பெண் குழந்தையின் மதிப்பை உறுதி செய்தல் (235) Affirming the worth of the Girl Child.எண்ணிக்கை Numbers: 27: 1-11, திருப்பாடல் 71 : 1-12, திருத்தூதர் பணிகள் 21: 7-14, மாற்கு 5: 35-43.பெண் குழந்தைகள் ஞாயிறு The Girl - Child Sunday.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரம் பெண் குழந்தைகள் ஞாயிறு அதன் தலைப்பாக நமக்குகொடு க்கப்பட்டிருப்பது," பெண் குழந் தையின் மதிப்பை உறுதி செய்தல். Affirming the worth of the Girl Child. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருவிவிலியம், படைப் பில் ஆதாம் ஏவாளுக்கு காயின் ஆபேல் என்ற ஆண் குழந்தைக ளின் பெயர்கள் மட்டுமே குறிப் பிடப்பட்டிருக்கிறது ஆனால் பெண் குழந்தைகள் பெயர்கள் இடம் பெறவில்லை.ஆனால், தொடக்க நூலில் 4 ஆம் அத்தி யாயத்தில் வெளிப்படையாகப் பெயரிடப் பட்ட முதல் பெண்கள்: லாமேக்கின் மனைவிகளான ஆதா மற்றும் சில்லா . (Adah and Zillah,)ஆவார்கள். பண்டைய சமூகத்தில் அதாவது தொடக்க நூல் காலத்தில் வம்சா வளி (Genealogies)ஆண் வழியாக க் கண்டறியப்பட்டது. அதுதந்தை வழி சமூகமாககும்.(Patrilineal society) இதன் முதன்மை நோக் கம், குறிப்பாக ஆதாம் முதல் நோவா வரையிலும், இஸ்ரவேல் மக்கள் வரையிலும், ஆணாதி க்க வம்சாவளியைக் கொண் டது. இது பெண்களை மதிப்பி ழக்கச் செய்வதற்காக அல்ல, மாறாக அது வம்சாவளியைப...