தூய அந்திரேயர் திருநாள். இறை வருகையின் காலம், இறையருள்:தாழ்த்தப்பட்டோருக்கான நம்பிக்கை. (237) Grace of God: The hope for the Lowly. விடுதலைப் பயணம் 2: 1-10, திருப்பாடல் 30. 2.தெசலேனிக் கேயர்.2:13-16, லூக்கா 1:46-59.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார   ஞாயி றுக்கிழமை நாம் கொண்டாடப் போவது, "தூய அந்திரேயர் திருநாள்.அதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," இறை வருகையின் காலம், இறையருள்:தாழ்த்தப்பட்டோருக்கான நம்பிக்கை. Grace of God: The hope for the Lowly. 
இயேசு கிறிஸ்துவின் 12 திருத் தூதர்களில் ஒருவராகவும், திரு வசனத்தைப் பரப்புவதில் முக்கி ய பங்கு வகித்தவராகவும், அவர து சகோதரர் பேதுருவை ஆண்ட வரிடம் அழைத்துச் சென்றவரா கவும், ஆண்ட்ரூ, பிலீப்பை இயேசுவிடம் அறிமுகப்படுத்தி யவரகவும்,.
கிரேக்கர்களை ஆண்டவரிடம் அழைத்துச் சென்றார். ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண் டு 5000 பேருக்கு உணவளிக்க  உதவிய சிறுவனை ஆண்டவரா கிய இயேசுவிடம் அழைத்துச் சென்றவராகிய சீடர்தான் அந்திரேயர். இவர் திருமுழு க்கு யோவானிடம் முதன் முதலாக சீடராக இருந்தார். திருமுழுக்கு யோவான் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பார்த்து " "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின்பாவத்தைப் போக் குபவர்(யோவான் நற்செய்தி 1:29)என்றார். அதை கேட்ட உடனே அந்திரேயா இயேசுவைப் பின்பற்ற தொடங்கினார். இவரை " முதல் அழைக்கப்பட் ட" சீடராகவும் அவரைக் கௌரவி க்கும் வகையில், திருச்சபைகள் புனித ஆண்ட்ரூ தினத்தைக் கொண்டாடுகிறது. (Saint Andrew's Day, also called the Feast of Saint Andrew) கிபி  1320 அன்று ஸ்காட்லாந்து நாடு விடுதலை அடைந்த பிறகு அந்நாட்டின் புனி தராக Patron Saint of Scotland 
அந்திரேயர் அறிவிக்கப்பட்டு அந்நாட்டின் தேசியவிடுமுறை நாளாகவும் கொண்டாடப்படுகி றது. எங்கெல்லாம் ஸ்காட்லாந் திருச்சபையினர் சென்றார்க ளோ அவர்கள் திருத்தூதர் அந்தி ரேயர் நினைவாக ஆலயங்களை கட்டினர். பள்ளிகளை அமைத்த னர்.   அர்ப்பணிப்புள்ள மீனவரா க அவரது வாழ்க்கையையும், கிறிஸ்தவத்தைப் பரப் புவதில் அவரது மிஷனரிவைராக்கியத் தையும், அவரது நம்பிக்கைக்கா க அவர் உயிர் தியாகம் செய்த தையும் கொண்டாடுகிறது. விசுவாசம், தைரியம் மற்றும் பணிவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதன் கிறிஸ்தவ நற்பண் புகளையும், சமூகத்தின் முக்கிய த்துவத்தையும் பிரதிபலிக்கும் நேரம் இந்த வருகை காலமா கும். 
