கட்டவிழித்தல். தீயபழக்கத்திலிருந்து விடுதலை. (244). Breaking free. Liberation from bad habits. தானியேல் 1:8-21, திருப்பாடல்:1. கொலெசியர் 3: 1-11., மாற்கு 5: 1-20.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " கட்டவிழித்தல்.  தீயபழ க்கத்திலிருந்து விடுதலை. 
கட்டவிழ்த்தல் (Unleashing) என்ப தன் எதிர்ச்சொல் கட்டுதல் அல் லது கட்டுப்படுத்துதல் ஆகும்; கட்டவிழ்த்தல் என்பது கட்டுக்க ளை நீக்குவதைக் குறிக்கும்.தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவ து (கட்டவிழ்த்தல்) என்பதாகும்.
 நமது அன்பின் ஆண்டவர் திருத்தூதர் பேதுருவை பார்த்து மத்தேயு 16:19-ல்   “கட்டு தல் மற்றும் கட்டவிழ்த்தல்” என்கிறதான கருத்தை கற்பிக்கி றார். “விண்ணரசின் திறவு கோல்களை நான் உனக்குத் தருவேன்; மண்ணுலகில் நீ கட்டு கிறது எதுவோ அது விண்ணர சிலும் கட்டப்பட்டிருக்கும், மண் ணுலகில் நீ கட்டவிழ்ப்பது எது வோ அது  விண்ணரசிலும் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.”
கட்டவிழ்ப்பது என்பது கடவுளின் கட்டளை.தீய பழக்கத்தில் இருந் து விடுபடுவது (கட்டவிழ்த்தல்) என்பது, அந்தப் பழக்கத்தை அடையாளம் கண்டு, அதன் காரணங்களைத் தெரிந்து, உறு தியுடன் படிப்படியாக மாற்றங் களைச் செய்து, பொறுமையுடன் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் சாத்தியமா கும்; 
ஐம்பெறும் தமிழ் காப்பியங்க ளில் ஒன்றான சிலப்பதிகாரத் தில் கண்ணகி தன் கணவன் கோவலன் திருடினான் என்று தவறாகக் கருதி, விசாரணை இன்றி மதுரையின் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன்,  அவனைக் கொன்றான்.
இது கண்ணகிக்கு கட்டவிழ்க்க முடியாத கோபம்,  அவள் கண வன் கோவலன் மீதான அநீதிக் கு  மன்னன் நெடுஞ்செழியனி டம் நீதி கேட்டு, அரச சபையில்  தன் சிலம்பை உடைத்து, அதிலி ருந்த மாணிக்கக் கற்களை வெளிக்காட்டி, தன் கணவன் நிரபராதி என்பதைநிரூபித்தாள். தன் மார்பகத்தைக் கிழித்து மதுரை நகரில்  எறிந்ததால், ரௌத்திர ரூபத்தில் இதனால்,  மதுரை நகரம் தீப்பிடித்து எரிந்தது;  மதுரை நகரையே எரித்து, நீதியை நிலைநாட்டி னாள்; இது சிலப்பதிகாரக் காப்பியத்தின் உச்சக்கட்டமா கும். இதன்மூலம் தன் கோபத் தை கட்டவிழ்த்தாள்.
கோபத்தின் விளைவு கட்டவிழ்த் தில். தீராத கோபம், தீயாகப் பரவி, மதுரை நகரையே எரித் துச் சாம்பலாக்கியது.
லூக்கா 13:10-17) ல், ஓய்வுநாளி ல் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில்கற்பித்துக்கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். 
இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது நோயி லிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள் ளீர்" என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். ஆண்டவர்
தீய ஆவியிலிருந்து அப் பெண் ணை கட்டவிக்கின்றார்.
எகிப்தில் 430 ஆண்டுகள்அடிமை த்தனத்திலிருந்த இஸ்ரவேல்
மக்களின் அடிமைத்தனத்திலி ருந்து கட்டவிழ்க்கிறார். கடவுளின் கட்டவிழ்ப்பு செயல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
