இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?(233) What this child is going to be? நீதித் தலைவர்கள் : 13: 1-14, திருப்பாடல்119: 9-16, எபேசியர்: 6: 1-4, லூக்கா : 1-57-86. உலக ஞாயிறு பள்ளி தினம்
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரம்
உலக ஞாயிறு பள்ளி தினம்.
அதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "இக்குழந்தை எப்படிப்பட்ட தாக இருக்குமோ? What this child is going to be?" என்பதாகும்.
நண்பர்களே! நம் திருச்சபைகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதத் தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக ஞாயிறு பள்ளி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த
நாள், 1780 ஆம் ஆண்டு இங்கி லாந்தின் குளோசெஸ்டரில் முதல் ஞாயிறு பள்ளியைத் தொடங்கிய ஆங்கில பத்திரிகை யாளர் ராபர்ட் ரெய்க்ஸ்போன்ற இயக்கத்தின் நிறுவனர்களை யும் கௌரவிக்கிறது.கிறிஸ்தவ கல்வியையும், குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சியை வளர்ப் பதில் ஞாயிறு பள்ளிகளின் பங்கை அளவிட முடியாது. அந்த ஆசிரியர்களின் தியாகம் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டக் கூடியது.இவர்கள், குழந்தைகளு க்கு வேத வாசிப்பு, வசனங்களை மனப்பாடம் செய்தல், பாடல்க ளைக் கற்றுக்கொடுத்தல், வண்ணம் தீட்டுதல், கதைகள் மூலம் விளக்குதல், நாடகமா கவும், நடனமாகவும் பயிற்றுவி க்கின்றவர்கள் நம் ஆசிரிய பெருமக்கள். உலகெங்கிலும் உள்ள தேவாலயங்கள் இந்த நாளைக் கடைப்பிடிக்கின்றன, பல நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் முதல் ஞாயிற்றுக்கி ழமை பள்ளியைத் தொடங்கிய ராபர்ட் ரெய்க்ஸ் போன்ற முன் னோடிகளுக்கு இது அஞ்சலி செலுத்துகிறது.
இக்குழந்தை எப்படிப்பட்ட தாக இருக்குமோ? என்ற தலைப்பு
ஒவ்வொரு பெற்றோருக்கும் இத்தகைய கேள்வி தன் பிறந்த குழந்தைக்கும், பிறக்க போகி ன்ற குழந்தைக்கும் வருகின்ற ஒரு கேள்வியாகும்.ஒரு பெற் றோரின் குழந்தையின் எதிர் காலம் குறித்த நம்பிக்கைகள் மற்றும் கவலைகளின் பிரதிப லிப்பாகும் . பெற்றோர்களுக்கு தன் குழந்தை மீதான பாதுகாப் பான மற்றும் ஆதரவான சூழ லை உருவாக்குதல் அவர்களின் கடமையாகும்.
பௌத்த இலக்கியத்தில் அசிதா அல்லது காலதேவலா அல்லது கன்ஹாசிரி என்பவர் ஒரு துறவி , ஒரு முனிவர் மற்றும் ஞானி, ஆசிரியர் பண் டைய இந்தியாவில் வாழ்ந்ததாக புத்த மத ஆதாரங்களில் சித்த ரிக்கப்படுகிறார் . அவர் புத்த ரின் தந்தையான சுத்தோதனின் ஆசிரியராகவும் ஆலோசகராகவு ம் இருந்தார், மேலும் கபிலவஸ் துவின் இளவரசர் சித்தார்த்தர் ஒரு சிறந்த சக்கரவர்த்தியாக மாறுவார் அல்லது ஒரு உயர்ந்த மதத் தலைவராக மாறுவார் என்று முன்கணித்ததற்காக மிகவும் பிரபலமானவர் ; அவர் கூறியவாரே சித்தார்த்தர் பின்னர் கௌதம புத்தர் என்று அழைக்கப்பட்டார் . இவரைஆரம் பகால மேற்கத்திய அறிஞர்கள் அசிதாவை சிமியோனுடன் தொடர்புபடுத்தினர் , அவர் இயே சுவை ஒரு குழந்தையாக ஆசீர் வதித்தார் என்பது வரலாறு.
