அனைத்து பற்றாளரும் திரு த்தொண்டரே Priesthood of All Believers.( 229). ஏசாயா 61: 1-11, திருப்பாடல்135:12-21, 1 பேதுரு 2:1-10, யோவான்17: 1-8. இறைமக்கள் ஞாயிறு

முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,
"அனைத்து பற்றாளரும் திரு த்தொண்டரே" Priesthood of All Believers.
யார் பற்றாளர் or பாதிரியார்? Who is a Priesthood?
ஒரு பாதிரியார் என்பவர் புனித மான சடங்குகளைச் செய்யும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதத் தலைவர் ஆவார்.
 அவர் கடவுளுக்கும்  மனிதர்க ளுக்கும்  இடையே ஒரு பாலமா கச் செயல்படுபவர். பழைய
ஏற்பாட்டின்படி லேவியின் சந்த தியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட மோசேயின் சகோதரரான   ஆரோன் முதல் பிரதான ஆசா ரியன் ஆவார்.  ஆசாரியர்கள் மக்களுக்கு சேவை செய்வதற் கும்,பலிகளைச் செலுத்துவத ற்கும்,கடவுளின்  வார்த்தையை  அறிவிப்பதற்கும் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் இந்த பழைய ஏற்பாட்டின் ஒரே இனத்திற்கான ஆசாரிய  உரி மையை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனைவரு க்குமாக  மாற்றியதே உலக த்திலேயே மிகச்சிறந்த கொடையாகும். ஏனெனில் நமது ஆண்டவரே நமக்கு பிரதான ஆசாரியர். இறைவாக்கினர் எரேமியா 31:31-34-ன் படி, கடவுள் புதிய உடன்படிக்கையை நமக்கு வாக் களித்ததால் பழைய ஏற்பாட்டின் ஆசாரியத்துவம் இனி இல்லை. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..
 இந்த லேவி கோத்திரத்திற் கான தனிப்பட்ட உரிமை என்பது சாதியபாகுபாட்டை   உருவாக்கியது. ஆசாரிய ஊழியம் செய்கி ன்றவர்கள் அந்தணருக்கு தான் தகுதி என்பதை இந்தியா வில் நாம் இப்போது காண்கி றோம் (Brahmanism emphasized the rites performed by, and the status of, the Brahman since 1st Millennium BCE)
Priesthood என்பது கிரேக்க வார் த்தையான presbyteros  பிரெஸ் பைடெரோஸ் ("மூத்தவர்"  (“elder) ) என்பதிலிருந்து சொற் பிறப்பியல்( etymology) ரீதியாகப் பெறப்பட்டது ,  மேலும் இது Latin லத்தீன் வார்த்தையான sace rdos சாசெர்டோஸுடன் ( லத்தீ ன் மொழியில் புனிதமான காரி யங்களைச் செய்பவர்) தழுவல்
ஆகும். ஆசாரியத்துவம் என்பது கிறிஸ்துவிடமிருந்து வரும் அழைப்பு, இது சீடத்துவம் மற் றும் அவரது மக்களுக்கு சேவை செய்வதை அடிப்படையாகக் கொண்டது. கடவுளின் மக்களை கடவுளின் விண்ணரசை நோக்கி கற்பிக்கவும், பரிசுத்தப்படுத் தவும், வழிநடத்தவும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.
1.அனைத்து பற்றாளரும் திரு த்தொண்டரே:Priesthood of All Believers.
அன்பர்களே! அனைத்து விசுவா சிகளின் (பற்றாளர்) ஆசாரியத் துவம் (Priesthood of all believers) என்பது ஒரு கிறிஸ்தவக்கோட் பாடு ஆகும். இந்தக் கோட்பா ட்டை கொண்டு வந்தவர் சீர் திருத்த தந்தை  மார்ட்டின் லூதர் அவர்கள்.   இது  அனை த்து கிறிஸ்தவர்களும் இயேசு கிறிஸ்துவின் வழியாக நேரடியா க கடவுளை அணுக முடியும் என் றும், எந்தவொரு மதகுருமார்கள் அல்லது இடைத் தரகர்களும் தேவையில்லை என்றும் வலியு றுத்துகிறது. இந்த கோட்பாடு குறிப்பாக புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் போது கி. பி 1517ல் உருவானது. லூத்தரன் மற்றும் சீர்திருத்த சபைகளில் இந்த கோட்பாடு முக்கியத்துவம் பெற்றது. 
