இறை வருகையின் காலம். Advent. 4th Sunday.மாரநாத்தா : காத்திருப்பில் வாழ்வு. (240) Maranatha: Life in Waiting. ஏசாயா 2: 2-5, திருப்பாடல்: 27, திருவெளிப்பாடு : 22: 10-21, லூக்கா: 12: 32-40.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை வருகையின் நான்காம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, மாரநாத்தா : காத்திருப்பில் வாழ்வு. Maranatha: Life in Waiting. இறைவருகையின் Advent நான்காம் ஞாயிறே இறுதியாகும்.
மாராநாத்தா என்றால் என்ன?
What is Maranatha?.
அன்பானவர்களே! வில்லியம் பார்க்ளே (William Barclay) அவர்களின் விளக்கு உரையில் மராநாதா" (மராநாதா)என்பது "எங்கள் ஆண்டவரே, வாருங் கள்!" அல்லது "வாருங்கள், கர்த்தராகிய இயேசுவே" என்று பொருள்படும் ஒரு சக்தி வாய்ந்த இயேசு பேசிய மொழி யான அராமைக் சொற்றொடர் ஆகும், இது கிரேக்கம் அல்ல, ஆனால் அராமைக் மொழி, ஆரம்பகால திருச்சபையில் அதன் பண்டைய வேர்களை வலியுறுத்துகிறது திருவிவலியத்தில் ஒரே ஒரு முறை பயன்படுத்தும் வார்த் தை.இது இயேசுவின் உடனடி வருகைக்காக ஆரம்பகால கிறிஸ்தவர்களின் தீவிரமான, அவசரமான விண்ணப்பம் மற்றும் எதிர்பார்ப்பை வெளிப்ப டுத்துகிறது, இது ஆண்டவரது இரண்டாவது வருகைக்கான
பரோசியா (Parousia) என்ற கிரேக்க வார்த்தை ஆழ்ந்த பக்தி மற்றும் தயார் நிலையை பிரதிபலிக்கிறது, இது பெரும் பாலும் 1 கொரிந்தியர்16:22 இல் திருத்தூதர் பவுல் அடிக ளார்,ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப் படுக! மாரனாத்தா! என வேண்டுகிறார். இது ஆழ்ந்த இறையியல் கருத்தை உடையது.
"அனாதீமா"(anathema ) சபிக்க ப்பட்டவர்)(accursed) உடன் ஒரு புனிதமான அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத வரை கடுமையாக எச்சரிக்கி றது.
முதன்மையாக "எங்கள் ஆண்ட வரே, வாருங்கள்!" என்றாலும், விசுவாசியின் இதயத்தில் அவர் இருப்பதன் அர்த்தத்தில் "எங்கள் ஆண்டவர் வந்துள் ளார்" என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
மாரநாத்தா என்பது ஒரு பொது வான வாழ்த்து அல்லது பிரார் த்தனை, இது பரோசியா Parousia (Second Coming). (இரண் டாம் வருகை) க்கான நம்பிக்கை மற்றும் தயார் நிலையைக் குறிக் கிறது.
அன்பானவர்களே! கொரிந்திய தேவாலயங்கள் முதன்மையாக தினசரி தொடர்பு மற்றும் வேத வசனங்களுக்கு கொய்னே கிரேக்க மொழியைப் பயன்படு த்தினர் , ஏனெனில் அது ரோமா னிய மாகாணத்தின் பொதுவா ன மொழியாக இருந்தது. கிரேக்கத்தை மட்டுமே அறிந் த கொரிந்து திருச்சபையில் திருதூதர பவுல் அடிகளார் கிரேக்கம், எபிரேயம், லத்தீன் மொழிகளில் தேர்ச்சிப்பெற்ற வர், ஏன் அராமைக் மொழியைப் பயன்படுத்துகிறார் என்பது ஆரம்பகால திருச்சபையின் வழிபாட்டு முறைகளில் இது ஒரு பொதுவான கூறு என்பதை நிரூபிக்கிறது. அராமிக் ஆண்ட வராகிய இயேசு கிறிஸ்து பேசிய மொழி. மாரநாத்தா
இநத வார்த்தை, ஆவியில் எழும்
வார்த்தை. நாம் எவ்வாறு, அல்லேலூயா, Praise the Lord என ஆவியில் நிறைந்து சொல் கிறோமோ, அவ்வாறு பவுல் அடிகளார், ஆண்டவரை நேசிக் காதவர்களை உணர்ச்சியுடன் சபிக்கிறார். இறை வேண்டலாக ஆண்டவரே சீக்கிரம் வாரும் என அழைக்கும் வார்த்தை தான், மாரநாத்தா.
