இறை மக்கள் சாட்சி. WITNESS OF THE PEOPLE OF GOD. (86) லூக்கா 10:1-20. ( பொது நிலையில் ஞாயிறு).
முன்னுரை: கிறிஸ்துவிற்கு பிரியமானவர்களே !.உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து நாமத்தில் வாழ்த்துக்கள். இறைமக்கள் சாட்சி என்ற தலைப்பில் சிந்திப்போம். யார் இறைமக்கள்? ஆண்டவரின் வார்த்தை படி வாழ்கின்ற வர்கள்! இயேசுவின் இறை மக்கள். இயேசுவின் வார்த்தைப் படி; 'இவ்வுலகில் வாழ்கின்ற மக்களே இயேசுவின் சாட்சிகள்.இயேசு தம் சீடர்கள் பக்கம் கையை நீட்டி, "என் தாயும் சகோதரர்களும் இவர்களே.விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தைநிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார். (மத்தேயு நற்செய்தி 12:49,50) 1. ஆண்டவரின் அருட் பணி: ஆண்டவர் தம்முடைய திருப்பணிக்காக 12 பேரை சீடர்களாக தேர்வு செய்து அருட்பணி ஆற்றினார். மேலும்72பேரை தேர்வு செய்து குறிப்பாக இஸ்ரேல் மக்களுக்களிடம் செல்லும் படியாக அனுப்பு கிறார் அவர் முக்கியமாக இருவர் இருவராக அனுப்பு கிறார் அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு என்ற அடிப்படையில் அனுப்புகிறார். இவ்வுலகில் மிகுதியான ஊழியங்கள் உண்டு. ஆனால் அதை செயல்படுத்தும் ஊழியர் களோ மிகக் குறைவாக உள்ளனர். இந்தகுறைகளை நிறைவு செய்ய வேண்டியது நம்முடைய கடமை. திருச்சபைகளின் கடம...