இதன் முக்கிய அம்சங்கள் என்பது, இந்த கோட்பாட்டின்படி, 1.விசுவாசிகள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளிடம் நேரடியாகப் பிரார் த்தனை செய்யவும், அவரது வார்த்தையை அறியவும் முடியும். 
2.இது மதகுருமார்களின் தனித் துவமான அதிகாரத்தை கேள்வி க்குள்ளாக்குகிறது.
மத்தியஸ்தர் இயேசுகிறிஸ்து மட்டுமே மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடையே மத்திய ஸ்தராக இருக்கிறார்.
4. , இது கிறிஸ்தவர்கள் அனை வரும், அவர்கள் மதகுருக்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கடவுளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்கும் ஒரு கோட்பா டாகும். 
5.திருமுழுக்கு  பெற்ற ஒவ்வொ ரு கிறிஸ்தவரும் கடவுளுடன் நேரடித் தொடர்பு கொள்ள முடி யும், மேலும் அவர்களுக்கு எந்த வொரு மதகுருமார்களின் பரிந் துரையும் தேவையில்லை.
6. இந்த கொள்கை கத்தோலிக்க திருச்சபையின் மதகுருமார்களி ன் தனித்துவமானஅதிகாரத்தை  மறுக்கிறது, 
7. ஒவ்வொரு விசுவாசியும் கடவு ளின் கிருபையால் விசுவாசத்தி ன் மூலம் நேர்மையாக்கப்பட்டு, நேரடியாக கடவுளுடன் தொடர்பு கொள்ளும் திறனைக் கொண்டு ள்ளனர் என்று வலியு றுத்துகி றது. 
8.கத்தோலிக்க திருச்சபையில் உள்ள மதகுருமார்களுக்கு மட்டுமே கடவுளுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற கருத்தை லூதர் நிராகரித்தார்.
9. அதற்குப் பதிலாக, அனைத்து விசுவாசிகளும் ஒருவருக்கொரு வர் ஆன்மீக வழிகாட்டிகளாக செயல்பட முடியும் என்று கூறினார். 
10.இந்த கொள்கையின் ஒரு பகுதி, திருவிவலியம் ஒவ்வொ ரு விசுவாசியின் ஆன்மீக வாழ்க் கையின் அதிகாரப்பூர்வ ஆதார மாக இருக்க வேண்டும் என்ப தாகும். 
11.இந்த கொள்கையின் கீழ், கிறிஸ்தவர்களுக்கிடையே மதரீதியான அதிகாரப் படிநிலை கள் இல்லை. ஒவ்வொரு கிறிஸ் தவரும் ஒரே மாதிரியான மரியாதைக்குரியவர்கள் மற்றும் கடவுளின் பார்வையில் சமமானவர்கள் என்று லூதர் நம்பினார். 
12. மதரீதியான அதிகாரத்தின் மையப்படுத்தலை உடைத்து, விசுவாசிகள் கடவுளுடனான தங்கள் உறவுக்கு தனிப்பட்ட பொறுப்பை ஏற்கவும், திருச்சபை யின் மூலம் இல்லாமல் நேரடியா க கடவுளை அணுகவும் வழிவகு த்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
2. ஒவ்வொரு ஆசாரியனும் மேசியாவே! Every Priesthood is a  Messiah:-ஏசாயா 61: 1-11, 
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மேசியா means “Anointed One.” அபிஷேகம் செய்யப்பட்ட வர் என்று குறிப்பிடுகின்றன (.1 Samuel 2:10)புதிய ஏற்பாட்டு அர்த்தத்தில், அபிஷேகம் என் பது பரிசுத்த ஆவியால் நிரப் பப்பட்டு, அவரால் ஆசீர்வதிக் கப்படுவதைக் குறிக்கிறது. 