அவ்வாறே, நமது ஆண்டவர் இரட்சகராகப் பிறப்பார் என்ப தை இறைவாக்கினர் ஏசாயா கிமு 742 முதல் கிமு 687 வரை வாழ்ந்தவர்,இயேசுவின் வாழ்க் கை, மரணம் மற்றும் ஆட்சியைக் குறிக்கும் தீர்க்கதரிசனங்கள் உள்ளன,
கன்னி மரியாளுக்கு அறிவிக் கப்பட்டதைப் போலவே
மனோவாவும் சாம்சனும் கிமு 1200 முதல் கிமு 1100 வரை வாழ்ந்த நியாதிபதிகள்.
தாண் கோத்திரத்தைச் சேர்ந் தவர்கள். மனோவாவும் அவரது மலடி மனைவியும் குழந்தை இல்லாதவர்களாக இருந்தனர், ஆனால் கர்த்தருடைய தூதன் மனோவாவின் மனைவிக்குத் தோன்றி, அவள் ஒரு மகனைப் ( சிம்சோன் Samson) பெற்றெ டுப்பாள் என்று அவளிடம் கூறி னார். அந்தக் குழந்தை கருப்பை யிலிருந்தே ஒரு நசரேயனாக
(கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நபர்) அர்ப்பணிக்கப்பட வேண் டும். அவன் ,பெலிஸ்தியரிடமிரு ந்து இஸ்ரவேலரை விடுவிப்பார் என வாக்குறுதி அளித்தார். சாம்சன் ஒரு நீதிபதியாக சுமார் 20 ஆண்டுகள் பணியாற்றினார்,
நற்செய்தியாளர் லூக்கா :
அன்பானவர்களே நற்செய்தியா ளர் லூக்கா மிகவும் அறிவாற்ற லுடன் ஆராய்ந்து கண்ணாரக் கண்டு காதார கேட்டு அறிந்த மக்களிடம் நேரடியாக தீவிரமாக விசாரித்து அறிந்து கொண்ட உறுதியான செய்தியை கொடுக் கின்ற ஒரு நற்செய்தியாகும்.. இவர் காலத்தில் இயேசுவின் வாழ்வை பலர் எழுதி இருந்தார் கள் (லூக்கா1:1)
லூக்கா, இயேசுவின் வரலாற் றை தனக்கு மிகவும் பிடித்த கொய்னி கிரேக்க மொழியில் (இது பண்டைய கிரேக்க மொழி யின் ஒரு வடிவமாகும், இது பல்வேறு உள்ளூர் பேச்சுவழ க்குகளை ஒன்றிணைத்து பொதுவான மொழியாக மாறி யது. காலம்: இது கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரை பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.) தொடங்கும்போது, அவர் காணக் கூடிய உயர்ந்த மாதிரிகளைப் பின்பற்றினார்.
வேதாகமம் ஏவப்பட்டது என்ற கோட்பாட்டின் மீது இவ்வளவு பெரிய வெளிச்சத்தை வெளிப்ப டுத்தும் வேதப் பகுதி எதுவும் இல்லை. லூக்காவின் நற்செய்தி ஒரு ஏவப்பட்ட ஆவணம் என்ப தை யாரும் மறுக்க மாட்டார்கள்; ஆனாலும், அது மிகவும் கவன மான வரலாற்று ஆராய்ச்சியின் விளைவாகும் என்பதை லூக்கா உறுதிப்படுத்துவதன் மூலம் தொடங்குகிறார். கைகளைக் கூப்பி சோம்பேறி மனதுடன் உட்கார்ந்து காத்திருக்கும் மனித னுக்கு அல்ல, மாறாக சிந்திக் கும், தேடும் மற்றும் தேடும் மனிதனுக்கு கடவுளின் ஏவுதல் வருகிறது. மனிதனின் தேடும் மனம் கடவுளின் வெளிப்படு த்தும் ஆவியுடன் இணையும் போது உண்மையான ஏவுதல் வருகிறது. கடவுளின் வார்த்தை கொடுக்கப்படுகிறது, ஆனால் அதைத் தேடும் மனிதனுக்கு அதுகொடுக்கப்படுகிறது. "தேடுங்கள், நீங்கள் கண்டடை வீர்கள்" ( மத்தேயு 7:7 வில்லியம் பார்க்கலே ). லூக்கா நற்செய்தி யாளர் சிரியாவில் உள்ள அந்தியோகியா பட்டணத்தில் இருந்து தோன்றியவர் இவர் ஒரு புற இனத்தார் இவர் திருத் தொண்டர் பவுல் அடிகளாரின் சீடர் ஆவார்.
