Posts

Showing posts from October, 2025

இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?(233) What this child is going to be? நீதித் தலைவர்கள் : 13: 1-14, திருப்பாடல்119: 9-16, எபேசியர்: 6: 1-4, லூக்கா : 1-57-86. உலக ஞாயிறு பள்ளி தினம்

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரம் உலக ஞாயிறு பள்ளி தினம்.  அதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " இக்குழந்தை எப்படிப்பட்ட தாக இருக்குமோ? What this child is going to be?"  என்பதாகும்.  நண்பர்களே! நம் திருச்சபைகள் ஆண்டுதோறும் நவம்பர் மாதத் தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக ஞாயிறு பள்ளி தினம் கொண்டாடப்படுகிறது . இந்த   நாள், 1780 ஆம் ஆண்டு இங்கி லாந்தின் குளோசெஸ்டரில் முதல் ஞாயிறு பள்ளியைத் தொடங்கிய ஆங்கில பத்திரிகை யாளர் ராபர்ட் ரெய்க்ஸ் போன்ற இயக்கத்தின் நிறுவனர்களை யும் கௌரவிக்கிறது.கிறிஸ்தவ கல்வியையும், குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சியை வளர்ப் பதில் ஞாயிறு பள்ளிகளின் பங்கை அளவிட முடியாது. அந்த ஆசிரியர்களின் தியாகம் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டக் கூடியது.இவர்கள், குழந்தைகளு க்கு வேத வாசிப்பு, வசனங்களை மனப்பாடம் செய்தல்,  பாடல்க ளைக் கற்றுக்கொடுத்தல், வண்ணம் தீட்டுதல், கதைகள் மூலம் விளக்குதல், நாடகமா கவும், நடனமாகவும் பயிற்றுவி க்கின்றவர்கள் நம் ஆசிரிய பெருமக்...

கடவுளின் இறையாண்மை, நீதி மற்றும் அமைதியை கொண்டா டுதல்.( 232) Celebrating God's Sovereignty, Justice and Peace. விடுதலைப் பயணம்: 7:1-7 திருப்பாடல்கள்: 89: 1-18, உரோமையர்: 13:1-7, யோவான் 18: 33-38. சீர்திருத்த ஞாயிறு

Image
முன்னுரை :கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் " மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள் ." இவ்வாரம் சீர்திருத்த ஞாயிறு (Refornation Sunday) தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " கடவுளின் இறையாண்மை, நீதி மற்றும் அமைதியை கொண்டாடுதல். Celebrating God'd Sovereignty, Justice and Peace."    கடவுளின் இறையாண்மை என்றால் என்ன? What is God's Sovereignty?  நண்பர்களே! கிறிஸ்தவத்தில் கடவுளின் இறையாண்மையை , கடவுள் தனது படைப்புகளின் மீது தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை என்று கூறலாம் . இறையாண்மை என்பது கடவுள் தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதத்தையும் உள்ளடக்கியது. The right of God to exercise his ruling power over his Creation. கடவுளின் இறையாண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் காண்பது,  ஆபிரகாமின் சந்ததி யினர் 400 ஆண்டுகள் அந்நிய தேசத்தில் வாழ்வார்கள் என்றும், பின்னர் ஏராளமான சொத்துக்க ளுடன் வெளியே வருவார்கள் என்றும் கடவுள் கூறுகிறார் (தொடக்க நூல். 15:13,14). யோசேப் தனது சகோதரர்களா ல் அடிமைத்தனத்திற்கு விற்கப் பட்ட...

வழிபாட்டில் கடவுளின் திரு வெளிப்பாடு( 231).Revelation of God in Worship.1அரசர்கள் 8:22-30, திருப்பாடல் 148, திரு வெளிப் பாடு 14:1-7, மாற்கு:3:1-6.

