வழிபாட்டில் கடவுளின் திரு வெளிப்பாடு( 231).Revelation of God in Worship.1அரசர்கள் 8:22-30, திருப்பாடல் 148, திரு வெளிப் பாடு 14:1-7, மாற்கு:3:1-6.

முன்னூரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
"வழிபாட்டில் கடவுளின் திருவெளிப்பாடு". என்ற தலைப்பாகும்.
வழிபாடு என்றாள் என்ன?
What is worship?
வழிபாடு என்பது  கடவுளை  வணங்கி மரியாதை செலுத்து வதாகும்.வழிபடு' என்ற சொல் லிலிருந்து வழிபாடு தோன்றிய து, இதன் பொருள் வணங்கு தல், பின்பற்றுதல், நெறிப்படுத் துதல் என்பதாகும். இறைவனு டன் நெருங்கி வருவதற்கும், இதயத்தின் கதவுகளை இறை வனுக்காகத் திறந்து வைப்பதற் கும் வழிபாடு உதவுகிறது. கடவுளை வணங்குவது என்பது நாம் அவரை முழு இருதயத் தோடும், முழு ஆன்மாவோ டும், முழுமன தோடும், முழுப லத்தோடும் நேசிப்பதாகும்.
உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வா யாக! (இணைச் சட்டம் 6:5)
 நாம் கடவுளை எல்லாவற்றிற் கும் மேலாகப் போற்றி, நம் இதய ங்களில் அவருக்கு முதலிடம் கொடுக்கும்போதுதான். நாம் இறைவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் வழிபட விரும்பினால், நம் இதயங்களிலிருந்து தொடங் க வேண்டும். நாம் கடவுளை இத யத்திலிருந்து நேசிக்கவில்லை என்றால், வேறு எதுவும் முக்கிய மில்லை.
வழிபாடு" (proskuneo) என்று பெரும்பாலும் மொழிபெயர்க்கப் படும் புதிய ஏற்பாட்டு கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "முன் விழுதல்" அல்லது "முன் தலை வணங்குதல்"  “to fall down before” or “bow down before   என்ப தாகும். நமது ஆண்டவர் சமாரிய பெண்ணிடம்,
"காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது! அப்போது உண்மை யாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக் கேற்ப உள்ளத்தில் வழிபடு வர். 
"கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில் தான் வழிபட வேண்டும்" என்றார். (யோவான் நற்செய்தி 4:23,24)
 வழிபாட்டில் முதலில் உதடுக ளின் கனியாகிய தோத்திர பலிகளை அதாவது துதிகளை ஆண்டவருக்கு அளிக்க வேண் டும். உண்மையான வழிபாடு கடவுளைமகிமை ப்படுத்துகி றது. கடவுள் துதிகளின் மத்தி யில் வாசமாய் இருக்கிறார் கடவுளை துதிப்பதே சிறந்த வழிபாடு.
 திரு விவிலியத்தில் முதல் வழிபாடு என்பது காணிக்கை செலுத்துவதில் ஆரம்பிக்கிறது.
(தொடக்க. நூல்:4:3,5). விலங்கு கள் பலி செலத்தப்பட்டன. முதலில் அவர்கள், ஆண்டவர் என்ற திருப்பெயரில் ஆதாமின் மூன்றாம் மகன் சேத்தின் கால த்தில் வழிபாடு தொடங்கியது.(4:26)
 திருத்தூதர் பவுல் அடிகளார் எது வழிபாடு என்பதற்கு: "சகோதர சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்க ளை வேண்டுகிறேன்; கடவுளு க்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையு ங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. (உரோ மையர் 12:1) அதாவது நாம் இறுதிவரை கர்த்தருக் கென்று தூய உயிருள்ள பலியாக இருப் பதே வழிபாடு என்கிறார்.
 அன்பானவர்களே! நமது ஆண்ட வர்  பன்னிரண்டு சீடர்களுக்கு, "என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்" (லூக் 22:19) என்று அடையாளப்படுத் திய நற்கருணையே (Holy Eucharist) நம் வழிபாட்டின் முக்கிய அடையாளமாகும்.