லூக்காவின் அறிமுகம் முதல் மூன்று நற்செய்திகளில் தனித் துவமானது, ஏனெனில் ஆசிரியர் தன்னை "நான்' என்ற பிரதி பெயரைப்(personal pronoun) பயன்படுத்தும் ஒரே இடம் இது தான். ... இது புதிய ஏற்பாட்டில் கிரேக்கத்தின் சிறந்த பகுதி. லூக்கா இங்கே சிறந்த கிரேக்க வரலாற்றாசிரியர்கள் அனை வரும் பயன்படுத்திய அறிமுக வடிவத்தைப் (Introductory) பயன் படுத்துகிறார்.லூக்காவின் காலத்திற்கு முன்பே வாழ்ந்த முக்கிய கிரேக்க தத்துவவாதி கள், சாக்ரட்ஸ், பிளாட்டோ, பிலாந்தர் (இவர் யூத மத்திய பிளாட்டோனிச தத்துவ ஞானி) மற்றும் அலெக் சாண்டர் தி கிரேட் காலத்தில் அரிஸ்டாட்டில் ஆகியோரின் செல்வாக்கு மிக்க சிந்தனைகள் (thoughts)இருந்தன. லூக்கா நற்செய்தி, அந்த கால கட்டத்தின் சிந்தனைக ளுடன் ஒத்துப் போகக்கூடிய வகையில், புறஜாதியினருக்கு ஒரு புற இனத்து லூக்காவால் எழுதப்பட்டது. இந்த தத்துவவா திகள், லூக்காவின் காலத்திற்கு முன்பே வாழ்ந்திருந்தாலும், அவர்களின் சிந்தனைகள் லூக் காவின் நற்செய்தி எழுதப்பட்ட காலகட்டத்தில் (கி. பி 59 to 62 ) செல்வாக்கு செலுத்தியதாகக் கருதப்படுகிறது.எனவே தான் லூக்கா நற்செய்தி, "உலக ளாவிய நற்செய்தி" (Universal Gospel) என அழைக்க ப்படுகி றது. நற்செய்தி நூலில் ஆண்டவரின் புற இணைத்து மக்கள், விளிம்புநிலை மக்களு க்கான அணுகுமுறைகளை அதிகம் எடுத்துரைப்பார்.
நற்செய்திகள் ஏன் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன?
Why should the Gospels write in Greek? அன்பர்களே, நற்செய்தி கள் கிரேக்க மொழியில் எழுதப் பட்டதற்குக் காரணம், அந்தக் காலத்தில் கிரேக்க மொழி, கிழக்கு மத்தியதரைக் கடல், ஆசியா, ஐரோப்பா, வட ஆப்ரிக் கா, பகுதியில் பரவலாகப் பேசப்பட்ட ரோம அரசின் அதிகா ரப்பூர்வமான பொதுவான மொழியாக இருந்தது. இதனால், கிரேக்க மொழி தெரிந்த யூதர் கள் மற்றும் யூதரல்லாத பிற இனத்தினர் அனைவரும் நற்செ ய்திகளைப் படிக்க முடிந்தது. இயேசு அராமிக் பேசினாலும், புதிய ஏற்பாட்டு நூல்களின் பெரும்பகுதி கிரேக்க மொழியி ல் எழுதப்பட்டன. அராமிக் பால ஸ்தீன் பகுதியில் மட்டும் இருந்த து. கிரேக்கம் தமிழ் மொழிப் போல் ஒரு தொன்மை மொழி யாகும். (Classical language) நற்செய்தியாளர்கள் லூக்காவும் மாற்கும் திருதூதர் பவுலோடு இணைந்து பணியாற்றியவர் கள். நற்செய்தி அடிதட்டு மக்க ளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே இவர்களுடைய எண்ண மாகும்.
லூக்கா அவர்கள் மற்ற நற்செய் திகளில் இல்லாத நிகழ்வுகளை
தன் நற்செய்தியில் கொண்டு வந்திருப்பார் அவைகளில் ஒன்றுதான்,"இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ" என்ற சிமியோன், திருமுழுக்கு யோவானின் வரலாறு ஆகும்.
1.கடவுளின் திட்டத்தை மறந்த சிம்சோன்.Samson, who forgot God's plan". நீதித் தலைவர்கள் : 13: 1-14.
கிறிஸ்துவுக்குள் பிரியமான வர்களே.!
சோரா நகரம் எருசலேமுக்கு மேற்கே சுமார் 14 மைல் (22.5 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது. அது தாண் கோத்திர த்தினரின் தேசத்தில் இருந்தது.
