மாட்சியின் திருகாட்சி: வெளிப்படுத்தலுக்கு மறுமொழி.(242)The Vision of Glory: A Response to Revelation. ஏசாயா 45: 18-25.திருப்பாடல் 24 திருதூதர் பணிகள் 19:1-7.மத்தேயு 2: 1-12.
முன்னுரை:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இப்புத்தாண்டின் முதல் ஞாயிற தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது,மாட்சியின் திருகா ட்சி: வெளிப்படுத்தலுக்கு மறுமொழி.
மாட்சியின் திருகாட்சி" என்பது பொதுவாக " ஆண்டவரின் மகத்துவமான தரிசனம்" அல்லது "மாட்சிமையின் காட்சி" என்பதைக் குறிக்கிறது. இறை வாக்கினர் எசாயா தீர்க்கதரி சனத்தின்படி, "ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள் ளது" என்று கூறி பிற இனத் தவர் ஒளியை நோக்கி வருவ தைக் குறிக்கும், இது இயேசு வின் தெய்வீகப் பிறப்பு அல்லது வெளிப்பாட்டைக் குறிக்கிறது.
நமது ஆண்டவர் பிறந்தபோது கீழ்த்திசை ஞானிகள் காண வந்த நாளை திருக்காட்சிப் பெருவிழாவாக நாம் கொண் டாடி மகிழ்கின்றோம்.
இறைவாக்கினர் ஏசாயா
(எசாயா 60:1-3): "எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன் றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது; பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்
எனவே, "மாட்சியின் திருகாட்சி" என்பது கடவுளின் மகத்துவத் தையும், அந்த மகத்துவம் மனித ர்களுக்கு வெளிப்படும் காட்சி யையும் குறிக்கிறது.இயேசு கிறிஸ்து அனைத்து மக்களுக் கும் உரியவர் என்பதையும், ஞானிகள் அவரைத் தேடிச் சென் றதைப் போல நாமும் இறைவ னைத் தேடிச் செல்ல வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின் றன; இது மதங்கள் கடந்த சமத் துவத்தையும், ஏரோது போன்ற சுயநலவாதிகளின் பாதைகளை த் தவிர்த்து, அன்பு, அமைதி, சகோதரத்துவப் பாதையில் பயணிக்க அழைப்பு விடுக்கும் செய்தியாக அமைகின்றன.
கிழக்கிலிருந்து வந்தஞானிகள் இயேசுவை சந்தித்தது, மீட்பு அனைவருக்கும் பொதுவானது என்பதைக் காட்டுகிறது.இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் அல்ல, எல்லா மக்களுக் கும் உரியவர்.எனவே தான் அவர் பிறப்பு, இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி யூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
என வான் தூதர் அறிவித்தனர்.
தந்தை, இறுதியாக இயேசுவில் தன்னை முழு மனித இனத்திற் கும் வெளிப்படுத்தியதையும்,
இறைவனின் இறைத்தன்மை யை காட்டுகிறது.
1.நம்பிக்கையை வெளிப்படு த்தும் திருகாட்சி.𝚃𝚑𝚎 vision that 𝚛𝚎𝚟𝚎𝚊𝚕s hope. ஏசாயா 45:18-25.
கிறிஸ்துவுக்குள் பிரியமான இறை மக்களே இறைவாக்கினர் எசாயாவின் காலத்தில் பாரசீக மன்னன் சைரஸ்,(Cyreas-1 the Grest) இஸ்ரயேலர் அடிமை களாக இருந்த காலம், கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுக ளுக்கு முன் உள்ளது. ஆனால், ஏசாயா 45-ல் குறிப்பிடப்படும் சைரஸ் என்கிற கேராஸ், கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் தேவனால் திருப்பொ ழிவு செய்யப்பட்டவர். அவர் இஸ்ரயேலை பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுவி த்து, எருசலேமை மீண்டும் கட்ட உதவுவதற்காகத் தேவன் பயன் படுத்திய கருவியாக இருக்கி றார்.தேவன் எல்லா மக்களையும் தம்மிடம் வர அழைக்கிறார். , இஸ்ரயேலின் மீட்பு மற்றும் உலகளாவிய இரட்சிப்பின் அழைப்பு ஆகியவற்றை வலியு றுத்துகின்றன. இந்த எல்லா முழங்கால்களும் அவருக்கு முன்பாகக் குனியும், எல்லா நாவுகளும் அவருக்குள் ஆணை யிடும். இஸ்ரயேல் மூலம் எல்லா ஜனங்களும் தேவனை அறிந்து கொள்வார்கள்.தேவன் மட்டுமே உண்மையானவர்: சிலை வழி பாட்டிலிருந்து விலகி, உண்மை யான தேவனாகிய கர்த்தரை நம்புமாறு மக்களை அழைக்கி றார். அவரே நீதியுள்ளவர், அவரே இரட்சகர்.
