உயிர்த்தெழுந்த கிறிஸ்து: என்றும் உடனிருக்கும் உறுதி.(278)Risen Christ:Assurance of Everlasting presence. எசாயா 41: 8-13., திருப்பாடல் 110, எபிரேயர் 13:1-8, மத்தேயு 28:16-20
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்
கள், கிறித்து உயிர்த்தெழுந்த
நாளுக்குப் பின் வரும் ஐந்தாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, "உயிர் த்தெழுந்த கிறிஸ்து: என்றும் உடனிருக்கும் உறுதி.
ஆண்டவரின் இருப்பை குறிப்பி ட்ட இடத்தில்தான் என வரையறு க்க முடியாது.அவர் எல்லா இடங் களிலும், எப்போதும் நிறைந்தி ருக்கிறார் (Omnipresent) என்ப தைக் குறிக்கிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்து இனி ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, காலத்திலோ மட்டும் இருப்பவர் அல்ல. அவர் தேசங்கள், கலாச் சாரங்கள் மற்றும் காலங்களைக் கடந்து, எங்கும் நிறைந்திருக்கும் நித்திய பிரசன்னமாக மாறுகி றார்.
சங்கீதக்காரன் திருப்பாடல் 139:8
ல், "நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கி ன்றீர்! பாதாளத்தில் படுக்கைல யை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! " என அவர் எங்கும் நிறைந்தவர் என கூறுவதை காண்கிறோம்.
கடவுள் இல்லாத இடங்கள்:
Places without God.
அன்பர்களே! இறை நம்பிக்கை இல்லாத ஒருவரின் மனதிலோ, அல்லது நேர்மை, அன்பு மற்றும் கருணை இல்லாத இடங்களி லோ கள்ளத் தனம், தீய எண்ண ங்கள், காமம், சண்டைகள் நிறைந்த இடங்களில் கடவுள் இல்லை என்று கூறப்படுகிறது
கடவுள் எங்கெல்லாம் இருக்கிறார்.Where does God exist?"
அன்பர்களே!நம் ஆண்டவர்,
"இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்க ளோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதி யாக உங்களுக்குச் சொல்கிறே ன்." (மத்தேயு நற்செய்தி 18:20)
என்கிறார்.
இதோ! உலக முடிவுவரை எந்நா ளும் நான் உங்களுடன் இருக்கி றேன்" (மத்தேயு நற்செய்தி 28:20)என்ற வாக்குறுதி, அவர் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை என்பதற்கான உறுதிப்பாடாகும்.
இதன்மூலம், கடவுள் என்றும் உடனிருக்கும் உறுதியை தருகிறார்.
திருதூதர் யோவான் அவர்களு க்கு வெளிப்படுத்தியது, அது, "இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.(திருவெளிப்பாடு 21:3)
திருவசனத்தை வாசிக்கும் போதும், துதித்துப்பாடும் போது ம், இறைவேண்டல் செய்யும் போதும் நம் உடனிருக்கும் ஆண் டவர். திருச்சபையாய் ஆலயத் தில் கூடிவரும்போதும், நற்கரு ணையில் பங்குபெரும்போதும் நம்முடன் இருக்கிறார் நம்
ஆண்டவர்.
அன்பர்களே! ஒரு காலத்தில் இஸ்ரவேலுக்கு, “பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கி றேன்” என்று உறுதியளித்த கடவுள், இப்போது உயிர்த்தெ ழுந்த கிறிஸ்துவில், அந்த வாக் குறுதியை அதன் முழுமையான வடிவத்தில் வெளிப்படுத்து கிறார்.
1.அஞ்சாதே, நான் உன்னுடன்
இருக்கிறேன்.Fear not, I am with you. எசாயா 41:8-13.
அன்பர்களே! இந்த வசனத்தின் காலத்தையும், சூழ் நிலையையு
ம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கி.மு. 6 ஆம் நூற்றாண்டில், இஸ்ரவேலர், பாபிலோனியா வில் அடிமைதனத்தில், அதுவும் சிறையிருப்பில் இருந்த காலத் தில் இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் கொடுக்கும் ஆறுதல் மற்றும் வாக்குத்தத்தத்தின் வார்த்தைகளாகும். இஸ்ரேல் அரசியல் அவமானத்தையும் இறையியல் நெருக்கடியையும் எதிர்கொள்கிறது.தெய்வீக உறுதி, பயத்தையும் அடையாள இழப்பையும் எதிர்கொள்கிறது.