அவரது வாழ்க்கை மற்றும் மர பை நினைவுகூரும் வகையில் 
புறயினத்தாருக்கு அப்போஸ்த லனாக, இயேசுவால் அழைக்க ப்பட்ட முதல் சீடர்களில் புனித ஆண்ட்ரூவும் ஒருவர். கிழக்கு ஐரோப்பா பகுதிகள், கிரீஸ் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு கிறிஸ்தவத்தைப் பரப்பியதாக நம்பப்படும் ஒரு முக்கிய அருட்ப ணியாளராக  அவர் கருதப்படுகி றார்.. கிபி 60 ம் ஆண்டு, நவம்பர் 30 அன்று, இயேசுவைப் போல வே சிலுவையில் அறையப்பட மறுத்த பிறகு, சால்டைர் Soltire என்று அழைக்கப்படும் X வடிவ சிலுவையில் கி. பி 60 ம் ஆண்டு, நவம்பர் 30, அன்று ரோமஅதிகா ரிகளால் அறையப்பட்டார். துன்புறுத்தலை எதிர்கொள்வதி ல் அவரது தைரியம் மற்றும் நம்பிக்கைக்காக அவர் கௌர விக்கப்படுகிறார். இந்நாளில் திருச்சபைகள் அவரது நினை வாக இறை மக்களுக்கு உணவு வழங்குவார்கள்.
 அன்புக்குரியவர்களே!
இறை வருகையின் காலம்" என்பது Advent என்னும் லத்தீன் மொழிப் பெயர்ப்பிலிருந்து "வருகை" எனப் பொருள் பெறு கின்றது.கிறிஸ்துமஸ் பண்டிகை க்கு முந்தைய நான்கு வாரங்க ளை குறிக்கும். இயேசு கிறிஸ்து வின் பிறப்பிற்காகவும், அவரு டைய இரண்டாம் வருகைக்காக வும் காத்திருந்து, அதற்குத் தங்க ளைத் தயார்படுத்திக் கொள்ளு ம் காலமாகும்.
அன்பு நண்பர்களே!
இறையருள்:தாழ்த்தப்பட்டோருக்கான(தாழ்மையானவர்களுக்கு)நம்பிக்கை என்ற சொற்றொடர், கடவுள் பெருமை கொண்டவர் கள் அல்லது தன்னிறைவு பெற் றவர்களுக்கு அல்ல, தாழ்மையா னவர்கள், தேவைப்படுபவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனது கிருபையையும் உதவி களையும் வழங்குகிறார் என்ற திருவிவலிய கருத்தை விவரிக் கிறது. பலவீனமாக உணருபவர் களுக்கு அல்லது கடினமானசூழ் நிலைகளில் இருப்பவர்களுக்கு இது பெரும்பாலும் நம்பிக்கையி ன்ஆதாரமாகக்கருதப்படுகிறது,  ஏனெனில் "தாழ்ந்தவர்களின்" பணிவு கடவுளின் கிருபையை யும் தயவையும் பெறுவதற்கான திறவுகோலாக முன்வைக்கப்ப டுகிறது. The humility of the Lowly is the gateway to receive God's grace and favour.
இங்கு தாழ்த்தப்பட்டோர் என்பவ ர் Lowly ஒரு சாதியை குறிப்பது அல்ல  தாழ்ந்த நிலையில் உள்ள அனைவரையும்  குறிக்கிறது. இத்தகைய தாழ்ந்த நிலையில் உள்ள மக்களுக்குஇறைவருகை காலம் ஒரு நம்பிக்கையை தரு கிறது.
1.இறையருள்:அடிமைப்பட்டோருக்கான நம்பிக்கை. God's Grace: Hope for the Enslaved. விடுதலைப்பயணம். Exodus: 2:1-10. கிறிஸ்துவுக்குள்பிரியமா னவர்களே! இறைத்தூதர் மோசையின் பிறப்பானது மிக முக்கியமாக மூன்று காரணங்க ளை முன்னடக்கியது. 1.இஸ்ரவேலர்களை அடிமைத் தனத்திலிருந்து மீட்டெடுப்பது,
2. மோசைக் சட்டத்தை நிறுவுவது
3.  இஸ்ரேலின் மத சமூகம் சார்ந்       த நாட்டை நிறுவுவது. . மோசே எபிரேய பெற்றோரான லேவி கோத்திரத்தைச் சேர்ந்த 
அம்ராம் மற்றும்ஜோக்கெபேத்   ஆகியோருக்குப் பிறந்தார், அந்த நேரத்தில் இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந் தனர். அதிகரித்து வரும் எபிரேய மக்கள் தொகைக்கு அஞ்சி, புதி தாகப் பிறந்த அனைத்து எபிரே ய ஆண் குழந்தைகளையும் நைல் நதியில் வீசி எறியுமாறு பார்வோன் உத்தரவிட்டார். அவரது தாயார் அவரை மூன்று மாதங்கள் மறைத்து வைத்தார், ஆண்டவராகிய இயேசு கிறிஸ் துவும் இந்த பூமியிக்குள் மூன்று நாள் இருந்தார்.
