படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு.(246) Rest that ensures the completion of creation. தொடக்க நூல் Genesis: 1:31 - 2:3, திருப்பாடல்: 23, எபிரேயர்: 4 :2 -11 மாற்கு 3: 1-6.

முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு" என்ற கருத்து தொடக்க நூல் 2:1–3-ல் உள்ள ஓய்வு நாளை (ஏழாம் நாள்) குறிக்கிறது, இது கடவு ளின் படைப்பு வேலை வெறும னே இடைநிறுத்தப்படவில்லை, மாறாக முடிக்கப்பட்டு பரிபூரண ப்படுத்தப்பட்டது என்பதைக் குறி க்கும் ஒரு இறையியல் அடையா ளமாக செயல்படுகிறது. இந்த ஓய்வு என்பது படைப்பின் வேலையிலிருந்து அதைப் பராமரித்தல் மற்றும் அனுபவிப் பதற்கான மாற்றத்தைக் குறிக் கிறது, மனிதகுலம் ஓய்வெடுப்ப தற்குப் பதிலாக ஓய்விலிருந்து வேலை செய்வதற்கான ஒரு தெய்வீக வடிவத்தை நிறுவு கிறது. 
அன்பர்களே! படைப்பின் காலம்
நாம் இப்போது கணக்கில் உள்ள
24 மணிநேர நாளை குறிக்க வில்லை. பண்டைய எகிப்தியர் கள் 24 மணி நேர நாளின் தோற் றுவிப்பாளர்களாகக் கருதப்படு கிறார்கள். கிமு 1550 முதல் 1070 வரை நீடித்த புதிய இராச்சியம், 24 நட்சத்திரங்களைப் பயன் படுத்தி ஒரு நேர அமைப்பை அறிமுகப்படுத்தியது, இதற்கு டிகன்ஸ் என்று பெயர். இதன் வேர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். ஆனாலும், பண்டைய கிரேக்க வானியலாளர் ஹிப்பார்கஸ் பின்னர் பகலை 24 சம இரவு நேரங்களாகப் பிரிக்க பரிந்து ரைத்தார்.எகிப்தியர்கள் பகலை 12 மணி நேரபகல் மற்றும் 12 மணிநேர இரவு எனப் பிரித்த னர், இறையியலாளர்கள் படைப்பு சுமார் 6,000 ஆண்டு களுக்கு முன்பு நடந்ததாகக் கணக்கிட்டுள்ளனர் . திருத்தூதர் பேதுரு அவர்கள், "அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டு கள் ஒருநாள் போலவும் இருக் கின்றன. (2 பேதுரு 3:8) என்று கூறுகிறார்.
கடவுள் சூரியனை நான்காவது
நாளில் தான் படைத்தார். ஆனால், இரண்டாம் நாளிலே
காலை மாலையை  உண்டாக்கி னார். எனவே, படைப்பு சூரிய னை அடிப்படையாக கொண்ட 24 மணி நேர நாளாக இருக்க வாய்ப்பில்லை. கடவுள் மனித னை ஆறாம் நாளில் படைத்தார்.
அத்துடன் படைப்பின் செயல்
முடிகிறது. ஏழாம் நாளை ஒய்வு நாளாக அறிவிக்கிறார்.
"மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தை யும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். 
(தொடக்கநூல் 2:2) என திரு விவலியம் கூறுகிறது.
கடவுளுக்கு ஓய்வு தேவையா?
அன்பர்களே! ஆறு நாள் படைப் பிற்குப் பிறகு, கடவுள் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தார் என்பது, அவர் படைப்புப் பணியை முடித்து, அந்த நாளைப் புனிதப் படுத்தினார் என்று பொருள் படும்.ஆறு நாட்கள் வேலை செய், ஏழாம் நாள் ஓய்வெடு" என்ற கட்டளையை மனிதர்கள் பின்பற்றுவதற்காக, கடவுள் அதை ஒரு உதாரணமாகக் காட்டினார்.கடவுள் சோர்வடைவ தில்லை, உறங்குவதில்லை மற்றும் என்றும் உயிருடன் இருந் து அனைத்தையும் நிர்வகிப்ப வர். "இதோ! இஸ்ரயேலைக் காக் கின்றவர் கண்ணயர்வதுமில் லை; உறங்குவதும் இல்லை. 
