வன்முறைச் சூழலில் அமைதி. (236)Peace in the contex of Violence. 1 சாமுவேல் 24: 1-12. திருப்பாடல் 52. உரோமையர் 12: 14-21.மத்தேயு 5: 38-45

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார   ஞாயி றுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," வன்முறைச் சூழலில் அமைதி. Peace in the context of Violence. 
 அன்பானவர்களே! வன்முறை சூழல் என்றால் என்ன? என்பதை சிந்திப்போம்.
வன்முறைச் சூழல் என்பது மற்ற வர்களுக்கு உடல், மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் ஒரு நிலைமை யாகும். இது உடல் ரீதியான தாக் குதல்கள், உளவியல் துன்புறுத் தல்கள், பாலியல் வன்முறை, அவமானப்படுத்துதல், அச்சுறுத் துதல், பொருளாதார ரீதியாக அடக்குதல், பின்தொடர்வது அல்லது ஒடுக்குவது போன்ற பல்வேறு வடிவங்களில் வெளிப் படலாம். குடும்ப வன்முறை மற்b றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்றவை இதன் பொதுவான வகைகளாகும். ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது போர் தொடுப்பதும் ஒடுக்குவது ம் அச்சுறுத்துவதும் வன்முறை தான். புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜூலியட்" (Romeo and Juliet, )நாடகத்தில், இரண்டு பகைமையான குடும்ப ங்களுக்கு இடையேயான வன்மு றைச் சூழல்தான் கதைக்கான அடிப்படையாகும். இது ஒரு தெய்வீக காதல் கதை. வெரோனா நகரில், மாண்டேகு மற்றும் கபுலெட் ஆகியஇரண்டு குடும்பங்களுக்குஇடையேநீண்ட காலமாக பகைமை நிலவுகிறது. இவர்களின் பிள்ளைகள்தான் ரோமியோ, ஜூலியட். இந்த வன் முறை மற்றும் வெறுப்பு அவர்க ளின் சமூகத்தில் வேரூன்றி உள் ளது. வன்முறையால் பாதிக்கப் பட்டு மோதலின் முடிவில், இரண் டு உயிர்கள் பலியான பிறகு, இரண்டு குடும்பங்களும் ஒரு வித அமைதிக்கு வருகின்றன. " ஷேக்ஸ்பியர் தனது படைப்பு களில் வன்முறைக்கும் அமைதி க்கும் இடையிலான கோடுகளை அடிக்கோடிட்டு காட்டுகிறார். இந்த வன்முறைச் சூழலில், ரோமியோ மற்றும் ஜூலியட் ஒருவருக்கொருவர் காதலித்து, ரகசியமாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களின் காதல், இரண்டு குடும்பங்களு க்கு இடை யேயான வன்முறை யைத் அதிகரிக்க செய்கிறது. இதனால், அவர்களின் துரதிர் ஷ்டவசமான மரணம் நிகழ்கிற து. இந்த வன்முறை மரணம் மட்டுமே இரு குடும்பங்களையும் ஒன்றிணைத்து, அவர்களின் நீண்டகால வெறுப்பையும் சண் டையையும்  பின்பு முடிவுக்கு  கொண்டு வருகிறது. இந்த நாடகம், வன்முறையின் பேரழி வையும், அது கொண்டு வரும் அழிவையும் காட்டுகிறது.
இது "வன்முறை மகிழ்ச்சிகளு க்கு வன்முறை முடிவுண்டு" These violent delights have violent ends". என்ற கருத்தை வலியுறுத் துகிறது.
அன்பர்களே!நம் திருவிவிலியத் தில் இஸ்ரேலியருக்கும் பாலஸ் தீனருக்கும் தொடர்ந்து நடைபெ றும் சண்டைகள் 4000 ஆண்டின்  வன்முறை சூழலான வரலாறு ஆகும்.இதுசிம்சோன் பெலிஸ் தியர்கள் சண்டை தொடங்கி தாவீது கோலியாத்தும் மற்றும் இப்போது நடக்கின்ற இஸ்ரேல் காசா சண்டைகள்வரை ஒரு இனப் பகையாகும். வன்முறை சூழலில் பல உயிர்கள் பலியான பிறகு தான் அங்கு போர் நித்தம் நடைபெற்றது. இந்த இரண்டு இனங்களுமே ஆபிரகாமின் இனங்கள் தான்.
1. வன்முறை சூழலில் தாவீது.
David in the context of Violence. 1 சாமுவேல் 24: 1-12
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!தீர்க்கதரிசி சாமுவேலால் திருப்பொழிவு செய்யப்பட்ட சவுல், ஒன்றுபட்ட இஸ்ரேலின்  முடியாட்சி செய்த முதல் மன்ன ர் ஆவார். 
