திராட்சை செடியும் கொடிகளும். (234) Vine and Branches. எசேக்கியேல் : 37:15-23, திருப்பாடல்: 133, 1கொரிந்தியர் 12: 12-27, யோவான் 15:1-18. ஒன்றிப்பு ஞாயிறு.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரம் ஒன் றிப்பு ஞாயிறு (Unity Sunday) 
அதன் தலைப்பாக நமக்குகொடு க்கப்பட்டிருப்பது," திராட்சை  செடியும் கொடிகளும். Vine and Branches. ".
அன்பானவர்களே!  ஒன்றிப்பு  ஞாயிறு என்றால் என்ன? What is Unity Sunday?  ஒன்றிப்பு ஞாயிறு
என்றால் கத்தோலிக்க வரலாற் றின்படி புனித பவுல் மனம் திரும்பிய நாளான கி. பி 37, ஜனவரி 25ஆம் தேதி, அதாவ து ஒன்றிப்பு வாரத்தின்இறுதி நாளை கொண்டாடுகிறார்கள்.(18 to 25)
அந்நாளில் நாம் ஒருவருக்கொ ருவர் கூறுவதை மதிப்போம், கலந்துரையாடுவோம், மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப் போம் என்பதே அந்நாளின் மைய பொருளாகும். பவுலடியா ரின் மனமாற்றத்திற்குப் பிறகு தான் ஆண்டவரது நற்செய்தி உலகம் முழுவதும் பரவத் தொட ங்கியது, திருச்சபை இன்னும் அதிகமாக வலுப் பெற்றது. 
அன்பர்களே! இறைவாக்கினர்
ஏசாயா 5ம் அதிகாரத்தில் திரா ட்சைத் தோட்டத்தின் உவமை யை எடுத்துரைக்கிறார்.
கடவுள் தனது திராட்சைத் தோட் டத்தை (இஸ்ரேல் மக்கள் மற்றும் யூதாவையும்) வளமான பகுதி யில் நட்டு, பாறைகளை அகற்றி,  ஒரு காவற்கோபுரத்தைக் கட்டி, ஒரு திராட்சை ஆலையைத் (winepress) தயார் செய்து பராம ரித்த ஒரு அன்பான விவசாயி யாக சித்தரிக்கப்படுகிறார். அவரே,திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர்: கடவுளைக் குறிக் கிறது.
என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களைஅதுதந்ததென்ன? 
இது இஸ்ரேலின் பாவங்களுக்கு ஒரு குறியீடாகும்.அவரின் எதிர் பார்ப்பு கடவுள் இஸ்ரேல் நீதி மற் றும் நீதியைக் கண்டறிய விரும்பினார், ஆனால் அதற்கு பதிலாக வன்முறை மற்றும் அநீதி மட்டுமே கிடைத்தது.அவர் கள் நியாயத்தீர்ப்பை எதிர்கொ ள்ள வேண்டியிருக்கும். இது கடவுளின் அன்பு, இஸ்ரேலின் துரோகம் மற்றும் அவர்களுக்கு வரவிருக்கும் தண்டனையைப் பற்றிய ஒரு உவமை ஆகும்.
பழைய ஏற்பாட்டில், இஸ்ரேல் மீண்டும் மீண்டும் கடவுளின் திராட்சைத் தோட்டமாக அல்லது திராட்சைத் செடியாக சித்தரிக் கப்படுகிறது. "கர்த்தருடைய திராட்சைத் தோட்டம் இஸ்ர வேலின் வீடு" ( ஏசாயா 5:1-7 ). "ஆனாலும் நான் உங்களுக்கு ஒரு சிறந்த திராட்சைத் தோட்ட த்தை நட்டேன்" என்பது எரேமியா மூலம் இஸ்ரவேலுக்கு கடவுள் அனுப்பும் செய்தி ( எரேமியா 2:21 ).யாக இருந்தது.
 "நீ எகிப்திலிருந்து ஒரு திராட் சைத் தோட்டத்தைக் கொண்டு வந்தாய்" என்று சங்கீதக்காரன் பாடினார், கடவுள் தம் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவி த்ததை நினைத்து ( சங்கீதம் 80:8 ). அந்த திராட்சைத் தோட்டம் உண்மையில் இஸ்ரவேல் தேசத் தின் அடையாளமாக மாறியது.