இந்த வசனங்கள் கிறிஸ்துவின் முதல் வருகைக்கான பணியைக் குறிக்கின்றன. பாலைவனத்தில் 40 நாள் சோதனையிலிருந்து மீண்ட உடனேயே கலிலேயாவி ல்  தனது ஊழியத்தைத் தொடங் குவதற்கு முன் நாசரேத் ஜெப ஆலயத்தில் இந்த அதிகாரத் தைப் படித்தார்.  இயேசு இந்த வசனத்தை வாசிக்கிறார் (லூக். 4:18-19).  .இதுவே நாசரேத் அறிக் கைகள் Nazareth Manifesto என்ற ழைக்கப்படும்., ஆண்டவருடைய ஆவிமெசியாவின்மீதுஉள்ளது.மெசியா, கர்த்தருடைய ஆவி யால் அபிசேகம் செய்யப் பட்டவ ர். அவர் ஏழைகளுக்கு நற்செய் தியை அறிவிக்கவும், சிறைப்பட் டோருக்கு விடுதலை கொடுக் கவும், காயப்பட்டவர்களை குண ப்படுத்தவும் அனுப்பப்பட்டவர். சாம்பலுக்கு பதிலாக அழகு, துக் கத்திற்காக எண்ணெய், மற்றும் கனத்த ஆவியிக்குப் பதிலாக துதித்தல்" போன்ற ஆறுதலை யும், நம்பிக்கையையும் தருகின் றன. 
கர்த்தராகிய நான் நீதியை விரும்புகிறேன்; தகனபலிக்குப் பதிலாகக் கொள்ளையை நான் வெறுக்கிறேன் : இருதயம் சரி யாக இல்லாவிட்டால், தகனபலி போன்ற பலிகள் உண்மையில் கொள்ளைக்குச் சமமாக இருக் கும் என்பதை கர்த்தர் விளக் குகிறார் . மாறாக, கர்த்தர் நீதி யை நேசிக்கிறார் . பலிகள் மட்டு ம் போதாது, பலி செலுத்தும் முறையும் போதாது.கடவுளுக்
குத் தேவை உதடுகளின் கனியா கிய தோத்திரபலி. இதுவே ஒவ்வொரு ஆசாரியர்களின் ஆசிர்வாத வாய்வார்த்தையாக இருக்கவேண்டும்.விசுவாசிகளுக்கும் இதேபோன்ற அழைப்பும் கடமையும் உள்ளது. விசுவாசிகள் உலகத்தால் படிக் கப்படும் உயிருள்ள கடிதங் களைப் போன்றவர்கள் ( 2 கொரிந்தியர் 3:2-3 ), கடவுளின் பெயரையும் தன்மையையும் கவனிக்கும் உலகிற்கு வெளிப் படுத்தும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது என்று பவுல் அடிகளார் எழுதினார். 
3. ஆசாரித்துவம்: அழைப்பும் பொறுப்பும்.Priesthood :Calling and Respinsibility. 1.பேதுரு 2:1-10. கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! திருத்தூதர் பேதுரு அவர் கள் இந்த திருமுகத்தை சின்ன ஆசியாவில் உள்ள திருச்சபைக ளுக்கு எழுதினார்  முக்கியமாக அங்கு யூத திருச்சபை மக்களும்,   புற இனத்து கிறிஸ்தவர்களில் பலர் ஏழையாக இருந்திருக்க லாம். கிறிஸ்தவர்கள் துன்புறும் காலத்தில் அவர்களை ஆறுதல் படுத்த, ஊக்கப்படுத்த இத்த திருமுகத்தை எழுதியிருக்கிறார்.
 அன்பான விசுவாசிகளே! ஆண்டவர் எவ்வளவு இனிமை யானவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால் உங்களிடத் தில்  பொறாமை, வஞ்சகம், பொய் பேச்சு, தீயசொற்கள் போன்ற எல்லாத் தீமைகளையும் அகற்ற வேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பாலை விரும்புவது போல், விசுவாசிகள் பரிசுத்த ஆன்மீகப் பாலை (தேவ வார்த்தையை) விரும்பி, அதன் மூலம் இரட்சிப்பிலே வளர வேண்டும். கர்த்தர் இரக்கமுள்ள வர் என்றும், நம்மை நேசிக்கிற வர் என்றும் நாம் ருசித்திருக்கி றோம், எனவே அவருடைய வார் த்தையை மேலும் அறிய ஆசைப் பட வேண்டும். கிறிஸ்துவே உயிருள்ளகல் மனிதர்களால் நிராகரிக்கப்பட்ட, ஆனால் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் விலைமதிப்புள்ள, ஜீவ னுள்ள கிறிஸ்துவிடம் நாம் வர வேண்டும். நாமும் கிறிஸ்து வைப்போல, தேவன் கட்டியெழு ப்பும் ஒரு ஆவிக்குரிய ஆலய த்தில் உயிருள்ள கற்களாக இருக்கிறோம்.நாம் தேவனுக்கு ஆவிக்குரிய பலிகளைச் செலுத் தும் பரிசுத்த ஆசாரியர்கள். , நீங்கள் தேர்ந் தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களி ன் கூட்டத்தினர், தூய மக்களி னத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள் ளவரின் மேன்மைமிக்க செயல் களை அறிவிப்பது உங்கள் பணி. என ஆசாரியர்களின் பணியைஉணர்த்துகிறார்.முன்னர் தேவனுடைய மக்களாய் இல்லாதிருந்த நாம், இப்போது அவருடைய மக்கள். முன்பொரு காலத்தில் இரக்கத்தைப் பெறா த நாம், இப்போது இரக்கத்தைப் பெற்றுள்ளோம். 
