மாட்சியின் திருகாட்சி: வெளிப்படுத்தலுக்கு மறுமொழி.(242)The Vision of Glory: A Response to Revelation. ஏசாயா 45: 18-25.திருப்பாடல் 24 திருதூதர் பணிகள் 19:1-7.மத்தேயு 2: 1-12.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இப்புத்தாண்டின் முதல் ஞாயிற தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, மாட்சியின் திருகா ட்சி: வெளிப்படுத்தலுக்கு மறுமொழி. மாட்சியின் திருகாட்சி" என்பது பொதுவாக " ஆண்டவரின் மகத்துவமான தரிசனம்" அல்லது "மாட்சிமையின் காட்சி" என்பதைக் குறிக்கிறது. இறை வாக்கினர் எசாயா தீர்க்கதரி சனத்தின்படி, " ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள் ளது" என்று கூறி பிற இனத் தவர் ஒளியை நோக்கி வருவ தைக் குறிக்கும், இது இயேசு வின் தெய்வீகப் பிறப்பு அல்லது வெளிப்பாட்டைக் குறிக்கிறது. நமது ஆண்டவர் பிறந்தபோது கீழ்த்திசை ஞானிகள் காண வந்த நாளை திருக்காட்சிப் பெருவிழாவாக நாம் கொண் டாடி மகிழ்கின்றோம். இறைவாக்கினர் ஏசாயா (எசாயா 60:1-3): "எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன் றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது; பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்...