 இந்தப் பெற்றோர்கள் செய்தது   பார்வோனின் கட்டளைக்கு எதி ரான நம்பிக்கை மற்றும் சிவில் கீழ்ப்படியாமையின் செயலா கும்.கூடைக்கு "பேழை" (எபிரேய தே) என்ற வார்த்தையின் பயன் பாடு இங்கு எவ்வாறு நோவா வின் குடும்பத்தை காக்க பேழை பயன்படுத்தியது போல், இங்கும் மோசேவை காப்பாற்ற பயன் படுத்தப்பட்டுள்ளது, இது தெய் வீக பாதுகாப்பை Divine Safety எடுத்துக்காட்டுகிறது.பார்வோனின் மகள் அழுகிற குழந்தை யைக் கண்டுபிடித்து, அவர் மீது இரக்கம் கொண்டு, அவரைத் தனது சொந்த மகனாகத் தத்தெ டுத்தாள். அருகில் பார்த்துக் கொண்டிருந்த மோசேயின் சகோதரி மிரியம், அவரது சொந் த தாயார் அவருக்குப் பாலூட்ட ஏற்பாடு செய்தார், இதன்மூலம் அவர் தனது எபிரேய பாரம்பரி யத்தைப் பற்றிய அறிவுடன் வள ர்க்கப்படுவதை உறுதிசெய்தார், அதே நேரத்தில் எகிப்திய அரச கல்வியையும் பெற்று,. எகிப்திய இளவரசராக வளர்ந்த மோசஸ், ஒரு தேசத்தை வனாந்தரத்தில் வழிநடத்தும் மகத்தான சவாலுக் குத் தனித்துவமாகத் தயாராக் கிய கல்வியையும், பயிற்சியை யும் பெற்றார்.சீனாய் மலையில் கடவுளிடமிருந்து தோரா (எபிரே ய வேதத்தின் முதல் ஐந்துபுத்தக ங்கள்) மற்றும் பத்து கட்டளைக ளைப் பெற்றார் . இந்த சட்டங் கள் மூலம் உடன்படிக்கையை உருவாக்கி இஸ்ரவேல் சமூகத்தி ன் தார்மீக மற்றும் குடிமை மரபுகளை நிறுவின.மோசேயின் தலைமையின் மூலம், அடிமைப்ப டுத்தப்பட்ட எபிரேய மக்கள் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின ரிலிருந்து, கடவுளுடன் உடன்படி க்கை உறவைக் கொண்ட 
ஒன்றுபட்ட தேசமாக மாற்றப் பட்டனர்.. மோசேயின் வருகை இஸ்ரேல் மக்களின் அடிமைத்த னத்தை மாற்றி விடுதலை தந்தது.