இந்த சூழ்நிலையில்,
"என் ஊழியக்காரனே" (My Servant) தேவன் இஸ்ரவேலை "ஊழியக்காரன்" என்றும், ஆபிரகாமின் சந்ததி என்றும் அழைத்து, அவர்களுக்குத் தம்முடனான சிறப்பான உறவை நினைப்பூட்டுகிறார். அவர்கள் வெறும் அடிமைகள் அல்ல, தேவ னால் தெரிந்துகொள்ளப்பட்ட வர்கள்."நான் உன்னைத் தள்ளி விடவில்லை": உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்; தொலைநா டுகளினின்று உன்னை அழைத் தேன்; "நீ என் அடியவன்; நான் உன்னைத் தெரிந்தெடுத்
தேன் என்றும் உறுதியளிக்கி றார். இது அவர்களின் அவிசுவா சத்திற்கு மத்தியிலும் தேவன் காட்டும் உண்மையுள்ள அன்பா
கும்.
கடவுள் இங்கு இஸ்ரவேலருக்கு
நான்கு வாக்குத்தங்கள் தருகி றார்.
1.அஞ்சாதே:
இந்த பகுதியின் முக்கிய செய்தி
"அஞ்சாதே!, நான் உன்னோடே இருக்கிறேன்" என்ற வாக்குத்த த்தமாகும். தேவன் தம் மக்களுட ன் இருப்பதால், அவர்கள் தைரி யமாக இருக்கலாம் பயப்படத் தேவையில்லை.திருவிவலியத்தில், அஞ்சாதே என்ற வார்த்தை
ஒரு நாளைக்கு ஒன்று வீதம் 365 முறை வருகிறது.தேவன் மீண்டும் ஒருமுறை பயத்தைத் தூக்கியெறியும்படி கூறுகிறார்
2."நான் உன் கடவுள்":
தேவன் அவர்களுக்கு உடன்படிக் கையின் தேவனாக இருக்கிறார்
அவர்களுக்கு வலிமை அளிப் பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன் னைத் தாங்குவேன் என்கிறார். நாம் தனிமையில்லை, கடவுள் நம்முடன் இருந்து வலிமையளித் து, நம் துன்பங்களில் நமக்கு உதவியாக இருக்கிறார் என்று உறுதியளிப்பதாகும்.
3.உன்னை எதிர்ப்போர் ஒழிந்துபோவர்.
இஸ்ரவேலை எதிர்த்து நிற்கும் அனைவரும் வெட்கப்பட்டு, ஒன்றுமில்லாமல் போவார்கள். அவர்களுக்கு விரோதமாகப் போராடுபவர்கள் காணப்படா மல் போவார்கள். உன்னை எதிர்த்துப் போராடியோரை நீ தேடுவாய்; ஆனால் அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்;உன்னை எதிர்த்துப் போரிட்டோர் ஒழிந்து போவர். தேவனுடைய மக்கள் மீது எதிரிகளுக்கு வெற்றி கிடைக்காது.
4.உனக்கு துணையாய் இருப் பேன்.
நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, "அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்" என்று உன்னிடம் சொல்பவரும் நானே. கர்த்தர் நம் வலது கையைப் பிடித்து, ஆபத்து காலத்தில் பயப்படத் தேவையில்லை, அவர் துணை யாக இருப்பார் என்று வாக்கு றுதி அளிக்கிறார்.கடவுள் நம்மு டன் இருப்பதால், எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
கடவுள் அவர்களுக்கு கொடுத்த
வாக்குத்தத்தின்படி இஸ்ரவேலர்
களின் பாபிலோனிய சிறையிரு ப்பு இறைவாக்கினர் எரேமியா அவர்கள் முன்னறிவிக்கப்பட் டபடி,(எரேமியா 29:10) சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு .கிமு. 607- முதல் கி.மு. 537 வரை).கி.மு. 538-ல் பாரசீக மன்னன் சைரஸ் (Cyrus the Great) பாபிலோனைக் கைப்பற்றிய பிறகு முடிவுக்கு வந்தது.
