Skip to main content

சிலுவை: அருளின் வெளிப்பாடு. (259) Cross: The Manisfestation of Grace மீகா 7:15-20, திருப்பாடல் 31. 1பேதுரு 2:17-24, மாற்கு 10:46-52.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது,"சிலுவை: அருளின் வெளிப்பாடு."
சிலுவை என்பது இயேசு கிறிஸ் துவின் தியாகம் மற்றும் கடவுளி ன் எல்லையற்ற அன்பின் (கிரு பையின்) இறுதி வெளிப்பாடு. பாவமற்ற இயேசு மனிதகுலத்தி ன் பாவங்களுக்காகத் தம்மை யே பலியாக ஒப்புக்கொடுத்து, சாபம் மற்றும் தண்டனையிலிரு ந்து மன்னிப்பு, மீட்பு மற்றும் கடவுளுடன் சமரசம் ஆகியவற் றை கிருபையாக வழங்கிய தியாகத்தின் சின்னமாக சிலு வை திகழ்கிறது. தேவனோடு மனிதன் ஒப்புரவாக்கப்படும் இடமாக சிலுவை திகழ்கிறது. ஒரு காலத்தில்,மரணம், சாபம் மற்றும் அவமானத்தின் அடை யாளமாக இருந்த சிலுவை, ரோம பேரரசின் தண்டனையின் சின்னமாகும். இது கிறிஸ்து வால் மீட்பின், வெற்றியின், மற் றும் தேவ அன்பின் கிருபையின் அடையாளமாக மாற்றப்பட் டது.சிலுவை என்பது  பாவம் செய்த மனிதனுக்கு, தேவன் இலவசமாகக் கொடுக்கும் கிருபையின் பரிசு.
திருவிவலியம் கூறுகிறது "மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். எனவே சிலு வை ஒரு தண்டனையின், அவ மானத்தின், சாபத்தின் சின்ன மாக பிரதிபலிக்கப்பட்டது. ஆனால், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம்  நமக்கு பாவ மன்னிப்பையும் நித்திய வாழ் வையும் பெற்று தந்தது.
அருளின் வெளிப்பாடு என்றால் என்ன?
அருளின் வெளிப்பாடு (Manifes tation of Grace) என்பது கடவுளின் நிபந்தனையற்றஅன்பு,கருணை  மற்றும் இரக்கம் மனித வாழ்வில் செயலாகவோ, உணர்வாகவோ அல்லது நிகழ்வாகவோ வெளிப் படுவதைக் குறிக்கிறது. 
வெளிப்பாடு என்றால் என்ன?
What is Manifestation?
வெளிப்பாடு(Manifestation) என்பது ஒரு எண்ணம், உணர்வு, அல்லது கருத்தை தெளிவாகக் காட்டுதல், வெளியிடுதல் அல்லது நிஜ வாழ்க்கையில் கொண்டுவருதல் எனப் பொருள் படும். 
எடுத்துக்காட்டாக, 1.இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவி, பணிவிடை செய்ததன் மூலம் தாழ்மையைக் கற்பித்தார். 2.பகைவர்களையும் மன்னித்து, சிலுவையில் தியாகம் செய்து, தேவ அன்பை வெளிப்படுத்தி னார். 
3.நோயுற்றோரை குணமாக்கி, விளிம்புநிலை மக்களுடன் பழகி இரக்கத்தை வாழ்ந்து காட்டினார்
4.கானாவூர் திருமணத்தில்
திராட்சை இரசம் குறைவுப்பட் டதை தன் முதலாம் அற்புதத்தின்
மூலம் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றி தன் மாட்சி யை வெளிப்படுத்தினார். ஆக, வெளிப்ப்டு என்பது ஒரு குறிப் பிட்ட செயலை வெளிப்படுத்து வதாகும்.
1 அற்புதத்தின் வெளிப்பாடு.