 கடவுளின் திருவெளிப்பாடு என்றால் என்ன? What is God's
Revelation?
 அன்பானவர்களே! கடவுளின் திரு வெளிப்பாடு என்பது 
"கடவுள் தனது தெய்வீக இயல் பை (Divine nature) மனிதகுலத் திற்கு பொதுவான வழிமுறை கள்  வெளிப்படுத்தும் முறை யாகும்." உ. ம்.
1. கடவுளின் வார்த்தை
2. விடுதலைப் பயணம் 
3. ஆண்டவரின் பிறப்பும். உயிர்த் தெழுதலும். இவைகள் மூலம் கடவுள் தன்னை வெளிப்படுத் தினார்.
1.கடவுளின் மகிமையின் வெளிப்பாடு:: The Revelation of God's Glory. 1.அரசர்கள்.8:22-30.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நீதி அரசர் சாலமன் அவர்கள் கடவுளுக்காக முதல் ஆலயத்தை  கி. மு. 957ல் எருசலேமில் கட்டினார். இதை கட்டி முடிக்க 7 ஆண்டுகள் ஆனது. இந்தப் பகுதி சாலமன் அரசர் ஆலயத்தை கட்டி முடித்த பிறகு கடவுளுக்கென்று ஆலய த்தை அர்ப்பணிக்க வேண்டுதல் செய்த பகுதியாகும். சாலொமோன்,ஆலயத்தில்உடன் படிக்கைப் பெட்டியை வைத்து விட்டு, இஸ்ரவேல் சபையார் அனைவருக்கும் எதிராக, கர்த் தருடைய பலிபீடத்திற்கு முன் பாக வானத்தை நோக்கி கைக ளை விரித்து ஜெபிக்கிறார்.
தாவீதின் சந்ததியில் ஒருவன் எப்போதும் இஸ்ரயேலின் அரிய ணையில் இருப்பான் என்ற வாக்குறுதியும், அவன் சந்ததி யே ஆலயத்தை கட்டுவான் என்றஉடன்படிக்கையும்.நிறைவேறுகிறது.
சாலொமோன் கடவுளைப் பற்றி வானத்திலும் பூமியிலும் அவரை ப் போல் யாரும் இல்லை என்று ம், அவர் சர்வவல்லமையுள்ளவர் என்றும் புகழ்கிறார்.கடவுளின் வார்த்தையில் நம்பிக்கை வைத் து அவரை நோக்கி ஜெபிக்க வேண்டும் என்பதை நமக்குக்கற் பிக்கிறது. ஆலய திறப்பிற்கு பிறகு  கடவுளின் பிரசன்னம் இஸ்ரவேலுடன் வாசம்பண்ணத் திரும்பியது (1 இரா. 8:11; 2 நாளாகமம் 7:1) என கூறப்படு கிறது.
தேவாலயம் தேவனுடைய பிரச ன்னத்தைக் கொண்டுவருவதற் கும், இஸ்ரவேல் மக்களை அவரு க்குத் துதிக்கும் ஒரு ஸ்தலமாக இருப்பதற்கும் அவர் வேண்டு கிறார். தேவாலயத்தில் உள்ள இஸ்ரவேல் மக்களை, அவர்கள் தங்களின் பாவங்களை அறிக் கையிடும்போது, அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்கிறார்.மக்கள் செய்யும் தவறுகளையும் பாவங் களையும் மன்னிக்கும்படி கடவு ளிடம் மன்றாடினார். இது பின்ன ர் இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த தியாகத்தை முன்னறி வித்ததாகக் கருதப்படுகிறது, இது அனைத்துப் பாவங்களுக் குமான பரிகாரமாகும். ஒரு அரசர் தான் கட்டிய ஆலயத்தில் தன் கடவுளிடத்தில் தன் மக்க ளுக்காக வேண்டுவதை பார்க்கி ன்றோம். ஆலயம் நம் கூடுகை. நம் வேண்டுதலின் இருப்பிடம் நம் விண்ணப்பங்களை ஏறெ டுக்க இதைவிட சிறந்த இடம் இல்லை என்பது தான் உண்மை கடவுள் தன்னை இங்கு வெளிப் படுத்துகிறார் நாம் துதிக்கின்ற பொழுது அவர் ஆற்றல் ஆவியா ல் நம்மை நிரப்புகின்றதை காண்கின்றோம் ஆலயம் விசு வாசிகளின் கூடுகை தொடர்ந்து செல்வோம் வேண்டுதலை வைப்போம் ஆசிர் பெறுவோம்.
