இயேசுவின் திருமுழுக்கு. அடையாளத்தின் உறுதியும் அருட்பணியும். (243).The Baptism of Jesus. The Affirmation of Identity and Ministry.விடுதலைபயணம் 3:1-15.திருப்பாடல் 98 கலாத்தியர் 4:1-7, மத்தேயு 3:11-17.

முன்னுரை:
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இப்புத்தாண்டின் இரண்டாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது,"இயேசுவின் திருமுழுக்கு. அடையாள த்தின் உறுதியும் அருட்பணி யும்.
திருமுழுக்கு இயேசுவின்  முக்கி ய வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்றாக கருதி அனேக திருச் சபைகளில் ஆண்டின் முதல் அல்லது இரண்டாம் வாரங்க ளில் அனுசரிக்கப் படுகிறது.
திருமுழுக்கின் முன்னோடியாக,
லேவியர் 16:4-ன் படி, பாவநிவா ரண நாளில்   மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும் தலைமை ஆசாரியர் (ஆரோன்) அணிய வேண்டிய பரிசுத்தமான, எளிமையான நார்ப்பட்டு ஆடை களைக் குறிக்கிறது; இந்த  ஆடைகள், சாதாரண நாட்களில் அணியும் பகட்டான ஆடைகளு க்குப் பதிலாக, பணிவு, தூய்மை, தேவனுடைய பரிசுத் தத்திற்கு முன்பாக மனிதனின் தாழ்மை ஆகியவற்றை உணர் த்துகின்றன, மேலும் அவர் நீராடி இந்த ஆடைகளை அணிந்த பின்னரே நுழைய வேண்டும்
அப்பொழுது,   இந்த ஆடைகளை அணிவதற்கு முன், ஆசாரியர் தண்ணீரில் கழுவி நீராட வேண் டும்தலைமை ஆசாரியர் பரிசுத்த சணல்நூல் சட்டையை அணிந்து, சணல்நூல் உள்ளாடை, கச்சை மற்றும் தலை ப்பாகை அணிய வேண்டும்.
இவை ஆடம்பரமில்லாத, எளிமையான ஆடைகளாகும். இது, ஆசாரியரின் மகிமையைக் காட்டிலும், மக்களின் பாவங்க ளை நீக்குவதே முக்கியம் என்பதையும், தேவனுக்கு முன் பாக பணிவுடன் செல்ல வேண் டும் என்பதையும் குறிக்கிறது. . இது ஆன்மீக சுத்திகரிப்பையும், தேவனுடைய பரிசுத்தத்தை அணுகுவதற்கான தூய்மையின் தேவையையும் உணர்த்துகிறது.
 இந்த நாள் இஸ்ரயேல் மக்களு க்காக பாவங்களை மன்னிக்கும், மனந்திரும்பும் ஒரு புனிதமான நாளாகும். அந்த நாளின் தீவிரத் தன்மையையும், தேவனுடைய பரிசுத்தத்தையும் இந்த ஆடை கள் வெளிப்படுத்துகின்றன. 
 திருமுழுக்கு யோவானின் ஞானஸ்தானம் மனந்திரும்புதல் மற்றும் பாவ மன்னிப்பினை அடிப்படையாக கொண்டது. யூதர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மனம் திருப்பு வதற்காக யோவான் ஞானஸ்நானம் கொடுத்தார் (மத்தேயு 3:6).இது இயேசுவின் வருகைக்குத் ஆதாரமானது. யோவான், மேசியா வரப்போவ தைக் குறித்துப் பிரசங்கித்து, மக்கள் மனதை ஆயத்தப்படுத் தினார், ஏசாயாவின் தீர்க்கத ரிசனத்தை (40:3) நிறைவேற்றி னார்.யோவான், எலியாவின் வருகைக்கு ஒத்தவராகவும், பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டிற்கு ஒரு பாலமாகவும் கருதப்பட்டார். இயேசுவின் மனந் திரும்புதல் தேவையில் லாத இயேசு, நீதியை நிறை வேற்றுவதற்காக யோவானால் ஞானஸ்நானம் பெற்றார் (மத்தேயு 3:14-15). யோர்தான் நதியில் தண்ணீரில் மூழ்கி (Immersion) ஞானஸ்நானம் கொடுத்தார் (மத்தேயு 3:16, யோவான் 3:23). 
