புனித செவ்வாய். யோவானின் எழுத்துகளில் சிலுவை.(263) The Cross in the Johannine Writings. யோவான் 12:23-33.

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார புனித வாரத்தி ன் புனித செவ்வாய் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது
"யோவானின் எழுத்துகளில் சிலுவை"The Cross in the Johannine Writings. 
இயேசுவின் சீடர் இருவர் யோவான் நற்செய்தியில் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகி றார்கள். அவர்கள் இயேசுவின் தாய் மரியாவும் இயேசு அன்பு செய்த சீடர் யோவான் . இயேசு சிலுவையில் தொங்கும் போது மரியாவும் அன்புச் சீடரும் சிலுவையின் கீழ் நிற்கின்றனர். அவ்வமயம் இயேசு அவர்கள் இருவரையும் ஒருவரையொ ருவர் பொறுப்பில் ஒப்படைக் கின்றார். கிரேக்கர்கள் இயேசுவைக் காண விரும்புவ தாக அந்திரேயா மற்றும் பிலிப்பு கூறும்போது, "மனுஷகுமாரன் மகிமைப்படும் காலம் வந்தது" என்று இயேசு பதில் அளிக்கி றார். இது அவரது ஊழியத்தின் உச்சகட்டம் (சிலுவை) நெருங்கி விட்டதைக் குறிக்கிறது.
1.தாயை காத்த தனயன்:
The son who looked after his mother.
அன்பர்களே! இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். (யோவான் நற்செய்தி 19:26)
பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்"என்றார்.அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். 
(யோவான் நற்செய்தி 19:27) தான் சிலுவையில் மரிக்கும் தருவாயிலும் தன் தாய்க்கான  அன்பின் சேவையை ஒரு மகனா க ஆண்டவர் செய்வது அன்பின் அடையாளமாகும்.கோதுமை மணி நிலத்தில் விழுந்து அழியாவிட்டால் அது தனித்து நிற்கும், செத்தாலோ மிகுந்த பலனைத் தரும். இயேசுவின் மரணம் என்பது தோல்வியல்ல, மாறாக அதுவே பலரை மீட்கும் (பலன் தரும்) வழியாகும்.
2.இயேசுவை பாஸ்கா பலி ஆட்டு க்குட்டி .Jesus was sacrificed as a Passover lamb.
யோவான் நற்செய்தியில், சிலுவை மரணம் என்பது இயேசு வின் தோல்வியாக அல்லாமல், அவரது மகிமை மற்றும் மீட்பி ன் உச்சகட்டமாக சித்தரிக்கப்ப ட்டுள்ளது (யோவான் 19:17-30). இயேசுவை பாஸ்கா பலி ஆட்டு க்குட்டியாகக் காட்டும் யோவா ன், அவர் சிலுவையில் உயர்த்தப் பட்டதை, உலகம் இரட்சிக்கப்ப டும் அன்பின் வெளிப்பாடாக வும், பிதாவோடு அவர் இணை யும் தருணமாகவும் விவரிக்கி றார். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நேரம், யூதர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டிகளை பலியி டும் நேரத்தோடு ஒத்துப்போகி றது.யோவான் 19-ல், இயேசு "உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி"யாக, பஸ்கா பண்டிகை நேரத்தில்,
3.சிலுவை மகிமையின் சின்னம் The cross is a symbol of glory.
பிற நற்செய்திகளை விட, யோவான் சிலுவையை இயேசு வின்" மகிமையாக (Glorification) பார்க்கிறார்.இயேசு பாவங்க ளை நீக்கும் உண்மையான பலி என்பதை உணர்த்துகிறது. சிலுவை என்பது இயேசுவின் பாடுகள் மட்டுமல்ல, பிதாவிடத் தில் அவர் உயர்த்தப்படும் மற் றும் மகிமைப்படும் நேரமாகும்.
யோவான் நற்செய்தியில், சிலுவை என்பது ஒரு புதிய உடன் படிக்கையின் தொடக்க மாகவும், விசுவாசிகளுக்கு நித் திய ஜீவனை அளிக்கும் அடை யாளமாகவும் உள்ளது. சிலுவை
வெற்றியின் சின்னமாகும். தானே சிலுவையை சுமப்பதற்கு தான் ஆண்டவர் விரும்பினார் அவர் சிரேனே ஊரானாகிய சைமனை சிலுவை சுமக்க கேட்டுக் கொள்ளவில்லை. சிலுவை மரணத்தின் மூலம் உலகத்தை வெற்றி கொண்டார் இந்த உலகத்தின் அதிபதிக்கு என்னிடம் ஒன்றுமில்லை என்று கூறினார்