2.இறையருள் : ஆண்டவரின் வருகைக்கு உறுதியாய் இருத் தல்.God's grace: Being confident in the coming of the Lord. 2 தெசலே னிக் கேயர்.2:13-16,
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிக ளார் கி.பி. 51-ல் கொரிந்து நகரி லிருந்து  தெசலோனிக்கேயர் 1 மற்றும் 2 திருமுகங்களை எழுதி னார்.தெசலோனிக்கேயர்கள், கிரேக்கத்தின் தெசலோனிக்கே நகரில் இருந்த கிறிஸ்தவ சபை யினரைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வருகை குறித்து விளக்கம் அளிக்க திருமுகங்க ளை எழுதினார்.  அவர்கள் இரட் சிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுதுகிறார். ஏனெனில் அவர்கள் கடவுளின் வார்த்தை யை ஏற்றுக்கொண்டதன் மூலம் இரட்சிக்கப்பட்டனர். இரட்சிப்பு கர்த்தருடையது அவரே நம்மை இரட்சிக்கின்றவர்.திரு  தூதர் பவுல்  அவர்கள், தெசலோனிக் கியர்களுக்கு, உபத்திரவங்கள் இருந்தபோதிலும், கடவுள் அவர் களைத் தொடக்கத்திலிருந்தே இரட்சிப்பிற்காகத் தேர்ந்தெடுத் தார் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். கடவுளின் வார்த்தைக்கு அவர்கள் பதிலளி த்ததன் விளைவாக, அவர்களின் வாழ்வில் கடவுள் செயல்படு வதால், அவர்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார்கள்.பவுல் தெசலோனிக்கேயர்கள் குழப்ப மடையாமல் இருக்கவும், தவறா ன தகவல்களால் ஏமாற்றப்படா மல் இருக்கவும் அறிவுறுத்துகி றார், ஏனெனில் ஆண்டவரின் நாள் இன்னும் வரவில்லை.  . ஆண்டவர் வருகை வரையிலும் அவர்கள் விசுவாசத்தில் உறுதி யாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் கூறுகிறார்..
3.இறையருள்: தாழ்மையான வர்களை உயர்த்துவது.God's grace: lifting up the humble. லூக்கா:1:46-59
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இப்பகுதியானது தாழ்மை யானவர்களை உயர்த்துவதே இறை அருள் என்று நமக்கு லூக்கா நற்செய்தியாளர் விளக் குகிறார்.இது இயேசுவின் தாய் மரியாள் கடவுளைப் போற்றிப் பாடிய பாடலைக் குறிக்கிறது. இதற்கு  மாக்னிஃபிகாட் ("Magnificat) என்பது  மரியாளி ன் பாடல் என்றும் அழைக்கப்ப டுகிறது, மாக்னிஃபிகாத்  என்ப து லத்தீன் மொழியில் "என் ஆன்மா இறைவனையே ஏற்றிப் போற்றி மகிழ்கின் றது" என்று பொருள்படும்.இது மிகப் பழமையான எட்டு கிறிஸ்
தவ பாடல்களில் ஒன்றாகும். 
இது திருத்தூதர்  லூக்கா நற்செ ய்தியில் மட்டும் இந்த பாடல் காணப்படுகிறது. மரியா, திரு முழுக்கு யோவானின் தாயான எலிசபெத்தைச் சந்தித்தபோது கடவுளைப் புகழ்ந்து இந்தப் பாடலைப் பாடினார். மரியாளின் பாடல் கடவுளின் சக்தி, கருணை மற்றும் நீதி ஆகியவற்றின் ஆழமான வெளிப்பாடு என்று கூறுகிறது.திருச்சபையின் சிறந் த பாடல்களில் ஒன்றாக மாறிய பகுதிதான் மாக்னிஃபிகாட் என் பது மரியாளின் பாடல். மரியாள் உலகத் திருச்சபையின் தாய்   "அன்னை" (Mater Ecclesiae) என்று பல நூற்றாண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறார். இப்பாடலின் கருத்து என்ன வென்றால்:
கடவுளின் கருணை அவர் மீது பயபக்தியுடன் வாழ்பவர்களுக்கு தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.கடவுள் தமது கை யை உபயோகித்து வலிமையை க் காட்டுகிறார்.இதயங்களில்  பெருமையுள்ளவர்களை அவர் சிதறடிக்கிறார்.அவர் பசியுள்ள வர்களுக்கு நல் உணவால்  நிரப்புகிறார், தாழ்மையானவ ர்களை  உயர்த்துகிறார்.ஆனால் செல்வந்தர்களை வெறும் கைக ளோடு அனுப்புகிறார். ஆனால் கடவுள் செல்வந்தர்களை வெறுக்கவில்லை அவர்கள் செல்வத்தை தான் இருக்கிறார்.