தாவீது பெலிஸ்தியர்களை வென்றதும், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டதும் சவுலின் பொறாமைக்கு முக்கிய காரண ம். குறிப்பாக, இஸ்ரேலின் பெண்கள் தாவீதை  புகழ்ந்து பாடினர். இது சவுலுக்கு கோபத் தை ஏற்படுத்தியது."சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார், தாவீது பத்தாயிரம் பேரைக் கொன்றார்" என்ற பாடலைக் கேட்ட போது சவுல் கோபமடைந் தார்.  தாவீது தன்னைவிட அதிக மாக புகழ் பெறுவதையும், தன்னைவிட பெரிய செயல்க ளைச் செய்வதையும் கண்டு சவுல் அஞ்சினார். மேலும், தாவீது அரச அரியணையைக் கைப்பற்றுவார் என்றும் சவுல் பயந்தார்.
 நட்பின் இலக்கணம் யோனத்தான்:
அன்பானவர்களே! திருவிவிலிய த்தில் காணப்படும்  மிகச்சிறந்த நட்புகளில் ஒன்று  சவுல் அரசனி ன் மகன் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இடையேயான  நட்பாகும்.  குறிப்பிடப்பட்டுள்ள  இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்தான நேரங்களில் ஒருவரு க்கொருவர் ஆதரவாக இருந்த னர். இந்த நட்பு, உடன்படிக்கை மற்றும் ஆழமான அன்புடன் பிணைக்கப்பட்டது. 
யோனத்தான் தாவீதை தன் சொந்த ஆத்துமாவைப்போல் நேசித்தான், மேலும் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பாதுகாப்பான உடன்படிக்கை ஏற்பட்டது.
 தாவீது, சவுலின் கோபத்திலிரு ந்து தப்பிக்க மறைந்திருந்த போது, யோனத்தான் ரகசியமாக அவனைச் சந்தித்து, சவுலின் திட்டங்களை அவனுக்குத் தெரியப்படுத்தினான்.இருவரும் பிரியும் போது, மனம்விட்டு பேசி அழுதனர். எதிர்காலத்தில் சந்திக்க முடியாமல் போகும் என்ற ஏக்கம் அவர்களுக்கு இருந்தது.
யோனத்தான், தனது தந்தை  சவுல்  அரசரிடம் பேசி, தாவீது க்காகப் பாதுகாப்பான இடமளி த்தான்.
யோனத்தான் தாவீதைப் பற்றித் தம் தந்தை சவுலிடம் நல்லவித மாகப் பேசி, “அரசர் தம் அடியா ன் தாவீதின் பொருட்டு பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில், அவன் உமக்குத் தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும். அவனுடைய செயல்கள் உம் அரசில் மிகவும் பயனுடையவாய் இருந்தன. அவன் தன் உயிரைப் ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பெலிஸ்தியனைக் கொன்றான்;
சவுல் யோனத்தானின் வார்த் தைகளைக் கேட்டார். அதனால் சவுல் “வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவனை கொலை செய்யப்படமாட்டான்” என்றான்.ஆனாலும், சவுல் பலமுறை தாவீதைக் கொல்ல முயன்றார், குறிப்பாக தாவீது வீணை வாசிக்கும்போது அவர் மீது ஈட்டியை எறிந்தார், ஆனால் அது தோல்வியடைந்தது. இவை கள் எல்லாம் வன்முறை சூழல் தான்.
தாவீது தன் சொந்தப் படைகளை திரட்டியிருந்தான், சவுலுடன் போரிட்டிருக்கலாம், ஆனால் அவன்அவ்வாறுசெய்யவில்லை. அவன் சவுலை அரசராக மதித் தான். தான் எப்போது அரசராக  வேண்டும் என்பதை அறிய கர்த் தரை தாவீது நம்பினான்.
தாவீது, தன்னுடன் இருந்த 600 வீரர்களுடன் பல இடங்களில் பதுங்கி வாழ்ந்தார். இறுதியாக சவுல் ஏன்கேதிக் (Engedi) பாலை நிலத்தின் செங்குத்தான மலைப் பகுதிக்குப் போய், அங்கி ருந்த குகைகளில் தங்கினார். தன் படை வீரர்களை விட்டு தனி யாக ஒரு குகைக்குள் சென்ற சவுலுக்கு, அங்கே தாவீதும் அவ ரது படையும் பதுங்கி இருந்தது தெரியவில்லை.
தாவீது எழுந்து சத்தமில்லாமல் போய், சவுல் போட்டிருந்த கையி ல்லாத அங்கியின் ஓரத்தை மட்டும் வெட்டி எடுத்தார். அவரது ஆட்களோ தாவீதின் செயலால் கோபமுற்று சவுலைக் கொல்லத் துடித்து மறைவுகளிலிருந்து வெளிப்பட்டார்கள். ஆனால், தாவீது தன்னுடைய வீரர்களைத் தடுத்து, ஆட்களை எச்சரித்தார். சவுலோ இதைக் கேட்டு குகையி லிருந்து தலைதெறிக்க வெளி யே ஓடினார்.