2. நியாய தீர்ப்பின் வெளிப் பாடு.The Revelation of the Day of Judgement. திருவெளிப்பாடு: 14:1-7.
 கிறிஸ்துவுக்குள் பிரியமாண வர்களே! புதிய ஏற்பாட்டில் உள்ள ஒரே தீர்க்கதரிசன புத்தகம் வெளிப்படுத்துதல் மட்டுமே. இந்த வெளிப்படுத்து தல் என்பது வேதாகமத்தின் மூலக்கல்லாகும்.திருவெளிபாடு இயேசு கிறிஸ்துவை வெளிப் படுத்துவதாகும்.(அப்போகா லிப்ஸ்)Apocalypse a Cave in Patmos Island in which St. John received the vision from Jesus Christ about his second coming and the end time incidents) கிரேக்க மொழியில் இதன் பொருள் மறைக்கப்பட்டதை வெளிப்படுத் துதல் என்பது ஆகும். இப்புத்தக த்தை இயேசு கிறிஸ்துவின் அன்பான சீடரான திருத்தூதர் யோவான் அவர்கள் கி.பி 95-96 ஆம் ஆண்டில், ரோமானியப் பேரரசர் டொமிஷியனின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டி ருக்கலாம் என்கின்றனர். .எபேசு நகரில் இருந்து 100 கி. மி தூரத் தில் (60 மைல்) உள்ள ஏஜியன் (ஏஜியன் கடல் என்பது ஐரோப் பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான மத்தியதரைக் கடலின் நீளமான ஒரு நீர்த்தேக் கமாகும்) கடலில் உள்ள பத்மோ ஸ் ( Patmos) தீவில் திருத்தூதர்  யோவான் , " ஆசியாவின் ஏழு தேவாலயங்களுக்கு " கிறிஸ்து வின் அறிவுரைகளுடன் கடிதங்க ளாக உரையாற்றுவதில் தொடங் குகிறது.
சீயோன் மலையின் மேல் ஆட்டு க்குட்டியானவருடன் ( இயேசு) இருக்கும் கர்த்தருடைய பரிசுத்த வான்கள் 1,44,000 பேரின் தரிசன த்தையும், அவர்களுக்குப் பிறகு மூன்று தேவதூதர்கள் அறிவிக் கும் செய்திகளையும் விவரிக் கிறது. இந்தத் தரிசனம் கடவுளி ன் இறுதித் தீர்ப்பு மற்றும் அதன் நிமித்தம் இரட்சிக்கப்பட்டவர்க ள் பற்றிய தகவலைத்தருகிறது. 
 இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவின் நாமம் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டு இருக்கி றது. இவர்கள் உபத்திரவங்கள் வழியாக வந்தவர்கள் இவர்களு க்கு வந்த உபத்திரவம் இவர்க ளை சேதப்படுத்தவில்லை என்ப தை நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். ஆட்டுக்குட்டியானவர் ஆகிய இயேசு கிறிஸ்துவோடு நிற்கிற இவர்கள் சிங்காசனத்தி ற்கு முன்பாகவும் நான்கு ஜீவன் களுக்கு முன்பாகவும் மூப்பர்க ளுக்கு முன்பாகவும் புது பாட்டை பாடினார்கள். அவர்கள் பாடுகிற சத்தம் பெருவெள்ளத்து இறைச் சல் போலவும் இடி முழக்கத்தின் சத்தத்தை போலவும் இருக்கி றது. அந்த சத்தம் சுரமண்டலகா ரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிப்பதைப் போல இருக்கி றது.
