புனித வெள்ளி: முதலாம் வார்த்தை. தந்தையே இவர்களை மன்னியும். (266) Father forgive them. லூக்கா 23:34.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  புனித வெள்ளியின் முதல் வார்த்தை  லூக்கா 23:34-ல் இயேசு, "தந்தையே  இவர்க ளை மன்னியும்; தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில் லை" என்று கூறினார்,
இந்த வசனம், தன் எதிரிகளுக் கும் மன்னிப்பு வழங்கும் இயேசு வின் அளவற்ற அன்பையும், கருணையையும் வெளிப்படுத்து கிறது. இது சிலுவையின் முதல் மொழியாக அறியப்படுகிறது சிலுவையின் உச்சக்கட்ட வேத னையிலும் அன்பையும் மன்னிப் பையும் வெளிப்படுத்திய முதல் வார்த்தையாகும். இந்த வார்த் தை, பழிவாங்காத தெய்வீக அன்பையும், அறியாமையில் பாவம் செய்யும் மனிதர் மீது கொண்ட இரக்கத்தையும், பிதாவுடனான அவரது மாறாத உறவையும் காட்டுகிறது. 
1. பழிவாங்காத அன்பு:Love that does not seek revenge.
இயேசு தம்மைக் கொல்பவர்க ளைப் பழிவாங்கவில்லை, மாறா க அவர்களுக்காக தந்தையிடம் மன்னிப்புக் கேட்டார்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குக் காரணமானவர் கள் ரோமானிய ஆளுநர் பொந்தியு பிலாத்து, யூதமதத் தலைவர்கள், ரோம வீரர்கள் மற்றும் மக்கள், யூத அதிகா ரிகள் குற்றம் சாட்டினர். 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்த வர் சீடர் யூதாஸ் இஸ்காரியோட்
இவர்கள் அனைவரும் ஒன்றும்
செய்யாதவர்கள். 
ரோமானிய சிப்பாய்கள் இயேசு வின் ஆடைகளைப் பகிர்ந்து கொண்டு, அவரைச் சிலுவை யில் அறைந்த தருணம். இவர் கள் தன் உலக மீட்பின் செயலுக் கும் பாவ நிவாரண பலியாக தம்மை ஒப்பு கொடுக்க உதவி யர்கள்.
இவ்வாறு இவர்கள் தன்னை சிலுவையில் ஒப்புக்கொடுக்க வில்லை என்றால் எவ்வாறு இவர் உலகத்தின் பாவத்தை சுமத்து இருக்கிற தேவாட்டு குட்டியாக மாற முடியும்.எனவே, அவர்கள்மீது பழி வாங்காத
அன்பை வெளிப்படுத்தினார்.
அதன் நீட்ச்சி தான்," தந்தையே இவர்களை மண்ணியும், தாங்க ள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
என இறை வேண்டல் புரிந்தார். அறியாமையில் செய்தார்கள் என குறிப்பிடுகிறார்.சவுக்கு அடிகள், முள்முடி, மற்றும் ஆணி கள் அவர்களுக்கிடையேயான அன்பைப் பிரிக்க முடியவி ல்லை. 
2.தந்தையே என அழைத்தல்.
அப்பா’ (Abba) என்ற வார்த்தை, அரமேய மொழியில் ஒரு குழந்தை தன் தந்தையை அன்போடு அழைக்கும் உரிமை சார்ந்த வார்த்தை. இயேசு கடவுளைக் தூரத்து தேவனாகப் பார்க்காமல், நெருங்கிய தந்தையாகக் கருதினார்கடவுள் அதிகார தோரணை உள்ளவர் அல்ல, மாறாகப் பரிவு, அன்பு, மன்னிப்பு (லூக்கா 23:34) கொண்டவர் என்பதை விளக்கி னார்.கடவுளை 'எங்கள் தந்தை' என அழைப்பதன் மூலம், மனிதர் களாகிய நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை இயேசு பெற்றுத்த ந்தார்.
கடவுளுக்கும் மனிதருக்குமான உறவை "அன்பு" என்ற அடிப்ப டையில் மாற்றுவதற்காகவே இயேசு அவரை 'தந்தை' என அழைத்தார். 
3.மன்னிப்பு:
மன்னியும்" என்பது ஒரு தொடர் செயலைக் குறிக்கிறது. அதாவ து, இயேசு ஒருமுறை மன்னிப்பு கேட்கவில்லை, மாறாக அந்தச் செயல் நடக்கும்போது தொடர் ந்து மன்னிப்புகேட்டுக்கொண்டே இருந்தார். கடவுள் என்றால் மன்னிப்பு என்பதாகும். நாம்
என்றால் தவறு, பாவம் செய்கிறவர்கள்.To Err (sin) is human, to forgive is divine.
பாவமும், மன்னிப்பும் நம்
வாழ்வில் தொடர்ந்து கொண்டே
இருக்கும்.மன்னிப்பு என்பது பலவீனமல்ல, அது தெய்வீக வலிமை என்பதை நிரூபிக்கி றது. மன்னிக்கின்ற உள்ளம்
மாணிக்க கோவில்.
இயேசு, "பிதாவே" (அப்பா) என்று அழைப்பதன் மூலம், கடுமையா ன வேதனையிலும் பிதாவுடனா ன தனது நித்திய உறவை உறுதிப்படுத்துகிறார்.
நாம் ஏற்கெனவே, ஒருவரை ஒருவர் மன்னிக்கிறது போல,
ஆண்டவர் நமக்கு கற்றுக்கொ டுத்த இறைவேண்டலில்,
"எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித் துள்ளதுபோல எங்கள் குற்றங் களை மன்னியும். (மத்தேயு நற்செய்தி 6:12)என மன்னிப்பை நம்மில் செயல்படுத்தியுள்ளார்.

"தந்தையே இவர்களை மன்னியும்; தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று கூறினார்"



Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..






A depiction of the Raising of the Cross, by Sebastiano Mazzoni, 17th century, Ca' Rezzonico
.

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80