2.கிறித்தவர்கள் எவ்வாறு வாழ வேண்டும்?How should Christians live?எபிரேயர் 13:1-8
அன்பர்களே! ரோமானியர்களின் துன்புறுத்தலால் யூத கிறிஸ்தவ ர்கள் (யூத கிறிஸ்தவர்கள் (Jewish Christians) என்போர் இயேசுவை மேசியாவாக (மீட்பர்) ஏற்றுக் கொண்ட, ஆனால் யூத மத கலாச்சாரம், சட்டங்கள் மற்று ம் பண்டிகைகளைத் தொடர்ந்து பின்பற்றும் ஆரம்பகால யூதப் பிரிவினர்) சோர்வடைந்து, பழை ய யூத மதப் பழக்கவழக்கங்களு க்குத் திரும்பும் ஆபத்தில் இருந் தனர். அவர்களுக்குப் புதிய உடன்படிக்கையின் சிறப்பை உணர்த்த இந்த எபிரேய திருமு கம் எழுதப்பட்டது. இயேசு தேவ தூதர்கள், மோசே, மற்றும் ஆரோ னின் ஆசாரியத்துவத்தை விட மேலானவர் என்பதை நிரூபிக்க, அவர் ஒரு சிறந்த பிரதான ஆசா ரியர் என இது விளக்குகிறது.
எபிரேயர்கள் யார்?
எபிரேயர்கள் (Hebrews) என்பவர் கள் ஆபிரகாமின் வழித்தோன் றல்களாகக் கருதப்படும் பண் டைய செமித்திய மக்கள், இவர் கள் பின்னாளில் இஸ்ரவேலர் கள் மற்றும் யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். கானான் தேசத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு "எபிரேயர்கள்" என்றும், அதற்குப் பிறகு "இஸ்ரவேலர் கள்" என்றும் இவர்கள் குறிப்பிட ப்படுகிறார்கள். இவர்கள் ஆபிரகாமின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், எபிரெய மொழி யைப் பேசியவர்கள் மற்றும் யூத மதத்தின் முன்னோடிகள் ஆவர்.
ஒரே கடவுள் கொள்கை கடைப் பிடித்த இவர்கள், யூத மதத்தின் அடித்தளமாகத் திகழ்கின்றனர்.
அன்பர்களே! கிறித்துவ வாழ்க்
கை என்பது, ஒழுக்க நெறிகள்
நிறைந்த வாழ்க்கையாகும்.
1)"சகோதர சிநேகம் நிலைத் திருக்கக்கடவது":
ஆரம்பகால திருச்சபையில் கிறிஸ்தவர்கள் ஒருவரை யொரு வர் குடும்ப உறுப்பினர்களாகக் கருதினர். இது வெறும் உணர்வு ப்பூர்வமான அன்பு அல்ல, மாறா கச் செயலில் காட்டப்பட வேண்டி ய தியாக அன்பைக் குறிக்கிறது என்று இறையியளார் வில்லியம் பார்க்லே குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, அன்போடும், ஒழுக்க த்தோடும், திருப்தியோடும் வாழு ம் வாழ்க்கையை வலியுறுத்துகி றது.
2.அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்:
அந்நாட்களில் விடுதிகள் பாது காப்பற்றதாகவும், விலை உயர்ந் ததாகவும் இருந்தன. கிறிஸ்தவ போதகர்கள் பயணம் செய்யும் போது விசுவாசிகளின் வீடுக ளையே நாடினர். விருந்தோம்பல் என்பது கிறிஸ்தவ அன்பின் முக்கிய அடையாளம். ஆபிரகா மைப் போல (தொடக்கநூல்18), நாம் உபசரிக்கும் அந்நியர்களில்
தேவதூதர்களும் இருக்கலாம் என்பது இதன் ஆழமான அர்த் தமாகும்.
3.துன்பப்படுபவர்களுடன் ஐக்கியம்:
சிறையில் இருப்பவர்களையும், துன்புறுத்தப்படுபவர்களையும் மறக்கக்கூடாது. "நாம் அனைவ ரும் ஒரே சரீரத்தின் அவயவங் கள்" என்பதால், ஒரு அவயவம் துன்பப்பட்டால் மற்றவை சேர்ந்து துன்பப்பட வேண்டும்.