Manifestation of Miracle. மீகா 7:15-20, 
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இறைவாக்கினர் மீக்கா அவர்கள்இவர் யூதா ராஜ்யத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஏசாயா காலத்திலேயே சமூக அநீதி, விக்கிரகாராதனை மற்றும் ஏழைகளை ஒடுக்குதலு க்கு எதிராக இறைவாக்கு உரை த்தவர். எருசலேம் மற்றும் சமாரி யா அழிவை முன்கூட்டியே அறி வித்த இவர், மேசியா பெத்லகே மில் பிறப்பார் (மீக்கா 5:2)என்று தீர்க்கதரிசனம் கூறினார். மீக்கா' என்றால் "கர்த்தருக்கு  ஒப்பான வர் யார்?" என்று அர்த்தம்.
"ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கி ன்றாரே! நேர்மையைக் கடைப்பி டித்தலையும், இரக்கம் கொள்வ தில் நாட்டத்தையும் உன் கடவு ளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னி டம் கேட்கின்றார்? (மீக்கா 6:8)
என்பது இவரின் போதனைக்கு முக்கிய எடுத்துக்காட்டாகும். இவர் எட்டாம் நூற்றாண்டின் இறைவாக்கினர்.
மீகா 7:15-20, தேவன் தம் மக்க ளை எகிப்திலிருந்து விடுவித்த து போன்ற அற்புதங்களை மீண்டும் செய்து, அவர்களின் பாவங்களை மன்னிக்கிற கிருபையுள்ள தேவனாக வெளி ப்படுகிறார் என்பதை விளக்குகி றது.தம் மக்களை அவர்களுடை ய சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவருவதில் அவர் செய் யும் அற்புதங்கள், எகிப்திலிருந் து அவர்களை விடுவித்து, அதன் முதல் உரிமையை அவர்களுக் குக் கொடுத்தபோது அவர் காட்டிய அற்புதங்களைப் போல வே பிரகாசமானதாக இருக்கும் என்று தேவன் அவரிடம் கூறுகி றார் ஆபிரகாம் மற்றும் யாக்கோ புக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி களின்படி, பாவங்களை கடலி ன் ஆழத்தில் எறிந்து, மீதியான மக்களை தேவன் மீட்டெடுப்பார் என்பது இந்தப் பகுதியின் முக்கிய நம்பிக்கை யாகும். 
எகிப்திலிருந்து இஸ்ரவேலரை மீட்டது போல, மீண்டும் அதிசயங் களைச் செய்து மக்களை வழிநட த்துவதாக கடவுள் உறுதியளிக் கிறார். அக்கிரமத்தைப் பொறு த்து, மீறுதலை மன்னிக்கிற உமக்கு ஒப்பான தேவன் இல்லை என்று மீகா கடவுளின் இரக்கமுள்ள சுபாவத்தைப் போற்றுகிறார்.
இந்தப்பகுதி, கடவுள் கோபத்தை விட அன்பு கூர்ந்தவர் என்பதை யும், மன்னிப்பின் மூலம் புதிய தொடக்கத்தைத் தருபவர் என்ப தையும் காட்டுகிறது. இஸ்ரவே லின் மீட்பைக் கண்டு பிற தேசத் தார் பயந்து, திகைத்து, தங்கள் வலிமையை இழப்பார்கள். அக்கிரமத்தை மன்னித்து, மீதி யாயிருப்போரின் மீறுதலைப் பொறுத்துக்கொண்டு, கோபத் தை என்றென்றும் நிலைநிறுத் தாத, கருணை உள்ளம் கொண்ட கடவுளை மீக்கா போற்றுகிறார்.
2.சமூக கடமைகளின் வெளிப் பாடு.Manifestation of Social Responsibilities.1.பேதுரு 2:17-24 
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்
களே! இத்திருமுகம் சின்ன ஆசியாவில் உள்ள கிறித்தவர்க ளுக்காக திருத்தூதர் பேதுரு அவர்கள் சமூக கடமைகளை
வலியுருத்தி கி.பி 70-90ல் இத்
திருமுகத்தை எழுதினார்.இக் காலம் கிறித்தவர்களின் துன்
புறும் காலம்.ஆனாலும்,
கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு அடிபணிந்து, துன்பங்களிலும் கிறிஸ்துவைப் பின்பற்றி, நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று பேதுரு வலியுறுத்துகிறார். அடிமைகள் கசப்பான எசமானர்களுக்கும் கீழ்ப்படிந்து, இயேசு சிலுவை யில் பொறுமையுடன் சகித்த முன்மாதிரியைப் பின்பற்றி, நீதியின் வாழ்வை வாழ வேண்டும் என்று விளக்குகிறது. 
