Posts

Showing posts from September, 2024

கடவுளின் மாட்சியை பறைசாற்றும் படைப்பு (160)Creation Proclaims Glory of God. நீதி மொழிகள் 8:22-31. திருப் பாடல் 19. திருவெளிப்பாடு 21:1-8. லூக்கா 8:22-25

Image
முன்னுரை: கிறித்துவின்அன்புஇறைமக்களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறித்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். கடவுளின் மாட்சி யை பறைசாற்றும் படைப்பு (Creation Proclaims Glory of God.) என்ற தலைப்பை தியானிப்போம். கடவுள் அனைத்தையும் நேர்த்தி யாக படைத்து மனிதனை தன் சாயலாக படைத்தார். படைப்பனைத்தும் நல்லது என்று கண்டார். ஆனால், "மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது.  (தொடக்கநூல் 6:6) இதனால், படைப்பை முக்கியமாக நிலத்தில் வாழ்ந்த மனிதன் முதல் விலங்குகள் வரை அழிக்கிறார். இவைகள், ஆண்டவரின் படைப் பை மகிமை படுத்தவில்லை.No living things on the earth, glorify God. கடவுளின் படைப்பில், வான மண் டலங்கள் மட்டுமே அவரை மகிமை படுத்தின."வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான் வெளி அவர்தம் கைகளின்வேலை ப்பாட்டை விவரிக்கின்றது.  (திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 19:1)" ஏனேனில், "வானங்கள் உமது கரத்தின் வேலை." (எபிரெயர் 1:10) என உறுதி படைத்தார். கடவுளின் மகிமை நம் தடங்களில் நம்மை நிறுத்தும் அழகில் பிரதிபலிக்கிறது. அவரது சக்தி "இ...

CSI FORMATION DAY. வழிபாட்டில் ஒற்றுமை.(159) Unity in Worship நெகேமியா 2:17-20 திருப் பாடல் 66. உரோமையர் 8:31-39 லூக்கா 9:1-6.

Image
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள்.  இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும்  4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...

கொர்னேலியஸ் - நூற்றுக்கு அதிபதி - தூய ஆவியை பெறுவது.

கிறீத்துவின் அன்பர்களே!வேதத்தில் உள்ள கொர்னேலியஸ் ஒரு நூற்றுக்கு அதிபதி , ரோமானிய இராணுவத்தின் இத்தாலிய படைப்பிரிவின் தளபதி. அவர் செசரியாவில் வசித்து வந்தார். அப்போஸ்தலர் 10 இல் உள்ள அவரது கதை முக்கியமானது, ஏனென்றால் கொர்னேலியஸின் வீட்டில் கடவுள் தேவாலயத்தின் கதவுகளை புறஜாதி உலகிற்கு பகிரங்கமாகத் திறந்தார். அப்போஸ்தலனாகிய பேதுரு சமாரியர்களுக்கும் (அப்போஸ்தலர் 8) மற்றும் யூதர்களுக்கும் (அப்போஸ்தலர் 2) கதவுகளைத் திறப்பதற்கு சாட்சியாக இருந்ததைப் போலவே, அது நடப்பதைக் காண அங்கு வந்திருந்தார். ஒரு ரோமானியராக இருந்த போதிலும், கொர்னேலியஸ் கடவுளை வணங்குபவர், யூத மதத்திற்கு மாறிய யூத சமூகத்தால் அறியப்பட்ட மற்றும் மதிக்கப்படுபவர் (அப்போஸ்தலர் 10:22). கொர்னேலியஸ் ஒரு பக்தியுள்ள மனிதர், அவர் தவறாமல் ஜெபித்து, தர்மம் செய்தார் (வசனம் 2). ஒரு நாள் பிற்பகல், கொர்னேலியஸ் ஜெபித்துக் கொண்டிருந்தபோது, ​​கடவுளின் தூதர் ஒருவரின் தரிசனத்தைக் கண்டார், கடவுள் அவருடைய ஜெபங்களைக் கேட்டார் என்று கூறினார் (அப்போஸ்தலர் 10:30-31). யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடும் தொழிலாளியான சீமோனின் வீட்டில் தங்கியிருந்த ப...

வறுமைக்கு கிறித்தவரின் மறுமொழி (158). Christian Response to Poverty.ஆமோஸ் 8:4-7, திருப் பாடல் 145.யாக்கோபு 2:1-7, லூக்கா 16:19-31

Image
முன்னுரை:   கிறித்துவின் அன்பு இறை மக்களே! அனைவருக்கும் இயேசு கிறித்துவின் இனிய நாம த்தில் வாழ்த்துக்கள். தென்னிந் திய திருச்சபை இவ்வாரத் தலை ப்பாக, " வறுமைக்கு கிறித்த வரின் மறுமொழி" என்ற மிக பொறுப்பான தலைப்பை கொடுத் திருக்கின்றனர். இதன் மூலமாக சமுகத்தில் கிறித்தவர்களின் கடமை, பங்கு, பொறுப்பை உறுதி  யளிக்கின்றனர்.  உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் (1/3) இந்தியாவில் வாழ்கின்றனர். வறுமை என்பதை பொருளாதார அடிப்படையில் (on Economic Factor) வரையறுக்கப்படுகிறது - ஒரு நாளைக்கு $1.90 க்கும் (ஒரு அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாய் 89. 99 ஆகும்) குறைவாக வருமானம் சம்பாதிப்பது வறுமை யாகும். மற்றொரு கணக்கு ஏழை என்பவர், இந்தியாவில் ரூ.816 அல்லது அதற்கும் குறைவாகவும் மாதச் செலவில் வாழ்ப வரே ஏழை என கருதப்படுவார். இது இந்தியாவில் வறுமைநிலையைத் தீர்மானிக்கப் பயன்படும் ஒரு காரணியாகும். வறுமையை இவ் வாறு வகைப்படுத்தலாம். அதா வது, "உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற் கான ஆதாரங்கள் இல்லாதபோது வறுமை ஏற்படுகிறது". இலக்கியத்திற்கான நோபல...

