மாணவர் ஞாயிறு. Students Sunday. மேலிருந்து வரும் ஞானம். (142) Wisdom from Above.1 அரசர்கள் 3:16-28, திருப்பாடல் 119 :33-40. யாக்கோபு 1-1-8, லூக்கா: 10:21-24.
முன்னுரை: கிறித்துவின் அன்பு இறை மக்களே! மாணவர் (Student) என்பவர் முதன் மையாக ஒரு பள்ளி அல்லது பிற கல்வி நிறுவனத்தில் கல்வி பயி லும் ஒருவரைக் குறிப்பதாகும். மாணவர்" என்பவர் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மேற்படிப்பு களில் (எ.கா., கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் ) சேர்ந்தவர் களைக் குறிக்கிறது; Students can be children, teenagers, or adults who are going to school, but it may also be other people who are learning, such as in college or university. இவர்களுக் காக நம் திருச்சபை ஒரு ஞாயிற்று கிழமையை மாணவர் ஞாயிறு ஆக கொண்டாடிவருகிறது. ஞானம் என்பது,"அறிவு ,அனுபவம் , புரிதல் ,பொதுஅறிவு நுண்ண றிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி சிந்தித்து செயலாற்றும் திறனே ஞானம் எனப்படும். கிறிஸ்தவ இறையியல் பழைய ஏற்பாட்டில் ஞானம் (ஹீப்ருமொழி யில் சோக்மா) என்றும் கிரேக்க மொழியில் ஞானம் ( சோபியா ) என்று அழைக்கப்படுகிறது. இது பிளாட்டோனிசத்திலிருந்து பெற்றது . Acc.to Collins' dictionary, "Wisdom is the ability to use your expe rience and knowledge in order to make sensible decisions or judgments." ...