சோரா ஊரைச் சேர்ந்த ஒரு மனிதன் இருந்தான்; அவன் பெயர் மனோவா ; அவன் மனை வி மலடியாக இருந்தாள் , அவளு க்குப் பிள்ளைகள் இல்லை. கர்த் தருடைய தூதன் அந்தப் பெண் ணுக்குத் தோன்றி, “இப்போது, நீ மலடியாக இருக்கிறாய், பிள்ளைகளைப் பெறவில்லை; ஆனால் நீ கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாய்” என்றார்.
இவ்வாறே, கர்த்தருடைய தூதர் மரியாளுக்கு தோன்றினார் சகரியாவிற்கும் தோன்றினார்.
இதே வாக்குறுதி, பிள்ளையின் மையால் பாதிக்கப்பட்ட சாராளு க்கும், இந்த மனோவாவின் மனைவிக்கும், சகரியாவின் மனைவி எலிசபெத்திற்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக வந்தது. தூதனானவர் குழந்தை பிறக் கும் வரை ஸ்திரீயானவள் திராட் சைரசமோ அல்லது அது போன் ற பானமோ குடிக்காதபடியும் , அசுத்தமான எதையும் சாப்பிடா தபடியும் எச்சரிக்கை யாயிருங் கள். இதோ அவன் தலையில் சவரக்கத்தி படக்கூடாது; அந்தப் பிள்ளை கர்ப்பத்திலிருந் தே தேவனுக்கு நசரேயனாக இருப்பான்;அவன் இஸ்ரவேலை பெலிஸ்தியரின் கைக்குத் தப்பு விக்கத் தொடங்குவான் என்றார். சாம்சன் விடுகதை சொல்வதில் சிறந்தவன். விநோதமான முறை யில் 300 நரிகளைப் பிடித்து அவைகளின் வால்களில் தீப்பந் தங்களைக் கட்டி பெலிஸ்தியரி ன் வேளாண்மையை அழித்தா ன்.கழுதையின் தாடை எலும்பி னால் 1000 பேரைக் கொன்றான்.
அவ்வாறே, யோவான் அவர்க ளும், " ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்; திராட் சை மதுவோ வேறு எந்த மது வோ அருந்த மாட்டார்; தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.
(லூக்கா நற்செய்தி 1:15) என்றார்
சிம்சோன் என்றாள் "சூரிய மனிதன்' நீதிபதிகள் புத்தகத்தி ல் குறிப்பிடப்பட்டுள்ள பண்டை ய இஸ்ரேலியர்களின் நீதிபதிக ளில் கடைசி நபர் மற்றும் முடியாட்சி நிறுவப்படுவதற்கு முன்பு இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரங்களை "நியாயப்படுத் திய" கடைசி தலைவர்களில் ஒருவர் ஆவார். கடவுளால் ஆசீர் வதிக்கப்பட்டவர் கடைசி நாளில் பெண் ஆசையால் தன் ஆசிர்வா தங்களை இழந்தார். கடவுளின் அனாதி தீர்மானத்தை, திட்டத் தை மறக்கின்றவர்களுக்கும் மதிக்காதவர்களுக்கும் ஏற்படும் துன்பங்கள் ஏராளம்.
2.குடும்ப உறவுகளில் தெய்வீ க ஒழுங்கு.Divine order in family relationships. எபேசியர்6:1-4.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே திருத்தூதர் பவுல் அடிக ளார் எபேசியருக்குஎழுதியநிருப த்தில் ஒரு குடும்பம் என்றால் மூன்றுவித பொருப்புகளை உள்ளடக்கியதாக விளக்குகி றார்.
1.முதலாவதாக, ஆன்மீகவழியில் நடக்கும் பெற்றோராக இருக்க வேண்டும். பிள்ளைகளை நடக்க வேண்டிய வழியில் நடத்த கற்று க் கொள்ள வேண்டும். வீட்டிற் குள் என்ன நடக்கிறது என்பதில் கடவுள் அக்கறை காட்டுகிறார் என்பதைக் அறியவேண்டும்.
2.பிள்ளைகள் தங்கள் பெற்றோ ருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், இதுவே சரியானது என்றும் கூறுகிறது. இது பழைய ஏற்பாட்டில் உள்ள "உன் தகப்ப னையும் தாயையும் கனம்பண் ணு" என்ற கட்டளையுடன் தொட ர்புடையது.பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிந்து அவர்களை மதிக்க வேண்டும்.
