கடவுளின் இறையாண்மை, நீதி மற்றும் அமைதியை கொண்டா டுதல்.( 232) Celebrating God's Sovereignty, Justice and Peace. விடுதலைப் பயணம்: 7:1-7 திருப்பாடல்கள்: 89: 1-18, உரோமையர்: 13:1-7, யோவான் 18: 33-38. சீர்திருத்த ஞாயிறு
முன்னுரை:கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரம் சீர்திருத்த ஞாயிறு (Refornation Sunday) தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
"கடவுளின் இறையாண்மை, நீதி மற்றும் அமைதியை கொண்டாடுதல். Celebrating God'd Sovereignty, Justice and Peace."
கடவுளின் இறையாண்மை என்றால் என்ன? What is God's Sovereignty?
நண்பர்களே! கிறிஸ்தவத்தில் கடவுளின் இறையாண்மையை , கடவுள் தனது படைப்புகளின் மீது தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை என்று கூறலாம் . இறையாண்மை என்பது கடவுள் தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தையும் உள்ளடக்கியது. The right of God to exercise his ruling power over his Creation.
கடவுளின் இறையாண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் காண்பது, ஆபிரகாமின் சந்ததி யினர் 400 ஆண்டுகள் அந்நிய தேசத்தில் வாழ்வார்கள் என்றும், பின்னர் ஏராளமான சொத்துக்க ளுடன் வெளியே வருவார்கள் என்றும் கடவுள் கூறுகிறார் (தொடக்க நூல். 15:13,14). யோசேப் தனது சகோதரர்களா ல் அடிமைத்தனத்திற்கு விற்கப் பட்டு, எகிப்தில் ஒரு சக்திவாய் ந்த ஆட்சியாளராக உயர்ந்தார், இறுதியில் தனது குடும்பத்தின ரையும் மற்றவர்களையும் பஞ்சத் திலிருந்து காப்பாற்றினார், இதன் மூலம் அவரது சகோதர ர்கள் அவரை வணங்குவதாக ஒரு தீர்க்கதரிசனத்துடன் தொடங்கிய ஒரு தெய்வீக திட்ட த்தை நிறைவேற்றினார். இது கடவுள் தனது இறுதி நோக்கத் தை அடைய எதிர்மறையான மனித செயல்கள் மூலம் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கிறது.
சங்கீதக்காரன் கூறுவது போல "நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி (இறையாண்மையின்படி) அனைத்தையும்; செய்கின்றார்."
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 115:3)என்கிறார்.
அன்பர்களே! ஜான் கால்வின் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்க த்தின் முக்கிய நபர்களில் ஒருவரான பிரெஞ்சு நாட்டின் தலைசிறந்த இறையியல் வல்லுநரும் .மற்றும் சீர்திருத்த வாதி ஆவார். இவரின் கூற்றுப் படி இறையாண்மை என்பது, "
"கடவுளே அனைத்துக்கும் மேலானவர் என்றும், மனித இரட்சிப்பில் அவரது இறை யாண்மையே முழுமையானது என்றும் வலியுறுத்துகிறது. இந்தக் கொள்கையின்படி, அரசு என்பது கடவுளின் இறையா ண்மையின் ஒரு வெளிப்பா டாகும்.(Calvanism).என்றார்.
சீர்திருத்த இயக்கத்தின் தந்தை யான மார்ட்டின் லூதரின் இறையாண்மைக் கொள்கை என்பது, "கடவுளின் இறையாண் மையில் நம்பிக்கை வைப்பது. மனிதனின் செயல்களை விட, கடவுளின் கருணையில் நம்பிக்கை வைப்பதே இரட் சிப்புக்கு முக்கியம் என்று அவர் நம்பினார்.
ஆக கடவுளின் இறையாண்மை என்பது நீதி மற்றும் அமைதியை அடிப்படையாகக் கொண்டது இது ஒவ்வொரு தனி மனிதருக் குமானதும், உலகத்திற்கும் மிக அவசியமான பொதுநீதி மற்றும் உலக அமைதியை வலியுறுத்து கிறது.