மெல்கிசேதேக்கு ஆசாரியத் துவம் ஒரு அந்தஸ்தோ அல்லது ஒரு அடையாளச்சீட்டோ இல்லை. அவருடைய பிள்ளைகளுக்காக தேவனின் பணியின் பலனுக் காக பயன்படுத்த நம்பிக்கை யில் தரித்திருக்கப்பட்ட இது ஒரு தெய்வீக வல்லமை.
இப்போது ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களிடமிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்ன எதிர்பார்க்கிறார், அவரி டத்தில் நாம் எவ்வாறு ஆத்து மாக்களைக் கொண்டுவருவோ மென்பதை நாம் கருத்தில்கொ ள்வோம். ஆசாரித்துவம் தேவன் கொடுத்த மரியாதை யின் பட்டங்களாகவோ, பயன்படுத்தவோ, அவைகள் மனிதர்களால் உருவாக்கப் பட்ட பட்டங்களாக கருதப்பட வோ கூடாது. அவைகள் அலங்கரிப்புக்காக இல்லை, அவைகள் அதிகாரத்தைக் காட்டுவதற்குமில்லை, மாறாக சேவிக்க ஏற்றுக்கொண்டிருக் கிற ஒரு எஜமானரின் பணி யின் தாழ்மையான சேவைக் காக ஏற்படுத்தப்பட்டிருக்கிற து. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, " மானிடமகன் தொண் டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். 
(மாற்கு நற்செய்தி 10:45) இதுவே ஆசாரித்துவம்.
“ஆசாரியத்துவத்தைத் தரித்தி ருப்பவராக ஒருவர் மாறும்போது அவர் கர்த்தரின் ஒரு பிரதிநிதி யாக மாறுகிறார். அவர் கர்த்த ரின் பணியிலிருப்பதாக அவரு டைய அழைப்பைப்பற்றி அவர் நினைக்கவேண்டும். இதுதான் ஆசாரியத்துவத்தை நிறைவேற் றுதல் என்பதற்கு அர்த்தம்”.
4.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இந்த இறைமக்கள் ஞாயிறு வாரத்தில் மிக முக்கி யமாக தெரிந்து கொள்ள வேண் டிய பாடம் ஜெபிப்பது. எல்லா மக்களும் கிறிஸ்துவின் ஆசாரி யர்களே எல்லா ஆசாரியர்களும் கிறிஸ்துவின் பிரதிநிதிகளே. இவர்களுக்கு மிக முக்கிய தகுதி என்னவென்றால் ஜெபிப்பது, ஆவியோடு விண்ணப்பிப்பது. நம் திரு விவிலியத்தில் விசுவாசிகளின் தந்தை ஆபிர காம் ஜெபித்திருப்பதை பார்க் கிறோம் (தொடக்கநூல் 18)  மோசேயின் ஜெபம் (விடுதலை ப் பயணம் 32) மற்றும் சாலொ மோனின் ஜெபம் (1 அரசர்கள் 8), ஆகியவற்றால் நாம் ஈர்க்கப் பட்டோம், ஆனால் இந்த ஆண்டவ ரின் ஜெபம்( யோவான் 17) வேதத்தில் பதிவு செய்யப்பட் டுள்ள மிகப் பெரிய ஜெபமாகும்.
The largest and the longest prayer in the holy Bible is John 17.
 நண்பர்களே ஜெபம் புனிதமா னது மற்றும் அற்புதமானது. ஆண்டவரின் ஜெபம் எளிமையா னவை, ஆனால் கருத்துக்கள் ஆழமானவை, நெகிழ்ச்சியான வை மற்றும் அர்த்தமுள்ளவை.