முக்கிய வேறுபாடு என்ன வென்றால், யோவானின் ஞான ஸ்நானம்மனந்திரும்புதலுக்கான ஒரு முன்னோடிச் சடங்கு, ஆனால் இயேசுவின் சீடர்கள் பெற்ற பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் வேறுபட்டது (அப்போஸ்தலர் 1:4-5). 
திருமுழுக்கு என்றால் என்ன?
What is Babtism?
 திருமுழுக்கு என்பது "இயேசு கிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசிக்கும் ஒரு பொது அறிக்கையாகும்."
இது ஒரு கிறிஸ்தவ சடங்கு. ஞானஸ்நானம்" or திருமுழுக்கு என்ற சொல், சொற்பிறப்பியல் ரீதியாக, கிரேக்க மொழியிலிரு ந்து "baptõ" என்பதிலிருந்து உருவானது, இது தலையில் தண்ணீரைத் தெளிப்பதன் மூலமோ அல்லது ஊற்றுவதன் மூலமோ அல்லது ஓரளவு அல்லது முழுமையாக தண்ணீ ரில் மூழ்குவதன் மூலமோ , பாரம்பரியமாக மூன்று முறை, திரித்துவத்தின்( தந்தை, மகன், தூய ஆவியின் பேரால்) ஒவ்வொரு நபருக்கும் ஒரு முறை செய்யப்படும் கட்டாய சடங்காகும்..புராட்டஸ்டன்ட்திருச்சபைகள் இரண்டு முக்கிய சடங்குகளை  அடிப்படையாக கொண்டது.  
திருமுழுக்கு முதலாவதாகக் கருதப்படுகிறது, இரண்டாவது கர்த்தருடைய திருவிருந்து.
அன்பர்களே, திருமுழுக்கு இது உண்மையில் கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசுவின் காலத்தில் பெரும்பாலும் நடைமுறையில் இருந்தது. ஆண்டவரின் கட்டளைப்படி," நீங்கள் போய் எல்லா மக்களின த்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடு ங்கள். (மத்தேயு நற்செய்தி 28:19) இக்கட்டளப்படியே நம் திருச்ச பைகள் திருமுழுக்கை செய்து வருகின்றன. " 𝙱𝚊𝚋𝚝𝚒𝚜𝚖 𝚒𝚜 𝚝𝚑𝚎 𝚐𝚊𝚝𝚎𝚠𝚊𝚢 𝚝𝚘 𝚝𝚑𝚎 𝙲𝚑𝚛𝚒𝚜𝚝𝚒𝚊𝚗𝚒𝚝𝚢" திருமுழுக்கு கிறிஸ்துவத்தின் நுழைவு வாயல்.
திருமுழுக்கு மூலமே ஒருவர் திருச்சபையின் உறுப்பினரா கிறார்.
 ஏன் நாம் திருமுழுக்குப் பெற வேண்டும்? Why should we babtizice?
 கிறிஸ்துவுக்கு அன்பானவர் களே நாம் ஏன் திருமுழுக்குப் பெற வேண்டும் என்றால் :
1. இது ஆண்டவரின் கட்டளை நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு முன்மாதிரி யாக யோர்தான் நதிக்கரை சென்று திருமுழுக்கு யோவானி டம் திருமுழுக்கு பெற்றார்.
2 இயேசுவின் திருமுழுக்கின் போது தூய ஆவியானவர் இறங்குவது போல நம் மீதும் இறங்குகிறார்.
3 இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் விசுவாசிப்பதை பகிரங்கமாக அறிவிக்கும் ஒரு காணக்கூடிய வழியாகும்.
4.திருமுழுக்கு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுத லுடன் விசுவாசியின் ஐக்கியத் தைக் குறிக்கிறது
4.திருமுழுக்கு,ஒரு நபர் தனது பழைய வாழ்க்கையிலிருந்து விலகி கிறிஸ்துவில் ஒரு புதிய வாழ்க்கையைத் தழுவிவிட்டார் என்பதை இது உலகிற்கு அறிய செய்கிறது.  