தேவனுடைய கருவியாக ஏசாயா 45:1-25ல்குறிப்பிடப்படும் சைரஸ், தேவனுடைய திட்டத்தை நிறை வேற்றத் தேவன் பயன் படுத்திய அந்நிய நாட்டு மன்னன்.
இஸ்ரயேலின் மீட்பராக இவர் யூதர்களை பாபிலோனிலிருந்து விடுவித்து, எருசலேமுக்குத் திரும்பிச் செல்லவும், தேவால யத்தைக் கட்டவும் அனுமதித் தார். இது யூத வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இது கடவுளின்
மாட்சியை வெளிப்படுத்துகிறது.
கர்த்தர் வானங்களையும் பூமியையும் உண்டாக்கினார்; அதை வெறுமையாய் வைக்கா மல், மனிதர்கள் குடியிருக்கவே உருவாக்கினார்.அவர் இரகசிய மாகப் பேசாமல், வெளிப்படை யாக உண்மையைப் பேசுகிறார்; சிலை வணக்கம் வீணானது.
இஸ்ரயேலை மீட்கவும், பாபிலோ னின் கதவுகளைத் திறக்கவும், நாடுகளை அடக்கவும் கேராஸ் என்ற பாரசீக மன்னனை தேவன் பயன்படுத்தினார்.அனைத்து மக்களும், எந்த மூலைமுடுக்கு களிலும் உள்ளவர்களும் தேவ னிடம் திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என்று அழைக்கப்ப டுகிறார்கள்.இஸ்ரயேல் மட்டும ல்லாது, அனைத்து நாடுகளுக் கும் தேவனுடைய இரட்சிப்பு திறந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இந்த பகுதி, படைப்பாளர் நம் இரட்சகராகிய இயேசு கிறித்து வின் மாட்சிமையையும், அவர் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் கிடைக்கும் இரட்சிப்பை யும், இறுதியில் அனைத்து உயிர்களும் அவரை அங்கீகரிக் கும்காலத்தையும்விளக்குகிறது. ஏசாயா 45:23- ஐ திருத்தூதர் பவுல் அடிகளார், பிலிப்பியர் 2:10-11 -ல் மேற்கோள் காட்டுவது இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மைக்கு மிகப்பெரிய சான்றாகும். தெளிவாக, ஏசாயா 45:23- ல் கர்த்தராகிய தேவன் பேசுகிறார் ( நான், கர்த்தர், பேசுகிறேன் , ஏசாயா 45:19 ). இப்போது, பவுல் இந்த உயர்ந்த வார்த்தைகளையும் இயேசுவை நோக்கி இந்த உயர்ந்த துதியை யும் தெளிவாக வைக்கிறார்.
இயேசுவின் நாமத்தில் பரலோகத்திலிருக்கிறவர்களும், பூமியிலிருக்கிறவர்களும், பூமியின் கீழிருக்கிறவர்களும், ஒவ்வொரு முழங்காலும் முடங்க வேண்டும், மேலும் ஒவ்வொரு நாவும் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று பிதாவாகிய தேவனுடைய மகிமைக்காக அறிக்கையிட வேண்டும் என்பது வெளிப்பா டாகும்.
2.தூய ஆவியை வெளிப்படுத் தும் திருகாட்சி. The Vision that reveals the Holyspirit. Acts.திருதூ தர் பணிகள்.19:1-7.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிக ளார் ஆசியா மைனர் வழியாக எபேசுவுக்குப் பயணம் செய்தபோது, அப்பொல்லோ கொரிந்துவில் ஊழியம் செய்து கொண்டிருந்தார். இந்த அப் பொல்லோ அலெக்சான்டிரியா பட்டணத்தை சேர்ந்த யூதன். கல்வி கற்றவன். சிறந்த பேச்சா ளன்.அவர் திருமுழுக்கு யோவா னின் மனம் திரும்புதலுக்கான திருமுழுக்கை பெற்றவர். அப் பொல்லோஸ், வேதாகமத்தில் சொற்பொழிவாற்றக்கூடியவர்.