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்(யோவான்-14:18)

கிறித்துவின் அன்பு விசுவாசிகளே! இவ்வுலகில் மிக கொடுமையான சூழ்நிலை  என்ன வென்றால்." அனாதையாக" இருப்பது. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துனை என்பார்கள். அந்த தெய்வம் யார் என்றால் நம் ஆண்டவர் இயேசு கிறித்து. உன் தாயும், தகப்பனும் கைவிட் டாலும் நான் உன்னை கைவிடேன் என்றவர். நம்மை காக்கும் கரங் களால் காத்து வழி நடத்துவார். லூக்கா 13 : 10 – 13 “ஒரு ஓய்வு நாளில் இயேசு ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பதினெட்டு வருஷமாய் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கே இருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக் கூடாத கூனியாயிருந்தாள் . இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: உன் பலவீனத்தி னின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.”   அன்பானவர்களே! அவளுக்கு திடிரென வியாதி வந்து கூன் விழுந்தவளாய், பூமியை மட்டும் பார்த்து நடந்து வாழ்ந்து வந்தாள் ஆனால் அவள் எனக்கு கூன் விழுந்துவிட்டது நடக்க முடிய வில்லை என்று வீட்டிலேயே அமர்ந்திருக்கவில்லை. ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆராதிப் பாயாக என்ற கடவுளின் கட்டளை...

என் அமைதியை நான் உமக்கு அளிக்கிறேன்.(157) My Peace I give to you . செகரியா 8:12-19 திருப் பாடல்: 119: 161-176. உரோமையா 5:1-5. யோவான் 16: 16:33

Image
முன்னுரை: கிறித்துவிக்குபிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் இறைமைந்தன் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இவ்வார  சிந்தனை தலைப்பு," என் அமைதியை நான் உமக்கு அளிக்கிறேன்".(  "My Peace I give to you")  இவ்வார்த்தை  ஆண்ட வரின் இறுதிவிடை பெறும் (farewell) வார்த்தையாகும். ஆண்டவர் கலங்கிய இருதயத் துடன் இருந்த தன் சீடர்களுக்கு தன் இதயப் பரிசாக கொடுத்தது அவரின் " அமைதி" . இது ஆண்டவர் அருளிய " ஆன் மீக அமைதியாகும்" ,( spiritual Peace). இதை யாரும் தரமுடியாது இந்த  உலகமும் தரமுடியாது. அமைதி' என்ற சொல்,கிரேக்க வார்த்தையான "peace" என்பது  'eirene" என்ற கிரேக்க அமைதி கடவுளின் பெய ராகும். தமிழில்"சமாதானம்" என்ற அமைதி. நம் வேதத்தில், அமைதி என்ற வார்த்தை, " சாலோம் " (shalom) என குறிப்பிடபடுகின்ற, கடவுள் மனிதர்களுக்கு வழங் கிய,"உடன் படிக்கை (covenant) வார்த்தையாகும் . நம் திருவிவலி யத்தில் 400 வசனங்களில், 429 முறை வருகிறது. நம் வேதத்தில், முதன்முலாக ஆதியாகமம் (தொன்மை நூல்) "15:15ல், ஆண்டவர் ஆபிராம்க்கு கொடுத்த  ...

பெண்கள் ஞாயிறு.:பெண்கள்: கடவுளின் விடுதலை செயலில் பங்காளர். (156)Women: Partners in God's Liberative Act விடுதலை பயணம் 1:15-22. திருப்பாடல்: 148. உரோமையர்: 16:1-16. மாற்கு 15:37-41.

Image
முன்னுரை: கிறித்துவின் அன்பர் களே! அனைவருக்கும் இயேசு கிறித்துவின் நாமத்தில் வாழ்த்து க்கள்.இந்த வாரம் பெண்கள் ஞாயிறு நம் திருச்சபைகள் கொண்டாடுகின்றன. அதன்தலை ப்பாக பெண்கள்:" கடவுளின் விடுதலை செயலில் பங்காளர். "  என்றதலைப்பைதியானிப்போம்.  கடவுள் என்றுமே ஒரு விடுதலை யாளர். The Lord is a Liberator for ever. சங்கீதக்காரன், ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப் போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 146:7. என தன் அனு பவத்திலிருந்து வெளிப்படுத்து கிறார். விடுதலை ஒரு தொடர் போராட்ட நிகழ்வாகும். அடிமைத் தனம் இருக்கும் வரை விடுதலை யும் இருக்கும்.தனிமனிதர்கள் பலவற்றில் அடிமையாக இருக்கி றார்கள்.தனிமனித அடிமைத்தன மே பாவத்தை சேர்க்கிறது.அடிமை சங்களியை அறத்தெரிவதே விடுதலை. கடவுள் படைப்பில் மட்டுமே தன்னிச்சையாக செயல் பட்டார். ஆனால், விடுதலை போராட்டங்களை மனிதர்களின் உதவியுடன்தான் செயல்பட்டார். (உ.ம் இஸ்ரவேலரை எகிப்திலிரு ந்து  மோசஸ், ஆரோன் தலைமை மையில் நடத்தியது). 1. இனம் காத்த விடுதலையாள ர்கள். The L...