1. விடுதலை கடவுளின் இறை யாண்மையாகும். Liberation is the Sivereignty of God. Exodus. விடுதலைப்பயணம் 7:1-7.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கடவுளின் முக்கிய இறை யாண்மை என்பது விடுதலை ஆகும். அவர் எல்லா அடிமைத்த னத்தையும் வெறுக்கிறார். விடுதலை மூலம் நீதி நிலை படுத்தப்படுகிறது அமைதி உருவாகிறது. மனிதன் சுயமாக, சுதந்திரமாக வாழ விரும்புகிறார் எனவே தான் 430 ஆண்டுகள் அடிமையாய் இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய தன் மாபெரும் இறையாண்மை பணியை முதன் முதலில் இவ் வுலகில் செய்கிறார்.
அன்பானவர்களே விவிலியத் தில் ஒரே ஒரு மனிதனை கர்த் தர் "கடவுள்" என்ற அதிகாரத் தை அதாவது இறையான்மை யை கொடுக்கிறார். அது யார் என்றால், இறை வாக்கினர் மோசஸ் என்ற மாபெரும் விடுத லை வீரர் ஆவார்.
(வழக்காடு மன்றங்களில் கூட நீதிபதிகள், கடவுளின் பிரதிநி திகள் (vicegerents) என்பதால், அவர்கள் தெய்வங்கள் (Lords) என்று அழைக்கப்படுகிறார்கள்.) ஆண்டவர் மோசேயை நோக்கி, "பார், நான் உன்னைப் பார்வோ னுக்குக் கடவுளாக வைத்துள் ளேன். உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான்.
(விடுதலைப் பயணம் 7:1) என்றார்.இதன் அர்த்தம் மோசே தெய்வீகமாக மாறுகிறார் என்பதல்ல, மாறாக எகிப்திய ராஜாவுக்கு கடவுளின் பிரதிநிதி யாகச் செயல்பட அவருக்கு தெய்வீக அதிகாரமும் சக்தியும் வழங்கப்பட்டுள்ளது என்பதாகும். Moses as a god-like figure but not God.இது மோசேக்கு பார்வோனுக்குக் கட்டளையிட வும், நிகழ்வுகளைக் கட்டுப்படுத் தவும் அதிகாரம் அளிக்கிறது, அவரை அவன் மீது அதிகாரப் பதவியில் அமர்த்துகிறது.
மோசே "பேச்சுத் திறனில் மெது வாக இருப்பவர்" என்றும் "உதடுகளில் விருத்தசேதனம் செய்யப்படாதவர்" (uncircumcised in lips") (Exodus 6:12 (யாத்திராகமம் 6:12, 30) என்றும் வாதிடும்போது, கடவுள் இந்த பகுதியில் அவரது கவலை களைப் பற்றி பேசுகிறார்.மோசே யின்பேச்சாளராக(mouthpiece)ஆரோனை நியமிப்பதாக கடவுள் மீண்டும் கூறுகிறார். மோசே கடவுளின் வார்த்தைகளைப் பெற்று, அவற்றை பார்வோனி டம் ஒப்படைக்க ஆரோனுக்கு அறிவுறுத்துவார். அவர்கள் பார் வோன் முன் தோன்றும் போது மோசேக்கு 80 வயதும் ஆரோனு க்கு 83 வயதும் இருந்தது. இது கடவுளின் நோக்கமும் அவரின் இறையாண்மையுமாக இஸ்ர வேலர்களுக்கும், எகிப்தியர்களு க்கும் தம்மையே பேரரசராக
(the sovereign Lord) வெளிப்படு த்த வேண்டும் என்ற கடவுளின் நோக்கமே ஒரு முக்கிய கருப் பொருளாகும். இரண்டு நாட்டினருக்கும் தம் இறையா ண்மையை கடவுள் வெளிப்படு த்துகிறார். முதலாவதாக
