஆவார்.இவர் பேரரசர் மூன்றாம் அந்தியோகசின் மகன் ஆவார். இவர் செலூக்கிய பேரரசை கிமு 175 முதல் 164 முடிய ஆட்சி செய்தார்இவரது ஆட்சிக் காலத்தில் யூதேயா மற்றும் சமாரியா வாழ் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.)
எதிராக நடந்த கிளர்ச்சியில் இவர்களும் மக்காபியர்களுடன் சேர்ந்து போராடினர். பாவிகளா க கருதப்பட்டவர்களோடு கலந் திருப்பதை தவிர்த்து, தங்களை புனிதர்களாக கருதிக் கொண்ட ஆன்மீக தலைவர்கள்.. பரிசேயர் கிரேக்கமயமாக்கப்படுதலை எதிர்த்தனர். பரிசேயர்கள் உயிர் த்தெழுதல் உண்டு என்று நம்பி னர். சதுசேயர்கள் உயிர்த்தெழு தல் இல்லை என்று நம்பினர். பரிசேயர்கள் யூத சட்டங்களை விளக்க மோசேவின் அதிகாரம் தங்களிடம் இருப்பதாக நம்பி னர்.
புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறித்துவோடு இவர்கள் புரிந் த வாதங்கள் குறிப்பிடத்தக்கன. புதிய ஏற்பாட்டில் புனித பவுல் ஒரு பரிசேயராக பல இடங்களில் குறிக்கப்படுகின்றார். காமாலி யேல் போன்ற பரிசேயர்களில் சிலர் கிறித்தவ திருமறைக்கு ஆதரவாக இருந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது
இயேசு, பரிசேயர்களின் நீதியை விட தங்களுடைய நீதி மேன்மை யானதாக இருக்க வேண்டும் என்று தனது சீடர்களுக்கு கற்பி த்தார்.
4. இயேசு கிறிஸ்து ஓய்வு நாளின் சட்டத்தை மீறினாரா? Was JesusChrist break the Sabbath?
அன்பு நண்பர்களே! மோசே யின் திருச்சட்டத்தின் படி, ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்ப வன் கொல்லப்படவே வேண் டும். அந்நாளில் வேலை செய்ப வன் எவனும் தன் மக்களிடமிரு ந்து விலக்கி வைக்கப்பட வேண் டும். ஆறு நாள்கள் வேலை செய் யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய "சாபாத்து ". ஆண்ட வருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்ப வன் எவனும்கொல்லப்பட வேண்டும்.
(விடுதலைப் பயணம் 31:14,15)
பரிசேயர்களுக்கு இயேசு ஓய்வு நாளை மீறியதாகத் தோன்றி யது, ஏனெனில் பரிசேயர்கள் "வேலை" என்று வரையறுத் திருந்த பல செயல்களை அவர் செய்தார், ஆனால் இயேசுவின் பார்வையில், மனிதனை நேசிப்பதும் நன்மை செய்வ தும் ஓய்வு நாளின் நோக்கம். இயேசு, ஓய்வுநாள் மக்களுக் காகவே உருவாக்கப்பட்டதே தவிர, மக்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்க உருவாக்கப் பட்டவர்கள் அல்ல என்பதை வலியுறுத்தினார். ஆண்டவர் எப்பொழுதும் மனித நேயம் மற்றும் நன்மையை முதன்மைப் படுத்தினார். இயேசு, பரிசேயர் களின் கடுமையான விதிகளு க்கு எதிராக, ஓய்வுநாளின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்றார். மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நன்மையைச் செய்வதற்கும் ஓய்வுநாள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் போதித் தார். ஓய்வுநாளில் நோயாளிக ளைக் குணப்படுத்துவதையும் இயேசு ஒரு "வேலை" என்று கருதவில்லை. மனிதர்களின் துன்பத்தைக் குறைத்து, அவர்க ளுக்கு நல்வாழ்வைக் கொடுப் பது ஓய்வுநாளின் முக்கியப் பங்கு என்பதை அவர் காட்டினார்.
இயேசுஓய்வுநாளைமீறவில்லை, மாறாக, ஓய்வுநாளின் உண்மை யான நோக்கமான மனிதனை நேசிப்பதையும், நன்மை செய்வ தையும் வலியுறுத்தினார். பரிசேயர்களின் கடுமையான மதப் புரிதலுக்கு மாறாக, கடவு ளின் அன்பையும், கருணையை யும் இயேசு தனது செயல்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
அன்பானவர்களே!
சுருக்கமாகச் சொன்னால், பரிசேயர்கள் போல ஓய்வு நாளைக்கடைப்பிடிப்பது கிறிஸ் தவத்தின் கட்டாயக் கடமை அல்ல. நாம் கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையின் கீழ் வாழ்ப வர்கள், மற்ற அனைத்து தியாகச் சட்டங்களுடன் சேர்த்து ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பது அவசி யமில்லை. பாவ மன்னிப்புக் காக ஆட்டுக்குட்டிகளைப் பலி யிடாத நாம் அதே காரணத் திற்காக நாம் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் ஆலயம் செல்வது மிக அவசிய மானது அதில் விதிவிலக்கு அல்ல.கிறிஸ்துவின் நபர் மற் றும் வேலையில் நாம் நம்பிக்கை வைக்கும்போது நாம் கடவுளின் ஓய்வுக்குள் நுழைகிறோம். இயேசு கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுகிறார்.
அன்பானவர்களே! இயலாமை மாண்புடன் பேணுதல்' என்பது கிறிஸ்தவர்களாகிய நாமும் நம் திருச்சபையும் நம்மை சார்ந்த சமூகம் இயலாமையாளர்களை சமமாக நடத்த வேண்டும், அவர்களை தனிமைப்படுத்தா மல் அனைவருடன் இணைக்க வேண்டும், அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆக்கப்பூர் வமான திட்டங்களை செயல்ப டுத்த வேண்டும், மேலும் அவர்க ளைப் பற்றி நாம் கொண்டிருக் கும் தவறான எண்ணங்களை மாற்றி, அவர்கள் ஒவ்வொருவ ரும் கடவுளின் படைப்பு என்பதை உணர வேண்டும் என்பதே இந்த தலைப்பில் உள்ள முக்கிய அம்சங்களாகும். கடவுள் நம்மை இம்மக்களை மாண்புடன் நடத்த அருள் புரிவா ராக. ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
Comments
Post a Comment