திருதூதர் பவுல் அடிகளார்
கிழக்கு ரோமப் பேரரசின் பொது மொழியான கிரேக்க மொழியி ல் சரளமாகப் பேசக்கூடியவராக இருந்தார் , மேலும் தனது அனை த்து நிருபங்களையும் இந்த மொழியில் எழுதினார். நற்செய்திகள் எழுதாத காலத்தி ற்கு முன்பே திருத்தூதர் பவுல் அடிகளார் திருச்சபைகளுக்கு நிருபங்களை எழுதினார். கிரேக் க மொழி பரவலாக இருந்த தர்சஸ் Tursus என்ற கிரேக்க நகரத்தில் அவர் வளர்ந்தார்.
எருசலேமில் மதிப்புமிக்க ரபீ கமாலியேலின் கீழ் பயிற்சி பெற்ற உயர் கல்வி கற்ற பரிசே யராக, பவுல் எபிரேய வேதாகம த்தில் நன்கு தேர்ச்சி பெற்றவரா கவும், அந்த மொழியைப் பேசி யவராகவும் இருந்தார். திருத்தூதர் Acts புத்தகத்தில், அவர் ஒரு யூதக் கூட்டத்தினரிடம் எபிரேய மொழியில் உரையாற் றுவதை நாம் காண்கிறோம்.
பவுல் எருசலேமில், குறிப்பாக ஆலயப் பகுதியில் (திருத்தூதர் 21:37-22:2)ஒரு விரோதமான யூதக் கூட்டத்தினரிடம் எபிரேய மொழியில் (பொது மொழியான அராமைக்) பேசினார்
அராமைக் மொழி, யூதேயா மற் றும் கலிலேயாவில் அப்போது பரவலாகப் பேசப்பட்ட மொழியா க இருந்தது. அவரது பின்னணி மற்றும் பயணங்களைக் கருத் தில் கொண்டு, அவருக்கு அராமைக் மொழி பற்றிய அறிவு நிச்சயமாக இருந்தது, மேலும் பேதுரு போன்ற பிற ஆரம்ப கால கிறிஸ்தவர்களுடன் தொட ர்பு கொள்ள அதைப் பயன்படு த்தினார்.ஒரு ரோமானிய குடிமக னாக, அவர் ரோமானியப் பேர ரசின் அதிகாரப்பூர்வ நிர்வாக மொழியான லத்தீன் மொழியை ஓரளவு அறிந்திருக்க வாய்ப்பு ள்ளது.He was a Man of Linguistic.
காத்திருப்பில் வாழ்வு. Life in Waiting.
அன்பர்களே! நமது காத்திருப்பு காலம் என்பது கடவுளின் மகத் தான திட்டங்களுக்கு நம்மைத் தயார்படுத்தும் செயல் முறை யின் ஒரு பகுதியாகும்.
யோசேப்பு தன் சொந்த சகோத ரர்களால் அடிமையாக விற்கப் பட்டு, பின்னர் எந்தத் தவறும் செய்யாததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் யோ சேப்பு கடவுளுக்கு உண்மையாக இருந்து, கடவுளின் கண்களுக்கு முன்பாகச் சரியானதைச் செய்த தால், கடவுள் யோசேப்புக்கு அளித்த வாக்குறுதியை மதித்து, பார்வோனின் கீழ் எகிப்தின் மீது அவரை ஆட்சியாளராக நியமித் தார். இதற்காக எகிப்தில் ஆட்சிக் கு வருவதற்கு முன்பு 13 ஆண்டு கள் துரோகம், அடிமைத்தனம் மற்றும் பொய்யான சிறைவாச த்தைத் தாங்கினார்.
கடவுள் தாவீதுக்கு இஸ்ரவே லின் மீது ராஜாவாக இருப்பார் என்று வாக்குறுதி அளித்தார், ஆனால் அது உடனடியாக நடக்க வில்லை.