(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 121:4) என கூறுகிறார்.
கடவுள் களைப்பினால் ஓய்வெ டுக்கவில்லை, மாறாகப் படைப் பின் நிறைவைக் குறிக்கவும், மனிதர்களுக்கு ஓய்வின் முக்கி யத்துவத்தை உணர்த்தவும் ஓய்ந்தார் என்பதை நினைவில்
கொள்வோம்.ஆனால் அவரது வேலை முடிந்ததும் "மிகவும் நல்லது" என்பதால் ஓய்வெடு த்தார்.மனிதன் ஆறாவது நாளில் படைக்கப்பட்டான், அதாவது அவனுடைய முதல் முழு நாள் கடவுளுடன் ஓய்வெடுக்கும் நாளாகும். கடவுளின் முடிக்கப் பட்ட வேலையின் மிகுதியில் வாழ மனிதகுலம் வடிவமைக்க ப்பட்டது. அறிவியலின்படி, பூமி சுமார் 4.54 பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு சூரிய நெபுலாவி லிருந்து தூசு மற்றும் வாயுக்க ளின் ஈர்ப்பு விசையால் உருவா னது.பூமி தோன்றி சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்குள், அதாவது சுமார் 3.5 முதல் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், கடலில் முதல் நுண்ணுயிரிகள் தோன்றின என்பதையும் நாம்
மனதில் கொள்ள வேண்டும்.

1. படைப்பு நல்லது, மிகவும் நல்லது. Creation is good and very good. தொடக்க நூல் Genesis: 1:31 - 2:3, 
 அன்பானவர்களே! கடவுள் தான் படைத்த பூமியை மறு ஆய்வு செய்கிறார், ஆறு நாட்களுக்குப் பிறகு, கடவுள் அனைத்து படைப்புகளையும் மதிப்பாய்வு செய்து, தன் ஆய்வை "நல்லது" என்பதிலிருந்து "மிகவும் நல்லது" என்று உயர்த்துகிறார். 
தன் படைப்பில், அது முடிந்தது" அல்லது "நிறைவுற்றது" என்ற சொற்றொடர், கடவுள் ஒரு நோக் கத்திற்காகப் படைத்த ஒரு சரி யான, நன்கு ஒழுங்கமைக்கப் பட்ட பூமியை குறிக்கிறது. எல்லாமே குறைபாடில்லாமல் படைப்பின் நோக்கம் சரியாக  செயல்பட்டுக் கொண்டிருந்ததை இது குறிக்கிறது.ஏழாம் நாள் என்பது வேதத்தில் முதலில் "புனிதமானது(எபிரேய கடோஷ்) என்று கருதப்படுகிறது, இது பரிசுத்தமாக்குதல் என்பது அல்லது உயிர்களில் மட்டுமல்ல, காலத்திலும் உள்ளது என்பதை க் குறிக்கிறது. கடவுள் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, மனிதகு லம் வேலை மற்றும் ஓய்வின் தாளத்தைப் பின்பற்றுவதற்கான ஒரு மாதிரியை உருவாக்குகி றார். அனைத்து படைப்பையும் நல்லது என்று கண்ட ஆண்டவர் வர் ஓய்வு நாளை மட்டும் புனித படுத்துகிறார். எனவே நாம் ஓய்வு நாளை புனிதமாக அனு சரிக்க அழைக்கப்படுகிறோம்.
கடவுள் உயர்ந்த படைப்பாளர் என்பதையும், அவர் தற்செய லுக்கு உட்பட்டவர் அல்ல, மாறாக தெய்வீகத் திட்டம் மற்றும் கட்டுப் பாட்டுடன் செயல்படுகிறார் என்பதை இப்பகுதி விளக்கு கிறது.
2.கீழ்படிதலே ஓய்விற்கான தகுதி.Obedience is the qualificat ion for rest.எபிரேயர்: 4 :2 -11
 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! திருத்தூதர் பவுல் அடிக ளார் எபிரேயர் திருமுகத்தை யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதி னார்.. அவர்கள் தாங்கள் பெற்று க்கொண்ட நற்செய்தியை யூத மயமாக்க விரும்பினார்கள் பழைய ஏற்பாட்டின் சிந்தனை அவர்களை விட்டு விடவில்லை. இதை சீர்படுத்தவே, இத் திருமு கம்  கிபி 80 அல்லது 85 ல் எழுதப்பட்டிருக்கலாம்.
