மன்னிக்கும் கிறிஸ்து. The Forgiving Christ . (The second Sunday in Lent) தொடக்க நூல் 4 : 8- 16. தூய மாற்கு 2:1-12. திருப்பாடல் 25. உரோமையர் 5: 6-11.
முன்னுரை: தேசிய மன்னிப்பு நாள் ( National Sorry Day ), 1905-ஆம் ஆண்டு முதல் ஆஸாதிரேலியா நாட்டின் சட்டப்படி, ஆஸ்திரேலி யாவின்பழங்குடி மக்களின் குழந்தைகளை, ஐரோப்பிய பண்பாட்டு (European Culture) முறையில் வளர்த்ததை, 1998-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா அரசு செய்த மாபெரும் தவறு உலகிற்கு தெரிய வந்தால் பழங்குடி மக்களிடம், வெள்ளை இன ஆஸ்திரேலியர்கள், ஆண்டுதோறும் மே மாதம் 26ஆம் நாளன்று மன்னிப்பு கேட்கும் நாளாக 1998 முதல் கடைபிடிக்கப்படுகிறார்கள. மனித உரிமைகளை (Human Rights) உலகெங்கும் வலியுறுத்தவும் பாது காக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை அல்லது பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) ஆகும். இவ்வமைப்பானது ஐக்கிய இராச்சியத்தில் UNO 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்டது. மற்றும் உலகளாவிய மன்னிப்பு தினம் 1994 இல் CECA (கிறிஸ்துவின் தூதர்) ஆல் நிறுவப்பட்டது. இது முதலில் கனடாவிலேயே தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகளவில் பிரபலமடைந்ததால், இது உலகளாவிய மன்னிப்பு தினம் என மறு பெயரிடப்பட்டது. மன்னிப்பு என்றால் என்ன ? மன்னிப்பு என்...