1.ஒரே அரசரின் கீழ் ஒரே தேசம்.One Nation under one King. எசேக்கியேல் 37:15-23, 
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கிமு 930 ஆம் ஆண்டில் சாலமன் மன்னரின் மரணத்திற் குப் பிறகு,அவரதுமகன் ரெகொ பெயாமின் கடுமையான வரி கள் வடக்கு பழங்குடியினரால் நிராகரிக்கப்பட்டதால், யூதாவும் இஸ்ரேலும் பிரிந்தன , இதனால் அவர்கள் அரசர் யெரொபெ யாமின் (யெரொபெயாம் என்ப வர், இஸ்ரவேலின்  ராஜாவான சாலொமோனுக்குப் பிறகு, அரசு இரண்டாகப் பிரிந்த போது வடக் கு இராச்சியத்தின் முதல் 
அரசராக இருந்தவர். இவர் தாவீ தின் வம்சத்தைச் சேர்ந்தவர் அல்ல, மேலும் சாலொமோனின் நிர்வாகியாகப் பணியாற்றியுள் ளார்.இவர் சுமார் கிமு 930 முதல் 909 வரை, 22 ஆண்டுகள் ஆட்சி செய்தார்)
கீழ் பிரிந்து சென்றனர். தெற்கு யூதா மற்றும் பென்யமீன் கோத் திரங்கள் ரெகொபெயாமுக்கு விசுவாசமாக இருந்து, எருசலே மைத் தலைநகராகக் கொண்ட யூதா ராஜ்யத்தை உருவாக்கின.
இறைதூதர் எசேக்கியேல் (எசேக்கியேல் கி.மு. 6 ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த ஒரு தீர்க்கத ரிசி ஆவார், அவர் எரேமியா மற்றும் தானியேல் ஆகியோரின் காலத்தில் வாழ்ந்தார். அவரது ஊழியத்தின் காலம் முழுவதும் பாபிலோனாகும்) அவர்களின் முக்கியநோக்கமே, யூதாவையும் இஸ்ரவேலையும் (எப்பிரா யீம்) ஒரே நாடாக இனைப்பதே. அவர் இரண்டுகுச்சிகளை(யூதா,  இஸ்ரேல்) எடுத்து ஒன்றிணைப் பதன் மூலம் மீண்டும் ஒரே அர சாக ஒன்றிணைப்பதைக் Unity குறிக்கும் ஒரு தீர்க்கதரிசன மாகும். 
கடவுள், இறைவாக்கினர் எசேக் கியேலுக்கு ஆண்டவரின் அருள் வாக்கு எனக்கு அருளப்பட்டது; 
மானிடா, இரண்டு குச்சிகளை எடுத்து, ஒவ்வொன்றையும் எழுதும்படி கட்டளையிடுகிறார். முதல் குச்சி யூதாவுக்கும், இரண்டாவது குச்சி (எப்பிரா யீமின் கோல்) யோசேப்புக்கும் (இஸ்ரவேலின் வட ராஜ்யம்) உரியது. பின்னர், அவர் அந்த இரண்டு குச்சிகளையும் ஒன்றா க இணைக்கிறார். இது, பிளவு பட்ட யூதா மற்றும் இஸ்ரவேல் அரசுகளை மீண்டும் ஒன்றி ணையும் என்பதைக் குறிக்கிற து. கடவுள், அவர்களின் பிளவுப ட்ட ராஜ்யங்கள் ஒன்றிணைவ தையும், தங்கள் பாவங்களில் இருந்து மீண்டு வருவதையும் வெளிப்படுத்துவார்.அவர், அவர்களை இனிமேல் அசுத்த மான விக்கிரகங்களால் தங்க ளைத் தாங்களே களங்கப்படுத்த மாட்டார்கள் என்றும், அவர்கள் இனிமேல் பிரிந்து போக மாட்டா ர்கள் என்றும் கூறுகிறார்.இந்த வாக்குறுதிகள், எதிர்காலத்தில் தாவீது அவர்களுக்கு ஒரே ராஜாவாக இருப்பார் என்பதை யும், கடவுளின் உடன்படிக்கை எப்போதும் நிலைத்திருக்கும் என்பதையும் மேலும் விவரிக் கின்றன.கிறிஸ்துவே உண்மையான தாவீது, இஸ்ர வேலின் பண்டைய ராஜா; அவர் வல்லமையின் நாளில் யாரை விரும்புகிறாரோ, அவர்களை அவர் தம்முடைய நியாயத்தீர் ப்புகளின்படி நடக்கவும், தம் முடைய நியமங்களைக் கைக் கொள்ளவும் செய்கிறார்.
