திருவிருந்து எனும் சாக்கிரமந்து The Sacrament of the Holy Communion (224) விடுதலைப் பயணம் 12 :1-14, 1 கொரிந்தியர் 10:: 14-22, திருப்பாடல் 42, லூக்கா 22: 7:20.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, திருவிருந்து எனும் சாக்கிரமந்து. இது ஒரு கிறிஸ் தவ புனித சடங்காகும். அன்பானவர்களே! புராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் போது ஜெனீவா வில் ஒரு பிரெஞ்சு இறையியலா ளர் , போதகர் மற்றும் சீர்திருத்த வாதி ஜான் கால் வினின் கூற்றுப்படி, ஒரு புனிதச் சடங்கு என்பது கடவுளிடமிருந்து வந்த வாக்குறுதியுடன் தொடர் புடைய பூமிக்குரிய அடையா ளம் என்று வரையறுத்தார் . புதிய உடன்படிக்கையின் கீழ் இரண்டு புனிதச் சடங்குகளை மட்டுமே அவர் ஏற்றுக்கொண்டார் : திருமுழுக்கு என்ற ஞானஸ்நா னம் மற்றும் நற்கருணை என்ற கர்த்தருடைய இராப்போஜனம். இவை இரண்டுமே மிக முக்கிய புனித சடங்காகும் இதையே நம் திருச்சபைகள் பின்பற்றி வருகி ன்றன.புதிய உடன்படிக்கையின் கீழ் இரண்டு சடங்கை மட்டுமே செல்லுபடியாகும் என்று அவர் ஏற்றுக்கொண்டார். நாமும் இவற்றில் உறுதியாய் இருப்போம் பின்பற்றுவோம். அன்பானவர்களே, கிறிஸ்தவ ஞானஸ்நான நடைமுறை, யோவா ன் ஸ்நானகன் இயேசு...