புறந்தள்ளப்பட்டவர்களோடும் விளிம்பு நிலையில் உள்ளவர் களோடும் இருத்தல் (188) Being with outcasts and Marginalized. எஸ்தர் 4:1-17, திருப்பாடல் 43 திருத்தூதர் பணிகள் 15:12-21 மாற்கு : 1:40-45. (லெந்து முதல் ஞூயிறு.)
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! லெந்துகால முதல் ஞாயிறு தலைப்பாக கொடு க்கப்பட்டிருப்பது, " புறந்தள்ளப்பட்டவர்களோடும் விளிம்பு நிலையில் உள்ளவர் களோடும் இருத்தல்". யார் புறந்தள்ளப்பட்டவர்கள்? புறம் தள்ளப்பட்டவர்கள் என்றால் சமூகத்தில் இருந்து நிராகரிக்க பட்ட ஒருவரை குறிக்கும். சமூகத் தினால் இழிவாக பார்க்கப்பட்டவர் அல்லது புறக்கணிக்கப்பட்டவர் கள் புறந்தள்ள பட்டவர்கள் என அழைக்கிறோம். பழைய ஏற்பாட்டில் , ஆபிரகா மின் மகன் இஸ்மவேல் , இஸ்ர வேலர்களின் மூதாதையராகக் கருதப்படும் அவரது ஒன்றுவிட்ட சகோதரன் ஈசாக்கின் பிறப்புக்குப் பிறகு வெளியேற்றப்பட்டார் . (தொடக்க நூல்16:12,) இஸ்மவே லின் ஒரு நாடோடியான வாழ்க் கையைப் பற்றி தீர்க்கதரிசனம் கூறுகிறது: "அவன் ஒரு காட்டு மனிதனாக இருப்பான்; அவன் கை ஒவ்வொரு மனிதனுக்கும் விரோதமாகவும், ஒவ்வொரு மனிதனின் கை அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; அவன் தன் சகோதரர்கள் அனைவருக் கும் முன்பாகக் குடியிருப்பான்." தன் குடும்பத்தின் மக்களாலே வெளியேற்றப்பட்ட மனிதன் தான் இஸ்மவேல். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் சமுதா யத...