இஸ்ரவேலர்களுக்கு கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம், அவர்களை அடிமைத்தனத் திலிருந்து விடுவிப்பதன் மூலம் தம்முடைய வல்லமையை நிரூபிக்கிறார். இரண்டாவதாக,
எகிப்தியர்களுக்கு, கடவுள் தம்முடைய கோபத்தைப் பயன் படுத்தித் தம்மை உண்மையான கடவுளாக வெளிப்படுத்தி, அவர் களுடைய பொய்யான சிலைக ளை வெற்றிகொண்டார். அதற்காக, கடவுளின் பத்து வாதைகள் (theTen Plagues of God) என்பவை, அடிமைகளான இஸ்ரவேலர்களை எகிப்திலிரு ந்து விடுவிப்பதற்காகவும், பாரோவை வெற்றிக்கொள்ள கடவுளால் எகிப்தின் மீது அனுப் பப்பட்ட பத்து பேரழிவுகளாகும். ஆண்டவர், இதயங்களின் மீது இறையாண்மை உடையவராய், பார்வோனின் இதயத்தின் மீது அவரின் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறார்.
மோசேயும் ஆரோனும் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்கிறார் கள் என்பதை உறுதிப்படுத்து வதோடு, அவரின் இறையாண் மையை வெளிப்படுத்துவதின் மூலம் இஸ்ரவேலரின் விடுத லையை உறுதிப்படுத்துகிறது.
2. திருச்சபை அமைதியை கொண்டாடுதல். The church should celebrate Peace.
உரோமையர்: 13:1-7.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே திருத்தூதர் பவுல் அடிகளா ர் ரோமாபுரிக்கு செல்வதற்கு முன்பாக இத்திருமுகத்தை எழுதியிருக்கிறார். ஏனென்றால் அங்கு ஏற்கனவே கிறித்தவர்கள் வாழ்ந்திருந்தார்கள்( Acts . 2:10) இவருக்கு முன்பாகவே பல நற்செய்தியாளர்கள் அங்கு சென்று இறைச் செய்தியை பரப்பி.உரோம திருச்சபை உருவாக்கப்பட்டது.
ஏன் திருத்தூதர் பவுல் அடிக ளார் ரோம திருச்சபைக்கு இத்திருமுகத்தை எழுதினார்?
Why should St. Paul write this epistle to Romans?
அன்பானவர்களே திருத்தூதர் பவுல் அடிகளார் காலத்தில் ரோம திருச்சபையில் யூத கிறித் தவர்களும் புற இனத்து கிறித் தவர்களும் இருந்தனர். ரோம பேரரசர் கிளாடியஸ் சீசர் Claudius Cesar (கிளாடியஸ் ரோமின் நான் காவது பேரரசர் . அவர் பதின் மூன்று ஆண்டுகள் (கி.பி. 41 முதல் 54 வரை) ஆட்சி செய்தார். திருத்தூதர்கள் புத்தகத்தில் அவரது பெயர் இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது) ரோமாபுரியில் இருந்த அனை த்து யூதர்களையும் வெளியேற் றினார் (expulsion) இதன் கார ணமாக ரோம திருச்சபைகள் புற இனத்தவர்களின் பழக்க வழக் கங்களுக்கு உட்பட்டு இருந்தன. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் யூதர்கள், மற்றும் யூத கிறித்தவர்கள் ரோமாபுரிக்கு திரும்பஅனுமதிக்கப்பட்டனர்.