5. திருமுழுக்கு பாவங்களை கழுவி ஒரு புதிய வாழ்விற்கான கிறிஸ்துவின் உறவில் வளர செய்கிறது.
6 இயேசுவின் திருமுழுக்கு நாம் கிறித்துவை சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தினை உறுதியளிக்கிறது.
1 கடவுளின் இறையாண்மை மற்றும் அழைப்பு.God's  Sovereig nty and Calling". Exodus. விடுதலைப்பயணம். 3:1-15.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கடவுளின் இறையாண் மை மற்றும் அழைப்பு என்பது கடவுள் தன் திட்டத்தை நிறை வேற்ற ஒரு சாதாரன மனிதனை த் தேர்ந்தெடுக்கிறார். மோசே மீதியானின்  M𝚎dian (இது ஆபிரகாமின் சந்ததியான மீதியான் மக்களின் நிலமாகும்.  மீதியான், ஆபிரகாம்,  கேத்தூ ராள் ஆகியோரின் மகன், இவர்களின் சந்ததியினர் மீதியா ன் தேசத்தைச் சேர்ந்தவர்கள்.
 (ஆதி 25:1-6). மீதியானுக்கு நான்கு குமாரர்கள் இருந்தார் கள் ) பாலைவனத்தில் இருந்தபோது, சீனாய் மலை என்று அழைக்கப்படும் ஹோ ரேப் மலையில்  ஒரு முட்செடி யில் நெருப்பு எரிவதைக் கண் டார், ஆனால் அது எரிந்து போக வில்லை. இது சாதாரண நிகழ்வு அல்ல என்பதை உணர்ந்து, அவர் நெருக்கமாகச் சென்று பார்த்தார். கடவுள் அந்த நெருப் பிலிருந்து மோசேக்குக் குரல் கொடுத்தார், "மோசே, மோசே!" என்று அழைத்தார். மோசே, "இதோ, நான் இருக்கிறேன்" என்றார். கடவுள், "நீ நின்றிருக் கிற இடம் பரிசுத்த பூமி; உன் காலணியைக் கழற்று, ஏனெனி ல் நீ நிற்கும் இடம் பரிசுத்தமா னது" என்று கூறினார். மேலும், "நான் உன் பிதாக்களின் தேவன், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன்" என்று தன்னை அறிமுகப்படுத் திக் கொண்டு தன்னை வெளிப் படுத்தினார், மோசே தன் முகத் தை மறைத்துக்கொண்டார், ஏனெனில் அவர் கடவுளைப் பார்க்கப் பயந்தார்.கடவுள், "எகிப் திலுள்ள என் ஜனங்களின் உபத் திரவத்தைக் கண்கூடாகக் கண் டேன்; அவர்கள் கூக்குரலைக் கேட்டேன்; அவர்களின் துன்பங் களை நான் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக ளிலிருந்து விடுவித்து, அவர்க ளை அந்தத் தேசத்திலிருந்து ஒரு நல்லதும் விசாலமுமான தேசத்திற்கு, பாலும் தேனும் ஓடு கிற தேசத்திற்கு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஈவியர், எபூசியர் என்பவர்களின் தேசத்திற்கு அழைத்துச் செல்லு ம்படி இறங்கிவந்தேன்" என்று கூறினார். "நான் பார்வோனிடத் துக்குப் போய், இஸ்ரவேல் புத்தி ரரை எகிப்திலிருந்து அழைத் துவர நான் யார்?" என்று மோசே கேட்டார். அதற்கு கடவுள், "நான் உன்னோடு இருப்பேன்; நீ ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்துவரும் போது, இந்த மலையில் எனக்கு ஆராதனை செய்வீர்கள்; இதுவே எனக்கு அடையாளம்" என்றார். மோசேக்கு இன்னும் சந்தேகம், "நான் பார்வோனிடத்துக்குப் போவேனோ? இஸ்ரவேல் புத்தி ரரை எகிப்திலிருந்து கொண்டு வருவேனோ?" என்றார். அதற்கு கடவுள், "நான் உன்னோடு இருப்பேன்" என்று கடவுளின் நாமத்தை வெளிப்படுத்தினார்.  மோசே, "நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், 'உங்கள் பிதாக்களின் தேவன் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார்' என்று சொன்னால், அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடம் கேட்டால், நான் அவர்க ளுக்கு என்ன சொல்ல வேண்டு ம்?" என்று கேட்டார். அதற்கு கடவுள், "இருக்கிறவராக (I AM WHO I AM)   இருக்கிறவர் (I AM)என்னைத் உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொல்லு*" என்றார். மேலும், "நான் யேகோவா (YHWH), உங்கள் பிதா க்களின் தேவன், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று சொல்லு; இது என்றென்றைக் கும் என்னுடைய நாமம்; இதுவே என் நினைவாக இருக்கும்" என்றார். 