பெறக்கூடாது.நாம் பணத்திற் காகக் கவலைப்படவோ, பேரா சைப்படவோ தேவையில்லை. "கர்த்தர் எனக்குச் சகாயர்" என்ற நம்பிக்கையுடன் வாழ்வதே உண்மையான வாழ்வாகும்.
6.நல்லவர்களை பின்பற்று தல்.தேவவசனத்தைப் போதி த்து, முன்மாதிரியாக வாழ்ந்த தலைவர்களை நினைவுகூர்ந்து, அவர்களின் விசுவாசத்தைப் பின்பற்ற வேண்டும்.
7. விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கல்:
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்று ம் என்றும் மாறாதவராயிருக் கிறார்."இது எபிரேயர் திருமுக த்தின் மையக்கருத்தாகும். சூழ்நிலைகள், மனிதர்கள், காலங்கள் மாறலாம், ஆனால் கிறிஸ்துவின் அன்பு, சக்தி, மற்றும் சத்தியம் ஒருபோதும் மாறாது. எனவே, நாம் உறுதி யாய் விசுவாசத்தில் நிலைத்
திருக்க அழைக்கப்படுகிறோம்.
இவ்வாறு இருந்தால், உயிர்த் தெழுந்த கிறிஸ்து என்றும் உடனிருக்க உறுதியளிக்கிறார்.
3.உடனிருக்கும் கிறித்து.
Everlasting presence.மத்தேயு 28:16-20.
அன்பர்களே! நம் ஆண்டவர்
இயேசு கிறித்து கலிலேயா மாவட்டத்தில்தான் தம்முடைய முதல் சீடர்களை அழைத்திருந் தார். அவ்வாறே, அவர் உயிர்த் தெழுந்து அவர்களுக்குத் தம்மு டைய கடைசி அறிவுரைகளைக் (மாபெரும் கட்டளை The Great Commission) கொடுத்த இடமும் கலிலேயா தான். அவர் தம்முடை ய சீடர்களுக்கு முன்பாக கலிலே யாவுக்குச் செல்வதாக வாக்கு றுதி அளித்திருந்தார். அவ்வாறே செய்தார்.பதினொரு சீடர்களு டன் ஒரு நற்செயலைத் தொடங் கிய கிறிஸ்து, அதையே நம்முட ன் தொடர்கிறார்.
இவர் கலிலேயனா?
இந்த கேள்வி பிலாத்து கேட்டார்.
ஆம் நம் ஆண்டவர் கலிலேயன்.
இயேசு கலிலேயா பிராந்தியத் தில் உள்ள நாசரேத்தில் வளர்ந் து, தன் போதனைகளை கலிலே யா பகுதியிலேயே தொடங்கிய தால், அவர் பொதுவாக கலிலே யர் என்றே அறியப்பட்டார்.
இயேசு எருசலேமின் பெத்லே கெமில் பிறந்தார், ஆனால் யோசேப்பும் மரியாளும் எகிப்திலிருந்து திரும்பிய பிறகு, தன் தந்தையின் மரணத்திற்குப் பின் யூதேயாவை ஆண்ட ஏரோது வின் மகனான அர்கெலேயுவு க்குப் பயந்து, அவரைக் கலிலே யாவுக்கு அழைத்துச் சென்றார் கள்.
கலிலேயா புற இனத்தாரின் இருப்பிடமாக இருந்ததால், அது புற இனத்தாரின் கலிலேயா என்று அழைக்கப்பட்டது. இயேசுவின் ஊழியத்தின் பெரு ம்பகுதி கலிலேயாவில் நடைபெ ற்றது, மேலும் அவர் உயிர்த்தெ ழுந்த பிறகு தனது சீடர்களை சந்திப்பதற்காக அங்கு திரும்பு கிறார்.
திருச்சபையின் அடிப்படை பணி:
உயிர்த்த ஆண்டவரின் கட்டளை
சீடராக்குதல்.இதுவே, திருச்சபை
யின் அடிப்படை பணியாகும். கிரேக்க மொழியில், “சீடர்களை உருவாக்குங்கள்” என்பது மட்டு மே கட்டளை வினைச் சொல் (Imperative Verb) உ.ம். வா, போ.