புற இனத்து கிறிஸ்தவர்களு க்கு ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டுமா, கோசர் (Kosher) என்ற யூத மத உணவை எவ் வாறு உண்பது என்ற ஐயமும், விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டுமா என்ற யூத கொள்கைகள் அவர்களை குழப்பின. இதனால் திருச்சபை யில் பிரிவினைகள் ஏற்பட்டன பிளவுகள் ஏற்பட்டன. அமைதி அற்ற சூழலில் திருச்சபையில் இருந்தன. இவைகளை திருத் தூதர் பவுல் அடிகளார் தன் பயணத்திற்கு முன்பாக அவர்க ளுக்கு விளக்கமாக இறையியல் படி எடுத்துரைத்தார்.
பவுல் ரோமாபுரிக்குச் செல்ல வேண்டும் என்ற நீண்டகால லட்சியத்தைக் கொண்டிருந்தார்
ரோமானிய திருச்சபையில் யூத மற்றும் புற இனத்து கிறித்தவர் களை ஒன்றிணைக்கவும், தனது , ரோம பயணத்திற்கு முன்பே, தயாராகவும், நற்செய்தி மற்றும் அவரது இறையியல் பற்றிய முழுமையான விளக்க த்தை முன்வைக்கவும் புனித பவுல் ரோமர்களுக்கு நிருபத்தை எழுதினார் .
ஸ்பெயினுக்கான தனது எதிர் காலப் பணிக்கான தளமாக ரோமானிய தேவாலயத்தைப்
கட்டமைக்க விரும்பினார்.(A base for his future mission to Spain)
விசுவாசிகள் எவ்வாறு வாழ வேண்டும், ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த நடை முறை அறிவுறுத்தல்களுடன் பவுல் இதை அவர்களுக்கு எழுது கிறார். திருச்சபைகள் கிறிஸ்து வின் அமைதியை நிலை நிறுத் தும் ஒரு இடம். திருச்சபைக்கு வழிபாட்டிற்கு வரும் விசுவாசி கள் உள்ளத்தில் அமைதி நிறை ந்தவர்களாக மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லங்களுக்கு செல்வதாக திருச்சபைகளும் அதன் உபதேசங்களும் இருக்க வேண்டும்.அமைதி ஏற்படுத்து வோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். (மத்தேயு நற்செய்தி 5:9)
3. நீ யூதர்களின் அரசனா? Are you the King of Jews? யோவான் 18:33-38.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! நீர் யூதர்களின் அரசனா? என ஆண்டவரிடம் கேட்டது ரோம ஆளுநர் பொந்தியு பிலாத்து.இந்த கேள்வி இயேசு சிலுவையில் அறையப்படுவத ற்கு முன்பு கேட்கப்பட்டது, மேலு ம் இது அவரது அதிகாரத்தையு ம் ஆட்சியையும் குறிப்பதாக இருந்தது. இதற்கு நமது ஆண்ட வருடைய பதில்,பல விதமான பதில்களை அளித்ததாக நான்கு நற்செய்திகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
நற்செய்தியாளர்கள், மத்தேயு, மாற்கு, லூக்கா இம்முவரும், "நீ அப்படிச் சொன்னாய்" என்று பதில் வரும். ஆனால் யோவான் நற்செய்தியாளர், இயேசு, "என் அரசு இவ்வுலகத்திற்குரிய
தல்ல" என்று பதிலளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இக் கேள் வியின் பின்னணி என்ன
வென்றால், யூத மதத் தலைவர் கள் இயேசுவை "இஸ்ரவேலின் ராஜா" என்று கேலி செய்ததாக வும், அவர் சிலுவையிலிருந்து இறங்கி வந்தால் அவரை நம்பு வோம் என்றும் கூறியதாக (மத்தேயு 27:42) இல் குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் மூலம், இயேசுவின் அதிகாரத்தையும் ஆட்சியையும் கேலி செய்ததா கக் கருதப்படுகிறது. உண்மை யில் ஆளுநரின் கேள்வி ஒரு மரியாதைக்குரிய கேள்வி யாகும்.