மோசேயின் பலவீனமே கடவுள் பலமாக கருதுகிறார். God knows our weaknesses but believes in our strength.மோசே தன் சொந்த தகுதியின்மையையும் பயத் தையும் வெளிப்படுத்தினனா
லும் கடவுளின்  வாக்குறுதி "நான் உன்னோடு இருப்பேன்" என்று உறுதியளிக்கிறார்..
திருதூதர் பவுல் அடிகளார், 2 கொரிந்தியர் 12,:9,ல், தனது வேதனையான பலவீனங்களை (முள்ளைப் போன்றது) குறித்து ஜெபித்தபோது, தேவன்,ஆனால் அவர் என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மை யில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெரு மை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னு ள் தங்கும். (2 கொரிந்தியர் 12:9)என்றார்.
 நமது பலவீனம் தேவனுடைய வல்லமை வெளிப்படும் களம் (field of manifestation), அவர் நமக்கு போதுமானவர், அவர் மூலமாக நாம் பெலனடைகி றோம் என்ற நம்பிக்கையாகும். அன்பு சகோதரனே ஆண்டவரின் பணி செய்ய கடவுள் உன்னை அழைக்கிறார் தயங்காதே உன்னால் முடிந்ததை அவருக் காக அருட்பணியாற்றிடு. 
வில்லியம் கேரியின் வார்த்தை யான, "கடவுளிடமிருந்து பெரிய காரியங்களை எதிர் பார், கடவுளுக்காக பெரிய காரியங்களை செய்"
Expect great things from God; attempt great things for God,”  (William Care) என்ற வார்த்தை
வழிகாட்டட்டும்.மோசே திருமுழுக்கின் முன்னோடியாக
இருக்கிறார். அவர்தண்ணிரிலி ருந்து எடுக்கப்பட்டதால், திருமுழுக்கின் அடையாளமான தண்ணிர்  "நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்" என்று கூறி அவள் பாரோனின் மகள் அவனுக்கு "மோசே" என்று பெயரிட்டாள். (விடுதலைப் பயணம் 2:10)
அவ்வாறே, கடவுள் எரியும் முட்
செடியில் அப்போதுஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்த போது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்து போகவில்லை. (விடுதலைப் பயணம் 3:2) ஆண்டவரின்
திருமுழுக்கு, யோவான் அவர் கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்கு த் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமி க்க ஒருவர் வருகிறார். அவரு டைய மிதியடி வாரை அவிழ்க் கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 
(லூக்கா நற்செய்தி 3:16)
மோசேக்கு தோன்றிய நெருப்பு, தூய ஆவி என்னும் நெருப்பை
திருமுழுக்காக கொடுக்கப்படு கிறது.
2.கிறித்துவின் நம்பிக்கையே
மீட்பின் அடையாளம்.Faith in Christ is the sign of  Salvation  
கலாத்தியர் 4:1-7.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கலாத்தியர் திருமுகம் கிபி 52 -53 இல் திருத்தூதர் பவுல் அடிகளார் எழுதினார். கலாத்திய திருச்சபையை யூத மயமாக்கு நோக்கத்தோடு சிலர் பவுல் அடிகளார் கருத்துக்கு எதிராக பரப்புரை செய்தனர் யூத கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தின் மூலமாகத்தான் ஒருவர் இரட்சி க்க முடியும் என்று வாதிட்டனர். புற இனத்து கிறிஸ்தவர்கள் கட்டாயம் மோசேயின் விருத்த சேதனத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி னார்கள்.
