மாற்றத்தை உருவாக்கும் பெண்கள். WOMEN AS CHANGE MAKERS.(94)எண்: 27:1-11. திரு.பா.119: 57-64. திருத்தூதுவர் 16:11-15, லூக்கா : 1: 40-55.
முன்னுரை: கிறித்துவின் அன்பு நண்பர்களே! இறை மைந்தன் இயேசுவின் நாம த்தில் வாழ்த்துக்கள். மாற்றத்தை உருவாக்கும் பெண்கள் என்ற தலைப்பு மிக சிறப்பான சிந்திக்க வேண்டிய பொறுப்பான தலைப்பு. உலகம் படைக்கப்பட்டதிலிருந்து மாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. மாற்றங்கள் இல்லை என்றால் மறுமலர்ச்சிகள் இல்லை. மாற்றம் தவிர்க்க முடியாதது." மாற்றம் ஒன்றே மாறாதது ” என்ற இந்த பொன்மொழியைச் சொன்னவர் ஹெராகிளி டஸ் ( HERACLITUS ) – என்ற கிரேக்க அறிஞர். எபேசு என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் கிரேக்கத்தில் சொன்னதை ஆங்கிலத்தில் “ மாற்றம் ஒன்றே மாறாதது ( Change is invariant). என கூறினார். வேதத்தில் ; கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்து வருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது. (சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்) 3:11) என அதனதன் காலத்தில் மாற்றத்தை கடவுள் கொண்டு வருகிறார். இது படைப்பிடன் தொடர். அவ்வாறே; உலகத் தோற்றம் முதற் கொண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அ...