அன்பானவர்களே! திருவிவிலி யத்தில் கடவுள் கேட்ட முதல் கேள்வி, "ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? (தொடக்க நூல். 3:9). அவ்வாறே, புதிய ஏற்பாட்டி ல் கேட்கப்பட்ட முதல் கேள்வி, "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே"? என்றுகிழக்கிலிருந்து ஞானிகள் அவரைத் தேடி எருசலேமிற்கு வந்து, கேட்ட முதல் கேள்வியா கும். இறைவாக்கினர் மீக்கா அவர்கள் "நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதா வின் குடும்பங்களுள் மிகச் சிறி யதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர்; உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக்காலமாய் உள்ள தாகும். (மீக்கா 5:2)
ஆக ஆண்டவர் இவ்வுலகில் இஸ்ரேயலின் அரசராகத்தான் தோன்றினார். எனவே பிலாத் துவின் கேள்வி மிகப் பொருத்த மானதே. அது உண்மை என்ப தை இதே பிலாத்து மூன்று மொழிகளில் எபிரேயம், இலத்தின், கிரேக்கம் "நாசரேத் இயேசு யூதருடைய அரசர்" என சிலுவையில் எழுதி வைத்தான்.அதுமட்டுமல்ல, அனேக தருணங்களில் யூதர்கள் அவரை அரசராக்கும்படிக்கு முயன்றார்கள் என்பதை நாம் காண்கிறோம்.
இயேசுவின் அரசு இவ்வுல கின் அரசா?
அன்பானவர்களே! இயேசுவின் அரசு இவ்வுலகத்திற்கு உரிய தல்ல. "என் அரசு இந்த உலகத்திற்குரியது அல்ல" என்று இயேசுவே கூறியுள்ளார், ஏனெனில் அது உலக அரசுகள் போன்றதல்ல. இயேசுவின் அரசு என்பது ஆன்மீகமானது,
உண்மை, நீதி மற்றும் இரக்கத் தை அடிப்படையாகக் கொண் டது என்றார்.
பிலாத்து கேட்ட கேள்விக்கு,
இயேசு, தனது ஊழியர்கள் தம்மைக் கைது செய்யவிருந்த யூதர்களிடம், "என் அரசு இவ்வுல கத்திற்குரியதாக இருந்திருந் தால், என் ஊழியர்கள் சண்டை யிட்டிருப்பார்கள். ஆனால் என் அரசு உலகத்திலிருந்து வரவி ல்லை" என்று விளக்கினார்
பிலாத்து நல்லவனா?
அன்பர்களே! பிலாத்து நியாய, தர்மங்களில் அக்கறை கொண் டுள்ள நடுநிலையான மனிதர் என தெரிகிறது. இயேசுவிடம் எந்த குற்றத்தையும் காணாத பிலாத்து, அவரை தண்டிக்க விரும்பவில்லை. இயேசுவுக்கு தண்டனை அளிப்பது தொடர்பா ன பொறுப்பிலிருந்து அவர் நழுவுகிறார். தண்டனை குறித்து யூத மக்களையே தீர்மானிக்கு மாறு கூறுகிறார். பாஸ்கா பண்டி கைக்காக ஒருவரை விடுதலை செய்யும் அதிகாரத்தை வைத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பினார். ஆனால் யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உடலை வழக்கத்தி ற்கு மாறாக அடக்கம் செய்ய பிலாத்து அனுமதி கொடுத் தான்.
உண்மையை எடுத்துரைப் பதே என் பணி.
அன்பானவர்களே ஆண்டவர் பிலாத்திடும் உண்மை என்ன என்பதை எடுத்துரைக்கிறார்.
இயேசு, தனது போதனைகளில், தான் உண்மையின் வடிவமாக இருப்பதாகவும், தன்னைப் பின்பற்றுபவர்களை அது விடுவிக்கும் என்றும் கூறினார் "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில் லை.(யோவான் நற்செய்தி 14:6)
என்பது இந்த நம்பிக்கையின் மையக் கருத்தாகும்.பிலாத்து முன், "இதற்காகவே நான் பிறந் தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்" என்று இயேசு கூறினார். இது அவருடைய பணி உண்மைக்கு சாட்சியாக இருப்பதுதான் என்று கூறுகி றது.