கலாத்தியா தேசத்திலுள்ள விசுவாசிகள் இயேசுகிறிஸ்து வைப்பற்றும் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில் கிறிஸ்துவின் நற்செய்தியை விசுவாசித்து, விசுவாசத்தினால் மாத்திரமே தாங்கள் நீதிமான்களாக்கப்பட முடியும் என்று நம்பினார்கள். அதன்பின்பு யூதமார்க்கத்து கள்ளப்போதகர்கள் கலாத்தியா தேசத்து சபைகளில் பிரவேசி த்து, அவர்களுக்கு கள்ளஉபதேச த்தைக் கொடுத்தார்கள். கிறிஸ்துவைப்பற்றும் விசுவாச த்தோடு, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளையும் கடைப்பிடித் தால்தான் இரட்சிக்கப்பட முடியும் என்றும், அப்போதுதான்நீதிமான் களாக்கப்பட முடியும் என்றும் கள்ள உபதேசம் பண்ணினார் கள். 
யூத உலகில், ஒரு சிறுவன் தனது பன்னிரண்டாவது பிறந்த நாளைக் கடந்த முதல் ஓய்வு நாளில், அவனது தந்தை அவனை ஜெப ஆலயத்திற்கு அழைத்துச் செல்வார், அங்கு அவன் நியாயப்பிரமாணத்தின் மகனானாக மாற்றப்படுகிறான்.. அதன் பிறகு தந்தை ஒரு ஆசீர் வாத விண்ணப்பம் செய்வார், "இந்தப் பையனுக்கான பொறு ப்பை என்னிடமிருந்து எடுத்துக் கொண்ட கடவுளே, நீர் ஆசீர்வதி க்கப்பட்டவர்." சிறுவனும் ஒரு வேண்டுதலை செய்வான், அதில் அவன், "ஓ என் கடவுளே, என் பிதாக்களின் கடவுளே! குழந்தைப் பருவத்திலிருந்து ஆண்மைக்கு நான் கடந்து செல்வதைக் குறிக்கும் இந்த புனிதமான  நாளில், நான் பணிவுடன் என் கண்களை உம்மிடம் உயர்த்தி, இனிமேல் நான் உமது கட்டளைகளைக் கடைப்பிடிப்பேன், உமக்கு எதி ரான எனது செயல்களுக்குப் பொறுப்பேற்பேன் என்று நேர் மையுடனும் உண்மையுடனும் அறிவிக்கிறேன். "இதன் மூலம் சிறுவனின் வாழ்க்கையில் ; கிட்டத்தட்ட ஒரே இரவில் அவன் ஒரு மனிதனானான்.
கலாத்தியர்களும் - உண்மையி ல் எல்லா மனிதர்களும் - வெறும் குழந்தைகளாக இருந்தபோது, ​​அவர்கள் சட்டத்தின் கொடுங் கோன்மையின் கீழ் இருந்தனர் என்று பவுல் கூறுகிறார்; பின்னர், எல்லாம் தயாரான போது, ​​கிறிஸ்து வந்து மனிதர் களை அந்தக் கொடுங்கோன் மையிலிருந்து விடுவித்தார். எனவே இப்போது ஆண்கள் இனி சட்டத்தின் அடிமைகள் அல்ல; அவர்கள் மகன்களாகி, அவர்களின் சுதந்தரத்தில் நுழைந்துள்ளனர். சட்டத்திற்குச் சொந்தமான குழந்தைப் பருவம் கடந்திருக்க வேண்டும்; ஆண் மையின் சுதந்திரம் வந்துவிட்டது என்கிறார்.