கிறிஸ்துவின் அரசு என்பது உலகியல் அரசாங்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு இறையாண் மை அரசு. அது அன்பு, நீதி, அமைதி, இரட்சிப்பு மற்றும் நித்திய வாழ்வை அடிப்படையா கக் கொண்டது. அந்த அரசுடன்
நாம் இணைந்து செயல் பட அழைக்கப்படுகிறோம்.
2.வேற்றுமையில் ஒற்றுமை யே திருச்சபை.The Church is unity in diversity".1கொரிந்தியர் 12: 12-27.
கிறித்துவின் அன்பர்களே! திரு தூதர் பவுல் அடிகளார் கொரிந்து திருச்சபையில் நிலவிய  தவறா ன கருத்துக்களாகக் கருதியவற் றை சரிசெய்ய  1 கொரிந்தியர் நிருபத்தை எழுதினார். கொரிந் துவில் உள்ள திருச்சபைக்குள் ஏற்பட்ட மோதல்களைப் பற்றி பல ஆதாரங்கள் பவுலுக்குத் தெரிந்தன.“உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது... நீங்கள் ஒவ்வொருவரும், 'நான் பவுலைச் சேர்ந்தவன்' அல்லது 'நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்' அல்லது 'நான் பேதுருவைச் சேர்ந்தவன்' அல்லது 'நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவன்...' என்று சொல்லு கிறீர்கள்.” பிரிவினை இருந்தது,
இந்த பகுதி, திருச்சபை உறுப்பி னர்களிடையே ஒற்றுமையும், வேற்றுமையில் உள்ள ஒற்றுமை யும், ஒவ்வொருவரும் ஒருவருக் கொருவர் சார்ந்திருப்பதன் முக் கியத்துவத்தையும் வலியுறுத்து கிறது.திருச்சபை என்பது கிறிஸ்துவின் சரீரம், அதில் பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வெவ்வேறு திறமைகளும், பணி களும் இருந்தாலும், எல்லோரும் ஒரே சரீரத்தின் பகுதிகள்.
பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொ ருவருக்கும் வெவ்வேறு ஆன்மீக வரங்களை வழங்குகிறார். இந்த வரங்கள் சபை வளர்ச்சிக்காக வும், கட்டி எழுப்பப்படுவதற்காக வும் கொடுக்கப்படுகின்றன.ஒரு உடலில் உள்ள பல உறுப்புகள் போல, கிறிஸ்தவர்களும் பல ராக இருந்தாலும், ஒரே சரீரமாக இருக்கிறார்கள். சபை உறுப்பி னர்கள் அனைவரும் விசுவாசத் தில் ஒன்றுபட்டுள்ளனர், மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் தாங்கி நிற்க வேண்டும்.ஒரு உறுப்பு இல்லாவிட்டால் சரீரம் முழுமையடையாது. அதுபோல வே, சபையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும், அவருடைய பங்கு சிறியதாகத் தோன்றினாலும், மிக முக்கியமானது.யூதர், கிரேக்கன், அடிமை, சுதந்திரமா னவன் போன்ற வேறுபாடுகள் கிறிஸ்துவில் இல்லை. 