கொரிந்துவில் ஊழியம் செய்து கொண்டிருந்தார்.பவுல் ஆசியா மைனர் வழியாக எபேசுவுக்குப் பயணம் செய்தபோது, அங்கு யோவான் ஸ்நானகனின் ஞான ஸ்நானத்தை மட்டுமே அறிந்த சீடர்களைக் கண்டார்.சுமார் 12 பேர், அவர்கள் பரிசுத்த ஆவியை ப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை; அவர்களின் விசுவாச ம் யோவானின் ஞானஸ்நானத் தை அடிப்படையாகக் கொண்டது அவர்கள் இயேசுவின் பெயரில் மீண்டும் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியைப் பெற்றனர்.
அந்நியபாஷைகளில் பேசினர், தீர்க்கதரிசனம் கூறினர், வெறும் மனந்திரும்புதலுக்கு அப்பால் உண்மையான கிறிஸ்தவ அனுப வத்திற்கு தூயஆவியின் சக்தி யை மற்றும் அவசியத்தை நிரூபித்தனர். கிறிஸ்தவ ஞான ஸ்நானம் இயேசுவின் பெயரில் உள்ளது மற்றும் தூயஆவியைக் கொண்டு வருகிறது.
ஆன்மீக சக்திக்கு பரிசுத்த ஆவி அவசியம் என்பதையும், (இயேசுவின் நாமத்தில்) சரியா ன ஞானஸ்நானம் ஆவியைப் பெறுவதற்கு மிக முக்கியமா னது என்பதையும் வலியுறுத்து கிறது, இது ஆரம்ப நம்பிக்கை அல்லது யோவானின் ஆயத்த சடங்குகளுக்கு அப்பாற்பட்ட கிறிஸ்தவ சீஷத்துவத்தின் முக்கிய பகுதியாகும். எபேசு சபையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய படியாகும், எபேசு சபை
ஆசியாவில் உள்ள ஏழு சபைக ளில் ஒன்று. இங்கு திருதூதர் பவுல் அடிகளார் மூன்று ஆண்டு கள் இறைபணியாற்றி இச்சபை யை நிருவினார்.இவர்கள்
கடினமாக உழைக்கும் திருச்ச பை, இயேசுவை ஏற்றுக்கொண் ட வர்கள் பரிசுத்தாவியின் அபிஷேகம் பெற்றவர்கள்.ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டி ருக்கிறவராக” கிறிஸ்து முன்னி றுத்தப்படுகிறார்.உண்மைக்காக உறுதியாக இருந்ததிற்காகவும், சகிப்புத்தன்மைகாகவும், பொறு மைக்காகவும், திருச்சபையின் கிரியைக்காகவும், பிரயாசத் திற்காகவும் (கடின உழைப்பு) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எபேசு திருச்சபையைப் பாரா ட்டுகிறார்.இவ்வாறு, நம்மு
டைய திருச்சபைகளும் ஆண்ட வரால் பாராட்டுக்கள் பெற வேண்டும்.ஆனாலும், நீ ஆதி யில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக் குக் குறை உண்டு.” எனகிறிஸ்து எபேசு திருச்ச்பையை கடிந்துக் கொள்ளுகிறார். முதலில் இருந் து எவ்வளவு வீழ்ந்திருக்கிறாய் என்பதையும் நினைத்துப்பார்க்க ஆண்டவர் கூறுகிறார்.இது நமக்கு ஒரு பாடமாகும்.மனந் திரும்பிதலுக்கான அழைப்பை ஆண்டவர் எபேசு திருச்சபைக்கு கொடுக்கிறார். ”மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” என்ற அழைப்பை கொடுக்கிறார். நண்பர்களே நாம் ஒவ்வொருவரும் ஒரு எபேசு திருச்சபையினர் என்ப தை மறந்துவிடக்கூடாது.தேவனு டைய பரதீசின் மத்தியிலிருக் கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கும் ஆசீர்வாதத்தை பெற தகுதியுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ் முயற்சிப்போம். அதற்காக கடவுளின் கிருபையை நாடுவோம்.
3.கிறித்துவின் வெளிப்படுத் தலுக்கு மறுமொழி.A response to Christ's Revelation.மத்தேயு 2: 1-12..