என் எஜமானே, சவுல் ராஜாவே.. நீங்கள் குகையில் இருந்தபோது கடவுள் உங்களை எப்படி என் கையில் கொடுத்தார் என்பதை இன்றைக்கு நீங்களே பார்த்தீர் கள். ஆனால், நான்உங்களைக் கொல்லவில்லை. இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் உங்களுக்கு எதிராக எந்தப் பாவமும் செய்யவில் லை. ஆனால், நீங்கள் என் உயி ரை  வேட்டையாடத் துடிக்கிறீர்  கள். இஸ்ரவேலின் ராஜா யாரை த் தேடி அலைகிறார்? யாரைத் துரத்திக்கொண்டு வருகிறார்? உங்களுக்கும் எனக்கும் நடுவில்
நின்று கடவுளே தீர்ப்பு கொடுக் கட்டும். நீங்கள் எனக்குத் தீர்ப்புக் கொடுக்காதீர்கள்” என்றார். 
இந்த வன்முறை சூழலில் தாவீது அரசர் அமைதியை நாட்டினார். தாவீதுக்கு சவுளை கொல்ல பல வாய்ப்புகள் கிடைத் தன ஆனால் அவர் கொல்லவில் லை. ஏனென்றால் சவுல் கடவு ளால் திருப்பொழிவு பெற்றவர். அதை மதித்துநடந்தார்,அதனால் மன்னனாக உயர்த்தப்பட்டார்.
2.தீமையை நன்மையால் வெல்லுங்கள்.Overcome evil with good.உரோமையர் 12: 14-21
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே" திருத்தூதர் பவுல் அடிக ளார் ரோம திருச்சபைக்கு இந் நிருபத்தை  கி.பி. 57-ல் கொரிந் துவிலிருந்து அவர்களுக்கு எழுதினார். யூத மற்றும் யூதரல் லாத சீடர்களைக் கொண்ட விசுவாசிகளின் சமூகத்திற்கு வழிகாட்டுதல், அறிவுறுத்தல் மற்றும் ஊக்கத்தை வழங்குவத ற்கான இது ஒரு கடிதமாகும். ஸ்பெயினுக்கு நற்செய்தி செல்ல வேண்டும் என்பதை ரோமை பணித்தளமாகக் கொண்டு செயல்பட விரும்பி னார். அதற்காக அவர்களின் ஆதரவைப் பெறவும், ரோம திருச்சபையின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்யவும் நம்பிக்கை யுடன், அவர்களுக்கு எழுதினார். இந்தக் கடிதம் ஒரு தனிநபருக்கு அல்ல, ரோமில் உள்ள தேவாலய த்திற்கு எழுதப்பட்டுள்ளது. அப்படியானால், திருச்சபையின் விசுவாசிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கு கோடிட்டு காட்டுகிறார். முதலா வதாக, உங்களைத் துன்புறுத் துபவர்களை சபிக்காமல், அவர்களுக்கு ஆசி கூறுமாறு பவுல் அறிவுறுத்துகிறார். இது இயேசுவின் போதனைகளை, அதாவது பகைவரிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்ட ளையை எதிரொலிக்கிறது.
 வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மகிழ்வாரோடு மகிழுங்கள், அழுவாரோடு அழுங்கள். இது சமுதாய நல்லி ணக்கத்தையும், இரக்கத்தையும் காட்டுகிறது.நீங்கள் ஒருமனப்ப ட்டவர்களாய் இருங்கள்; உயர்வு மனப்பான்மை கொள்ளாமல், தாழ்நிலையில் உள்ளவர்களோ டு பழகுங்கள். உங்களையே அறி வாளிகளெனக் கருதி பெருமிதம் கொள்ள வேண்டாம். இது மனத் தாழ்மையின் அவசியத்தை வலி யுறுத்துகிறது.
பழிவாங்காதிருங்கள்தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள். இயலுமானால், உங்களால் முடிந்தவரை,  எல்லாரோடும் அமைதியுடன் வாழுங்கள். 
பழிவாங்குதல் கடவுளுக்கு உரியது என்றும், அவரே தக்க கைம்மாறு அளிப்பார் என்றும் வேதம் கூறுகிறது.உங்கள் எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடுங்கள்; அவன் தாகத்தோடு இருந்தால் குடிக்கக் கொடுங்கள். இவ்வாறு செய்வ தால், அவன் தலைமேல் எரிதழ லைக் குவிப்பீர்கள் (இது வெட்க த்தையும் மனந்திரும்புதலையும் குறிக்கிறது).