Image
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் " மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, "வழிபாட்டில் கடவுளின் திருவெளிப்பாடு". என்ற தலைப்பாகும். வழிபாடு என்றாள் என்ன? What is worship? வழிபாடு என்பது  கடவுளை  வணங்கி மரியாதை செலுத்து வதாகும். வழிபடு ' என்ற சொல் லிலிருந்து வழிபாடு தோன்றிய து, இதன் பொருள் வணங்கு தல் , பின்பற்றுதல் , நெறிப்படுத் துதல் என்பதாகும். இறைவனு டன் நெருங்கி வருவதற்கும், இதயத்தின் கதவுகளை இறை வனுக்காகத் திறந்து வைப்பதற் கும் வழிபாடு உதவுகிறது. கடவுளை வணங்குவது என்பது நாம் அவரை முழு இருதயத் தோடும், முழு ஆன்மாவோ டும், முழுமன தோடும், முழுப லத்தோடும் நேசிப்பதாகும் . உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வா யாக! (இணைச் சட்டம் 6:5)  நாம் கடவுளை எல்லாவற்றிற் கும் மேலாகப் போற்றி, நம் இதய ங்களில் அவருக்கு முதலிடம் கொடுக்கும்போதுதான். நாம் இறைவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் வழிபட விரும்பினால், நம் இதயங்களிலிர...

உடல்/மனநிலை// இறுதி: நோயாளிகள் கரிசனை ஞாயிறு, இயலாமை : மாண்புடன் பேணுதல். (230) Disability: Care and Honour. 2 சாமுவேல்: 9: 1-13, திருப்பாடல்: 146. திருத்தூதர் பணிகள் : 9:32-35. மாற்கு 3:1-6

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் " மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " இயலாமை : மாண்புடன் பேணுதல்.  Disability: Care and Honour.. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி WHO ‘இயலாமை என்பது ‘ஒரு மனிதனுக்கு இயல்பானதாகக் கருதப்படும் விதத்தில்  ஒரு செயலைச் செய்யும் திறனில் ஏதேனும் கட்டுப்பாடு அல்லது குறைபாடு’ ஏற்படுவதாகும். இயலாமை என்பது ஒரு முடிவ ல்ல ; அது ஒரு புதிய தொடக் கம் . தற்கால மருத்துவ முன்னே ற்றங்கள், புதிய தொழில்நுட்ப ங்கள் மற்றும் சமூக ஏற்பு ஆகிய வை இயலாமை உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத் துவதில் முக்கியப் பங்கு வகிக்கி ன்றன, இயலாமைகள் பிறப்பிலி ருந்தே இருக்கலாம் அல்லது ஒரு நபரின் வாழ்நாளில் பெறப்பட லாம்.    யார் இயலாமை உள்ளவர் கள்? Who are the disables? *பார்வையற்றவர்கள் அல்லது பகுதியளவு பார்வையுடையவர் கள், * கற்றல் அல்லது அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள் * மாற்றுத் திறனாளி மக்கள் *நீண்டகால நோய்கள் உள்ள வர்கள் * மனநலம் அல்லது உளவியல் சிக்கல்கள் உள்ளவர்கள் * மூப்...

அனைத்து பற்றாளரும் திரு த்தொண்டரே Priesthood of All Believers.( 229). ஏசாயா 61: 1-11, திருப்பாடல்135:12-21, 1 பேதுரு 2:1-10, யோவான்17: 1-8. இறைமக்கள் ஞாயிறு

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே!உங்கள் அனைவருக்கும் " மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள்." இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " அனைத்து பற்றாளரும் திரு த்தொண்டரே" Priesthood of All Believers. யார் பற்றாளர் or பாதிரியார்? Who is a Priesthood? ஒரு பாதிரியார் என்பவர் புனித மான சடங்குகளைச் செய்யும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதத் தலைவர் ஆவார்.  அவர் கடவுளுக்கும்  மனிதர்க ளுக்கும்  இடையே ஒரு பாலமா கச் செயல்படுபவர். பழைய ஏற்பாட்டின்படி லேவியின் சந்த தியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட மோசேயின் சகோதரரான    ஆரோன் முதல் பிரதான ஆசா ரியன் ஆவார்.   ஆசாரியர்கள் மக்களுக்கு சேவை செய்வதற் கும், பலிகளைச் செலுத்துவத ற்கும் ,கடவுளின்   வார்த்தையை  அறிவிப்பதற்கும் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் இந்த பழைய ஏற்பாட்டின் ஒரே இனத்திற்கான ஆசாரிய  உரி மையை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அனைவரு க்குமாக  மாற்றியதே உலக த்திலேயே மிகச்சிறந்த கொடையாகும். ஏனெனில் நமது ஆண்டவரே நமக்கு பிரதான ஆசாரியர். இறைவாக்கினர் எரேமிய...