எபிரேயர் 4:2-11, இஸ்ரவேலர்கள் விசுவாசமின்மையால் இழந்த தேவனுடைய இளைப்பாறு தலில் (Rest), விசுவாசத்தோடு இன்றைய தினத்தில் பிரவேசி க்கும்படி விசுவாசிகளை வலியு றுத்துகிறது. ஏனேனில், 
மோசேயால் வழிநடத்தப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் வனாந் தரத்தில் கர்த்தரை சந்தேகித்து, கீழ்ப்படியாமல் போனதால், கானான் தேசமாகிய அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியவில்லை.
" நான் சினமுற்று, 'நான் அளிக் கும் இளைப்பாற்றியின் நாட்டி ற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட் டுக்கூறினே ன்(திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 95:11) ஆண்டவரின் இளைப் பாறுதலில் பங்கு பெற, அவருக் கு கீழ்படிதல் அவசியமாகிறது.
எபிரேய யூதர்கள், நற்செய்தியை
விசுவாசத்துடன் இணைக்கப்ப டாவிட்டால் பயன் தராது; எனவே, சொந்த முயற்சிகளை நிறுத்தி, இயேசுவின் மூலம் கிடைக்கும் இரட்சிப்பின் ஓய்வை அடைய கவனமாக இருக்க வேண்டும். 
இஸ்ரவேலர்களுக்குக் நற்செ ய்தி அறிவிக்கப்பட்டும், அவர்கள் அதை விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்ளாதவர்கள் . 
இளைப்பாறுதல் என்றால் என்ன? What is Rest?
அன்பானவர்களே! இது சரீர ஓய்வு மட்டுமல்ல, தங்களை இரட்சித்துக்கொள்ள எடுக்கும் சொந்த முயற்சிகளை (works) நிறுத்திவிட்டு, தேவன் செய்த கிரியைகளை நம்பி வாழும் ஆவிக்குரிய ஓய்வாகும். Spiritual Rest. தேவன் படைப்பின் ஏழாம் நாளில் இளைப்பாறினது போல, விசுவாசிகளும் இளைப் பாறுகிறார்கள்.
" யோசுவா இஸ்ரவேலர்களை கானானுக்குள் வழிநடத்தியும், உண்மையான இளைப்பாறுதல் இன்னும் நிலைத்திருக்கிறது. தாவீது காலத்திலும், இன்றும் தேவன் "இன்று" என் சத்தத்தைக் கேட்டால் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதீர்கள் என்கிறார்.
இஸ்ரவேலர்களின் அவிசுவாச முன்மாதிரியைப் பின்பற்றாமல், அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிரு க்க (diligent) வேண்டும். 
கிறிஸ்துவின் மூலமான இரட்சி ப்பை விசுவாசித்து, தேவனு டைய ஓய்வில் (நித்திய அமைதி மற்றும் இரட்சிப்பில்) பிரவேசி க்க விசுவாசி தன் இருதயத்தை க் கடினப்படுத்தாமல், கீழ்ப்படித லுடன் முயற்சியுடன் இருக்க வேண்டும். எனவே, நம் அன்பின்
ஆண்டவர்,  "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பா றுதல் தருவேன். (மத்தேயு நற்செய்தி 11:28) என, தான்
அளிக்கும் நித்திய இளைப் பாறுதாலில் பங்கு பெற அனை வரையும் அழைக்கிறார். திருத் தூதர் பவுல் அடிகளாரும்,
"ஆதலால், கீழ்ப்படியாதவர்க ளின் மாதிரியைப் பின்பற்றி, எவரும் வீழ்ச்சியுறாதவாறு அந்த ஓய்வைப் பெற முழு முயற்சி செய்வோமாக. என ஓய்வில்
பங்கு பெற கீழ்படிதலை வலியு ருத்துகிறார்.(எபிரேயர் 4:11)
3 மனித மான்பை காப்பதே படைப்பு: The creation is to protect the Mankind.மாற்கு 3: 1-6.Based on William Barclay Commentary.