சமூக கடமைகளாக, எல்லாரை யும் கனம்பண்ணுங்கள், சகோ தரர்களை நேசியுங்கள், தேவனு க்குப் பயந்து, அரசர்களை (அதிகாரத்தை) மதியுங்கள்.
வேலையாட்கள் நல்மனமுள்ள எசமானர்களுக்கு மட்டுமல்ல, கடுமையானவர்களுக்கும் அடி பணிய வேண்டும். அநீதியாகத் துன்புறுத்தப்படும்போது அதை பொறுமையுடன் சகித்துக் கொள் வது தேவன் முன் ஏற்றுக்கொள் ளத்தக்கது.
கிறிஸ்துவின் முன்மாதிரி கிறிஸ்து நமக்காகப் பாடுபட்டு, ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றார். அவர் பாவம் செய்யா மலும், வஞ்சனை இல்லாமலும், பழிவாங்காமலும், அனைத்தை யும் நீதியுடன் நியாயந்தீர்க்கிற தேவனுக்கு ஒப்புவித்தார். நம் பாவங்களுக்காக அவர் சிலுவை யில் தம்மைத்தாமே பலியா க்கினார், இதன் மூலம் நாம் பாவத்திற்கு மரித்து, நீதிக்கு பிழைத்திருக்கிறோம். 
இந்த பகுதி, கிறிஸ்தவ விசுவா சம் என்பது கடினமான சூழ்நி லைகளிலும் பொறுமை, கீழ்ப் படிதல் மற்றும் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சமூக கடமைகளில் நம் பொரு ப்பை வெளிப்படுகிறது, என்ப தை வலியுறுத்துகிறது.
3.விசுவாசத்தின் வெளிப் பாடு. Manifestation of Faith மாற்கு 10:46-52.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்
களே! நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஒரு நாள்  பஸ்கா பண்டிகைக்குச் (இயேசு வின் கடைசி பாஸ்கா) எரிகோ விலிருந்து எருசலேமிக்கு சென் று கொண்டிருந்தார். எரிகோ, எருசலேமிலிருந்து சுமார் 15 மைல் தொலைவில் மட்டுமே இருந்தது. எரிகோ என்றால் நமக்கு நினைவில் வருவது  
சகேயு, இயேசுவைப் பார்க்க விரும்பிய குள்ளமான வரி வசூ லிப்பாளர். இவர், காட்டத்தி (Sycamore) மரத்தின் மீது ஏறினார். இயேசு அவனைப் பெயர் சொல்லி அழைத்து, அவன் வீட்டில் தங்கினார். இதனால் மனமாற்றமடைந்த சக்கேயு, தன் சொத்தில் பாதி யை ஏழைகளுக்குக் கொடுத்து, தான் ஏமாற்றியதை நான்கு மடங்காகத் திரும்பக் கொடுத் தான்.அந்த எரிகோ வழியாக
இயேசு எருசலேமுக்குச் சென் றார். 
எரிகோ அக்காலத்தில் ஏரோது மன்னனின் குளிர்காலத் தலை நகரமாகவும், வளமான நகரமா கவும் இருந்தது.