பரலோகத்தில் பரிசுத்தவான்கள் கர்த்தரைப் பாடித் துதிக்கிறார் கள். பூமியில் இருந்து ஏராள மான பரிசுத்தவான்கள் மீட்கப்ப ட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இந்தப் புது பாட்டை பூமியிலிருந் து மீட்டெடுக்கப்பட்ட லட்சத்து 44 ஆயிரம் பேர்களைத் தவிர மற்ற எவராலும் கற்றுக் கொள்ள முடிய வில்லை
இந்த லட்சத்து 44 ஆயிரம் பேரை பற்றி யோவான் எழுதுகிறார். அவர்கள் பரிசுத்தமும் கற்பும் உள்ளவர்கள். ஸ்திரீகளால் தங்க ளை கரைபடுத்திக் கொள்ளவில் லை. இவர்களிடத்தில் மாம்சபிர காரமான விபச்சாரமோ அல்லது ஆவிக்குரிய விபச்சாரமோ காணப்படவில்லை. விபச்சாரத்தினால் தங்களை கரை படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.இவர்கள் மனுச ரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக் குட்டியானவர்க்கும் முதற் பலனா க மீட்டு கொள்ளப்பட்டவர்கள். இப்படிப்பட்ட விசேசித்த மகிமை யும் கனமும் இந்த லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு இருக்கிறது. தேவனுக்கும் ஆட்டுக்குட்டியான வருக்கும் இன்னும் ஏராளமான பரிசுத்தவான்கள் மீட்டு கொள்ள ப்படுவார்கள். அனேகர் மீட்டுக் கொள்ளப்படுவதற்கு இவர்கள் முதல் பலனாக அதாவது அச்சா ரமாக இருக் கிறார்கள்..
பாபிலோனின் அழிவைப் பற்றி அறிவிப்பதற்கு வானத்திலிரு ந்து மூன்று தூதர்கள் அனுப்பப் படுகிறார்கள். அவர்களில் முதலாவது தூதன் வானத்தின் மத்தியில் பறந்து வருவதை யோவான் காண்கிறார். பாபி லோன் அழிவதற்கு முன்பாக தேவனுடைய நற்செய்தி அறிவி க்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து வின் சுவிசேசம் நித்திய சுவிசே சம் ஆகும் இயேசு கிறிஸ்துவின் நித்திய சுவிசேசத்தை பிரசங்கம் பண்ணுவதற்கு தூதர்கள் தகுதி உள்ளவர்களாய் இருக்கிறார் கள். முழு உலகத்தாரும் நித்திய சுவிசேசத்தை கவனித்து கேட்க வேண்டும். சுவிசேசத்தில் சொல் லப்பட்டிருக்கும் சத்தியத்தைக் கேட்டு அதற்கு கீழ்ப்படிய வேண் டும்.
இறுதியாக, தீர்ப்பின் நாள் வருவதற்கு முன்பாக (The Day of Judgement,) "கடவுளுக்கு அஞ்சுங் கள்; அவரைப் போற்றிப் புகழு ங்கள். ஏனெனில் அவர் தீர்ப்பளி க்கும் நேரம் வந்துவிட்டது. மண், கடல், நீரூற்றுகள் ஆகியவற்றை ப் படைத்தவரை வணங்குங்கள்" என்று அவர் உரத்த குரலில் கூறி னார். (திருவெளிப்பாடு 14:7.) எனவே, நியாயத் தீர்ப்பின் வெளிப்பாட்டிற்காக நாம் தயாரா குவோம்.
3.மனிதகுலத்தின் மீது அன்பை வெளிபடுத்தல்.The Revelation of love toward mankind.(மாற்கு 3:1-6)
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இயேசுவுக்கும் யூத மரபு வழி தலைவர்களுக்கும் இடை யே நிறைய கருத்து வேறுபாடு கள் இருந்தன.ஆனாலும்,அவர் மீண்டும் ஜெப ஆலயத்திற்குள் செல்வது ஒரு துணிச்சலான காரியம்.ஜெப ஆலயத்தில், முன் இருக்கைகள் மரியாதைக்குரிய இருக்கைகளாக இருந்தன,  அங்கே சனகெரிசங்கத்தினர் அமர்ந்திருந்தார்கள்.இயேசுவின் ஒவ்வொரு செயலையும் ஆராய அவர்கள் அங்கு இருந்தனர்.