அன்பானவர்களே! தீய பழக்கத் தில் இருந்து விடுதலை என்பது மது, புகைபிடித்தல், சூதாட்டம் தீய சிந்தனை, தீமையான செயல்கள் போன்ற தீங்கான பழக்கங்களை விட்டு விலகி, ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து, சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியுடன் அதனை செயல்படுத்துவதாகும்; இதற்குத் திட்டமிடுதல், படிப்படி யாகக் குறைத்தல், புதிய நல்ல பழக்கங்களை உருவாக்குதல், மன உறுதி, மற்றும் தேவைப். பட்டால் நிபுணர்களின் உதவி பெறுதல் ஆகியவை அவசியம்.
1.இளைஞர்களுக்கு வழிகாட்டிதானியைல்.Daniel is a mentor to the youth.தானியேல் 1:8-21, 
கிறிஸ்துவின் அன்பர்களே!
இறைவாக்கினர் தானியேல்  இயேசு பிறப்பதற்கு முன் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்.யூதா அரசன் யோயாக்கிமின் மூன் றாம் ஆட்சியாண்டில் பாபிலோ னிய அரசன் நெபுகத்னேசர்  இவர் பாபிலோனியப் பேரரசின் வலிமைமிக்க ஆட்சியாளர்.இவர் எருசலேமுக்கு வந்து முற்றுகை யிட்டு,அந்நாட்டின் உடல் ஊன மற்ற, அழகுமிக்க, எல்லா ஞான த்திலும் தேர்ச்சி பெற்ற, அறிவி லும் உணர்விலும் கல்வியிலும் சிறந்த, அரசனின் அரண்மனை யில் பணியாற்றும் திறமை பெற்ற இளைஞர்களாய் இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கல்தேய மொழியை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும். இப்படித் தேர்ந்த தெடுக்கப்பட்டவர்களுள் யூதா குலத்தைச் சார்ந்த தானியேல், அனனியா, மிசாவேல், அசரி யா என்பவர்களும் இருந்தார் கள். நாம் ஒன்றை தெரிந்து
கொள்ள வேண்டும்.
கர்த்தர் யூதாவை ஏன் பாபிலோ னியர்களின் (கல்தேயர்) கைக ளில் ஒப்படைத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. முதலாவது இஸ்ரவேலின் விக்கிரகாராதனை, இரண்டா வது அவர்கள் தேசத்திற்காக ஓய்வுநாட்களைக் கடைப்பி டிக்கத் தவறியது.
இவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையிலும், பாபிலோனிய கலாச்சாரத்தால் தங்களை மாற்றிக்கொள்ளாமல், தங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிற்க தானியேலும் அவரது நண்பர் களும் தீர்மானித்தனர், அரசர் உணவை மறுத்து, தேவனுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ்ந்தார்கள்,   தானியேல் ராஜாவின் உணவால் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்தார். இது ஒரு திடீர் முடிவல்ல, மாறாக, இதயத்தில் எடுக்கப்பட்ட ஆழமான தீர்மானம்.  பாபிலோ னியர்கள் யூத இளைஞர்களைத் தங்கள் வழிக்கு மாற்ற முயன்ற னர், ஆனால் தானியேல் அந்தப் போராட்டத்திற்கு அடிபணியா மல், தேவனை மகிமைப்படுத் தினார். சிறைபிடிக்கப்பட்ட நிலையில், தங்கள் அடையாளத் தையும், விசுவாசத்தையும் விட்டுக்கொடுக்காமல், தேவனுக்கு உண்மையாய் இருப்பது எப்படி என்பதை இது காட்டுகிறது. தானியேல் ஒவ்வொரு நாளும் தேவனிடம் மூன்றுமுறை ஜெபம் செய்வார். 
 தானியேல் தனது கோரிக்கை யை அரசரிடம் பணிவாக, மரியாதையுடன் முன்வைத்தார். கடவுள் அவனுடைய தலைமை அதிகாரியின் மனதில் கிருபை யைக் கட்டளையிட்டார், அதனால் சோதனைக் காலம் முழுவதும் அவருக்கு ஆதரவு கிடைத்தது.இதனால், தேவன் தானியேலுக்கும் அவனது நண்பர்களுக்கும் ஞானத்தையும் அறிவையும் கொடுத்தார். இது அவர்களை மற்றவர்களை விடவும் சிறப்பாக்கியது.
இது ஒரு சாதாரண முடிவு போலத் தோன்றினாலும், இது தானியேலின் எதிர்கால வாழ்க் கையை வடிவமைத்தது. கடவுள் இந்த விசுவாசத்தின் மூலம் பாபிலோனிய மன்னனையே தேவனைப் புகழச் செய்தார். 
தானியேல் தன் இருதயத்திலே தீர்மானம்பண்ணினான்" (He resolved in his heart): இது யூத பாரம்பரியத்தில், 'இதயம்' என்பது முடிவெடுக்கும் இடமாக இருந்தது. இது தானியேலின் ஆழமான, உறுதியான விருப்பத் தைக் குறிக்கிறது.