பரலோகத்திலோ அல்லது பூமியிலோ, குமாரன் கடவுளுக்கு ஏறெடுத்த ஜெபத்தை விட உயர் ந்த, புனிதமான, பலனளிக்கும், கம்பீரமான எந்தக் குரலும் இதுவரை கேட்கப்படவில்லை. "என இறையியளாளர் மெலன் ச்டன் கூறுகிறார்.(Melenchon, quoted in Bois)
யோவான் 17 இயேசுவின் இயல் பையும் இதயத்தையும் காண ஒரு தனித்துவமான வாய்ப்பா கும். இந்த ஜெபத்தில், இந்த நற்செய்தியில் உருவாக்கப்பட்ட பல கருப்பொருள்களை இயேசு தொடுவார்.பரலோகத்தை நோக் கி கண்களை உயர்த்தி ஜெபித் தார்.இந்த குறிப்பிடத்தக்க ஜெபம் பரலோகத்தை நோக்கிய இதயத்துடனும் மனத்துடனும் செய்யப்படுகிறது
தந்தையே! உங்கள் மகனை மகிமைப்படுத்துங்கள் என்று இயேசு முதலில் தனக்காக ஜெபி த்தார், ஆனால் அவரது வேண்டு தல் சுயநலமானது அல்ல. அவர் தன்னைப் பற்றிய அக்கறை உண்மையில் பிதாவின் மகிமை க்கானது. எது குமாரனை மகிமைப்படுத்தும்?
சிலுவையே குமாரனை மகிமை ப்படுத்தும் ( யோவான் 12:27-33 , 13:30-33 , 21:18-19 ஐப் பார்க்கவும் ). சிலுவை உலகிற்கு முற்றிலும் அவமானமாக இருந்தது,ஆனால் அது கடவுளின் பார்வையில் மகிமைப்படுத்துவதற்கான ஒரு கருவியாக இருந்தது. சிலுவை குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தியது மற்றும் கடவுளின் ஞானத்தையும் வல்லமையையும் வெளிப்படுத் தியது ( 1 கொரிந்தியர் 1:23-25 )
அது பிதாவாகிய கடவுளையும் மகிமைப்படுத்தியது.நாம் கடவு ளிடமிருந்து ஒரு ஆசீர்வாதத்தை க் கேட்கும்போது, ​​அதன் மூலம் கடவுளை மகிமைப்படுத்தும்படி நாம் அதைக் கேட்க வேண்டும். 
 நண்பர்களே எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது,
"தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ளவரை நின் புகழ் பாட வேண்டும் — "
 மேலும் அவர்,நித்திய ஜீவன் என்பது பரலோகப் பிதாவையும், அவரால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவையும் அறிவதே என்று இயேசு விளக்குகிறார். 
இயேசு தம்முடைய தேர்ந்தெடு க்கப்பட்ட சீடர்களுடன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஊழியம் மற்றும் கற்பித்தல் பற்றி யோசித்து, அதை இந்த சொற்றொடருடன் சுருக்கமாகக் கூறினார். இயேசு வெறுமனே கடவுளின் நாமத் தைப் (தன்மையை)  பற்றிக் கற்பிக்கவில்லை , மாறாக அந் தக் குணத்தை வெளிப்படுத்தி காட்டினார்.
இறுதியாக, அன்பர்களே! இன்றைய விசுவாசிகளுக்கும் ஆசாரியர்களுக்கும்இதேபோன்ற அழைப்பும் கடமையும் உள்ள து. விசுவாசிகள் உலகத்தால் படிக்கப்படும் உயிருள்ள கடிதங்களைப் போன்றவர் கள் ( 2 கொரிந்தியர் 3:2-3 ), கடவுளின் பெயரையும் தன்மை யையும் கவனிக்கும் உலகிற்கு வெளிப்படுத்தும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது என்று திருத்தூதர் பவுல் அடிகளார் எழுதினார். ஆண்டவரின் வழியில் என்றும் பயணிக்க கடவுள் அருள் புரிவாராக ஆமேன்.

Prof Dr David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www davidarulblogspot.com.

Note: This sermon has been prepared to deliver on 5th October, 2025 at CSI St. Peter's Church, Mission Compound, Chengalpet  





Ministers of the New Covenant: Why Christian Ministers Are Priests
Ordination of priests.

Ordination of priests

Source: The Lonely Pilgrim. Com. Thanks.

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

கிறித்துவை அர்ப்பணித்தல் (181) The Presentation of Christ 1 சாமு வேல் 1: 19-28, திருப்பாடல் 118: 19-29, உரோமையர் 11:33-36, 12:1,2. லூக்கா 2:22-40.