ஜெப ஆலயத்தில் கை செயலி ழந்த (a paralysed hand.) ஒரு மனிதன் இருந்தான்.
(The gospel according to the Hebre ws,  which is lost except for a few fragments, tells us that the man was a stone mason *William Barclay) 
சில நற்செய்திகள், அந்த மனிதன் ஒரு கல் தொழிலாளி என்றும், இயேசுவிடம் உதவி கேட்டதாகவும், ஏனென்றால் அவருடைய வாழ்வாதாரம் அவ ருடைய கைகளில் இருந்தது என் றும், அவர் பிச்சை எடுக்க வெட் கப்பட்டார் என்றும் நமக்குச் சொல்கிறது. இயேசு ஒரு எச்சரி க்கையான, விவேகமுள்ள நப ராக இருந்திருந்தால், அந்த மனிதனைப் பார்க்காமல் இருக் க வசதியாக ஏற்பாடு செய்திருப் பார், ஏனென்றால் அவரைக் குணப்படுத்துவது பிரச்சனை யைக் கேட்பது என்று அவருக் குத் தெரியும். ஓய்வு நாள்; எல்லா வேலைகளும் தடை செய் யப்பட்டன, குணப்படுத்துவது வேலை செய்வதாகும். யூத சட்டம் இதைப் பற்றி திட்டவட் டமாகவும் விரிவாகவும் இருந் தது. எனவே குணப்படுத்த கூடாது.
 ஓய்வு நாளில் செய்ய அனும திக் கப்பட்ட சில வேலைகள்: what are the works allowed on the Sabbath?
 அன்பானவர்களே! கீழ்க்கண்ட வேலைகள் சில கட்டுப்பாடு களுடன் அனுமதிக்கப்பட்டன 
1.ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே மருத்துவ உதவி வழங்க முடியும். 
.2. பிரசவத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஓய்வுநாளில் உதவி செய்யப்படலாம்;   
3 தொண்டையில் ஏற்பட்ட தொற் றுக்கு சிகிச்சை அளிக்கப்பட லாம்; 
4.யார் மீதாவது சுவர் விழுந்தால், அவர் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்ப தைப் பார்க்க போதுமான அளவு சுத்தம் செய்யப்படலாம்;
5.அவர் உயிருடன் இருந்தால் அவருக்கு உதவி செய்யப்பட லாம், அவர் இறந்துவிட்டால் உடலை மறுநாள் வரை விட வேண்டும்.
6 எலும்பு முறிவை கவனிக்க முடியாது. சுளுக்கு ஏற்பட்ட கை அல்லது காலில் குளிர்ந்த நீரை ஊற்றக்கூடாது
7.வெட்டப்பட்ட விரலை ஒரு சாதா ரண கட்டு கொண்டு கட்டலாம், ஆனால் களிம்பு பூசக்கூடாது. 
8.ஒரு கண்டிப்பான யூதர் ஓய்வுநாளில் தனது உயிரைக் கூட தற்காத்துக் கொள்ள மாட்டார். உ. ம்.
1.மக்காபீஸின் போர்களில், எதிர்ப்பு வெடித்தபோது, ​​சில யூத கிளர்ச்சியாளர்கள் குகைகளில் தஞ்சம் புகுந்தனர். சிரிய வீரர் கள் அவர்களைப் பின்தொடர்ந்த னர். யூத வரலாற்றாசிரியரான ஜோசபஸ், அவர்கள் சரணடைய வாய்ப்பு அளித்தனர், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில் லை என்று கூறுகிறார், எனவே "சிரியர்கள் ஓய்வுநாளில் அவர் களுடன் சண்டையிட்டனர், மேலும் குகைகளில் இருந்தப டியே யூதர்களை எரித்தனர், எதிர்ப்பு இல்லாமல், குகைக ளின் நுழைவாயில்களை கூட தடுக்காமல். அந்த நாளில் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள மறுத்துவிட்டனர், ஏனென்றால் அத்தகைய துன்பத் திலும் கூட, ஓய்வுநாளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை யை உடைக்க அவர்கள் தயாராக இல்லை; ஏனென்றால் அந்த நாளில் நாம் ஓய்வெடுக்க வேண் டும் என்று எங்கள் சட்டம் கூறுகி றது என்பதை நிரூபித்தனர்." 