"ராஜாவின் உணவினாலும் பானத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தாமல்" (not to defile himself with the king's food and wine): இது இஸ்ரவேலின் நியாய ப்பிரமாணப்படி அசுத்தமான உணவை உண்ணுவதைத் தவிர்ப்பதற்கான தேவபக்தி யைக் குறிக்கிறது.
"தேவன் தானியேலுக்குக் கிரு பையும் இரக்கமும் கிடைக்கச் செய்தார்" (God gave Daniel favor and compassion): தானியேலின் விசுவாசத்திற்கு தேவன் பதில ளித்தார். மனிதர்கள் மூலம் தேவன் செயல்பட வழிசெய்தார்.
"பத்து நாள் சோதித்துப் பாருங் கள்" (Test us for ten days): இது தானியேலின் நம்பிக்கையை யும், தைரியத்தையும் காட்டு கிறது. சோதனையின் முடிவில், அவர்கள் ஆரோக்கியமாகவும், ஞானமாகவும் இருப்பதைக் கண்டனர். 
 சவாலான சூழ்நிலைகளில் தேவனுக்கு உண்மையாக இருப்பதன் மூலம், அவருடைய கிருபையையும், ஞானத்தையும் பெற்று, அவருடைய மகிமைக் காக வாழ்வது எப்படி என்பதற் கான ஒரு எடுத்துக் காட்டுமட்டு மல்ல, தீயபழக்கத்திலிருந்து விடுவிக்கும் உறுதியான வழி யாகும்.
2. தீயபழக்கத்திலிருந்து விடுதலையே கிறிஸ்துவில் புதிய வாழ்க்கை.Liberation from bad habits is new life in Christ. கொலெசியர் 3: 1-11.,
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! கொலேசிய  திருமுகம்,
 கிறிஸ்து இல்லாமல் கிறிஸ்தவ ர்களாக வாழ முடியாது என இத்
திருமுகம் வலியுருத்துகிறது.
 கொலேசை சின்ன ஆசியாவில் உள்ள ஒரு நகராகும். திருத்தூ தர் பவுல் அடிகளார் நேரடியாக கொலெசையில்  அருட்பணியா ற்றவில்லை. எபேசியில் தங்கி கொண்டு திருத்தூதர் எப்பப் பிரா மூலம் கொலேசியில் நற்
செய்தி அறிவித்தார். இத்திருமுகத்தில் கிறிஸ்தவர் கள் பழையதை கலைந்து புதிய இயல்பை அணிந்து கொள்ள வேண்டும். குடும்ப வாழ்விலும் நாம் பணி செய்யும் இடங்களி லும் சமூகத்திலும் நாம் தூய் மையாக இருக்க கற்றுக் கொள் ள வேண்டும் என இத் திருமுகம் வலியுறுத்துகிறது.
கிறிஸ்துவுடன் நாம் உயிர்த் தெழுந்ததால், நம் மனம் இவ்வு லகப் பொருட்களில் அல்லாமல்,  மேலானவைகளைத் தேடுதலாக பரலோக விஷயங்களில் இருக்க வேண்டும். நாம் உண்மையான வாழ்க்கை கிறிஸ்துவுடன் தேவ னுக்குள் மறைந்துள்ளது. அவர் வெளிப்படும்போது, நாமும் அவ ருடன் மகிமையில் வெளிப்படு
வோம். நாம் பழைய பாவங்க ளை நீக்க,பூமியிலுள்ள நம் அங்கங்களான வேசித்தனம், அசுத்தம், மோகம், தீய இச்சை, விக்கிரக ஆராதனை போன்றவ ற்றை மரிக்கச் செய்யுங்கள்.
இந்தக் காரியங்களுக்காகவே தேவகோபம் வருகிறது; எனவே, இவற்றைத் தள்ளிவிடுங்கள்.
கோபம், மூர்க்கம், பொறாமை, தூசணம், உங்கள் வாயிலிரு ந்து வரும் அநாகரீகப் பேச்சு போன் றவற்றை நீக்குங்கள்.
ஒருவரையொருவர் பொய் சொல்லாதீர்கள்; ஏனென்றால், பழைய மனிதனை அவனுடைய செய்கைகளுடன் நீக்கிவிட்டீர் கள். இங்கே கிரேக்கன், யூதன், விருத்தசேதனம், விருத்தசேத னமில்லாதவன், அந்நியன், சித்தியன், அடிமை, சுதந்திரன் என்ற வேறுபாடுகள் இல்லை; கிறிஸ்துவே எல்லாவற்றிலும் எல்லாமாயிருக்கிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத் தவர்கள், பழைய பாவ வாழ்க் கையை விட்டுவிட்டு, கிறிஸ்து வின் புதிய சுபாவத்திற்கு ஏற்ப, அன்பும், சமாதானமும் நிறைந்த, மேலான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே கொலோ செயர் 3:1-11-இன் முக்கியக் கருத்தாகும். 