 கிறிஸ்துவுக்கு பிரியமானவர் களே! நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து படைப்பின் செயல்களில் முதன்மையாக அவர் கருதுவது மனித மாண் பை தான். மனித உயிருக்கு அளவற்ற அன்பு உடையவராய் இருந்தார். அதன் அடையாள மாக தான் இந்த பகுதியில் ஒரு கை சூம்பிய மனிதனை ஓய்வு நாளில் தன் உயிரை பணயம் வைத்து அவனை குணப்படு த்துகிறார்.
இது இயேசுவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான சம்பவம். அவருக்கும் யூத மரபுவழித் தலைவர்களுக் கும் இடையே நிறைய வேறுபா டுகள் இருப்பது ஏற்கனவே தெளிவாகத் தெரிந்தது. அவர் மீண்டும் ஜெப ஆலயத்திற்குள் செல்வது ஒரு துணிச்சலான காரியம். பாதுகாப்பைத் தேட மறுத்து, ஒரு ஆபத்தான சூழ்நி லையை முகத்தில் பார்க்கத் தீர் மானித்த ஒரு மனிதனின் செயல் அது. ஜெப ஆலயத்தில்,  பரிசேயர்கள் அவரை குற்ளம் கானும் நோக்கில் இருந்தனர்.  ஏனென்றால், ஜெப ஆலயத்தில், முன் இருக்கைகள் மரியாதைக் குரிய இருக்கைகளாக இருந் தன, அவர்கள் அங்கே அமர்ந் திருந்தார்கள். மக்களைத் தவ றாக வழிநடத்தி, அவர்களை சரியான பாதையிலிருந்து திசை திருப்பக்கூடிய எவரையும் கையாள்வது சன்கெரி சங்க உறுப்பினர்களின் கடமை;  இயேசுவின் ஒவ்வொரு செய லையும் ஆராய அவர்கள் அங்கு இருந்தனர்.
ஜெப ஆலயத்தில் கை செயலிழ ந்த ஒரு மனிதன் இருந்தான். கிரேக்க வார்த்தையின் அர்த்தம் அவர் அப்படிப் பிறக்கவில்லை, ஆனால் ஏதோ ஒரு நோய் அவ ரை வலிமையிலிருந்து பறித்து விட்டது என்பதாகும். இந்த கை சூம்பின மனிதன் பற்றி சில எபிரேய நற்செய்திகள் , அந்த மனிதன் ஒரு கல் தொழிலாளி என்றும், இயேசுவிடம் உதவி கேட்டதாகவும், ஏனென்றால் அவ ருடைய வாழ்வாதாரம் அவருடை ய கைகளில் இருந்தது என்றும், அவர் பிச்சை எடுக்க வெட்கப்பட் டார் என்றும் நமக்குச் சொல்கி றது.  
ஓய்வு நாளில் யூத சட்டம் அனுமதித்த வேலைகள். ஓய்வு நாள்; எல்லா வேலைகளு ம் தடைசெய்யப்பட்டன, ஆனால்,  குணப்படுத்துவது வேலை செய்வதாகும். யூத சட்டம் இதைப் பற்றி திட்டவட்ட மாகவும் விரிவாகவும் இருந்தது. 
1. ஒரு உயிருக்கு ஆபத்து ஏற்ப ட்டால் மட்டுமே மருத்துவ உதவி வழங்க முடியும். சில உதாரண ங்களை எடுத்துக் கொண்டால் - பிரசவத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஓய்வுநாளில் உதவி செய்யப்படலாம்;
2. தொண்டையில் ஏற்பட்ட தொற் றுக்கு சிகிச்சை அளிக்கப்பட லாம்; 
3 யார் மீதாவது சுவர் விழுந்தால், அவர் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதைப் பார்க்க போதுமான அளவு சுத்தம் செய்யப்படலாம்; அவர் உயிருடன் இருந்தால் அவருக்கு உதவி செய்யப்பட லாம், அவர் இறந்துவிட்டால் உடலை மறுநாள் வரை விட வேண்டும். எலும்பு முறிவை கவனிக்க முடியாது. சுளுக்கு ஏற்பட்ட கை அல்லது காலில் குளிர்ந்த நீரை ஊற்றக்கூடாது. வெட்டப்பட்ட விரலை ஒரு சாதா ரண கட்டு கொண்டு கட்டலாம், ஆனால் களிம்பு பூசக்கூடாது. அதாவது, அதிகபட்சம் ஒரு காய ம் மோசமடைவதைத் தடுக்க லாம்; அதை சரிசெய்யக்கூடாது.