கிறித்துவுக்குள் பிரியமானவர் களே! கிழக்கத்திய ஞானிகளின் வருகை, இயேசுவின் பிறப்பு யூதர்களுக்கு மட்டுமல்ல, அனை த்து உலகத்திற்கும் வெளிப்படு த்தப்படுகிறது (Epiphany) என்ப தை வலியுறுத்துகிறது, அங்கு நட்சத்திரம் வழிகாட்டியாகிறது, ஆனால் ஏரோது போன்ற உலக அதிகாரங்கள் இயேசுவை அச்சு றுத்தலாகப் பார்க்கின்றன; ஞானிகள் இயேசுவை வணங் கிப் பரிசுகளைஅளித்து,கனவில் எச்சரிக்கப்பட்டுத் திரும்பிச் செல்வதன் மூலம், இயேசுவின் ராஜரீகம் உலக அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் தெய் வீகமானது என்பதை நிறுவு கிறது, அத்துடன் இயேசுவின் அரசு என்பது உலகப் பெருமை யைக் காட்டிலும் அன்பு மற்றும் சேவை என்பதைக் குறிக்கிறது.
ஞானிகளின் வருகை இது இயேசுவின் பிறப்பு யூதர்களு க்கு மட்டுமல்ல, புறஜாதியாருக் கும், அதாவது முழு உலகத்திற் கும் வெளிப்பட்ட ஒரு நிகழ்வு (Epiphany).
"யூதர்களின் ராஜா" பிறந்த செய் தி ஏரோதைக் கலக்கமடையச் செய்தது, ஏனெனில் அவன் தனது அதிகாரத்தைப் பற்றி கவ லைப்பட்டான். அவன் பிரதான ஆசாரியர்கள் மற்றும் வேதபார கர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் மேசியா பெத்லகேமில் பிறப்பார் என்று குறிப்பிட்டனர் (மீகா 5:2-ஐ அடிப்படையாகக் கொண்டது).ஏரோது தனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த எல்லையையும் கடப்பவன்; இயேசுவின் பிறப்பை அவன் தனது ஆட்சிக்கு அச்சுறுத்தலா கக் கண்டான். இன்றும் கிறித்த வர்கள் என்றால் இவ்வுலகில் அச்சுறுத்தலாக கருதுகின்றனர் ஆனால் உண்மையில் அமை தியை விரும்புகிற, அன்பை வெளிப்படுத்துகின்ற மக்கள்.
கனவில் ஏரோதிடம் திரும்ப வேண்டாம் என்று எச்சரிக்கப்ப ட்டதால், அவர்கள் வேறு வழியில் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.
கிறிஸ்துவின் அரசு என்பது உலகத்தின் அதிகாரங்கள் அல்லது சாதனைகளால் அல்ல, மாறாக கடவுளை நேசிப்பதா லும், சேவை செய்வதாலும் வருகிறது.ஞானிகளின் வருகை, உலகத்தின் அதிகாரங்கள் இயேசுவின் வருகையை எதிர்க்கும் அதே வேளையில், தேவன் தனது திட்டத்தை நிறைவேற்றுவார் என்பதைக் காட்டுகிறது.
இயேசுவின் வருகையின் போது எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கு வார்கள்; திருப்பாடல்கள் 72:14இல் உள்ள மறைநூல் வாக் கினால் இவர்கள் வான சாஸ்தி ரிகள் அரசர்களாக இருப்பர் என நம்பப்படுகின்றது.இவர்கள் வந்த நிகழ்வு மத்தேயு நற்செய்தி யில் மட்டுமே இடம் பெறுகின் றது. இதன்படி கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, ஏரோது அரசனிடம் 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது மக்க ளிடையே இருந்த மறைநூல் அறிஞர்களை ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் ஆராய்ந்து மீக்கா நூலில் உள்ளது படி மெசியா
யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறக்க வேண்டும் என அறிவித் ததால் ஞானிகளை அங்கே அனு ப்பி வைத்தான். முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன் னே சென்றது. அங்கே வீட்டிற் குள் அவர்கள் போய்க் குழந்தை யை அதன் தாய் மரியா வைத்தி ருப்பதைக் கண்டு நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து குழந்தை யை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன் னும் சாம்பிராணியும் வெள்ளை ப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள்எச்சரிக் கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
நாம் கிறித்துவின வெளிப்பாட்
டிற்கான காட்சியாகவும், சாட்சி யாக இருக்க கடவுள் அருள் கூறுவாராக. ஆமேன்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer.
www.davidarulblogspot.com
www.davidarulsermoncentre.com.
.

Comments
Post a Comment