தன்னைக் கொல்ல முயன்ற சவுல் ராஜாவை விட்டு ஓடிப் போய் தாவீது பல வருடங்கள் கழித்தார். சவுல் ராஜாவைக் கொல்ல தாவீதுக்கு பல வாய்ப்பு கள் கிடைத்தன, ஆனால் அவர் எப்போதும் கடவுளுக்கு முன்பாக சரியானதைச் செய்யத் தேர்ந் தெடுத்தார். தாவீது சவுலிடம் , “ கர்த்தரால் திருமுழுக்கு செய்யப்பட்ட என் எஜமானு க்கு நான் இப்படிச் செய்யாம லும், என் கையை அவர்மேல் வைக்காமலும், கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் செய்யப் பட்டவர்” என்று கூறுகிறார்.. அவர் உடனடியாக அரசராக வேண்டும் என்ற எண்ணம் இருந் ததே இல்லை அந்த காலத்திற் காக காத்திருந்தார் ஏற்ற காலத் தில் கடவுள் அவரை அரசராக ஒன்றிணைந்த இஸ்ரேல் நாட்டி ற்கு அரசராக கடவுள் உயர்த்தி னார்.
கர்த்தருக்காகக் காத்திருப்பது பொறுமை, நம்பிக்கை மற்றும் உள் வலிமையை உருவாக்கு கிறது , குணத்தை வளர்க்கிறது,
விசுவாசத்தையும் நம்பிக்கை யையும் வளர்க்கிறது: காத்திருப்பு விசுவாசத்தைச் சோதித்துப் பலப்படுத்துகிறது, சங்கீதம் திருப்பாடல் 27:14- ல் "நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 27:14. எனக் கூறப்பட்டுள்ளது.
"பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக் கியிருப்பதுபோல, பணிப் பெண்ணின் கண்கள் தன் தலை வியின் கைதனை நோக்கியிருப் பதுபோல, எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும் வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். திருப் பாடல் கள்(சங்கீதங்கள்) 123:2 என சங்கீதக்காரன் கூறுகிறான்.
திரு விவிலியத்தில் காத்திருந்த முக்கிய நபர்கள்:
அன்பானவர்களே முற்பிதா வான ஆபிரகாமும் சாராவும்: கடவுளின் வாக்குப்பண்ணப்பட்ட மகன் ஈசாக்கு பிறப்பதற்காக 25 ஆண்டுகள் காத்திருந்தனர்.
நோவா: பேழையைக் கட்டி,பெரு வெள்ளத்திற்காக 120 ஆண்டு கள் காத்திருந்தார்.
யாக்கோபு முதலில் லேயாளை மணக்க ஏமாற்றப்பட்ட பிறகு, ரேச்சலை மணக்க 14 ஆண்டு கள் உழைத்தார் .
அன்னாள்: கடவுள் பதிலளிப்பத ற்கு முன்பு, ஒரு மகனுக்காக (சாமுவேல்) பல வருடங்களாக உருக்கமாக ஜெபித்தாள்.
யோபு: தேவனுடைய நோக்கத் தை நம்பி, மகத்தான துன்பம், இழப்பு மற்றும் துயரத்தின் ஊடா கக் காத்திருந்தார்.
இஸ்ரவேலர்கள்: வாக்குப் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு 400 ஆண் டுகள் அடிமைத்தனத்திலும், பின்னர் 40 ஆண்டுகள் வனாந் தரத்திலும் காத்திருந்தனர். இயேசு: தனது பொது ஊழியத் தைத் தொடங்குவதற்கு முன்பு 30 ஆண்டுகள் காத்திருந்தார்.
அன்பர்களே! நாம் யாருக்காக எதற்காக காத்திருக்க வேண்டும்.
நம்முடைய காத்திருப்பு, "மாரநா த்தா, எங்கள் ஆண்டவரே வாரும் என ஆண்டவரின் இரண்டாம் வருகைக்கு இந்த இறைவரு கை காலத்தில் நாம் காத்திருக்க வேண்டும். இறை வருகை காலம் என்பது டிசம்பர் மாதத் திற்கு மட்டுமல்ல அனைத்தும் நாட்களுக்கும், மாதங்களுக்கும் உடன்பட்டவை. ஆண்டவரின் விண்ணரசு இவ்வுலகில் வரும் வரை அவர் வருகைக்காக தயார் நிலையில் புத்தி உள்ள கன்னிகை போல் wise virgins.காத்திருக்க வேண் டும்.
