கல்வி ஞாயிறு: ஆசிரியர் தினம்.இயேசுவே ஆசான்.(155) Jesus the Guru. நீதி மொழி: 4:1-19. திருப்பாடல்:141, திருத்தூதர் பணிகள்: 22:-1-5, லூக்கா: 4: 31-44.
முன்னுரை: கிறித்துவின் அன்பர்களே! ஆசிரி யர் தினத்தை திருச்சபைகள் கல்வி ஞாயிறு ஆக கொண்டாடு வதில் மிக மகிழ்ச்சிஅடைகிறேன். ஆசிரியர்களுக்கெள்ளாம் தலை சிறந்த ஆசிரியராகவும்நமதுஆண் டவர் இயேசு கிறித்து திகழ்கிறார். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.ஆசிரியர் மாதா, பிதா, குரு என மூன்றாம் கடவுளாக கருதுகிறார்கள். ஆண்டவரை " ரபீ " (Rabbi) என்ற பெயரில் அழை த்தனர்.(A Jewish religious leader and teacher of Jewish law.) அவருடைய சீடர்களும் ஆண்டவரை கர்த்தர் என்றும்,ரபீ என்றும் போதகரே என்றும், ஐயா(லூக்கா5:5) என்றும், மெசியா என்றும் அழைத்தனர். ஆண்டவர் அதிகாரத்துடன் போதித்தார். அவரிடம் நேர்மை, உண்மை, சக்தி இருந்தது. தன் போதனைகளில் உவமைகள், பழமொழிகள், கதைகளை ஒரு நல் ஆசிரியராக தன் சீடர்களுக்கு போதித்தார். தன் போதனையில் சரியான மொழியை பயன்படுத்தி னார். உருவகம், உவமானங்களை அதிகம் பயன்படுத்தினார். குழந் தைகளுக்கு அவர்காலத்தில் முத ன்மை கிடையாது, ஆனால், சிறு வர்கள் தன்னிடம் வர அனுமதித் தார்.சிறுவர்கள் போன்றவருக்கு தான் விண்ணரசு என்றார். இத்த கைய விண்ணரசின் சொந்தகார ரான சிறுபிள்ளைகளை நல்வழி யில் வ...