நாம் எல்லாரும் ஒரே தூய ஆவி யால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமா கவும் பெற்றோம். அதன் அடிப்
படையில் தூய நற்கருணையில்
பங்கு பெருகிறோம். ஆக, அனை வரும் ஒரே சரீரத்தில் இணைந்து ள்ளனர், விசுவாசத்தின் அடிப்ப டையில், ஒழுக்கத்தின் அடிப்ப டையில், நற்செய்தி அளிப்பதில் மட்டுமே அவர்கள் அனைவரும் மதிப்புமிக்கவர்கள்.மிக முக்கிய மாக அனைவரும் திருச்சபை யோடு இணைந்திருத்தல் மிக அவசியமாகிறது.நாம் கிறிஸ் துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். இப்படி இருக்க நம் திருச்சபை யை நேசிக்கவும், கொடுக்கவும்
இனைந்து செயல்படவும் அழைக்கப்படுகிறோம்.
3.என்னில் நிலைத்திருங்கள். Abide in me. யோவான் 15:1-18
கிறித்துவின் அன்பர்களே! எண்ணில் நிலைத்திருங்கள் 
(, “abide”) என்ற வார்த்தை கிரேக்க மொழியான மெனோ என்ற சொல்லின் தோன்றலா கும்.(Greek, meno) 
இயேசுவே, உண்மையான திராட்சைச் செடி": இயேசு தம்மை திராட்சைச் செடியாகவும், தம் சீடர்களை அதன் கிளைகளா கவும் உருவகப்படுத்துகிறார். அவர் அவர்களுடன் நெருக் கமாக இணைந்திருக்க விரும்பு கிறார்.கிளைகள் அதாவது சீடர்களாகிய நாம் கனிகளைத் தருவது அவசியம். இல்லை யெனில், அவை அகற்றப்படும்.
இயேசு தன்னை உண்மையான திராட்சைச் செடி என்று அழைக் கிறார்.அலெத்தினோஸ் என்றால் உண்மை, உண்மையானது,
நான் கடவுளின் திராட்சைச் செடி, நீங்கள் என்னுடன் இணை ந்த கிளைகளாக இருக்க வேண் டும்."
தம்மைப் பின்பற்றுபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அவர் கூறுகிறார். அவற்றில் சில அழ கான கனி தரும் கிளைகள்; மற்ற வைகனிதராததால்பயனற்றவை . கனி தராத கிளைகளைப் பற்றி இயேசு பேசியபோது யாரைப் பற்றி யோசித்தார்? இரண்டு பதில்கள் உள்ளன. முதலாவதாக, அவர் யூதர்க ளைப் பற்றி யோசித்தார். அவர்கள் கடவுளின் கொடியின் கிளைகள். அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்ட னர்.   
இரண்டாவதாக,  நம்பிக்கை, செயல்கள் இல்லாத வார்த்தை கள் கொண்ட  கிறிஸ்தவர்க ளைப் பற்றி அவர் யோசித்துக் கொண்டிருந்தார்; பயனற்ற கிளைகள், எல்லா இலைகளும் கனிகளும் இல்லாத கிறிஸ்தவர் களைப் பற்றி அவர் யோசித்துக் கொண்டிருந்தார்.அவர்கள் செய்தியைக் கேட்டு அதை ஏற்று க்கொண்டு பின்னர் விழுந்து, ஒரு காலத்தில் சேவை செய்வ தாக உறுதியளித்த எஜமானரு க்கு துரோகிகளாக மாறினர்.
யார் பயனற்ற கிளைகள்? Who are the useless branches?
அன்பர்களே!  நாம் பயனற்ற கிளைகளாக இருக்க மூன்று வழிகள் உள்ளன.
1.இயேசு கிறிஸ்துவின் வார்த் தையை கேட்கவோ, படிக்கவோ மறுக்கலாம். நாம் அவருக்குச் செவிசாய்க்கலாம், பின்னர் எந்தச் செயல்களாலும் ஆதரிக்க ப்படாமல் அவருக்கு உதட்டள வில் சேவை செய்யலாம். 
2.நாம் அவரை எஜமானராக ஏற்றுக்கொள்ளலாம், பின்னர், வழியின் சிரமங்கள் அல்லது நாம் விரும்பியபடி செய்ய விரும்பும்போது, ​​அவரைக் கைவிடலாம். 
3. பயனற்ற தன்மை பேரழிவை அழைக்கிறது. பலனற்ற கிளை அழிவை நோக்கிச் செல்கிறது.
நாம் செடியாகிய கிறித்துவில்
இனைய மறுக்கலாம்.