!அன்பர்களே இதைப் புரிந்து கொள்வது நமக்கு அசாதார ணமாக கடினம். ஓய்வுநாளைப் பற்றிய கடுமையான மரபுவழிக் கண்ணோட்டத்தை நாம் காண க்கூடிய சிறந்த வழி, ஒரு கண் டிப்பான யூதர் ஓய்வுநாளில் தனது உயிரைக் கூட தற் காத்துக் கொள்ள மாட்டார் என்பதை நினைவில் கொள்வ துதான்.
வரலாறு கூறும் ஓய்வுநாள்
நிகழ்வுகள்.The historical incidents on the Sabbath'.
அன்பர்களே! யூத சமய தலை வர்கள் எந்த சட்டங்களை அவர் கள் சரியாகப் பின்பற்றினார் களோ இல்லையோ ஆனால் ஓய்வு நாளை உயிரைக் கொடுத்து காத்திருக்கிறா ர்கள் என்பது வரலாற்றின் உண்மை. யூத வரலாற்று ஆசிரியர் ஜோசபஸ், கூற்றுப் படி, (Flavius Josephys முதலாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற யூத-ரோமானிய வரலாற்றாசிரியர் மற்றும் இராணுவத் தலைவர் ஆவார். இவர் யூதர்களின் வரலாறு, முக்கியமாக 66-70 கி.பி. யூத-ரோமானியப் போர் மற்றும் மசாடா முற்றுகையை ஆவணப்படுத்தியுள்ளார். 'The Jewish War' மற்றும் 'Antiquities of the Jews' ஆகியவை இவரது மிக முக்கியமான படைப்புகளாகும். )

1.மக்காபீஸின் போர்களில், எதிர்ப்பு வெடித்தபோது, ​​சில யூத கிளர்ச்சியாளர்கள் குகைகளில் தஞ்சம் புகுந்தனர். சிரிய வீரர் கள் அவர்களைப் பின்தொடர்ந் தனர்.அவர்கள் சரணடைய சிரிய வீரர்கள் வாய்ப்பு அளித்தனர், ஆனால் யூதர்கள் அவ்வாறு செய்யவில்லை என்று வரலாற்று ஆசிரியர்  ஜோசபஸ், கூறுகிறார், எனவே "சிரியர்கள் ஓய்வுநாளில் அவர்களுடன் சண்டையிட்டனர், ஆனால் யூதர்கள் சண்டையிடவில் லை. சிரியர்கள், குகைகளில் இருந்த யூதர்களை  எரித்தனர், எதிர்ப்பு இல்லாமல், குகைகளி ன் நுழைவாயில்களை கூட மூடாமல்  அந்த நாளில் அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள மறுத்துவிட்டனர், ஏனென்றால் அத்தகைய துன்பத்திலும் கூட, ஓய்வுநாளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை உடை க்க அவர்கள் தயாராக இல்லை; ஏனென்றால் அந்த நாளில் நாம் ஓய்வெடுக்க வேண்டும் என்று எங்கள் சட்டம் கூறுகிறது." என உறுதியாக இருந்தனர் உயிரை கொடுத்தனர். 