3.தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளின் மனச்சோர்வைத் தவிர்க்க வேண்டும். அதாவது, அவர்களைத் திட்டாமல், கர்த்தரு டைய போதனைகள் மற்றும் ஒழுக்கத்தின்படி அவர்களை வளர்க்க வேண்டும். நானும் என் வீட்டாருமே என்றாள் கர்த்தரை யே சேவிப்போம் என்பதை உறுதிப்படுத்துங்கள். தந்தையர்களே நீங்கள் குடும்பத் தோடு ஜெபிக்கின்ற பொழுது நீங்கள் கடவுளிடம் பேசுகிறீர் கள் நீங்கள் குடும்பத்தோடு திருவிவிலியம் வாசிக்கின்ற போது கடவுள் உங்களோடு பேசுகிறார் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் கடவுள் உங்க ளிடம் பேச வேண்டுமா அல்லது நீங்கள் அவரிடம் பேச வேண்டு மா? இவைகள் பிள்ளைகளுக்கு ஒரு பாடமாக அமைகிறது,
2025 உலக கோப்பை கிரிக்கெட்
போட்டியில் இந்திய மகளிர் அணியினர் ஆஸ்திரேலியாவை வென்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்கள். இந்திய மகளிர் அணியின் வீரர் ஜெமிமா
ரோட்ரீகியூஸ் 132 பந்தில் 127 ஓட்டங்கள் (N.O) எடுத்தார். அவர் பேட்டி கொடுக்கும்போது என் வெற்றிக்கு காரணம் முதலா வதாக இயேசு கிறிஸ்து என்றும் பிறகு தன் தாய் தந்தை யையும் அவருடைய பயிற்சியா ளரையும் குறிப்பிட்டார்கள். இதுதான் குழந்தையை வளர்க் கின்ற விதம் இதை நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். Put God First, he will put you First.(Matt 6:33)
3.இக்குழந்தை எப்படிப்பட் டதாக இருக்குமோ?What this child is going to be?.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! சாராய் மலடியாக இருந் தாள், அவளுக்குக் குழந்தை இல்லை” (தொடக்கநூல்11:30).
ஆபிராமே, பயப்படாதே. நான் உன் கேடயம்” (தொ. நூ 15:1).என் றார்.ஈசாக் என்றஒரு மகன் வாக் களிக்கப்பட்டான்
எலிசபெத்து மலடியாக இருந் தாள், அவர்களுக்குக் குழந்தை இல்லை”. சகரியாவே, பயப்படா தே, உன் வேண்டுதல் கேட்கப் பட்டது” (லூக்கா 1:13).என்றார். யோவான் என்றஒரு மகன் வாக் களிக்கப்பட்டான்
மரியாளே, பயப்படாதே, நீ தேவ னிடத்தில் கிருபை பெற்றாய்” என்றார். உலக இரட்சகராகிய இயேசு வாக்களிக்கப்பட்டார்.
விருத்தசேதனம்(Circumsation)
ஆபிரகாமுக்கு 99 வயதாக இருந் தபோது, கடவுள் அவருடன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத் தினார், இந்த நித்திய ஒப்பந்தத் தின் அடையாளமாக அவரது வீட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று கட்டளையிட் டார். ஆபிரகாம்,99 வயதில் அவரது மகன் இஸ்மவேல் 13 வயதில் மற்றும் அவரது வீட்டிலு ள்ள மற்ற அனைத்துஆண்களும் ஒரே நாளில் முதன்முதலில் விருத்தசேதனம் செய்யப்பட்ட னர், மேலும் இந்த நடைமுறை அனைத்து எதிர்கால தலை முறையினருக்கும் தொடரப்பட வேண்டும்.
கடவுளுக்கும் ஆபிரகாமுக்கும் இடையிலான உடன்படிக்கை யை அடிப்படையாகக் கொண்டு பிறந்த ஆண் குழந்தையின் எட்டாவது நாளில் விருத்த சேத னம் செய்வது ஒரு மதக் கட்ட ளையாகும்,இந்த விழாவில் குழந்தைக்குப் பெயரிடுவதும் அடங்கும், அவ்வாறே, ஈசாக்கும் 8ம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டார்.
