உலக ஞாயிறு பள்ளி ஞாயிறு. World Sunday School Sunday. மாற்றத்திற்கான ஒளியாயிருக்க உறுதிக்கொள்.(304) Be the Light: Dare to be Different. தானியேல் 3:16-30, பிலிப்பியர்: 2:14-16, திருப்பாடல் 119:9-16, மத்தேயு 5: 13-16.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்களனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள், இவ்வாரம், உலக ஞாயிறு பள்ளி தினத்தில் நமக்கு கொடுக்கப்பட் டிருப்பது," மாற்றத்திற்கான ஒளியாயிருக்க உறுதிக் கொள்". என்ப தாகும். ஞாயிறு பள்ளி அக்காலத்தில் 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட தொழில்புரட்சி காரணமாக ஏழை மற்றும் தொழி லாளர் வர்க்கக் குழந்தைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்குச் சென்றனர். சிலர் வீதிகளில் விளையாடி குற்றச் செயல்களில் ஈடுபடும் நிலை இருந்தது. இவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத் தும் நோக்கில் ஞாயிற்றுக் கிழ மைகளில் அவர்களுக்கு விவ லிய மற்றும் அடிப்படை கல்வி கற்பிக்க, ஞாயிறு பள்ளி இயக் கத்தின் தந்தை என அழைக்க ப்படுபவர் ஆங்கில எழுத்தாள ரும் வெளியீட்டாளருமான ராபர்ட் ரைக்ஸ் (Robert Raikes, 1735–1811) ஞாயிறு பள்ளியை கி.பி 1780-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தின் குளு செஸ்டர் (Glouce ster) நகரில் இந்த இயக்கத்தைத் தொடங்கி னார். இங்கிலாந்தில் தொடங் கிய இந்த இயக்கம், பின்னர் உலகம் முழுவதும் உள்ள பல் வேறு கிறிஸ்தவ சபைகளால் பின்ப...