"போங்கள்'என்பதுஒருஆணை மட்டுமல்ல, சீடர்களாக மாற்று வதற்கான பணியாகும்.இது திருமுழுக்கு கொடுப்பதையும் (தந்தை, மகன், தூய ஆவியின் பெயரில்), இயேசுவின் கட்டளை களைக் கடைப்பிடிக்கக் கற்பிப்ப தையும் உள்ளடக்கியது.
முன்னதாக, இயேசு சீடர்களிடம், “புறஇனத்தாரிடம் செல்லாதீர் கள், சமாரியர்களின் எந்த நகர த்திலும் நுழையாதீர்கள்” (மத்தேயு10:5) என்று அறிவுறு த்தினார். இப்போது அவர் அந்தத் தடையை நீக்குகிறார். சீடர்கள் முதலில் யூதர்களிடை யே பணியாற்றினர். இப்போது அவர்கள் புற இனத்தாரையும் உள்ளடக்கித் தங்கள் பணியை விரிவுபடுத்துகிறார்கள்.இது உலகளாவிய நற்செய்தியை குறிக்கிறது.சகல இனத்தாரை யும் சீடர்களாக்க வேண்டும் ” என்பது, இது தானியேல் 7:14-ஐ நினைவுபடுத்தும் மற்றொரு குறிப்பாகும், அதில், ஆட்சியுரி மையும் மாட்சியும் அரசும் அவரு க்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும், நாட்டினரும், மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது. (தானியல் 7:14)எனவே, அவருக்கு அனை வரும் ஊழியம் செய்ய வேண் டும்” என்று கூறப்பட்டுள்ளது.
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கு ம்படி கற்பியுங்கள்:.
சீடராக்கும்படி கிறிஸ்து கொடுத் த கட்டளையை முழுமையாகபின் பற்றுவதற்கு, நாம் அவற்றை கற்பிக்க வேண்டும்,
சட்டமேதை அம்பேத்கர் அவர்க ளின் கொள்கைகள் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்" (Educate, Agitate, Organize) என்ற தாரக மந்திரத்தின் முதன்மையா னது கற்பி என்பதாகும்.
கிறித்துவ கல்வியறிவு பெறு வது. ஆண்டவரை அறியசெய்
வது கல்விதான் முதல் ஆயுதம்.
உதாரணமாக,
எத்தியோப்பிய அதிகாரி எருசலேம் வரை வந்து தான் நேசித்த கடவுளை வணங்கி விட்டு திரும்பி இரதத்தில் வீடு திரும்புகையில் ஏசாயா இறை
வாக்கினரின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது கிறிஸ்துவின் சீடர்க ளில் ஒருவரான பிலிப்பு அவ ரை சந்தித்து, “நீர் வாசிக்கிறவை களின் கருத்து உமக்குத் தெரியு மா” என கேட்டார். “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்” என அவர் பதிலளித்தார். வேதத் தை கற்பிக்க செய்வது கிறித்து வை அறிவிப்பது நம் கடமையல் லவா? இதற்காகவே, நாம் நற்செ
ய்தி அறிவிக்கும் கடமையை
பெற்றிருக்கிறோம்.
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறினார்.
அன்பர்களே! இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் என்ற
வாக்குறுதியில்,இயேசு,எந்நாளும் "எப்பொழுதும்" என்று கூறுவதை வலியுறுத்துகிறார்.
மகிழ்ச்சியான நாட்கள் மட்டும ல்ல, துன்பம், தனிமை, மற்றும் சோதனையான நாட்களிலும், நல்ல நாட்கள் மட்டுமல்ல, கடின மான நாட்களிலும் அவர் நம்மோடு இருக்கிறார்.என்றும் உடனிருக்கும் ஆண்டவராய்
நம்மோடு பயணிக்கிறார்.
இதோ! உலக முடிவுவரை என்று கூறும்போது, இந்த உலக த்திற்கு முடிவு உண்டு என்பதை யும், அவர் மீண்டும் வருகிறார் என கூறுகிறார்.இறுதிவரை, அதாவது சபை மற்றும் சீடர்களி ன் பணி முடியும் வரை அவர் பிரசன்னம் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது
உலகிற்கு நற்செய்தியை அறிவி த்து, அவரைப் பின்பற்றுபவர் களை உருவாக்குவதன் மூலம் அவருடைய அரசு தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதையும் உணர்த்துகிறது.