அவ்வாறே,குழந்தை இயேசுவுக் கு விருத்த சேதனம் பண்ண எட்டு நாட்கள் ஆனபோது, அதற் கு இயேசு என்று பேரிட்டார்கள்” (லூக்கா 2:21). இக்காலகட்டத்தில்,யூதேயாவின் ராஜாவாகிய ஏரோதின் காலத் தில்(இதுமியன் (எதோமியர்) வம்சாவளியைச் சேர்ந்த மன்னர் ஏரோது கி.மு 37 முதல்கி. பி 4 வரை யூதேயாவை ஆட்சி செய்தார். எருசலேமில் இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு கொன்றவன் இவனே ) அந்த அபியாவின் ஆசாரிய வகுப்பைச் சேர்ந்த சகரியா என்ற ஒரு ஆசாரியன் இருந்தான்; அவன் மனைவி எலிசபெத்தும் ஆரோனின் சந்ததியில் வந்தவள். அந்தக் காலத்தின் பிற்பகுதியில்தான் யோவான் ஸ்நானகன் பிறந்தார். வயதான ஆசாரிய தம்பதியரு க்கு அவர் பிறந்ததால் அவரது பிறப்பு மிகவும் அற்புதமாக இருந்தது.
புதிய ஏற்பாட்டில் தனது தாயின் வயிற்றில் இருந்தே ஆவியால் நிரப்பப்பட்டதாகக் கூறப்படும் ஒரே நபர் அவர்தான்.
அவருடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனம் உரைத்தார்" (வச. 67). குழந்தை பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் என்று நாம் ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறோம் (வச. 15) - எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டாள் (வச. 41). இப்போது சகரியாவும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பதை காண்கிறோம்.
கடவுளின் தூதர் யோவானின் பிறப்பை சகரியாவுக்கு முன்னறி விக்கிறார் (1:5-25), அவ்வாறு கடவுளின் தூதன் இயேசுவின் பிறப்பை மரியாளுக்கு முன்னறிவிக்கிறார் (1:26-38).
கர்ப்பிணி மரியாள் கர்ப்பிணி எலிசபெத்தை சந்திக்கிறாள், மரியாளின் வாழ்த்துக்களைக் கேட்டு எலிசபெத்தின் குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கி றது (1:39-45).ஆண்டவரின் திருக்கோவிலுக்குள் செக்கரியா தூபம் காட்டுகிற வேளையில், அங்குத் தோன்றிய வானதூதர் அவரை நோக்கி, "செக்கரியா, உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெ டுப்பார்; அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.
“எட்டாம் நாளிலே யோவானுக்கு விருத்தசேதனம் பண்ண வந்தா ர்கள்; தகப்பனுடைய நாமத்தின் படியே அதற்குச் சகரியா என்று பேரிட்டிருப்பார்கள்” (லூக்கா 1:59). ஆனால் குழந்தையின் தாயார் யோவான் என்று பெய ரிட வேண்டும் என்று வலியுறுத் தினார்.வானதூதரின் வார்த்தை களை நம்ப செக்கரியா தயங்கி யதால், அவர் யோவான் பிறக்கு ம் வரை பேச்சற்றவராய் இருப் பார் என்று வானதூதர் கண்டிப் பாக கூறினார். அதன் விளை வாக, செக்கரியா பேச்சற்றவரா ய் ஆனார்.
அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிட லாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக் குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்ட விழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். திருமுழு க்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக் கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்" என்று இறைவாக்கு உரைத்தார்.
இஸ்ரயேலரின் மனமாற்றத்துக் அடையாளமாக திருமுழுக்கு பெறும் சடங்கைத் தொடங்கி வைத்தவர்கள் இவர்களே.
பாலைநிலத்தில் ஆண்டவருக்கா க வழியை ஆயத்தமாக்குங்கள்; என்று இறைவாக்கினர் எசாயா யோவானின் பணியை ப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
இறைவாக்கினர் மலாக்கி "இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய் வார்"என்று யோவானைப் பற்றி முன்னறிவித்து இருக்கிறார்.
இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ என்று வியந்தவர்க ளுக்கு,யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவான் மூலம் இயேசு திருமுழுக்கு பெற்றது ஒரு முக்கிய கிறிஸ்தவ நிகழ்வு ஆகும். ஏனைனில், தேவன் இயேசுவை தமது குமாரன் என்று அறிவித்தார்.
அன்பர்களே! இயேசு, யோவானி டம் திருமுழுக்கு பெறுவதன் நோக்கம், "எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்குப் பொருத்தமாய் இருக்கிறது" என்று கூறினார். அவ்வாறே, கடவுள் நம்மையும் நீதியும் நிலைநாட்டுகின்ற மக்களாய் வாழ அருள் புரிவாராக ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com
குழந்தைகளாக இயேசுவும் (இடது), யோவானும். ஓவியர்: முரில்லோ. source. Wiki.
Comments
Post a Comment