சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள்.இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " சீடராக் குங்கள்". யார் சீடர்? ஒரு சீடர் என்பது ஒரு ஆசிரியரின் போதனைகளை ஏற்று நடப்பவர், அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுபவர். ஒரு மாணவர் அல்லது கற்றுக் கொள் ளும் எவரையும் சீடர் என்று குறிப் பிடலாம். இயேசுவின் போதனை களை ஏற்றுக் கொண்டு அதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அனைவருமே சீடர்கள்தான். ஒரு தலைவரின் போதனையை அறிவிக்காமல் யாரும் சீடராய் இருக்க முடியாது.சீடர் என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களைப் பின்பற்றி நடப்பவர் மற்றும் அவரது வழிகாட்டுதலின் படி வாழ்பவர் என்று பொருள். சீடர்கள் 12 பேரும் இயேசுவுடன் நெருக்கமாகப் பழகி, அவரது போதனைகளை உலகெங்கும் பரப்பினார்கள். சீடராக்குங்கள் என்பது இயேசு வின் செய்தியை மற்றவர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களையும் அவரது சீடர்களாக மாற்றுவதைக் குறிக்கிறது. சீடர் என்ற சொல், ஒழுக்கம் போன்றது, லத்தீன் வார்த்தையான டிசிபுலஸிலிருந்து disciplus வந்தது, அதாவது "மாணவர்...