2. ரோமானிய தளபதி பாம்பே
(பாம்பே தி கிரேட்  மகா பாம்பே Gnaeus Pompeius Magnus) (கிமு 106-48) ரோமானியக் குடியரசின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்த ஒரு மிகச்சிறந்த இராணுவத் தளபதி மற்றும் அரசியல்வாதி ஆவார்.கி.மு. 63 இல் ஜெருச லேமைக் கைப்பற்றி, சுதந்திர ஹாஸ்மோனியன் இராச்சி யத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் பாம்பே எருசலேம் கோவிலின் உட்புற சரணாலய த்திற்குள் நுழைந்து யூத மக்க ளை அதிர்ச்சிக்குள்ளாக்கினா ர்.) .எருசலேமை முற்றுகையிட்ட போது, ​​பாதுகாவலர்கள் கோவில் வளாகத்தில் தஞ்சம் புகுந்தனர். பாம்பே ஒரு மேட்டைக் கட்டத் தொடங்கினார், அது அவர்களின் மேல் இருக் கும், அதிலிருந்து அவர் அவர்க ளைத் தாக்கக்கூடும். அவர் யூதர் களின் நம்பிக்கைகளை அறிந் திருந்தார், ஓய்வுநாளில் கட்டி னார், யூதர்கள் தங்களைப் பாது காத்துக் கொள்ளவோ ​​அல்லது கட்டிடத்தைத் தடுக்கவோ ஒரு கையை கூட உயர்த்தவில்லை, இருப்பினும் அவர்களின் ஓய்வு நாளின் செயலற்ற தன்மையால் அவர்கள் தங்கள் சொந்த மரண உத்தரவில் கையெழுத்திடுகி றார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கட்டாய இரா ணுவ சேவையைக் கொண்டி ருந்த ரோமானியர்கள், இறுதி யில் யூதர்களை இராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டியிருந்தது, ஏனெனில் எந்த கடுமையான யூதரும் ஓய்வுநாளில் சண்டையிட மாட்டார்கள். ஓய்வுநாளைப் பற்றிய மரபுவழி யூத அணுகுமுறை முற்றிலும் கடுமையானதாகவும், வளைந்து கொடுக்காததாகவும் இருந்தது.

இயேசுவுக்கு இந்த சூழ்நிலை  வரலாறு தெரியும். இந்த மனித னின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. நாளை வரை அவரை விட்டு விட்டால் உடல் ரீதியாக அவர் மோசமாக இருக்க மாட் டார். இயேசுவுக்கு இது ஒரு சோதனையான சூழ்நிலை, அவர் அதை நியாயமாகவும் வெளிப்படையாகவும் எதிர் கொண்டார். அந்த மனிதனை எழுந்து, தனது இடத்தை விட்டு வெளியே வந்து, அனைவரும் தன்னைப் பார்க்க க்கூடிய இடத்தில் நிற்கச் சொன்னார். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். பாதிக்கப்பட்ட மனிதனின் பரிதாப நிலையை அனைவருக்கும் காட்டி, அவரு க்கு அனுதாபத்தைத் தூண்டு வதற்கு இயேசு கடைசி முயற்சி யை மேற்கொள்ள விரும்பினார். தான் எடுக்கப்போகும் நடவடிக் கையை யாரும் பார்க்காமல் இருக்க முடியாத வகையில் எடுக்க இயேசு நிச்சயமாக விரும்பினார்.
அவர் சட்ட வல்லுநர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட் டார். ஓய்வுநாளில் நன்மை செய்வது சட்டபூர்வ மானதா அல்லது தீமை செய்வது சட்டபூர்வமானதா? அவர்களை ஒரு குழப்பத்தில் ஆழ்த்தினார். நன்மை செய்வது சட்டபூர்வமா னது என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது; அது அவர் செய்ய முன்மொழிந்த ஒரு நல்ல காரியம். தீமை செய்வது சட்டபூர்வமானது என்பதை அவர் கள் மறுக்க வேண்டியிருந்தது; ஆனாலும், ஒரு மனிதனுக்கு உதவி செய்ய முடிந்தபோது அவனை துயரத்தில் ஆழ்த்துவ து நிச்சயமாக ஒரு தீய காரியம். பின்னர் அவர் கேட்டார், ஒரு உயிரைக் காப்பாற்றுவது சட்ட பூர்வமானதா அல்லது அதைக் கொல்வது சட்டபூர்வமானதா? துரதிர்ஷ்டவசமான மனிதனின் உயிரைக் காப்பாற்ற அவர் நட வடிக்கை எடுத்துக் கொண்டிருந் தார்; அவர்கள் தன்னைத்தானே கொல்லும் முறைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர். எந்தவொரு கணக்கிலும், ஒரு மனிதனைக் கொல்ல யோசிப்ப தை விட ஒரு மனிதனுக்கு உதவு வது பற்றி யோசிப்பது நிச்சயமா க ஒரு சிறந்த விஷயம். அவர்களுக்கு எதுவும் சொல்ல முடியாததில் ஆச்சரியமில்லை!