அன்பர்களே!உயிர்த்தெழுந்த கிறிஸ்து என்றும் நம்மோடு உடனிருக்கும் உறுதியை தரும்போது, நாமும் அவருடன்
இணைந்து செயல்பட ஆண்டவர்
அருள்புரிவாராக. ஆமென்.
Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..
"இயேசுவின் பிரசன்னம் இடஞ்சார்ந்ததல்ல, மாறாக அது உறவுசார்ந்ததும் ஊழிய நோக்க முடையதும் ஆகும்".
கீனர் கிரேக் எஸ்.
சுவிட்சர்லாந்தின் விட்னாவுவில் உள்ள பாதிரியார்களின் கல்லறையில், ஆல்பர்ட் வைடர் என்பவரால் சுமார் 1973-ல் உருவாக்கப்பட்ட ' மாபெரும் கட்டளை' என்ற புடைப்புச் சிற்பம் .
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்" இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகி றது . இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது. நாட்டின் 77-வது குடியரசுத் தினம் ' வந்தே மாதரம்' 150 -வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்...
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா , வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இவ்வார இறை வருகையின் இரண்டாம் ஞாயிறுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்ப து," இருப்புநிலையை அறை கூவலிடும் இறைவார்த்தை". God's word Challenges the status Quo. நண்பர்களே! கடவுள் நமக்கு திட்டவட்டமாக கூறிய வார்த்தை, "நான் (இயேசு)உலகைச் சார்ந் தவனாய் இல்லாதது போல் அவர்களும் (சீடர்கள்)உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. " (யோவான் நற்செய்தி 17:16) இது அனைத்து கிறித்தவர்களுக் கும் அறைகூவலிடும் இறைவார் த்தை". நம் திருவிவலியம்,உலக விதிமுறைகளுக்கு இணங்கு வதை எதிர்க்கவும்,அநீதியை எதிர்த்து நிற்கவும், கலாச்சார மரபுகளை விட ஆன்மீகஉண்மை களுக்கு முன்னுரிமை அளிக்க வும் பின்பற்றவும், கடவுளின் வார்த்தை தற்போதைய நிலை க்கு சவால் விடுகிறது .நீங்கள் இந்த உலகத்தார் அல்ல" என்ற சொற்றொடர், குறிப்பாக கிறித் துவ இறையியலில், இயேசுவின் சீடர்கள் உலகத்தைப் பின்பற் று பவர்கள் அல்ல என்றும், அவர்கள் உலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், பிரித்தெடுக்கப்...
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இறை மைந்தன் இயேசு கிறிஸ்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள்.இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " சீடராக் குங்கள்". யார் சீடர்? ஒரு சீடர் என்பது ஒரு ஆசிரியரின் போதனைகளை ஏற்று நடப்பவர், அல்லது அவரது வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெறுபவர். ஒரு மாணவர் அல்லது கற்றுக் கொள் ளும் எவரையும் சீடர் என்று குறிப் பிடலாம். இயேசுவின் போதனை களை ஏற்றுக் கொண்டு அதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அனைவருமே சீடர்கள்தான். ஒரு தலைவரின் போதனையை அறிவிக்காமல் யாரும் சீடராய் இருக்க முடியாது.சீடர் என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களைப் பின்பற்றி நடப்பவர் மற்றும் அவரது வழிகாட்டுதலின் படி வாழ்பவர் என்று பொருள். சீடர்கள் 12 பேரும் இயேசுவுடன் நெருக்கமாகப் பழகி, அவரது போதனைகளை உலகெங்கும் பரப்பினார்கள். சீடராக்குங்கள் என்பது இயேசு வின் செய்தியை மற்றவர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களையும் அவரது சீடர்களாக மாற்றுவதைக் குறிக்கிறது. சீடர் என்ற சொல், ஒழுக்கம் போன்றது, லத்தீன் வார்த்தையான டிசிபுலஸிலிருந்து disciplus வந்தது, அதாவது "மாணவர்...
Comments
Post a Comment