2. ரோமானிய தளபதி பாம்பே எருசலேமை முற்றுகையிட்ட போது, யூத ​​பாதுகாவலர்கள் கோவில் வளாகத்தில் தஞ்சம் புகுந்தனர். பாம்பே ஓய்வு நாளில் யூதர்கள் சண்டை போட மாட்டார்கள் என்பதை அறிந்திரு ந்தார், எனவே, ஒரு மேடான தடுப்பை ஓய்வுநாளில் கட்டி னார், யூதர்கள் தங்களைப் பாது காத்துக் கொள்ளவோ ​​அல்லது கட்டிடத்தைத் தடுக்கவோ ஒரு கையை கூட உயர்த்தவில்லை, இருப்பினும் அவர்களின் ஓய்வு நாளின் செயலற்ற தன்மையால் அவர்கள் தங்கள் சொந்த மரண உத்தரவில் கையெழுத்திடு கிறார்கள் என்பதை அவர்கள் செய்து காட்டினார் . 
3 கட்டாய இராணுவ சேவையை க் கொண்டிருந்த ரோமானியர் கள், இறுதியில் யூதர்களை இராணுவ சேவையிலிருந்து  ஓய்வு நாளில்  விலக்கு அளிக்க வேண்டியிருந்தது, ஏனெனில் எந்த கடுமையான யூதரும் ஓய்வு நாளில் சண்டையிட மாட்டார்கள். ஓய்வுநாளைப் பற்றிய மரபுவழி யூத அணுகுமுறை முற்றிலும் கடுமையானதாகவும், வளைந்து கொடுக்காததாகவும் இருந்தது.
 இவைகள் எல்லாம் இயேசுவு  க்கு  தெரியும். இந்த மனிதனின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. நாளை வரை அவரை விட்டுவிட்டால் உடல் ரீதியாக அவர் மோசமாக இருக்க மாட் டார். இயேசுவுக்கு இது ஒரு சோதனையான சூழ்நிலை, அவர் அதை நியாயமாகவும் வெளிப்படையாகவும் எதிர் கொண்டார். அந்த மனிதனை எழுந்து, தனது இடத்தை விட்டு வெளியே வந்து, அனைவரும் தன்னைப் பார்க்கக்கூடிய இடத்தில் நிற்கச் சொன்னார். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். பாதிக்கப்பட்ட மனிதனின் பரிதாப நிலையை அனைவருக்கும் காட்டி, அவருக்கு அனுதாபத்தைத் தூண்டுவதற்கு இயேசு கடைசி முயற்சியை மேற்கொள்ள விரும் பினார். தான் எடுக்கப் போகும் நடவடிக்கையை யாரும் பார்க் காமல் இருக்க முடியாத வகை யில் எடுக்க இயேசு நிச்சயமாக விரும்பினார்.
 ஓய்வு நாளில் நன்மை செய்வதால் தீமை செய்வதா?