1.மகிமையான ராஜ்யத்தின் வருகை. The Arrival of a Glorious Kingdom.ஏசாயா 2:2-5.
அன்பானவர்களே! இறைவாக் கினர் ஏசாயா மகிமையான அரசின் வருகையை விவரிக்கும் ஒரு புதிய தீர்க்கதரிசனத்தை ஏசாயா இங்கு தொடங்குகிறார்,
சீயோன் கர்த்தருடைய ஆலய மலை":அது கடவுளின் வசிப்பிட ம். எல்லா உலக சக்திகள் மற்றும் தத்துவங்களுக்கும் மேலாக உயர்ந்ததாகி, நிலைபெற்றதைக் குறிக்கிறது."எல்லா தேசங்க ளும் அதை தேடி ஓடிவரும்": கடவுளின் வழிகளைக் கற்று க்கொள்ள புறஜாதியினர் ஆர்வ த்துடன் எருசலேமுக்கு திரண்டு வருவ தைப் பற்றிய ஒரு தரிச னம்,
ஏனெனில், சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும், எருச லேமிலிருந்து கர்த்தரின் வசனம் புறப்படும்" என்கிறார். இது உண்மையான வழிபாட்டின் உல களாவிய பரவலைக் குறிக்கிற து. ஒரு "தேசம் இன்னோறு தேசத்திற்கு எதிராக வாளை உயர்த்தாது": போரை முற்றிலு மாக நிறுத்துவதற்கான வாக்கு றுதி அளிக்கிறார்.
"அவர்கள் இனி யுத்தத்தைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்": இராணுவப் பயிற்சியும் ஆயுத ங்களும் வழக்கற்றுப் போய், தங்கள் வாள்களை கலப்பை களாகவும், ஈட்டிகளைஅரிவாள் களாக அடித்து கொள்வார்கள்.
யாக்கோபின் வீட்டாரே, வாருங் கள், கர்த்தருடைய வெளிச்சத் தில் நடப்போம்": கடவுளின் மக்கள் அவருடைய சத்தியத் தையும் கட்டளைகளையும் பின்பற்றும்படி ஒரு நேரடி வேண்டுகோளை வைக்கிறார்..
ஆனால், அன்பர்களே! தற்கால இஸ்ரவேலர் இறைவாக்கினர் வார்த்தைக்கு புறம்பாக செயல் படுகின்றனர்.
"கர்த்தருடைய ஒளி": கடவுளின் வெளிப்பாடு, போதனை மற்றும் பிரசன்னத்தைக் குறிக்கிறது.
"நாம்": தனிப்பட்ட செயலை மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் கூட்டுறவு ஆகியவற்றில் ஒரு
கூட்டுப் பயணத்தை வலியுறுத் துகிறது.
கடைசி நாட்கள்" என்பது மேசி யானிய யுகத்தின் வருகையை, ஒரு புதிய சகாப்தத்தின் வருகை யைக் குறிக்கிறது, அப்போது கடவுளின் மகிமையான அரசு வரும். இந்த புதிய அரசில் கட வுள் இஸ்ரேலுடனும் உலகத்து டனும் ஒரு புதிய உறவைக் கொண்டுவருவார். கர்த்தருடை ய ஆலயமாகிய மலை, மலை களில் மிக உயர்ந்ததாக நிறுவப் படும் என்று ஏசாயா கூறுகிறார்.
கடவுள் தம்முடைய மீட்கப்பட்ட மக்களுக்கு ஒரு சிறப்பு ஆசீர்வா தமாக இஸ்ரவேலுக்குக் கொடுத் த திருச்சட்டம் இப்போது "சீயோனிலிருந்து புறப்படும்..." என்பது ஒரு நற் செய்தியாகும்! இந்த திருச்சட்டம் உலகிற்குச் சென்று தேசங்களின் வாழ்க்கை யை வடிவமைக்கும் என்பதை கூறுகிறார். எனவே, கடவுளின் திருச்சட்டம் தேசங்களின் சட்டமா க மாரவேண்டும், அப்போது, நாடுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான சண்டைகளை கடவுள் தானே தீர்ப்பளிப்பார் என்று கடவுள் வாக்குறுதி அளிக் கிறார். தெய்வீக நீதியின் விளை வாகதான், உண்மையான அமை தி நிலவும். கடவுளின் அரசு என் பது அமைதியின் அரசு. நமது ஆண்டவர் அமைதியின் அரசர்.