கடவுளின் இறையாண்மை, நீதி மற்றும் அமைதியை கொண்டது.
அன்பானவர்களே!
இயேசுவின் இறையாண்மை , கடவுளின் நீதியின் மற்றும் அவரது சமாதான ஆட்சியின் மூலம்காணப்படுகிறது.அவரே முழுமையான நீதியை வழங்கும் இறுதி நீதிபதி, இவ்வுலகில் அவர் முதல் வருகை அமைதி யின் அரசராக வந்தார் தம் இரண்டாம் வருகையில் நீதி அரசராய் வர இருக்கிறார். தன் மக்களை நீதியாய் நியாயமாய் விசாரிப்பார் இறுதி தீர்ப்பு அவர் கையில் இருக்கிறது.அவரின் அரசு நீதி, அமைதி மற்றும் அன்பினால் ஆனது
திருச்சட்டத்தின் முக்கியமான காரியங்களான "நீதி, இரக்கம், விசுவாசம்" ஆகியவற்றைப் புறக்கணித்ததற்காக பரிசேயர் களை இயேசு விமர்சித்தார்.
கடவுளின் இறையாண்மைக்கும் நீதிக்கும் நாம் நம்மைக் கீழ்ப் படுத்தும்போது, கடவுளின் சமாதானத்தை(அமைதியை) நாம் அனுபவிக்க முடியும்.
கடவுள் விரும்பும் நீதியோடும், அன்போடும், அமைதியுடனும் வாழ கடவுள் நமக்கு அருள் புரிவாராக ஆமென்.
Prof. Dr.David Arul Paramanandam.
Sermon writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
Note: The nessage has been prepared to deliver at CSI St. Peter's
Church, Chengalpet on 26-10-2025.
"கடவுள் எல்லாவற்றின் மீதும் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்பது மட்டுமல்ல, உங்கள் நன்மைக்காகவும், அவருடைய மகிமைக்காகவும் - நல்லது கெட்டது - எல்லாவற்றையும் செய்து வருகிறார் என்பது ஒரு அழகான உண்மை."
சார்லஸ் ஸ்பர்ஜன்.
*நீதி.!*
அநீதியை கண்டால்
அலை கடலென
எழுச்சிக் கொண்டு
எழுகிறது நீதி..!
இன்று..
நீதிபதிகளின் கையையே காயப் படுத்துகின்றன
அநீதி..!
அநீதிக்கு எதிராக
தராசு பிடித்த
நீதி தேவதையின் கைகள்
ஓய்வறிவதில்லை..!
அநீதி
கொழு கொழு வென
வளரும்..!
நீதி மெலிந்தே
திடமாய் வளரும்..!
அநீதி
மலிவு விலையில்
விற்கப்படும்...
நீதி விலையேறப்
பெற்றது.!
கறை படும்
அநீதி...
அக்கறையுள்ளது
நீதி..!
அநீதி
மாண்டு போகும்...
நீதி
செழித்து வளரும்..!
திறக்காத சட்டத்தின் கதவுகளை கூட...
நீதி தன்
உண்மையெனும்
சிறு சாவியால்
திறந்து விடும்..!
அநீதியாளர்களிடம்
அனுதினமும்
செத்து செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறது
நீதி..!
அநீதி
மக்கி விடும்...
நீதி மழுங்கி போகாது..!
புதைந்து போனாலும்
பூத்துக் குலுங்கும்
நீதி..!
நன்றி: திரு. ஜார்ஜி, ஆசிரியர், மற்றும் சபை ஊழியர்.
| Pontius Pilatus | |
Ecce Homo ("Behold the Man"), Antonio Ciseri's depiction of Pilate presenting a scourged Jesus to the people of Jerusalem |
Source: Wikipeadia.
Comments
Post a Comment