 அன்பானவர்களே ஆண்டவர் 
 சட்ட வல்லுநர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார். ஓய்வுநாளில் நன்மை செய்வது சட்டபூர்வமானதா அல்லது தீமை செய்வது சட்டபூர்வமானதா? அவர்களை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தினார். நன்மை செய்வது சட்டபூர்வமானது என்பதை அவர் கள் ஒப்புக்கொள்ள வேண்டியி ருந்தது; அது அவர் செய்ய முன் மொழிந்த ஒரு நல்ல காரியம். தீமை செய்வது சட்டபூர்வமானது என்பதை அவர்கள் மறுக்க வேண்டியிருந்தது; ஆனாலும், ஒரு மனிதனுக்கு உதவி செய்ய முடிந்தபோது அவனை துயரத் தில் ஆழ்த்துவது நிச்சயமாக ஒரு தீய காரியம். பின்னர் அவர் கேட்டார், ஒரு உயிரைக் காப்பா ற்றுவது சட்டபூர்வமானதா அல்லது அதைக் கொல்வது சட்டபூர்வமானதா? இங்கே அவர் அந்த விஷயத்தை அவர்கள் சிந்திக்க செய்தார்  . இந்த துரதிர்ஷ்டவசமான மனிதனின் உயிரைக் காப்பாற்ற அவர் நடவடிக்கை எடுத்துக்கொண்டி ருந்தார்; அவர்கள் தன்னைத் தானே கொல்லும் முறைகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந் தனர். எந்தவொரு கணக்கிலும், ஒரு மனிதனைக் கொல்ல யோசிப்பதை விட ஒரு மனிதனு க்கு உதவுவது பற்றி யோசிப்பது நிச்சயமாக ஒரு சிறந்த விஷயம். அவர்களுக்கு எதுவும் சொல்ல முடியாததில் ஆச்சரியமில்லை!
பின்னர் இயேசு தனது வல்லமை யுள்ள வார்த்தையால் அந்த மனி தனைக் குணப்படுத்தினார்; பரிசேயர்கள் வெளியே சென்று ஏரோதியருடன் சேர்ந்து அவரை க் கொல்ல சதித்திட்டம் தீட்ட முயன்றனர். இது பரிசேயர்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதைக் காட்டுகிறது. பொதுவாக எந்தப் பரிசேயரும் ஒரு புறஜாதியாரோ அல்லது சட்டத்தைக் கடைப்பிடிக்காத ஒரு மனிதரோடு எந்தத் தொடர்பும் வைத்திருக்க மாட்டார்கள்; அத்தகைய மக்கள் அசுத்தமான வர்கள். ஏரோதியர்கள் ஏரோதின் நீதிமன்றப் பரிவாரங்கள், தொட ர்ந்து ரோமர்களுடன் தொடர்பு கொண்டு வந்தனர். எல்லா சாதாரண நோக்கங்களுக்காக வும் பரிசேயர்கள் அவர்களை அசுத்தமாகக் கருதியிருப்பார் கள்; ஆனால் இப்போது அவர்கள் தங்களுக்கு ஒரு புனிதமற்ற கூட்டணியில் நுழையத் தயாராக இருந்தனர். அவர்களின் இதய ங்களில் ஒரு வெறுப்பு இருந்தது, அது ஒருபோதும் நிற்காது.
மதம் என்பது என்ன? What is the Religion?
 அன்பானவர்களே மதம் என்பது
 பரிசேயருக்கு  சடங்கு; அது சில விதிகள் மற்றும் விதிமுறைகளு க்குக் கீழ்ப்படிவதைக் குறிக் கிறது. இயேசு இந்த விதிமுறை களை மீறினார், அவர் ஒரு கெட்ட மனிதர் என்று அவர்கள் உண் மையிலேயே நம்பினர்கள்.   
 இயேசுவுக்கு மதம் என்பது சேவை. அது கடவுள் மீதான அன்பும் மனிதர்கள் மீதான அன்பும் ஆகும். செயலில் உள்ள அன்போடு ஒப்பிடும் போது சடங்கு பொருத்தமற்றது.
 அன்பானவர்களே மதம் என்பது சக மனிதர்களை நேசிப்பதே மதம். மனித நேயத்திற்காகவே கடவுள் தன்னை இவ்வுலகில் வெளிப்படுத்தினார் அவ்வழி யில் நாமும் மனித நேயத்தை காப்போம் மனிதநேய மதம் வளர உழைப்போம். அவ்வழி யில் செல்ல கடவுள் நமக்கு அருள் புரிவாராக ஆமென்.


Prof. Dr. David Arul Paramanandam
Sermon writer.

www.davidarulblogspot.com
www.davidarulsermoncentre.


Note: This message has been prepared to deliver at CSI Alison Cassie Memorial Church, Chengalpet. on 19th October, 2025.



.


.

John the Apostle
The Apostle Saint John Evangelist by Peter Paul Rubens (c. 1611
Source: The Wiki.



Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.