பிலாத்துவின் சாட்சி: பிலாத்து இயேசுவை மூன்று முறை விசாரித்து, அவரிடம் குற்றம ஒன்றும் காணவில்லை என்று கூறி, யூதர்களின் கோபத்தைத் தணிக்க அவரைச் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தார். சிலுவையில் “யூதர்களின் அரசன்” என்ற அறிவிப்பு இருந் தது, 
4.இறைவார்த்தையின் நிறைவேற்றம்.The fulfilment of Prophecy.
இயேசுவின் அங்கி தையலில் லாமல் இருந்ததால், அதைகிழிக் காமல் சீட்டுப்போட்டு பங்கிட்டன ர், இது வேதவாக்கியத்தின் நிறைவேற்றமாக அமைந்தது (திருப்பாடல் சங்கீதம் 22:18).
சங்கீதம் 69:21-ல் உள்ள தீர்க்கத ரிசனம் நிறைவேற, இயேசு தாகமாயிருக்கிறேன் என்று கூறியதும், காடி கொடுக்கப்ப ட்டதும், அவர் எலும்புகள் முறிக்கப்படாதது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின்  (திருப்பாடல், சங்கீதம் 34:20-),சக்கரியா 12:10-ல் உள்ள நிறைவேற்றமாக யோவான் விவரிக்கிறார்.சங்கீதம் 34:20-ன் படி, நீதிமானின் எலும்புகளை கர்த்தர் பாதுகாக்கிறார் என்ற இறைவாக்கு இயேசுவின் மரண த்தின்போது நிறைவேறியது. 
எந்த எலும்பும் முறிபடாது" (யோவான் 19:36) மற்றும் "அவர் கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்" (யோவான் 19:37) போன்ற பழை ய ஏற்பாட்டு தீர்க்கதரிச னங்கள் இயேசுவின் சிலுவை மரணத்தி ல் நிறைவேறின.
இறுதியாக "எல்லாம் முடிந்தது" (Tetelestai) என்று இயேசு கூறு வது,  திருப்பாடல் 22:18 மீட்பின் பணி முழுமையடைந்தது என்ப தை அறிவிக்கிறது. 
யோவான் இயேசுவை சிலுவை யில் "உயர்த்தப்பட்ட" அரசராக வும், உலகிற்காக தாகமாய்இருக் கும் இரட்சகராகவும், அன்பின் உச்சகட்டமாகவும் காட்டியுள்ளார். யோவானில் 
இயேசு, "நான் தாகமாயிருக்கி றேன்" என்று கூறி, ஆத்துமாக்க ளின் மீட்பிற்காகவும், வேதம் நிறைவேறவும் தாகமாயிருந் தார்.
அவர்கள் என் உணவுக்குப் பித்தநீரையும், என் தாகத்திற்குப் புளிப்பையும் குடிக்கக் கொடுத்தார்கள். ( சங்கீதம் 69:19-21 )
யோவான் 19-ஆம் அதிகாரம் , 28-ஆம் வசனத்தில் சிலுவையின் நிகழ்வுகளை விவரிக்கிறார் . மேலும், இயேசுவின் தாகத்தை யும், படைவீரர்கள் அவருக்குப் புளித்த திராட்சைரசத்தைக் குடிக்கக் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார்.இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உரைக்க ப்பட்ட மேசியானியத் தீர்க்கதரிச னத்தின் மற்றுமொரு கச்சித மான நிறைவேற்றமாகும்.
சிலுவையில் இயேசுவின் எலும்புகள் முறிக்கப்படாததும், சட்டை தையலில்லாமல் இருந் ததும் பழைய ஏற்பாட்டு தீர்க்கத ரிசனங்களின் நிறைவேற்ற மாகக் காட்டப்படுகிறது. 
ஒருவன் ஒரு ஈட்டியை எடுத்து அவருடைய விலாவில் குத்தினா ன். அந்தப் படைவீரன் ஈட்டியைப் பின்வாங்கியபோது, ​​அந்தக் காயத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் பீறிட்டு வெளிவந்த ன. இரத்தம் மற்றும் தண்ணீரின் இந்தக் கலவையானது, நற்கருணை மற்றும் திருமுழு க்கு ஆகிய இரண்டு திருச்சடங் குகளைக் குறிக்கிறது.
சிலுவையின் மூலம் பிதாவோடு மனிதனை ஒப்புரவாக்கினார் என்றும் யோவான் (19-ம் அதிகாரம்) வலியுறுத்துகிறார். 
இறுதியாக, அன்பர்களே! சிலுவை மரணம், யூதர்களின்
தண்டனையல்ல, அது ரோமர்
களின் தண்டனை சின்னம். யூதர்களின் தண்டனை கல்லெரி
ந்து கொள்வது. உலகை ஆண்ட வர்கள், உலக மக்களின்
மீட்பிற்காக, சிலுவையை பயன்
படுத்தினர், அதன்மூலம் அது
புனிதமடைந்தது.நம்மையும்
புனிதமடைய செய்கிறது.அவரே
உலகத்தின் பாவத்தை சுமந்து
தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி.


Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..




SVouet
               Crucifixion of Jesus

Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80