3. கிறிஸ்து அளிக்கும் புது வாழ்வே விடுதலை. The new life that Christ offers is freedom.
மாற்கு 5: 1-20.
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!இந்தப் பகுதி பேய்களின் சக்திகள் மீதான இயேசுவின் சக்தியை வலியுறுத்துகிறது.
அந்த மனிதன் கல்லறைகளுக்கு மத்தியில் வாழும் ஒரு பயங் கரமான, தனிமைப்படுத்தப்பட்ட உருவம், முற்றிலும் உடைந்த தன்மை, சுய-தீங்கு (கற்களால் வெட்டுதல்) மற்றும் கட்டுப்பாட் டை மீறிய தன்மை..
பேய்கள் உடனடியாக இயேசு வை உன்னதமான கடவுளின் மகனாக அடையாளம் கண்டு கொள்கின்றன, அவர்கள் அவரு க்குப் பயந்தாலும், தெய்வீக சக்தியைப் பற்றிய தங்கள் உள்ளார்ந்த அறிவைக் காட்டு கின்றன. பேய்கள் ஆண்டவரை உன்னத மகனாக ஏற்றுக் கொள் கின்றன ஆனால் மனிதர்களோ ஆண்டவரை அறியாமலும் ஏற்றுக் கொள்ளாமலும் இன்னும் இருக்கிறார்கள்.ஆண்டவரை பார்த்த உடன்,அந்த மனிதன் ஓடி, விழுந்து, இயேசுவை வணங்கு கிறான்.பன்றிக்குள் நுழைய பேய்கள் கோருவது அவற்றின் அழிவு மற்றும்  விருப்பத்தை வெளிப்படுத்துகிறது, ஆனால் இதற்கும் கடவுளின் அனுமதி தேவைப்படுகிறது, இது அவற் றின் வரையறுக்கப்பட்ட சக்தி யைக் காட்டுகிறது.
லேகியோன்" என்ற பெயர்,  மிகப்பெரிய, பன்முகத் தன்மை யைக் குறிக்கிறது, ஆளுமையை முழுமையாகக் கைப்பற்றுகி றது. பன்றிகளின் அழிவு கிராம மக்களுக்கு வெறும் புரிதலை மட்டுமல்ல, பயத்தையும் பிரமிப் பையும் தருகிறது.அவன் குண மடைந்து உடை அணிந்திருந்து,  அமர்ந்திருப்பது சரியான மன நிலையில் இருப்பது புதிய மனி தனாக மாற்றியிருப்பது- ஒரு "மனித அசுரனிலிருந்து அமை தியான, பகுத்தறிவுள்ள தனி நபராவும், முழுமையான மாற்ற ம், அதிசயத்தின் யதார்த்தத்தை நிரூபிக்கிறது.அந்த மனிதன் இயேசுவுடன் தங்க விரும் புகிறான், ஆனால் இயேசு அவனை வீட்டிற்கு அனுப்புகி றார், 
குணமடைந்த மனிதனிடம் தனது கதையை அவனது குடும் பத்தினருக்கும் ஊருக்கும் சொல்லும் பணியை இயேசு பணிக்கிறார், இதனால்அவனை கடவுளுடைய ராஜ்யத்திற்கான எதிர்பாராத நற்செய்தியாள னாக மாற்றுகிறார்.
கிறிஸ்துவிற்கு பிரியமானவர் களே! தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவதால் உடல்நலம், மனநலம் மேம்படும், தன்னம் பிக்கை அதிகரிக்கும், உறவுகள் வலுப்பெறும், நேர மேலாண்மை சிறக்கும், நிதி நிலைமை சீராகு ம், புதிய நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ளலாம், வாழ்க் கையில் நேர்மறை எண்ணங்கள் பெருகும், நீண்ட ஆயுளும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிட்டும். மிக முக்கியமாக, ஆண்ட
வரோடு இனைந்து வாழ உதவும்
என்ற மன நிலையோடு வாழ
ஆண்டவர் அருள்புரிவாராக.
ஆமேன்.



Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermon centre. com.








. லேகியோன் பேய்களின் ஒரு        பெரிய தொகுப்பாகும் .

ஜோஹன்னஸ் வீரிக்ஸால் பிசாசு பிடித்த மனிதனை கிறிஸ்து குணப்படுத்துகிறார் , 1585. விக்கி.

Comments

Popular posts from this blog

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

நோய்களை குணமாக்குதல் . (182) Healing in Sickness. விடுதலை பயணம் 4:10-17,22, திருப்பாடல் 103:1-10, 2 கொரிந்தியர் 12:1-10, யோவான் 9:1-7. நலம் நல்கும் திருப்பணி ஞாயிறு.