2.கிறித்துவின் வருகையை வெளிப்படுத்தும் திருவெளிப் பாடு" "The Revelation revealing the coming of Christ. திருவெளிப் பாடு : 22: 10-21.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆண்டவரின் சீடருமான திருத்தூதர் யோவான் அவர்களு க்கு வெளிப்படுத்தின இந்த திருவெளிப்பாடு கிறிஸ்தவர்கள் பிற இனத்தார்களாள் துன்புறம் காலத்தில் அவர்கள் விசுவாசத் தில் உறுதியாக இருக்கவும், நம்பிக்கையுடனும், அவர்களை ஊக்குவிக்கவும் இந்நூல் எழுத ப்பட்டது. கிறிஸ்தவர்கள் ரோம பேரரசின் நீரோ மன்னன் கி. பி 54 -68 காலத்தில் கொடிய துன்ப ங்களை அனுபவித்தனர் அத்து ன்பங்கள் தொடர்ந்து தொமே ஷியன் Domitian கி. பி 89-96 காலத்திலும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இவன் தான் யோவானை பத்மு தீவில் கி.பி 95ல் சிறையில் அடைத் தவன். பாட்மோஸ் Patmos என்பது அரசியல் மற்றும் மத எதிர்ப்பாளர்களை நாடுகடத்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாறை, எரிமலைத் தீவாகும், இது தரிசு மற்றும் கடுமையானது என்று விவரிக்கப்படுகிறது. இக் கால கட்டத்தில் எழுதப்பட்ட திருவெளி ப்பாடாகும்.
சிறைச்சாலையில் இருந்த திருத்தூதர் யோவான் அவர்களு க்கு எபேசஸைச் சேர்ந்த சீடர்க ள் உணவுப்பொருட்களை அனுப் பினர், பாட்மோஸ் தீவுக்கும் எபேசு பட்டினத்திற்கும் இடைப் பட்ட கடல் மைல் 50 nautic miles ஆகும். இவர் அங்கு சுதந்திர மாக சுற்றித்திரியவும், தரிசனங் க ளைப் பெறவும் அப்போகா லிப்ஸ் குகையில் தங்கியிருக் கவும் மற்றும் பிரசங்கிக்கவும் அனுமதிக்கப்பட்டார்.
கிறிஸ்தவ வரலாற்றில் முக்கிய மான நபர்களில் ஒருவரான திருத்தூதவர் யோவான், நீண்ட காலம் வாழ்ந்து, கி.பி 98 ஆம் ஆண்டு வாக்கில் ரோமானியப் பேரரசர் டிராஜனின் Trajan ஆட்சிக் காலத்தில்விடுதலைப் பெற்று எபேசஸில் இயற்கை யாக இறந்ததாகக் கூறப்படுகி றது.
திருவெளிப்பாடு 22:10-21 என்பது, இறை வருகையின் எச்சரிப்பு நூலாக இது இருக்கி றது. இயேசுவின் வருகைக்கான இறுதி எச்சரிக்கை, நீதிமான்க ளுக்கு வெகுமதி, பாவிகளுக்குத் தண்டனை, விசுவாசிகளைத் தயார்படுத்துதல், மேலும் கிறிஸ் துவின் உடனடி வருகையை அறிவிக்கும் ஒரு பகுதி ஆகும். இது, தீர்க்கதரிசன வார்த்தை களை முத்திரையிடாமல், பரப்ப வும், விசுவாசிகள் விழித்திருந் து, கிறிஸ்து வரும்போது தயா ராக இருக்கவும் வலியுறுத்துகி றது. இது, "இதோ, நான் சீக்கிர மாய் வருகிறேன், அவனவனு டைய கிரியையின்படி அவனுக் கு நான் அளிக்கும் பலன் என் னுடனே வருகிறது" என்று இயேசு கூறுவதன் மூலம், அவரது நீதியான தீர்ப்பு மற்றும் வெகுமதியை உறுதிப்படுத்து கிறது.