பின்னர் இயேசு வல்லமை யுள்ள வார்த்தையால் அந்த மனிதனைக் குணப்படுத்தினார்; பரிசேயர்கள் வெளியே சென்று ஏரோதியருடன் சேர்ந்து அவ ரைக் கொல்ல சதித்திட்டம் தீட்ட முயன்றனர். இது பரிசேயர்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதைக் காட்டுகிறது. பொதுவாக எந்தப் பரிசேயரும் ஒரு புறஜாதியாரோ அல்லது சட்டத்தைக் கடைப்பிடிக்காத ஒரு மனிதரோடு எந்தத் தொடர்பும் வைத்திருக்க மாட்டார்கள்; அத்தகைய மக்கள் அசுத்த மானவர்கள். ஏரோதியர்கள் ஏரோதின் நீதிமன்றப் பரிவாரங் கள்; அவர்கள் தொடர்ந்து ரோமர் களுடன் தொடர்பு கொண்டு வந்தனர். எல்லா சாதாரண நோக்கங்களுக்காகவும் பரிசேய ர்கள் அவர்களை அசுத்தமாகக் கருதியிருப்பார்கள்; ஆனால் இப்போது அவர்கள் தங்களுக்கு ஒரு புனிதமற்ற கூட்டணியில் நுழையத் தயாராக இருந்தனர். அவர்களின் இதயங்களில் ஒரு வெறுப்பு இருந்தது, அது ஒரு போதும் நிற்காது.இது அவர்க ளின் சுயநலம்,பதவி வெறி.
அன்பர்களே! இந்த பகுதி அடிப்படையானது, ஏனெனில் இது மதத்தின் இரண்டு கருத்துக்களின் மோதலைக் காட்டுகிறது.
(i) பரிசேயருக்கு மதம் என்பது சடங்கு; அது சில விதிகள் மற்றும் விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவதைக் குறிக்கிறது. இயேசு இந்த விதிமுறைகளை மீறினார், அவர் ஒரு கெட்ட மனி தர் என்று அவர்கள் உண்மையி லேயே நம்பினர்.   
(ii) இயேசுவுக்கு மதம் என்பது சேவை. அது கடவுள் மீதான அன்பும் மனிதர்கள் மீதான அன்பும் ஆகும். செயலில் உள்ள அன்போடு ஒப்பிடும்போது சடங்கு பொருத்தமற்றது. மனிதநேயமே படைப்பின் நோக்கம் என்ற கோட்பாடுபடி வாழ்ந்தவர்.
மோசே திருச்சட்டம், "ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப் பவன் கொல்லப்படவே வேண் டும். அந்நாளில் வேலை செய் பவன் எவனும் தன் மக்களிடமி ருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். (விடுதலைப் பயணம் 31:14) என்ற கட்டளைபடி பரி சேயர்கள் அவரை தண்டிக்க உறதியாய் இருந்தனர். நம் ஆண்டவர் நன்மை செய்ய, இரட்சிக்க இவ்வுலகில் வந்தார்.
மனித உயிர் ஓய்வு நாளை காட்  டிலும் உன்னதமானது.ஆனாலும்
நாம் ஓய்வு நாளை புனிதமாக
கொண்டாட படைக்கப்பட்டுள் ளோம். ஓய்வு நாள் கர்த்தருடை யது. படைப்பில் அதை உண்டாக்
கினார்.நாம் என்றும் கர்த்தருடை யவர்கள்.படைப்பை முழுமைப்ப டுத்த மனித நேயம் காப்போம்.
நன்மை செய்வோம். ஆமேன்.


Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com.






and Luke 6:6-11.[1][2][3][4]

and Luke 6:6-11.[1][2][3][4]

Christ healing the man with a withered hand, Byzantine mosaic. Thanks Wiki.
Christ healing the man with a withered hand, Byzantine mosaic


Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

ஆண் சீடர்களும் பெண் சீடர்க ளும் (187) Male and Female Disciples.லூக்கா 9:1-3, 10:1-11.First Friday on Lent.

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.