இப்பாடல் கடவுளின் மூன்று புரட்சிகளைப் பற்றிப் பேசுகிறது.:
கிறிஸ்தவம் ஒவ்வொரு மனித னிலும் ஒரு புரட்சியையும், உலகில் புரட்சியையும் ஏற்படுத் துகிறது. ஏற்படுத்திக் கொண்டு வருகிறது கிறிஸ்தவத்தின் புரட்சி மனித நேயத்தின் அடிப்படையானது இயேசுவின் அன்பை பிரதிபலிப்பது.
1.அவர் பெருமையுள்ளவர்களை அவர்களின் இதயங்களின் திட்டங்களில் சிதறடிக்கிறார். அது ஒரு தார்மீக புரட்சி. கிறிஸ்தவம்என்பதுபெருமை யின் மரணம். Christianity is the death of pride.(William Barclay) ஏனென்றால் ஒரு மனிதன்தனது வாழ்க்கையை கிறிஸ்துவின் வாழ்க்கையை விட வேறுபடுத்தி னால், அது அவனிடமிருந்து பெருமையின் கடைசி தடயங்க ளையும் the last vestiges of pride கிழித்துவிடும்.
2.அவர் வலிமையானவர்களை வீழ்த்துகிறார் - தாழ்மையானவ ர்களை உயர்த்துகிறார். அது ஒரு சமூகப் புரட்சி.(a social revolution.) கிறிஸ்தவம் உலகின் முத்திரை கள் மற்றும் கௌரவத்திற்கு world's labels and prestige. முற்றுப்புள்ளி வைக்கிறது.
3.பசியால் வாடியவர்களை அவர் நிரப்பியுள்ளார்... பணக்காரர்க ளை காலியாக அனுப்பிவிட்டார். அது ஒரு பொருளாதாரப் புரட்சி.  (An economic revolution.) கிறிஸ்தவமல்லாத சமூகம் என்ப து ஒரு பொருள் ஈட்டும் சமூகம், அங்கு ஒவ்வொரு மனிதனும் தன்னால் முடிந்தவரை குவிக்கத் துணிகிறான். ஒரு கிறிஸ்தவ சமூகம் என்பது, யாரும் அதிகமா க வைத்திருக்கத் துணியாத ஒரு சமூகம், அதே நேரத்தில் மற்றவர் களிடம் மிகக் குறைவாகவே உள்ளது, அங்கு ஒவ்வொரு மனி தனும் விட்டுக்கொடுக்க மட்டுமே பெற வேண்டும்.
 நண்பர்களே! இறை வருகையி ன் காலம், நம்மை விட தாழ்ந்த நிலையில் உள்ளோரை கை கொடுத்து தூக்கி விடுவதே இக் கிறித்துவின் வருகை  நம்மை வலியுறுத்துகிறது கிறிஸ்துவை போல், ஒவ்வொரு கிறிஸ்தவ னும் தாழ்நிலையில் உள்ளோரு க்கு நம்பிக்கை ஊட்டுவதே இத்தலைப்பின்  மிகச்சிறந்த கருத்தாகும் அவ்வழியில் செல்ல கடவுள் நமக்கு அருள் புரிவாராக ஆமென். 

Prof. Dr. David Arul Paramanandam.
Sermon Writer.
www.davidarulsermoncentre.com.
www.davidarulblogspot.com










ஆண்ட்ரூ அப்போஸ்தலன்
.          பீட்டர்பால்ரூபன்ஸ்எழுதிய செயிண்ட் ஆண்ட்ரூ ( சி.  1611.
முதலில் அழைக்கப்பட்ட அப்போஸ்தலன் மற்றும் தியாகி.

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.