இந்தத் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை முத்திரையிட வேண்டாம் என்பது மூடி வைக்க கூடாது. Do not seal it,ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது. நீதி மான்கள் தொடர்ந்து நீதியுடன் செயல்படவும், அசுத்தமானவர் கள் தொடர்ந்து அசுத்தமாக இருக்கவும், நியாயத்தீர்ப்பு நாள் வரவிருக்கிறது. இயேசுவின் வருகை நெருங்கிவிட்டது, அவர் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன் அளிப்பார்.ஆண்டவர்,தன்னையே 'ஆல்பா மற்றும் ஒமேகா', 'முதல் மற்றும் இறுதி', 'ஆரம்ப ம் மற்றும் முடிவு' என்று அறிவிக் கிறார். அவர் சீக்கிரமாக வருவ தாக உறுதியளிக்கிறார். விசுவாசிகளின் கிரியைகள் மற்றும் அன்பின் உழைப்பிற் கான பலன் அவரோடு வருகிற து. விசுவாசிகள் அவரைப் பின் பற்றுவதற்கும், அவருக்கு சேவை செய்வதற்கும் அழைக்க ப்படுகிறார்கள். "நானோ... உங்கள் கிரியைகளை நான் பார்க்கிறேன்". கடவுளுக்காக உழைக்கின்ற எந்த விசுவாசிக ளின் உழைப்பும் வீண் போகாது அதுக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு என்பதை இந்நூல் நமக் கு உறுதி அளிக்கிறது.
பரிசுத்த ஆவியும் மணவாட்டியும், "வா, வருக" என்று அழைக்கிறா ர்கள். தாகமுள்ளவர்கள் ஜீவத்த ண்ணீரை இலவசமாகப் பெற்று க்கொள்ள அழைக்கப்படுகிறா ர்கள். இந்த வார்த்தைகளை எவரும் சேர்க்கவோ நீக்கவோ வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறது. தேவனுடைய வார்த் தையைத் அவமதிப்பவர்களுக்கு சாபம் உண்டென்றும், அதைத் தேடுபவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டென்றும் கூறப்பட்டுள்ளது. "கர்த்தராகிய இயேசுவின் கிருபை," அனைத்துப் பரிசுத் தவான்களுடனும் இருப்பதாகக் கூறி இந்த நூல் நிறைவடை கிறது. இது, விசுவாசிகள் கிறிஸ் துவின் கிருபையில் நிலைத்திரு க்கவும், அவரது வருகைக்குத் தயாராக இருக்கவும் ஊக்கமளி க்கிறது.
அன்பானவர்களே! இயேசுவின் வருகை நெருங்கிவிட்டது என்ற எண்ணம், ஒவ்வொரு தலைமு றை விசுவாசிகளுக்கும் நம்பிக் கையையும், விழித்திருப்பதற் கான அழைப்பையும் கொடுக்கி றது.விசுவாசிகள் தங்கள் செய ல்களுக்குப் பொறுப்பாளிகள். கிறிஸ்துவின் வருகையின் போது வெகுமதிகள் அளிக்கப் படும், மேலும் விசுவாசிகள் தங் கள் விசுவாசத்தில் உறுதியாய், பொறுமையாய் காத்திருக்க அழைக்கப்படுகிறார்கள்
ஆமென், கர்த்தராகிய இயேசு வே, வாரும்" (Amen, even so, come, Lord Jesus) என்ற விண்ணப்பத் துடன் இந்த நூல் நிறைவடை கிறது. காத்திருத்தல் என்பது நம்மை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்துகிறது.
3.ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தமாயிருங்கள், காத்திருங்கள். Be prepared for the Lord's coming and wait.லூக்கா 13: 32- 40.
கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! கிறிஸ்துவின் வருகைக் குத் தயாராவதற்கான சிறந்த வழி, கிறிஸ்துவின் பிரசன் னம் நம்மோடு இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந் துவிடக் கூடாது." என இறையிய ளாளர் வில்லியம் பார்க்லே கூறுகிறார்.