கிறிஸ்துவில் நிலைத்திருப் பது என்றால் என்ன? What is abide in Christ?
அன்பர்களே,ஒரு திராட்சைக் கொடியானது கிளையுடன் இணைந்திருப்பது போல, கிறிஸ்துவுடன் இணைந்திருப்ப தன் மூலம் அவருடைய ஆவி யின் கனிகளைத் தருவதாகும். .அவருக்கும் நமக்கும்  இடையே ஒரு வலுவான உறவைப் பேணு வது ஆகும்.அவருடைய கட்டளை களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவருடன் ஐக்கியத்தில் ஈடுபடுகிறோம். இதன் மூலம் பரிசுத்த ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி போன்றவற்றை நாம் வெளிப்படு த்துகிறோம்.திராட்சைக் கொடியி ல் கிளை நிலைத்திருப்பதன் மூலம் பலன் தருவது போல, கிறிஸ்துவில் நிலைத்திருப்பது வாழ்க்கையில் அதிகப் பலனை த் தர உதவுகிறது. கிறிஸ்துவுட னான நமது ஒன்றியம் அனுபவி க்கப்பட வேண்டும். அவரின் இணைந்திருப்பது புதிய படை ப்பாக நம்மை மாற்றறுகிறது.  "நான் உங்களில் நிலைத் திருப்பது போல என்னில் நிலைத்திருங்கள்" என்பது நம்மில் இனைந்திருக்க முதன் மையானவராய் இருக்கிறார்.
நிலைத்திருக்காதவர்கள், தூக்கி எறியப்பட்டு, வாடி, எரிந்து போன ஒரு கிளைக்கு ஒப்பிடப்படு கிறார்கள். நமக்கு அந்த நிலை வேண்டாம். நாம் என்றும், எப் பொழுதும் கிறிஸ்துவில் இணை ந்திருப்போம். இணைந்து செயல்படுவோம். எவ்வாறு கிறிஸ்து திருச்சபையின் தலை வராய் இருப்பது போல, விசுவா சிகளாகிய நாமும் திருச்சபை யோடு இணைந்து செயல்பட அழைக்கப்படுகின்றோம் திருச்சபை ஒரு திராட்சை செடி விசுவாசிகளாக நாம் அனைவ ருமே கொடிகள் நாம் இணைந்து செயல்படும் பொழுது ஆண்ட வரின் நற்செய்தி பணிகள், மனித நேயப் பணிகள் சிறப்பாக இருக்கும். திருச்சபைகள் நாம் அதிக கனிகளை கொடுக்க ஒவ்வொரு வாரமும் உரமாகிய இறைச் செய்தியை நமக்கு கொடுக்கிறது நம்மால் ஆவியி ன் நற்கனிகளை அதிகமாக கொடுக்க முடியும். அதன் மூலம் ஆண்டுவருக்கு சீடர்களாக மாற முடியும். நற்கனிகள் கொடுக்க முடியாமல் ஒரு கிறிஸ்தவன் ஆண்டவருக்கு சீடனாக மாற முடியாது. நண்பர்களே!
இயேசு தம்மை நம்பிய யூதர் களை நோக்கி, "என் வார்த்தை களை நீங்கள் தொடர்ந்து கடைப் பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; 
 என்ற வார்த்தை நமக்கும் பொருத்தமாகும்.  கடவுள் நம்மை என்றும் அவர் வார்த்தையில் நிலைத்திருக்க, இணைந்திரு க்கவும்,  செயல்படுத்திட அருள் புரிவாராக ஆமென்.






Prof. Dr. David Arul Paramanandam.
Sermon writer.
www.davidarulsermoncentre.com
www.davidarulblogspot.com














Christ the True Vine, 17th century Greek painting by Leos Moskos. Source. Wikipedia. Thanks.


Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

நோய்களை குணமாக்குதல் . (182) Healing in Sickness. விடுதலை பயணம் 4:10-17,22, திருப்பாடல் 103:1-10, 2 கொரிந்தியர் 12:1-10, யோவான் 9:1-7. நலம் நல்கும் திருப்பணி ஞாயிறு.