நன்மையால் தீமையை வெல்லு ங்கள்.. தீமை உங்களை வெல்ல விடாமல், நன்மையால் தீமையை வெல்லுமாறு பவுல் கட்டளையி டுகிறார். இந்த வசனங்கள், அன்றாட வாழ்வில், குறிப்பாக adversities (எதிர்ப்புகள்), வன் முறைச் நிறைந்த சூழ்நிலை களில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை வெளிப்ப டுத்த வேண்டும் என்பதை விளக்குகின்றன.
3. அன்பே அமைதியை ஏற்ப டுத்தும்.Love brings peace. மத்தேயு 5:38-45.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்! களே 
இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அமைதியின் நற்செய்தியாகும்.
கண்ணுக்குக் கண்" (An eye for an eye ")என்ற பழைய ஏற்பாட்டுச் சட்டத்தின் தவறான பயன்பாட் டை இயேசுஎவ்வாறு எதிர் கொண்டார் என்பதை விளக்கு கிறது. கண்ணுக்கு கண் என்ற
 இவ் வார்த்தை,பண்டைய பாபி லோனிய, விவிலிய, ரோமானிய மற்றும் இஸ்லாமிய சட்டங்களில் ஒரு தண்டனைக் கொள்கையா கும், இதில் பாதிக்கப்பட்டவருக் குச் செய்த அதே தீங்கு குற்றவா ளிக்கும்செய்யப்படுகிறது.என்பது விடுதலைப் பயணம்  21:23–27 Exodus.புத்தகத்தில் காணப்படும் சரியான பழிவாங்கும் சட்டம் ( லத்தீன் : lex talionis ),  ஒரு கட்ட ளையாகும். ஆனால் நம் ஆண்ட வர் இயேசு, தனிப்பட்ட பழிவாங் கலுக்கு பதிலாக, துன்புறுத்தலி ன் போது அன்பு மற்றும் தியாக மனப்பான்மையை வலியுறுத்து கிறார், மேலும் அவர் எதிரிகளுக் கும் அன்பு செலுத்தும்படி அறிவு றுத்துகிறார், இதனால் மக்கள் விண்ணரசு  தந்தையின் குமார ர்கள் போல இருப்பார்கள் என கூறுகிறார். இயேசு தீமையை எதிர்க்க வேண்டாம் என்று கற்பி க்கிறார். அதற்குப் பதிலாக, அவர் ஒரு கன்னத்தில் அடித் தால், மற்ற கன்னத்தையும் காட் டும்படி கூறுகிறார்.மேலும், ஒரு மைல் தூரம் செல்ல கட்டாயப்ப டுத்தப்பட்டால், மற்றொரு மைல் தூரம் செல்லும்படி கூறுகிறார். இயேசு அவருடைய சீடர்கள் "எதிரிகள் மீது அன்பு காட்டுங் கள், உங்களைத் துன்படுத்துபவ ர்களுக்காக ஜெபம் செய்யுங்க ள்" என்று கட்டளையிடுகிறார். இதன் மூலம், வானத்தில் உள்ள அவருடைய தந்தையின் அன்பி ன் வெளிப்பாட்டைக் காட்டுகி றார்.
இயேசு, பழைய ஏற்பாட்டின் சட்டத்தை தனிப்பட்ட உறவுகளு க்குப் பயன்படுத்த முடியாது என்று வலியுறுத்துகிறார். மாறாக, அன்பும், மன்னிப்பும் முக்கியம்.
 இந்த வசனங்களை குறித்து மார்ட்டின் லூத்தர், "இந்த வார்த் தை மிக உயர்ந்தது மற்றும் யாரும் அதை நிறைவேற்ற முடியாத அளவுக்கு கடினமான து" என்று கூறினார் - ஆனால் வன்முறை சூழல் நிறைந்த இவ்வுலகில் அன்பினால் தான் அமைதியை நிலைநாட்டு முடியும் என்பதை நமக்கு இவ் வசனங்கள் தெரிவிக்கின்றன.
 நண்பர்களே, திருவசனம் கூறுவது போல், "முடிந்த அளவு எல்லோரோடும் சமாதான மாய் இருங்கள்" என்ற வார்த் தைபடி, நம் தனிப்பட்ட வாழ்வி லும், குடும்ப வாழ்க்கையிலும், பணி செய்யும் இடங்களிலும், சமுதாயத்திலும்  வாழ கடவுள் நமக்கு அருள் புரிவாராக ஆமென்.

Prof. Dr. David. Arul Paramanandam.
Sermon Writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com.


 





.      House of King Saul

David and Saul (1885) by Julius Kronberg Wiki.

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.