பவுல் "அப்பா! பிதாவே!" என்ற இரட்டை சொற்றொடரைப் பயன் படுத்துகிறார். அப்பா  என்பது தந்தைக்கான அராமைக் வார் த்தை. அது பெரும்பாலும் இயேசுவின் உதடுகளில் இருந் திருக்க வேண்டும், மேலும் அதன் ஒலி மிகவும் புனிதமான து, மனிதர்கள் அதை அசல் மொழியில் வைத்திருந்தனர். மனிதனின் இதயத்தின் இந்த உள்ளுணர்வு ரீதியான அழுகை பரிசுத்த ஆவியின் செயல் என்று பவுல் நம்புகிறார். நம் இதயங் கள் அப்படிக் கூப்பிடுகின்றன என்றால், நாம் மகன்கள் என்ப தை நாம் அறிவோம், மேலும் கிருபையின் அனைத்து சுதந் தரமும் நம்முடையது.
தேவன் சரியான காலத்திலே தம்முடைய குமாரனை அனுப்பி னார். அவர் ஒரு பெண்ணிடத் தில் பிறந்தவர், நியாயப்பிர மாணத்திற்குக்கீழ்ப்பட்டிருந்தார்.
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டு, நாம் புத்திர சுவிகாரத்தைப் பெறுவத ற்காகவே அவர் வந்தார்.நாம் பிள்ளைகளாக இருப்பதால், தேவன் தம்முடைய குமாரனு டைய ஆவியை நம் இருதயங்க ளில் அனுப்பினார். அந்த ஆவி, "அப்பா, பிதாவே!" என்று கூப்பி டுகிறது. இதன் விளைவாக, நாம் இனி அடிமைகளல்ல; தேவனு டைய பிள்ளைகளும், பிள்ளைக ளாகிய உரிமையாளர்களுமாக இருக்கிறோம். இது தேவனுடை ய செயல். 
3.இயேசுவின் திருமுழுக்கு அருட்பணியின் உறுதி.The Baptism of Jesus is the Affirmation of Mission. மத்தேயு 3:11-17.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! அக்காலத்தில் யூதர்கள் மதம் மாறியவர்களை தங்கள் விசுவாசத்திற்குள் கொண்டுவர ஞானஸ்நானம் கொடுத்தார்கள்,
திருமுழுக்கு யோவான், தண் ணீரில் மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானம் கொடுப்பதோடு, பரிசுத்த ஆவி என்கின்ற நெருப் பால் ஞானஸ்நானம்கொடுக்கும் ஒருவர் வரவிருக்கிறார் என்று கூறுகிறார். இந்த “நெருப்பு” பாவத்தை எரித்து, தேவனுக்கு உகந்த வாழ்க்கைக்குத் தூய்மை ப்படுத்துகிறது; இது தேவனுடை ய நியாயத்தீர்ப்பின் அடையாள மாகவும் இருக்கலாம்.இயேசு ஞானஸ்நானம் பெறும்போது, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாயிருக்கி றேன்” என்று வானத்திலிருந்து தேவன் பேசுகிறார். இது இயேசு வின் தெய்வீகத்தன்மையையும், தேவனுடைய அன்பையும் உறுதி ப்படுத்துகிறது
யோவானின் “நெருப்பு” ஞானஸ் நானம், மனந்திரும்புவதன் மூலம் பாவங்கள் நீக்கப்பட்டு, தேவனுக்கு உகந்தவர்களாக மாறுவதைக் குறிக்கிறது. இது கடுமையான நியாயத்தீர்ப்பை யும் உணர்த்துகிறது. இயேசு வின் ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் வல்லமையையும், தேவனுடைய அன்பையும், மகிமையையும் வெளிப்படுத்து கிறது. இது மனந்திரும்புவதோ டு இணைந்து, தேவனை மகிமை ப்படுத்தும் வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. யோவானின் செய்தி மனந்திரும்புதலுக்கான அழைப்பாக இருந்தது. சிலர் மனந்திரும்புதல் என்பது பெரும்பாலும் உணர்வுகளைப் பற்றியது , குறிப்பாக உங்கள் பாவத்திற்காக வருந்துவது என்று நினைக்கிறார்கள். உங்கள் பாவத்திற்காக வருந்துவது அற்புதமானது, ஆனால் மனந்திரும்புதல் என்பது "உணர்வுகள்" என்ற வார்த்தை அல்ல. இது ஒரு செயல்வார்த்தை. யோவான் தனது கேட்போரிடம், அவர்கள் செய்ததற்காக வருந்துவதை மட்டுமல்லாமல், மனதை மாற்றிக்கொள்ளச் சொன்னார். மனந்திரும்புதல் என்பது இதயத்தில் ஒரு துக்கத்தை அல்ல, திசை மாற்றத்தைப் பற்றி பேசுகிறது.நாம் நமது பாவத்தை யும் சுய வாழ்க்கையையும் விட்டு வெளியேறாவிட்டால் பரலோக ராஜ்யத்திற்கு வர முடியாது .