சிறிய மந்தையே, பயப்படாதீர் கள்" என்று இயேசு கூறுவதன் மூலம், நம் பரம பிதா நமக்கு அவரின் விண்ணரசை கொடு ப்பதில் மகிழ்ச்சியாயிருக்கிறார். அதற்கு, பூமிக்குரிய செல்வங் களை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து, அழியாத நித்திய வாழ்வைப் பெற்றிடுங்கள் என் றும் கூறுகிறார்; மேலும், திருடன் வரும்போது வீட்டைக் காக்கிற வனைப் போல எப்போதும் விழித்திருந்து ஆயத்தமாய் இருங்கள், ஏனென்றால் நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் மனுச குமாரன் வருவார் என்றும், விழித்திருப்பதன் முக்கியத்துவ த்தையும், தயார் நிலையில் இருப்பதையும், காத்திருத்தலை யும் வலியுறுத்துகிறது. ஆண்ட வரின் இரண்டாம் வருகை விரை வில் வர இருப்பதினால், நம்மை நாமே உள்ளத்திலும் இல்லத் திலும் மனதிலும் செயலிலும் தூய்மை இருப்பதாக.ஏனேனில், தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். என நற்செய்தியாளர் மத்தேயு நற்செய்தி 5:8 ல் கூறுகிறார்.
ஏழைகளுக்குக் கொடுங்கள்; திருடர்கள், பூச்சிகள் அழிக்க முடியாத நித்திய செல்வத்தை பரலோகத்தில் சேமியுங்கள்
உங்களின் உண்மையான செல்வம் பரலோகத்தில்தான் உள்ளது; பூமியில் உள்ள செல்வ ங்கள் நிலையற்றவை (வச. 34).
விழித்திருங்கள், தயாராக இருங் கள்: திருடன் எப்போது வருவான் என்று வீட்டுக்காரனுக்குத் தெரி யாதது போல, மனுஷகுமாரன் வரும் நேரம் நமக்குத் தெரியாது; எனவே எப்போதும் விழிப்பாக வும் தயாராகவும் இருங்கள். இவற்றில், புத்தியுல்ல கண்ணி கைப் போல் இருக்க நாம் அழை க்கப்படுகிறோம்.
பூமிக்குரிய பேராசைகளைத் துறந்து, பிறருக்கு உதவும் கருணையுள்ள வாழ்க்கையை வாழ்வதன் மூலம் நித்தியத்தைப் பெற்றுக்கொள்ளவும், இயேசு வின் இரண்டாம் வருகைக்குத் தயாராக இருக்கவும் நம்மை அழைக்கிறார். ஆண்டவரின் வருகையை விழிப்புடனும், உறு தியுடனும் எதிர்பார்ப்பது அதற் க்காக காத்திருப்பது நம் விசு வாசப் பயணத்தின் முக்கியப் பகுதியாகும்..
தன்னை பின்பற்றய சீடர்களிடம் நான் மீண்டும் வருவேன் என்று கூறினார். ஆக நான் மீண்டும் வருவேன் என்றும், நான் இருக் கும் இடத்தில் நீங்களும் இருக்கு ம்படி கூட்டிக்கொண்டு செல்வே ன் என்று கூறியது உலக ஜனங் களிடம் அல்ல. தன்னை பின்பற் றி தன்னை விசுவாசிக்கிற திரு த்தூதர்களாகிய 120 பேர்களிட மே கூறினார் என்பது தெளிவு.
ஆனால், அவரை ஏற்றுக்கொண்
ட, அவரின் வார்த்தைபடி, சாட் சியாய் வாழ்கின்ற ஒவ்வொரு வரும் அவரின் திருத்தூதர்கள்
தான், அவரின் பிள்ளைகள்தான்
அவர்கள் அனைவரையும், தன்
விண்ணரசில், தீர்ப்பின் அடிப்ப
டையில் சேர்த்துக் கொள்வார்.
ஆண்டவர் வருகிறார் ஆயத்த மாயிருங்கள், காத்திருங்கள் ஆண்டவரே வாரும்! மாரநாதா. ஆமேன்..
𝙿𝚛𝚘𝚏. 𝙳𝚛. 𝙳𝚊𝚟𝚒𝚍 𝙰𝚛𝚞𝚕 𝙿𝚊𝚛𝚊𝚖𝚊𝚗𝚊𝚗 𝚍𝚊𝚖 Sermon Writer.
www.davidarulsermoncentre.com.
www.davidarulblogspot.com.
Note: The sermon has been prepared to deliver at CSI St. Peter's Church,
Chengalpet on 21/12/2025.
St. John writing the Book of Revelation at the Island of Patmos

Comments
Post a Comment