ஒரு புகழ்பெற்ற ரபி அல்லது போதகர் அத்தகைய பயணத் தில் இருக்கும்போது, ​​அவர் நடந்து கொண்டே பிரசங்கம் செய்யும்போது, ​​சீடர்கள் மற்றும் கற்பவர்கள் அடங்கிய மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு கேட்பது வழக்கம் அத னால், எரிகோவின் தெருக்களில் மக்கள் வரிசையாக நிற்பார்கள்; வழக்கத்தை விட அதிகமானோர் இருப்பார்கள்.எருசலேமிலிருந்து 15 மைல் தொலைவிற்குள் வசிக்கும் பன்னிரண்டு வயது க்கு மேற்பட்ட ஒவ்வொரு யூத ஆணும் பஸ்கா பண்டிகை யில் கலந்துகொள்ள வேண் டும் என்பது சட்டமாக இருந்தது. அத்தகைய சட்டத்தை நிறை வேற்றுவதும், அனைவரும் செல் வதும் தெளிவாகவே சாத்தியம ற்றதாக இருந்தது. செல்ல முடி யாதவர்கள், பஸ்கா யாத்திரிகர் கள் கடந்து செல்லும் நகரங்கள் மற்றும் கிராமங்களின் தெருக் களில் வரிசையாக நின்று, அவர் கள் தங்கள் வழியில் செல்ல வாழ்த்துத் தெரிவிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது,எரிகோவிலிருந்து வெளியேறும் இயேசு,  வடக்கு வாசலில் பர்த்திமேயு என்னும் பெயருடைய ஒரு பிச்சைக்கார ன் அமர்ந்திருந்தான்.இவன் திமேயுவின் மகன்.
நாசரேத்து இயேசுதாம் போகி றார் என்று அவர் கேள்விப்பட்டு, "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார். 
இயேசுவை "தாவீதின் குமாரன்" (மேசியா) என்று உணர்ந்து கொள்ளும் ஞானத்தையும்குறிக் கிறது.அது ஒரு மேசியானியப் பட்டம்.பர்த்திமேயு பயன்படுத் தும் ' தாவீதின் குமாரன் ' என்ற பட்டம், மாற்கு நற்செய்தியில் இங்கு மட்டுமே காணப்படுகி றது, பர்த்திமேயுவைப் பொறுத்த வரை, இயேசு கடவுளால் நியமி க்கப்பட்ட பிரதிநிதி என்பதை அந்தப் பட்டம் தெளிவாகக் குறிப் பிடுகிறது, மேலும், நண்பர்களே!
தாவீதுக்கு சாலமோன், அப்ச லோம், நாத்தான், அம்னோன் உட்பட பல குமாரர்கள் இருந்த னர் (2.நாளாகமம்1;1-12)   இருப்பினும், "தாவீதின் குமா ரன்" என்ற பிரத்தியேக அடை மொழி இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மக்கள் அவனை அமைதிப்படு த்த முயன்றாலும், பர்திமேயு இயேசுவை இன்னும் சத்தமாக அழைத்தான்.தடைகள் இருந்த போதிலும் அவர் விடாமுயற்சியு டன் இருக்கிறார் . மாற்கு நற் செய்தியில் மக்களுக்கு விசுவா சம் எளிதாக வருவதில்லை; அது தேடுவதைப் பெறுவதற்குத் தடைகளைத் தாண்ட வேண்டும்.
கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் பர்த்திமேயுவைக் கடிந்து கொண்டு, அவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று கோரு கிறார்கள். இந்த விவரம், பண்டைய (மற்றும் தற்கால) சமூகத்தில் பார்வையற்ற பிச்சைக்காரர்கள் சமூகச் சலுகைகளின் அடிமட்டத்தில் வாழ்கிறார்கள் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. பர்த்திமேயு தான் இருக்கும் நிலைக்குத் தகுதியானவர் என்று மக்கள் நினைப்பதால் அவரைக் கூச்சலி ட்டு அடக்குகிறார்கள். இத்தகை ய மக்கள் பாவிகள் என்பது யூதர்களின் நம்பிக்கை. பர்த்தி மேயுவுக்கு உண்மை தெரியும், அதனால் அவருடைய வார்த்தை கள் இயேசுவின் காதுகளில் விழும் வரை அவர் "இன்னும் சத்தமாக" கத்துகிறார்.
இயேசு நின்று, "அவரைக் கூப் பிடுங்கள்" என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரை க் கூப்பிட்டு, "துணிவுடன் எழுந் து வாரும்இயேசு  உம்மை   
அழைக்கிறார்" என்றார்கள். 