மனந்திரும்புதலுக்கான அழைப்பு முக்கியமானது, அதைப் புறக்கணிக்கக்கூடாது. அது நற்செய்தியின் முதல் வார்த்தை என்று சொல்வது முற்றிலும் துல்லியமானது .பரலோகராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்பதை மக்கள் அறிய வேண்டும் என்று யோவான் விரும்பினார் - உங்கள் கையைப் போல அருகாமையில் . அது அவர்கள் கற்பனை செய்தது போல் தொலைவில் இல்லை அல்லது கனவாக இல்லை. அதனால் தான் யோவான் மனந்திரும்பு வதற்கான அழைப்பில் மிகவும் அவசரமாக இருந்தார். பரலோக ராஜ்யம் சமீபமாயிருந்தால் , நாம்
இப்போதே தயாராக வேண்டும் .
யோவானின் முக்கிய செய்தி " மேசியா ராஜா வருகிறார் " என்பதாகும். மனந்திரும்புதலு க்கான அழைப்பு, ராஜாவும் அவருடைய ராஜ்யமும் வருகிறா ர்கள் என்ற செய்திக்கான பதிலாகும் -
நெருப்பினால் ஞானஸ்நானம் கொடுப்பது என்பது நியாயத் தீர்ப்பின் நெருப்பைக் கொண் டுவருவதாகும், இது தூய்மையா னவர்களைச் சுத்திகரிக்கும், ஆனால் துன்மார்க்கரை பதரைப் போல அழிக்கும் . பதர் என்பது தானியத்தின் தானியம் அகற்றப் பட்ட பிறகு கோதுமைத் தண்டின் பயனற்ற எச்சமாகும். 
யோவான்ஸ்நானகன் இயேசு வை ஞானஸ்நானம் கொடுக்க மறுத்தாலும், "எல்லா நீதியையும் நிறைவேற்ற" இயேசு அதை ஏற்றுக்கொண்டார். வானத் திலிருந்து "இவரே என்னுடைய நேசகுமாரன்" என்ற குரல் கேட்டது. இயேசு ஞானஸ்நானம் பெற்று தண்ணீரை விட்டு ஏறின போது, வானம் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவி புறாவைப் போல இறங்கி அவர்மேல் தங்கியது. அப்பொழுது, "இவரே என்னு டைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாயிருக்கிறேன்" என்று பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் கேட்டது. இந்த நிகழ்வு பிதா (சத்தம்), குமாரன் (இயேசு), பரிசுத்த ஆவி (புறா வடிவில்) ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே நேரத்தில் வெளிப்பட்ட ஒரு தருணமாகும். இது இயேசுவின் தெய்வீக அடையாளம் மற்றும் அவருடைய ஊழியத்திற்கான அபிஷேகம். பிதாவின் வார்த் தைகள் இயேசுவை தேவனுடை ய குமாரன் என்று உறுதிப்படுத் துகின்றன. இதுவே அவருடைய மெய்யான அடையாளம்.
இவ் அடையாளங்களில் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோம்.


Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.david arulsermon centre. com
www.davidarulblogspot.com.


Note: The message has been prepared to deliver at CSI Bishop Azariah Memorial Church, Chengalpet at 11/01/2026.




திருமுழுக்கு, 15-ஆம் நூற்றாண்டு ஓவியம், பிலாரன்சு.



Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

நோய்களை குணமாக்குதல் . (182) Healing in Sickness. விடுதலை பயணம் 4:10-17,22, திருப்பாடல் 103:1-10, 2 கொரிந்தியர் 12:1-10, யோவான் 9:1-7. நலம் நல்கும் திருப்பணி ஞாயிறு.