அவர் ஒரு மாற்றத்தை எதிர் பார்க்கிறார் . இயேசு பர்த்திமே யுவிடம் நடந்து சென்று பேசியி ருக்கலாம். அதற்குப் பதிலாக, பர்த்திமேயுவைத் தம்மிடம் வரு மாறு அங்கிருந்தவர்களிடம் கூறுகிறார். இப்போது, ​​அந்தப் பிச்சைக்காரனைத் தடுக்க முய ன்றவர்களே  அவனை இயேசுவி
டம் கொண்டு  செல்லும் இறை பணியாற்றினர்.  உடனே, பர்த்திமேயு தன் மேலங்கி யைத் தூக்கி எறிகிறார். வெளிப்படையாக, அவர் தன் பார்வையை மீண்டும் பெறுவார் என்று எதிர்பார்க்கிறார், ஏனெனில் ஒரு பார்வையற்ற பிச்சைக்காரன் பொதுவாகத் தன் உடைமைகளைத் தன் அருகிலேயே வைத்திருப்பது நல்லது. அவர் வெளிப்படையா கத் தன் நிலையில் ஒரு மாற்ற த்தை எதிர்பார்க்கிறார். அவரு டைய  பார்வையின்மை அவரு டைய பொருளாதாரப் பிரச்சி னையும் (பிச்சை எடுத்தல்), நீங்கும் என்ற நம்பிக்கை.
தன் மேலங்கியைத் தூக்கி எறியு ம்போது, ​​வழிப்போக்கர்களின் பிச்சையை நம்பித் தன் ஆடை யின் மீது இனிமேலும் அமர்ந் திருக்க மாட்டேன் என்பதை அவர் நம்பிக்கையுடன் முன்னறி வித்தார்.பர்த்திமேயுவைச் சமூக த்தில் தனக்குரிய இடத்தைக் கோரும் ஒரு முழுமையான நிலைக்கு மீட்டெடுத்தார். 
பர்திமேயு தனது மேலங்கியை எறிந்துவிட்டு இயேசுவிடம் ஓடினான் என்பது, இது பழைய வாழ்க்கையைத் துறந்து, இயே சுவை பின்தொடர ஆயத்தமாவ தைக் குறிக்கிறது.
இயேசு அவரைப் பார்த்து, "உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், "போதகரே , நான் மீண்டும் பார்வை பெறவேண் டும்" என்றார். இயேசு அவரிடம், "நீர் போகலாம்; உமது நம்பிக் கை உம்மை நலமாக்கிற்று" என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந் தார். 
நண்பர்களே! மாற்கு நற்செய்தி யில், அற்புதத்தைத் தேடி விசுவா சத்துடன் இயேசுவை அணுகிய  முதல் நபர் பர்த்திமேயு அல்ல; ஆனால், அவர் மட்டுமே இயேசு வைப் பின்தொடர்ந்து, அநேக மாக நேராக எருசலேமுக்குள்ளு ம், ஆலயத்தைச் சார்ந்திருந்த உயர்குடியினருடனான அவரது மோதலுக்குள்ளும் சென்ற ஒரே நபர் ஆவார். 
பர்த்திமேயுவின் விசுவாசம், தடைகளையும் மீறி இயேசுவின் மீது கொண்ட அசையாத நம்பிக் கையை வெளிப்படுத்துகிறது . பார்வையற்ற பிச்சைக்காரனாக இருந்தாலும், இயேசுவை "தாவீதின்குமாரனே" (மேசியா) என்று உணர்ந்து, சத்தமிட்டுக் கூப்பிட்டு, தன் பழைய ஆடைக ளை எறிந்து விட்டு, இயேசுவின் அழைப்பிற்கு உடனே கீழ்ப்ப டிந்து, சுகம் பெற்ற பின் அவ ரைப் பின்பற்றியதே அவனது உண்மையான விசுவாசமா கும். 
அன்பர்களே! சிலுவை: அருளின்
வெளிப்பாடு என்பது கடவுளின் அன்பும், கிருபையும் மனிதகுல த்திற்கு முழுமையாக வெளிப் பட்ட உச்சக்கட்ட நிகழ்வாகும். 
அந்த சிலுவையை அனுதினம்
நாம் சுமக்க அழைக்கப்படுகி றோம்.ஆமேன்.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com





 

Jesus Heals Bartimaeus Header

 


Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80